• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 26

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 26

Writer : Hafa


இருவரும் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்திருக்க, இருவருக்குள்ளும் அமைதியே குடி கொண்டிருந்தது..

மதியோ, "என்ன இவரு.. இப்போ எதுக்கு இங்க வந்திருக்காரு.. வந்தும் என்கிட்டே ஒன்னும் கேட்கமல் இப்படி அமைதியா இருந்தா என்ன பண்றது நான்.." என்று எதுவும் புரியாமல், அவன் முகத்தை கடைக் கண்ணால் பார்க்க, அவனோ போனை நோண்டிக் கொண்டிருந்தான்..

மதி தன்னை அடிக்கடிப் பார்ப்பதை உணர்ந்தே இருந்தான் செழியன்.. ஆனால் அவளே பேச வேண்டும் என்று எதிர்பார்த்தானோ என்னவோ.. அவன் வாயை திறக்கவே இல்லை..

அவனது இந்த அமைதியை பொறுக்க முடியாதவள், "ம்ம்க்கும்.." என்றாள்..

அதற்கும் அவன் அமைதியாய் இருக்க, "இங்க பாருங்க, உங்களை தான் கூப்பிடுறேன்.. காதுல விழயில்லையா??" என்றவளை திரும்பி பார்த்து பார்வையாலேயே, "என்ன??" என்றான்..

"எதுக்கு இங்க வந்திங்க, அது தான் நமக்குள்ள இருந்த ஒன் இயர் காண்ட்ராக்ட் முடிஞ்சுதே.. அப்பறம் எதுக்கு என்ன தேடி வந்திங்க.. நீங்க செட்டில் பண்ண வேற ஏதாவது இருக்குதா?? இல்ல நான் உங்க வீட்டுல இருந்து எதையாவது திருடிட்டு வந்து இருப்பேன்னு செக் பண்ணிட்டு போகலாம்னு வந்திங்களா??" என்றதும் அவன் பல்லைக் கடித்து தன் கோபத்தை கட்டுப் படுத்துவது அவன் முகத்தில் நன்றாக தெரிந்தது..

மதியும் விடாமல், "என்ன உங்களைத் தான் கேட்டேன்.. சந்தேகமா இருந்தா இந்தா இருக்கு பேக் செக் பண்ணிக்கோங்க.." என்று தன் பையை அவனிடம் நீட்ட, அடுத்த நிமிடம் தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டிருந்தாள் மதி.. ஆமாம்.. செழியன் அவளை அறைந்திருந்தான்..

கன்னத்தை கைகளால் பிடித்துக் கொண்டு, விழித்துக் கொண்டிருந்த மதியை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ சட்டென்று இழுத்து அணைத்துக் கொண்டான்.. எலும்புகள் நொறுங்கி விடும் அளவிற்கு அவன் அணைப்பின் வேகம் கூடிக் கொண்டே போக, மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டாள் மதி..

"ப்ளீஸ் விடுங்க.." என்று அவள் மெதுவாய் கூற, அவளின் மெடிட்ட வயிறும் அவனை ஏதோ செய்ய, சட்டென தனது அணைப்பில் இருந்து அவளை விடுவித்தவன், அவளை ஏறெடுத்தும் பார்க்காது, வாஷ்ரூமுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்..

கண்கள் கலங்க நின்று கொண்டிருந்த மதியின் காதல் கொண்ட மனதுக்கு, நன்றாக தெரிந்தது, "நாம் அவனை ஏதோ ஒரு வகையில் காயப்படுத்தி விட்டோம்.." என்று..

வாஷ்ரூமுக்குள் சென்ற செழியனுக்கு கண்களில் நீர் வடிய, கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து, "என்னடா பண்ணி வச்சு இருக்க செழியா.. இப்போ எதுக்கு அவளை அடிச்ச??" என்று அவன் மனம் அவனை கேள்வி கேட்க, "அவள் கேட்டது மட்டும் சரியா?? என்னோட காதலை அவள் கிட்ட சொல்லலாம்னு வந்து இருக்குற என் கிட்ட சந்தேகப் பட்டு வந்துட்டியான்னு கேட்கலாமா?? என்று எதிர் கேள்வி கேட்டான் செழியன்..

