• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 3

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 03

Writer : Hafa


ஆபீஸுக்கு வந்து சேர்ந்த சிவா முதல் வேலையாய் செழியனை பார்க்கச் சென்றான்.

"செழியா, என்னடா ஆச்சு உனக்கு?? நீ எவ்வளவு பெரிய பிசினஸ் மேன், நீ என்னடான்னா ரோட்ல நின்னு சண்டை போட்டுட்டு இருக்க??" என்று கேள்விக் கணைகளை தொடுக்க, செழியனோ முகத்தில் சிறிதும் மாற்றத்தை காட்டாது கோபத்தின் உச்சத்திலிருந்தான்.

அவன் இன்னும் கோபத்தில் தான் இருக்கிறான் என்பதை அறிந்த சிவா வழமைக்கு கொண்டு வரும் பொருட்டு, "நடந்ததெல்லாம் விட்டு தள்ளு செழியா, இன்னைக்கு ஆபீஸ்ல எவ்வளவு வேர்க்ஸ் இருக்குனு மறந்து போச்சா."

"ஹேய் ஆமா சிவா, அந்த இடியட்ட பத்தி திங்க் பண்ணிட்டு இருந்தால் நமக்கு தான் டைம் வேஸ்ட்." என தனக்கு தானே கூறிக்கொண்டவன், "நீ அந்த அனலைஸ் பண்ணின நியூ ஆர்டர்ஸ் பைல்ஸ் எல்லாம் டேபிள்க்கு கொண்டு வா அதெல்லாம் பார்க்கணும், இன்டெர்வியூ விஷயத்தை மேனஜர ஹேண்டல் பண்ணிக்க சொல்லு. இந்த வேர்க்க முடிச்சிட்டு நாம ரெண்டு பேரும் சப்ளை பண்ண வேண்டிய மெடீரியல்ஸ பார்த்துட்டு வந்துடலாம்." என்று நண்பனிடம் திட்டங்களை ஒப்பிக்கவும் நண்பனை பார்த்து ஒரு நொடி வியந்து போனான் சிவா.

இது தான் செழியன்., ஆபீஸ், வேர்க் என்ற வார்த்தைகளை கேட்டாலே மற்றதை எல்லாம் நொடிப் பொழுதில் மறந்து போவான். இது தான் இந்த சிறு வயதிலும் இவ்வளவு உயர்வை எட்ட காரணமாக அமைந்தது.

∞∞∞∞∞∞∞∞∞∞

மிகவும் சந்தோசமாய் வீட்டுக்குள் நுழைந்தாள் மதி. அவள் முகத்தில் தெரிந்த குதூகலத்தை பார்த்த ரவி, "என்ன கண்ணா ரொம்ப ஹாப்பியா வர்ற போல தெரியுதே."

"ஆமாப்பா ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன். நான் ஆச பட்டது போல வேலை கிடைச்சிட்டுதுப்பா." எனக் கூறி விட்டு தந்தையை சுற்றி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.

மதியின் சத்தத்தில் அடுப்படிக்குள் இருந்த சீதா,"என்னது வேலை கிடைசிட்டா." என்று அதிர்ச்சியில் கேட்டபடி வந்ததை பார்த்த ரவி, "ஆமா சீதா, மதியோட இந்த ஆட்டத்தை பார்த்தும் கூடவா உனக்கு புரிய மாட்டேங்குது. அதுசரி நீ எதுக்கு டென்ஷனான மாதிரி இருக்க??"

"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க."என்று வாய் வார்த்தையாக சொன்னாலும் சீதாவுக்கு மதியை நினைத்து எப்போதும் ஒரு சிறு பயம் இருந்து கொண்டே இருந்தது.

மதி மிகவும் துடிப்பான பெண். சிறு வயதில் இருந்து அவள் வளர்ந்தத்துடன் இணைந்து தைரியமும் கூடவே வளர்ந்தது. தப்பு என்றால் தட்டிக் கேட்காமல் விட மாட்டாள். தந்தைக்கு ஏற்பட்ட விபத்தின் பின் அவரின் பென்சன் பணம் கிடைத்த போதும் தன் பங்களிப்பும் இருக்க வேண்டும் என இத்தனை நாட்களாக குடும்பத்தை கொண்டு நடத்திக் கொண்டிருப்பவள். என்ன தான் இருந்தாலும் அவளுக்கு இருக்கும் அசட்டு தைரியம் சில நேரங்களில் பாதகமாகி விடும். இனி வேலையும் கிடைத்து விட்ட படியால் தினம் ஒரு பிரச்சனைனையை இழுத்துக் கொண்டு வருவாள் என்ற தன் பயத்தை மதியிடம் வெளிப்படுத்தினாலே பேய் ஆட்டம் ஆடி விடுவாள் எனத் தெரியும் அந்த அன்னைக்கு. அதனால் அமைதி காத்தார். இருந்தாலும் வேலை கிடைத்த சந்தோஷத்தை தந்தையுடன் இணைந்து கொண்டாடுவதை பார்த்த தாயுள்ளமும் பூரித்துத் தான் போனது.

ரவி, "எப்போ மதிமா வேலையில ஜாயின் பண்ண போற??"

"நாளைக்கே ஜாயின் பண்ணிக்க சொல்லிடங்கப்பா."

"ரொம்ப சந்தோசமா இருக்குடா." என்று மகளுக்கு நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்தார்.


∞∞∞∞∞∞∞∞∞∞

"அம்மா, என்ன பண்ணிட்டு இருக்கீங்க??" என்று உள்ளே வந்த சக்தி தான் அழைத்துக் சிலையாய் அமர்ந்திருக்கும் தாயை பார்த்து குழம்பிப் போனாள்.

