• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
601
Reaction score
836
Points
93
அத்தியாயம் 9

"ப்ரஷாந்தி‌ ஏன் இவ்ளோ நேரம்…?" என்று கேள்வி எழுந்தது சுதர்ஷனிடமிருந்து…


"ஆபிஸ்ல ஒர்க் கொஞ்சம் ஓவரா இருந்துச்சு…" என்று பதில் மொழிந்தாள் உள்ளே நுழைந்த ப்ரஷாந்தி…


ஹரி ப்ரஷாந்தியிடம் தன் நேசத்தை வெளிப்படுத்திய பிறகு இருவருக்கும் நாட்கள் அழகாக நகர்ந்தது.


நேசத்தை பரிமாறி கொள்ளும் இனிமையான பொழுதுகள் கடல் அலையாய் இழுத்து செல்ல விரும்பியே அதனிடம் தஞ்சம் அடைந்திருந்தனர்.


அதன் பின்னர் பைனல் செமெஸ்டர் எக்ஸாம் ப்ராஜெக்ட் சம்மிஸன் என்று சற்று பிஸியாக செல்ல இருவரும் அவ்வபோது சந்தித்து பேசி கொண்டனர்.


இருவருக்குமே கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்க இருவருமே அதில் சேர்ந்தனர்.


ஹரி அவனது அலுவலகத்தின் அருகிலே ஒரு அபார்ட்மெண்டில்
பிளாட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தான்…


இப்போது ப்ரஷாந்தி சந்தித்துவிட்டு வருவது ஹரியை தான்.


அவளை உருத்து விழித்தவர், "ஆபிஸ்க்கு மட்டும் தான் போய்ட்டு வர்றியா…?" என்று வினவ,


ப்ரஷாந்திக்கு தந்தைக்கு தனது காதல் விடயம் தெரிந்துவிட்டதோ என உள்ளுக்குள் அச்சம் பரவியது இருந்தும், "ஆமாப்பா…" என்று பொய்யுரைத்தாள்.


"உன்னோட ஆபிஸ் ஜெயாநகர்ல இருக்க ரெயின்போ ரெஸ்டாரன்ட்லயா இருக்கு…" என்று கோபத்துடன் வினவ,


தந்தைக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது என்று அவளுக்கு உறுதியாகிவிட்டது.


பதில் கூறாது அமைதியாக நின்றிருந்தாள்.


"என்னங்க இது கேள்வி யாராவது காலேஜ் ஃப்ரெண்ட்ஸ பார்க்க போயிருப்பா இதுக்கு போய் நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்கிங்க" என்று கணவனிடம் மகளுக்கு பரிந்து கொண்டு வர,


"ப்ரெண்டை தான் பாக்க போயிட்டு வந்தேன்னு அவளை சொல்ல சொல்லு. நான் விட்றேன்" என்க,


சுபத்ரா, "என்னடி அப்படியே நிக்கிற அப்பா கேக்குறாரு இல்லை. பதில் சொல்லு" என்று மகளிடம் கூறினார்.


அப்போதும் மௌனத்தை மொழியாக்கி நின்றிருந்தாள்…


அவளது மௌனத்தை கண்ட சுபத்ராவிற்கு ஏதோ தவறாக பட்டது.


ப்ரஷாந்தி இப்படி பதில் கூறாது அமைதியாக நின்று அவர் கண்டதில்லை.


சுதர்ஷன் கோபமாக எதாவது கூறினால் பதிலுக்கு பதில் துடுக்கு தனமாக பதிலளித்துவிடுவாள்.


எப்போதும் சுதர்ஷனும் ப்ரஷாந்தியும் எதிரும் புதிருமாக தான் இருப்பார்கள்.


சுதர்ஷன் எதையாவது செய்ய வேண்டாம் என்றால் வீம்புக்காகவே அதை செய்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பாள்.


