• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 14

Administrator
Staff member
Messages
672
Reaction score
1,017
Points
93
தவம் 14

காதலுக்கு விலை இல்லை

எதை கொடுத்து நான் வாங்க?
உள்ளங்கையில் அள்ளித்தர

என்னைவிட ஏதுமில்லை என்ற அலைபேசியின் கானா இடைவிடாது ஒலிக்க,

“ப்ச்” என்று தூக்கத்திலே புரண்டு படுத்த நரேன் அதனை எடுத்து யாரென்று பார்க்காமலே,

“ஹலோ” என்று கூற,

“ண்ணா என்ன கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இப்படி தூங்கிட்டு இருக்க? காலேஜ்க்கு கிளம்பலையா?” என்று ஜானவி மறுமுனையில் பரபரக்க,

“பிஜிஸ்க்கு இன்னைக்கு லீவ். நீ ஓழுங்கா கிளம்பி போற வழிய பாரு” என்று நரேன் மொழிய,

“ஐயையோ எதுக்கு லீவ் விட்டாங்க யாரை கேட்டு லீவ் விட்டாங்க” என்று ஜானவி பதற,

மறுமுனையில் இருந்த நரேனுக்கு உறக்கத்திலும் சிரிப்பு வந்தது.

“யாரை கேட்டு விடணும்?” என்று வினவ,

“என்னை கேட்கணும்” என்றவள் கூற,

“நீ பெரிய மினிஸ்டரு உன்னை கேட்க. போய் ஒழுங்கா படி” என்றான்.

“எங்க படிக்கிறது. என்னை யாரு ட்ராப் பண்ணுவா” என்று மொழிய,

“ஹான் ஜீவா ஜீவான்னு கூவிட்டு வருவியே அவன் பண்ணுவான்” என்றவன் சமயம் பார்த்து பழிவாங்கிவிட்டு அழைப்பை துண்டித்துவிட,

“டேய் அண்ணா உன்னை பாத்துக்குறேன் நானு” என்று அலைபேசியை பார்த்து புலம்பியவள் பிறகு,

“ஆமா ஜீவா ட்ராப் பண்ணுவான். ரெண்டு நாள் முன்னாடி கூட என்ன ஹெல்ப்னாலும் பண்றேன்னு சொன்னானே” என்றுவிட்டு வேகமாக தன்னுடைய பால்கனியில் இருந்து அவர்களது பால்கனிக்கு தாவினாள்.

இருவீட்டு பால்கனிக்கும் ஒரே சுவர் என்பதால் சுலபமாக தான் இருந்தது. இதுக்கு முன்பு பலமுறை இது போல தாவி வந்திருக்கிறாள்.

“ஜீவா ஜீவா” என்று அவனது அறைக்கதவை தட்ட,

“ப்ச்” என்றுவிட்டு உறகத்திலே புரண்டு படுத்தான்.

“ஜீவா கதவை திற ஜீவா” என்று மீண்டும் அழுத்தி தட்ட,

“இந்த நேரத்தில யாரு” என்று பாதி உறக்கம் கலைந்ததில் கடுப்பானவன் எழுந்து வந்து கதவை திறந்து திட்ட வர,

“சாரி சாரி ஜீவா. என்னை கொஞ்சம் காலேஜ்ல ட்ராப் பண்ண முடியுமா ப்ளீஸ்” என்று இதழ் குவித்து ஜானவி கெஞ்ச துவங்க,

அவளது குவிந்த இதழ்களில் பதிந்து மீண்டவனது மீதி உறக்கமும் கலைந்து போனது.

விழிகளை ஒரு முறை தேய்த்தவன்,

“வர்றேன் டென் மினிட்ஸ்” என்க,

“தாங்க்ஸ் ஜீவா. சோ ஸ்வீட் ஆஃப் யூ” என்று அவனது கன்னத்தை கிள்ளிவிட்டு சிட்டாய் பறந்துவிட,
இவனுக்கு இதழ்களில் மென்னகை ஜனித்தது.

நியாயமாக உறக்கத்தில் எழுப்பியதற்கு கோபம் தான் வந்திருக்க வேண்டும் இவன் என்னடாவென்றால் சிரித்துவிட்டு சென்றான்.

ஜானவி பத்து நிமிடத்திற்குள் தனது பையில் தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டு கதவை பூட்டி வெளியே வர சரியாக ஜீவாவும் வந்தான்.

பத்து நிமிடத்தில் முகம் கழுவி உடை மாற்றி வந்திருந்தான் ஜீவா.

