• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா... 🍂 21

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 21 (a)

Writer : Hafa



மதியிற்கு செழியனது வீட்டை மிகவும் பிடித்துப் போய் விட்டது.. அங்கு வந்து ஒரு மாத காலமே ஆகி இருந்தாலும் புதிய இடம் என்ற நினைப்பே இல்லாமல் இருந்தது.. அந்த அளவுக்கு சகஜமாக பழகினர் கங்காவும் சக்தியும்.. செழியன் மட்டும் அவள் காதலை புரிந்து கொண்டிருந்தால் இதே இடம் சொர்க்கமாக காட்சியளித்திருக்கும்.

கிட்சேனுக்குள் வந்த மதி, "அத்தை என்ன ஹெல்ப் பண்ணனும்னு சொல்லுங்க, நான் பண்ணி தர்றேன்.." என்று கேட்க,

"அதெல்லாம் எதுவும் பண்ண வேணாம் மதி, இன்னைக்கு நான் பண்ணுறதை எல்லாம் கவனமா பார்த்துக்கோ.. அப்பறம் உன் புருஷனுக்கு எது பிடிக்குமோ, அதை நீயே பண்ணி கோடு.." என்க, "யாருக்கு உங்க பையனுக்கு நான் சமைச்சு கொடுக்கணுமா?? நான் பண்ணி வைக்கிறத சாப்பிட்டு தான் அவன் அடுத்த வேலை பார்ப்பான்.." என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள், செழியனுக்கு என்னவெல்லாம் பிடிக்கும், பிடிக்காது என்பதை கவனமாக கேட்டு தெரிந்து கொண்டாள்..

நீண்ட நேரம் ஒன்றும் செய்யாமல் இருப்பது போர் அடித்து விட, "அத்தை இந்த வெஜிடப்ல்ஸயாச்சும் கொடுங்க, நான் கட் பண்றேன்.." என்ற மதி, கங்கா "வேண்டாம்.. " என்று சொல்வதையும் கேட்காது, அதை கட் பண்ண தொடங்கினாள்..

மாமியாரும் மருமகளும், இவ்வாறு கிட்சேனுக்குள் சலத்துக் கொண்டிருக்க, அங்கு வந்த சக்தி, "ஆஹா.!! அம்மா என்ன இன்னைக்கு சமையல் வாசனை ஆளை கட்டி இழுக்குது.. என்ன அண்ணி இன்னைக்கு மதி ஸ்பெஷலா??" என்று அவர்களுடன் இவளும் ஐக்கியமானாள்..

"அட போ சக்தி, எனக்கெல்லாம் சுடுதண்ணி கூட ஒழுங்கா வைக்க தெரியாது.. அம்மா கழுவிக் கழுவி ஊத்துவாங்க, நாம அதை கண்டுக்குறதே இல்ல.."

"ஆமா அண்ணி இந்த அம்மாங்களுக்கு இது தான் வேலை, எங்களை ஏதாவது சொல்லலைனா அவங்களுக்கு தான் தூக்கம் வராதே.." என்று கூற, சக்தியும் மதியும் ஹைபை அடித்துக் கொண்டனர்..

"ஏய், ரெண்டு பேரும் என் கிட்ட அடி வாங்கி கட்டிக்க போறீங்க.. அம்மாங்கன்னா அவ்வளவு இலக்காரமா போச்சா?? ஒரு நாளைக்கு நாங்க செய்யுற வேலைகளை உங்ககிட்ட செய்ய சொன்னால் தெரியும், எங்க கஷ்டம் என்னனு.." என்றார் பொய்யாய் கோபம் கொண்டு..

"அம்மா போதும்.." என்று கை எடுத்து கும்பிட்ட சக்தி, "தினம் தினம் இத கேட்டு கேட்டு காதுல பிளட் வராதது தான் குறை.. என்ன அண்ணி நான் சொல்றது கரெக்ட் தானே??"

"சரியா சொன்ன சக்தி, இவங்களுக்கு எங்க திறமைய பத்தி தெரியாது.. தெரிஞ்சா இப்படி எல்லாம் பேசுவாங்களா??"

