• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 6

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 06

Writer : Hafa


செழியனுடனான சந்திப்பை முடித்துக் கொண்டு ஹாஸ்டல் வந்த தர்ஷனா, ரெப்ரேஷ் செய்து விட்டு குடிப்பதற்காக காபியை கலந்து கொண்டு வரவும் தொலைபேசி ஒலி எழுப்பவும் சரியாக இருந்தது.

"யாரு இந்த நேரத்துல கால் பண்ணுறாங்க." என்று போனை பார்த்தவள், தனது நெருங்கிய தோழி மாயாவின் பெயரை கண்டதும் அட்டென் செய்தாள்.

தர்ஷனா, "ஹேய் மாயா எப்படிடி இருக்க??"

"நான் நல்லா இருக்கேன்டி.. நீ எப்படி இருக்க?? மேடம் இப்போல்லாம் ரொம்ப பிஸியோ??"

"நான் நல்லா இருக்கேன்டி.. பிஸிலாம் இல்லடி ஏன் அப்படி கேட்குற??"

பின்ன என்னடி ஒரு மனுஷன் எத்துன வாட்டி கால் பண்ணுறது. ரிங் போயிட்டே இருக்குது தவிர எந்த ரெஸ்பான்ஸும் இல்ல.. சரி கால் லிஸ்ட் பார்த்துட்டு கூப்புடுவேன்னு பார்த்தா அது கூட இல்ல. "

"அதுவாடி, செழியன் கூட வெளியில போய் இருந்தேன். ஹாஸ்டலுக்கு வந்த அப்பறம் கால் பண்ணுவோம்னு இருந்தேன். பட் மறந்து போச்சு. ஹி... ஹி..." என்று சமாளிக்க..,

"மறப்படி மறப்ப. இப்போல்லாம் உன் கண்ணுக்கு நாங்க எங்க தெரிய போறோம். செழியன் ப்ரோ மட்டும் தானே தெரியுவாரு."

"அட நீ வேற ஏன்டி எரியுற நெருப்புல எண்ணைய ஊத்துற.!! நானே ரொம்ப டென்சன்ல இருக்கேன். நீ வேற..!!"

"என்னடி இந்த சலிப்பு சலிச்சிக்குற?? என்ன ஏதாவது ப்ரோப்லமா??"

"உனக்கு என்னோட சிட்டுவேஷன் பத்தி எல்லாம் சொல்லி இருக்கேனேடி. அத பத்தி தான் திங்க் பண்ணிட்டு இருக்கேன்."

"ஹேய் தர்ஷு என்ன நீ இன்னும் அதையே புடிச்சிட்டு இருக்குற. நான் தான் படிச்சி படிச்சி சொன்னேன்ல, அதையெல்லாம் விட்டு தள்ளுன்னு. இப்போ உனக்குனு ஒரு நல்ல வாழ்க்கை செட்டாகி இருக்கு. அத பாருடி."

இதற்கு மேல் இந்த பேச்சை மாயாவிடம் தொடர விரும்பாத தர்ஷனா, " ஓகேடி விடு பாத்துக்கலாம். செழியன் அவரு வீட்டுல பேசிட்டு அவரோட பேமிலிய மீட் பண்ணலாம்ன்னு சொல்லி இருக்காரு."

"ஹேய் சூப்பர்டி, ப்ரோ உன் மேல ரொம்ப அன்பு வச்சிருக்காரு தர்ஷு, நீ தான் அத புரிஞ்சி நடந்துக்கணும். உனக்கு கிடைச்சி இருக்குறது நல்லதொரு லைப், அத நல்லா அமைச்சிகிறது உன் கையில தான் இருக்கு."

"ஓகே மாயா நான் பாத்துக்குறேன். இப்போ கொஞ்சம் வேலை இருக்குடி நான் அப்பறம் பேசுறேன்." என்று போனை கட் செய்து விட்டு., "எப்படியாச்சும் செழியன் பேமிலிய இம்ப்ரெஸ் பண்ணிரனும் கடவுளே." என்று கோரிக்கை ஒன்றை கடவுளிடம் விட்டு தன் வேலைகளை தொடர்ந்தாள்.

