• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா... 🍂 21

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 21 (b)

Writer : Hafa


தூரத்தில் இருந்தே செழியன் இருக்கும் இடத்தை கண்டு கொண்ட தர்ஷனா அவன் அருகில் வந்து, "ம்ம்கும்.." என்று செறும, அவளை நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் சொல்லாமல் அமைதியாய் கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனுக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவள், "எப்படி இருக்கீங்க செழியன்??" என்க, அவனோ அமைதியையே பதிலாய் கொடுத்தான்."

அவனது அமைதி அவளுக்கு சங்கடத்தை கொடுக்க, "இன்னும் நடந்ததை பற்றியே நினைச்சிட்டு இருக்கீங்களா??" என்றவளை, திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் கத்தும் கடலையே பார்க்க தொடங்கினான்..

அவனின் மௌனத்தை கலைக்கும் விதமாக, "பாருங்க செழியன், நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, நேரா விஷயத்துக்கு வந்துடுறேன்.. உங்களோட ஏமாற்றம் ரொம்ப பெரிசு தான்.. அதுக்கு முதல்ல என்ன மன்னிச்சிடுங்க.. ஆரம்பத்துல நானும் உங்களை உண்மையா தான் காதலிச்சேன்.." என்று பேசிக் கொண்டிருக்க, அவளின் "உண்மையாக காதலித்தேன்.." என்ற வாக்கியத்தை கேட்டவன் அலைகளை பார்த்த வண்ணம் நக்கலாக சிரித்தான்..

"என்ன செழியன், நான் சொல்றத கேட்டா சிரிப்பா இருக்குதா?? எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல.. ஒருத்தங்க நல்லவங்களா இருக்குறதும் தப்பானவங்களா இருக்குறதும், அவங்க சூழ்நிலைகளை பொறுத்து தான்.. நடந்து முடிஞ்சத பத்தி பேசி எதுவும் ஆக போறதில்ல, இப்போ நான் எதுக்கு உங்கள இங்க கூப்பிட்டேன்னா, உங்க வீட்டுக்கு வந்துட்டு போனதுல இருந்து வினய் மதி மேல ரொம்ப கோவத்துல இருக்குறாரு.. எப்போ என்ன பண்ணுவாருன்னே தெரியல, ஸோ நீங்க ரெண்டு பேருமே பார்த்து இருந்துக்கோங்க.." என்க, அப்போதும் அவன் கடலை விட்டு பார்வையை அகற்றாமலே இருந்தான்..

அவனை பார்த்து வலி கலந்த புன்னகை ஒன்றை உதிர்த்தவள், "எனக்கு புரியுது செழியன், என்னால நீங்க ரொம்ப கஷ்டபட்டு இருக்கீங்கன்னு.. நடந்ததை நினைச்சி நடக்கப் போறதை கோட்டை விட்டுடாதிங்க.." என்றவள் அங்கிருந்து எழுந்து நடக்கத் தொடங்கினாள்..

"ஒரு நிமிஷம்.." என்ற செழியனின் குரலில் அவனை திரும்பிப் பார்க்க, அவனோ கைகளை கட்டிக் கொண்டு நின்றான்.. அவள் அவனை கேள்வியாய் பார்க்க, அவனோ தான் நின்ற இடத்தை விட்டு நகர்ந்து வழி விட, அங்கு நின்றிருந்தவரை பார்த்ததும், தர்ஷனாவின் கண்கள் இரண்டும் நீரை சொரிய, "அப்பா.." என்று ஓடிச் சென்று அங்கு நின்ற சந்திரனை கட்டிக் கொண்டாள்..

சில பல நிமிடங்கள், தந்தைக்கும் மகளுக்குமான பாசப்போராட்டம் தொடர, அதனை அமைதியாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் செழியன்..

நீண்ட நாள் கழித்து மகளை கண்ட சந்திரன், வழமையான சுகநல விசாரிப்புகளை முடித்துக் கொண்டு செழியனின் முன் வந்தார்..