“வாட் அ டைமிங் ஜீவா” என்று சிரித்தவள்,

“வா போவோம் இன்னைக்கு இன்டர்னெல் இருக்கு” என்றவள் விறுவிறுவென நடக்க,

ஜீவாவின் இரு சக்கர வாகனத்தில் இருவரும் கல்லூரியை நோக்கி சென்றனர்.

பாதி தூரத்தை கடந்திருக்க,

“அச்சச்சோ ஜீவா மறந்துட்டேன்” என்று ஜானவி மொழிய,

வாகனத்தை நிறுத்தியிருந்த ஜீவா திரும்பி, “என்ன மறந்த?” என்று வினவ,

“சாப்பிட மறந்துட்டேன் ஜீவா. எனக்கு பசிக்கிது” என்று வயிற்றை தட,

“சாப்பிட்றதுக்கு யாராவது மறப்பாங்களா?” என்று முறைத்தான்.

“கிளம்புற அவசரத்துல மறந்துட்டேன் ஜீவா” என்றவள் முகத்தை பாவமாக வைக்க,

விழிகளால் அவ்விடத்தை அலசியவன்,

“இங்க ஹோட்டல் எதுவும் இருக்க மாதிரி தெரியலை. இந்த ரோட்ல போனா டென் மினிட்ஸ்ல ஒரு ரெஸ்டாரன்ட் வரும் அங்க போகலாம்” என்று ஜீவா கூற,

“அவ்ளோ நேரம்லாம் பசி தாங்க முடியாது ஜீவா” என்றவள்,

“அதோ குமார் அண்ணா கடை இருக்கு பாரு அங்க சாப்பிடலாம்” என்று இறங்கி செல்ல,

ஜீவா திரும்பி பார்த்தான். அது ஒரு தள்ளுவண்டி உணவகம்.

அமர்ந்து உண்ண கூட நான்கு நாற்காலிகள் தான் இருந்தது. அதுவும் நிரம்பியிருக்க பலர் நின்றவாறு உணவுண்டனர்.

அதனை பார்த்து திகைத்தவன்,

“இங்கயா?” என்று வினவிட,

“ஆமா ஜீவா இட்லி சாம்பார் இங்க சூப்பரா இருக்கும் வா” என்றவள் இரண்டெட்டில் கடையை அடைந்திட,

இவனும் வேறு வழியின்றி வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அவளருகே வந்தான்.

“குமார் அண்ணா ரெண்டு பிளேட் இட்லி” என்றவாறு கல்லூரி‌ பையை அங்கிருந்த கல்லில் வைக்க,

“நல்லாயிருக்கியா ஜானுமா. ரொம்ப நாளாச்சு வந்து” என்று வினவிட,

“சூப்பரா இருக்கேன் ண்ணா. காலேஜ் ஒர்க்ல கொஞ்சம் பிஸி அதான் வர முடியலை” என்றவள் இரண்டு கைகளிலும் தட்டோடு வந்து,

“இந்தா ஜீவா…” என்று ஒன்றை அவனிடத்தில் கொடுத்தாள்.

“எனக்கா?” என்று ஜீவா நொடி நேரம் திகைக்க,

“ஆமா ஜீவா உனக்கு தான் சாப்பிடு” என்று மொழிந்தாள்.

“இல்லை எனக்கு வேணாம்” என்று ஜீவா மறுக்க,

“நல்லாயிருக்கும் ஜீவா. நான் மார்னிங் சமைக்காதப்போ எல்லாம் இங்க வந்து தான் சாப்பிடுவேன்” என்று அவனது கையில் தட்டை வைத்தாள்.

ஜீவாவின் பார்வை அவ்விடத்தை ஒரு முறை வலம்வந்தது.

“குமார்ணா சாம்பார் சூப்பர்” என்றவள் விழிமூடி ரசித்து உண்ண,

ஜீவா தான் கையில் வைத்திருந்த உணவை உண்ணாது நின்றிருந்தான்.

முழுதாக ஒரு இட்லியை விழுங்கியவள் அப்போது தான் நிமிர்ந்து இவனை கண்டாள்.

“என்ன ஜீவா சாப்பிடாம இருக்க? உனக்கு இட்லி பிடிக்கலையா? தோசை சொல்லவா?” என்று வினவிட,

“ம்ஹூம்” என்று தலையசைத்தவன் அந்த இட்லியை ஒரு விள்ளல் பிய்த்து வாயில் போட்டான்.