∞∞∞∞∞∞∞∞∞∞

செழியனுக்கோ மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது.

"எப்படி இத அம்மா கிட்ட சொல்லுறது?? சொன்னா எப்படி எடுத்துப்பாங்கன்னும் தெரியலையே..!! தரு உன்ன நம்பி வந்தவள், அவளை எந்த ஒரு சிட்டுவேஷன்லயும் கை விட கூடாது செழியா.!!" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன், "சரி கொஞ்சம் சிவா கிட்ட ஐடியா கேட்கலாம்."என்று சிவாவுக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

"என்ன மச்சான் இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க." என்றான் சிவா கொட்டாவி விட்டுக் கொண்டே..

"என்னடா தூங்கிட்டியா??"

"டேய்ய்ய் செழியா இது உனக்கே நல்லா இருக்கா?? நைட்டு பதினோரு மணி ஆக போகுது, இந்த நேரத்துல கால் பண்ணி தூங்கிட்டியானு கேட்குற??"

"ஓகே ஓகே டென்ஷன் ஆகாத மச்சான், உன் கூட பேசனும் போல இருந்துதுடா அதனால தான் கால் பண்ணின, நீ என்னடான்னா ரொம்ப சலிச்சிக்கிற."

"டேய்ய்ய் டேய்ய்ய் நீ எவ்வளோ பெரிய நடிகன்னு எனக்கு நல்லா தெரியும், முதல்ல கால் பண்ணின விஷயத்தை சொல்லு."

"மச்சி, அம்மா வீட்ல கல்யாண பேச்ச எடுத்துட்டாங்கடா."

"ஹேய் சூப்பர் மச்சான், அப்போ என் மச்சானுக்கு கூடிய சீக்கிரம் மேரேஜ். என் ரூட்டு க்லியர் ஆக போகுது.. அய் ஜாலி ஜாலி.."என்று சிவா போனில் கூச்சலிட..

"என்ன மச்சி சொன்ன உன் ரூட்டு க்லியரா?? என்னடா சொல்லுற??"

"அய்யய்யோ, அவசரப் பட்டு உளறிட்டோமோ.. சரி சமாளிப்போம்.." என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவன், "அது ஒன்னும் இல்லடா மச்சி உனக்கும் தர்ஷனாவுக்கும் ரூட்டு க்லியர் ஆகுமே அத தான்டா சொன்னேன்." என்க..

"ஆமா, ஆமாடா எனக்கு புரிஞ்சிது." என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டான் செழியன்.

"என்னடா உங்க லவ் மேட்டர அம்மா கிட்ட சொல்லிட்டியா??"

"இல்லடா, தர்ஷனா கூட இன்னைக்கு ரொம்ப பீல் பண்ணினாள், ஸோ நாளைக்கு எப்படியாச்சும் அம்மா கிட்ட பேசி ஆகணும்டா."

"ஆமாடா லேட் பண்ணினால் உனக்கு தான் ஸ்ட்ரெஸ் அதிகமாகும். ஸோ நாளைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டலாம். நீ எதுக்கும் வொர்ரி பண்ணிக்காத."

"சிவா, நீயும் டுமோரோவ் ஈவினிங் வீட்டுக்கு வந்துடு.!!"

"நான் எதுக்குடா??"

"அதெல்லாம் வந்து பாரு உனக்கே புரியும். ஓகேடா தரு எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாள். அவள் கூட கொஞ்சம் பேசிட்டு வர்றேன். குட் நைட் மச்சான்." என்று போனை கட் செய்யவும்..

"இப்போ எதுக்கு என்ன சம்பந்தம் இல்லாம கூப்பிடுறான். சரி போய் தான் பார்ப்போமே." என்று பாதியில் விட்ட தூக்கத்தை தொடர்ந்தான் சிவா.