"இது வரைக்கும் நீ பண்ணினது எல்லாமே சரியா?? நீ தானே அவளோட காதலை புரிஞ்சிக்காம ஏதேதோ பண்ணிட்ட.. இப்போ அவளை மட்டும் குறை சொல்றது, எந்த விதத்தில் நியாயம்.." என்று அவன் மனம் மதிக்கு சார்பாக வாதாடியது..

"உண்மையும் அது தானே.. அவள் மனதை புரிந்து கொள்ளாமல் அக்ரீமெண்ட், கல்யாணம்.. என்று அவளை கஷ்டப்படுத்தியது தன் தவறு தானே.." என்று அவன் மூளையும் அவனுக்கு எடுத்துச் சொல்ல மதியின் பக்க நியாயத்தை புரிந்து கொண்டவன், வாஷ்ரூமை விட்டு வெளியே வந்தான்..

அங்கு மதியோ, "ஐயோ இப்போ எதுக்கு என்ன இப்படி அடிச்சான்.. ஒரு வேளை நான் காதலிச்ச விஷயம் அவனுக்கு தெரிஞ்சி இருக்குமோ.." என்று யோசித்தவளுக்கு நிம்மதியாக மூச்சு கூட விட முடியவில்லை..

செழியன் வீட்டிற்கு வர சிறிது நேரத்திற்கு முன் மதிக்கு அழைத்து இருந்த தர்ஷனா, "உன்னோட காதலை சொல்லாமல் மூடி வச்சி எந்த பயனும் இல்லை மதி.. ஏன்னா உன்னை தவிர மற்ற எல்லாரோட மூலமமாவும் அவனுக்கு நீ காதலிக்கிற விஷயம் தெரிஞ்சிட்டுது.. இதுக்கு மேலயும் நீ சொல்லாமல் இருந்தால் நீ அவனை காதலிக்கிறதுல அர்த்தமே இல்ல மதி.." என்று சொல்லி இருந்ததை எண்ணிப் பார்த்தவளுக்கு செழியனிடம் தான் கேட்ட கேள்விகளின் மடத்தனத்தை எண்ணி தன்னை தானே கடிந்து கொண்டவள் செழியன் வெளியே வரும் வரை காத்திருந்தாள்..

அவன் சரியாக வெளியே வர, அதற்கு மேல் தாங்க இயலாதவலாய், "இளா..." என்ற கூவலுடன் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள் மதி.. அவளின் இந்த திடீர் அணைப்பை எதிர்பாராதவன், "மதி என்னாச்சு??" என்று அவன் கேட்டுக் கொண்டிருக்க, அவளோ அவனை மேலும் மேலும் இறுக அணைத்து நேராய் அவனின் இதயத்திற்குள் நுழைந்து விடுபவளைப் போல, அவன் நெஞ்சினுள் புதைந்தாள்..

"மதி என்னாச்சுடா?? ஏன் இப்போ அழுகுற??" என்றவனின் முகத்தில் முத்த மழையை பொழிந்தவள், " சாரி இளா, ஐ லவ் யூ.. ஐ லவ் யூ ஸோ மச்.." என்றவள், "நான் தான் முன்னாடியே சொல்லி இருக்கணும், இத்தனை நாள் சொல்லாம விட்டு உங்கள கூட இருந்து கஷ்டப் படுத்தினதுக்கு சாரி இளா.." என்க,

"சரி.. சரி.. ஷர்ட் கசங்கிட போகுது.. கொஞ்சம் தள்ளி நில்லு.." என்றவனது நெஞ்சில் கிள்ளியவள், "நான் ஒருத்தி, இங்க உருகி உருகி ஐ லவ் யூ சொல்லிட்டு இருக்கேன்.. உங்களுக்கு என்னடான்னா சட்டை கசங்க கூடாதா.." என்றவள் அவனோடு மேலும் நன்றாக ஒட்டிக் கொண்டு நகர மறுத்தாள்..

