- Messages
- 545
- Reaction score
- 735
- Points
- 93
டீசர்,
"ஹேய் பொறுமையா போடி. நீ விழுந்து வாரி வைச்சா அஸ்க்கு பக்கத்தில நமக்கொரு பெட் தான் ரெடி பண்ணனும். இப்ப அவன் கூட இருக்கிறதை விட்டு இது ரொம்ப முக்கியமா சாரா. சொல்றதை எதையாவது கேட்குறீயா நீ?" என்று இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள் மஹிமா.
"இல்ல மஹி, இதை நம்ம சும்மா விடக் கூடாது. எவ்வளவு திமிர் இருந்தா இப்படி பண்ணியிருப்பானுங்க. கொஞ்சமாச்சும் நம்ம பயம் காட்டணும் இந்த இடியட்ஸ்க்கு. சீனியர்னா என்ன வேணும்னாலும் பண்ணுவாங்களா? அஸ்வின்க்கு எதுவும் இல்ல, எதாவது ஆகி இருந்துச்சு இவனுங்களை சும்மாவே விட்டிருக்க மாட்டேன்" என்ற சாரா அத்தனை வேகத்துடன் வாகனத்தை அந்த ஆண்கள் விடுதி முன்னால் நிறுத்தி இருந்தாள்.
அவளின் வேகத்தில் மஹிமாவின் தலை சாராவின் முதுகில் மோதி இருக்க, "சைத்தானே பொறுமையா ப்ரேக் போட மாட்டியா? இடிச்சுக்கிட்டேன்" என்ற மஹிமாவிற்கு சாராவின் தற்பொழுதைய செயலில் விருப்பமில்லை. ஆனால், "நீ வந்தா வா, இல்ல நான் மட்டும் தனியா போய்க்கிறேன்" என்று தன்னுடைய வண்டியுடன் நின்றிருந்தவளை தனியே அனுப்ப விருப்பமிருக்கவில்லை.
அதுவும் அவள் இருக்கும் கோபத்தில் யாருடன் வேண்டுமானும் சண்டை கட்டி ஏறும் வேகத்தில் நின்றிருந்தாள். தான் உடன் போனாள் ஓரளவாவது அவளை அடக்கி விடலாம் என்ற எண்ணத்தில் அவளின் பின்னால் தொற்றிக் கொண்டு வந்திருந்தாள்.
பிரபல பொறியியல் கல்லூரியின் ஆண்கள் விடுதி, அது விடுமுறையான ஞாயிற்றின் காலைப்பொழுது.
மஹிமாவின் எந்த பேச்சுக்களையுமே காதில் போட்டுக் கொள்ளாது வேகமாக கீழிறங்கியவள் நடக்க ஆயத்தமாக, "ஏய் சாரா, திரும்பவும் சொல்றேன். இது பாய்ஸ் ஹாஸ்ட்டல். இங்க பார் வாசல்ல நிற்கிறதையே ஒரு மாதிரி பார்க்குறானுங்க. நான் வேற ரொம்ப அழகா இருக்கேன்" என்று அந்த நேரத்தில் காமெடி செய்ய முயன்ற மஹிமாவை இடுப்பில் கையூன்றி முறைத்தவள்,
"ஓகே, நீ வெளியவே நில்லு, நான் போய் பேசிட்டு வரேன்" என்றவள் தன் கைகளை பிடிக்க முயன்ற மஹிமாவிடமிருந்து விலகி விடுவிடுவென உள்ளே நுழைந்திருந்தாள்.
"ச்சை...இவளோட, ஒரே அக்கபோரை கூட்டுறாளே. ஒரு வேளை நம்ம காலேஜ் டிசி கிழிக்காம விட மாட்ட போலயே" என்று புலம்பிய மஹிமா ஏறக்குறைய சாரா பின்னால் தலைதெறிக்க ஓடினாள். இடையில் அவளது உயர்ந்த ஹீஸ்ல் வேறு தடுமாற செய்ய, 'க்கும், இது வேறையா? ஆண்டாவா என்னை மட்டும் எப்படியாவது காப்பாத்திடுடா. இவக் கூட சவகாசம் வைச்சதுக்கு' என்று எண்ணியவள் சாராவை நெருங்கி இருந்தாள்.