செழியனின் கைகளை பிடித்தவர், " முதல்ல என்ன மன்னிச்சிடுங்க தம்பி, உங்க வாழ்க்கையில நீங்க அனுபவிச்ச கஷ்டங்களுக்கு நானும் கூட ஒரு காரணம் ஆயிட்டேன்.. அம்மா இல்லாத பொண்ணுன்றதால சின்ன வயசுலயே ஹாஸ்டல்ல தான் தர்ஷனாவை தங்கவச்சிருந்தேன். அவளுக்காக நான் ஒரு தகப்பனா எதுவுமே பண்ணினது இல்ல தம்பி, அதனாலயே என்னவோ பாசத்துக்காகவும் பணத்துக்காகவும் உங்க வாழ்க்கையை பயன் படுத்திகிட்டாள்.." என்று மனம் வருந்தினார் சந்திரன்..

"இதுல உங்க தப்பு எதுவும் இல்ல அங்கிள், இதெல்லாம் நடக்கணும்னு இருந்திருக்கு, நம்ம கையில எதுவும் இல்ல.." என்றான் செழியன்..

"இல்ல செழியன் தம்பி, நான் என்னோட பொண்ண ஒழுங்கா வளர்த்து இருக்கணும்.. என்னோட வளர்ப்பு தப்பானதுனால தான் எல்லாருக்குமே பிரச்சனை.." என்றவர் தோளை தொட்டு தேற்றியவன், "ஏன் அங்கிள் இத்தனை நாளா தர்ஷனா தான் உங்க பொண்ணுன்ற உண்மைய மறைச்சீங்க.." என்க,

"நான் கூட அந்த சம்பவத்துக்கு பிறகு இவ கூட பேசுறசுதையே விட்டுட்டேன் தம்பி, நான் ஏதும் பழசை பத்தி பேசப் போனால் உங்களுக்கு கஷ்டம் ஆகிடும்னு தான் நான் இது நாள் வரைக்குமே இத பத்தி உங்க கிட்ட வாயே திறக்கல, ஆனாலும் நம்ம மதி, ஆபீஸ் வந்தப்போவே எப்படியோ நான் தான் இவளோட அப்பான்ற உண்மைய கண்டு பிடிச்சி, உங்க கிட்ட இப்போ சொல்லி இருக்காள்.. மதி உண்மையிலேயே ரொம்ப நல்ல பொண்ணு தம்பி.." என்றவரை பார்த்து மெல்லித்தாக சிரித்தவன், "இதுக்கு அப்பறம் நீங்க எத பத்தியும் கவலை படாமல் நிம்மதியா இருங்க அங்கிள்.." என்ற செழியன் அங்கிருந்து செல்ல இரண்டடி வைத்தவன், தர்ஷனாவை பார்த்து, "தேங்க்ஸ்.." என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு நடந்தான்..

∞∞∞∞∞∞∞∞∞∞

காரை உயிர்ப்பித்து பாதி வழி சென்றவனுக்கு கண் முன் நிழலாடியது, அந்த நாள் நினைவுகள்..

செழியன் தன் அன்னையிடம் தன் காதலியை அறிமுகம் செய்ய பெரிய ரெஸ்டாரண்ட் ஒன்றில் டின்னருக்கு ஏற்பாடு செடய்து இருந்தான்..

"அம்மா, சக்தி.. என்ன நீங்க இன்னுமா ரெடி ஆகுறீங்க, லேட் ஆயிடிச்சு வாங்கமா.." என்று வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தான் செழியன்..

"டேய் டேய் இதோ வந்துட்டோம்டா.. ஏன்டா இவ்வளவு அவசர படுற??" என்க., அதற்கு சக்தி, "அம்மா, நானும் காலையில இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன், சகோ ஏதோ மர்மமாவே சுத்திட்டு இருக்கான் சம்திங் இட்ஸ் ரோங்.." என்றவளை காதை பிடித்து திருகிய செழியன்,

"அறுந்தவாலு, உன் ஆளை பார்க்க போற, கொஞ்சம் அடக்கஒடுக்கமா வா.." என்க, "அட போ சகோ.." என்று முகத்தை மூடிக் கொண்டாள் சக்தி..

