• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 17

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 17

Writer : Hafa


திருமணத்திற்கு நாள் குறித்த பெரியவர்கள், அதற்கு இடையில் நல்ல நாள் பார்த்து நிச்சயத்தையும் செய்து முடித்தனர். மதியும் செழியனும் யாருக்கோ நடக்கும் நிகழ்வுகள் போல, எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கியே இருந்தனர்..

திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருக்க, "திருமணம் முடியும் வரை மதியை வேலைக்கு செல்ல வேண்டாம்." எனப் பெரியவர்கள் கூறி இருந்ததால் மதி வீட்டிலேயே இருந்தாள்..

ஆபீசுக்கு வந்ததும் வராததுமாய் தன்னிடம் பேச வேண்டும் என்று கூறிய சிவாவை யோசனையாய் பார்த்த படி இருந்தான் செழியன்..

"என்னடா பேசணும்னு கூப்பிட்டு சைலன்ட்டா இருக்குற?? என்ன, எதாவது முக்கியமான விஷயமா??" என்று செழியன் கேட்க சிவாவோ எதுவும் பேசாது அவனை முறைத்துக் கொண்டிருந்தான்..

"இப்போ எதுக்கு மூஞ்சிய இப்படி வச்சி இருக்க, என்ன விஷயம் சொல்லு.. எனக்கு நிறைய வேலை இருக்கு.."

"ஆமா பெரிய வேலை, முதல்ல நான் கேட்குறதுக்கு பதில சொல்லு.."

"சிவா, அடி வாங்க போற நீ.. என்னன்னு கேட்டால் தானே சொல்ல முடியும்.." என்று தலையில் அடித்துக் கொண்டான்.

"சரி, செழியா நான் கேட்குறதுக்கு நீ உண்மைய மட்டும் தான் சொல்லணும்.. நீ மதிய நிஜமாவே காதலிச்சியா??" என்கவும் சற்று அதிர்ச்சி அடைந்தான் செழியன்..

"என்னடா நான் கேட்டுட்டு இருக்கேன்.. நீ அமைதியா இருக்குற, சொல்லு மதிய நீ காதலிச்சியா??"

தன்னை ஒரு வாறு சமாதானம் செய்த செழியன், "எதுக்குடா சடன்னா அப்படி கேட்குற, இதுல என்ன சந்தேகம் உனக்கு நாங்க காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்க போறோம்.." என்றவனை நம்பாமல் பார்த்த சிவா,

"இல்லடா என்னால இப்போ வரைக்கும் இத நம்ப முடியல.. மற்ற எல்லாருக்கும் வேணா நீங்க லவ் பண்ணின மாதிரி தெரியலாம், ஆனா உங்க ரெண்டு பேரோட சண்டையையும் கூட இருந்து பார்த்தவன் நான்.. அது மட்டும் இல்ல, நீ அம்மா கிட்ட சொல்றதுக்கு அந்த முதல் நாள் வரைக்குமே உங்க ரெண்டு பேருக்கும் இடையில மோதல் இருந்துதே தவிர காதலை நான் எங்கையும் நோட்டீஸ் பண்ணல.. அப்பறம் இந்த காதல் புதுசா எங்க இருந்து வந்துச்சுது.." என்று கேட்கவும் செழியனுக்கு, "என்னடா இவன் எல்லாத்தையும் கரெக்ட்டா புட்டு புட்டு வைக்கிறான்.." எனத் தோன்றியது..

"அது.. ஆஹ்.. இங்க பாரு சிவா, எனக்கும் இந்த செகண்ட் வரைக்கும் புரியல.. எந்த இடத்தில அவள் மேல எனக்கு லவ் வந்துதுன்னு.. பட் அம்மா கல்யாண விஷயம் பத்தி பேசும் போது அவ தான் என்னோட மைண்ட்ல வந்தாள். ஸோ நான் மதி கிட்ட சம்மதமான்னு கேட்டுட்டு அம்மா கிட்ட சொன்னேன் அவ்ளோ தான்டா.." என்றான் மென்று விழுங்கிய படி..

"நிஜமா தான் சொல்றியா??"

