• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 27

Administrator
Staff member
Messages
672
Reaction score
1,048
Points
93
தவம் 27:

என்னைத்தான் அன்பே

மறந்தாயோ…?

ஜீவாவின் கேள்வியில் சர்வமும் ஒரு கணம் ஜானுவிற்கு ஆட்டம் கண்டது.

நரேன், “ஜீவா விளையாட்றியா?” என்று ஜானுவின் முகத்தை பார்த்துவிட்டு அச்சத்துடன் கேட்க,

“நான் எதுக்குடா விளையாட போறேன். நம்ம ஸ்கூல்ல உன் அக்காவும் நீயும் தான படிச்சிங்க?” என்று கூறிட,

“ஸ்கூலா?” என்ற நரேனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

இங்கு ஜானவிக்கு விழிகளில் நீர் கடகடவென நிறைந்தது.

நரேன் பதிலற்று ஜானவியை நோக்க, அவள் நடுங்கும் கரங்களை மறைக்க நரேனை அழுத்தி பிடித்து கொண்டாள்.

இருவரையும் கண்ட ஜீவா, “ஏன்டா இப்படி ஷாக் ஆகுற?” என்று வினவ,

நரேன், ‘ஒன்றுமில்லை’ எனும் விதமாக தலையை இடம் வலமாக அசைத்தான்.

ஜானு குனிந்து கண்ணீரை துடைத்து கொண்டாள்.

“கேக்கணும்னு நினைச்சேன் அக்கா எப்படி இருக்காங்க மேரேஜ் முடிஞ்சதா?” என்று வினவிட,

நரேனு அவனது கேள்வியில் தலை சுற்றுவது போல ஆனது.

இங்கு ஜானவியால் தன்னை அந்நிய பார்வை பார்ப்பவனது முகத்தை காண இயலவில்லை.

விறுவிறுவென எழுந்து வெளியே வந்துவிட்டாள்.

இரண்டு அறை தள்ளி நின்றவளுக்கு துடைக்க துடைக்க அழுகை பெருகியது.

இங்கு ஜீவா நரேனை கேள்வியாக பார்க்க, “அவளுக்கு ஹாஸ்பிடல் ஸ்மெல் ஒத்துக்காது” என்று சமாளித்தவனுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை.

“டீ வாங்கிட்டு வந்துட்டேன்” என்று ஜெய் உள்ளே வர,

“ஜெய் அம்மா அப்பாவ இருக்க சொல்ல வேண்டியது தான நீ ஸ்கூல் போகணும்ல?” என்று வினவிட,

“என்னது ஸ்கூலா?” என்ற ஜெய் கையிலிருந்த தேநீர் கோப்பையை கீழே போட்டிருந்தான்.

“நீ எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுற? இவனும் இப்படி தான் ரியாக்ட் பண்ணான்” என்று ஜீவா அறியாத பாவனையில் கேட்க,

ஜெய் அதிர்ந்து நரேனின் முகம் கண்டான். அவனும் அதே அதிர்வுடன் தான் இருந்தான்.

ஜெய், “அண்ணா இது என்ன இயர்னு தெரியுமா?” என்று வினவ,

“நான் என்ன கேட்டேன். நீ என்ன சொல்ற?” என்று ஜீவா கேட்க,

“நான் கேட்ட கொஸ்டீனுக்கு பதில் சொல்லு பர்ஸ்ட்” என்று ஜெய் மொழிந்தான்.

“தெரியும்” என்ற ஜீவா இரண்டு வருடங்களுக்கு முந்தைய வருடத்தை சொல்ல,

ஜெய்யும் நரேனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

ஜெய், “நான் போய் டாக்டரை அழைச்சிட்டு வர்றேன்” என்று ஓடி செல்ல,

“டேய் இங்க என்ன நடக்குது? எதுக்கு அவன் டாக்டரை கூப்பிட ஓட்றான்” என்று ஜீவா கோபத்துடன் வினா தொடுக்க,

நரேன், “இது டூ தவுசன்ட் பிப்டீன்” என்று அமைதியாக கூற,

“என்ன?” என்று அதிர்வது ஜீவாவின் முறையானது.

நரேன் தனது அலைபேசியை எடுத்து தேதியை காண்பிக்க ஜீவாவால் நம்ப முடியவில்லை.