"சரி வாங்க, கிளம்பலாம்.." சிவாவையும் அங்கு வர சொல்லி விட்டு மூவரும் விரைந்தனர்..

ரெஸ்டாரண்ட் வாசலில் போனை நோண்டியபடி செழியனுக்காக காத்திருந்தான் சிவா..

"எங்கடா நம்மள வர சொல்லிட்டு இவனை காணும்.." என்று யோசித்துக் கொண்டிருக்க, அந்த வழியாக வினய் போவதை கண்டவன், "டேய் மச்சான்.. வினய்.. இங்க.. இங்க.." என்று சிவா கூப்பிடுவதும் தெரியாது வேகமாய் உள்ளே சென்றான் வினய்.

"நாம கூப்பிடுறது கூட தெரியாம, எங்க இவ்வளவு அவசரமா போறான்??" என்று சிந்தித்தபடி நிற்க அங்கு வந்து சேர்ந்தனர் செழியனின் குடும்பத்தினர்..

"ஹாய்டா மச்சி, என்னடா வந்து ரொம்ப நேரம் ஆயிடிச்சா??" என்றான் செழியன்..

"ச்சே இல்லடா, வந்து பைவ் மினிட்ஸ் தான் ஆச்சு.. ஆமா எதுக்கு என்ன நீ வர சொன்ன??" என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது காரை விட்டு இறங்கினர் கங்காவும் சக்தியும்..

சக்தியை பார்த்து முதலில் தடுமாறிய சிவா, பின்னர் சட்டென தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் கங்காவை பார்த்து, "அம்மா, எப்படி இருக்கீங்க??" என்றான்..

"நான் நல்லா இருக்கேன்பா, நீ எப்படி இருக்க?? என்ன முன்ன மாதிரி வீட்டு பக்கம் வர மாட்டேங்குற??" என்றவரை பார்த்து பல்லை காட்டியவன், "அதெல்லாம் இல்லமா ஒர்க்ல கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்.." என்று கங்காவுடன் பேசியபடி இருக்க, சக்தியோ மனதுக்குள் சிவாவை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்..

"தத்தி தத்தி, ஒரு வாட்டியாச்சும் நம்மள திரும்பி பார்க்குறானா?? இவனையெல்லாம் கட்டிட்டு நீ எப்படி தான் வாழ்க்கை நடத்தப் போறியோ??" என்று தன்னை தானே நொந்து கொண்டாள் சக்தி..

"அம்மா எவ்வளவு நேரம் தான் வெளிய நின்னே பேசிட்டு இருப்பிங்க, வாங்க உள்ள போலாம்.." என்று செழியன் அழைக்க கங்காவும் சக்தியும் முன்னால் செல்ல, அவர்களுக்கு பின்னால் சென்ற செழியனை கையை பிடித்து இழுத்தான் சிவா..

"டேய் ஏன்டா கைய பிடிச்சி இழுக்குற??"

"என்னடா தர்ஷனாவை இன்ட்ரோ பண்ண போறேன்னு சொன்ன, அவ எங்கடா ஆளையே காணும்.." என்றான் சிவா..

"ஹீ.. அதுவா மச்சி, அவளுக்கு நான் இங்க டின்னர் பிளான் பண்ணி இருக்குறதே தெரியாது.. அவ பிரண்ட்ஸ் கூட வெளிய வரப் போறதா தருவோட பிரண்டு கவி சொன்னாள்டா, அதனால தான் தருக்கு சர்பிறைஸ் பண்ணலாம்னு இங்கயே அரேஞ் பண்ணேன்.." என்க, "ஐடியா எல்லாம் நல்லா தான் மாப்ள பண்ணி இருக்க, எப்படியாவது அம்மா கிட்டயும் சம்மதம் வாங்கிடு.." என்று கதை அளந்தபடி நண்பர்கள் இருவரும் உள்ளே சென்றனர்..

