Member
- Messages
- 30
- Reaction score
- 40
- Points
- 18
Episode : 07
Writer : Hafa
அடர் நீல நிற ஜீன்ஸும், அதற்கு ஏற்றால் போல் வெள்ளை நிற டாப்பும் அணிந்து கொண்டு தயாராகி வந்தவளை பார்த்த சீதாவிற்கு மதியின் அழகு ஒரு புறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் இன்னொரு புறம் பயத்தையும் கொடுத்தது. இந்த அழகு அவளுக்கு ஆபத்தாக்கி விடக்கூடாது என்று.
"அம்மா..." என்று சத்தமாக அழைத்த பின்னரே நிஜ உலகிற்கு வந்தார் சீதா.
"என்னம்மா காலையிலேயே அப்பா கூட ட்ரீம்ஸா?? ஒரு வேளை அப்பா கூட டூயட் பாடிட்டு இருந்திங்களோ??"
"அடிங்கு.. உனக்கு ரொம்ப தான் வாய் கூடி போச்சு..!!"
"என்ன அம்மாவும் பொண்ணும் காலையிலேயே பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கீங்க.!! என்ன விஷயம்??" என்று இவர்களுடன் இணைந்து கொண்டார் ரவி.
"அது வந்துப்பா, நான் ரெடி ஆகிட்டு வந்தேனா.. அம்மா ஏதோ ட்ரீம்ஸ்லயே இருந்தாங்க, அது தான் என்ன எதுன்னு விசாரிச்சிட்டு இருந்தேன்."
"அதுக்கென்னடா உங்க அம்மா நல்லா கனவு காணட்டுமே. என்ன தான் இருந்தாலும் அதுல ஹீரோ உன் அப்பா தானே." என்கவும் சீதாவிற்கே சிரிப்பு வந்து விட்டது.
"அம்மாடி.. ஒரு வழியா அம்மா சிரிச்சிட்டாங்க. அம்மா அப்பா இங்க வாங்க, இன்னைக்கு உங்க செல்ல பொண்ணு முதன் முதலா ஆபீஸ் போறேன். அம்மா இன்னைக்கும் வழக்கமா பாடுற பல்லவியை பாடமா ஒழுங்கா பிளெஸ்ஸிங் பண்ணி அனுப்பனும்." என்று பெற்றோர் காலில் விழிந்து ஆசி பெற்றுக்கொண்டாள் மதி.
ரவி, "நீ ஆசை பட்டது போல உனக்கு பிடிச்ச வேலையில ஜாயின் பண்ணிக்க போற. நீ இன்னும் இன்னும் பெரிய இடத்துக்கு போகணும்." என்றவர் நெற்றியில் பரிவாய் முத்தமிட்டார்.
"அம்மா நெக்ஸ்ட்டு நீ தான்.."
"ரோட்ல போகும் போது பார்த்து கவனமா போகணும்.. அங்க இருக்குறவங்க கூட வம்பு வளர்த்துட்டு இருக்காம சமத்தா வேலைய மட்டும் பார்க்கணும்." என்ற சீதாவிற்கு கன்னத்தில் முத்தமொன்றை கொடுத்தவள்., "அப்பா, அம்மா விட்டா இன்னைக்கி நாள் பூரா பேசிட்டே இருப்பாங்க. எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்." என்று சிட்டாய் பறந்தாள் மதி.
∞∞∞∞∞∞∞∞∞∞
அங்கு ஆபீஸில் நடை பயின்று கொண்டிருந்தான் செழியன். அவனையே பார்த்துக் கொண்டிந்த சிவாவிற்கு தான் மண்டை காய்ந்தது. பொறுத்து பொறுத்து பார்த்தவன் அதற்கு மேல் பொறுமை இழந்தவனாய், "டேய் செழியா.." என்றதை கூட பொருட்படுத்தாது அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவனை பார்க்க கடுப்பாகியது சிவாவுக்கு.
"ஆமா எதுக்கு இவன் இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி அங்கையும் இங்கையும் நடந்துட்டு இருக்கான். டெலிவரி வார்ட்ல பொண்டாட்டிய அட்மிட் பண்ணின புருஷன் கூட இந்த அளவுக்கு நடந்திருக்க மாட்டான்." என்ற சிவாவை முறைத்தான் செழியன்.
"இப்போ எதுக்கு நம்மள இப்படி முறைக்கிறான்." என சிந்தித்த போது தான் தெரிந்தது மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாக பேசியது.
"சாரிடா மச்சான், மைண்ட் வாய்ஸ் கொஞ்சம் வெளிய கேட்டிடிச்சி போல." என்று பல்லை காட்டவும் திடீரெனே பொங்கி எழுந்தான் செழியன்.
"டேய் டேய் ஏன்டா எனக்கு மட்டும் எல்லாமே இப்படி நடக்குது?? உண்மையா ஒருத்திய காதலிச்சதனால தான் இப்போ வரைக்கும் அந்த வலிய நான் அனுபவிச்சுட்டு இருக்கேன். ஆனா யாருமே என்ன புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்களேடா." என்று தன் ஆற்றமையை நண்பனிடம் கொட்டினான்.
"ஏய் என்னடா செழியா இப்படிலாம் பேசுற?? ஏன் என்னாச்சு சடன்னா??"
"அம்மா நேத்து சக்தி கூட ரொம்ப பீல் பண்ணி பேசிட்டு இருந்தாங்கடா, நான் என்னடா பண்ணட்டும் அவ வேணா என்ன பொய்யா காதலிச்சிருக்கலாம், ஆனா என்னோட காதலும் அந்த காதலோட வலியும் ரொம்ப ஆழமானது."