இங்கு ஜானவியோ ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள்.

வருவோர் போவோர் எல்லாம் அவளை திரும்பி பார்த்தபடி சென்றனர்.

ஜெய் மருத்துவரை அழைத்து வர அவர் ஜீவாவை சோதனை செய்ய துவங்கினார்.

சிறிது நேரத்திலே ஜீவாவின் மொத்த குடும்பமும் அங்கே கூடிவிட்டது.

அவனை பரிசோதனை செய்த மருத்துவர், “அவருக்கு கடந்த இரண்டு வருஷமா நடந்தது எல்லாம் மறந்திருச்சு. இதுக்கு பேர் ரெட்ரோக்ரேட் அம்னீஷியா. இது ரொம்ப ரேர்ரா என்செபலைட்டிஸ் ரெக்கவர் ஆன பேஷண்ட்ஸ்க்கு வரும்” என்று கூற,

“இதுனால எந்த பிரச்சனையும் இல்லையே டாக்டர்?” என்று பரேமேஸ்வரி பதறி கேட்க,

“இதுல பயப்பட எதுவும் இல்லை. அவர் உடம்புல எந்த பிராப்ளமும் இல்லை” என்று மருத்துவர் கூறினார்.

“அவனுக்கு எப்போ அந்த டூ இயர்ஸ் ஞாபகம் வரும் டாக்டர்” என்று நரேன் வினவ,

“ஒன் வீக் ஆகலாம் ஒன் இயர் ஆகலாம் ஏன் சிலருக்கு கடைசி வரை ஞாபகம் வராமலே கூட போகலாம்” என்று மருத்துவர் பெரிய இடியை இறக்கினார்.

தங்கையின் நிலையை எண்ணி நொருங்கி போனவன், “அவங்களுக்கு நம்ம பழைச நினைவுப்படுத்த ட்ரை பண்ணலாமா டாக்டர்?” என்று கடவுளிடம் வேண்டியபடி கேட்க,

“நோ அந்த மாதிரி எதுவும் பண்ணிடாதீங்க. அவருக்கு வந்தது ப்ரைன் இன்ஃபெக்ஷன். ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணா உயிருக்கு ஆபத்தாகிடும்” என்று மொத்தமாக அவனை உடைத்திருந்தார்.

அதில் பதறிய லிங்கம், “அதை எதுக்கு ஞாபகப்படுத்திட்டு என் புள்ள நல்லா இருந்தா எனக்கு போதும். யாரும் இதை பத்தி எப்பவுமே அவன்கிட்ட பேச கூடாது” என்று முடித்திட,

இங்கு நரேன் வார்த்தைகளற்று வெளியெ வந்துவிட்டான்.

வந்தவன் கண்டது அநாதரவான தோற்றத்தில் அழுகையுடன் அமர்ந்திருந்த ஜானவியை தான்.

அதை கண்டதும் அவனுக்கும் விழிகள் கலங்கியது.

நரேனை பார்த்ததும், “அண்ணா என் ஜீவாக்கு என்னை ஞாபகம் இல்லையாண்ணா” என்ற கேவலுடன் அணைத்து கொள்ள,

“அழாத ஜானு” என்று தங்கை தானும் ஆதரவாக அணைத்து கொண்டான்.

“ஏன் ண்ணா அவன் என்னை பாத்து யாருன்னு கேட்டான்?” என்று கேவலை அடக்கி வினவ,

மருத்துவர் கூறியதை நரேன் சொல்ல,

“அப்போ என் ஜீவாக்கு எப்பவுமே என்னை ஞாபகம் வராதா?” என்று வேதனையை சுமந்து வினவினாள்.

எவ்வளவு மகிழ்ச்சியாக காலையில் கிளம்பினாள். இப்போது அழுகையில் முகம் சிவந்து சோர்ந்த தோற்றத்துடன் நிற்பவளை கண்டு நெஞ்சம் விம்மியது.

“இல்லைடா. அவனுக்கு கண்டிப்பா சீக்கிரமா ஞாபகம் வந்திடும்” என்று துக்கத்தை விழுங்கி அவளுக்கு ஆறுதல் கூற,

“ஆமா கண்டிப்பா வந்திடும். அதெப்படி வராம போகும். அவன் என்ன மறந்து போவனா? நான் தான அவனோட உலகம்” என்று அழுகையுடன் கேட்க,

அவள் குரலில் இருந்த ஏக்கம் காதல் நரேனை நிலைகுலைய செய்தது.