"ஏய்.. நீ காதலிக்கிறேன்னா நானும் உன்ன காதலிக்கணுமா?? நான் எப்போச்சும் உன்ன காதலிக்கிறேன்னு சொல்லி இருக்கேனா??" என்றத்தில் சட்டென அவனை விட்டு வில்lகியவள், "சாரி.." என்று சத்தமாக சொல்லி விட்டு, "போடா சிடுமூஞ்சி.." என்று வாய்க்குள் முணுமுணுக்க,

"என்ன சொன்ன??" என்றான் தன் சிரிப்பை மறைத்தபடி..

"நான் என்ன சொல்ல, சாரின்னு சொன்னேன்.. அவ்வளவு தான்.." என்று நகரப் போனவளை இழுத்து அணைத்த செழியன், "நான் உனக்கு சிடுமூஞ்சியா?? சிடுமூஞ்சி இப்போ என்ன பண்ணுவான்னு பாரு.." என்றவன் அவள் இதழ்களை சிறை செய்தான்..

பல மணித்துளிகள் இதழ் யுத்தம் தொடர, அவள் மூச்சு வாங்க சிரமப்படுவதை உணர்ந்து கொண்டவன், தன்னில் இருந்து அவளை மெல்ல விலக்கி அணைத்துக் கொண்டவன், "சரி நான் இப்போ வாஷ்ரூம்ல இருந்து வரும் போது என்ன சொன்ன??" என்க,

"நானா நான் எதுவும் சொல்லலையே.." என்றவளை கள்ளப் பார்வை பார்க்க, சொக்கிப் போனவள், "ஐ லவ் யூ இளான்னு சொன்னேன்.." என்க,

"திரும்ப சொல்லு.." என்றான் செழியன்..

"ஐ லவ் யூன்னு சொன்னேன்.." என்றாள் அவள்..

"திரும்ப ஒரு வாட்டி.."

"ஐ லவ் யூ சொன்னேன்.."

திரும்ப.." என்றவனை முறைத்த மதி,

"ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. போதுமா??" என்று மூச்சு வாங்கியவளை இழுத்து தன் மேல் சாய்த்து கொண்டான் செழியன்..

"மேடம்க்கு என்ன திடீர்னு என் மேல அப்படி ஒரு லவ்.." என்றவனது மார்பில் தன் விரல் கொண்டு கோலம் போட்டுக் கொண்டே, "தெரியலையே.." என்றாள்..

"அப்படியா அது எப்படி தெரியாம போகும்.. அது தெரியாமல் தான் தர்ஷனாவை அந்த அறை அரைஞ்சியா??" என்றவனை பார்த்து பல்லை காட்டியவள், "எப்படின்னு சொல்லத் தெரியல.. ஆனா உங்கள முதன் முதல்ல காலேஜ்ல பார்த்த போதே பிளாட் ஆனவள் தான்.. அப்பறம் எந்திரிக்கவே இல்ல.." என்றாள் வெட்கப் பட்டுக் கொண்டே..

"ம்ம்ம்.. அப்பறம்.." என்றவன் காதை பிடித்து திருகியவள்,

"என்ன அப்பறம்?? அது தான் மொத்த ஸ்டோரியும் தெரியும்ல.. சும்மா என் வாய போட்டு கிளறுறது.." என்றவளது தாடையை பிடித்துக் கொஞ்சியவன், "என்ன தான் உன் வாயால கேட்கும் போது வர்ற பீல் வேறல.." என்க, அவனை அப்படியே அணைத்துக் கொண்டாள்..

செழியனின் அணைப்பில் இருந்த மதி, சட்டென தலையை தூக்கிக் கொள்ள அவளை கேள்வியாய் நோக்கினான் செழியன்..

"அது வந்து என்னனா, உங்க கிட்ட அப்போவே கேட்கணும்னு நினைச்சேன்.. நான் உங்களை காதலிச்சது உங்களுக்கு எப்படி தெரியும்??" என்று கேட்க, அவளை பார்த்து கண்ணடித்தவன், அது தான் உருகி உருகி எழுதி இருக்கியே என்ன பத்தி உன் டைரில.." என்றான்..