∞∞∞∞∞∞∞∞∞∞

இரவு நீண்ட நேரம் சிந்தனையில் புரண்ட செழியன் காலையில் எழுந்து ஒரு குளியலை போட்டு விட்டு, "இன்னைக்கு என்ன நடந்தாலும் அம்மா கிட்ட தரு பத்தி பேசியே ஆகணும்." என்று தீர்க்கமான முடிவுடன் தாயிடம் சென்றான்.

கங்கா, "என்ன கண்ணா சீக்கிரம் எழுந்திரிச்சிட்ட??" இரு அம்மா உனக்கு சூடா காபி போட்டு தர்றேன்." என்றவர் கிட்சேனுக்குள் சென்று வந்து காபி கப்பை செழியனிடம் நீட்ட., அதனை வாங்கிக் குடித்தவன் எவ்வாறு முதலில் ஆரம்பிப்பது எனத் தெரியாமல் தயங்கி நிற்கவும்..,

"என்னப்பா, என்ன யோசிச்சிட்டு இருக்குற??"

"ஆங்.. அம்மா.. அது ஒன்னும் இல்லம்மா, எங்க சக்திய காணும்?? இன்னும் எந்திரிக்கயில்லையா??"

"உன் தங்கச்சிய பத்தி நல்லா தெரிஞ்சும் நீ இப்படி கேட்கலாமா?? அவளுக்கு விடியிறதுக்கு பத்து மணி ஆகும். அதுக்கு ஒரு செகண்ட் முன்னாடி கூட எந்திரிக்க மாட்டாள்."

"சரி விடுங்கம்மா சின்ன பொண்ணு தானே.. அம்மா எனக்கு ஆபீஸ்ல ஒரு வேலை இருக்கு." என்றவன் என்ன செய்யவதென்று அறியாது வேகமாக வாசல் வரை சென்று இடையில் நின்றான்.

"என்ன செழியா எதையாவது மறந்துட்டியா??"

"ஆங்.. இல்லம்மா., அம்மா இன்னைக்கு நைட் டின்னருக்கு வெளியில போகலாம். நீங்க சக்தி கிட்டயும் சொல்லிடுங்க." என்று பதட்டத்தில் சொல்லி விட்டு செல்வதை பார்த்த கங்கா., "சடனா என்ன ஆச்சு இந்த பையனுக்கு." என்று சொல்லிக்கொண்டு அவர் அவரது வேலைகளை கவனிக்க தொடங்கினார்.

∞∞∞∞∞∞∞∞∞∞

"ட்ரிங்.. ட்ரிங்.." என்ற அலாரம் ஓசையில் விழித்து எழுந்தான் செழியன்.

கண் விழித்தவனுக்கோ மனம் முழுவதும் வேதனை மண்டிக் கிடந்தது. அந்த நாளை நினைத்துப் பார்க்கவே மனதில் அவ்வளவு வலி. அடுத்தவர் சுயநலத்திற்காக தன் வாழ்க்கை பந்தாடப் பட்டதை நினைக்க நினைக்க மனம் இறுக, இருக்கும் கோபம், இயலாமை, வெறுப்பு அனைத்தையும் யார் மீது காட்டுவது என்பதை அறியாது டைரியை தூக்கி எறிந்தவன் குளியலறைக்குள் நுழைந்து ஷவரை திறந்து கொண்டு தன் மனதில் உள்ளது வேதனை கரையும் வரை நின்றான்.

ஓரளவு நிதானத்துக்கு வந்ததும், "இதற்கு மேல அவளை பத்தின எந்த ஒரு பொருளும் என்னோட கண்ணு முன்னாடி இருக்கக்கூடாது." என முடிவு எடுத்து அந்த டைரியை அலுமாரியின் மீதிருந்த பெட்டிக்குள் வைத்து பூட்டினான்.



தொடரும்...
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Chezlian solludu amma thaana intha dharu enna panni irupa theriyala 🤔🤔🤔
 
Top