அவன் நினைத்த அளவிற்கு எல்லாம் மோசமாக இல்லை. இட்லி நன்றாகவே இருந்தது.

“என்ன ஜீவா நல்லாயிருக்கா?” என்று ஜானவி விழிகளை ஆர்வமாக விரித்திட,

“ஹ்ம்ம் நல்லாயிருக்கு” என்றவன் உண்ண துவங்க,

ஒரு நாற்காலி காலியானது. அதனை எடுத்து அவனருகே போட்டவள்,

“உட்கார்ந்து சாப்பிடு ஜீவா” என்று மொழிய,

“இல்லை நீ உட்க்கார்ந்துக்கோ” என்றான்.

“எனக்கு கையேந்தி பவன் பழக்கம் தான் ஜீவா. நீ உட்காரு” என்று அவனை அமர வைத்தவள் அவனுக்கு மேலும் ஒரு தோசையும் வாங்கி கொடுத்தாள்.

உண்டதும் ஜீவா,

“எவ்ளோண்ணா ஆச்சு” என்று தனது பர்ஸை எடுக்க,

“ஜீவா நான் தானே அழைச்சிட்டு வந்தேன். நான் தான் கொடுப்பேன்” என்றவள் மறுத்து ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து நீட்டினாள்.

அதிலும் அவர் மீதி சில்லறையை கொடுக்க,

‘இதுலயும் பேலன்ஸ் கொடுக்குறாரு. எவ்ளோவா இருக்கும்’ என்று எண்ணியபடி வண்டியை எடுக்க செல்ல,

“ஜானும்மா தம்பி யாரு பாத்தா பெரிய இடத்துவீட்டு பிள்ளை மாதிரி இருக்கு” என்று வினவிட,

“தெரியுதா என்ன?” என்று ஜீவாவை ஒரு கணம் திரும்பி பார்த்துவிட்டு,

“நம்ம ப்ரெண்ட் தான் ண்ணா. பெரிய இடத்து பிள்ளை தான். நகைக்கடை ஓனர் ” என்று அவரது பாணியிலே சிரிப்புடன் கூற,

“அப்படியா? நான் பாத்ததுமே நினைச்சேன். அதான் அந்த பையன் இங்க சாப்பிட அவ்ளோ தயங்குச்சா?” என்று வினவ,

சடுதியில் ஜானவியின் மூளைக்ககுள் ஒரு மின்னல்.

‘அவன் சாப்பிட தயங்கிய காரணம் இது தானா?’ என்ற கேள்வி உள்ளுக்குள் உதிக்க,

“சரிண்ணா நான் போய்ட்டு வர்றேன்” என்றவள் ஜீவாவை பார்த்தவாறு நகர,

இங்கு ஜீவாவிற்கு தாயிடமிருந்து அழைப்பு வந்தது.

எடுத்து பேசினான். இடையில்,

“சாப்பிட்டியா தம்பி” என்று தாயிடமிருந்து கேள்வி வர,

இவனது விழிகள் அவளிடத்தில் பதிந்தது.

இதுபோல அவளிடத்திலும் கேட்க உறவுகள் இருந்தால் உண்டுவிட்டு வந்திருப்பாளோ என்று எண்ணம் ஜனித்ததும் உள்ளுக்குள் சிறிதான பாரம் ஏறியது.

“ஹ்ம்ம் சாப்பிட்டேன் மா” என்றவன் பதில் மொழிய,

“என்ன ஹாரன் சவுண்ட் கேக்குது? வெளியே இருக்கியா?” என்று தாய் வினவிட,

“ஆமாம்மா. இங்க பக்கத்துல ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கு அங்கதான் சாப்பிட வந்தேன்” என்று ஜீவா மொழிய,

ஜானவி அருகில் வந்திருந்தாள். அவன் கூறிய வார்த்தைகள் காதில் விழுந்தது.

அவர் கூறியது சரிதான். அதனால் தான் தாயிடம் உணவகத்தில் உண்டுவிட்டதாக கூறுகிறான் என்று புரிந்தது.

‘உனக்கு அறிவே இல்லை ஜானு. அவன் இருக்க ரேஞ்சுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடுவான். நீ அவனை போய் ரோட்டு கடையில சாப்பிட வச்சிட்ட. வர வர மூளை மழுங்கிட்ட போகுது. அவன் அவ்ளோ நேரம் யோசிச்சப்பயாவது உனக்கு புரிஞ்சிருக்க வேணாமா?’ என்று தன்னை தானே நிந்தித்து கொள்ள,

“போகலாம்” என்று தலையசைத்தான் ஜீவா.

