• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 5

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 05

Writer : Hafa


காதல் சொன்ன தருணத்தில் இருந்து, தர்ஷனாவுக்கு திகட்டத் திகட்ட காதலை கொட்டினான் செழியன்.

இருவரும் இணைந்து பீச், பார்க் என்று தம் காதல் வாழ்க்கையை அனுபவித்தனர்..

அன்று ஒரு நாள் மாலை வேளையில் கடற்கரை மணலில் இருந்து கொண்டு கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்த தர்ஷனாவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் செழியன்.

"ஹேய் செழியன் இப்படி உட்கார்ந்து கடலை ரசிக்கிறது ரொம்ப நல்லா இருக்குல்ல."என்று அவனை பார்க்க., அவனோ அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஹேய் என்ன பார்த்தது போதும்!! கொஞ்சம் சுற்றி இருக்குற அழகை ரசிங்க."

"அந்த அழகு எல்லாத்தையும் விட இந்த அழகு தான் என்ன கட்டி இழுக்குது.." என்க அவளோ வெட்கிச் சிவந்து போனாள்.

"செழியன், நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் தெரியுமா?? எத்தனையோ நாளா நமக்காக அன்பு காட்டுற ஒருத்தர் இல்லையேன்னு கவலை பட்டு இருக்கேன். பட் இப்போ எனக்காக நீங்க இருக்கீங்கன்றதே எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்குது." என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"இதுக்கு அப்பறம் ஒரு நாள் கூட நீ உனக்கு யாரும் இல்லைன்னு பீல் பண்ணவே கூடாது. உனக்கு எல்லாமாவும் நான் இருப்பேன்."

"இல்ல செழியன் சொல்லுறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, என்ன மாதிரி ஒரு அனாதைய கட்டி வைக்க உங்க வீட்டுல சம்மதிப்பாங்களா??"

"ஹேய் தரு, உனக்கு அந்த கவலையே வேணாம். எங்க அம்மா என்னோட விருப்பம் எதுவோ அத மட்டும் தான் பண்ணுவாங்க. அது மட்டும் இல்லை நீ இப்போ அனாதை இல்ல உனக்கு நான் இருக்கேன்."

"இருந்தாலும் எனக்கு ஏதோ பயமாவே இருக்கு செழியன், நீங்க என்ன விட்டு போயிடுங்களோன்னு. நீங்க இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது."

"நீ எதுக்கு தப்பு தப்பா யோசிக்கிற, உனக்காக நான் இருக்கேன். நீ பயப்படற மாதிரி எதுவும் ஆகாது." என்க தர்ஷனாவோ அமைதியாக இருந்தாள்.

"ஏய் என்ன நீ இன்னும் பீல் பண்ணிட்டு இருக்கியா?? என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு?? நாம வேணா ஒன்னு பண்ணலாம் நாளைக்கே நீ என் கூட என்னோட வீட்டுக்கு வர்ற, உனக்கு முன்னால வச்சே நான் அம்மா கிட்ட பேசுறேன். போதுமா??" என்றதும் முகம் மலர்ந்த தர்ஷனா, "தேங்க்யூ செழியன், என்னை புரிஞ்சிட்டதுக்கு." என்று கைகளை கோர்த்துக் கொண்டாள்.

∞∞∞∞∞∞∞∞∞∞

"வாங்க தரகர் ஐயா.!! வாங்க.." என்று முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார் கங்கா.

"வணக்கம்மா.. ஆத்துல எல்லாரும் சௌக்கியமா இருக்காங்களா?"

"எல்லாரும் நல்லா இருக்கோம் ஐயா, உங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா??"

"எல்லாரும் பேஷா இருக்கோம்மா., செழியன் தம்பி எங்கம்மா ஆத்துல இருக்காறா??"

"இல்லைங்க ஐயா, அவன் பிரண்ட்ஸ மீட் பண்ணனும்னு வெளியில போயிட்டான்."

