• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 28

Administrator
Staff member
Messages
672
Reaction score
1,032
Points
93
தவம் 28:

ஏதோ ஏதோ

ஆனந்த ராகம்
உன்னால் தானே
உண்டானது…


“உனக்கு அந்த மறந்து போன ரெண்டு வருஷம் கொஞ்சம் கூட ஞாபகம் வரலையாடா?” என்று நரேனது குரல் செவியில் விழ,

கையில் சில கோப்புகளுடன் ஜீவாவின் அறை வாசலில் நின்றவளது நடை தடைப்பட்டது.

“ம்ஹூம் இல்லையேடா” என்று ஜீவா தலையசைக்க,

நரேனிடத்தில் பெரிய அமைதி குடி கொண்டது.

“ரெண்டு வருஷத்துல என்ன நடந்துச்சு நம்ம எங்க படிச்சோம்?” என்று ஜீவா நரேனது முகம் காண,

“உனக்கா நினைவு வந்ததாதான். நாங்களா எதையும் சொல்ல கூடாதுனு டாக்டர் சொல்லிட்டாங்க” என்று நரேன் கூற,

“இப்போ நான் நல்லாதானே இருக்கேன். ஒன்னும் ஆகாது சொல்லு” ஜீவா வற்புறுத்தினான். இதை கேட்ட ஜானவியின் இதயம் முரசு கொட்ட துவங்கியது.

அமைதியாக அவனது முகம் நோக்கியவனுக்கு நடந்ததை கூறிவிடலாமா? என்று ஒரு கணம் தோன்றியது.

ஆனால் ஜீவாவிடம் நடந்தவற்றை கூற மாட்டேன் என்று ஜானவிக்கு வாக்கு கொடுத்தது நினைவுக்கு வந்தது.

தன்னை இப்படி சூழ்நிலையில் கட்டி போட்டிருக்கும் தங்கையை எண்ணி பெருமூச்சுவிட்டவன், “வேணாம் உனக்கு ஞாபகம் வர்றப்போ தெரிஞ்சுக்க” என்றவன்,

“எங்கேஜ்மென்ட் ஒர்க் எல்லாம் ஓவரா?” என்று கேட்க,

“ஹ்ம்ம் அதெல்லாம் அப்பா பாத்துப்பாங்க டா” என்றான்.

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவன்,

“நான் உன்கிட்ட ஒன்னு கேட்டா உண்மைய சொல்லுவியா?” என்று வினவ,

“என்னடா” என்று முகம் பார்த்தான்‌‌.

“இந்த டூ இயர்ஸ்ல உனக்கு யார்மேலயாவது லவ் வந்திருந்தா. அது உனக்கு மறந்திருந்தா. இப்போ அது தெரிய வந்தா என்ன செய்வ?” என்று கேள்வியாக பார்த்தான்.

சடுதியில் ஜீவாவிடத்தில் புன்னகை முகிழ்ந்தது.

“எங்க இருந்துடா இப்படிலாம் யோசிக்கிற?” என்று வினவ,

“நீ பர்ஸ்ட் என் கொஸ்டீனுக்கு பதில் சொல்லு” என்று நரேன் அதிலே நிற்க,

“அதுக்கெல்லாம் சான்ஸே இல்லைடா. உனக்கு என்னை பத்தி தெரியும்ல என் பேமிலி எனக்கு ரொம்ப முக்கியம். அவங்களுக்கு பிடிக்காததை நான் எப்பவும் செய்ய மாட்டேன்” என்று ஜீவா மொழிய,

“இந்த காதல் எல்லாம் நம்மை மீறுன ஒன்னுடா” என்று நரேன் கூறினான்.

“இருக்கலாம். எனக்கு செல்ஃப் கன்ட்ரோல் அதிகம். நான் லவ் பண்ணனும்னு நினைச்சிருந்தா யூ.ஜிலயே எனக்கு நாலஞ்சு ப்ரோபோசல் வந்தது அதுல ஒன்னை அக்சப்ட் பண்ணியிருக்க மாட்டேனா?” என்று ஜீவா வினவ,

“எப்பவும் மனசு கட்டுப்பாட்டோட இருக்காது டா” என்று நரேன் எடுத்து கூற,

“சேன்ஸ்லெஸ்” என்று ஜீவா மறுத்தான்.