“ஹ்ம்ம்” என்று ஏறி அமர்ந்தவள் எதுவும் பேசவில்லை.

பயணம் அமைதியாக சென்றது.

ஜீவாவிற்கே ஆச்சர்யமாக இருந்தது. திறந்த வாயை மூடாத ஜானவி இவ்வளவு அமைதியாக வருவது.

பத்து நிமிடத்தில் கல்லூரி வாசலில் இறக்கிவிட,

“பாய் ஜீவா” என்றவள் அமைதியாக நகர முற்பட,

“என்னால் மேடம் சைலண்ட் ஆகிட்டிங்க” என்றவனது குரல் அவளை நிறுத்தியது.

திரும்பி தயங்கி அவனது முகம் பார்த்தவள்,

“உனக்கு அந்த சாப்பாடு பிடிச்சு இருந்ததா ஜீவா?” என்று வினவ,

“ஹ்ம்ம் பிடிச்சிருந்தது” என்று எதற்கென தெரியாத போதும் பதிலுரைக்க,

“நிஜமாவா?” என்று நம்பாமல் வினவ,

“ஆமா” என்றவன்,

“எதுக்கு இவ்வளோ கொஸ்டீன்?” என்று கேட்டான்.

“உனக்கு அங்க சாப்பிட பிடிக்கலையா ஜீவா. உன் அம்மாக்கிட்ட‌ ரெஸ்டாரன்ட்ல சாப்பிட்டேன்னு சொன்னியே அதை கேட்டேன். ஹை பை ரெஸ்டாரன்ட்ல சாப்பிட்ற உன்னை கையேந்தி பவன்ல சாப்பிட வச்சிட்டேனேன்னு கில்டியாகிடுச்சு ஜீவா” என்று அவன் பார்த்து வருத்தமாக புன்னகைக்க,

நிச்சயமாக அந்த புன்னகை அவனை தாக்கியது.

“ஸோ வாட்? ஹை பை ரெஸ்டாரன்ட்ல சாப்பிட்டா கையேந்தி பவன்ல சாப்பிட கூடாதுனு எதாவது இருக்கா?” என்றவன் புருவம் உயர்த்த,

“இல்லைதான் இருந்தாலும் உனக்கு அங்க சாப்பிட ஒப்பலை தான? நான் சொன்னேன்னு தான வேற வழியில்லாம சாப்ட? என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல எனக்கு இங்க சாப்பிட்டு பழக்கமில்லைனு” என்றவள் கூற,

“எனக்கு இது பர்ஸ்ட் டைம் தான். ஆனால் நீ நினைக்கிற அளவுக்கு நான் எதுவும் பீல் பண்ணலை. அண்ட் அங்க ஃபுட் நல்லாதான் இருந்துச்சு” என்றவனுக்கு அவள் கூறியது போல ஒப்பவில்லை என்றாலும் அதனை கூறி அவளை வருத்த மனம் வரவில்லை.

“உனக்கு அந்த சாப்பாடு பிடிச்சதா?”

“ஹ்ம்ம் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. நானுமே இங்க புட் எப்படி இருக்குமோன்னு பயந்திட்டு தான் சாப்டேன். பட் இட் வாஸ் குட். இனிமேல் நீ போகும் போது என்னையும் அழைச்சிட்டு போ” என்று கூற,

“ரியலி மறுபடியும் வர்றீயா?” என்று நம்பமாட்டாதவள் கேட்க,

“ஹ்ம்ம் நீ எவ்ளோ டைம் கூட்டிட்டு போனாலும் வருவேன்” என்று சிரிப்புடன் கூற,

“ஆஹான் நம்புறேன் நம்புறேன்” என்று சிரித்தவள்,

“பாத்து போ ஜீவா க்ளாஸ்க்கு டைம் ஆகிடுச்சு” என்று வாடாத முகத்துடன் நகர,

இவனுக்குள் ஏதோ ஒன்று நிறைந்து போனது.

தானும் இதழில் உறைந்த புன்னகையுடன் வீட்டை நோக்கி சென்றான்.

நரேனுடன் சுற்றி பார்க்க வெளியே சென்றவனுக்கு பொழுது நன்றாக கழிந்தது.

கல்லூரி முடிந்து வழக்கம் போல நண்பர்களுடன் ஊரை சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தவள் உறங்கி போனாள்.