"நல்லதுமா, நீங்க கூப்பிட்டு விட்டு இருந்திங்கன்னு ஆத்துக்காரி சொன்னாள். என்னம்மா ஏதாவது விஷேசமா??"

"ஆமாங்க ஐயா, நம்ம செழியனுக்கும் சக்திக்கு நல்ல வரன் பார்க்க சொல்லலாம்னு தான் உங்கள கூப்பிட்டு விட்டு இருந்தேன்."

"அதுக்கென்னமா நம்ம பசங்களோட தங்கமான குணத்துக்கு சொக்க தங்கமா பார்த்துடலாம்."

"ரொம்ப சந்தோசம் ஐயா. பணம், சொத்து இதெல்லாம் இருக்கணும்னு அவசியம் இல்ல, நல்ல குணம் இருந்தால் அதுவே போதும்."

"உங்களோட மனசுக்கு எல்லாம் நல்லதா தான்மா அமையும். கூடிய சீக்கிரமே நல்ல செய்தியோட வாரேன்மா." என்று விடை பெற்றுக் கொண்டார் தரகர்.

∞∞∞∞∞∞∞∞∞∞

செழியன் வீட்டுக்கு வந்ததும் அமைதி குடி கொண்ட இல்லமே அவனை வரவேற்றது.

"என்னடா இது?? நம்ம வீடு தானா இது?? எங்க ரெண்டு பேரையுமே காணும்??" என்று தேடிக் கொண்டு சக்தியின் அறைக்குள் நுழைந்தான்.

செழியன் சக்தியின் அறைக்குள் நுழையும் போதே, சோகமாய் சோபாவில் அமர்ந்திருந்த சக்தியின் முகம் தான் தென்பட்டது.

வேகமாய் அவளருகில் வந்தவன், "ஏய் குட்டி என்னடா ஆச்சு எதுக்கு இப்போ இவ்வளவு சோகமா முகத்தை வச்சிட்டு இருக்குற." என்று கேட்க, சக்தியிடம் இருந்து எவ்வித பதிலும் வராததையடுத்து.,

"ஒரு வேளை அம்மா அடிச்சிட்டாங்களோ." என்றான் அவளை சீண்டும் விதமாக..

அவனை பார்த்து முறைத்த சக்தி, எதுவும் பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

"என்னடா இது?? எப்போதுமே நாம ஒரு வார்த்தை பேசினால் ஒன்பது வார்த்தை பேசுற பொண்ணு இன்னைக்கு இப்படி சைலன்ட்டா இருக்காளே." என்று சிந்தத்தவன், "இவளை இப்படியே விட்டால் சரி வராது என்று எண்ணிய செழியன்..,

"ஏய் சக்தி குட்டி, என்னடாம்மா ஆச்சு உனக்கு.. ஏன் இப்படி இருக்க?? எதுவா இருந்தாலும் இந்த சகோ கிட்ட சொல்ல மாட்டியா நீ??" என்று அவன் கேட்டது தான் தாமதம்.!! உடனே அவன் மார்பில் சாய்ந்து அழத் தொடங்கினாள் சக்தி.

அவளது அழகையை பார்த்ததுமே அவனுக்கு உள்ளுக்குள் சொல்ல இயலாத வலி. தந்தையை இழந்ததில் இருந்து தங்கைக்கு அவனே தந்தையாகிப் போனான். அவள் மேல் உயிரையே வைத்திருப்பவனுக்கு அவளது கண்ணீரை பார்த்ததும் செய்வது யாதென்று ஒன்றும் அறியவில்லை..

மார்பில் புதைந்திருந்த அவள் முகத்தை கையில் ஏந்தியவன், " என்னடா ஆச்சு?? எதுக்கு இப்போ இப்படி அழுகுறீங்க?? அம்மா ஏதாவது சொன்னாங்களா?? நான் கூப்பிட்டு என்னன்னு கேட்கட்டுமா??

