• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 12

Administrator
Staff member
Messages
672
Reaction score
1,015
Points
93
தவம் 12:

அவனும் நானும்

அலையும் கடலும்…

“ஜீவா…” என்ற குரல் ஆர்ப்பாட்டமாய் வந்து விழ,
இவனிடத்தில் மென்னகை பிறந்தது.

வந்த இரண்டு நாட்களில் நரேனது குரலை விட ஆர்ப்பரிப்புடன் வந்து விழும் இந்த குரல் இவனுக்கு பழகியிருந்தது.

ஏன் சிறிது பிடித்தும் கூட இருந்ததே…

“இங்க இருக்கேன்” என்று ஜீவா பால்கனியில் இருந்து குரல் கொடுக்க,

“அங்க என்ன பண்ணிட்டு இருக்க ஜீவா?” என்றபடி ஜானவி வர,

“சும்மாதான் மொபைல் பாத்துட்டு இருக்கேன்” என்றவன் கையில் இருந்த அலைபேசியை காண்பிக்க,

“அண்ணா எங்க ஆள காணோம்?” என்று வினவினாள்.

“அவன் வெளியே போய் இருக்கான்” என்றதும்,

“ஓஹோ அண்ணி கூட அவுட்டிங்கா?” என்று சிரிப்புடன் கேட்க,

“ஹ்ம்ம்” என்று ஜீவா தலையசைத்ததும்,

“என்ஜாய் பண்ணுது அண்ணன். நமக்கு ஒன்னும் கொடுத்து வைக்கலை. எனக்கும் ஆள் இருந்தா நானும் அவுட்டிங் போய் என்ஜாய் பண்ணியிருப்பேன்” என்று பெருமூச்சு விட,

“உனக்கு என்ன வயசாகுது. படிக்கிற வயசுல எதுக்கு காதல்” என்றவன் வினவ,

“ஐய்யையோ இந்த அட்வைஸ் எல்லாம் எனக்கு அலர்ஜி ஜீவா” என்று முகத்தை சுழித்திட,

“ஹ்ம்ம்” என்ற ஜீவா அமைதியாகிட,

“எனக்கு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கணும்னு ரொம்ப ஆசை ஜீவா” என்றவளது குரல் அமரிக்கையாய் வர,

இவன் அந்த அமைதியில் புருவம் உயர்த்தி பார்த்தான்.

“நிஜமா? எனக்கு என் அம்மா அப்பாவ பாத்து தான் இந்த ஆசை வந்துச்சு. ரெண்டு பேரும் லவ் மேரேஜ் தான் அவ்ளோ அழகான புரிதல் இருக்கும் அவங்களுக்குள்ள அதே மாதிரி ஒரு காதல் எனக்கும் காலம் முழுக்க வேணும்” என்றவளது குரலில் இருந்த ஏக்கத்தை கண்டவனுக்கு நொடி கடந்து பேச்சு வரவில்லை.

“என்ன ஜீவா பதிலே காணும்?” என்று மீண்டும் இவளே பேச,

“உன்னோட வாழ்க்கையை பாரு உனக்கான காதல் உன்னை தேடி வரும்” என்றிவன் கூற,

“ஹ்ம்ம் வரட்டும் வரட்டும் கொஞ்சம் சீக்கிரம் வந்தா நல்லா இருக்கும்” என்று பழைய தொணிக்கு மாறி இருந்தவள்,

“அப்புறம் மதியம் நான் செஞ்ச பன்னீர் மக்னி எப்படி இருந்துச்சு ஜீவா?” என்று வேறு பேச்சுக்கு தாவ,

“ஹ்ம்ம் நல்லா இருந்தது”

“உண்மையாவா? இல்லை நான் கேக்குறேன்னு பொய் சொல்றீயா ஜீவா?” என்றவள் விழிகளை உருட்ட,

இவனது பார்வை அவளது விழியில் பதிந்து மீண்டது.

“உண்மைக்கே நல்லா இருந்தது”

“உனக்கு சமைக்க தெரியுமா ஜீவா?”

“ம்ஹூம்” என்று உதடு பிதுக்கினான்.