“ஜானு கதவை திற”என்று எட்டு மணிக்கு நரேன் வந்து கதவை தட்டியதும் தான் விழிப்பு வந்தது.

“ஹ்ம்ம்” என்ற முனங்கலுடன் எழுந்து வந்தவள்,

“தூக்கத்தில எதுக்கு வந்து டிஸ்டர்ப் பண்ற?” என்று உறக்கம் கலையாத விழிகளுடன் வினவ,

“உனக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்து இருக்கேன். சாப்பிட்டு தூங்கு” என்று நரேன் கூற,

“ஹ்ம்ம் தாங்க்ஸ்ணா. இனிமே சமைச்சு சாப்பிட்றது கஷ்டம்” என்றவள் சோபையான புன்னகையுடன் அதனை வாங்கி வைத்துவிட்டு மீண்டும் படுத்து கொண்டாள்.

சில நிமிடங்கள் அங்குமிங்கும் புரண்டு உறகத்தை விரட்டியவள் எழுந்து முகம் கழுவி வந்து உணவை பிரித்தாள்.

அவளுக்கு மிகவும் பிடித்த பிரியாணி வாங்கி வந்திருந்தான்.

அதில் முகம் மலர்ந்தவள்,

“வாவ் பிரியாணி லவ் யூ ண்ணா” என்று அவனுக்கு அன்பை தெரிவித்தவள் உணவை ரசித்து ருசித்து உண்டு முடித்தாள்.

சரியாக அதே சமயம் கனிமொழி வந்து அழைக்க அரட்டையடிக்க சென்றுவிட்டாள்.

பதினொரு மணிவரை அடித்து பிடித்து விளையாடி கொண்டிருக்க மங்களம் பாட்டி வந்து அதட்டியதும் தான் சபையை கலைத்தனர்.

நாளை விடுமுறை என்பதால் இந்த கொண்டாட்டம். வார வாரம் இது போல கூட்டம் போட்டு கும்மியடிப்பார்கள்.

“ஆவ்…” என்று கொட்டாவியை வெளியேற்றியவள்,

“சரி பாய் போய் தூங்குங்க” என்று எழுந்து கொள்ள,

“நாளைக்கு என்ன பிளான்?” என்று கீர்த்தி கேட்க,

“அதை நாளைக்கு பாப்போம் போங்க” என்று முடித்தவள் வீட்டிற்கு வந்து கதவை பூட்டிவிட்டு உறங்க செல்ல பால்கனியில் பாட்டு சத்தம் கேட்டது.

‘இந்த நேரத்துல யாரு?’ என்று எண்ணியபடியே பால்கனிக்கு எட்டி பார்க்க,

ஜீவா தான் கண்மூடி அமர்ந்து பாடல் கேட்டு கொண்டிருந்தான்.

என்னைத்தான் அன்பே மறந்தாயோ? என்று ஒலிக்க,

சத்தமின்றி ஏறி குதித்து இந்த பால்கனிக்கு வந்தவள்,

‘மறப்பேன் என்றே நினைத்தாயோ…?’ என்று பாடிட,

சடுதியில் அதிர்ந்து விழிகளை திறந்தவன் பிறகு நிதானித்து,

“நீதானா?” என்று வினவ,

“எஸ் நானே தான்” என்று சிரித்தவள் அவனெதிரே அமர்ந்தாள்.

“தூங்கலையா இன்னும்?”

“அதை நான் கேட்கணும் ஜீவா. இந்நேரத்துக்கு ஷட்டரை க்ளோஸ் பண்ணி இருப்பிங்களே ரெண்டு பேரும்”

“அவன் தூங்க போய்ட்டான் எனக்கு தூக்கம் வரலை அதான் சாங்க்ஸ் கேட்டுட்டு இருக்கேன்”

“உனக்கு நைன்டீஸ் சாங்க்ஸ் பிடிக்குமா? என் பாட்டி கேட்பாங்க அவங்களோட சேர்ந்து எனக்கும் பிடிச்சுடுச்சு” என்று கூற,

“ஹ்ம்ம் எப்பவாது கேட்பேன்” என்று மொழிந்தான்.

“அண்ணா கூட அவுட்டிங்கா இன்னைக்கு”

“ஆமா தீபாவையும் அழைச்சிட்டு வந்தான்”

“லவ்வர்ஸ் கூட போனீயா? நம்மளை கண்டுக்கவே மாட்டானுங்களே” என்று கூற,

இவ்விடத்தில் புன்னகை.