"அடிங்கு ரெண்டு பேருக்கும் வாய் மட்டும் தான், வாய் மட்டும் இல்லனா உங்கள எல்லாம் எப்போவோ நாய் தூக்கிட்டு போய் இருக்கும்.." என்று கங்கா கூறவும் மற்ற இருவரும் அசடு வழிந்தனர்..

"சரி சரி, ரொம்ப அசிங்க படுத்தாதமா, சொல்லுங்க இன்னைக்கு என்ன லஞ்ச்க்கு ஸ்பெஷலா பண்ணி இருக்கீங்க??" என்றதும்,

கங்கா சொன்ன மெனு ஐட்டங்களை கேட்ட சக்திக்கு நாவில் எச்சில் ஊற, "ஐயோ என்னோட செல்ல அம்மா, அசத்திட்ட போ.. எனக்கு பிடிச்ச ஐட்டமாவே எல்லாம் பண்ணி இருக்கியே.. உன்னோட சமையலை அடிச்சுக்க ஆளே கிடையாது.." என்று தாயின் கன்னத்தை பிடித்துக் கிள்ள, அதை பார்த்த மதிக்கு சீதாவின் நியாபகத்தில் கண்கள் கலங்கியது..

அதை கவனித்த சக்தி, "அண்ணி அழுறிங்களா?? என்னாச்சு அண்ணி??" என்கவும் கண்களை துடைத்துக் கொண்ட மதி, "அத்தை, நான் ஒரு வாட்டி வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா?? அம்மா அப்பாவை பார்க்கணும் போல இருக்கு.." என்றவளை அணைத்துக் கொண்ட கங்கா, "என்னடா பர்மிஸன் கேட்டுட்டு இருக்க, தாராளமா போயிட்டு வா.." என்றார்..

"மதிமா நீ ரெடி ஆனதும் செழியனுக்கு போன் பண்ணு, ரெண்டு பேரும் ஒன்னாவே போயிட்டு வரலாம்.." என்க, செழியனின் பெயரை கேட்டதும் ஆணி அடித்தாற் போல் நின்றவள் "சும்மாவே நம்ம மேல கோபமா இருக்கான் இதுல வீட்டுக்கு போகணும்னு சொன்னால் என்ன பண்ணுவானோ??" என்ற பயத்தில் பாவமாக கங்காவை திரும்பி பார்த்தாள்..

"என்னடா, ஆபீஸ்ல இருக்குறவன் கூப்பிட்டா திட்டுவானேன்னு யோசிக்கிறியா?? அதெல்லாம் திட்ட மாட்டான்.. நீ பயப்படாமல் போன் பண்ணு??" என்று தன் போனை மதியின் கைகளில் திணிக்க, அவளும் வேறு வழி இல்லாது செழியனுக்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.. அவனோ போனை அட்டன் செய்யாமல் இருந்தான்..

"நல்ல வேளை அந்த சிடுமூஞ்சி அட்டன் பண்ணல.." என்று மனதுக்குள் நினைத்த மதி, "அத்தை அவரு பிசியா இருக்காரு போல?? அவரை டிஸ்டர்ப் பண்ண வேணாம்.. பக்கத்துல தானே நானே போயிட்டு வந்துடுறேன்.."

"இல்லடா மதி, கல்யாணத்துக்கு அப்பறம் முதல் தடவையா வீட்டுக்கு போற, தனியா போனால் பார்க்குறவங்க ஆயிரம் கதை பேசுவாங்க.. அதனால நீங்க ரெண்டு பேரும் போறது தான் சரி.. உங்க அப்பாம்மா கூட அதை தான் விரும்புவாங்க.." என்க மதிக்கும் அவர் சொல்வது சரியாகப் பட, "மீண்டும் ஒரு தடவை முயற்சிக்கலாம்" என நினைத்தவள், அவனது எண்ணிற்கு அழைக்க, அழைப்பு ஏற்கப் பட்டது..

