• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 4

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 04

Writer : Hafa


மூன்று ஆண்டுகளுக்கு முன்..

சென்னை மாநகரத்தின் அந்த புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிப்பொறியியல் துறையில் சேர்ந்திருந்தாள் அவள். அவள் தான் தர்ஷனா.

தர்ஷனா சிறு வயதில் பெற்றோரை இழந்தவள். அன்றிலிருந்து ஆச்சிரம் ஒன்றிலேயே இருந்து வருகிறாள். அன்று தான் முதன் முதலாக மேற்படிப்புக்காக வேண்டி வெளியில் வந்திருக்கிறாள்.

முதல் நாள் கல்லூரிக்கு கல்லூரி பேரூந்தில் செல்ல வேண்டி இருந்தது. பேரூந்து கல்லூரிக்குள் நுழைந்து பார்க்கிங் ஏரியாவில் சென்று நிற்கவும் அதன் அருகில் ஒரு புல்லட் பைக் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

தன் பைக்கை ஒரு காலால் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவன் ஒற்றை கையால் ஸ்டைலாக ஹெல்மெட்டை கழற்றிய படி கலைந்து இருந்த முடியை சைடு மிர்ரரில் சரி செய்தவாறு அங்கும் இங்கும் தலையை திருப்பி சரி பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் செய்வதை எல்லாம் பேருந்து ஜன்னலின் ஊடாக பார்த்துக் கொண்டே கீழே இறங்கினாள் தர்ஷனா. அந்த நேரம் எங்கிருந்தோ, "டேய் செழியா குயிக்கா வாடா." என்ற குரல் கேட்டு, "இதோ வர்றேன் டா." என்று வேக எட்டுக்களுடன் அவளை தாண்டிச் சென்று நண்பர்கள் குழுவுடன் ஐக்கியமானான் செழியன்.

அன்று காலேஜுக்கு புதிய மாணவர்கள் வந்திருப்பதால், சீனியர் மாணவர்களால் நியூ ஜாயினர்ஸ் வெல்கம் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக அனைவரும் ஆடிட்டோரியத்தில் குழுமி இருக்க, வெல்கம் ஸ்பீச் செய்வதற்காக சீனியர் மாணவன் என்ற வகையில் செழியன் மேடையேறினான்.

"ஹலோ பிரண்ட்ஸ், ஐ வெல்கம் ஆல் ஆப்(f) யூ பிகா(h)ப்(f) அவர் காலேஜ். டோன்ட் ஒர்ரி காய்ஸ் நம்ம காலேஜ்ல ராகி(g)ங் இல்ல. ஸோ லெட் என்ஜோய் தி காலேஜ் டேய்ஸ். ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்கணும்னு இல்ல, அப்பப்போ படிக்கலாம். பு(f)ன் பண்ணலாம். தேங்க் யூ." என்றபடி மேடையில் இருந்து இறங்க மாணவர் மத்தியில் கரகோசம் எழுந்தது. அது மட்டும் அல்ல ஒரு சோடிக் கண்களோ அவனை மட்டுமே நோக்கிக் கொண்டிருந்தது.

அன்றிலிருந்து செழியனை எதிர்கொண்ட தருணங்களில் எல்லாம் தர்ஷனா செழியனை பார்த்து புன்னகைக்க, முதலில் ஏன் சிரிக்கிறாள் என அறியாதவன் அதன் பின் அவனும் மரியாதைக்காக வேண்டி மெலிதாய் சிரித்தான்.

அன்றொரு நாள் செழியன் தன் நண்பர்ளுடன் இருந்த வேளை தர்ஷனா செழியனை பார்த்து புன்னகைத்து விட்டு செல்லவும் நண்பர்கள் பட்டாளம் செழியனை சூழ்ந்து கொண்டது.

"டேய் மச்சான் என்னடா நடக்குது இங்க??"

"அது தானேடா அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்னு இங்க ஒரு சீன் நடந்திச்சே." என்று நக்கலாக சிரிக்க.,

"டேய் லூசுத்தனமா பேசாதீங்கடா."

"ஏன் ஏன் நாங்க என்ன பொய்யா சொல்றோம். அவங்க உன்ன பார்த்து சிரிக்க நீ அவங்கள பார்த்து சிரிக்க.. ஒரே லவ்வு தான்." என்றவனை பார்த்து முறைத்தான் செழியன்.

"டேய் நிறுத்துங்கடா, நானும் அப்போதுல இருந்து பார்த்துட்டு இருக்கேன் ஓவரா தான் ஓட்டுறீங்க. அந்த பொண்ணு ஏதோ பிரண்ட்ஷிப்பா சிரிச்சிது நானும் ஒரு மரியாதைக்காக சிரிச்சேன். அதுக்கு போய் என்னவெல்லாமோ பேசுறீங்க.!!" என்று கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் செழியன்.

அன்றிலிருந்து தினமும் செழியன் தர்ஷனாவை கவனிக்க ஆரம்பித்தான். "அவள் வேறு யாரிடமும் பேசுவதும் சிரிப்பதும் போல் தெரியவில்லை. தன்னை கண்டால் மட்டும் ஏதோ முன்னர் தெரிந்தவன் போல புன்னகைக்கிறாள். அது ஏன்??" என்ற கேள்வி அவனின் மனதை துளைத்த போதும் இருவருக்கு இடையிலும் அந்த ஒற்றை புன்னகை இருந்து கொண்டே இருந்தது.

தர்ஷனாவுக்கோ அவன் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு. முதலில் அவன் மீதிருந்த மரியாதையின் காரணமாகவே சிரித்தாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் மீது இருந்த மரியாதை, அவளை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக காதலாக உருவெடுத்தது. தனிமையில் வளர்ந்தவளுக்கு அவனது மெலிதான புன்னகை ஓர் உறவை கொடுத்ததே அந்த காதல் வளர அத்திவாரமிட்டது எனலாம்.