அவர்களுக்கு என புக் செய்யப்பட்ட டேபிளில் போய் அமர்ந்தவர்கள், அமைதியாகவே இருக்க அந்த அமைதியை கலைக்கும் விதமாக பேசத் தொடங்கினார் கங்கா..

"சிவா, உனக்கு விஷயம் தெரியுமாப்பா, நம்ம சக்திக்கு மாப்ள பார்த்து இருக்கோம்.. ரொம்ப நல்ல பையன்.. செழியன் உன் கிட்ட ஏதாவது சொன்னானா??" என்க, அதை கேட்ட சிவாவுக்கோ மனதில் இனம் புரியாத வலி ஏற்பட்டது.. லேசாக கண் கலங்கவும், அதை யாரும் அறியா வண்ணம் துடைத்துக் கொள்ள, அது சக்தியின் கண்களுக்கு தப்பாமல் பட, அவன் கண்ணீரை துடைக்கத் துடித்த கைகளை கட்டுப்படுத்தியபடி அமர்ந்து இருந்தாள்..

சிவாவின் மாற்றத்தை கவனித்த செழியன் இதற்கு மேல் அவனை காக்க வைப்பது சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டு, "என்னடா அம்மா எவ்வளவு பெரிய விஷயம் சொல்லி இருக்காங்க, நீ எதுவும் சொல்ல மாட்டியா?? அடலீஸ்ட் மாப்பிளை யாருன்னாச்சும் கேட்கலாம்ல.."

"ஓஹ்.. சாரிடா.. மறந்துட்டேன்.. ஆஹ்.. பையன் யாருமா??" என்க, செழியனோ, "நீ தான் மச்சான் என் மச்சான்.." என்கவும் புரியாமல் முழித்தான் சிவா..

"டேய்ய்ய் மக்கு மாப்ள, உன்ன தான் என் மச்சானா அம்மா செலக்ட் பண்ணி இருக்காங்க.." என்றதும் சிவாவுக்கு இறக்கை இல்லாது வானில் பரப்பதை போல் உணர்வு எழ சக்தியை அள்ளி அணைக்க எழுந்த கைகளை அடக்கிக் கொண்டு பல்லை காட்டியபடி இருந்தான்..

கங்கா, "என்ன சிவா, அமைதியா இருக்குற?? செழியன் சொன்னதுல உனக்கு சம்மதம் தானே?? பிடிக்கலைன்னா சொல்லுப்பா உனக்கு வேற நல்ல பொண்ணா நானே பார்த்து தர்றேன்.." என்று அவனை வம்பிழுக்க,

"ஐயோ அம்மா, இத விட நல்ல பொண்ணு எல்லாம் எனக்கு இதுவே போதும்.." என்று சரண்டர் ஆக அந்த இடமே கலகலப்பாகியது..

செழியனோ தர்ஷனாவை காணாது, அவளின் தோழிக்கு அழைத்துப் பார்க்கலாம்.. என எண்ணிக் கொண்டு போனை எடுத்து வெளியில் வந்தான்..

செழியன் கால் செய்ய அதுவோ முழுமையாக போய் அழைப்பு துண்டிக்கப் பட்டது.. "ஐயோ, என்ன இது இன்னும் தருவ காணுமே, நாம வந்தும் ரொம்ப நேரம் ஆயிடிச்சு.. கவி கூட போன் அட்டன் பண்ண மாட்டேங்குறாளே.. என்ன பண்ணலாம்.." என யோசித்துக் கொண்டிருக்க, அங்கு வேக வேகமான எட்டுக்களை வைத்து செல்லும் வினயை கண்டான்..

"அட இது நம்ம வினய் மாதிரில இருக்குது.. அவன் எங்க இங்க?? அதும் இவ்வளவு அவசரமா எங்க போறான்??" என்று நினைத்த செழியன் வினயை பின் தொடர்ந்து சென்றவன், அங்கு வினயும் தர்ஷனாவும் நெருக்கமாக நிற்கும் காட்சியை பார்த்தவனது இதயம் சுக்கு நூறாய் உடைந்து சிதறியது போல் உணர்ந்தான்.. செழியனை அங்கு எதிர்பாராத இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்..