“சரிதான் நீயும் ஒரு ஆளை செட் பண்ணிக்கோ ஜீவா. ஜாலியா அவுட்டிங் போகலாம்”

“அவுட்டிங் போக ஆள் வேணுமா” என்று அவளது தலையில் மெலிதாக தட்ட,

“ஆமா அவுட்டிங் போக மட்டுமில்லை. கல்யாணம் பண்ணிக்கத்தான்” என்றவள் சிரிக்க,

“எப்போ பார்த்தாலும் காதல் கல்யாணம் இதே நினைப்பு தானா?”

“ஆமா இந்த வயசுல அதை நினைக்காம உன்னை மாதிரி சாமியாரா திரியவா?” என்று கிண்டலடிக்க,

“நான் சாமியாரா?” என்று கேட்டு போலியாக முறைத்து அடிக்க வர,

இவள் எழுந்து மற்றொரு மூலைக்கு ஓடினாள்.

“நோ ஜீவா வேணாம்” என்றவள் அவனிடமிருந்து தப்பிக்க முயல, முகத்தில் பட்டு தெறித்தது மழைத்துளி.

“ஹேய் மழை வருது” என்றவள் சிரிப்புடன் ஆர்ப்பரிக்க,

“மழைன்னா புடிக்குமா?” என்று வினவிட,

“ஹ்ம்ம் மழைன்னா யாருக்குத்தான் பிடிக்காது” என்று அவன் முகத்தில் நீர்த்துளிகளை தெளிக்க,

“மழையில நனைஞ்சா பீவர் வந்திடும் போ போய் தூங்கு” என்று ஜீவா சிறு அதட்டலுடன் கூற,

“நீயும் நரேன் மாதிரியே பண்ற ஜீவா” என்று சலித்தவள்,

“சரி குட் நைட்” என்று நகர்ந்தாள்.

அவள் சுவற்றில் கால் வைப்பதை உணர்ந்தவன்,

“ஹேய் என்ன பண்ற?” என்றவன் அதிர்ந்து வினவ,

“தூங்க போறேன் ஜீவா”

“அதுக்கு ஏன் இதுல காலை தூக்கி வைக்கிற?”

“இதுல வச்சாதான அங்க சைடு குதிக்க முடியும்”

“என்ன? இப்படிதான் வந்தியா?” என்று அதிர்ந்து வினவ,

“ஆமா ஜீவா. நீங்க தான் கதவை பூட்டிட்டிங்களே” என்றவள்,

“இப்போதான் பர்ஸ்ட் டைம் பாக்குற மாதிரி பேசுற மார்னிங் கூட இப்படிதான் வந்தேன்” என்றவள் சாதாரணமாக கூற,

“மார்னிங்குமா? கீழே விழுந்தா என்னாகுறது?”

“அதெல்லாம் விழ மாட்டேன் பதினைஞ்சு வயசுல இருந்து குதிச்சிட்டு இருக்கேன் ஜீவா” என்றவள் நொடியில் தாவிட,

இவன் தான் திகைத்து பார்த்தான்.

“இன்னும் சின்ன புள்ளையாவே பயந்துட்டு இருக்கியே ஜீவா” என்றவள் சிரிக்க, ஜீவா முறைத்தான்.

“முறைச்சது போதும் போய் தூங்கு ஜீவா” என்று திரும்பியவள்,

“அச்சச்சோ மறந்துட்டேன்” என்றவள் மீண்டும் குதித்து வந்து,

“ரொம்ப தாங்க்ஸ் ஜீவா”
என்று அவனை அணைத்து கொண்டாள்.

ஜீவா அதிர்ந்து பார்க்க,

“காயூ மாமி சொன்னாங்க. நீ டென் பர்சன்ட் டிஸ்கவுண்ட் போட்டு கொடுத்து இருக்கேன்னு. ரேட் நல்லா குறைஞ்சிருக்கு சொன்னாங்க. எனக்காக தான. தாங்க் யூ சோ மச்” என்று மீண்டும் அணைத்து விடுவித்தவள் குதித்தோடி மறைந்துவிட்டாள்.

இங்கு ஜீவா தான் தனக்குள் சிறிதான பூகம்பத்தை ஏற்படுத்தி சென்றவளை இமைக்காது பார்த்திருந்தான்…


 
Well-known member
Messages
1,112
Reaction score
801
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr

Jaanu evlo jollya irunthirukkaa
 
Well-known member
Messages
570
Reaction score
420
Points
63
Janu avan veetu balcony la mattum kuthichi vara la avan manasu kula vum kuthichi.enter aagita pola
 
Top