"ஆமாடா, நீ வேணா மதிக்கே போன் பண்ணி கேட்டு பாரேன்."

"ஏய் அதெல்லாம் வேணாம்டா, நான் சொல்றத சரியா உன் மண்டைல ஏத்திக்கோ செழியா, நீ மதிய காதலிச்சியோ இல்லையோ எனக்கு தெரியல.. ஆனா மதி ரொம்ப நல்ல பொண்ணுடா, இதுக்கு மேலயும் நீ பழசை நினைச்சி உன்னோட லைப ஸ்பாயில் பண்ணிக்காம, மதி கூட சந்தோஷமா வாழு.." என்று கூறிய சிவா செழியனின் பதில் எதையும் எதிர் பாராது அங்கிருந்து சென்றான்..

"என்னடா இங்க நடக்குது?? இதுக்கு ஆரம்ப புள்ளி போட்டது வேணா நானா இருக்கலாம்.. ஆனா இப்போ என்னடான்னா எல்லாமே என்ன ஓவர்டேக் பண்ணிட்டு போகுதே, இத இப்படியே விட்டா சரி வராது.." என்று தனக்குள் நினைத்துக் கொண்டவன் சில திட்டங்களை வகுத்துக் கொண்டான்.

∞∞∞∞∞∞∞∞∞∞

எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த திருமண நாளும் வந்தது.. செழியன் தொழில் வட்டாரத்தில் மிகப்பெரிய புள்ளி ஆகையால் பெரிய மண்டபமே ஏற்பாடு செய்திருந்தனர்.. வாத்தியங்கள் முழங்க அந்த திருமண மண்டபமே பரபரப்பாய் காணப்பட்டது.. சொந்த பந்தங்கள் எல்லாரும் குழுமி கதை அளந்து கொண்டிருந்தனர். வாசலில் பெரியதாக..,

இளஞ்செழியன்
&
மதிமொழி

💞

சிவா
&

சக்தி

என்று இரு ஜோடிகளினதும் படங்களுடன் பிளேக்ஸ் வைக்கப்பட்டு மண்டபபே அமர்க்களமாய் இருந்தது..

செழியனோ இன்று தனக்கும் திருமணம் என்பதையும் மறந்து காலில் சக்கரம் கட்டாத குறையாய் பம்பரமாய் சுழன்று அங்குமிங்கும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தான்..

சிவா, செழியன் கட்டளை இட்டதுக்கு அமைய மணமகன் அறையில் இருந்து வெளியே வராமல் கடமையே என்று தயாராகி கொண்டிருந்தான்.

சக்தி மணமகள் அறையில் இருந்து தயாராகிக் கொண்டிருந்தாள். அவளது நிறம் அவளை அழகாக காட்டியதா?? இல்லை அவளது வெட்கம் அவளை அழகாக காட்டியதா?? என்று தெரியாத அளவுக்கு அவளின் முகம் பிரகாசமாய் ஜொலித்தது..

சக்தியின் அறைக்கு ஏதோ எடுக்கவென வந்த செழியன், சக்தியை பார்த்ததும் அசையாமல் நின்றான். நேற்று வரை தன் கண்களுக்கு குழந்தையாய் தெரிந்தவள், இன்றோ மாற்றானுக்கு மனைவியாக போகிறவளாய் ஜொலித்தாள்.. சக்தியின் அருகில் சென்று அவள் காதருகில் குனிந்தவன், "ஹேய் யாரு நம்ம சக்தி குட்டியா இது?? அடையாளமே தெரியல.." என்கவும் அவளோ வெட்கித் தலை குனிந்தாள்.

"என்ன அதிசயம் இது?? என்னோட தங்கச்சி வெட்கப் படுறாளா என்ன?? இல்ல நான் கனவு ஏதும் காணுறேனா?? என்றான் செழியன் விளையாட்டாய்..

அதை கேட்டதும் சக்தி, செழியனைப் பார்த்து முறைக்க, "சரி, சரி முறைக்காத.. சடன்னா பார்க்கும் போது பயமா இருக்கா இல்லையா??" என்று அவன் கூற, அவனது காதை பிடித்து திருகினாள்..