"டேய் ப்ராடு ப்ராடு.. என் டைரியை திருட்டுத்தனமா எடுத்து படிச்சுருக்கல நீ.." என்று அவனது நெஞ்சில் அடித்த மதி, "அன்னைக்கு உன்னோட டைரிய எடுதேன்னு சொல்லி என்ன என்னமா திட்டினீங்க.. இப்போ நீங்க மட்டும் எடுத்து படிக்கலாமா??" என்று அடிக்க ஓங்கியவளின் கை பிடித்து தடுத்தவன்,

"ஹேய்.. உன்னோட டைரிய படிச்சி இருக்கலானாலும் நான் பண்ணின தப்புக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு நாம சேர்ந்து வாழலாம்னுற முடிவுல வீட்டுக்கு வந்து பார்த்தால், மேடம் டாக்டர் பாரதியோட கண்ணம்மா மாதிரி பையை தூக்கிட்டு கிளம்பிட்டிங்க.. அந்த நேரத்துல தான் இந்த டைரி என் கண்ணுல பட்டது.." என்று வினயை சந்தித்தது முதற்கொண்டு அனைத்தையும் கூற அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள்..

மதியின் அமைதியை பார்த்த செழியன், "ஆனா ஒன்னு மதி, நான் உன்னோட டைரிய உன்னோட பர்மிஷன் இல்லாம படிச்சது தப்பு தான்.. அதனால உன் டைரியை பார்த்த என்னோட கண்ணுக்கும், அத படிச்ச என்னோட வாய்க்கும் வேணா நீ தண்டனை கொடு, வாங்கிக்குறேன்.." என்று அவளை சீண்ட,

"ஆஹ்.. இதோ வாயை காட்டுங்க ரெண்டு போடுறேன்.." என்றாள் மதி..

"ஐயோ ஏன் செல்லம் உனக்கு அந்த கஷ்டம்.. நீ ப்ரீயா விடு, அத நான் பாத்துக்குறேன்.." என்ற செழியன் அவளை இழுத்து இதழோடு இதழ் பதித்தான்..

பல மணி நேரமாக இதழ் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்க, செழியனின் போன் அடித்து இம்சிக்க, "ச்சை இந்த மாதிரி நேரத்துல எங்க இருந்து தான் வர்ராங்களோ.." என்று சலித்துக் கொண்ட செழியன் போனை எடுத்து பார்க்க கங்கா தான் அழைத்திருந்தார்..

"செழியா, எங்கடா போன?? மதி ஒரு பக்கம் போயிட்டாள்.. நீ ஒரு பக்கம் போயிட்ட.. நீங்க ரெண்டு பேரும் அக்ரீமெண்ட் போட்டு கல்யாணம் பண்ணனும்னா, நாங்க பெரியவங்க எதுக்குடா சடங்கு சாம்பிராதாயம் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்.." என்று படபடவென பேச,

"அம்மா.. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்.. நீங்க டென்ஷன் ஆகுற மாதிரி எதுவும் நடக்கல.. நான் உங்க மருமகள் கூட தான் இருக்கேன்.. அப்பறம் அந்த அக்ரீமெண்ட் பேப்பர் இருக்குல்ல, அத முதல்ல நெருப்புல போட்டு கொழுத்துங்க.. இனிமேல் அதுக்கு தேவை இருக்காது.." என்றான்..

"செழியா நிஜமாவ சொல்ற?? அத வீட்டுல இருந்து கிளம்பும் போதே சொல்லி இருக்கலாமேடா மதிய கூட்டிட்டு வர தான் போறேன்னு.. இங்க நாங்க எல்லாரும் எவ்வளவு பயந்து போய்ட்டோம் தெரியுமா?? வீட்டுக்கு வா தம்பி, என் மருமகளை விட்டு உனக்கு ரெண்டு அடி போட சொல்றேன்.." என்று மகன் மருமகளும் இணைந்த மகிழ்ச்சியில் அவனை செல்லமாக மிரட்ட,

"ஐயோ நீங்க வேறமா, இவ இப்போவே எனக்கு வாய்ல அடிக்குறாள்மா??" என்று சொல்லிக் கொண்டு மதியை பார்த்து சிரிக்க,

"யோவ் என்ன இது விவஸ்தையே இல்லாம அத்தைகிட்ட இத பத்தி சொல்லிட்டு இருக்கீங்க.." என முணுமுணுத்தவள் அவனது தொடையில் கிள்ளி வைக்கவும், "ஆஆஆ அம்மா.." என்று கத்தினான் செழியன்..

அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்து கொண்ட கங்கா, சிரித்துக் கொண்டே, "சரி ரெண்டு பேரும் எப்போ வீட்டுக்கு வர்றிங்க??" என்க,

"இப்போ நைட் லேட் ஆகிடிச்சிமா.. நாங்க நாளைக்கு மார்னிங் வந்துடுறோம்.." என்று கூறி போனை கட் செய்தவனை முறைத்துக் கொண்டு நின்றாள் மதி..

"என்னடி இப்போ எதுக்கு முறைச்சிட்டு இருக்க??" என்றவனுக்கு தலையில் இரண்டு கொட்டுக்களை வைத்தவள், "அத்தை கிட்ட போய் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம என்ன சொல்றிங்க?? இப்படி பண்ணினால் உங்கள முறைக்காமல் வச்சி கொஞ்சவாங்களா??" என்ற மதியின் வயிற்றில் கையை வைத்தவன்,

"பார்த்தியா பாப்பா உங்க அம்மா உன்னோட அப்பாவை எப்படி மிரட்டுறாள்ன்னு.. நீ அப்பா கிட்ட வந்துடு, அப்பறமா நாம ரெண்டு பேரும் சேர்ந்து உங்க அம்மாவுக்கு ஆட்டம் காட்டலாம்.." அவள் வயிற்றில் இதழ் பதித்த, அடுத்த நொடியே பாதியில் விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தான் செழியன்..

∞∞∞∞∞∞∞∞∞∞

காலையில் செழியனுக்கு காபி எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்ற மதி, வெட்கப்பட்டு திரும்பி நின்று கொண்டாள்..

கதவு திறக்கும் சத்தம் கேட்டதுமே அது மதி தான் என்று அறிந்து கொண்ட செழியன், குளித்து விட்டு இடுப்பில் கட்டியிருந்த துண்டுடன் கட்டிலில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டிருந்தான்.

அவனை அந்த கோலத்தில் பார்த்த மதி வெட்கம் மேலிட, "ஏன் இப்படி நிற்குறிங்க?? ட்ரெஸை எடுத்து போட்டுக்க வேண்டியது தானே.." என்க,

"எனக்கு லேடிஸ் டிரஸ் போடுற பழக்கமெல்லாம் இல்லைடி.." என்று நக்கலாக சொன்னவனை புரியாமல் பார்த்துத்தவளுக்கு சில நிமிடங்களுக்கு பிறகு தான் அவன் சொன்னதன் அர்த்தம் புரிய..,

"என்னது நீங்க டிரஸ் எடுத்துட்டு வரலையா??" என்றவளை பார்த்து முறைத்த செழியன், "ஏன்டி நீ வீட்ட விட்டு வந்துட்டேன்னு ஒரு மனுஷன் பதட்டத்துல ஓடி வரும் போது டிரஸ் எல்லாமா எடுத்துட்டு வருவாங்க, என் மக்கு பொண்டாட்டியே.." என்றவனை பார்த்து அசடு வழிந்த மதி, "சாரி.." என்று விட்டு,

வேகமாய் போய் அவளது கப்போர்டை திறந்து, அன்று ஷாப்பிங் சென்றிருந்த போது செழியன் தேர்ந்தெடுத்திருந்த அந்த நேவி ப்ளூ நிற ஷர்ட்டை எடுத்து அவனிடம் கொடுக்க, அதை ஒரு புன் சிரிப்புடன் வாங்கி அணிந்து கொண்டவன், "இந்த ஷர்ட்டை நான் எங்கையோ பார்த்து இருக்கேனே??" என்று கண்ணடிக்க வெட்கத்தில் அவன் மார்புகுள்ளேயே தஞ்சம் புகுந்தாள் மங்கையவள்..



தொடரும்...
 
Top