• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 2

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 02

Writer : Hafa


"முடியாது முடியாது.. நான் இன்னைக்கு என்னோட ஸ்கூட்டியில தான் இன்டெர்வியூக்கு போவேன்" என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தாள் ரவி - சீதா தம்பதியரின் செல்ல மகள் மதிமொழி. தவமிருந்து பெற்றெடுத்த ஒற்றை பெண் என்பதால் தாய்க்கும் தந்தைக்கும் அவளே உலகமாகிப் போனாள்.

மதி..!! பெயருக்கு ஏற்றால் போல வானில் இருக்கும் மதி போல் ஜோலிப்பவள். பெண்ணிற்குரிய இலக்கணங்கள் அனைத்தும் ஒன்று சேரப் பெற்றவளாய் சுடர் விட்டேரியும் அழகு ஜோதியாக திகழ்பவள் இவள். தந்தையும் தாயுமே கண் கண்ட தெய்வம் என அவர்களையே சுற்றி வரும் சுட்டி பெண். அழகை அள்ளிக் கொடுத்த கடவுள் அதற்கு இணையாக அறிவையும் அள்ளிக் கொடுத்திருந்தார்.

இன்று முதல் முறையாக அவளது வேலைக்கான நேர்முகத் தேர்விற்காக தயாராகிக் கொண்டிருப்பவள், தன்னுடைய ஸ்கூட்டியில் தான் செல்வேன் என அடம் பிடிக்க., அவளின் வண்டி ஓட்டும் திறனை பற்றி நன்கு அறிந்திருந்த பெற்றோர் அதனை தடுத்து பஸ்ஸில் போகுமாறு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

"அம்மா அப்பா ப்ளீஸ், நீங்க பயப்படுற மாதிரி எனக்கு ஒன்னும் ஆகாது. நான் பத்திரமா போயிட்டு திரும்பி வருவேன்." என்க

சீதா, "என்னது ஏதாவது ஆகிடும்னு நினைத்து பயந்துகிட்டு இருக்கோம்னு நினைத்தியா மதி, அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ போற வழில வர்றவங்க யாருக்கும் உயிர் ஆபத்து வந்துட கூடாதுன்னு தான் யோசிக்கிறோம்." என்ற அன்னையை பார்த்து.,

"என்னம்மா கலாய்க்கிறியா?? இன்னைக்கு வேணா நீ பாரு நானும் வண்டியும் ஒரு ஸ்கிறாச் இல்லமா வீடு வந்து காட்டுறோம்." என சபதமிட்டு விட்டு..,

"அம்மா, அப்பா ரெண்டு பேரும் ஒன்னும் பேசாம கொஞ்சம் முன்னாடி வந்து நில்லுங்க." என்று ஆர்டர் போட்டவள் பெற்றோர் காலில் விழிந்து ஆசி வாங்கிக்கொண்டு "நான் கிளம்புறேன், ரெண்டு பேரும் பத்திரமா இருந்துக்கோங்க." என்று தன் பையையும் எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

மதிக்கு உள்ளமெல்லாம் மகிழ்ச்சியில் கூத்தாடியது. வேலைக்கான எழுத்து மூல பரீட்சையை எதிர் கொண்டவள் அதில் தேர்வாகி இன்று நேர்முக தேர்விற்காக சென்று கொண்டிருக்கிறாள். படித்து முடித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவள் இலட்சியமாகவே இருந்தது. மதி கடைசி ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு அச்சிடேன்ட்டில் ரவிக்கு காலில் ஏற்பட்ட பலத்த அடியின் காரணமாக வேலைக்கு செல்ல முடியாத காரணத்தால் வீட்டிலேயே இருந்து விட, அனைத்து பொறுப்புக்களையும் மதியே ஏற்றுக் கொண்டு இதுவரை காலமும் சிறிய அச்சக்கம் ஒன்றில் பணி புரிந்தவள் இன்றே தன் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடி பயணிக்க்கிறாள்.

