• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 1

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 01

Writer : Hafa


உயர்ந்த தொடர்மாடிக் குடியிருப்புகளும்., வானுயர்ந்த நவீன கட்டடங்களும் வரிசையாக காணப்பட்ட அந்த தெருவில் ஒரு சிறிய கிராமத்தையே அந்த ஒரு வீட்டிற்குள் அடக்கி விடலாம் எனும் அளவிற்கு மாபெரும் அரண்மனை போல் காணப்பட்டது அந்த வீடு..

என்ன தான் வீடு வெளியில் இவ்வளவு விசாலமாய் காணப்பட்டாலும் வெளியில் இருக்கும் பிரமாண்டம் உள்ளே இல்லை எனும் படியாக தன் வீட்டு உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான் நம் கதையின் நாயகன்.

சராசரி ஆண்களை காட்டிலும் சற்று கூடிய உயரம், எந்த பெண் பார்த்தாலும் தனக்கு இவன் கணவனாக அமைய மாட்டானா என ஏங்க வைக்கும் நல்ல நிறைத்தையும், கம்பீரத்துடனான ஆண்மையையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் மாயவன்.

தான் நினைத்ததை நடத்தி முடிக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் அளவுக்கு ஆற்றலும், அளவுக்கு அதிகமான பிடிவாத குணத்தையும் கொண்டவன். பந்தா பகட்டு இல்லாவிடினும் திமிரை அளவுக்கு அதிகமாக கொண்டவனிவன். பெண் எனும் வார்த்தையை கேட்டாலே எரிமலையாய் சீறிப் பாய்வான்.

பால்ய வயதிலேயே தந்தையை இழந்தவனுக்கு தாயும் தங்கையுமே சகலமும் ஆகிப் போனார்கள். தந்தையின் இறப்பின் பிற்பாடு அவர் பிஸ்னஸை கையில் எடுத்தவனின் கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இன்று தென்னிந்தியாவிலேயே நம்பர் ஒன் நிறுவனமாக முன்னேற்றி இருக்கிறான் என்றால் மிகையாகாது.

∞∞∞∞∞∞∞∞∞∞

தனக்கு ஏற்றவாரு வடிவமைத்திருந்த உடற்பயிற்சி கூடத்தில் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு தன் மனதுக்கு பிடித்தமான வெண்மதி வெண்மதியே நில்லு.. என்ற பாடலை ஒலிக்க விட்டபடியே த்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தான் செழியன் என்கின்ற இளஞ்செழியன்.

"சகோ, சகோ.. எங்க இன்னுமே தூங்கிட்டு இருக்கியா??" என்று குரல் எழுப்பியபடி வந்த சக்திக்கு வெறும் அறையே அவளை வரவேற்றது. "அட அதுக்குள்ள எந்திரிச்சி உன்னோட ஒர்க்அவுட்ட ஸ்டார்ட் பண்ணிட்டியா?? இரு அங்கையே வர்றேன்." என செழியனின் அருகே சென்று பார்க்க அவனோ கண்களை மூடி பாடலில் லயித்திருந்தான். மெதுவாக அவன் காதில் மாட்டியிருந்த ஒரு பக்க ஹெட்போனை கழற்றி தன் காதில் வைக்க அவள் கண்கள் அவளை அறியாமல் நீரை வார்த்தது.

மீண்டும் அதனை செழியனின் காதில் மாட்டியவள், "இன்னும் எத்தனை நாளைக்கு நீ உன்ன ஏமாத்திட்டு போனவளையே நினைச்சிட்டு இருக்க போற. சீக்கிரமே உன்னோட கடந்த காலத்தை மறக்க வைக்கிற மாதிரி ஒரு தேவதைய அந்த கடவுள் தான் கண்ணுல காட்டணும்." என தன் சகோதரனுக்காக பிரார்த்தித்து கொண்டவள்., அவசர அவசரமாக கண்ணை துடைத்துக் கொண்டு.,

"சகோ, கனவு கண்டது போதும் ப்ரெசன்ட்டுக்கு வாங்க." என்று அவன் அணிந்திருந்த ஹெட்போனை கழட்ட, மெதுவாக கண்ணை திறந்தான் செழியன்.