சாரா, மஹிமா இருவரும் பிரபல பொறியியல் கல்லூரியில் கணிப்பொறி அறிவியில் துறையில் மூன்றாமாண்டு பயிலும் நவயுக நவீன மங்கைகள். அவர்களின் உடலை ஒட்டிய டீசர்ட் ஜீன்ஸூம் போனி டைலும் அதை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
மஹிமா கூறியது போல் கால் சட்டையுடனும் அதற்கும் குறைவான உடையுடனும் ஆங்காங்கே மாணவர்கள் அமர்ந்திருக்க சிலர் உடற்பயிற்சி செய்ய மற்றொரு புறமோ மைதானத்தில் பந்து விளையாட என்று அந்த இடமே களைகட்டி தான் இருந்தது. அடுத்த வாரம் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் இருப்பதால் இப்படி. இல்லையென்றால் ஒரு ஈக்கூட இல்லாது எப்பொழுதும் வெறிச்சோடி இருக்கும். அது பெரிய கல்லூரி மட்டும் பல்வேறு துறைகளை கொண்டிருப்பதால் எல்லாரும் எல்லோருக்கும் நிச்சயம் பரிட்சயமாக இருக்க முடியாது.
"இரு சாரா, நான் தினேஷ்க்கு கூப்பிடுறேன். அவன் வந்து நம்மளை கூப்பிட்டு போகட்டும்" என்றவள் அலைபேசியை கையில் எடுக்க சாராவோ அருகில் இருந்த மாணவர்களை நெருங்கி, "சிவில் டிப்பார்ட்மெண்ட் பைனல் இயர் விக்கியை பார்க்கணும். எந்த ரூம்" என்றிட அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தாலும், " தேட் ப்ளோர் லெப்ட் சைல்ல செகண்ட் ரூம்" என்று கூறியிருக்க வேகமாக மாடியேறி இருந்தாள்.
"இவன் வேற சரியான நேரத்தில சொதப்புவான் பரதேசி" என்று திட்டிய மஹிமா தன்னுடைய மற்றொரு தோழனுக்கு அழைத்தப்படி சாராவை பின்தொடர, அவளோ இவள் கீழ்தளத்தில் நிற்க மூன்றாம் தளம் சென்றிருந்தாள்.
"அடேய், எவனாவது எடுங்கடா போனை. இவ வேற ஜெட் வேகத்தில போறாளே. இவ பண்ற சேதாரத்துக்கு எவன் பதில் சொல்றது" என்ற மஹிமாவும் அலைபேசியை கைவிட்டு சாராவை நோக்கி நடந்திருந்தாள்.
தன் முன்னிருந்த அறைக்கதவை அத்தனை ஆக்ரோஷமாக தட்டியிருந்தாள் சாரா.
"டேய் யாருடா இந்த நேரத்தில. தூக்கத்தை கெடுக்கவே வந்திடுவானுங்க" என்று புலம்பியவன், "ஒரு நிமிஷம் வரேன்" என்று சத்தமாக குரல் கொடுத்தப்படி படுக்கையில் இருந்து எழுந்து கண்களை கசக்கி கொண்டிருந்தான்.
நேற்று பின் இரவில் தான் உறங்க சென்றிருக்க பாதி உறக்கம் கண்களில் தேங்கி நிற்க அவன் கட்டிலை விட்டு எழுந்து வருவதற்கும் நான்கு முறைக்கு மேல் பாவை கதவை தட்டியிருந்தாள்.
"ச்சு...எந்த அறிவு கெட்டவன் தெரியலையே! இரண்டு நிமிஷம் பொறுக்க முடியாதா எத்தனை தடவை தட்டிட்டு இருக்கானுங்க" என்று எரிச்சல் மேலோங்க வேகமாக கதவை திறந்தவன் புருவம் எதிரில் நின்றிருப்பவளை கண்டு ஒரு முறை வினாவாய் ஏறி இறங்க அவளோ இருந்த கோபத்தில் எதிரில் நின்றவனின் சட்டையை பிடித்திருந்தாள் என்னதென்று யூகிக்கும் முன்.
அவள் நடவடிக்கையில் அவனின் தூக்கமெல்லாம் விலகி ஓடியிருக்க அவளை அப்படியொரு முறை முறைத்து அவளின் கையை எடுத்து விட்டிருக்க, "யூ..யூ ராஸ்கல்" என்றவளின் கூச்சலில் பக்கத்து அறையிலும் அந்த ப்ளோரிலும் நின்றிருந்த மாணவர்களும் ஒரு நிமிடம் அதிர்ந்து பின், "டேய் யார்டா சித் இந்த பொண்ணு" என்று அவனருகில் வந்து சூழ்ந்து கொண்டனர்.
மஹிமாவை தினேஷ் பாதி வழியிலே பார்த்திருக்க, "ஏய் பிசாசே! பாய்ஸ் ஹாஸ்டல்ல நீ என்ன பண்ற?" என்று அவளருகில் வர, "ஆமா இப்ப வா, அங்க பார் ஒருத்தியை அக்கபோரை கூட்டிட்டு இருக்கா. வா முதல்ல" என்று அவனை இழுத்து வந்திருக்க அவர்கள் இருவரும் சாராவை நெருங்கும் முன் அவள் தன்னுடைய சாகசத்தை நிகழ்த்தி இருந்தாள்.