"சகோ, அம்மா.. அம்மா.." தேம்பி தேம்பி அழவும் பொறுமையை இழந்தவன்.,

"அம்மா........." என்று வீடே அதிரும் படி கத்தினான்.

"செழியா.!! இதோ வந்துட்டேன்.. இப்போ தான் வெளிய போயிட்டு வந்திட்டியாப்பா." என்று கேட்டுக்கொண்டே சக்தியை பார்க்க, அவளோ அழுது கொண்டிருந்தாள்.

"ஏய் சக்தி நீ ஏன் இப்போ அழுதுட்டு இருக்குற?? வீட்டுக்கு வந்ததுமே அண்ணனும் தங்கச்சியும் சண்டைய ஸ்டார்ட் பண்ணிட்டிங்களா??" என்ற கேள்வியில் செழியன் சற்று குழம்பித் தான் போனான்.

"அம்மா.." என்று பல்லை கடித்தவன், "நான் இப்போ தான் வீட்டுக்கே வந்தேன், யாரையும் காணயில்லையேன்னு சக்திய பார்க்க அவள் சோகமா முகத்தை வச்சிட்டு இருந்தாள். என்னடான்னு கேட்டதுக்கு சடனா அழ ஸ்டார்ட் பண்ணிட்டாள். நீங்க தான் அவளை ஏதாவது சொன்னிங்களாமா?? ஏன் இப்படி அழுகுறா??" என்றான் கோபத்துடன்.

"நான் உன்னோட தங்கச்சிய எதுவுமே சொல்லயில்லப்பா, நான் ரூம்ல இருந்து இப்போ தான் வெளியவே வர்றேன்." என்றார் பதிலுக்கு.

"ஹேய் அப்போ அம்மாவும் எதுவும் சொல்லைன்னா வேற யாரு என்ன சொன்னாங்க??"

"அது வந்து.. அம்மா.. அம்மா.. அம்மா என்ன வீட்ட விட்டு துரத்த பார்க்குறாங்க." என்று அவள் சொல்லி முடிக்கவும், செழியன் புரியவனாய் அன்னையை பார்க்க அவரோ அவள் கூற வந்ததன் அர்த்ததை புரிந்து கொண்டு சிரித்தார்.

"அம்மா.. என்னம்மா?? இவள் என்ன சொல்லுறாள்ன்னே புரிய மாட்டேங்குது. ஆனா நீங்க என்னடான்னா சிரிக்கிறீங்க.!!"

"ஐயோ அது வேற ஒன்னும் இல்லைடா கண்ணா, இன்னைக்கு காலையில தரகர் ஐயா வீட்டுக்கு வந்து இருந்தாரு. அவரு கிட்ட உங்க ரெண்டு பேருக்கும் நல்ல வரன் பார்க்க சொல்லியிருந்தேன். அத கேட்டுட்டு தான் மேடம் இவ்வளவு அலப்பறை பண்ணுறாள் போல."

"ஏது வரன் பார்க்க சொல்லியிருக்கிங்களா??" என்றான் அதிர்ச்சியாக..

"ஆமாப்பா, காலாகாலத்துல உங்களுக்கும் நல்லது பண்ணி பார்க்கணும்ன்னு எனக்கும் ஆசை இருக்கும் தானே. அது தான் தரகர கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். அவரு நல்ல இடமா பார்த்து சொல்லுறேன்னு சொல்லியிருக்காரு."

"இருந்தாலும் ஏன்மா இவ்வளவு அவசரமா இதெல்லாம்??"

"நல்லா கேளு சகோ நீ, இப்போ தான் நான் காலேஜே முடிக்க போறேன். அதுக்குள்ள என்ன பேக்அப் பண்ணி வேற இடத்துக்கு அனுப்ப பார்க்குறாங்க இந்த அம்மா." என்று மீண்டும் சக்தி அழத் தொடங்கவும் சுயத்துக்கு வந்த செழியன்..,

"நம்ம மேட்டர நாளைக்கு தருவ வீட்டுக்கு கூட்டிட்டு வந்தே பேசிக்கலாம். இப்போ சக்திய எப்படியாச்சும் சமாதானம் படுத்தியாகனுமே." என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன்.,

"அம்மா சக்திக்கும் உங்களுக்கும் பிடிச்சிருந்தா நான் ஒரு பையனை பத்தி உங்க கிட்ட பேசலாமா??" என்கவும் இன்னும் இன்னும் அதிகமாக தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள் சக்தி.