“ஒருவேளை யாராவது நீ அவங்களை காதலிச்சேன்னு வந்து நின்னா?” என்று தீவர பாவத்துடன் கேட்க,

“கண்டிப்பா ஃபேக்கா தான் இருப்பாங்க. மே பீ என்னோட பேக் ரவுண்ட் பாத்து பொய் சொல்றவங்களா தான் இருக்கணும்” என்று உறுதியாக கூறினான்.

இதனை வெளியில் இருந்து கேட்ட ஜானவிக்கு இதயத்தில் குருதி வழிந்தது.

இதற்கு மேல் இவனிடத்தில் எதுவும் பேசி பயனில்லை என்று நரேன் நினைத்து கொண்டான்.

“நீ ஏன் இதை இவ்ளோ சீரியசா கேக்குற? அப்படி எதுவும் நடந்துச்சா?” என்று ஜீவா நம்பிக்கையற்று கேட்க,

“ம்ஹூம் இல்லை சும்மா தான் கேட்டேன்” என்று மழுப்பிவிட்டான்.

“இன்கேஸ் ஒருவேளை எனக்கு யார்மேலயாவது பீலிங்க்ஸ் வந்திருந்தா நான் கண்டிப்பா லாவண்யாவ மிஸ் பண்ணி இருப்பேன். அவ ரொம்ப நல்ல பொண்ணு. என் மேல அவ்ளோ அன்பா இருக்கா. அவளுக்கு சின்ன வயசுல இருந்தே என்னை பிடிக்குமாம்” என்றவனது குரலில் அவ்வளவு மென்மை.

அது லாவண்யாவிடத்தில் அவன் கொண்ட நேசத்தை உணர்த்தியது.

“தாங்க் காட் எனக்கு அந்த மாதிரி எதுவும் நடக்கலை. என் லைஃப்ல எத்தனை பேர் வந்தாலும் லாவி இடத்தை பில் பண்ண முடியாது” என்று புன்னகையுடன் கூற,

இங்கே துக்கம் தொண்டையடைக்க நின்று இருந்தவள் அதற்கு மேல் தாளாது, “மே ஐ கம்மின் சார்” என்று கேட்டிருந்தாள்.

ஜீவா, “எஸ் கம் இன்” என்று அனுமதி கொடுக்க,

தங்கையின் குரலை கேட்ட நரேன் அதிர்ச்சி அடைந்தான். எப்போது வந்தாள் என்று தெரியவில்லை.‌ ஒருவேளை பேசியதை கேட்டிருப்பாளோ என்று எண்ணியபடி அவள் முகத்தை உற்று நோக்கினான்.

அது எப்போதும் போல சாதாரணமாக தான் இருந்தது.

“இந்த பில்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டு சைன் பண்ணிங்கன்னா பேமெண்ட் கொடுத்துடலாம்” என்று அவனிடத்தில் ஜானவி நீட்ட,

“ஓகே நான் செக் பண்ணிட்டு உங்களை கூப்பிட்றேன்” என்று ஜீவா மொழிய,

“சரிங்க சார்” என்றவள் நரேனை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல,

அதிலே அவள் அனைத்தையும் கேட்டுவிட்டதை உணர்ந்தவனது மனது பாரமாகி போனது.

ஏன் இவளுக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள். கடவுளுக்கு கண் இல்லையா? என்று மனதிற்குள் புலம்பினான்.

முகம் மாறாதிருக்க மிகவும் சிரமப்பட்டவன், “சரிடா நான் கிளம்புறேன்” என்று கூற,

“என்ன அவசரம் இரு. எதுவுமே சாப்பிடாம போற” என்ற ஜீவா அவனது பதிலை எதிர்பாராது அலைபேசியை எடுத்து பழச்சாறு கூறினான்.

“ஏன்டா தீபாவையும் அழைச்சிட்டு வந்திருக்கலாம்ல” என்று ஜீவா கேட்க,

“பைவ் மந்த்ஸ் ஆகாம டாக்டர் லாங் ட்ராவல் பண்ண கூடாதுனு சொல்லி இருக்காங்க” என்று நரேன் மொழிய,

“ஓ… ஓகே அப்போ கல்யாணத்துக்கு கூட்டிட்டு வரணும். லாவி கேட்டா” என்று கூற,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தான்.