"ஏன்டா மச்சான் இன்னும் உன்ன விட்டு போன ஒருத்திக்காக பீல் பண்ணி, உன்னோட வாழ்க்கைய ஸ்பாயில் பண்ணிக்க போற."
"என்னால முடியல சிவா, அதுக்குன்னு அவள் மேல இப்போ காதல் இருக்குன்னு நான் சொல்லல, அவள் எனக்கு பண்ணின துரோகத்தை என்னால மறக்க முடியல. எந்த பொண்ண பார்த்தாலுமே வெறுப்பு தான் வருது."
"மச்சி நீ ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சிக்கோ, ஆன்ட்டிக்கு நீ படுற கஷ்டம் ஒன்னும் தெரியாமல் இல்ல. அவங்களுக்கு கூட நீ இப்படி இருக்குறத பார்க்கும் போது கஷ்டமா தானே இருக்கும். அவங்களுக்கு எல்லாமே நீ தான்டா, நீயே இப்படி உடைஞ்சி போயிருக்கும் போது அவங்கள மட்டும் எப்படிடா சந்தோஷமா இருக்க முடியும்."
"என்னடா நீயும் அவங்களுக்கு சப்போர்ட்டா??"
"நான் சப்போர்ட் பண்ணல செழியா, ரியாலிட்டிய எடுத்து சொல்றேன் அவ்வளவு தான். ரொம்ப வருஷமா உன்ன பார்த்துட்டு இருக்கேன், நீ எப்படி பட்டவன்னு எனக்கு தெரியும், ஆனா என்னாலையே உன்னோட இந்த மாற்றத்தை அக்ஸப்ட் பண்ணிக்க முடியல. வயசானவங்க அவங்கள எப்படிடா தாங்கிக்க முடியும்."
"எல்லாருமே அவங்க அவங்க ப்ரோப்லத்த யோசிக்கிறீங்களே தவிர என்னோட பீலிங்ஸ் யாருக்கும் புரிய மாட்டேங்குது. யாரு என்ன பண்ணினாலும் என்னோட முடிவுல மாற்றம் இல்லடா. நான் இப்படியே தான் இருப்பேன்." என்ற செழியன் சிவாவின் பதிலை எதிர்பார்க்காது கேபினை விட்டு வெளியே சென்றான்.
"என்னடா இவன் இப்படி பேசிட்டு போறான். ஏதோ பேச ஸ்டார்ட் பண்ணும் போது அம்மாவுக்காக மனசு மாறி இருப்பான்னு நினைச்சேன். ஆனா இவன் என்னடான்னா வேதாளம் முருங்கை மரத்துல ஏறின கதை மாதிரில இருக்கான். முருகா நீ தான் இதுக்கு நல்ல வழியை காட்டணும்." என வேண்டிய சிவா தன் வேலைகளை கவனிக்க சென்றான்.
∞∞∞∞∞∞∞∞∞∞
தன் புது அலுவலகத்திற்கு சென்ற மதிக்கு இன்னும் நம்ப முடியவில்லை தனக்கு இங்கே வேலை கிடைத்ததை. இருந்தாலும், "ஏன் மதி உன்னோட திறமைக்கு அளவே இல்லாம போச்சு, அதனால தான் இவ்வளவு பெரிய ஆபீஸ்ல ஒர்க் பண்ண சான்ஸ் கிடைச்சிருக்கு. எல்லாம் கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் நமக்கு கொஞ்சம் மூளையை அதிகமா படைச்சதுக்கு." என்று தன்னை தானே மெச்சிக் கொண்டாள் மதி.
ரிஷப்ஷனில் சென்று தன் வேலைக்கான ஆர்டரை காட்டவும்..,
"வெல்கம் மேம், நீங்க போர்த் புளோர் போய் மேனஜர் சார் இருப்பாரு. அவரை மீட் பண்ணுங்க. அவரு உங்களுக்கான ஒர்க் பத்தி எக்ஸ்பிளைன் பண்ணுவாரு."
"ஓகேங்க, தேங்க்ஸ்." என்ற மதி போர்த் புளோர் செல்வதற்காக லிப்ட்டில் ஏறிக் கொண்டாள்.
மதிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவளுடைய வாழ்வின் இலட்சியமே வேலைக்கு செல்வது தான். இன்று அது நனவாகி விட்டதை நினைக்கும் போது எழுந்த அந்த உணர்வை அவளால் வரையறுக்க முடியவில்லை.
"ஆபீஸுக்குள்ள வர்ற வரைக்கும் ஏதோ ஒரு பயம், இருந்துட்டே இருந்துது மதி. ஆனா அந்த ரிஷப்ஷன்ல இருக்குற பொண்ணு ரொம்ப மரியாதையோட நல்லா பேசினாள். அதுல இருந்து தெரியல, இந்த ஆபீஸோடா எம்டி கூட ரொம்ப ஸ்வீட்டா தான் இருப்பாரு." என்று கண்ணுக்கு தெரியாத அந்த முதலாளியை பாராட்டியபடி போர்த் புளோருக்கு வந்து சேர்ந்தாள்.
லிப்ட் கதவை திறக்கவும் மதி கண்ட காட்சி, தான் வந்த லிப்ட்டின் உள்ளே செழியன் சென்றதை தான்.
ஆனால் செழியனோ இருந்த டென்சனில் மதியை கவனிக்கவில்லை. அவன் கவனித்திருந்தால் அங்கு என்னாகி இருக்குமோ???
"இந்த இடியட் இங்க என்ன பண்றான்?? ஒரு வேளை அவனும் இங்க தான் ஒர்க் பண்ணுறானோ??" என்று மனம் முழுவதும் யோசனையுடன் மேனஜரை பார்க்கச் சென்றாள் மதி.
தொடரும்...