என்றுமில்லாத மகளின் அமைதியில் அஞ்சியவர், "ப்ரஷாந்தி பதில் சொல்லு யாரை பார்க்க அந்த ரெஸ்டாரன்ட்க்கு போன…?" என்று அதட்ட,


ப்ரஷாந்தி தாயின் முகம் நோக்கினாள்.


அவளது பதிலற்ற தன்மையில் கோபமடைந்த சுதர்ஷன், "எத்தனை நாளா அந்த பையனுக்கும் உனக்கும் பழக்கம்…?" என்று கோபத்தில் உறும,


ஏகத்திற்கும் அதிர்ந்து நின்றார் சுபத்ரா.


இதற்கு மேலும் பதில் கூறாது இருக்க இயலாது மேலும் என்றாவது ஒரு நாள் கூறித்தானே ஆக வேண்டும் என்று எண்ணியவள் தன்னை திடப்படுத்தி கொண்டு தந்தையை நேருக்கு நேராக பார்த்தவள்,


" ஒரு வருஷமா பழக்கம். எனக்கு அவனை பிடிச்சிருக்கு" என்றாள்.


சுபத்ரா, "ப்ரஷாந்தி உனக்கு எங்க இருந்து இவ்ளோ தைரியம் வந்துச்சு எங்ககிட்டயே வந்து எவனோ ஒருத்தனை பிடிச்சிருக்குனு சொல்ற…?" என்று கோபத்தில் பொறிய,


" இன்னும் கொஞ்ச நாள்ல நானே உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன். அதுக்குள்ள உங்களுக்கே தெரிஞ்சிடுச்சு…" என்று பொறுமையாக பதில் கூறினாள்.


"பெத்தவங்க நாங்க உயிரோட தான இருக்கோம். நாங்க உனக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சு தர மாட்டோமா…? அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு…?" என்று சுதர்ஷன் அவளை உறுத்து விழிக்க,


"என்னோட லைஃபை டிசைட் பண்ண எனக்கு உரிமை இல்லையா…?" என்று அவளும் சூடாகவே பதில் அளித்தாள்.


"இத்தனை நாளா உனக்கு எல்லாம் பாத்து செஞ்ச எங்களுக்கு தான் உனக்கு யாரு பொருத்தமா இருப்பா. யார்கூட வாழ்ந்தா நீ நல்லா இருப்பேன்னு தெரியும் டி" என்று சுபத்ரா கோபத்துடன் உரைக்க,


"சரி தான் உங்களுக்கு எல்லாம் தெரியும் தான். பட் நீங்க அமைச்சு கொடுக்கிற வாழ்க்கையை விட ஹரியோட என் வாழ்க்கை பெஸ்ட்டாவே இருக்கும்…" என்று தீர்க்கமாக பதில் கூற,


"நிச்சியமாக இருக்காது. அம்மா அப்பா யாருமே இல்லாம அநாதையா வளர்ந்த ஒருத்தனால உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க முடியாது…" என்று அடுத்த கணமே பதில் வந்து விழுந்தது சுதர்ஷனிடம்.


ஹரியை அநாதை என்று சுதர்ஷன் கூறியதில் கோபத்தின் உச்சிக்கே சென்ற ப்ரஷாந்தி, "இன்னொரு தடவை அவனை அநாதைன்னு சொன்னிங்க. அப்பான்னு கூட பார்க்க மாட்டேன்" என்று கைநீட்டி கொதித்து விட,


"யாரு முன்னாடி கை நீட்டி பேசுற. அவர் உன்னை பெத்தவரு டி" என்று சட்டென்று அவளது கன்னத்தில் அறைந்துவிட்டார்.


