• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 24

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 24

Writer : Hafa


மதி கர்ப்பம் தரித்து ஆறு மாதங்கள் கடந்திருக்க, இருவருமே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்..

ஆபீஸ் சென்ற செழியனுக்கு அன்று ஏதோ மனம் அமைதி இல்லாது தவிக்க, அதை தவிர்க்கும் வழி அறியாதவனாய் தன் சீட்டில் இருந்து சுழன்று கொண்டிருக்கும் வேளையில், கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்த ஆபீஸ் பாய், "சார் உங்கள பார்க்க, உங்க பிரண்ட்னு சொல்லிட்டு ஒருத்தர் வந்து இருக்காரு.. உங்கள மீட் பண்ணனும்னு சொல்லறாரு.." என்றதும் "எனக்கு இப்போ யாரையும் மீட் பண்ண முடியாது, போய் சொல்லு.." என்றான்..

வெளியே வந்த ஆபீஸ் பாய், "சார் இப்போ யாரையும் மீட் பண்ண மாட்டாரு, நீங்க போயிட்டு அப்பறம் அப்பொய்ன்மெண்ட் வாங்கிட்டு வாங்க.." என்று கூற,

"நீங்க திரும்ப ஒரு வாட்டி போயிட்டு, வினய் வந்திருக்கேன்னு சொல்லுங்க.." என்றதும், உள்ளே சென்றவன், வினய் கூறியது போல் கூற, "இப்போ எதுக்கு இவன் நம்மள தேடி வர்றான்.." என சிந்தித்த செழியன் உள்ளே விடுமாறு கூற, வெளியே வந்தவன், "சார் உங்கள வர சொன்னார்.. நீங்க உள்ள போங்க.." என்று அனுமதி தந்ததும் செழியனின் கேபினுக்குள் நுழைந்தான் வினய்..

ஓரிரு நிமிடங்கள் இருவருக்குள்ளும் அமைதியாய் கழிய, அதை கலைக்கும் விதமாக, "செழியா, உன் கூட கொஞ்சம் தனியா பேசனும்.. வெளிய எங்கையாச்சும் போகலாமா??" என்க, அதற்கு லேசான தலை அசைப்பை பதிலாக கொடுத்து செழியன் எழுந்து வெளியே செல்ல, அவனை பின் தொடர்ந்து நடந்தான் வினய்..

எதுவும் பேசாமல் அமைதியாக கார் ஓட்டிக் கொண்டிருந்த செழியன் நேராக கடற்கரையில் கொண்டு போய் காரை நிறுத்தினான்.. கடற்கரை மணலில் அமர்ந்து அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த செழியனிடம் திரும்பிய வினய், "செழியா, நான் உனக்கு ரொம்ப கெடுதல் பண்ணி இருக்கேன்.. நம்ப வச்சி ஏமாத்தியிருக்கேன்.. நடந்த எல்லாத்தயுமே மன்னிப்புன்ற ஒரு வார்த்தையால சரி பண்ணிட முடியாது.. ஆனா தவிர என் கிட்ட கேட்குறதுக்கு ஒன்னும் இல்ல, என்ன மன்னிச்சுடு.. என்று கூறியவனை பார்த்து திரும்பியவன், "இங்க பாரு வினய், நடந்து முடிஞ்சத பத்தி பேசி எதுவும் ஆகப் போறதில்ல, அதுக்கு உன்ன மொத்தமா மன்னிச்சிட்டேன்னும் சொல்ல முடியாது.. ஏன்னா அதுக்கான வலிகளை அனுபவிச்சவன் நான்.. ஸோ ஐ நீட் சம் டைம் டு போர்கெட் தட்.." என்க, "தேங்ஸ்டா.." என்றவன் சில நொடிகள் தாமதித்து, "செழியா, உன்னோட பர்சனல் லைப்குள்ள வர்றேன்னு நினைக்காத, உன்னோட லைப் இப்படி ஆனதுக்கு காரணமே நான் தான்னு நினைக்கும் போது இத பத்தி பேசாம இருக்க என்னால முடியல.." என்ற வினயை கேள்வியாய் பார்த்தான் செழியன்..

அவனின் பார்வையை புரிந்து கொண்டவன் மேலும் தாமதிக்காது, "நீ உண்மையிலேயே மதிய காதலிச்சி தான் கல்யாணம் பண்ணிட்டியா செழியா??" என்று வினய் கேட்டதும் விலுக்கென்று திரும்பியவன், உண்மையை மறைத்து, "ஆமாம்.." என்று தலை ஆட்டியதை பார்த்து சிரித்தவன், "நீ சொல்றத வேறு யாரு வேணாலும் நம்பலாம்டா, ஆனா நான் நம்ப மாட்டேன்.." என்றவன், "எனக்கு தெரியும் செழியா, நீ மதிய ஒன் இயர் அக்ரீமெண்ட்ல தான் கல்யாணம் பண்ணி இருக்கேன்னு.." என்றதும் அதிர்ந்து போனான் செழியன்..