தர்ஷனா, "செழியா.. அது வந்து.. நான் சொல்றத.." என்று அவன் கைகளை பிடிக்க போக, அதை உதறியவன்,

"ச்சி.. இனி உன்னோட வாயால என் பேரை சொல்லி கூப்பிடாத.. உன்ன எவ்வளவு நம்பினேன் தெரியுமாடி, உனக்காக, உன்ன எங்க அம்மாக்கு இன்ட்ரோ பண்ணனும்னு தானே இந்த டின்னர்க்கே ஏற்பாடு செஞ்சேன்.. ஆனா நீ என்ன ஈசியா முட்டாள் ஆகிட்டேல்ல.. உனக்கு பணம் தான் முக்கியம் னு சொல்லி இருதேன்னா கோடி கோடியா உன் முன்னாடி கொட்டி இருப்பேன்.. நீ தான் எல்லாமேன்னு நினைச்சேன்டி.. எனக்கு போய் இப்படி ஒரு துரோகத்தை பண்ண எப்படிடி மனசு வந்துது??" என்று அவளை அறையப் போன கையால் வினய்க்கு அறைந்தான் செழியன்..

வினயின் சட்டையை கொத்தாக பற்றியவன், "சீ.. உன்னயெல்லாம் என் பிரண்ட்டுன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு.. எப்படிடா நண்பன் ஒரு பொண்ண காதலிக்கிறான்னு தெரிஞ்சும், அவ கூட இப்படி ஒரு இடத்துல ச்சை.." என்றவன் அதற்கு மேல் அங்கு நின்றால் தன் கட்டுப்பாட்டை இழந்து விடுவோம் என்று வேகமாக அங்கிருந்து நடக்க, செழியனை காணாது தேடி வந்த மற்ற மூவரில், அங்கு நடந்தவைகளை கண்டு சிவா அதிர்ந்து போய் நிற்க, கங்காவும் சக்தியும் எதுவும் புரியாது தர்ஷனாவின் முகத்தையும் வினயின் முகத்தையும் மாறி மாறிப்பார்த்தனர்..

அதற்குள் அங்கு கூட்டமும் கூடி விட, தனக்கு ஏற்பட்ட அவமானத்தில் குறுகி நின்ற வினய், "சிவா உன் ஆருயிர் தோழன் கிட்ட சொல்லி வை.. எல்லார் முன்னாடியும் என்ன அடிச்சி அசிங்க படுத்திட்டான்ல.. அதுக்கு கண்டிப்பா அவனை பழிவாங்கியே தீருவேன்.." என்றவன் தர்ஷனாவின் கையை பிடித்து இழுத்துச் சென்றான்.

கங்கா மற்றும் சக்தி சிவாவை கேள்வியாய் பார்க்க, செழியன் தர்ஷனா காதல் விவகாரதில் இருந்து அனைத்தையும் கூறி புரியவைத்தான்..

∞∞∞∞∞∞∞∞∞∞

நினைவுகளின் தாக்கத்தால் தலை வலிக்க, காரை வேகமாக ஓட்ட அழுத்திப் பிடிக்க, அதுவோ இதற்கு மேல் தன்னால் முடியாது என்று கார் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது..

"ச்சை இது வேற நேரம் காலம் தெரியாமல்" என கடுகடுத்த செழியன், கீழே இறங்கி பேனட்டை திறந்து பார்க்க, அங்கோ வயர் ஒன்று எறிந்து புகை வந்து கொண்டிருந்தது. "புல்ஷிட்.." என்று அதை சாத்தியவனின் கண்களில், அந்த உயர்தர பார் படவும் கால்கள் தானாய் அதை நோக்கி நடைபோட்டது..

அன்று அன்னையிடம் இனிமேல் குடியை தொட மாட்டேன் என உறுதி அளித்து இருந்தாலும், மனதில் இருக்கும் ரணங்களின் வலியை குறைக்க அது அவனுக்கு தேவை பட, பாரின் உள்ளே நுழைந்தவன், பல குவளைகளை உள்ளே இறக்கிய போதும் மனதில் இருக்கும் வலி இம்மியளவு கூட குறைந்ததாக தெரியவில்லை..