"என்னது என்னை பார்க்கும் போது பயமா இருக்கா?? இங்க பாருங்க மிஸ்டர் சகோ உங்க தங்கச்சி எப்படி இருந்தாலும் நீங்க அவளை ஆஹா ஓஹோன்னு புகழனுமே தவிர இப்படியெல்லாம் சொல்லப்படாது.. ஓகே.." என்று சொல்லிக்கொண்டிருக்க, சக்தியின் கையில் அகப்பட்டிருந்த செழியனோ, "ஆஹ்.. ஓஹ்.. வலிக்குது.." என்று கத்தினான்..

"வலிக்கட்டும் வலிக்கட்டும், இனி இந்த சக்தி கிட்ட வரும் போது கொயாட்டா இருக்கணும்.." என்று இல்லாத காலரை தூக்கி விட்டாள்.


அடர் நீல நிற பட்டுப் புடவையில் தேவதையாய் ஜோலித்தவளின் அழகை முகத்தை சுற்றி நெட்டி முறித்தான்..

"என்னாலே தானேடா இத்தனை நாளா உன்னோட கல்யாணம் தள்ளிப் போய் கிட்டே இருந்தது. சாரிடா குட்டி சகோவ மன்னிச்சுடு.." என்றவனை பார்த்து, "என்ன சகோ எமோஷனலா பேச ட்ரை பண்ணுறியா?? செட் ஆகல.. அந்த பக்கம் அண்ணி உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க, சீக்கிரம் போய் ரெடி ஆகு.." என்றதும் அவன் முகம் மாற, உடனடியாக அந்த இடத்தை காலி செய்தான்..

∞∞∞∞∞∞∞∞∞∞

மயில் வண்ண பட்டுப் புடவையில், கூந்தல் மயில் தொகையாய் விரிந்திருக்க, யோசனையில் அமர்ந்திருந்தாள் மதி..

"மதி நீ பண்ணுறது சரியா?? இந்த மேரேஜ்னால மத்தவங்களுக்கு ஏதாவது பிரச்சனை வருமா?? அப்பா அம்மாக்கு இந்த விஷயம் தெரிய வரும் போது இதை அவங்கள தாங்கிக்க முடியுமா??" என்று அவளது மனம் அவளிடம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது.. அரைவாசி தயாரான நிலையில் யோசித்தபடி அமர்ந்திருந்தாள் மதி..

யாரோ கதவு தட்டவும், அந்த ஓசையில் சிந்தனையில் இருந்து சுயநினைவுக்கு வந்த மதி, "இந்த நேரத்துல யாரா இருக்கும், அம்மாவா இருக்குமோ?? நான் முகூர்த்த நேரத்துக்கு இன்னும் நேரம் இருக்கே?? எதுக்கு இப்போவே கதவை தட்டுறாங்க??"என்று மனதில் எண்ணியபடி போய் கதவைத் திறந்த மதி திகைத்துப் போய் நின்றாள்..

மதி எதிர்பார்த்ததோ, அவளது தாய் சீதாவை ஆனால் அங்கு நின்றிருந்ததோ நம் நாயகன் செழியன்..

பட்டு வேஷ்டி, பட்டு சட்டை என, மாப்பிள்ளைக்கு ஏற்ற தோரணையுடன், ஆறடியில் ஆணழகனாய் நின்றிருந்தான். இத்தனை நாள் பார்த்த செழியனுக்கும் இப்பொழுது பார்க்கும் செழியனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக தோன்றியது மதிக்கு.. அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தாள்..

மதியின் முகத்தின் முன் செழியன் சொடக்குப் போட்டதில் தன்னிலைக்கு வந்த மதி அப்படியே முழித்துக் கொண்டிருக்க, அவளை பார்த்து, "ப்ளீஸ் கொஞ்சம் உள்ள போறியா?? உன் கூட அஞ்சு நிமிஷம் பேசனும்.." என்க, மதி அவளையும் அறியாமல் விலகி அவனுக்கு வழி விட்டாள்..