மனம் முழுவதும் மகிழ்வுடன் மதி வண்டி ஒட்டிக் கொண்டிருந்த நேரம் பார்த்து தனக்கு எதிரே லாரி ஒன்று வேகமாக வர அதில் மோதாமல் வண்டியை வேறு பக்கம் திருப்ப., அந்த நேரம் பார்த்து சரியாக ஆபீஸுக்கு நேரமான காரணத்தால் வேகமாக வந்து கொண்டிருந்த செழியனின் காரில் தன் ஸ்கூட்டியை கொண்டு மோதப் போக சடன் பிரேக் போட்டு வண்டியை லாவகமாக நிறுத்தினான் அவன்.

ஏற்கனவே ஆபீஸுக்கு லேட்டாகிய காரணத்தால் கோபமாக இருந்தவன் காரை விட்டு இறங்கி, "ஏய் கண்ண ரோட்ல வச்சிட்டு தான் வண்டி ஓட்டுறியா?? இல்ல வேற எங்கையாச்சும் வச்சிட்டு ஓட்டுறியா?? அது சரி பொண்ணுங்க நீங்க எங்க ரோட பார்த்து வண்டி ஓட்டுறிங்க வழியில எந்த பையன் கிடைப்பான் அவனை எப்படி கவுக்கலாம்னு தானே வீட்டுல இருந்து வெளிய வர்றிங்க." என்று வார்த்தைகளை தீயாய் கக்க.,

அதில் வெகுண்டு எழுந்த மதி, "என்ன சார் ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்கீங்க, வண்டிய உங்க கார்ல மோத வந்தது என்னோட தப்பு தான் ஆனா அதுக்குன்னு நீங்கள் என்னவேணாலும் பேச நான் கேட்டுட்டு இருப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க."

"ஏய் என்னடி பண்ணுவ, ரொம்ப தான் ஓவரா பேசுற, இதுக்கு மேல பேசின நடக்குறதே வேற."

"போனா போகுது நம்ம மேலயும் தப்பு இருக்குதுன்னு பொறுத்து போனா ரொம்ப தான் பேசுறீங்க. உங்களால என்ன முடியுமோ பாத்துக்கோங்க." என்று செழியனும் மதியும் ரோட்டில் சண்டை போட்டுகொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அவ்விடத்தை சரியாக வந்தடைந்தான் சிவா.

"டேய் செழியா நீ இங்க என்னடா பண்ற??" என்றவனை சிறிதும் பொருட்படுத்தாது இருவரும் மேலும் மேலும் சண்டை போட, "இது சரி பட்டு வராது. " என சிந்தித்து செழியனை தன் பக்கம் இழுத்துக் கொண்டு.,

"சாரி சிஸ்டர், என்னோட பிரண்டு தான், யாரு மேல மிஸ்டேக் இருக்கோ தெரியல பட் ரெண்டு பேருக்கும் பொதுவா நான் சாரி கேட்டுறேன்."என்கவும்

"ஹேய் சிவா என்னடா நீ போய் இந்த பஜாரி கிட்ட சாரி கேட்டுட்டு இருக்குற."

"ஹலோ மிஸ்டர் மைண்ட் யுவர் வேர்ட்ஸ்."

"சிஸ்டர் ப்ளீஸ் அவன் சார்பா நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அவன் வேற ஏதோ டென்ஷன்ல இருக்கான் ஸோ ப்ளீஸ் இத்தோட இந்த பிரச்சனைய விட்டுடலாம்."என்ற சிவா செழியன் சொல்வது எதையும் கேட்காது அவனை காருக்குள் இருத்தி, "ஆபீஸுக்கு டைம் ஆச்சு நீ கிளம்பு செழியா, இன்னைக்கு முக்கியமான ஒர்க்ஸ் இருக்கு. நீ போ நான் பின்னால வந்துடுறேன்." என்கவும் புயலாய் காரை கிளப்பிக் கொண்டு சென்றான் செழியன்.