“ஏன் ஒரு மாதிரி இருக்க டா” என்று ஜீவா கேட்டுவிட,

“ஒன்னுமில்லை டா” என்றவன்,

“ஸ்டாப்க்கு இன்விடேஷன் இருக்கா?” என்று வினவ,

“இல்லைடா. உன் சிஸ்டர மட்டும் கூப்பிட்டு இருக்கேன். லாவி
தான் கூப்பிட சொன்னா. மத்த ஸ்டாப்ஸ்க்கு மேரேஜ் முடிஞ்சதும் ஒரு ரிசப்ஷன் வைக்கணும்” என்றான்.

“ஹ்ம்ம்” என்று தலையசைத்து கேட்டு கொண்டான்.

“கேட்கணும்னு நினைச்சேன். உன் சிஸ்டர் ஹஸ்பண்ட் எங்க இருக்காரு?” என்று ஜீவா கேட்க,

‘இப்போது எதற்கு கேட்கிறான்?’ என்று நினைத்தவன் அதனை முகத்தில் தாங்கி பார்க்க,

“லாவி தான் அவளை பாத்திட்டு கேட்டா” என்று ஜீவா விளக்கம் அளித்தான்.

“அவ ஹஸ்பண்ட் பிரிஞ்சிட்டா” என்று கூற,

“ஓ… ஒரு பேபி இருக்குல?” என்றான்.

“ஹ்ம்ம் ஆமா” என்று நரேன் கூற,

“இப்படியே தனியாவே இருக்க போறாங்களா? செகெண்ட் மேரேஜ் பண்ணி வைக்கலாமே?” என்று ஜீவா வினவ,

நரேனுக்கும் சில நாட்களாக அது தோன்றியது. ஜீவாவிற்கு திருமணம் ஆகும் வரை அவள் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாள் என்று அறிந்தவன் ஜீவாவின் திருமணத்திற்காக காத்திருந்தான்.

“ஹ்ம்ம் எனக்கும் அந்த ஐடியா இருக்கு. பட் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். அவ இன்னும் அந்த ரிலேஷன்ஷிப்ல இருந்து வெளியே வரலை” என்று மொழிய,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்து கொண்டான்.

இங்கு தன்னறைக்கு வந்த ஜானவிக்கு அழுகை பொங்கியது. அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தின் அறையெங்கும் எதிரொலிக்க விழிகளை இறுக மூடி திறந்தாள்.

இனி அவன் தன் வாழ்வில் இல்லை என்ற நிதர்சனத்தை ஏற்று கொள்ள மனது மறுத்தது.

மேஜையின் ஓரத்தை இறுக பற்றி கொண்டவளுக்கு கண்கள் கலங்கியது.

இது தான் உன்னுடைய விதி. அதனை ஏற்றுக் கொள்ள பழகிக்கொள். உனக்கு இந்த பிறவியில் இது தான் விதிக்கப்பட்டுள்ளது.

கணவன் குடும்பம் இதெல்லாம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். தனக்கு அது எதுவுமே இல்லை என்று தனக்கு தானே ஆறுதல் கூறி கொண்டாள்‌.

இங்கு ஜீவாவிடம் பேசிவிட்டு ஜானவியின் அறைக்கதவை திறந்து உள்ளே நுழைந்தவன் கண்டது அழுகையை அடக்கியதில் முகம் சிவந்து அமர்ந்திருந்த தங்கையை தான்.

அவளது கோலத்தை கண்டவனுக்கு சர்வமும் நடுங்கி போனது.

“ஜானு…” என்று பதறி அவளருகே செல்ல விழைய,

“வேணாம்ண்ணா நீ கிளம்பிடு. நீ பேசுனா நான் அழுதிடுவேன்” என்று முகம் பார்க்காது கூற,

“ஜானு நான் அவனுக்கு ஞாபகப்படுத்ததான் முயற்சி பண்ணேன்” என்று எடுத்து கூற,

“ப்ளீஸ்ண்ணா எனக்கு எந்த விளக்கமும் வேணாம்ண்ணா. ப்ளீஸ் லீவ் மீ அலோன்” என்று கணினியில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

நரேனுக்கு உண்மையாக என்ன ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை.

தன் எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாதென நினைத்தவன் அமைதியாக வெளியேறிவிட்டான்.

இங்கு ஜானவி விறுவிறுவென நடந்து சென்று கழிப்பறைக்குள் நுழைந்து முகத்தை நீரால் அடித்து கழுவினாள்.