கன்னத்தில் கை வைத்தவாறு ப்ரஷாந்தி தாயை கோபத்துடன் விழிக்க,


"என்ன முறைக்கிற. அவர் சொன்னதுல என்ன தப்பிருக்கு. ஒரு அநாதை பையனால உன்னை எப்படி நல்லா பாத்துக்க முடியும்…" என்று இரைய,


"ஸ்டாப் இட்…" என்று வீடே அதிரும் படி கத்தியவள்,


"திஸ் இஸ் தி லாஸ்ட் வார்னிங் இனி ஒரு தடவை அவனை அநாதைன்னு சொன்னிங்க நான் மனிஷியா இருக்க மாட்டேன். அவனுக்கு நான் இருக்கேன். எனக்கு அவன் இருக்கான்…" என்று ஆக்ரோஷமாக இயம்பினாள்.


"நீ பேசுறது எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது. ஒழுங்கா அந்த பையனை மறந்துட்டு நாங்க சொல்றதை கேளு…" பதிலுக்கு தானும் சுபத்ரா கத்த,


"முடியாது. நான் அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்று அழுத்தமாக பதிலுரைத்தாள்.


"என் பேச்சை கேட்காத யாருக்கும் இந்த வீட்ல இடம் கிடையாது. என் பேச்சை கேக்கிறதா இருந்தா நீ இங்க இருக்கலாம்…" என்று சுதர்ஷன் மொழிய,


தந்தையின் இந்த பதிலில் ப்ரஷாந்தி அதிர்ந்து நின்றுவிட்டாள்.


கோபப்படுவார் திட்டுவார் பின்னர் பேசி சம்மதிக்க வைக்கலாம் என்று நினைத்தவளுக்கு தந்தையின் பேச்சில் கண்கலங்கிவிட்டது…

இவர்களது உரையாடலில் அதிர்ந்த சுபத்ரா, "என்னங்க என்ன பேசுறிங்க. அவ நம்ம பொண்ணு எங்க போவா" என்று கூற,

சுதர்ஷன் பதிலளிக்காது நின்றிருந்தார்.


கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவள்,

"ம்மா போதும் அவர்க்கிட்ட எதுவும் கெஞ்சாத. பெத்த பொண்ணுன்ற எண்ணம் இருந்தா என்னை வீட்டை விட்டு போக சொல்லியிருப்பாரா…?. அவர் வெளிய போன்னு சொன்ன பிறகு என்னால இங்க இருக்க முடியாது…" என்று தன்னறைக்கு விரைந்தாள்…


"என்னங்க எதுவும் பேசாம நிக்கிறிங்க. அவ கோபத்துல கிளம்ப போறா…" என்று கணவனை உலுக்க,

சுதர்ஷனுக்கு அவளது செயல் அதிர்ச்சியை தான் வழங்கியிருந்தது.


வீட்டை விட்டு வெளியேற கூறினால் அமைதியாகி போவாள். பின்பு பேசி புரிய வைக்கலாம் என்று நினைத்திருக்க அவள் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாள்…


"அவ தான் வயசு கோளாறுல பண்றான்னா… நீங்க ஏன் இப்படி பண்றிங்க. எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா. அவளை போக வேணாம்னு சொல்லுங்க…" என்று பதறினார்.

அறைக்கு சென்று திரும்பிய ப்ரஷாந்தி கையில் ஓரு சிறிய பேக்குடன் வந்து, "என்னோட சர்பிகேட்ஸ தவிர உங்க வீட்ல இருந்து நான் எதையும் எடுத்துட்டு போகலை…?" என்றவள் வாசலை நோக்கி செல்ல,

சுதர்ஷன், "ப்ரஷாந்தி ஒழுங்கா அந்த பையனை மறந்துட்டு உள்ள போ…" என்று அவளது முடிவில் அதிர்ந்தவராக கூறினார்.

"அது எப்பவும் நடக்காது. அவனை என்னால மறக்க முடியாது" என்றவள் நடந்து செல்ல,


"இந்த நேரத்துல எங்கடி போவ… ஏன்டி இப்படி அவசரத்துல தப்பு தப்பா முடிவெடுக்குற… பெத்தவங்களை எதிர்த்திட்டு போய் உன்னால நல்லா வாழ்ந்திட முடியாது. அப்பா சொல்றதை கேட்டுட்டு ஒழுங்கா உள்ள போ…" என்று கோபத்துடன் கூற,


திரும்பி பார்த்தவள், "எங்கேயோ போவேன். அதான் உன்னோட ஹஸ்பண்ட் என்னை வீட்டை விட்டு போக சொல்லிட்டாரு இல்லை" என்றவள்,


"நான் அவசரத்துல இந்த முடிவை எடுக்கலை. என்னைக்கா இருந்தாலும் இந்த விஷயத்துக்கு இது தான் முடிவா இருக்கும்னு எனக்கு முதல்லயே தெரியும்…" என்று வெளியேறி சென்றாள்.


இத்தனை நேரம் தூறிக் கொண்டு இருந்த வானம் அடை மழையை பொழிய துவங்க நனைந்தபடியே வெளியே சென்றவள் ஒரு ஆட்டோவை பிடித்து ஹரியின் பிளாட்டை நோக்கி பயணமானாள்…


மணி ஒன்பதை நெருங்க ஹரி இரவுணவை முடித்துவிட்டு எழ பிளாட்டின் அழைப்பு மணி ஒலித்தது.


'இந்த நேரத்தில் யார் வந்திருப்பது' சிந்தித்தவாறே கதனை திறந்தவன் கண்டது வாசலில் தொப்பலாக நடுக்கத்துடன் நனைந்து நின்று கொண்டிருந்த ப்ரஷாந்தியை தான்….

**********************


ஒரு நொடி அவனை பார்த்த படி அதிர்ந்து நின்றவள் விலகி செல்ல ஹரி கைகளை கழுவினான்.


அவனை இத்தனை நெருக்கத்தில் கண்ட தடுமாற்றத்தில் நடந்தவளை டைல்ஸில் கொட்டியிருந்த நீர் வழுக்கிவிட்டிருந்தது.


'ஐயோ விழுந்து வார போகிறோம்' மனதிற்குள் அலற,


"ப்ரஷாந்தி பார்த்து…" என்று பதறியபடி அவளை இடையோடு தாங்கி பிடித்திருந்தான் ஹரி கிருஷ்ணா.


அவளும் பயத்தில் அவனது தோளை இறுக்கமாக பற்றியிருந்தாள்.


அதீத நெருக்கத்தில் தெரிந்த அவனது முகம் வெகு நாட்களுக்கு பிறகு செவியில் பாய்ந்த அவனது குரல் உள்ளுக்குள் மொத்தமாய் தடம்புரள செய்ய சடுதியில் அவனிடமிருந்து விலகி வந்துவிட்டாள்…


அவளை இமைக்காது நோக்கிய அவ்விழிகள் அவளிடம் எதையோ கூற விழைந்ததை உணர்ந்தவள் வேக எட்டுகளில் வெளியேறி விட்டாள்.

அவன் தான் சொற்ப விநாடிகள் அங்கேயே வேரூன்றி விட்டான்.


என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதெங்கே தாண்டுவேன்…

உணவுன்னுமிடத்திற்கு வர அங்கே எல்லோரும் இன்னும் உண்டு கொண்டு இருந்ததை கண்டவள் சற்று தள்ளி போடப்பட்டிருந்த டேபிளில் அமர்ந்து விட்டாள்.


ஹரியும் வெளியே வந்தவன் வேறு எங்கும் விழிகளை திருப்பாது நேரடியாக அவளை நோக்கி வந்து எதிரே அமர்ந்துவிட்டான்.


தன்னெதிரில் வந்து அமருவான் என்று எண்ணாது அதிர்ந்து அவன் முகம் பார்த்தவள் அவனது பார்வையில் வலப்புறம் முகத்தை திருப்பி கொண்டாள்.

ஆனால் அவன் பார்வையை திருப்பவில்லை. அவளை தான் இமைக்க மறந்து பார்த்திருந்தான்.


எதிரில் அமர்ந்திருந்தவளுக்கு தான் உள்ளுக்குள் என்னவோ செய்தது.


அத்தனை வருடங்களுக்கு பிறகான அவனது தரிசனம். விழிகள் கலங்கியது…


காதலில் கரைந்து உயிருக்குள் உருகிய நொடிகள் நினைவுகளில் நழுவியது…


இதயத்தின் ஓசையில் இடைவெளி விழுந்தது போல பிரம்மை.


நகராத விநாடிகள் அவன் கைகளில் உருகிய நொடிகளுக்கு நகர்த்தி சென்றது.


ஆலிங்கணமாய் அடித்து சென்ற நினைவுகளில் இருந்த தப்பிக்க முயற்சித்தவளுக்கு தவிப்புகள் போக்கிடமாகியது.


அங்கும் இங்கும் இழுத்து சென்ற நினைவுகள் இறுதியாக அவன் தன்னை பார்த்து சென்ற கணத்திற்கு வந்து நின்றது.


இறுதியாக இமைக்குள் மங்கலாகிய அவனது தோற்றத்தை மனது நினைவு கூர்ந்தது.


இப்போதைக்குமான தோற்றத்தை மனதில் கொண்டு வர முயற்ச்சிக்க முடியவில்லை.


இத்தனையும் வலப்புறம் கண்ணாடி ஜன்னல் வழியே பார்வையை பதித்தபடி தான் சிந்தித்திருந்தாள்…


ஓர விழியால் பார்வையை அவன் மீது பதித்தவள் அவனது தோற்றத்தை ஆராய்ந்தாள்…


கல்லூரி காலத்தில் வாலிபனாக இருந்தவன் இப்போது ஆறடி உயரத்தில் அதற்கேற்ற உடல்வாகுடன் சிவந்த நிறத்தில் முழு ஆண்மகனாக தோற்றத்தில் மாறியிருந்தான். அப்போதே அழகாக இருப்பவன் இப்போது முகத்தில் முதிர்ச்சியுடன் இன்னும் அழகாக மாறியிருந்தான்…


ஆனால் முகத்தில் சற்று இறுக்கம் வந்திருந்தது. முன்பிருந்த இலகு தன்மை இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது…


நித்திய கல்யாணி நிறத்தில் புல் ஸ்லீவ் லினன் சர்ட்டும் வாதுமை நிறத்தில் பேன்ட்டும் அணிந்து சாய்ந்த படி அமர்ந்திருந்தான்.


அவன் முகத்திலிருந்து எதையும் கண்டறிய முடியவில்லை.


"நீ ஸ்ட்ரையிட்டாவே என்னை பார்க்கலாம் ப்ரஷாந்தி…" என்றவனின் குரலில் தன் போக்கில் சிந்தனையில் இருந்தவள் சிந்தை கலைந்து திகைத்து விழித்தாள்…


சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவன் இப்போது நிமிர்ந்து அவளை நேருக்கு நேர் பார்த்தவாறு கைகளை கோர்த்தவாறு அவளை பார்த்து மீண்டும், "நீ ஸ்ட்ரையிட்டாவே என்னை பாக்கலாம் மிஸஸ் ப்ரஷாந்தி ஹரி கிருஷ்ணா… உனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு" என்று தீர்க்கமாக கூற,


இவள் தான் மேலும் அதிர்ந்து விழித்தாள்…


"எப்படி இருக்கேன் நான் ப்ரஷாந்தி…" என்று மற்றொரு கேள்வியால் அவளை தாக்கினான்.


ஏற்கனவே அவனது கேள்வியில் திகைப்பிலிருந்தவள் மேலும் திகைத்து விழித்தாள்.


அவன் இதழ்கள் வளைந்து நெளிந்தது. அதில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.


அவளை தாக்கியது போதும் என நினைத்தவன்,


"எப்படி இருக்க ப்ரஷாந்தி…?" என்று வினவ,


தன்னை சமாளித்தவள், "ந.. நல்லா இருக்கேன்…" என்று பதிலளித்துவிட்டு பின்னர் தயக்கத்துடன்,

"நீ.." என தொடங்கி விட்டு பிறகு,

"நீங்க எப்படி இருக்கிங்க…?" வினா தொடுத்தாள்…


"நீ இல்லாம நல்லாவே இல்லை…" என்று பட்டென பதில் வந்தது அவனிடமிருந்து.


மறுபடியும் அவனது விடையில் அதிர்ந்து விழித்தவளுக்கு தெரிந்தது இவன் தான் காதலித்த ஹரி கிருஷ்ணா இல்லை என்று.


என்னை வார்த்தையால் தாக்கும் நோக்குடன் தான் வந்திருக்கிறான் என்று.


அவள் பதிலளிக்காததை கண்டு, "ஹ்ம்ம்…" என்று பெருமூச்சு விட்டவன்,

"நான் இல்லாம உன்னால சந்தோஷமா இருக்க முடியும் ரைட்…" என்றவாறு அவளை ஒரு பார்வை பார்த்தான்.


அன்று மருத்துவமனையில் இறுதியாக பார்த்துவிட்டு சென்றானே அதே பார்வை.

இன்று வரை அவளால் மறக்க முடியாத அவள் நினைவுகளில் பதிந்து அவளை வதைக்கும் பார்வை.


அதில் இருந்தது என்ன உணர்வென்று அவளுக்கு இன்றுவரை தெரியவில்லை.


அந்த நாளின் இறுதி அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்…


அவன் அடுத்த வினாவால் அவளை தாக்கும் முன்னர் அவனது நண்பர்கள் உண்டுவிட்டு வந்துவிட்டனர்…


அனைவரும் பேசி சிரித்து மாப்பிள்ளையும் பெண்ணையும் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.


மேனகா, "சிங்க்கும் இந்த ஜிங்க்கும் எப்படி செட்டாச்சுனு சொல்லுங்க. உங்க லவ் ஸ்டோரிய சொல்லுங்க…" என்று ஹர்ஷத்தை வம்பிழுக்க,


"அது கொஞ்சம் பிக் ஸ்டோரி…" என்று ஹர்ஷத் கூறி சிரித்தான்.


"பரவாயில்லை சொல்லுங்க நாங்க கேட்போம்…" என்று கோரஸாக எல்லோரிடமும் சேர்த்து பதில் வர,


சிரித்த படியே வினுஷாவை சந்தித்தலிருந்து காதல் வயப்பட்டது வரை என்று தங்களது காதல் கதையை ஹர்ஷத் சொல்ல தொடங்க,


ஹரியினது பார்வையும் ப்ரஷியின் பார்வையும் ஒரு முறை தீண்டி கொண்டது…


இருவருக்கும் தங்களது முதல் சந்திப்பு நினைவு வந்தது…


இருவரும் தங்களது உலகத்தில் மூழ்கிவிட்டனர்.


ரேஷ்மா, "காதலிக்கும் போது ஹாப்பியா இருக்கது இருக்கட்டும். கல்யாணத்துக்கு அப்புறமும் இதே மாதிரியே இருக்கனும். என்ன பிராப்ளம் வந்தாலும் சேர்ந்து பேஸ் பண்ணுங்க…" என்று ஓரக்கண்ணால் ப்ரஷாந்தி
யை பார்த்த படி கூற,


ஹர்ஷத்தும் வினுஷாவும் ஓரே போல, "கண்டிப்பா எந்த சுட்சுவேஷன்லயும் பிரிய மாட்டோம்" என்று கூறிவிட,


ரேஷ்மா கூறியது தனக்காத்தான் என்று அறிந்தவளுக்கு சுருக்கென்று இருக்க முகத்தில் வேதனையுடன் ஹரியை பார்த்தாள்.


அவளுக்கு குறையாத வேதனையுடன் ஹரியும் அவளை தான் பார்த்திருந்தான்…









































 
Top