"சகோ, நீ.. நீ.. கூட என்ன.. என்ன.. வெளிய துரத்த பார்க்குறல."

"ஏய் சக்தி நீ கொஞ்சம் அழறத ஸ்டாப் பண்ணு, செழியா நீ சொல்லுப்பா??"

"அம்மா சிவாவையே சக்திக்கு பார்க்கலாம்ன்னு எனக்கு ஒரு சின்ன தோட். நீங்க என்னம்மா சொல்லுறீங்க??"

"யார செழியா சொல்லுற, நம்ம சிவாவையா?? சிவா இதுக்கு சம்மதிக்கணுமே..!!"

"அத பத்தி நீங்க வொர்ரி பண்ணிக்காதிங்கம்மா, அவனுக்கு நம்ம சக்திய ரொம்ப பிடிக்கும். அப்பாம்மா இல்லனாலும் ரொம்ப நல்ல பையன்மா. நம்ம சக்திக்கு பேர்பெக்ட் மெட்ச்சா இருக்கும்மா. நீங்க என்ன சொல்லுறீங்க??"

சக்திக்கோ சிவாவின் பெயரை கேட்டதும் அவளை அறியாமல் ஏதோ ஒரு படபடப்பும் வெட்கமும் தொற்றிக் கொண்டது. அதற்கு என்ன பெயர் என்று அவள் அறியவில்லை.

"இதுல நான் சொல்லுறதுக்கு என்னப்பா இருக்கு. சிவா தங்கமான பையன். உன்னோட தங்கச்சிக்கு பிடிச்சிருந்தா எனக்கும் சரி தான்." என்கவும் தாயும் மகனும் சேர்ந்து கேள்வியாய் சக்தியை பார்க்க., அவளோ அமைதியாய் இருப்பதை பார்த்த செழியன்..,

"இங்க பாருடா சக்தி, இன்னைக்கு இல்லன்னாலும் என்னைக்காவது நீ கல்யாணம் பண்ணி தானே ஆகணும். என்று கேட்க, "ஆமாம்."என மேலும் கீழும் தலையாட்டினாள்.

"யாரையோ பண்ணிக்க போறத நமக்கு நல்லாவே தெரிஞ்ச சிவா ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது. நீ கல்யாணம் பண்ணி எங்கயும் தூரத்துக்கும் போக போறதில்ல, எங்க கூடயே தான் இருக்க போற." என்றான் செழியன் சிறு பிள்ளைக்கு போல்.

"சக்திக்கு எது புரிந்ததோ இல்லையோ, கல்யாணம் பண்ணினாலும் தன் குடும்பதோடே இருக்கலாம்." என்ற விடயம் அவளை அமைதியாக்கியது. அதுவும் சிவாவின் மீது அவளை அறியாமலே ஒரு ஈர்ப்பு இருப்பதையும் இந்த நொடியிலேயே அறிந்து கொண்டாள்.

இதுவரை தெளிவில்லாது இருந்த சக்தியின் முகத்தில் இப்போது தெளிவு தெரிவதை கண்ட செழியனுக்கோ ஒரு பக்கம் மனம் நிம்மதியடைய., ஒரு பக்கம் தன் காதல் விவகாரத்தை எவ்வாறு கூறி சம்மதிக்க வைப்பது என்று தெரியாமல், "கடவுளே நீ தான் எனக்கு இதுல ஹெல்ப் பண்ணனும்." என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டான்.



தொடரும்...
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Ohh ohh sollidu da unnoda love ya amma kitta
 
Top