• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 15

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 15

Writer : Hafa



"எனக்கு ஒன்னும் புரியாமல் இல்ல, நான் யார் கிட்டயும் கடனாளியா இருக்க விரும்பல.. ப்ளீஸ் நான் என்ன பண்ணனும்." என்று அவனை மதி விடாமல் நச்சரிக்கவும்,

"இங்க பாரு நான் உன்ன இந்த விஷயத்துல கம்ப்பல் பண்ணல. ஜஸ்ட் நீ கேட்டதுக்காக சொல்றேன் அவ்வளவு தான்." என்றவன் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு, "நாம ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்கலாமா??" என்றான் செழியன்.

அவன் இப்படி கேட்பான் என எதிர்பாரதவள் கண்களில், அவளை அறியாமலே நீர் வழிந்தது.

"ஹேய் இப்போ எதுக்கு அழுற?? நான் உன்னோட சிட்டுவேஷன யூஸ் பண்ணிக்கிறேன்னு நினைக்காத.. நான் கல்யாணம்னு சொல்லுறது நிஜ கல்யாணம் இல்ல, ஜஸ்ட் ஒரு அக்ரீமெண்ட் மேரேஜ் தான். ஒரே ஒரு வருஷத்துக்கு மட்டும். நான் உன்ன போர்ஸ் பண்ணல. நீ கேட்டதுக்காக சொன்னேன் அவ்வளவு தான்.." என்றவன் மனதை ஏதோ உறுத்த, "அப்பாவ நார்மல் வார்டுக்கு சேன்ஜ் பண்ணினதும் எனக்கு போன் பண்ணு." எனக் கூறியவன் காருக்குள் சென்று அமர்ந்து கொண்டான்.

மதிக்கோ அவன் முதலில், "கல்யாணம் பண்ணிக்கலாமா??" என்று கேட்டதும் உள்ளுக்குள் சிறு ஆனந்தம் இருந்தது. ஆனால் கடைசியாக அவன் கூறிய, "அக்ரீமெண்ட் மேரேஜ்." என்ற வார்த்தையில் அவள் இதயம் நொறுங்கிப் போனது. என்ன தான் இருந்தாலும் உயிருக்கு உயிராய் நேசித்தவன் ஆயிற்றே..

உணர்ச்சிகளே இல்லாதவள் போல் உள்ளே சென்றவள், தாயை பார்க்க, அவர் அசதியில் பெஞ்சில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். தானும் அங்குள்ள இருக்கை ஒன்றில் அமர்ந்து தன் காதலின் நிலையை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தவள் தன்னை அறியாமல் உறங்கிப் போனாள்.

காருக்குள் இருந்த செழியனுக்கு மனம் கேட்கவில்லை. "தன்னுடைய சுயநலத்திற்காக ஓர் பேதை பெண்ணின் வாழ்க்கையை பணயம் வைப்பதா?? " என்று தனக்குள்ளயே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவனுக்கு அழுது கொண்டே சென்ற மதியின் முகம் நினைவில் வர, அவளை தேடிச் சென்றான். அங்கு மதியோ கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் தடங்களுடன், உறங்கிக் கொண்டிருந்தாள்.

ஹாஸ்பிடலுக்கு உள்ளே மதியை தேடி வந்த செழியன், உறங்கிக் கொண்டிருக்கும் மதியை பார்த்தான். இது நாள் வரை தன்னுடன் மல்லுக்கு நின்ற மதியை கண்டவனுக்கு இன்று சிறு குழந்தையாய் தூங்கும் அவள் முகம், அவனின் மனதிற்கு இதமளித்தது. அருகில் அமர்ந்து சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். உறங்கும் போது கூட அவள் முகத்தில் கள்ளம் கபடம் தெரியவில்லை.

அவளை நன்கு உற்று நோக்கியவனுக்கு அவளின் கன்னங்களில் வடிந்திருந்த கண்ணீர் துளிகள் தென்பட்டது. அதனை பார்த்ததும் அவனுக்கு குற்ற உணர்வு எழுந்தது.

"ச்ச்சை, என்னடா பண்ணி இருக்க செழியா?? ஏதோ உதவி பண்ணின, அத அப்படியே விட வேண்டியது தானே.. ஏன்டா அந்த பொண்ணு கிட்ட போய் மேரேஜ், அக்ரீமெண்ட்னு ஏதேதோ பேசிட்டு இருக்க??" என்று ஒரு மனம் அவன் தவறுகளை சுட்டிக்காட்ட.,

மற்றைய மனமோ, "ஏன் நீ பண்ணினதுல என்ன தப்பு இருக்கு.. நீ உதவி செஞ்ச, அதுக்கு பதிலா அந்த பொண்ணு ஏதாவது பண்ணனுமான்னு அவள் தானே கேட்டாள். நீயா போய் ஒன்னும் கேட்கலையே.. உனக்கு இந்த நேரத்துல தேவை படுறத நீ கேட்டு இருக்க அவ்வளவு தான்." என்று அவனின் சூழ்நிலையை சுட்டிக்காட்டியது.