"ஆத்தாடி, ராட்சசி பேசுறேன் சொல்லி சட்டை பிடிச்சு வம்பிலுத்திட்டு இருக்காளே?" என்று பதறி நெஞ்சை பிடித்த மஹிமா அவளை நோக்கி ஓடி வந்திருக்க,
"ஹேய் நீ யாரும்மா? எங்க ஹாஸ்டல்க்கே வந்து எங்க சேர்மேன் மேல கை வைச்சிருக்க? உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும். இந்த பொண்ணை சும்மா விடக் கூடாதுடா சித்" என்று ஆளாளுக்கு எகிற வர அதையெல்லாம் கண்டு கொள்ளாது கைகளை கட்டியப்படி அசட்டையாக நின்றிருந்த சாராவின் மீது தான் சித்தின் விழிகள் முழுவதும்.
'ரொம்ப தான் திமிர், கொஞ்சமாச்சும் பயமிருக்கா இத்தனை பசங்களுக்கு இடையில நிற்கிறோம்னு' என்று அவளை மெச்சியவனை, 'அடேய் அவ உன்னை அசிங்கப்படுத்திருக்கா. அவளையே புகழ்ந்து தள்ளுறீயே, மானங்கெட்டவனே!' என்று மனசாட்சி காரித்துப்பியது.
"சாரா எதுக்குடி அந்த அண்ணா சட்டைய பிடிச்சா, அவங்களுக்கும் அவளுக்கும் என்ன பிரச்சனை?" என்ற தினேஷ் மஹிமாவை சுரண்ட, "இவன் வேற படுத்துறானே! முதல்ல அங்க நடக்கிற பஞ்சாயத்தை முடிப்போம். அப்புறம் உனக்கு டிடெய்லா எக்ஸ்ப்ளைன் பண்றேன் டா" என்ற மஹிமா, "சாரா என்ன பண்ணி வைச்சிருக்க?" என்று கடிந்தப்படி அவளருகில் வந்து சேர்ந்திருந்தாள்.
சுற்றி இருந்தவர்களின் கூச்சல் அதிகமாக என்னவோ ஏதோவென்று கீழிருந்த மாணவர்கள் மூன்றாம் தளத்தை நோக்கி விரைந்திருக்க ஏறத்குறைய முக்கால்வாசி மாணவர்கள் அங்கு சூழ்ந்து விட்டனர்.
"ஹேய் மஹி, சாரா. இங்க என்ன பண்றீங்க?" என்று அவளின் வகுப்பு மாணவர்கள் அவர்களை பிடிக்க மஹிமாவோ பதில் சொல்ல இயலாது தலையில் கை வைத்து நின்றருந்தாள்.
கீழ் சாராவிற்கு விலாசம் கூறிய மாணவன், "சிஸ்டர் நான் லெப்ட் சொன்னா நீங்க ஏன் ரைட் சைட் ரூமை தட்டி இருக்கீங்க?" என்று கலவரத்தின் மையப்புள்ளியை எடுத்துக் கொடுக்க சாரா அதிரவெல்லாம் இல்லை.
"ஓஓ..." என்றவள் அவர்களை விலக்கி இடது பக்கம் நகர விழைய, "நீ முதல்ல சித் மேல கை வைச்சதுக்கு பதில் சொல்லிட்டு கிளம்பும்மா" என்று கூச்சலில் அந்த இடமே அதிர அவளின் வழியை மறைத்துக் கொண்டனர்.
சித்விக் இன்னும் நடந்தவற்றை கிரகிக்க முடியவில்லை. 'அட என்ன தான் நடந்தது?' என்று நினைத்தவனின் கண்களை அத்தனை அலட்சியத்துடன் நின்றிருந்த சாரா மீதிருந்து மீட்க முடியவில்லை.
அவர்களை நிமிர்ந்து பார்த்து, "நான் போக கூடாது அவ்வளவு தானா?" என்று வெகு சாதரணமாக வினவியவள், "தினேஷ், நீ போய் சிவில் டிப்பார்ட்மெண்ட் பைனல் இயர் விக்கியை இங்க கூட்டிட்டு வா. நானும் பஞ்சாயத்தை முடிக்காம இங்க இருந்து நகர மாட்டேன்" என அருகில் இருந்த படிக்கட்டுகளில் அமர்ந்து விட்டாள்.
'ப்பா...என்ன பொண்ணு இது?' என்ற ரீதியில் அங்கிருந்த அனைவரும் வாயை பிளந்து அவளையே பார்க்க அதில் சித்விக்கும் அடக்கம்.
தொடரும்...
வணக்கம் மக்களே! லேட்டா வந்ததுக்கு மன்னிச்சூசூ...டீசர் எப்படி இருக்குனு கமெண்ட் பண்ணுங்க தென் ஆழினி ஸ்டோரி முடிந்ததும் இதை தொடங்கிடலாம்....

Last edited: