Member
- Messages
- 55
- Reaction score
- 2
- Points
- 8
மாலை ஆறு மணி... சுதா மருத்துவமனையில் பொதுமக்கள் குறைவாகதான் வந்து இருந்தார்கள். அந்த மாலை வேளையில் குமார் கல்லூரியை முடித்து விட்டு மருத்துவமனைக்கு தன் wheezing problem check-up காக செல்கிறான். மருத்துவ மனையில் நுழைந்து தன் check-up முடித்த பின் result காக காத்து கொண்டு இருந்தான். அப்பொழுது அவனிற்கு பாட்டியிடம் இருந்து அழைப்பு கைபேசியில் வருகிறது.
"பாட்டி இன்னிக்கு நான வர்ற கொஞ்ச லேட் ஆகும்... இப்போதான் check-up பண்ணாங்க...result வர லேட் ஆகும் போல...நான் வந்ததும் கிளம்பி வரேன் பாட்டி..."என கூறிவிட்டு கைபேசியை வைத்து விட்டு குமார் திரும்ப, எதிரில் செவிலியர் மாலா கையில் அவனது result வைத்து நின்று கொண்டிருந்தாள்.
"எல்லாம் normal தான்பா..." என கூறிவிட்டு அவனது reports அவனிடம் கொடுக்கிறாள்.
"என்ன அந்த மீரா பொண்ணை பார்த்தியா... என்னாச்சு....?"என மாலா கேட்க,
"பார்த்தேன்... ஆனா எங்க காலேஜ் ல என்னமோ வித்தியாசமா நடக்குது...உங்களுக்கு டைம் இருந்தால் என்கூட கொஞ்சம் பேசரீங்களா...உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்"என குமார் கூற,
மாலா சிறிது யோசித்து விட்டு, "சரி...என்னோட duty இன்னும் கொஞ்ச நேரத்துல முடிந்திடும்...நீ கொஞ்சம் wait பன்னா நாம கேன்டீன் போய் பேசலாம்" என மாலா கூறுகிறாள்.
"சரிங்க நான் வெயிட் பண்றேன்..."என கூற, மாலா நடந்து செல்வதை பார்த்து கொண்டே திரும்புகிறான் குமார். அப்பொழுது அங்கே ஒரு குழந்தை குடையுடன் விளையாடுவதை பார்த்து அருணின் நினைவு வர பெருமூச்சுடன் காத்திருக்கிறான்.
சிறிது நேரம் கழித்து மாலா திரும்பி வர, "வாப்பா...duty முடிஞ்சுது... கேன்டீன் போலாம்"என மாலா இரவு ஏழு மணிக்கு மருத்துவனையில் உள்ள கேன்டீனிற்கு அழைத்து செல்கிறாள். அங்கு சென்று இரண்டு தேநீர் வாங்கி கொண்டு நாற்காலியில் அமர்ந்து தேநீர் பருகுகிறார்கள். குமார் திரும்பி சுற்றும் முற்றும் பார்கிறான். இரவு ஆரம்பித்து விட்டதால் ஆள் நடமாட்டம் இல்லை.
"சொல்லுங்க என்ன பேசணும் என்கிட்ட..."என மாலா பேச்சை ஆரம்பிக்க,
"ரெண்டு நாள் முன்னாடி எங்க கிளாஸ்ல செமஸ்டர் எக்ஸாம் வந்துச்சு...நான் சீக்கிரம் எழுதி முடிச்சிட்டு வெளிய வந்து பார்த்தேன். மீரா இருந்தாள். சரின்னு நான் அவகிட்ட பேசிட்டு இருந்தேன். அப்போ எங்க கிளாஸ்ல இருக்க அருண் அவங்க அப்பா அம்மா இறந்த செய்தி கேட்டு வேகமாக வெளிய வந்தான். அப்போ அவன் மீராவை பார்த்து பயந்து போய் தவறுதலாக இறந்துட்டான். அந்த மீராகிட்ட யாரும் பேசறது இல்ல. அவளை யாருக்கும் புடிக்கல போல அதான் பேசறது இல்லைனு நான் இவ்வளவு நாளாக நினைச்சுட்டு இருந்தேன். ஆனா உண்மை என்னன்னா அவகிட்ட யாரும் பேசாததுக்கு காரணம் அவளை பார்த்து எல்லாரும் பயப்படறாங்க."என குமார் சொல்லி முடிக்க,
"என்னது பயப்படராங்களா...?எதுக்கு பயம்...?"