நீரோடு சேர்ந்து கண்ணீரும் கரைந்து போனது.

இரண்டு நிமிடத்தில் தனது வேதனை முழுவதையும் கண்ணீரில் துடைத்தவள் நிர்மலமான முகத்துடன் வந்து வேலையை துவங்கினாள்.
பணி முடிந்து வீட்டிற்கு செல்ல அங்கு அவள் எதிர்பார்த்தது போலவே நரேன் தவிப்புடன் அமர்ந்து இருந்தான்.
தன்னால் இவரும் இவ்வளவு துன்பப்படுகிறாரே என்று எண்ணியபடி உள்ளே வர,

“அம்மா…” என்று ஓடி வந்து கட்டி கொண்டாள் மூன்றரை வயது ஜீவிதா.

“தங்கக்குட்டி” என்று மகளை தூக்கியவள் நரேன் அருகே அமர்ந்தாள்.

“ம்மா மாமா எனக்கு நிறைய சாக்லேட்ஸ் பொம்மை எல்லாம் வாங்கி கொடுத்து இருக்காங்க” என்று முகம் முழுவதும் சிரிப்புடன் கூற,

மகளின் மகிழ்ச்சி இவளுக்கும் தொற்றி கொண்டது.

“அப்படியா? எவ்ளோ சாக்லேட்ஸ்?”என்றவள் கேட்க,

“நிறையம்மா” என்று இரண்டு கைகளை விரித்து காண்பித்தாள்.

“எங்கே எடுத்துட்டு வா பாப்போம்” என்று ஜானவி கேட்க,

“ஹ்ம்ம்…” என்றுவிட்டு எழுந்து ஓடினாள்.

தங்களையே கவனித்து கொண்டிருந்த நரேனிடம், “ண்ணா நீ என்னை பத்தி கவலைப்பட்டுட்டே இருக்காத. எனக்கு என் பொண்ணு இருக்கா. அவளுக்கு நான் இருக்கேன். என் மொத்த வாழ்க்கையும் வாழ அவ ஒருத்தி போதும்” என்று புன்னகையுடன் கூற,

அதற்கு பின்னால் மறைந்திருந்த வலி வேதனை விரக்தி எல்லாம் அவனுக்கு புரிந்தது.

“அப்போ நான்?” என்று நரேன் கேள்வியாக நிறுத்த,

“உனக்கு தான் எங்க உலகத்துல பெரிய இடம். எனக்கு கூட பிறந்த அண்ணன் இருந்தா கூட எனக்கு இவ்ளோ செஞ்சிருக்க மாட்டாங்க. என் பொண்ணுக்கு உன் மடியில வச்சு தான் காது குத்தணும்” என்று அவனது தோளில் சாய,

இறுதி வரை இப்படியே இவளது வாழ்க்கை முடிந்து விடுமோ என்று அச்சம் பிறந்தது அவனுக்கு.

“ம்மா சாக்லேட்ஸ்…” என்று கத்தியபடி ஜீவி ஓடி வர,

அதனை கண்டவள், “ண்ணா எதுக்கு இவ்வளோ சாக்லேட்ஸ். கேவிட்டி வந்திடும்” என்று அவனை கேட்டவள் மகளிடம்,

“எல்லாத்தையும் இப்பவே சாப்பிட கூடாது தங்கம். அம்மா கொஞ்சம் கொஞ்சமா தர்றேன்” என்று குளிர்சாதன பெட்டியில் வைத்தாள்.

பிறகு முகம் கழுவி வந்து மகளுக்கு பால் ஆற்றி கொடுத்துவிட்டு இருவருக்கும் தேநீரை கொண்டு வந்தாள்.

நரேனிடம் ஒன்றை கொடுத்தவள், “ண்ணா டின்னருக்கு என்ன செய்யட்டும். உனக்கு பிடிச்ச பூரியும் வடகறியும் செய்யவா?” என்று கேட்க,

இவளால் எப்படி எதுவுமே நடக்காதது போல இருக்க முடிகிறது என்று நினைத்தவன் மௌனமாய் தலையசைத்தான்.

இரவுணவை முடித்துவிட்டு மூவரும் உறங்க செல்ல மகளை உறங்க வைத்தவளது கண்ணீரும் வேதனையும் இருட்டுக்குள் புதைந்து போனது.