அவனை அனுப்பி விட்டு மதியின் அருகில் வந்தான் சிவா. "ஒன்ஸ் அகைன் சாரி சிஸ்டர், அவன் எப்படி பேசி இருப்பான்னு எனக்கு தெரியும். ஆனா அவன் அந்த அளவுக்கு கெட்டவன் இல்ல சிஸ்டர், அவனோட வாழ்க்கைல நடந்த சில சம்பவங்கள் அவனை இப்படி மாத்திரிச்சி. அவ்வளவு தான் நீங்க எதையும் மனசுல வச்சிக்காதிங்க." என்றவனை பார்த்து.,

"இட்ஸ் ஓகே பிரதர், தப்பு என் மேல தான். நான் தான் முன்னாடி லாரி வர கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். உங்க பிரண்ட் கிட்ட சாரி கேட்கலாம்னு போகும் போது அவரும் ரொம்ப பேசிட்டாரு. அதனால தான் நானும் பேச வேண்டியதா போச்சு. அவரு கிட்ட கேட்க வேண்டிய சாரிய உங்க கிட்ட கேட்டுக்குறேன் பிரதர், சாரி எண்ட் உங்களுக்கு ரொம்ப நன்றி."

"ஐயோ அதெல்லாம் தேவையில்லை சிஸ்டர் இருக்கட்டும்." என்றவனை பார்த்து புன்னகை ஒன்றை உதிர்த்தவள், "எனக்கு டைம் ஆச்சுது நான் கிளம்புறேன். முக்கியமான ஒர்க் இருக்குது." என்று தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள் மதி.

அங்கு நடந்த அனைத்தையும் பார்த்த சிவாவிற்கு தலையே சுற்றியது. "ஒரு டூ மினிட்ஸ்ல எவ்வளவு குழப்பம் பண்ணிட்டாங்க ரெண்டு பேரும். நாம வந்ததால சரியா போச்சு இல்லனா என்ன ஆகி இருக்கும்." என சிந்தித்தவனுக்கு கண் இருண்டு வருவது போல தோன்றவும், "ஐயோ வேண்டாம்டா சாமி. இதுக்கு மேல இவங்க ரெண்டு பேரையும் சந்திக்க விடாமல் நீ தான் முருகா பார்த்துக்கணும்." என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு தானும் வேலையை பார்க்க சென்றான்.

வண்டி ஓட்டிக் கொண்டிருந்த மதிக்கு மீண்டும் மீண்டும் செழியனின் அந்த கடுகடுத்த முகம் வந்து போக, " ச்சேய் எவ்வளவு ஆசையா இன்டெர்வியூக்கு கிளம்பினோம், பேசாம அம்மா சொன்னது போல ஆட்டோலயோ இல்லனா பஸ்லயோ போய் இருக்கலாம். அப்படி பண்ணி இருந்தாலாச்சும் அந்த சிடுமூஞ்சி மூஞ்சில முழிக்காம தப்பிச்சிருக்கலாம். என்ன மனுஷன் இவன், பெரிய இவன் மாதிரி பொண்ணுங்கள பத்தி தப்பு தப்பா பேசுறான் ஸ்டுபிட். Zஸு ல இருந்து நேரா இங்க வந்திருப்பான் போல, அவனும் அவன் மூஞ்சியும். " என மனதுக்குள்ளயே செழியனை வசை பாடிக் கொண்டே தான் வர வேண்டிய ஆபீஸுக்கு வந்து சேர்ந்தாள்.

∞∞∞∞∞∞∞∞∞∞

ஆபீஸுக்கு வந்த செழியன், தன் இருக்கையில் இருந்து கொண்டு மேசை மீதிருக்கும் பேப்பர் வெயிட்டை சுழற்றிய படி, "எங்க இருந்து தான் கிளம்பி வருவாளுங்களோ தெரியல, ச்சே.!! எல்லா பொண்ணுங்களுமே ஒரே குட்டைக்குள் ஊறின மட்டைங்க தான். எப்போடா ஒரு பையன் வருவான் அவனை எப்படி ஏமாத்தலாம்னு இருப்பாங்க போல." என்றவன் கண்களோ வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது.


இருவருமே அறியவில்லை கடவுள் அவர்களுக்கு வைத்திருக்கும் செ(ch)க்கை.



தொடரும்...
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
நல்ல ஹீரோ ஹீரோயின் பா ஆரம்பம் அமர்களாம. இருக்கு 😉😉⭐எது எங்க கொண்டு போய் முடிய போகுது கடவுள் என்ன பண்ண போறா்களோ 😊😊😊
 
Top