குழப்பத்தில் இருந்தவனுக்கு அவள் நம்மால் காயப்பட்டிருக்கிறாள் என்பது மட்டும் சரியாக உரைத்தது. ஒரு பேப்பரை எடுத்தவன், அதில் "சாரி.."என்று மட்டும் எழுதி அதை கைக்குள் மெதுவாக வைத்து விட்டு அங்கிருந்து சென்றான்..

விதி இருவருக்கு இடையிலும் தன் ஆட்டத்தை ஆரம்பித்தது..

∞∞∞∞∞∞∞∞∞∞

காலையில் விழித்துப் பார்த்த மதி, தலை வலிப்பது போல் இருக்க, கண்களை கசக்கி கொண்டு எழுந்தவள் கையில் ஏதோ இருப்பது போல இருக்கவும் அதனை விரித்துப் பார்க்க அதில்,"சாரி.." என்று மட்டும் எழுதப் பட்டிருந்தது. யாரு எழுதியிருப்பா என்று சிந்தித்துக் கொண்டே அன்னையை பார்க்க, சீதாவோ முகத்தில் ஒரு தெளிவுடன் மதி அருகில் அமர்ந்திருந்தார்..

"மதிமா எந்திரிச்சிட்டியாடா??"

"ஆமாம்மா, அசதில என்னையே அறியாமல் தூங்கிட்டேன்.. நீங்க எந்திரிச்சதும் என்ன எழுப்பி விட்டு இருக்கலாம்ல.."

"இல்லடா, நீ நேத்துல இருந்து அங்கையும் இங்கையும் ஓடித் திரியுற.. அதனால அசந்து தூங்கிட்டு இருக்கவும் விட்டுட்டேன்.."

"அம்மா, அப்பா கண் விழிச்சிட்டாரா??" என்று எழுந்து சென்று பார்க்க, அவரோ கண் மூடிய படி இருந்தார்.

"என்னம்மா?? அப்பா இன்னும் கண் விழிக்கலையா?? டாக்டர கூப்பிடவா??" என்று பதற,

"மதி!! மதி!! கொஞ்சம் பொறுமையா இருமா.. அவரு விடியக் காலையில நாலு மணிக்கே கண் விழிட்டாருன்னு நர்ஸ் கூப்பிட்டாங்க.. உன்ன பார்க்க நீ தூங்கிட்டு இருந்த, அது தான் நானே போய் பார்த்தேன்டா.. கடவுள் புண்ணியத்துல இப்போ ரொம்ப நல்லா இருக்காரு.." என்றார் முகம் முழுவதும் புன்னகையுடன்..

"அம்மா.. நிஜமாவா சொல்லுற?? அப்பா நல்லா இருக்காரா??" என்றாள் கண்களில் நீர் வடிய..

மதியை அணைத்துக் கொண்ட சீதா, "ஆமா மதி, அப்பா இப்போ நல்லா இருக்காரு.. டேப்லெட் குடிச்சிட்டு தூங்குறாருடா.. அவரு எழுந்ததும் நாம போய் பார்க்கலாம். சரியா??" என்று குழந்தைக்கு சொல்வது போல மதிக்கு கூறிக்கொண்டிருந்தார்.

"அம்மா, அப்பா எந்திரிகிறதுக்குள்ள நான் போய் பக்கத்துல இருக்குற கோயில்ல விளக்கு ஏத்திட்டு வந்துடுறேன்மா.. நீ இங்கயே இரு.." என்று மதி வேகமாக நடக்க..,

"மதி ஒரு நிமிஷம்.." என்றார் சீதா..

"என்னம்மா??"

"அந்த தம்பிக்கும் போன் பண்ணி சொல்லிடுமா, நமக்கு ரொம்ப பெரிய உதவி பண்ணியிருக்காரு.. இப்போ அப்பா நம்ம கூட இருக்காருன்னா அதுக்கு காரணமே அந்த தம்பி தான்.." என்று செழியனை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார் சீதா..

இவ்வளவு நேரம் செழியன் பற்றிய நினைவுகளை ஒதுக்கி வைத்த மதிக்கு மீண்டும் அவன் நினைவுகள் ஒட்டிக் கொண்டது.. இருப்பினும் நேரம் போவதை உணர்ந்தவள், "சரிம்மா நான் சொல்லிடுறேன்.. அதுக்கு முதல்ல கோயிலுக்கு போயிட்டு வந்துடறேன்." என்றவள் அருகில் உள்ள கோயிலுக்கு சென்றாள்.