அதிகமாக குடித்ததால் போதை தலைக்கேறி பாரை விட்டு வெளியேறியவன், தான் காரில் வந்தது கூட நினைவில்லாது போக, கால் போன போக்கில் நடையை போட்டான்.. அவன் சோகத்தை கண்டு அந்த வானம் கூட கலங்கியதாலோ என்னவோ கருமுகில் கூட்டம் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது..

மழையில் நனைந்தவாறே வீட்டிற்குள் நுழைந்த செழியன், சத்தமில்லாமல் கதவை திறந்து கொண்டு மாடிப் படியேறி தனது அறைக்குள் நுழைந்தவனின், கால் வழுக்கி தொப்பேன்று கட்டிலில் விழுந்தான்..

அந்த சத்தத்தில் பதறி அடித்து எழுந்த மதி, தன் அருகில் விழுந்து கிடந்த செழியனை கண்டு திடுக்கிட்டவள், பின்னர் சுதாகரித்துக் கொண்டு, வேகமாக வந்து அவனை தூக்க முயற்சிக்க, "ஹே யாரு நீ?? எதுக்கு என்ன டச் பண்ற.. மேல இருந்து கைய எடு.. டோன்ட் டச்.." என்று உளறிக் கொண்டிருந்தான் செழியன்..

அவன் உளறுவதை கேட்ட மதி, "ஒருவேளை குடிச்சிருப்பாரோ??" என எண்ணி அவனிடமே, "என்ன குடிச்சிருக்கீங்களா??" என்கவும் கண்களை சுருக்கிப் பார்த்தவன், "யாரு?? யாரு நீ?? இ.. இ.. இங்க என்ன பண்ணுற??" என்று கேட்க,

"யோவ் நான் தான் மதி.."

"மதி.. மதியா?? அது அது யாரு??" என்று அவன் தலையை தட்டி யோசிக்க, "மதி வேற யாரும் இல்ல, நீங்க தொட்டு தாலி கட்டின உங்க பொண்டாட்டி தான்.." என்றவள் நனைத்து இருந்த அவன் தலையை துடைக்க டவலை எடுத்து நீட்ட, டவலையும் மதியையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தான் செழியன்..

"இந்தாங்க, முதல்ல இத பிடிச்சி தலையை துடைங்க, நான் உங்களுக்கு சூடா காபி ஏதாவது போட்டு எடுத்துட்டு வர்றேன்.." என்று செல்லப் போனவளை கையை பிடித்து தடுத்தவன், "நீ.. நீ.. என் பொண்டாட்டி தானே, இந்தா நீயே துவட்டி விடு.." என்று குனிந்து கொள்ள, அவன் பொண்டாட்டி என்று கூறியதில் இனிதாய் அதிர்ந்தவள், இதமாய் அவன் தலையை துவட்டி விட்டு, அவனிடம் அவனது ட்ரெஸ்ஸை கொடுக்க, "ஆஹ், இது என்னது?? ட்ரஸ்ஸா?? ம்ம்.. இது எனக்கு போட்டுக்க தெரியும்.. நீ.. நீ.. அந்த பக்கம் திரும்பிக்கோ, அப்போ தான் டிரஸ் போடுப்பேன்.." என்று அவன் சிறு பிள்ளை போல உளற, அதில் தன்னை தொலைத்த மதி, கண்களை மூடிக்கொண்டு திரும்பிக் கொண்டாள்..

டிரஸ் சேன்ஜ் செய்தவன், "ஏய்.. இங்க பாரு.. பாரு.. ட்ரஸ் நான் கரெக்ட்டா போட்டுட்டேன்ல.." என்றவனை கட்டிலில் உட்கார வைத்தவள், "ப்ளீஸ், இனிமேல் எந்த காரணத்துக்காகவும் குடிக்காதிங்க.. குடிக்கிறதால எந்த பிரச்சினையும் சரியாக போறதில்ல.." என்று கண்களில் நீர் வடியக் கூறிய மதி, அவனை படுக்க வைத்து கழுத்து வரை போர்வையால் போர்த்தி விட்டு நகரப் போக, அவள் கையை பிடித்துக் கொண்டான்..