"அதுதான் எனக்கும் தெரியல..யாரும் என்கிட்ட சொல்லல... சொல்ல கூட பயப்படராங்க...உங்களுக்கு இதை பத்தி ஏதாச்சும் தெரியுமா...நவீன் உங்ககிட்ட இதை பத்தி ஏதாச்சும் சொல்லி இருக்கானா..?"என மாலாவிடம் குமார் கேட்க,
"தெரியலை...நவீன் இதை பத்தி எதுவும் என்கிட்ட சொன்னது இல்ல..ஆனா உங்க கிளாஸ்ல என்னமோ வித்தியாசமா இருக்குனு மட்டும் ஒரு தடவ சாப்பிடும் போது சொன்னான்.."என மாலா குமாரிடம் கூற,
"ஆமா என்னமோ வித்தியாசமா நடக்குதுன்னு தெரியுது என்னன்னு தெரியல...யாரும் சொல்ல கூட மாட்டங்கராங்க..நீங்க முடிஞ்சா உங்க தம்பிகிட்ட கேட்டு பாருங்க..."
"சரி நான் கேட்டு பாக்கறேன்...என்னன்னு விசாரிச்சு சொல்லறேன்...நீ படிக்கறதுல கவனம் செலுத்து...நான் இதை கேட்டு சொல்லறேன்..."என மாலா புன்முறுவலுடன் கூறிவிட்டு எழுந்து,"சரிப்பா...நான் வீட்டுக்கு கிளம்பறேன்.."என விடைபெற்று கொண்டு மாலா செல்கிறாள்.
மாலா சென்றவுடன் மருத்துவமனையில் இருந்து குமார் கிளம்பி செல்கிறான் வீட்டிற்கு.
மணி எட்டு...மேகம் நிலைவை ஆட்கொண்டு இருளை கக்கி கொண்டு இருந்தது...குமார் வீட்டிற்கு சென்று கொண்டு இருக்க சாலையின் எதிரில் அவனது சக மாணவியான திவ்யாவை பார்கிறான். திவ்யா குமாரை பார்த்தவுடன், " இன்னும் நீ வீட்டிற்கு போகலையா... காலேஜ் uniformல இருக்கே..."என கேட்க,
"இல்லை... check-up காக வந்தேன்...நீ இங்க என்ன பண்ற"என குமார் கேட்க,
"நான் இங்க பக்கத்துல பர்னிச்சர் கடைக்கு வந்தேன்..."என திவ்யா கூறிகொண்டு இருக்க, திடீரென ஒரு பெரிய காற்று அவர்களை கடக்க, பக்கத்தில் வாகனத்தில் இருந்த கண்ணாடி சிறிது நழுவி, அவர்கள் மேல் விழ போக, குமார் பாய்ந்து திவ்யாவை தள்ளி விட்டு அவனும் வேறு புறம் போய் விழுகிறான். கீழே விழுந்த கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து கிடக்க, கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் ஓடி வருகிறார்கள்.
"நல்ல வேளை தப்பிச்சோம்...."என குமார், ஆசுவாசப்படுத்திக்கொண்டு நிமிர்ந்து திவ்யாவை பார்க்கிறான்.
பயந்த முகத்துடன்,"போச்சு... எல்லாரும் சொன்னது உண்மைதான்...அது ஆரம்பிச்சுருச்சு...இந்த மாசம் நானா...? நான் இருக்க கூடாது..."என அழ தொடங்கி கொண்டே எழுந்து திவ்யா ஓடுகிறாள். குமார் எழுவதிற்குள் அவள் அங்கு இல்லை.குமார் வேறு வழி இல்லாமல் அவன் வீட்டிற்கு சென்று உறங்க முயல்கிறான்.ஆனால் அவனால் முடியவில்லை.
"இது எல்லாத்துக்கும் காரணம் மீராகிட்ட கேட்டா தெரியும்.. நாளை அந்த பொம்மை கடைக்கு போவோம் அவளை பார்க்கலாம்."என எண்ணி கொண்டு கண்ணை மூடி தூங்க முயல்கிறான்.
(இருள் சூழும்.....)