“நான் சொல்லி தர்றேன். ப்ரீயா இருக்கும் போது கத்துக்க” என்றிட,

“நீ யாருக்கும் மரியாதை கொடுத்து பேச மாட்டியா?” என்று முதல் சந்திப்பில் இருந்து தன்னை ஒருமையில் அழைப்பதை நினைவூட்டி கேட்க,

“ஹ்ம்ம் கொடுப்பேனே? இங்க இருக்க பங்கஜம் ஆன்ட்டி அப்புறம் மங்களம் பாட்டி இவங்களை எல்லாம் மரியாதையாதான கூப்பிட்றேன்” என்றவளுக்கு அப்போது தான் அவனுக்கு தரவில்லை என்று கேட்கிறானோ என தோன்ற,

“உனக்கு கொடுக்கலையான்னு கேட்கிறியா?” என்று வினவிட,

‘புரிந்துவிட்டதா?’ என்ற பாவனையில் தலையசைக்க,

“நமக்குள்ள என்ன ஜீவா?” என்றவள் பேசுகையிலே அவளது அலைபேசி அழைத்திட,

“ஒரு நிமிஷம் ஜீவா” என்றவள் அதனை எடுக்க சென்றாள்.

‘நமக்குள்ள என்ன?’ என்றவளது கேள்விதான் அவனிடத்திலும் எதிரொலிக்க, ‘என்ன இருக்கு ஒன்னுமில்லை’ என்று பதிலும் வந்தது.

இரண்டு நிமிடத்தில், “ஜீவா உன்னை பாக்க யாரு வந்திருக்கா பாரு” என்ற குரலுடன் அவள் திரும்பி வர,

‘யார்?’ என்ற எண்ணத்துடன் ஜீவா தலை உயர்த்தினான்.

ஜானவியுடன் மூன்று பெண்கள் வந்தனர். அவர்களும் ஏறக்குறைய அவளுடைய வயதில் தான் இருந்தனர்.

“ஜீவா இது கனிமொழி இவ அனிகா அப்புறம் இவ கீர்த்தி” என்று மூவரையும் அறிமுகப்படுத்த,

“ஹாய்” என்று பொதுவாக ஜீவா கூற,

“ஹாய் ஜீவா” என்று மூவரும் கோரஸாக கூற,

இவர்கள் கூட்டத்திற்கே மரியாதை கொடுப்பது பழக்கம் இல்லை போல என்று ஜீவாவிற்கு புரிந்தது.

“இவங்க எல்லாம் நம்ம காலேஜ் தான் வேற டிபார்ட்மெண்ட்” என்று ஜானு விவரம் கூற,

ஜீவா அமைதியாக கேட்டு கொண்டான்.

அவனுக்கெதிரே இருந்த இருக்கையில் மூவரும் அமர்ந்து கொள்ள,

ஜானு, “நீங்க பேசிட்டு இருங்க. நான் ஜீஸ் போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று சமையலறையில் நுழைய,

புதிதாக வந்தவர்களிடம் தான் என்ன பேசுவது என்று ஜீவா யோசிக்க,

அதற்கு அவசியமே இல்லை என்பது போல அவர்களே வளவளக்க துவங்க,

நால்வரும் ஒரே போல தான் என்றும் தெரிந்தது.

ஐந்து நிமிடத்தில் பழச்சாறு கொண்டு வந்தவள்,

“என்ன ஜீவா நம்ம ஃப்ரெண்ட்ஸ் என்ன சொல்றாங்க?” என்றபடி அவனருகே அமர்ந்தவள் அவன் பதில் மொழியும் முன்,

“நீ இங்க இருக்க யாருக்கிட்டயும் இன்ட்ரோ ஆகலைல. வா ஒவ்வொரு வீட்டையும் தட்டி நாமலே இன்ட்ரோ ஆகிக்கலாம்” என்றிட,

“என்ன?” என்றவன் திகைப்புடன் நோக்கினான்.

நான்கு கேள்வி கேட்டால் இரண்டே வரியில் பதில் கூறும் அமைதி பேர்வழி அவன் ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி அறிமுகம் செய்து கொள்வதா?

“வொர்க் இருக்கா ஜீவா? ஒன் ஹவர்ல இன்ட்ரோ முடிச்சிடலாம்” என்று மேலும் வினவ,

“நோ வேணாம்” என்று மறுத்தான்.

“சரி விடு நாளைக்கு வீட்டுல உனக்கு வெல்கம் பார்ட்டி வச்சிட்றேன்” என்று மற்றொரு குண்டை தூக்கி போட, இவனிடத்தில் அதிர்ச்சி.

அவனது முக பாவனையை கண்ட மற்ற மூவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

கனி, “ஹேய் போதும்டி அவர் எழுந்து ஓடிட போறாரு” என்று சிரிப்புடன் கூற,

அவள் தன்னை கலாய்த்திருக்கிறாள் என்று புரிய ஜீவா முறைத்தான்.

“ஜெஸ்ட் ஃபார் பன்” என்று கண் சிமிட்டியவள் வேறு பேச்சுக்கு தாவினாள்.