"ஹலோ சொல்லுங்கமா.." என்க, என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றாள் மதி.. தாங்கள் இருப்பது அவளுக்கு சங்கடமாக இருக்கும் எனக் கருதி மெதுவாக அங்கிருந்து அகன்றனர் கங்காவும் சக்தியும்..

பதில் ஏதும் இல்லாமல் இருக்க, "ஹலோ மா.. லைன்ல இருக்கீங்களா??" என்றான் செழியன் மறுபடியும்.

"அத்.. அத்தை.. இல்லை நா.. நான் மதி பேசுறேன்" என்று திக்கி திக்கி சொல்ல,

"ஹோ நீயா?? ஏய் உனக்கு அறிவுங்கறது இல்லையா?? ஒருத்தன் போன் அட்டன் பண்ணலைனா ஏதாவது முக்கியமான வேலையில இருப்பான்னு கூட யோசிக்காம இப்படி கால் பண்ணிட்டே இருப்பியா?? சரி சொல்லு எதுக்கு கூப்பிட்ட??" என்று கோபத்தில் எரிந்து விழ, சட்டென்று காலை கட் செய்தாள் மதி..

அவன் காதல் மொழிகளை கேட்பதற்கு கனவு கண்டவளுக்கு அவனின் கோப மொழிகளே கேட்க, அதை உடைந்து தான் போனாள்.. என்ன தான் அவனிடம் இருந்து காதலை எதிர்பார்க்கக் கூடாது என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாலும் பேதை நெஞ்சம் அதையும் மீறி ஏங்கத் தான் செய்தது.. அழுவதை விரும்பாதவள், எப்போது காதல் எனும் மாய வலைக்குள் சீக்கினாளோ அன்றிலிருந்து அழுகையும், பிறரிடம் தன் மனப்பாரத்தை கூட பகிர்ந்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளானாள் என்பதே உண்மை..

கங்கா, அருகில் வந்ததை கூட கவனிக்காது இலக்கில்லமால் வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்க, "மதி என்னாச்சுடா?? பேசினானா?? நீ வர சொன்னியாமா??" என்று கேட்க, பதிலை கண்கள் சொல்லியது அவளது கண்ணீரின் மூலம்..

மதியின் கண்ணீரை எதிர்பாரதவர், "மதி என்னாச்சுடா?? எதுக்கு அழுகுற?? செழியன் ஏதாச்சும் திட்டினானா??" என்று கேட்க, அதற்கும் அவளது கண்ணீரே பதில் சொல்லியது..

அதை கண்டு கவலையுற்றவர், "இந்த பையன் என்ன தான் நினைச்சுட்டு இருக்கான். காதலிச்சி தானே கல்யாணம் பண்ணி இருக்கான்.. அப்பறம் எதுக்கு இந்த பொண்ணு கிட்ட இப்படி நடந்துக்குறான்?? இப்படியே விட்டா சரி வராது.. இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்.." என்று மனதில் நினைத்துக் கொண்டு,மதியை தேற்றி அறைக்கு அனுப்பி வைத்தவர், செழினுக்கு மீண்டும் அழைத்தார்..

அழைப்பை ஏற்றவன், "ஏய் உனக்கு ஒரு தடவை சொன்னால் புரியாது?? ஒர்க்ல இருக்கேன்னு சொல்லிட்டேன் தானே.. அப்பறம் எதுக்கு நொய் நொய்னு போன் பண்ணிட்டே இருக்குற.." என்று மதியிடம் பேசுவதாக நினைத்து கங்காவிடம் பேச, "செழியா நான் அம்மா பேசுறேன்.." என்ற குரலில் வாயை மூடினான்..

"நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.. நீ சீக்கிரமா வீட்டுக்கு வந்தாகனும்.." என்றவர் போனை கட் செய்தார்..