"உ.. உனக்கு.. என்ன.. பிடிக்குமா??" என்க, அவனிடம் இக் கேள்வியை எதிர்பாரதவள், அமைதியாய் நிற்க,

"சொ.. சொல்லு.. என்ன.. பிடிச்சிருக்கா உனக்கு?? எவ்.. எவ்வளவு பிடிக்கும்.." என்று ஆர்வமாக கேட்டவனை பார்க்க மதிக்கோ கண்கள் கலங்கியது..

அவன் முகத்தை கையில் ஏந்தியவள், "இந்த உலகத்துலயே உன்னை தான்டடா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. உன்ன மட்டும் தான் பிடிக்கும்.." என்றவள் அவன் நெற்றியில் இதழ் பதித்து செல்லப் போனவளை இழுக்க, செழியனின் மேலேயே போய் விழுந்தாள் மதி..

அவனின் உதடுகள் அவள் கழுத்து வளைவில் உலாப் போக, அதில் எழுந்த சிலிர்ப்பை தாங்க இயலாதவள் அவனது நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். தலைக்கு மேல் ஏறியிருந்த போதையும், அவளது அருகாமையும் அவனது உணர்வுகளை எழுப்பி விட, மதியை இறுகி அணைத்துக் கொண்டவன் அவள் மேல் படர்ந்து மேலும் முன்னேறினான்..

அவன் போதையில் இருப்பதை கண்டு, தன்னை காத்துக் கொள்ள எண்ணினாலும், அவன் மேல் கொண்டிருந்த அளவில்லா காதல் அதை முறியடிக்க அவளும் அவனுக்குள் புதையுண்டு போனாள்..

∞∞∞∞∞∞∞∞∞∞

காலையில் விழித்த மதி, தன் அருகில் சிறு குழந்தை போல் சுருண்டு படுத்திருந்தவனின் முகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அவன் தலையை கோதி நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்தவள், எழுந்து குளிக்க சென்று ஷவரை திறந்து விட்டு நிற்க, அவளுக்கு படபடப்பு தொற்றிக் கொண்டது..

"ஐயோ மதி என்ன காரியம்டி பண்ணி வச்சி இருக்க?? அவன் தான் போதையில இருக்கான்னு தெரியும்ல, அப்பறம் நீயாச்சும் கண்ட்ரோலா இருந்து இருக்கலாமே!! இப்போ அவன் வந்து, நான் சுயநினைவுல இல்லாத நேரத்தை யூஸ் பண்ணிட்டியானு கேட்டால் என்ன பண்றது?? அவனே மூச்சுக்கு மூணு தடவை அக்ரீமெண்ட் அது இதுன்னு பேசுவான்.. இப்போ அவனோட போதைய எனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டேனான்னு கேட்டால் என்ன பண்றது??" என மனதிற்குள் கலங்கியபடி தலைக்கு குளித்து விட்டு வெளியே வர, செழியனோ, "தர்.. தர்ஷு.. நீ.. உன்ன.." என்று போதையின் தாக்கத்தில் உளற, தர்ஷனாவின் பெயரை கேட்ட மதியோ, இதயம் உடைந்து நொறுங்கிப் போவதாய் உணர்ந்தாள்..

"அப்படினா அவளை நினைச்சிட்டு தான் என்னை தொட்டானா??" என்பதை அவளால் யோசிக்கக் கூட முடியவில்லை, தன்னவன் என எண்ணி தன்னையே தாரை வார்த்தவளுக்கு, அவன் தன்னை வேறொருவளின் நினைப்பில் தீண்டியிருக்கிறான் என்ற அந்த நினைவே இதயத்தை குத்திக் கிழிக்க, பேதையவள் உடைந்து தான் போனாள்..

அவன் அசைவது தெரிய, விழித்து விடுவான் என எண்ணியவள், எழுந்து கீழே சென்றாள்..