நண்பர்கள் நால்வரும் ஏதோ நேர்முக தேர்வு நடத்துவது போல ஜீவாவிடம் கேள்விக்கணைகளை தொடுக்க, அவனும் அமைதியாக பதில் அளித்தான்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்த பிறகு தான், கனிமொழி,

“சரி ஜீவா நாங்க கிளம்புறோம்” என்று எழுந்து கொள்ள,

ஜீவா, ‘சரி’ என்பதாய் தலையசைக்க,

“என்ன அவசரம் பொறுமையா போகலாம்” என்று கீர்த்தி மொழிய,

“ரெக்கார்ட் ஒர்க் இருக்குல மறந்துட்டியா? நாளைக்கு வருவோம்” அனிகா கூறிட,

“ஹ்ம்ம்” என்று மனமே இல்லாது தலையசைத்த கீர்த்தி எழுந்து கொள்ள,

“நாளைக்கு வர்றோம் ஜீவா” என்று மூவரும் விடைபெற,

அவர்களை அனுப்ப சென்றவள் திரும்பி வந்து,

“ஜீவா உனக்கு ஆள் இருக்கா?” என்று படபடவென வினவ,

ஜீவா ஒரு நொடி திகைத்தான்.

“சொல்லு ஜீவா உனக்கு லவ்வர் இருக்கா?” என்று விழிகளை விரித்து வினவ,

விரிந்த விழிகளை கண்டவன்,

“எதுக்கு இந்த கொஸ்டீன்?” என்று வினா தொடுக்க,

“எல்லாம் காரணத்தோட தான் கேட்குறேன். நீ பர்ஸ்ட் சொல்லு” என்று மீண்டும் வினவ,

“ம்ஹூம் இல்லை” என்று மொழிய,

“வாவ் சூப்பர்” என்று குதூகலித்தாள்.

‘எதற்கு இந்த பாவனை?’ என்று ஜீவா நோக்க,

“ஜீவா கீர்த்திக்கு உன்னை பிடிச்சிருக்காம்” என்று முகம் முழுவதும் சிரிப்புடன் கூற,

இவனது முகத்தில் அதிர்ச்சி ரேகைகள்.

“என்ன?” என்று அதிர்வு மாறாது கேட்க,

“ஆமா ஜீவா. அவ க்ளாஸ்லயே அவ மட்டும் தான் கமிட் ஆகலைன்னு பீல் பண்ணிட்டு இருந்தா இப்போ அவளுக்கும் ஒரு ஆள் கிடைச்சிருச்சு” என்று புன்னகையுடன் கூற,

இவன் தான் புரியாத மொழியில் பேசுவது போல பார்த்து வைத்தான்.

“கீர்த்தி ரொம்ப நல்ல பொண்ணு. அவ உன்னை நல்லா பாத்துக்குவா. அவ அம்மா அப்பா கூட ரொம்ப நல்ல டைப் தான். லவ் மேரேஜை அக்சப்ட் பண்ணிப்பாங்க” என்று தன்னிஷ்டத்திற்கு பேசி கொண்டு செல்ல,

“ஹே ஸ்டாப் ஸ்டாப்” என்றவன் கூறியதும்,

“என்ன ஜீவா?” என்று வினவிட,

“படிக்கிற வயசுல லவ் பண்ண கூடாதுனு இப்போ தான சொன்னேன்” என்று கூற,

“அட போ ஜீவா காதல் எல்லாம் வயசு பாத்து வராது” என்றவள் சலித்து கொள்ள,

“உன் பேமிலி எல்லாம் எங்க இருக்காங்க?” என்று ஜீவா கேட்க,

“எதுக்கு ஜீவா?”

“உன்னை பத்தி கம்ப்ளைண்ட் பண்ண தான்” என்றதும் ஏதோ காமெடியை கேட்டது போல சிரித்தவள்,

“எல்லாரும் இங்க தான் இருக்காங்க” என்றிட,

“இங்கையா?”

“எஸ் பக்கத்து வீட்டுல தான் இருக்காங்க. நரேன் அண்ணா எதுவும் சொல்லலையா?” என்று வினவிட,

“ம்ஹூம் இல்லை” என்று ஜீவா தலையசைக்க,

“ஓ… வா நானே இன்ட்ரோ கொடுக்குறேன்” என்று கைப்பிடித்து அழைத்து செல்ல,

ஜீவா இவள் படிப்பதற்காக இங்கு அறை எடுத்து தங்கியிருப்பதாக தான் நினைத்து இருந்தோம் என்று எண்ணியபடி அவளுடன் நடக்க,

வீட்டிற்குள் அழைத்து சென்றவள்,

“இதோ இவங்க தான் என் அம்மா அப்பா” என்று கூறிட,

திரும்பி சுவற்றில் மாலையுடன் தொங்கப்பட்டிருந்த புகைப்படத்தை கண்டவன் அதிர்வுடன் அவளை நோக்கினான்.

