• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 13

Administrator
Staff member
Messages
672
Reaction score
1,016
Points
93
தவம் 13

எங்கேயோ உன் முகம்

நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன்
நான் வாழ்ந்த ஞாபகம்…


“ஜீவா…” என்ற குரல் அமைதியான வீட்டில் ஊடுருவி செல்ல,

பால்கனியில் நின்று தாயிடம் பேசி கொண்டு இருந்த ஜீவா திரும்பி பார்த்து,

“பைவ் மினிட்ஸ்” என்று உதட்டசைக்க,

“ஓகே ஓகே கேரி ஆன்” என்றவள் சமையலறையில் இருந்த நரேன் புறம் திரும்ப,

“இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லை. நானும் பாக்குறேன் ஜீவா ஜீவான்னு எப்போ பார்த்தாலும் அவன் பேரையே ஏலம் போட்டுட்டு இருக்க” என்று முறைக்க,

“ஆமா அப்படிதான் சொல்லுவேன். எனக்கு ஜீவா நேம் ரொம்ப பிடிச்சிருக்கு. நீயும் அது மாதிரி அழகான நேம் வச்சிருக்க வேண்டியது தான’ என்று இதழை சுழித்தாள்.

“ஏன் என் நேம்க்கு என்ன கொறைச்சல்” என்று நரேன் சண்டைக்கு வர,

“என்ன குறையா? நேமே குறையா தான் இருக்கு நரேன் கொரேன்னுட்டு” என்று சிரிப்புடன் வம்பிழுக்க,

“வர வர உனக்கு வாய் கூடிட்டே போகுது” என்று அவளது தலையில் தட்ட வர,

“அப்படிதான் கூடும்” என்றவள் அவனிடமிருந்து தப்பி ஓட முயற்சிக்க,

“தலையில‌ ரெண்டு தட்டுனா வாய் குறைஞ்சிடும்” என்றவன் அவளை துரத்த,

அறைக்குள் ஓடி சென்று அவனுக்கு போக்கு காட்டியவள் இறுதியாக பால்கனிக்கு சென்று ஜீவாவின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

“ஜீவா என்னை காப்பாத்து. உன் ப்ரெண்ட் என்னை அடிக்கிறான்” என்று அவனது தோளை பிடித்து கொள்ள,

“ஜீவா நீ நகரு. இன்னைக்கு இருக்கு அவளுக்கு” என்று நரேன் அவளை பிடிக்க முயற்சிக்க,

“ஜீவா ப்ளீஸ் ஜீவா மூவ் பண்ணிடாத” என்று அவனது சட்டையை இறுக்கமாக பிடித்து கொண்டாள்.

இங்கு அலைபேசியின் மறுமுனையில் இருந்த ஜீவாவின் தாய் பரமேஸ்வரி,

“என்ன ஜீவா பொண்ணு வாய்ஸ் கேக்குது?” என்று வினவிட,

“பக்கத்து வீட்டு பொண்ணும்மா” என்று கூறியவன்,

ஜானவியை விலகி நிறுத்த முற்பட,

“ஜீவா ப்ளீஸ் அண்ணாக்கிட்ட மாட்டிவிட்டுடாத” என்று மீண்டும் ஜானவி கூற,

பரமேஸ்வரி காதில் மிக தெளிவாக அவளது குரல் விழுந்தது.

“உங்கிட்ட தான் அந்த பொண்ணு பேசிட்டு இருக்கா?” என்று பரமேஸ்வரி வினவ,

“இல்லைம்மா நரேன் கூட பேசிட்டு இருக்கு” என்று ஜீவா பதில் கூற,

“வேணாம் ண்ணா” என்ற ஜானவி நரேன் இந்த புறம் வரவும் மற்றொருபுறம் நகர்ந்து வெளியே ஓடி இருந்தாள்.

நரேனும் அவளை துரத்தி கொண்டு ஓடிவிட,

இங்கு அதற்குள் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் காணொளி அழைப்பில் வந்துவிட்டனர்.

“யார் அந்த பொண்ணு?”

“பக்கத்துவீடா?”

“என்ன பண்றா அவ?” என்று ஒவ்வொரிடமிருந்தும் ஒவ்வொரு வரிசையாக கேள்வி வந்து விழுந்தது.