இருப்பினும் சில நொடிகளிலேயே தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், "என்ன லூசுத்தனமா உளறிட்டு இருக்க?? நாங்க காதலிச்சி தான் கல்யாணம் பண்ணிட்டோம்.." என்ற செழியனை பார்த்து, "உண்மைய ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது செழியா, சொல்லு ஒன் இயர் அக்ரீமெண்ட்ல தானே மதிய கல்யாணம் பண்ணி இருக்குற??" என்கவும் இதற்கு மேல் அவனிடம் மறைக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட செழியன், "ஆமாடா, நாங்க அக்ரீமெண்ட் மேரேஜ் தான் பண்ணி இருக்கோம்.. ஆனா இது எப்படி உனக்கு தெரிஞ்சிது.." என்று உண்மையை ஒத்துக்கொண்டான்..

"எனக்கு தெரியுறது இருக்கட்டும், ஏன்டா இப்படி பண்ணின??"

"வேற என்னடா என்ன பண்ண சொல்லுற?? அந்த நேரத்துல இத தவிர எனக்கு வேற வழி தெரியலடா.. அவளும் நான் அவளுக்கு பண்ணின ஒரு உதவிக்காக இதுக்கு சம்மத்திச்சாள்.. இது ஒன்னும் தப்பில்லையேடா, அப் கன்ட்ரீஸ்ல இது ரொம்ப சகஜம்.." என்ற செழியனை முறைத்துப் பார்த்த வினய்,

"நீ புரிஞ்சி பேசுறியா புரியாம பேசுறியான்னு தெரியல செழியா, மதி மாதிரி ஒருத்தி உனக்கு லைப் பார்ட்னரா கிடைச்சிருக்காங்கன்னா நீ ரொம்ப லக்கிடா.. நீ நினைச்சிட்டு இருக்க, உன்னோட காதல் தோத்து போச்சுதுன்னு.. ஆனா அத விட பெஸ்டான ஒன்னு கிடைச்சும் நீ அத தக்க வச்சிக்க தெரியாம இருக்கடா.." என்ற வினயை புரியாமல் பார்க்க, "என்னடா நான் சொல்லுறது புரியலையா?? நீ தர்ஷனாவ எந்த அளவுக்கு காதலிச்சியோ அத விட பல மடங்கு அதிகமா மதி உன்ன காதலிச்சாடா.." என்றதும் அதிர்ச்சி அடைந்த செழியனுக்கு தன் மனதில் நீண்ட நாட்களாக குடி கொண்டிருந்த குழப்பம் கொஞ்ச கொஞ்சமாக நீங்கி தெளிவடைவது போல தோன்றியது..

"என்னடா சொல்லுற?? நிஜமாவா?? மதி என்ன காதலிச்சாளா?? இது எப்போ??" என்று பல கேள்விகளை ஒரேடியாக கேட்ட செழியனை பார்த்து கடுப்பானவன்,

"இல்லடா நான் தான் சும்மா உன்ன வச்சி காமெடி பண்ணலாம்னு சொன்னேன்.." என்ற வினயை கலக்கத்துடன் பார்க்க, "பின்ன என்னடா?? அந்த புள்ளைக்கு தாலியை கட்டி பொண்டாட்டியா பக்கத்துலயே வச்சிட்டு இன்னும் அவள் உன்ன காதலிக்கிற விஷயம் தெரியலைன்னு சொல்ற?? அன்னைக்கு ரெஸ்டாரண்ட்ல நடந்த சம்பவத்துக்கு அப்பறமா நீ கிளம்பி போன உடனே அங்க மதி வந்து இருந்தாடா.." என்றவனை விழி விரித்து நோக்கினான் செழியன்..

"என்ன வினய் சொல்ற??"

"ஆமாடா, மதிக்கு அங்க நடந்தது எல்லாமே தெரிஞ்சிருக்கும் போல, வந்ததும் வராததுமா தர்ஷனா கன்னத்துல விட்டா பாரு ஒரு அறை, இத இப்போ நினைச்சாலும் கிர்ருன்னு இருக்கு.. அப்போ தான்டா ஒரு விஷயம் புரிஞ்சிது, அவ உன்ன நம்ம காலேஜ் டைம்ல இருந்து காதலிக்கிறாள்னு.. அப்போ கூட தர்ஷனா கிட்ட "நீ அவனோட உண்மையான காதலை புரிஞ்சிக்காம இருக்கலாம் ஆனா அவரு எதிர்பார்த்த காதலை கண்டிப்பா நான் கொடுப்பேன்னு.." சொல்லிட்டு போனாள்டா, அதுல இருந்து தான் நானும் கான்போர்ம் பண்ணினேன்.." என்றான் வினய்..

"நிஜமாவா?? மதியா சொன்னாள் அப்படி??"

"டேய்ய்ய் எனக்கென்ன லூசாடா நடக்காத ஒன்ன சொல்லுறதுக்கு, நீ வேணா தர்ஷனா கிட்ட கேட்டு பாரு.."

"ச்சை அதெல்லாம் வேணாம்டா.. மதி கூட ஒரு வாட்டி எங்களுக்குள்ள ஒரு சண்டை நடக்குறப்ப சொல்லி இருக்காள்டா, காதலிச்சவனை தான் கல்யாணம் பண்ணி இருக்கேன்னு.. இப்போ தான் எனக்கு எல்லாமே புரியுதுடா.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது வினய், என்ன தான் நாம யார வேணாலும் காதலிச்சாலும் நாம யாராலயும் காதலிக்க படுறது செம்ம பீல்ல.." என்று சந்தோஷத்தில் துள்ளிக் குத்தித்தவன், சட்டென்று அமைதியாக, அதை பார்த்த வினய்..

"என்ன செழியா, இப்போ எத பத்தி திங்க் பண்ணுற??"

"இல்லடா, இப்போ மதி பிரக்னன்ட்டா இருக்குறாள்.. இப்போ போய் நாம சேர்ந்து வாழலாம்னு சொன்னால் என்ன தப்பா நினைக்க மாட்டாளா??" என்று சொல்ல,

அதை கேட்ட வினய், "ஹேய் சூப்பர்டா, இவ்வளவு சந்தோஷமான விஷயத்தை இவ்வளவு லேட்டா சொல்ற இடியட்.." என்று செழியனின் தோள்களில் குத்தியவன், "கங்க்ராட்ஸ் டா.." என்று செழியனின் முகத்தை பார்க்க, அதுவோ தொங்கிப் போய் இருந்தது..

"டேய் செழியா, இப்போ எதுக்கு மூஞ்சிய இப்படி வச்சுருக்க?? என்று கேட்டதற்கு "எனக்கு ஒரு டவுட்டா வினய்??" என்றான் செழியன்..

"செழியா, இங்க பாரு எனக்கு இந்த விஷயத்துல எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் கம்மிடா.. எடக்கு மடக்கா எதாவது கேட்டுடாத??" என்று கூறிய வினயை முறைத்தவன்,

"ச்ச.. அது இல்லைடா பூல்.. மதி மேல எனக்கு காதல் வந்தால் அது உண்மையான காதலா இருக்குமாடா, என்னைக்குமே முதல் காதல் தானே பெஸ்ட்டா இருக்கும்.." என்றான் செழியன்..

செழியன் சொன்னதை கேட்ட வினய், "இவன் என்ன லூசா.." என்பது போலான பார்வையை அவன் மேல் வீசியவன், "ஏன்டா டேய் இது உனக்கே அநியாயமா தெரியல??" என்க,

"ஏன்டா இப்படி கேட்குற??" என்று சலிப்புடன் வினவிய செழியனை கண்டு கடுப்பானவன்,

"பின்ன உன் கிட்ட எப்படி கேட்க சொல்லுற?? அந்த பொண்ணுக்கு தாலியை கட்டி பத்தாதத்துக்கு இப்போ குழந்தை வர போற நேரத்துல காதல் வருமா?? கத்தரிக்காய் வருமான்னு கேட்டுட்டு இருக்குற??" என்று பெருமூச்சு விட,

"டேய் வினய் சொல்லுடா??"

"இங்க பாரு செழியா, நான் சொல்லுறத ஒழுங்கா கேட்டுக்கோ.. இந்த உலகத்துல ஒரு வாட்டி மட்டும் வர்றது தான் லவ்னு நினைச்சால் அதுக்கு அப்பறம் யாருக்குமே லைப்ல கல்யாணமே ஆகாதுடா.. எல்லாரோட லைப்லயும் லவ் வரும்.. ஆனா எல்லாருக்குமே அது சந்தோஷத்தை கொடுக்காது.. சில பேருக்கு இனி இல்லைன்ற அளவுக்கு அன்பையும் பாசத்தையும் அள்ளிக் கொடுக்கும், இன்னும் சில பேருக்கு கிடைக்காமலே போகும்.. அப்படியான சீட்டுவேஷன்ல, நாம ஏமாந்துட்டோமே, நம்ம காதல் நம்மள ஏமாத்திடிச்சேன்னு நினைச்சி நம்ம வாழ்க்கையே முடிஞ்சி போச்சுன்னு நினைச்சி ஒரே இடத்துல நின்னுட்டோம்னா இந்த வாழ்க்கையே கசக்க ஆரம்பிச்சுடும்.. நாம அதை கடந்து வந்து நமக்கான வாழ்க்கையை தேடி ஓடினோம்னா அது நமக்கு மட்டும் இல்ல, நம்மள சுத்தி இருக்கவங்களுக்கும் அது ஒரு சந்தோஷத்தை கொடுக்கும்.. நீ சொல்றதை வச்சு பார்க்கும் போது, உன் மனசுக்குள்ள மதி தான் இருக்குறான்னு தெரியுதுடா.. ஆனா அத ஏத்துக்க உன் மனசு தயங்குது.." என்ற வினய் செழியனின் முகத்தை பார்க்க, அதில் ஏதோ ஒரு தெளிவு தெரிந்தது..

"நான் இன்னொன்னு சொல்லவா செழியா, நீ யோசிப்ப, இப்போ போய் நம்ம காதலை சொன்னால் மதி வயித்துல வளர்ர குழந்தைக்காக தான் அவளை ஏத்துக்கிடுற மாதிரி இருக்கும்னு.. நீ அத எத பத்தியும் யோசிக்காமல், உன் மனசுல இருக்குற காதலை மதி கிட்ட தெரியப்படுத்து.. அவளோட காதலையும் புரிஞ்சிகிட்டனு அவளுக்கு புரிய வை.. கண்டிப்பா அவ உன்ன ஏத்துப்பாள்.." என்று சொல்லி முடிக்க, செழியனோ முகத்தில் புன்னகையுடன் நின்றவன்,

வினய் எதிர் பாரா நேரம் அவனை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு, "தேங்க்ஸ்டா மச்சான்.. உன்னால தான்டா என்னோட வாழ்க்கை எனக்கு திரும்ப கிடைச்ச மாதிரி இருக்குது.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா.." என்றான்..

"ச்சீ கருமம், கருமம்.. என்னடா பண்ற?? மதிக்கு கொடுக்க வேண்டியதை எனக்கு கொடுத்துட்டு இருக்க.. இங்க பண்ணின பர்போமன்ஸ் எல்லாம் அங்க போய் கோடு.." என்க,

"அதெல்லாம் ஜமாய்ச்சிரலாம் மச்சான்.. இன்னைக்கு ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன்டா, உன் கூட பேசுனதால தான்டா மனசுல இருந்த குழப்பங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைச்சிருக்கு.." என்று ஒரு நொடி நிறுத்தியவன், "ஐ அம் சாரிடா வினய், கோபத்துல உன்னையும் தர்ஷனாவையும் திட்டி இருப்பேன்.. எதையும் மனசுல வச்சிக்காதடா.. தர்ஷனா கிட்டயும் என்னோட சாரிய சொல்லிடு மச்சான்.." என்றான்..

"டேய்ய்ய் நாங்க பண்ணினது தான்டா பெரிய துரோகம்.. அதுக்கு நாங்க என்ன பண்ணினாலும் அந்த பாவத்தை போக்க முடியாது.."

"அப்படிலாம் எதுவும் இல்லடா, எல்லாத்துக்குமே மனசு தான் காரணம்.. நீங்க அப்போ அப்படி பண்ணலைன்னா நான் என்னோட மதிய மிஸ் பண்ணி இருப்பேன்டா.. என்னோட மதி எனக்கு கிடைக்க முக்கிய காரணமே நீங்க தான்.. அதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.." என்று சொல்லிக்கொண்டிருக்க, செழியனின் போன் அடித்தது..

அதை அட்டன் செய்து காதில் வைத்தவன், சிலையாய் நிற்க, அதை பார்த்த வினய், "செழியா, என்னடா ஆச்சு??" என்று உலுப்ப அதில் திடடுகிட்டவன், "வினய்.. மதி.. வா வீட்டுக்கு போகலாம்.." என்று காருக்கு ஓட, அவனை தொடர்ந்து ஓடினான் வினய்..

∞∞∞∞∞∞∞∞∞∞

போனில் சொன்னதை கேட்டு அவசரமாய் வீட்டிற்கு வர, அங்கு ஹாலில் சிலையென அமர்ந்து இருந்தார் கங்கா.. உள்ளே நுழைந்தவன், "அம்மா.. அம்மா.. மதி எங்கம்மா?? என்ன ஆச்சு?? எங்க போயிட்டாள் மதி.." தாயின் காலடியில் கிடந்தவனின் முன் ஒரு பைலை தூக்கிப் போட்டார் கங்கா..

குழப்பத்துடன் அதை என்னவென்று எடுத்துப் பார்த்தவனது கண்கள் அதிர்ச்சியில் விரிய, சட்டென்று அவன் சட்டையை கொத்தாக பற்றிய கங்கா, "ஏன்டா ஏன்டா இப்படி பண்ணின.. இப்படியாடா நான் உன்ன வளர்த்தேன்.. எதுக்காகடா உன்னோட சுயநலதுக்காக அந்த பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணின.. ஏன்டா உனக்கு மட்டும் புத்தி இப்படி போச்சுது?? அக்ரீமெண்ட் போட்டு கல்யாணம் பண்ற அளவுக்கு போயிட்டேல.. உன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சி இருந்தேன் செழியா, இப்போ அது எல்லாமே சுக்கு நூறா சிதறிப் போயிட்டுது.." என்று கோபத்தில் கத்தியவர் அவன் தோளிலேயே சாய்ந்து அழ, தன் கண்ணீரைத் துடைக்கும் வழி அறியாது அப்படியே நின்றவன், திடீரென்று மாடிப் படிகளில் பாய்ந்து ஏறி தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்..

மதி இல்லாத அறை வெறுமையாய் இருப்பது போல் தோன்ற, உணர்வுகள் அற்றவனாய் அங்கு மாட்டியிருந்த காலேண்டர் அருகில் சென்றவனுக்கு அன்றைய திகதியை பார்க்க நெஞ்சமெல்லாம் வலித்தது..

ஆம்.. அன்று தான் செழியன் மதியை திருமணம் செய்து ஓராண்டு நிறைவடைந்து இருந்தது.. அங்கு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த அவர்களின் திருமணப் புகைப்படத்தின் முன் போய் நின்றவன், "ஏன்டி இப்படி பண்ணின?? ஒரு வார்த்தை வாய திறந்து உன்ன எனக்கு பிடிச்சிருக்குடான்னு சொல்ல தோணலைல.. தேவையில்லாததை பேசுறதுக்கு மட்டும் வாய் காது வரைக்கும் நீளுதுல, இத சொல்றதுக்கு உனக்கு என்னடி.. கடைசியா என்னோட முகத்தை கூட பார்க்க தோணாமல் தானே கிளம்பி போயிட்ட, நம்ம குழந்தையை பத்தி கூட யோசிச்சு இருந்தால் இப்படி முடிவு எடுத்து இருப்பியா?? ஆஆஆ..." என்று கத்தியவன், தன்னை சுற்றி இருந்த பொருட்களை எல்லாம் தள்ளி விட்டு உடைக்க, கட்டிலின் விரிப்பை தூக்கி எறியும் வேளையில் அதற்கு அடியில் இருந்த மதியின் டைரி பறந்து போய் விழுந்தது..

அதை கையில் எடுத்தவன், மெத்தையில் அமர்ந்து இமை கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அதன் உறையை விட்டு வெளியே எடுத்துப் பார்த்தவனுக்கு, ஒரு டைரியை கூட இவ்வளவு ரசனையாக தேர்வு செய்ய முடியுமா?? என்பது போல் இதய வடிவில் கண்ணை பறிக்கும் நிறத்தில் இருந்தது.. "திறந்து பார்க்கலாமா?? வேண்டாமா??" என தனக்குள் பட்டிமன்றம் நடத்திய செழியனுக்கு, அன்று தன் டைரியை தொட்டதுக்காக அவளை கடிந்து கொண்டது நினைவிற்கு வர, தன்னை தானே நொந்து கொண்டவன், "அதை திறந்தால் மட்டுமே அனைத்திற்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.." என முடிவெடுத்தவனாய் முதல் பக்கத்தை திறந்து பார்த்தவன் அதிர்ந்து போனான்.. இளா என்கிற அவனது பெயருக்கும், மதி என்கிற அவளின் பெயருக்கும் இடையே ஒரு சிறிய இதயம் ஒட்டப்பட்டு அதற்குள் இருவரின் படமும் இருந்து, அவனை பார்த்து கண்சிமிட்டி சிரித்துக் கொண்டிருந்தது..



தொடரும்..
 
Messages
524
Reaction score
403
Points
63
அடக்கடவுளே இவன் மதி காதலை தெரிந்து கொண்ட நேரம் மதியை காணோமே
 
Top