“என் அப்பா மாதவன் எய்ம்ஸ்ல பார்மஸிஸ்ட்டா வொர்க் பண்ணாரு அம்மா பவித்ரா ஹவுஸ்வொய்ப். எவ்ளோ அழகா சிரிச்சிட்டு இருக்காங்க பாரு” என்று ரசனையுடன் கூற,

ஜீவா அதிர்ச்சி விலகாது,

“என்னாச்சு இவங்களுக்கு?” என்று அதிர்வு தாங்கிய குரலில் கேட்க,

“நான் டென்த் படிக்கும் போது ஒரு ஆக்ஸிடென்ட். போகும் போது கூட சேர்ந்து போய்ட்டாங்க. இந்த காதலை பாத்து தான் நானும் காதலிக்க ஆசைப்பட்டேன்” என்றவள் புன்னகையுடன் கூற,

இவனுக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது. தான் இவளது குடும்பத்தை பற்றி பேசியிருக்க கூடாதோ என்று.

“சாரி” என்றவன் வருந்திய குரலில் கேட்க,

“எதுக்கு ஜீவா. நீ தெரிஞ்சுக்க கேட்ட நான் சொன்னேன் அவ்ளோதான்” என்றவள்,

“அம்மா அப்பா இது தான் ஜீவா என்னோட புது ப்ரெண்ட் நான் நேத்து சொன்னேனே” என்று புகைப்படத்தை பார்த்து கூற,

ஜீவா விழியகலாது அவளை நோக்கினான்.

“என்ன ஜீவா அப்படி பாக்குற” என்று ஏதுமில்லாத குரலில் வினவ,

“அப்போ இருந்தே தனியா இருக்கியா?” என்று ஜீவா கேட்க,

“இல்லை. பாட்டி இருந்தாங்க. அதோ அந்த போட்டோல இருக்காங்களே அவங்க தான். லாஸ்ட் இயர் நிமோனியாவால அவங்களும் போய்ட்டாங்க” என்றிட,

“ஓ…” என்றவனது பார்வை பாட்டியின் புகைப்படத்தின் மீது படிந்தது.

இத்தனை நேரம் இருந்த இலகுநிலை மாறி மனதில் பாரம் ஏறிவிட்டது.

ஆனால் ஜானுவிடம் பெரிதாக பாதிப்பு ஏதுமில்லை.

அவனது முக மாற்றத்தை கவனித்தவள்,

“ஜீவா நீ எதுக்கு இப்போ பேஸ இப்படி வச்சிட்டு இருக்க? எப்பவோ நடந்து முடிஞ்சது இதெல்லாம். விடு” என்றவள்,

“பர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்து இருக்க என்ன குடிக்கிற. டீ போடவா?” என்று வினவிட,

“வேணாம். இப்போ தான ஜீஸ் குடிச்சேன்” என்று ஜீவா மறுக்க,

“அது ரொம்ப நேரம் ஆச்சு. டீ போட்றேன் குடிச்சிட்டு தான் போகணும். உட்காரு” என்று கைப்பிடித்து அமர வைத்தவள் அடுக்களைக்குள் நுழைந்திட,

போகும் அவளையே பார்த்தவனுக்கு இப்பெண் தனியாக எப்படி இந்த உலகில் வாழ்கிறாள் என்று கேள்வி எழுந்தது.

விழிகள் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த விதவிதமான புகைப்படத்தில் பதிந்தது.

எல்லாவற்றிலும் ஜானவி பிறந்தது முதல் பள்ளி படிப்பு வரை பெற்றோருடன் சிரித்து கொண்டிருந்தாள்.

இத்தனை கவலைகளை வைத்து கொண்டு எப்படி இவ்வளவு சிரிப்புடன் நடமாடுகிறாள் என்று ஆச்சரியமாக இருந்தது.

“பால் இல்லை ஜீவா ப்ளாக் டீ ஓகே வா?” என்று எட்டி பார்த்து ஜானு கேட்க,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தான்.

பத்து நிமிடத்தில் தேநீரோடு வந்தவள்,

“இந்தா ஜீவா பர்ஸ்ட் டைம் இப்படி ப்ளாக் டீ கொடுக்குற மாதிரி ஆகிடுச்சு. நெக்ஸ்ட் டைம் ஸ்வீட் செஞ்சு தர்றேன் ஜீவா” என்று சிரித்தபடி எதிரில் அமர,

ஜீவாவும் மெலிதாக புன்னகைத்தான்.