“எனக்கு மட்டும் ஏன் ண்ணா இப்படி நடக்குது? எனக்குனு வாழ்க்கையில இருந்த பிடிப்பு அவன் தான ண்ணா?” என்று நிமிர்ந்து நரேன் முகம் காண,

அவளது தலையை தன் தோளில் அழுத்தி கொண்டவனது கண்ணீர் ஜானுவின் தோளில் விழுந்தது.

அவனுக்குமே இதே கேள்வி தான். ஏன் இவளுக்கு மட்டும் இப்படி. ஏற்கனவே யாருமற்று தனியாக தானே வாழ்ந்து வந்தாள்.

அவளுக்கென விடிவெள்ளியாக வந்தவன் இப்போது வாழ்வை இருளாக்கி சென்றுவிட்டானே என்று வெதும்பினான்.

“ண்ணா என் ஜீவா என்னையும் எங்க காதலையும் மறக்க மாட்டான். நான் போய் அவன்கிட்ட பேசவாண்ணா?” என்று ஆவலாய் கேட்க,

“ம்ஹூம் அவனுக்கு எதையும் நம்ம நினைவுபடுத்தினா உயிருக்கே ஆபத்தாகிடும்” என்று கூற மொத்தமாய் நொறுங்கி போனாள்.

“சீக்கிரமா அவனுக்கு எல்லாம் ஞாபகம் வந்திடும்டா‌‌. நீ இதை நினைச்சு கவலைப்படாத. நான் உனக்கு டிக்கெட் போட்றேன்” என்று நரேன் கூற,

“என் ஜீவாவ விட்டு நான் எப்படி போவேன் போகமாட்டேன். அவனுக்கு எல்லாம் ஞாபகம் வந்தா என்னை தேடுவானே. நான் அவன் பக்கத்திலயே இருக்கேன்” என்று மறுக்க,

“ஜீவாக்கு அவனால உன் படிப்பு கெட்டதுனு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவான். வேணாம் நீ ஊருக்கு போ” என்று நரேன் எடுத்து கூற,

“ம்ஹூம் நான் படிப்பை இந்த ஊர்லயே கன்டினியூ பண்றேன்” என்று உறுதியாக கூறிவிட,

நரேன் தான் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று.

பிறகு நரேனே ஜானுவின் கல்லூரியில் பேசி அவளை சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்த்துவிட்டான்.

ஜானுவும் அன்றைய நாளில் இருந்து ஜீவாவின் அழைப்புக்காக காத்திருக்க துவங்கினாள்.

மாதங்கள் கடந்ததே தவிர ஜீவாவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

அப்போது தான் ஜானவி கருவுற்று இருக்கும் விடயம் தெரியவர நரேன் மற்றும் ஜானவி இருவரும் அதிர்ச்சியில் சமைந்துவிட்டனர்.

என்ன செய்வது ஏது செய்வது என எதுவும் புரியவில்லை.

பிறகு நரேன் ஜானுவின் எதிர்காலத்தை கொண்டு குழந்தையை கலைக்க கூற நான் உயிரோடிருக்கும் வரை அது நடக்காது என்று தீர்க்கமாக மறுத்துவிட்டாள் ஜானவி.

அதன் பின்னர் வேறு வழியின்றி நரேனும் ஒப்பு கொண்டான்.

கருவுற்று இருப்பவளை தனியாக விடாமல் தீபாவை சென்னையில் பணியில் சேர கூறினான்.

தீபா தான் ஜீவி பிறந்தது வரை உடனிருந்து பார்த்து கொண்டாள்.

ஜீவி பிறக்கும் கணம் தான் ஜானவி ஜீவாவை எண்ணி வெகுவாய் துடித்தாள்.

அவளை தேற்றுவதே நரேனுக்கும் தீபாவிற்கும் பெரிய விடயமாக போயிற்று.

இரண்டு வருடங்களாக அவனுக்காக காத்திருந்த ஜானவி தான் ஏக்கத்தில் கவலையில் பாதியாக இளைத்திருந்தாள்.