அறைக்குள் சென்ற செழியனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை..
அவனும் முதற் தடவையாய் அல்லவா மதியை புடவையில், அதும் பட்டுப் புடவையில் கல்யாணக் கோலத்தில் பார்க்கிறான்.. அவளை பார்த்ததுமே அவன் ஆண்மையின் உணர்வுகள் மேலேழ, "தன் கட்டுப் பாடுகளை மீறி விடுவோமோ. " என்று தயங்கித் தயங்கி நின்றவனை பார்த்த மதி, "ஏதோ பேசனும்னு சொல்லிட்டு வந்து சைலன்ட்டா இருக்கீங்க." என்க, தன் உணர்வுகளை சற்று ஒதுக்கி வைத்தவன்.,

"அது.. வந்து.. இத.. எப்படி ஸ்டார்ட் பண்ணுறதுன்னு தெரியல.."

செழியன் இவ்வாறு பேசுவது மதிக்கே புதியதாய் இருந்தது.. அவள் பார்த்த செழியன், எப்போதும் கம்பீரத்துடன், அதிகாரமாய் பேசுபவனே.. ஆனால் இன்று அவள் முன்னால் நிற்பவன், பேசவே தயங்குறான்..

மதி அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு, "பேசனும்னு உள்ள வந்துட்டு பேசாம இருந்தால் என்ன பண்றது, சொல்ல வந்ததை சொல்லுங்க, இல்லனா.." என்று கதவுப் பக்கம் கையை காட்ட, செழியனுக்கோ இவ்வளவு நேரமும் காணாமல் போய் இருந்த ஈகோவையும் அதிகாரத்தையும் தூண்டி விட, தன் ஜீன்ஸ் பாக்கேட்டுக்குள் இருந்து ஒரு கவரை எடுத்து அவள் முன் போட்டான்.

மதி, "என்ன இது??" என்று பார்வையாலேயே கேட்க, "அத எடுத்து படிச்சு பாரு.." என்றவன்.,

"சொல்றத நல்லா கேட்டுக்கோ, இந்த மேரேஜ், உன்னோட குடும்பத்துக்காகவும் என்னோட குடும்பத்துக்காகவும் மட்டும் தான்.. அத மனசுல வச்சிக்கோ. அத விட்டு என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கலாம்னு நெனைச்ச, அதுக்கு அப்பறம் என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியதா இருக்கும்." என்றான்..

மதி, "இத பத்தி தான் அன்னைக்கே பேசிட்டோமே அப்பறம் என்ன??"

"இங்க பாரு, ஒரு பர்பெக்ட் பிசினஸ் மேனா எனக்கு எல்லாமே பைல்ஸா இருக்கணும்.. ஸோ இந்த பேப்பர்ல நம்மளோட அக்ரீமெண்ட் பத்தி அதாவது இந்த ஒன் இயர் காண்ட்ராக்ட் மேரேஜ் பத்தி புல் டீடெயில்ஸ் இருக்கு, நீ படிச்சி பார்த்து சைன் பண்ணு.." என்றத்தில் மதிக்கோ இதயம் உடைந்து சுக்கு நூறாய் போவது போல் உணர்ந்தாள். அவளே இந்த ஒப்பந்த திருமணதிற்கு சம்மதம் தெரிவித்தாலும் சராசரி பெண்ணாய் அவளுக்கும் வலிக்கவே செய்தது.. என்ன தான் இருந்தாலும் நேசித்தவன் ஆயிற்றே..

தன் வலிகளை அவனிடம் காட்டிக் கொள்ள விரும்பாதவள், அந்த பேப்பரை படித்தும் பார்க்காமல், கையொப்பம் இட்டு அவன் முன் வைக்க, அதை எடுத்தவன், மின்னலாய் விரைந்து சென்று விட்டான்..