“பக்கத்து வீட்டு பொண்ணு தான். நரேனை பாக்க வருவா” என்று அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

பின்னே இருக்காதா? இயல்பிலே அமைதியான சுபாவம் கொண்ட ஜீவா ஒரு பெண்ணிடம் பேசி கொண்டு இருக்கிறானா? என்ற வியப்பு தான்.

ஆனால் பரமேஸ்வரிக்கு பயம். தன்னுடைய அண்ணன் மகள் லாவண்யாவை தான் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் மிகுந்த ஆசை.

எதாவது பெண்ணை விரும்பி தனது கனவில் மண்ணை அள்ளி போட்டுவிடுவானோ என்று.

ஜீவா பேசிவிட்டு வர நரேன்,

“இந்தாடா காஃபி” என்று கோப்பையை நீட்ட,

“ஏன்டா உங்க விளையாட்டை வேற எங்கயாவது வச்சிக்க கூடாதா?” என்று முறைக்க,

“ஏன்டா என்னாச்சு?” நரேன் வினவ,

“அவ வாய்ஸ கேட்டு யாரது அந்த பொண்ணுனு இவ்ளோ நேரம் கொஸ்டீன் மேல கொஸ்டீன்” என்று அலுத்து கொண்டான்.

நரேன் பதில் கூறும் முன், அவன் கூறியதை கேட்டபடி உள்ளே நுழைந்த ஜானவி,

“அச்சச்சோ சாரி ஜீவா. வீட்டுல எதுவும் சொல்லிட்டாங்களா? நான் வேனா அவங்ககிட்ட பேசவா?” என்று பதற்றத்துடன் அவனிடத்தில் வந்து கேட்க,

பதட்டத்தில் படபடவென அடித்து கொண்ட விழிகளுடன் தன் முன்னே நிற்பவளை கண்டவன்,

“நோ நீட் நானே எக்ஸ்பிளைன் பண்ணிட்டேன்” என்று கூற,

“நிஜமா சாரி ஜீவா. நான் விளையாட்ற ஆர்வத்துல எதையும் யோசிக்கலை” என்று குரலில் வருத்தத்தை தாங்கி கூற,

அதில் ஜீவா தான், “ஹே சில் ஒன்னுமில்லை. அம்மாக்கு பயம் எங்க நான் யாராயும் லவ் பண்ணிட்டு அவங்க அண்ணன் மகளை கல்யாணம் பண்ணாம போய்டுவேனோன்னு அதான் இந்த விசாரணை” என்று ஜீவா விளக்க,

“ஓ… சாருக்கு மாமா பொண்ணு மேல லவ்வா? அதான் கீர்த்திக்கு அட்வைஸ் பண்ணி அவளையே வேணாம்னு சொல்ல வச்சிட்டியா?” என்று ஆர்வமாய் விழி விரித்திட,

“லவ் எல்லாம் இல்லை. வீட்ல விருப்பப்பட்றாங்க. எனக்கு பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லை” என்று தோளை குலுக்கினான்.

“எனிவே சாரி இனிமேல் நீ போன் பேசும் போது நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்று ஜானவி கூறிட,

இவன் மௌனமாய் தலையசைத்தவன்,

“எதுக்கு என்னை தேடி வந்த?” என்று வினவிட,

“அதுவா ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான்” என்றிட,

“எனக்கு தெரியாம என்ன முக்கியமான விஷயம்?” என்று நரேன் கேட்க,

“அதெல்லாம் எனக்கும் ஜீவாக்கும் இருக்க சீக்ரெட்” என்றவள்,

ஜீவாவிடம், “உனக்கு சிலரை இன்ட்ரோ கொடுக்கணும் அழைச்சிட்டு வர்றேன்” என்று நகர,

‘அச்சோ அடுத்து இவ யாரை கூட்டிட்டு வர போறா? இப்பதான ஒருத்திக்கு பெருசா அட்வைஸ் பண்ணி அனுப்புனேன்’ என்று ஜீவா மனதிற்குள் அலற,

“வாங்க” என்று நான்கு பெண்மணிகளை அழைத்து வந்தாள்.

நரேன், “வாங்கக்கா அத்தை பாட்டி” என்று அனைவரையும் வரவேற்றவன்,

“டீ குடிக்கிறிங்களா? காஃபி போடவா?” என்று உபசரிக்க,

“டீ போட்டுட்டு வாடா நல்ல ஸ்ட்ராங்கா” என்று அவனை அனுப்பி வைத்தனர்.

ஜானவி, “ஜீவா இவங்க எல்லாம் உன்னை பாக்கதான் வந்து இருக்காங்க இவங்க காயத்ரி மாமி கௌசல்யா அத்தை மங்களம் பாட்டி” என்று நால்வரையும் அறிமுகம் செய்ய,

ஜீவாவும் மரியாதை நிமித்தமாக வரவேற்றான்.

“தம்பி நேத்து தான் ஜானு சொன்னா. நீங்க நகைக்கடை வச்சிருக்கிங்கன்னு. அதான் உங்க கடையில நகை சீட்டு போடாலாம்னு வந்திருக்கோம். இதுக்கு முன்னாடி போட்ட இடத்துல ரொம்ப ஏமாத்துறானுங்க” என்று காயத்ரி மாமி மொழிய,

“மாமி கவலைபடாதீங்க நம்ம ஜீவா கண்டிப்பா உங்களுக்கு டிஸ்கவுண்ட்ல எல்லாம் பண்ணி தருவான்” என்றவள்,

“என்ன ஜீவா பண்ணி தருவதான?” என்று வினவிட,

இதனை எதிர்பார்க்காதவன் ஒரு நொடி திகைத்து பிறகு,

“ஹ்ம்ம் பண்ணலாம்” என்றதும் நால்வர் முகத்திலும் மகிழ்ச்சி.

கௌசல்யா, “தம்பி டிஸ்கவுண்ட் இல்லைனாலும் நியாயமான விலையில நகை கிடைச்சா போதும். கஷ்டப்பட்டு உழைக்கிற காசு யார்க்கிட்டயும் ஏமாற கூடாது” என்று கூற,

“நான் அப்பாக்கிட்ட பேசுறேன்” என்று ஜீவா கூற,

“செய்கூலி சேதாரம் எல்லாம் எத்தனை பர்சன்ட்டேஜ் போடுவீங்க?” என்று மங்களம் வினவிட,

“எனக்கு அப்பா பிஸ்னெஸ்ல பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லாதாதால எனக்கு இந்த டீடெயில்ஸ் எதுவும் தெரியாது. அப்பாக்கிட்ட பேசிட்டு சொல்றேன்” என்று ஜீவா கூற,

சரியென தலையசைத்தவர்கள் தேநீரை அருந்தியபடி சில நிமிடங்கள் பேசிவிட்டு சென்றனர்.

அவர்கள் அகன்றதும்,

“நானும் போய் பாத்திரத்தை தேய்க்கிறேன்” என்றவள் கூற,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்த ஜீவா அறைக்குள் நுழைய போக,

“மறக்காம அவங்களுக்கு கேட்டு சொல்லு ஜீவா” என்று நினைவுபடுத்திவிட்டு நகர்ந்தவள் பாத்திரத்தை கழுவ துவங்கினாள்.

சில நிமிடங்களில் தன் மேல் நிழலாட திரும்பி பார்த்தாள்.

நரேன் நின்று இருக்க, “என்ன ண்ணா சைலண்டா வந்து நிக்கிற?” என்றவள் கைகள் அது வேலையை செய்தது.

“நீ ஜீவாக்கிட்ட கேட்டுட்டு அவங்களை அழைச்சிட்டு வந்து இருக்கலாம்ல” என்று கூறிட,

“ஏன்னா?” என்று வினவினாள் ஜானவி.

“இல்லை அவங்களை கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடி ஒரு டைம் கேட்டு இருக்கலாம். நீ பேசுனப்போ அவன் ஒரு செகெண்ட் யோசிச்சான். இதுவரைக்கும் அவன் அவங்கப்பாக்கிட்ட இந்த மாதிரி யாருக்காகவும் கேட்டு இருக்க மாட்டான்னு நினைக்கிறேன். திடீர்னு இவங்களுக்காக கேட்க ஒரு மாதிரி இருக்கும்ல. நீங்க கேட்டதும் மறுக்க முடியாம சம்மதிச்சிருக்கலாம்” என்று கூறிட,

இவளது கைகள் ஒரு கணம் வேலை செய்வதை நிறுத்தியது.