அந்த பக்கம் செழியனோ, " ஓஹ் ஷிட்.. அம்மான்னு தெரியாம என்னடா பேசி தொலைச்ச, எல்லாம் அவளை சொல்லணும்.. வேணும்னு தானே அம்மா கிட்ட போனை கொடுத்து இருக்காள்.. இருடி உன்ன வீட்டுக்கு வந்து வச்சிக்கிறேன்.. " என்று சொல்லிக்கொண்டவன், வேலைகளை எல்லாம் சிவாவிடம் ஒப்படைத்து விட்டு தாயின் சொல்லிற்கு மதிப்பளித்து வீட்டிற்கு புறப்பட்டான்.

காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் மனமோ கொதித்து கொண்டிருந்தது, "எல்லாரும் என்ன தான் நினைச்சிட்டு இருக்காங்க, இத்தனை நாளா கல்யாணம் பண்ணலையேன்னு டார்ச்சர் பண்ணினாங்க.. இப்போ அத வச்சே டார்ச்சர் பண்ணுறாங்க.. எல்லாம் அவளை சொல்லணும் கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்துக்கும் சரினு தலை ஆட்டிட்டு, இப்போ என்னடான்னா காதலிச்சவனை தான் கல்யாணம் பண்ணிட்டேன்றா.. எல்லாருக்கும் என்ன பார்த்தால் கேனயன் மாதிரி தெரியுதா??" என்று நினைத்தவனுக்கு கோபமும் வெறுப்பும் அதிகமாக, தன் கோபம் அனைத்தையும் அந்த வாயில்லா ஜீவனான காரின் மீது காட்ட, அதுவோ பறக்க தொடங்கியது..

கொஞ்ச கொஞ்சமாக வேகத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்தவன், மெதுவாக கால்கள் ப்ரேக்கை அழுத்த காரோ கடற்கரை ஓரமாக வந்து நின்றது.. மனதில் இருக்கும் பாரத்தை வெளியேற்றும் எண்ணத்தோடு காரை விட்டு இறங்கிய செழியன், அந்த கடற்கரை மணலில் கால்கள் புதையுற நடந்தவன் ஓரிடத்தில் அமர்ந்தான்..

அந்த நேரம் பார்த்து, மொபைல் விடாமல் அழைக்கவே அதை எடுத்து பார்க்க விரும்பாதவன், ஆர்ப்பரிக்கும் கடலையே வெறித்துக் கொண்டிருக்க, அதை கலைப்பதற்காகவே மீண்டும் மொபைல் சத்தம் எழுப்பியது..

"புல்ஷிட்.. ஏன் தான் இப்படி போன் பண்ணி டார்ச்சர் பண்ணுறாங்களோ தெரியாது.." என்ற சலிப்போடு போனை கையில் எடுத்தவனின் கண்கள், அதில் தெரிந்த பெயரை பார்த்து அகல விரிய, மனதில் ஒரு யோசனையோடு காலை அட்டன் செய்தான்..

"ஹலோ.."

ஹலோ.. நான் தர்ஷனா பேசுறேன்.." என்றதும்.,

"ம்ம்.. தெரியுது சொல்லுங்க.." என்றான் செழியன்..

"உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. இப்போ ப்ரீயா நீங்க??" என்க,

“சொல்லுங்க, எங்க வரணும்.." என்றான்.

"இல்ல இல்ல, நீங்க எங்க இருக்கீங்கனு சொல்லுங்க, நான் அங்க வர்றேன்.." என்ற தர்ஷனாவிடம் தான் பீச்சில் இருப்பதாக சொல்லவும், "நானும் பீச் பக்கத்துல தான் இருக்கேன், வெயிட் பண்ணுங்க பைவ் மினிட்ஸல வந்துடுறேன்.." என்று கூறி அவள் போனை வைத்து விட, "அவள் எதற்காக வருகிறாள்?? தன்னிடம் தனியாக பேச அவளுக்கு என்ன இருக்கிறது??" என்று யோசித்தபடி கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் செழியன்..


தொடரும்...
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Enna da nadaguthu enga dharshana avana pakkanum chezlian sari illa
 
New member
Messages
3
Reaction score
2
Points
3
akka story kannum next update eppa varum eagerly waiting ka
 
Top