"என்ன ஆச்சு அம்மாவுக்கு?? ஏன் இப்படி யோசிச்சிட்டு உட்கார்ந்து இருகாங்க!!." என்றபடி சென்று அவரின் தோள்களை தொட்டு, "அம்மா..!!" என்று அவரை அசைக்க, சக்தியின் தொடுதலால் நிஜ உலகிற்கு வந்தார் கங்கா.

"ம்ம்.. சொல்லுடா சக்தி."என்றார் குரலில் ஒரு சுரத்தையே இல்லாமல்.

"ஐயோ.!! அம்மா.. என்னம்மா ஒரு மாதிரி இருக்கீங்க?? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?? நான் வேணா அண்ணனுக்கு கால் பண்ணி கூப்பிடவா??"

"அதெல்லாம் ஒன்னும் இல்லைடா, லேசா தலை வலிக்கிற மாதிரி இருந்தது. அது தான் கொஞ்சம் பெட்ல சாஞ்சிட்டு இருந்தேன்." என்று சமாளித்தார்.

"அம்மா என் கிட்டயே பொய் சொல்ல ட்ரை பண்றியா?? சொல்லுமா எத பத்தி திங்க் பண்ணிட்டு இருக்கீங்க??" என்கவும் கங்காவுக்கோ கண்கள் கலங்கியது. அதனை கவனித்த சக்தி.,

"அம்மா எதுக்கு இப்போ அழுகுற?? என்னன்னு சொல்லுமா??"

"எனக்கு வேற என்ன சக்தி கவலை இருக்க போகுது, எல்லாம் செழியன பத்தி தான்." என்க சக்திக்கோ புரிந்தது அவர் எதனை கூற வருகிறார் என்று. இருந்தாலும் அவரிடமே, "ஏன்மா சகோவுக்கு என்ன??"

"தெரிஞ்சும் ஏன்மா தெரியாத மாதிரியே கேட்குற? வாரிசுன்னு ஒரு பையனை பெத்து அவனுக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்க முடியலைங்கிற ஏக்கம் என் மனசுக்குள்ள இருந்துட்டே."

"கவலை படாதம்மா, சகோவ பத்தி தான் உனக்கு தெரியுமே, அவன் யாரு சொல்றதையும் கேட்குற மனநிலைமையில இல்லைன்றது நமக்கே தெரியும். அதுல அவனை குற்றம் சொல்ல முடியாது, அவன் அனுபவிச்ச வலிகள் அப்படி."

"என்னடா குட்டி பண்றது இதெல்லாம் அவனோட வாழ்க்கையில நடக்கணும்னு எழுதி இருக்கு, அதனால தான் நடந்திருக்கு. இதுக்கு எங்களால என்ன பண்ண முடியும்??

"அம்மா நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லை, சகோ ஒன்னும் சின்ன பையன் கிடையாது. ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேன். அவன் வாழ்க்கையில எது பண்ணனும் பண்ண கூடாதுன்னு அவன் முடிவு எடுத்துப்பான்மா. நம்மளால பண்ண முடிஞ்சது ஒரே ஒரு விஷயம், இனி நடக்கப் போறதாவது நல்லதா நடக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறது தான். நீங்க மனச போட்டு குழப்பிக்காம டேப்லெட் சாப்பிட்டு தூங்குங்க."

"நீ ஏதோ சொல்ற சக்தி, இருந்தாலும் இந்த மனசு கேட்க மாட்டேங்குது, எல்லாத்தையும் அந்த கடவுள் தான் பார்த்துக்கணும்." என்று பிரார்த்தித்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தார் கங்கா.

ஆபீஸுக்கு சென்று வந்து மேலே தன் அறைக்கு ஏறப் போன செழியனின் காதுகளில் தன் தாய் மற்றும் சகோதரியின் பேச்சுக்கள் முழுமையாக விழுந்தது.

ஒரு நிமிடம் அவனது முகம் வேதனையில் சுருங்க, வேகமாக தனது அறையை நோக்கி நடையை போட்டான்.

அறைக்குள் நுழைந்த செழியனுக்கோ மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது. ட்ரோயருக்குள் இருந்து தன் டைரியை எடுத்தவன் அதனை கைகளில் ஏந்த அவனை அறியாமல் கண்கள் நீரை வார்த்தது.

"எதுக்கு யாருமே என்ன புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க, நான் பண்ண ஒரே தப்பு உண்மையா காதலிச்சது மட்டும் தான். அந்த உண்மையான காதலுக்கு எனக்கு கிடைச்ச பரிசு தான் இந்த ஏமாற்றமும் தனிமையும். உயிருக்கு உயிரா இருந்தேனேடி உன் மேல, நானா உன்னையே சுத்தி சுத்தி வந்தேன். நீ தானேடி நான் தான் எல்லாமேன்னு என்ன தேடி வந்த. உன்ன மகாராணி மாதிரி வச்சிக்கணும்னு எவ்வளவு கனவு கண்டிருப்பேன் தெரியுமா?? ஆனா என்ன விட யாருன்னே தெரியாத ஒருத்தன் பெரிசா போயிட்டான்ல.உனக்கு பணம் தான் பெருசுன்னு சொல்லி இருந்தால் கூட மொத்த சொத்தையுமே உன் பேர்ல எழுதி வச்சிருப்பேன். ஆனா நீ என்ன புரிஞ்சிக்காம போயிட்டேல. இத விட்டு என்னால வெளிய வரவே முடியல." என்றவன் கண் முன் நிழலாடியது அந்த நாள் நினைவுகள்.



அடுத்த எபிசொட் பிளாஷ்பேக்ல ஸ்டார்ட் ஆகும்.



தொடரும்...
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Yaru athu chezlian love panna girl enn vidudu poeda
Mathi happy 😊😊😊
 
Top