அப்போது நரேனுக்கும் தீபாவிற்கும் திருமணம் நிச்சயம் ஆனது.

நரேன் ஜானவியை தங்களுடன் வந்துவிடுமாறு கூற அவனிருக்கும் இடத்தைவிட்டு எங்கும் வரமாட்டேன் தீட்சண்யமாக மறுதலித்தாள்.

இதிலும் இவர்கள் தான் இறங்கி போக வேண்டியதாக இருந்தது.

“ண்ணா எனக்கு ஜீவாக்கிட்டயே வேலை வாங்கி கொடுக்கிறியா?” என்று ஜானவி கேட்டிட,

“வேலைக்கா எதுக்கு பாப்பாக்கு ஒரு வயசு தான் ஆகுது. எப்படி விட்டுட்டு போவ?” என்று நரேனுக்கு முன்பு தீபா முறைத்தாள்.

“இல்லைண்ணி எனக்கும் வீட்டுலயே இருக்க வெறுப்பா இருக்கு. ஜாப் போய்ட்டு வந்து பாப்பாவ பாத்துக்கிறேன். என்று கூற,

அவளுக்கு மனமாற்றம் தேவைப்படுவதை உணர்ந்த நரேன், “சரி வேற இடத்துல வேலை வாங்கி தர்றேன். பாப்பாவ பாத்துக்க ஆள் போடலாம்” என்று கூற,

“வேணாம் ஜீவாக்கிட்ட தான் ஜாப் வேணும்” என்றாள்.

“எதுக்கு அவனை தினம் நினைச்சு அழுறது பத்தாதுன்னு நேர்ல பாத்து அழ போறீயா?” என்று முறைத்தான்.

“இல்லைண்ணா என்னை பார்த்தா ஜீவாக்கு ஞாபகம் வரலாம்ல”என்று ஏக்கமாய் கேட்க,

இருவருக்கும் நெஞ்சம் கனத்தது. அவர்களுக்கு ஜீவாவிற்கு நினைவு வரும் என்ற நம்பிக்கை சுத்தமாக போயிருந்தது.

இந்த இரண்டு வருடம் வராத நினைவா இப்போது வரும் என்று தான் எண்ணம் பிறந்தது‌.

“ஜானு…” என்று நரேன் துவங்க,

“ண்ணா ப்ளீஸ்ண்ணா” என்று கெஞ்ச,

அதில் மனம் மாறியவன் சரி பேசுறேன் என்றான்.

கூறியது போலவே ஜீவாவிடம் பேசும் சமயம் தங்கைக்கு பாதுகாப்பான இடத்தில் வேலை தேவைப்படுகிறது உன்னுடைய விடுதியில் பணி இருந்தால் கூறு என்று கேட்டிருந்தான்.

அதே சமயம் ஜானுவின் நல்ல நேரம் ஜீவாவின் விடுதியில் காலி பணியிடம் இருந்தது.

நேரில் அழைத்து வர கூறியிருந்தான்.

இதனை கேட்டதும் ஜானுவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.

“தங்கம் அம்மா நாளைக்கு உன்னோட அப்பாவ பாக்க போறோம். அதுவும் நாளைக்கு அப்பாவோட பிறந்தநாள்” என்று குழந்தையிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்தாள்.

மறுநாள் காலையே எழுந்து குளித்து தயாராகி இருந்தவளது முகம் வெகுநாட்களுக்கு பிறகு பிராசித்தது.

அதனை கண்ட தீபா எப்போதும் இவள் இதே மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டி கொண்டாள்.

ஜீவியை தீபா பார்த்து கொள்ள மற்ற இருவரும் ஜீவாவின் விடுதியை நோக்கி சென்றனர்.

நரேன் வந்ததை அறிந்தவன், “வாடா புது மாப்பிள்ளை” என்று சிரிப்புடன் வரவேற்றவன் ஜானுவிடம், “வாங்க” என்று கூற,

அந்த அந்நிய அழைப்பு உள்ளுக்குள் ஊசியாய் குத்தியது. மௌனமாய் தலையசைத்தாள்.

வெகு நாட்களுக்கு பிறகு தன்னவனை கண்டதில் விழியோடு சேர்த்து உள்ளமும் கலங்கியது. இமை சிமிட்டி தன்னை கட்டுப்படுத்தினாள்.

இருவரும் அமர, “இவங்க தான் உன் சிஸ்டரா?” என்று ஜீவா வினவ,

“ஆமா ஜீவா” என்று நரேன் கூற,

“ஐ ஆம் ஜானவி சார்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

நரேன் நேர்முக தேர்வு செய்து தான் எடுப்பேன் என்று ஜீவா கூறியிருக்க, “ஓகே டா நீ இன்டர்வியூ பண்ணு‌. நான் ஒரு ஒர்க் இருக்கு முடிச்சிட்டு வர்றேன்” என்று கிளம்பினான்.

அதன் பிறகு ஜீவா அவள் புறம் திரும்பி, “டெல் அபௌட் யுவர் செல்ஃப்?” என்று வினவ,

தான் படித்த படிப்பு மற்றும் தனக்கு ஒரு குழந்தை இருப்பதை கூறினாள்.

ஜீவா மத்த குடும்ப உறுப்பினர்களை பற்றி வினவிட,

தனக்கு யாருமில்லை என்று முடித்தவளுக்கு உள்ளம் கதறியது. யாவுமாக இருப்பவனிடத்தில் இதனை கூற.

பின்னர் அவள் படிப்பு தொடர்பாக சில வினாக்களை எழுப்பினான்.

ஜானவி சரியாக பதில் உரைத்தாள். முன் அனுபவம் இல்லை என்றாலும் அவளுக்கு படிப்பறிவு நன்றாக இருப்பதால் தேர்வு செய்தான்.

“ஓகே நீங்க நெக்ஸ்ட் மந்த் ஜாயின்ட் பண்ணிக்கோங்க” என்று மொழிய,

“தாங்க் யூ சார்” என்று மெலிதாக புன்னகைத்தாள்.

“ஓகே யூ கேன் லீவ்” என்று ஜீவா கூற,

இவளுக்கு வெளியே செல்ல மனமில்லை. அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சொல்லி உள்ளே ஒன்று போட்டு படுத்தியது.

முதல் முறையாக பார்க்கும் தான் கூறி அவன் ஏதாவது எடுத்து கொண்டால் என்ன செய்வது என்று தயங்கி அவன் முகம் காண,

“எனிதிங்க் எல்ஸ்?” என்று ஜீவா அவளை கவனித்து வினவ,

“நோ சார்” என்றவள் எழ,

“சாரி லேட் ஆகிடுச்சு” என்றபடி நரேன் நுழைந்தான்.

“இப்போதான் இன்டெர்வீயூ பண்ணி முடிச்சேன்” என்ற ஜீவா,

“நெக்ஸ்ட் மந்த்ல இருந்து ஜாயின்ட் பண்ணிக்க சொல்லி இருக்கேன்” என்றான்.

“ஓகே” என்று புன்னகையுடன் தலையசைத்த நரேன்,

“சாரிடா சொல்ல மறந்துட்டேன் விஷ்ஷிங் யூ அ வெரி ஹாப்பி பர்த்டே” என்று வாழ்த்த,

“தாங்க்ஸ்டா” என்று ஜீவா பெற்று கொள்ள,

ஜானவி இதுதான் வாய்ப்பென்று, “ஹாப்பி பர்த்டே சார்” என்று வாழ்த்திட, ஜீவா
நன்றி நவிழ்ந்தான்.

“வெளியே போகலாமா நீ ப்ரீயா?” என்று நரேன் தங்கைக்காக வினவிட,

“இல்லைடா. லாவண்யா எனக்காக பார்டி ஆரேன்ஜ் பண்ணி இருக்கா” என்று புன்னகையுடன் கூற,

அந்த புன்னகை கூறிய செய்தி இவளது நெஞ்சில் ஈட்டியை சொருகியது.

மொத்தமாய் கலங்கி போய் நின்றாள்…



 
Well-known member
Messages
570
Reaction score
420
Points
63
Janu avanuku niyabagam varum nu ronbhavae ethir partha aana andha niyabagam ivolo varusham kazhichi vandhum Jeeva janu lavanya nu ellar ah yum oru suzhal la sikkuna mathiri sikka vachiduthu
 
Top