“இப்படியும் இருக்குமாண்ணா” என்றவள் வினவ,

“மே பீ இருக்கலாம்” என்றவன்,

“அச்சச்சோ ண்ணா இப்போ என்ன பண்றது. நான் நம்ம ஜீவா தானேன்னு தான் யோசிக்காம பண்ணிட்டேன்” என்றவள் பதட்டத்துடன் கூற,

“நம்ம ஜீவா தான் ஜானு. இருந்தாலும் அவன் இங்க வந்து ஒன் மந்த் கூட ஆகலை. அதுக்குள்ள இப்படி டிஸ்கவுண்ட் எல்லாம்” என்றவன் நிறுத்த,

“ஆமால்ல. நீ சொல்றதும் கரெக்ட் தான். இப்போ என்ன பண்றதுண்ணா?” என்று வருத்தமாக கேட்க,

“ஒன்னும் பண்ண வேணாம். ஜீவாவை பத்தி எனக்கு தெரியும் அவன் தப்பா நினைக்க மாட்டான். இருந்தாலும் இனி ஒரு டைம் அவன்கிட்ட கேட்டுட்டு செய்” என்று கூற,

“சரிண்ணா” என்றவள் சிந்தனையுடனே பாத்திரத்தை கழுவி கவிழ்த்தினாள்.

உள்ளுக்குள் ஒரு முறை யோசித்து கேட்டிருக்க வேண்டுமோ? நம்மளால ஜீவாவிற்கு எதாவது சங்கடம் நேர்ந்திடுமோ? இனி வாயை கொஞ்சம் கட்டுபடுத்த வேண்டும் என்று பலவாறாக சிந்தித்தவள் இரவுணவை முடித்துவிட்டு பால்கனிக்கு வந்து நின்றாள்.

சரியாக அதே சமயம் ஜீவா காதில் அலைபேசியுடன் பால்கனியில் வந்து நின்றான்.

ஜானவி அவனை கவனிக்காது வானத்தை வெறிக்க,

பேசிவிட்டு உள்ளே செல்ல திரும்பிய ஜீவா இவளை கண்டுவிட்டு,

“என்ன பலமான யோசனை?” என்று வினவிட,

அதில் சிந்தை கலைந்து திரும்பியவள், “அது சாரி ஜீவா” என்று தயங்கி தயங்கி கூற,

இத்தனை நாட்கள் படபட பட்டாசாய் பொறிந்தவள் தயங்கி தயங்கி பேசுவது புதிதாக தோன்ற புருவ முடிச்சுடன்,

“எதுக்கு?” என்று வினா தொடுத்தான்.

“இல்லை உன்கிட்ட கேக்காம அவங்களை அழைச்சிட்டு வந்துட்டேன். உன்னோட சுட்சுவேஷன் தெரியாம நானே என் இஷ்டத்துக்கு டிஸ்கவுண்ட் கொடுன்னுலாம் சொல்லி வச்சிட்டேன். அதான்” என்று இழுத்தவள்,

“இன்கேஸ் உனக்கு ஹெல்ப் பண்ற சிட்சுவேஷன் இல்லைனா என்கிட்ட சொல்லிடு ஜீவா நான் அவக்கிட்ட சொல்லிட்றேன். அவங்க புரிஞ்சுப்பாங்க” என்று அமைதியாக மொழிய,

“ஏன் திடீர்னு இப்படி ஒரு திங்கிங்க். நான் எதுவுமே சொல்லலையே?” என்று ஜீவா கேட்டான்.

“நரேன்ண்ணா தான் வந்து சொல்லுச்சு. உன்கிட்ட பர்மிஸன் கேட்டுட்டு அழைச்சிட்டு வந்து இருக்கணும்னு. நான் இங்க இருக்க மத்தவங்ககிட்ட இருக்க மாதிரியே நம்ம ஜீவாதானன்னு நினைச்சு கேட்டுட்டேன்” என்றவள் தயங்கி அவன் முகம் காண,

நொடி நேரத்தில் நூறு வார்த்தைகளை கடகடவென கொட்டிவிட்டு மின்னலென நகர்ந்திடும் பெண்ணவள் தயங்கி வார்த்தைகளை கோர்த்து பேசுவது ஏனோ அவனுக்கு பிடிக்கவில்லை.

அதுவும் வருத்தம் தோய்ந்த அந்த முகம் அவனை ஒரு விதத்தில் தாக்கியது.

“இப்பவும் அதே தான் நம்ம ஜீவா தான் உனக்கு. நீ பீல் பண்ற அளவுக்கு ஒன்னுமே இல்லை. நான் அப்பாக்கிட்ட பேசிட்டேன். அவர் டிஸ்கவுண்ட் போட்டு பண்ணி தர்றேன்னு சொல்லிட்டாரு” என்று மொழிய,

“நிஜமாவா ஜீவா?” என்று ஆழி விழிகளை விரித்தாள்.

“ஹ்ம்ம் ஆமா”

“சூப்பர் ஜீவா” என்று ஒரு நொடி மகிழ்ந்தவள் பிறகு,

“டிஸ்கவுண்ட் எல்லாம் வேணாம் ஜீவா‌. அவங்களுக்கு லாஸ் வராம நல்ல ரேட்க்கு கொடுத்தா போதும்” என்று மெல்லிய குரலில் மொழிய,

“நீ இன்னும் நாலு பேரை அழைச்சிட்டு வந்தாலும் நான் டிஸ்கவுண்ட் போட்டு தருவேன்” என்று ஜீவா கூறினான்.

“விளையாடத ஜீவா. நான் கீழ் வீட்டுக்காரங்களையும் கூட்டிட்டு வந்திடுவேன்” என்று போலியாக மிரட்ட,

“தாரளமா கூட்டிட்டு வா” என்றவனது இதழ்களில் புன்னகை பூத்தது.

“நிஜமாவா?” என்று நம்பாமல் கேட்டிட,

“நிஜம்மா தான்” என்று மீண்டும் அழுத்தி கூற,

“ப்ச் இப்போதான் நிம்மதியா இருக்கு ஜீவா‌. நான் பயந்துட்டே இருந்தேன் எங்க உன்னை கேட்காம அழைச்சிட்டு வந்து தப்பு பண்ணிட்டோமோன்னு” என்றவளது குரலில் பழைய துள்ளல் மீண்டிருந்தது.

“இங்க இருக்க மத்தவங்க மாதிரி தான் நானும் உனக்கு. எப்போவேணா எந்த ஹெல்ப்னாலும் கேட்கலாம்” என்றிட,

“அவசரப்பட்டு சொல்லாத ஜீவா. அப்புறம் நான் தொல்லை பண்ணுவேன்” என்று சிரிப்புடன் கூற,

அவளது சிரிப்பை கண்டதும் இவனுக்கு இதழ் நீண்ட புன்னகை விரிந்தது.

“பண்ணிக்கோ” என்று அனுமதி கொடுத்திட,

“இனிமே பாரு என் டார்சரை” என்று சிரித்தவள்,

“பாக்கலாமே…” என்றவ
னும் இணைந்து சிரித்தான்.

“ஓகே ஜீவா குட்நைட்” என்றவள் விடைபெற,

“குட்நைட்” என்று தலையசைத்தவன் போகும் அவளையே பார்த்திருந்தான்.

முதல் முறையாக ஒரு பெண்ணின் வாடிய முகம் தன்னை பாதிக்கிறது என்பதை உணராமலே அறைக்கு சென்றவன் உறங்கி போனான்…




 
Well-known member
Messages
570
Reaction score
420
Points
63
Jeeva ku janu oda chinna tha varutha padurathu kooda kastam ah iruku ippo varaikkum avan ku ava mela love na ra feel vara la appuram eppidi ivanga love panni irupa ga ah ava yen lavanya ah kalyanam pannan suppose ivan mela thappu irundha naren eppudi innum ivan kooda friend ah vae irupan neraiya question ku innum vidai theriyala apadi enna than ivanga life la nadanthuchi nu parpom
 
Top