சக்தி, "என்ன சகோ, ரன்னிங் பண்ணிட்டே தூங்குற. எங்க கத்துகிட்ட இந்த வித்தையை."

"அதுவா, நம்ம வளசரவாக்கம் ஏரியால இதுக்குன்னு ஸ்பெஷல் கிளாஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க குட்டி. நெக்ஸ்ட் வீக்ல இருந்து உன்னையும் ஜாயின் பண்ணி விடுறேன் ஓகேயா.??" என்றவனை முறைத்தவள்.,

"என்ன பார்த்தால் உனக்கு என்ன நக்கலா இருக்கா சகோ, ரொம்ப தான் கலாய்க்குற."

"பின்ன நீ கேட்ட கேள்விக்கு என்ன பண்ணுவாங்கலாம். சாங் கேட்டுட்டு எக்ஸசைஸ் பண்ணுறேன்னு தெரியுதுல. அப்பறம் என்ன கேள்வி??" என்க, "அதெல்லாம் ஜஸ்ட் பா(f)ர் ப(f)ன் சகோ. என்ஜோய் கரோ." என்றபடி அவன் நெற்றியில் பாய்ந்து முட்டிக் கொண்டவள் "சகோ சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன் பாரு. உன்ன மீட் பண்ணுறதுக்காக நம்ம பீ.ஏ வந்திருக்காரு. என்ன பண்ணட்டும்."

"என்னோட ஒர்க்அவுட் இன்னும் முடியலடா, நீ இங்க அனுப்பி விடு. நான் பேசிக்கிறேன்." என்று தன் வேலையை தொடர்ந்தான்.

∞∞∞∞∞∞∞∞∞∞

தனது அறைக்கு வந்த சக்திக்கோ மனதெல்லாம் கணமாகியது. சுவரில் மாலையிட்டு இருந்த தந்தையின் புகைப்படத்தின் முன் கைகளை கூப்பியபடி நின்று.,

"அப்பா நீங்க இப்போ எங்க பக்கத்துல இல்லனாலும் எங்க இருந்தாலும் எங்களை தான் பார்த்துட்டு இருப்பிங்கனு தெரியும். எத்தனை நாளைக்கு தான்ப்பா சகோ இப்படியே அந்த நான்சென்ஸ நெனச்சி நீ பீல் பண்ணிட்டு இருக்க போறான். என்ன தான் என் முன்னாடியும் அம்மா முன்னாடியும் அவன் வலிகளை மறைச்சாலும் அவனோட மனசு எவ்வளவு வலிகளை சுமந்துட்டு இருக்குதுன்னு எங்களுக்கு தெரியும்ப்பா. சீக்கிரமாவே அவனோட கஷ்டம் எல்லாம் அவனை விட்டு நீங்கிடணும்."என மனதார வேண்டிக்கொண்டவள் திரும்ப அங்கே நின்று கொண்டிருந்தார் செழியன் மற்றும் சக்தியின் தாய் கங்கா.

தாயை அங்கு எதிர்பார்க்காதவள், "அம்மா நீங்க இங்க என்ன பண்றிங்க??" என்க.,

"நான் பண்றது இருக்கட்டும், நீ அப்பா போட்டோ முன்னாடி நின்னு என்ன பண்ணிட்டு இருக்குற??"

"நல்ல வேலை அம்மா நாம அப்பா கூட பேசின எதையும் கேட்கல போல." என மனதுக்குள் நினைத்துக் கொண்டவள்., "அது ஒன்னும் இல்லமா, அப்பா போட்டோக்கு மாலைய சேன்ஞ் பண்ணிட்டு இருந்தேன். ஆமா நீங்க இங்க என்ன பண்றீங்கமா "

"நல்லவேளை இப்பயாச்சும் கேட்கனும்னு தோணிச்சே.!!"

"என்னது இப்போ கேட்கிறேனா?? ஏன்மா மனசாட்சி இல்லாம பேசுற?? நீ வந்ததுமே இங்க என்ன பன்றேனான்னு கேட்டேனா இல்லையா?? நீ தான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு கேள்வி கேட்டுட்டு இருக்க?? இப்போவாச்சும் சொல்லுமா??"

"சிவா மார்னிங்ல இருந்து செழியனுக்கும் உனக்கும் கால் பண்ணிட்டு இருக்கான் போல, நீங்க ரெண்டு பேருமே ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டுறீங்கன்னு எனக்கு கால் பண்ணி இருந்தான். அத தான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்."

"சகோ, ஒர்க்அவுட்ல இருக்கான்மா, கால் வந்தத பார்த்திருக்க மாட்டான். நான் என்னனு பார்க்கிறேன். நீ போய் ரெஸ்ட் எடு."என்று சிவாவிற்கு அழைப்பை ஏற்படுத்த, இளசுகள் மனம் விட்டு பேசிக் கொள்ளட்டும் என அவ்விடத்தை விட்டு அகன்றார் கங்கா.

சிவா நம் நாயகன் செழியனின் ஆருயிர் தோழன் மட்டுமல்ல, சக்திக்கு வருங்கால கணவனாக வரப்போகின்றவனும் கூட..

சிவாவிற்கு சக்தி ஏற்படுத்திய அழைப்பு ஏற்கப்பட..,

"ஹேய் அம்மு, எங்க காணாம போயிட்டீங்க அண்ணனும் தங்கச்சியும்?? உங்க ரெண்டு பேருக்கும் கால் பண்ணியே நான் டையர்ட் ஆகிட்டேன்." என்றதற்கு மறுமுனையில் பதிலேதும் இல்லாதிருக்க..

"அம்மு, என்ன கால் பண்ணிட்டு சைலன்ட்டா இருக்க?? நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா??"

"அதெல்லாம் இல்லப்பா, நான் வேற ஒரு விஷயம் பத்தி திங்க் பண்ணிட்டு இருந்தேன்."

"அதென்ன உன்னையே மறந்திருக்குற அளவுக்கு டீப் திங்கிங்?? அடியேன் அதை அறிந்து கொள்ளலாமா??"

"எல்லாமே சகோவ பத்தி தான்பா."

"செழியன பத்தியா?? அப்படி என்ன விஷயம்."

"சகோ இப்பயும் ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்கான் சிவா. என்ன தான் வெளியில றகர்டா இருந்தாலும் அவனோட மனசுல இருக்குற காயங்கள் இன்னும் அப்படியே தான் இருக்கு."

"நானும் இது பத்தி நிறைய வாட்டி செழியன் கிட்ட பேசிட்டேன். அவன் எதையும் கேட்க மாட்டேங்குறானே. ஆன்ட்டிய நினைக்கும் போது தான் அம்மு ரொம்ப கவலையா இருக்கு."

"ஆமாப்பா, இப்போ கூட நான் அப்பா போட்டோ முன்னாடி நின்னு சகோவ பத்தி பிரே பண்ணிட்டு இருக்கும் போது அம்மா உள்ள வந்துட்டாங்க. மை குட்நஸ் அவங்க எதையுமே கேட்கல."

"இப்போ கேட்கலனாலும் அவங்களுக்கு தான் எல்லாமே தெரியுமேடா. ஆன்ட்டிக்கு கூட அவங்க வெளியில எதையும் காட்டிக்கலனாலும் செழியன பத்தின கவலை இருக்க தானே செய்யும்."

"நாங்க தான் சிவா சகோக்கு ஒரு நல்ல லைப அமைச்சு குடுக்கணும். அப்போ தான் அம்மா கூட ஹாப்பியா பீல் பண்ணுவாங்க. இதுக்கு நீங்க எனக்கு சப்போர்ட்டா இருப்பிங்களா சிவா."

"என்னடா அம்மு இப்படி கேட்டுட்டே, உனக்கு வேணா அவன் அண்ணனா இருக்கலாம். எனக்கு சின்ன வயசுல இருந்தே அவன் தான் பெ(B)ஸ்ட் பிரண்ட். என்னோட நண்பனுக்காக நான் எதை வேணும்னாலும் பண்ண ரெடியா இருக்கேன். இன்னொரு முக்கியமான விஷயம்டா நீயும் இதுக்கு சம்மதிப்பேன்னு நினைக்கிறேன்." என்று நிறுத்திக் கொள்ள.,

"சொல்லுங்க சிவா, என்ன விஷயம்??"

"செழியனுக்கு ஒரு நல்ல லைப் கிடைச்ச அப்புறமா நாம கல்யாணம் பண்ணிக்கலாம் அம்மு, இதுல உனக்கு சம்மதமா??" என்றவனை எண்ணி சக்திக்கோ உள்ளமெல்லாம் பூரித்துப் போனது. தன்னை போல தன் குடும்பத்தையும் நேசிக்கும் ஒருவன் தன் துணைவனாக போவதை எண்ணி.

"ஹேய் அம்மு, எங்க சத்ததையே காணும்??லைன்ல இருக்கியா??"

"இதோ இருக்கேன், ஐ அம் ஸோ லக்கி டு ஹேவ் யூ சிவா. எத்தனை பேருக்கு இப்படி லைப் பார்ட்னர் அமையும்னு தெரியல. பட் ஐ அம் ஸோ லக்கின்னு மட்டும் தெரியுது. ஐ லவ் யூப்பா."

"ஐ டூ லவ் யூ அம்மு, நான் தான் அம்மு ரொம்ப லக்கி பிகாஸ் உன்ன போல ஒரு லைப் பார்ட்னரும் உன்னோட சகோவ போல ஒரு உயிர் நண்பனும் இந்த அனாதைக்கு கிடைச்சிருக்கீங்களே."

"சிவா எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் உங்கள அனாதைன்னு சொல்ல வேணாம்னு. அகைன் இப்படி சொன்னிங்க நடக்குறதே வேற."

"ஓகே ஓகே அம்மு ஒரு ப்(f)லொவ்ல சொல்லிட்டேன், இனி இந்த மாதிரி தப்பு நடக்காது." என்றவன் அலைபேசியிலேயே முத்தமொன்றை பறக்க விட பேதையவள் கன்னங்களோ வெட்கிச் சிவந்து போனது.

"என்னடா அந்த சைட் சத்ததையே காணும். ஒரு வேல மேடம் வெட்க படுறிங்களோ??"

"ஹேய் ஹேய் ரொம்ப எஸ்பக்ட் பண்ணாதீங்க, வெட்கமெல்லாம் ஒன்னும் இல்ல. வேற ஏதோ திங்க் பண்ணிட்டு இருந்தேன் அவ்ளோ தான்."

"அப்படியா மேடம், சரிங்க மேடம். நம்பிட்டேன்."

"சிவா.!! போதும் போதும். ஆபீஸுக்கு டைம் ஆச்சு கிளம்புங்க."

"அட ஆமா அம்மு, செழியன் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி நான் போய் ஆகணும், பை அம்மு. லவ் யூ." என சிவா போனை கட் செய்ய சக்தியோ தன்னவனை எண்ணி அகமகிழ்ந்தாள்.

(வாசகர்கள் கருத்துக்களைத் தளத்தில் பதியவும். எழுத்தாளர் முகநூலில் இல்லாத காரணத்தால் உங்களது கருத்துரைகளைக் காண இயலாது. எனவே தளத்தில் கருத்துகளைப் பகிர்ந்து ஊக்கப்பட்டுத்துங்க மக்களே!)

தொடரும்...
 
Last edited by a moderator:
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
செழியன் நம்ம ஹீரோ அவரு லைஃப் என்ன நடந்தது இருக்கும் சக்தி என் feel பண்ற சிவ நம்ம ஹீரோ ப்ரெண்ட் and சக்தி future husband செம்ம💕
கண்டிப்பா நம்ம ஹீரோ sir correct ya ஒரு பெண் வருவ 🤩🤩🤩❤️❤️
 
Top