அவன் சென்றதுமே கதவை மூடி லாக் செய்த மதி, அழுது கரைந்தாள்..
"ஏன்டா.. ஏன்டா என்னோட வாழ்க்கையில மறுபடியும் வந்த, போனவன் அப்படியே போக வேண்டியது தானே.. திரும்ப வந்து ஏன்டா என்ன அணு அணுவா கொல்லுற?? நான் என்ன உன்ன பணத்துக்காக கல்யாணம் பண்ணுறேன்னு நினைச்சிட்டேல்ல, ஆனா அது உன் மேல நான் வச்சி இருக்குற காதல்னால தான்னு எப்போடா புரிஞ்சிக்க போற?? நீ முதல்ல அக்ரீமெண்ட் மேரேஜ்ன்னு சொல்லும் போது என்னைக்காவது ஒரு நாள் மனசு மாறுவேன்னு நம்பினேன்டா, ஆனா எப்போ நீ ஒரு பேப்பர் மேல நம்பிக்கை வச்சியோ அந்த செகண்ட் உன் மேல நான் வச்சிருந்த நம்பிக்கை எல்லாம் தூள் தூளாகி போயிட்டுது." என்று தன் ரணங்கள் ஆறும் வரை கண்ணீரில் கரைந்தவள், "இதுக்கு மேல நீயா என் காதலை உணர்ந்து வந்தால் மட்டும் தான் நாம சேரலாம்.. இல்ல கடவுள் இட்ட வழி நம்ம பிரிவு தான்னா அதுக்கும் நான் தயாரா தான் இருக்கிறேன்." என்று தனக்கு தானே உறுதி மொழி எடுத்துக் கொண்டாள் மதி..

∞∞∞∞∞∞∞∞∞∞

மணமேடையில் இரு ஜோடிகளுக்கும் தனித் தனியே பந்தல் அமைக்கப்பட்டிருக்க, மணமகன்கள் இருவரும் ஐயர் மந்திரம் ஓத, அதை திருப்பிக் கூறிக்கொண்டு இருந்தனர்.

சிவாவோ மனதுக்குள், "எப்போதடா சக்தியை கண்ணில் காட்டுவார்கள்." என்ற ஏக்கத்தோடு அமர்ந்திருக்க, செழியனோ தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல வாய்க்குள் மந்திரத்தை முனுமுனுத்தபடி இருந்தான்.

ஐயர், "பொண்ண அழைச்சிட்டு வாங்கோ.." என்றதும் தோழிகள் புடைசூழ மணப்பெண்கள் இருவரும் மேடைக்கு வந்தனர். அடர் நீல நிறப் புடவையில் மேடை ஏறிய சக்தியை பார்த்ததும் சிவாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசமாக மிளிர்ந்தது. ஆனால் நம் நாயகனோ நாயகியை ஏறேடுத்தும் பார்க்கவில்லை, என்று சொல்வதை விட, பார்க்கத் தூண்டிய மனதை தன் கட்டுக்குள் வைத்து இருந்தான் என்று கூறலாம். மதியோ இறுகிய பாறையாய் செழியன் அருகில் அமர்ந்து இருந்தாள். மறந்தும் கூட இருவரும் ஒருவரை பார்த்துக்கொள்ளவில்லை..

"கெட்டிமேளம் கெட்டிமேளம்.. மாங்கல்யம் தந்துனானே ந மம ஜீவன ஹேதுனா தண்டே பத்னாமி சுபகே த்வம் ஜீவ சரதாம் சதம்" என்று ஐயரின் மந்திர வார்த்தைகள் முழங்க, நாயகர்கள் இருவரும் பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் தங்கள் நாயகிகளின் கழுத்தில் தாலியை கட்டினர். மதிக்கோ தன் கழுத்தில் தாலி ஏறும் போது, ஒரு வித நடுக்கம் ஏற்பட, "எந்த பெண்ணுக்கும் தன் நிலைமை வந்து விடக் கூடாது." என்று மனதுக்குள் பிரார்த்தித்தவளாய் அவன் முடிச்சிட்ட மங்கள நாணை தன் கழுத்தில் ஏந்திக் கொண்டாள்.



தொடரும்...
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Sakthi chezlian kutty cute da👫👫⭐⭐⭐
Crt Siva ne sollurathu un friend nalla samalikuran😊😊😊
Paruga hero sir heroine mela love varum ipadilam control panna😃😃😃 mudiyathu one year agreement marrige sign ya pakkalam mathi oda love success agum ne feel pannatha da 🤩🤩🤩
 
Top