ஐயர் தீப ஆராதனை காட்ட கண்களை மூடிய மதி, தந்தையின் உடல் நிலை சரியாக வேண்டும் என்று பிரார்த்தித்தவள், தன் மனதில் உள்ள குழப்பங்களை எல்லாம் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தாள்.

தன் வேண்டுதலை முடித்த மதி கண்களை திறக்க, அங்கு கோயில் மண்டபத் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த செழியன் தெரிந்தான்..

"இவரு இங்க என்ன பண்ணுறாரு??" என யோசித்தவள், "அருகில் செல்லலாமா?? வேண்டாமா??" என மனதுக்குள் கேள்வி எழுப்ப, அவள் கால்கள் தானாக அவனை நோக்கி நடந்தன.

மதியை பார்த்த செழியன், "நீ இங்க என்ன பண்ணுற??"

"அப்பாக்கு சரியானா கோயில்ல விளக்கு போடறேன்னு வேண்டியிருந்தேன், அதனால தான் வந்தேன்." என்றாள் அமைதியாக..

"அங்கிள் கண்ணு முழிச்சிட்டாரா?? இப்போ எல்லாம் ஓகே தானே??" என்று ரவியை பற்றி விசாரித்தானே தவிர மறந்தும் அவன் மதியிடம் கேட்ட அவ்விடயத்தை பற்றி மட்டும் கேட்கவில்லை.

"யாஹ் நௌ எவ்ரிதிங்க் பைன்.. தேங்க் யூ ஸோ மச் பிகாஸ் உங்களால தான் இப்போ எங்க அப்பா எங்களுக்கு திருப்பி கிடைச்சிருக்காரு."

"எத்தனை வாட்டி தான் அதையே திரும்பத் திரும்ப சொல்லுவ, லீவ் இட்.." என்ற செழியன் வேறு எதுவும் பேசாது அங்கிருந்த செல்ல.,

"ஒரு நிமிஷம்.." என்று அவனை தடுத்தாள் மதி..

"என்ன??" என்று அவன் பார்வையாலேயே வினவ,

"நீங்க பேசின விஷயத்துக்கு எனக்கு சம்மதம்..? என்றாள் மொட்டையக..

"எத பத்தி நீ சொல்ற??"

"அது தான் நீங்க நைட் சொன்னிங்களே அக்ரீமெண்ட் மேரேஜ் பத்தி, அதுல தான் எனக்கு சம்மதம்.."என்றாள் தயங்கிபடி..

"ஹேய்!! என்ன சொல்ற?? உண்மையாவா சொல்ற.."

"ஆமா உங்களை கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம்.." என்றாள் அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்தபடி.,

"நீ நல்லா யோசிச்சு தான் சொல்றியா?? இல்ல நான் கேட்டதுக்காக சொல்றியா??"

"இல்ல, நான் நல்லா யோசிச்சு தான் சொல்லுறேன்.. ஆனா ஒரு விஷயம் இது எந்தக் காரணத்தை கொண்டும் எங்க அம்மா அப்பாக்கு தெரியக் கூடாது.."

சிறிது நிமிடம் மௌனம் காத்தவன், "ஓகே.. நான் திரும்பவும் கேட்குறேன், இதுல உனக்கு சம்மதம் தானே??" என்க அவள், "ஆமாம்.." என தலை ஆட்டினாள்.

"ரொம்ப தேங்க்ஸ், நான் உனக்கு பண்ணினத விட நீ எனக்கு பண்ண போற இந்த ஹெல்ப் ரொம்ப பெருசு.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.." என்றவனை அமைதியாக பார்த்தவள், "நீங்க பண்ணின உதவியினால தான் இப்போ என்னோட அப்பா என் கூட இருக்காரு.. ஸோ தேங்க்ஸ் எல்லாம் எதுவும் வேணாம்.. உதவிக்கு உதவியா இருக்கட்டும்.." என்றாள் மனதில் உள்ள வலிகளை மறைத்தபடி..

"ஓகே மதி, இதுக்கு அப்பறம் என்ன பண்ணனுமோ அத நான் பாத்துக்குறேன்.. என்னோட வீட்டுல இத பத்தி பேசிட்டு உங்க வீட்ல வந்து பேசுறேன்.." என்ற செழியனுக்கு படபடப்பாக இருந்தது.. அவள் முகத்தை பார்க்க அவனுக்கு ஏதோ சங்கடமாகவே இருந்தது.

அதை புரிந்து கொண்ட மதி, அந்த சூழ்நிலையை தவிர்க்கும் விதமாக, "எனக்கு லேட் ஆகுது, நான் கிளம்புறேன்.." என்று திரும்பி நடந்தவள் கண்களிலிருந்து வழியும் நீரை துடைத்துக் கொண்டாள்.

செழியனுக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. ஒரு பக்கம் தன் சுயநலத்திற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கை பணயமாவதை எண்ணி குற்ற உணர்வு மேலிட, இன்னோரு பக்கம் தாயை ஒருவாறு சமாளித்து விடலாம் என திருப்தியாகவும் இருந்தது.

∞∞∞∞∞∞∞∞∞∞

பறவைகள் அனைத்தும் வீடு திரும்பும் அந்த மாலை வேளையில் தமது அன்றைய நாளுக்கான பணிகளை பூர்த்தி செய்த மனிதர்களும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்க, சாலையிலோ வாகன நெரிசல் அளவுக்கு அதிகமாக இருக்கவும் அதிலிருந்து ஒரு வாறு தப்பித்து வீடு வந்து சேர்ந்தான் செழியன்..

"சக்தி, செழியன் ஏதாவது போன் பண்ணினானா?? நேற்று காலையில வீட்டுல இருந்து கிளம்பினவனுக்கு இன்னும் வீட்டுக்கு வந்து சேர தோணலையா??" என்று கார்டன் ஏரியாவில் உலாவிக் கொண்டிருந்த சக்தியிடம் கேட்டார் கங்கா..

"அம்மா நான் தான் காலையிலேயே சொன்னேனே, சகோவுக்கு தெரிஞ்சவங்க யாரோ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காங்களாம்.. அவங்க கூட இருக்கேன்னு, சிவா கிட்ட எங்களுக்கு இன்பார்ம் பண்ண சொல்லியிருந்தான்னு.."

"ஆமா சக்தி, என்ன தான் தெரிஞ்சவங்களா இருந்தாலும் ஒரு நாள் பூரா வீட்டுக்கு வர முடியாத அளவுக்கு என்ன பண்ணிட்டு இருக்கான்."

"நீங்க டென்ஷன் ஆகாதீங்கமா, தெரிஞ்சவங்களுக்கு உதவி பண்ண தானே போய் இருக்கான். வந்துடுவான்மா.." என்கவும் மெயின் கேட்டை திறந்து கொண்டு கார் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"சக்தி," அம்மா இங்க பாரு, நான் தான் சொன்னேன்ல சகோ வந்துடுவான்னு இதோ வந்துட்டான் பாரு." என்றாள்.

காரில் இருந்து இறங்கிய செழியன், தாயையும் சகோதரியையும் கண்டு அவர்கள் அருகில் செல்ல, கங்காவோ அவனிடம் எதுவும் பேசாது அமைதியாக நின்றார்.

"சகோ, யாருக்கு என்னாச்சு?? யாரா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க??" என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனாள்..

"எனக்கு ரொம்ப வேண்டப் பட்டவங்களுக்கு உடம்பு சரியில்லடா, அதனால நான் நிற்க வேண்டியதா போச்சு.."

"இப்போ எப்படி இருக்காங்க சகோ.."

"ஆபரேஷன் முடிஞ்சிது சக்தி நௌ ஹீ இஸ் பைன்.." என்று கங்காவை பார்க்க அவர் செழியனை பார்ப்பதை தவிர்த்தார்.

இதை புரிந்து கொண்டவன், "அம்மா.." என்க., அவரிடம் எந்த பதிலும் இல்லை.

"சக்தி, ஏன் இப்போ அம்மா பேசாம இருக்காங்க. நான் தான் என்ன நடந்ததுன்னு சொல்லிட்டேனே.." என்று செழியன் சக்தியிடம் கூற, கங்கா சக்தியை பார்த்து, "சக்திமா, இன்னையோட நான் கொடுத்த டைம் முடிஞ்சி போச்சு.. அவன் என்ன முடிவு எடுத்து இருக்கான்னு கேட்டு சொல்லு.." என்கவும் சக்தி பதட்டத்துடன் செழியனின் முகத்தை பார்க்க., அவன் கண்களாலேயே தங்கைக்கு சமாதானம் கூறினான்.

"அம்மா, நீங்க இத பத்தி சக்தி கிட்ட தான் கேட்கணும்னு இல்ல.. நானே அத பத்தி தான் பேசப் போறேன்."

கங்கா கேள்வியாய் செழியனை நோக்கவும், அவன் கூலாக, "நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்மா.. கல்யாணம்னு பண்ணினால் அவளை மட்டும் தான் கட்டிப்பேன்." என்று கூற இதை எதிர் பாராத தாயும் மகளும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.



தொடரும்...
 
Top