“உன்னோட பீஸ் மத்த எக்ஸ்பென்ஸ்க்கு என்ன பண்ற?” என்று ஜீவா கேட்க,

“அப்பா கொஞ்சம் சேவிங்க்ஸ் போட்டு வச்சிருந்தாரு அப்புறம் அம்மாவோட ஜுவல்ஸ் இருக்கு. தென் பிளாட் ரென்ட் வருதே” என்று கூற,

“எந்த பிளாட்?” என்று ஜீவா கேட்டான்.

“நீங்க இருக்க பிளாட் தான். உனக்கு தெரியாதா? உனக்கு ஹவுஸ் ஓனர் நான் தான்” என்று காலரை தூக்கிவிட்டு கூற,

“ஓ…” என்றவனுக்கு இது புது செய்தி.

“பணத்துக்கும் பிரச்சனை இல்லை. பாசத்துக்கும் பிரச்சனை இல்லை. இங்க இருக்க எல்லாரும் என்னை அவங்க வீட்டு பொண்ணு மாதிரி தான் பாத்துக்கிறாங்க” என்றவள்,

“அப்புறம் உன்னை பத்தி சொல்லு. உன் பேரன்ட்ஸ் என்ன பண்றாங்க ஜீவா?” என்று வினவிட,

“அப்பா பிஸ்னஸ் பண்றாங்க. அம்மா ஹவுஸ்வொய்ப்”

“ஓ… என்ன பிஸ்னஸ் ஜீவா?”

“கோல்ட் பிஸ்னஸ்”

“ஓ… ஜீவல்லரி ஷாப்பா?”

“ஆமா”

“சமூகம் பெரிய இடம் போல” என்றவள் புருவம் உயர்த்த,

“அப்படிலாம் இல்லை” என்று தான் புன்னகைத்தான்.

“நகைக்கடை ஓனருக்கு இவ்ளோ தன்னடக்கமா” என்று சிரித்தவள்,

“கழுத்துல கையில ஒரு நகையை கூட காணோம்?” என்று கேட்க,

“நகைக்கடை வச்சிருந்தா போட்டுக்கிட்ட சுத்தணுமா?” என்று ஜீவா கேட்க,

“இல்லையா பின்ன. நான் மட்டும் நகைக்கடை ஓனர் பொண்ணா இருந்தா டெய்லி புதுசா புதுசா போட்டு காலேஜ்ல மார்க்கெட்டிங் பண்ணி இருப்பேன். ஐடியா இல்லை ஜீவா உனக்கு” என்று நகைக்க,

“சரிதான்” என்று தலையசைக்க,

“அப்புறம் நெக்ஸ்ட் மந்த்ல இருந்து ரென்ட்ட ரெண்டாயிரம் ஏத்துறேன். நீ மிடில் கிளாஸ் பையன் நினைச்சு தான் குறைஞ்ச அமௌன்ட்க்கு விட்டேன்” என்று சிரிப்புடன் வம்பிழுக்க,

அவளது எண்ணம் புரிந்தவன் தானும், “ஹ்ம்ம் கொடுக்கலாமே” என்றவன்,

“அதுக்கு முன்னாடி சுவத்துல நிறைய இடத்துல கரையான் அரிச்சு இருக்கு அதை சரி பண்ணி கொடுங்க ஓனர்” என்றிட,

“அதெல்லாம் நீங்க தான் சரி பண்ணிக்கணும். வீடு தான் கொடுக்க முடியும் பெயிண்ட்லாமா அடிச்சு கொடுக்க முடியும்” என்று விடாமல் கூற,

இருவருக்கும் இறுதியில் சிரிப்பு
வந்துவிட்டது.

“என்ன சிரிப்பு சத்தம் பலமா இருக்கு?” என்றபடி நரேன் தன்னுடைய வீட்டு கதவை திறக்க,

“நரேண்ணா உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றவள்,

“நம்ம கீர்த்திக்கு நல்ல பாய்ப்ரெண்ட் கிடைச்சாச்சு” என்று ஆர்ப்பாட்டமாய் கூறி ஓட,

“ஹேய் அவன்கிட்ட எதையும் உளறிவைக்காத” என்றபடி ஜீவா பதறி அவள்பின்னே ஓடினான்.


 
Well-known member
Messages
570
Reaction score
420
Points
63
Janu oda aasai yae oru love life vazhanum na ra thu than aana kadaisila andha love yae avaluku illa nu agiduthu
 
Well-known member
Messages
1,112
Reaction score
801
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Top