மறுநாள் எழும் போது ஜீவாவின் நிச்சயத்தை எதிர்கொள்ளும் திடத்துடன் எழுந்து கொண்டாள்.

மகளை பள்ளியில் விட்டவள் நரேனுடன் நிச்சயம் நடக்கவிருந்த மண்டபத்திற்கு சென்றாள்.

நிச்சயமே திருமணம் அளவிற்கு கோலாகலமாக இருந்தது.

ஜீவானந்தம் வெட்ஸ் லாவண்யா என்ற பெயர்பலகை தான் அவர்களை வரவேற்றது.

நரேன் ஜானுவின் முகத்தை நொடிக்கொரு முறை காண, “அண்ணா நான் நல்லாதான் இருக்கேன். என்னையே பாத்திட்டு இருக்காம உன் ப்ரெண்ட்ட போய் பாரு” என்று கூறினாள்.

நரேன் ஒரு பெருமூச்சுடன் ஜீவாவை நோக்கி செல்ல இவள் காலியாக இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

பார்வை மேடையில் முகம் முழுவதும் சிரிப்புடனும் நேசத்துடனும் நின்றிருந்த லாவண்யா மற்றும் ஜீவாவிடம் இருந்தது.

கனவிலும் எண்ணியிருக்காத ஒன்று. இதயம் ஆயிரம் பாகங்களாக சிதறும் உணர்வு.

எல்லாவற்றுக்கும் தயாராக தான் வந்தாள். இருந்தும் சிரிப்புடன் ஜீவாவின் கையை பிடித்து நிற்கும் லாவண்யாவை கண்டதும் மனது கலங்கி தவித்தது.

ஒரு முறை விழி மூடி திறந்தவள் வதனத்தில் ஒரு புன்னகையை ஒட்ட வைத்து கொண்டாள்.

நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட்டதும் இருவரும் மகிழ்வுடன் மோதிரங்களை மாற்றி கொள்ள ஜானுவின் விழிகள் அதனை வெறித்தன.

பிறகு ஒவ்வொருவராக எழுந்து வாழ்த்து சொல்ல செல்ல அவளது பார்வை நரேனிடம் விழுந்தது.

அதனை கவனித்தவன் அவளருகே செல்ல, “ண்ணா நான் கிஃப்ட் கொடுத்துட்டு கிளம்புறேன்” என்று கூற,

எதுவும் கூறாது அமைதியாக தலையசைத்தான்.

ஆட்கள் வரிசையில் நிற்க தானும் நின்றவள் மேடை ஏறி சென்று, “கங்கிராசுலேஷன்ஸ் சார் அண்ட் மேம்” என்று வாழ்த்து தெரிவிக்க,
இருவரும் நன்றி கூறி வாழ்த்தை ஏற்று கொண்டனர்.

வாங்கி வந்த பரிசை
கொடுத்துவிட்டு கீழிறங்க முயற்சிக்க, “சாப்பிட்டு போங்க ஜானவி” என்று லாவண்யா கூறினாள்‌.

“சரிங்க மேம்” என்றவள் இறங்கி வந்து,

“நான் ஆபிஸ்க்கு கிளம்புறேண்ணா” என்க,

“நான் வந்து ட்ராப் பண்ணவா?” என்று அவளது நிலையை கருத்தில் கொண்டவன் கூற,

“வேணாம்ண்ணா எல்லா நேரமும் நீ கூட இருக்க முடியாது‌. இனி இதெல்லாம் நான் பழகிக்கணும். தினமும் பாக்க
வேண்டியது வரும்” என்று வறண்ட புன்னகையுடன் கூறியவள் வெளியே வந்து ஒரு ஆட்டோவில் விடுதியை நோக்கி புறப்பட்டாள்.

இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெளியேற அதனை துடைத்து கொண்டவளது மனக்கண்ணில் ஜீவா மற்றும் லாவண்யா மோதிரம் மாற்றியது நழுவி சென்றது…
 
Well-known member
Messages
570
Reaction score
420
Points
63
Janu oda vali rombavae athigam than endha janu oda kannu la kaneer vara koodathu nu jeeva nenachano avan ah yae innaiku ava athigam ah azhara nilamai aagidu thu thana la ipadi oruthi azhara apadi na ra thu kooda avanuku theriyala
 
Top