செழியனுக்கோ நாட்கள் நகர அவள் பற்றிய எண்ணம் மனதில் குடி கொண்டது. அவளின் புன்னகையில் அவனும் மனதை தொலைத்தான். மனதை மட்டுமல்ல இரவிலும் தூக்கமின்றி தவித்தான். ஒரு நாள் பார்க்கத் தவறினால் கூட அந்த நாள் முழுமை அடையாத உணர்வில் இருவரும் தவித்தனர்.

நாட்கள் நகர, புன்னகையில் தொடங்கிய உறவு பேச்சாக உருவெடுத்தது. அவளோ தன் காதலை அவனிடம் ஒப்பித்தால் இருக்கும் தொடர்பும் இல்லாதாகி விடும் என பயந்திருக்க., அவனும் தன் மனதை வெளிப்படுத்தாமல் இருவரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.

அன்று செழியனுக்கு கல்லூரி இறுதி நாள்..

இதற்கு மேல் காத்திருந்தால் இருவராலுமே மீண்டும் சந்தித்துக் கொள்ள முடியாது என எண்ணி ஒருவரை ஒருவர் தேடி அலைந்து கொண்டிருந்தனர்.

சிவா, "டேய் என்ன மச்சான் டென்ஷனா யாரையோ தேடிட்டு இருக்குற மாதிரி இருக்கு. என்னடா விஷயம்??"

செழியனின் நண்பர்களில் ஒருவன் வினய், "அட ஆமாடா நானும் ரொம்ப நேரமா உன்ன வாட்ச் பண்ணிட்டு இருக்கேன். யார தேடற?? சொன்னேன்னா நாங்களும் ஹெல்ப் பண்ணுவோம்ல."

செழியன், "அது வந்துடா..." என்று இழுக்க.,

சிவா, "ராகம் பாடாம என்னனு சொல்லு மச்சான்."

"நம்ம ஜூனியர் தர்ஷனா இருக்காளே.."

"ஆமா மச்சான்.. நீ கூட பிரண்ட்ன்னு சொல்லுவியே, அவளுக்கு என்ன??"

"மச்சி எனக்கு அவளை புடிச்சிருக்கு., ஐ திங் ஐ லவ் ஹேர்."

"வாட்?? என்னடா சொல்ற??" என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்க., செழியனோ அவ்விருவரையும் பார்த்து கண்ணடித்தான்.

சிவா, "என்னடா செழியா சொல்ற.!! உண்மையாவா?? என்னால நம்பவே முடியல. நீ ஒரு பொண்ண லவ் பண்ணுறேன்னு சொல்லும் போது."

"ஹேய் எனக்கே தெரியலடா எப்போதுல இருந்து அவளை காதலிக்க ஆரம்பிச்சேன்னு. பட் நௌ என்னோட மனசு முழுக்க அவள் மட்டும் தான்டா இருக்காள்."

"சூப்பர் டா மச்சி, இந்த பீலிங்ஸோட போயிட்டு உன் லவ்வ சொல்லு. என்னடா வினய் சொல்ற நான் சொல்றது சரி தானே.??"

"ஆமா சிவா, டேய் செழியா கண்டிப்பா உன்னோட லவ்வ அவ அக்ஸப்ட் பண்ணிப்பா."

"சரிங்கடா, நானும் இன்னைக்கு எப்படியாவது அவள் கிட்ட சொல்லிடணும்னு தான் தேடிட்டு இருக்கேன், பட் எங்கையுமே காணயில்லடா.."என்று கவலையுடன் கூறவும்..,

சிவா, "டேய் அங்க பாரு அது தர்ஷனா தானே."என்க, கண்களை சுழல விட்டவன் அவள் மைதானத்தில் இருப்பதை கண்டு ஓடினான் அவளருகில்.

அவள் முன் மூச்சிரைக்க நின்றவனை கண்ட அவள் கண்கள் அகல விரிந்தன.

அவனை கண்டதுமே அவளுக்கு படபடப்பு தொற்றிக் கொண்டது..

செழியன், "ஹேய் உங்க கிட்ட ஒன்னு சொல்லியே ஆகணும்."

"நான் கூட.. உங்கள.." என்று அவள் தயங்கி நிற்க..

அதற்கு மேல் தாமதிக்க விரும்பாதவனாய் " ஐ லவ் யூ தர்ஷனா, ஐ லவ் யூ ஸோ மச், ஐ வான்ட் யூ டு பீ(b) வித் மீ டில் தி எண்ட் ஆப் மை லைப்." என்று அவள் முன் மலர்க்கொத்தை நீட்ட., அவளோ வெட்கிச் சிவந்து போனாள்.

அவளும் ஒரு நொடியேனும் தாமதிக்காமல் அவனை பாய்ந்து இறுகிக் கட்டிக் கொண்டு, "ஐ டூ லவ் யூ டியர்... ஐ ஆல்சோ வான்ட் யூ டு பீ(b) வித் மீ டில் மை லாஸ்ட் பிரீத்." என்று இருவரும் சுற்றுப்புரத்தை அறியாது அணைத்துக் கொண்டனர். இருவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைவதை பார்த்த ஒரு சோடிக் கண்கள் பொறாமையில் துடித்தது. "உங்களை எவ்வாறாயினும் பிரித்து காட்டுவேன்" என தனக்குத் தானே சபதமிட்டுக் கொண்டது அந்த கண்களுக்கு சொந்தக்காரரின் மனம்.



தொடரும்...
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Paraah love ya ippotha love ya sonnaga athukulla villian character yaru
 
Top