காலையில் எழுந்து காபி குடித்துக் கொண்டிருந்த கங்கா, மதியின் முகத்தில் தெரிந்த பொலிவும் களைப்பும் அவருக்கு என்ன நடந்து இருக்கும் என்பதை சொல்ல மகிழ்வுடன் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவர், மதிக்கு காபியை கொடுக்க அதை வாங்கி குடித்தவள், "அத்தை நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன்.." என்க,

"அதுக்கென்னடா தாராளமா போயிட்டு வா.. தனியா போற போயிட்டு சீக்கிரம் வந்துடுடா, அப்பறம் உன் புருஷன் எங்களை வறுத்தெடுப்பான்.." என்றதும் வலுக்கட்டாயமாக புன்னகை ஒன்றை உதிர்த்தவள், செழியனை பார்க்கும் தைரியம் இல்லாது, அங்கிருந்து போனால் போதுமென அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

அந்தப் பக்கம் செழியன் போதையின் தாக்கம் குறைய, எழுந்து அமர்ந்தவனுக்கு தலைவலியெடுக்க தலையை இரு கைகளால் தாங்கி பிடித்தவனுக்கு தன்னில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்து இருப்பது போல் தோன்ற, கொஞ்சம் கொஞ்சமாக நேற்றைய சம்பவங்கள் அவன் கண் முன் வந்து வந்து போயின..

"ஓஹ்.. ஷிட்.. நானா இப்படி நடந்துகிட்டேன்?? ச்சை என்னடா செழியா பண்ணி வச்சிருக்க?? போதையில தான் இருந்தாலும் அந்த அளவுக்கு உனக்கு சுயநினைவு இல்லாம போயிடுச்சா என்ன?? அக்ரீமெண்ட், ஒன் இயர் காண்ட்ராக்ட்னு வாய் கிழிய பேசுற, ஒரு பொண்ணு கிட்ட நடந்துக்குற லட்சனமாடா இது.. ச்ச்ச்சை." என்று தன்னைதானே திட்டிக் கொண்டவனை நக்கலாக பார்த்து சிரித்த மனசாட்சி, "டேய் எதுக்கு இப்போ இப்படி டென்ஷன் ஆகுற?? மதி யாரு?? நீ தொட்டு தாலி கட்டின உன் பொண்டாட்டி??" என்க, "ச்சி, இப்போ மட்டும் இப்படி சொல்ல உனக்கு எப்படி மனசு வருது?? ஒரு நாளாச்சும் அவளை பொண்டாட்டயா நடத்தி இருக்கியா?? பாவம் உன்னோட சுயநலதுக்காக அவளை ரொம்ப கஷ்ட படுத்திட்டடா.." என்று புலம்பியவன், "அவளை பார்த்ததும் முதல் வேலையா மன்னிப்பு கேட்டாகனும்.." என்று முடிவு எடுத்தவன் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்..

குளித்து முடித்து விட்டு கீழே வந்த செழியன் மதியை தேட, அவனது இந்த செய்கையை பார்த்த கங்கா, "செழியா யாரப்பா தேடுற??" என்றதும் அவனோ திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் முழித்துக் கொண்டு நின்றான்..

"என்னடா அமைதியா நிற்குற??"

"இல்லமா, அது வந்து மதி, மதி.." என்று திணறிக் கொண்டிருக்க, "என்னம்மா சகோ காலையிலேயே, அண்ணி பேரை சொல்லி என்ன பண்ணிட்டு இருக்கான்.." என்று அங்கு ஆஜரானாள் சக்தி..

"மதி கோயிலுக்கு போய் இருக்கா சக்தி.. அவளை காணும்னு தான் உன் அண்ணன் தேடிட்டு இருக்கான்.." என்றதில், மதி கோயிலுக்கு போய் இருப்பதை குறித்துக் கொண்டவன், ஆபீஸில் இருந்து முக்கியமான கால் வர மதியிடம் பிறகு பேசிக் கொள்ளலாம் என ஆபீஸுக்கு கிளம்பினான்..



தொடரும்...
 
Top