அத்தியாயம் 7
கோல்டன் ஜூப்ளி என்ற தங்க நிற பெயர்பலகை அந்த இருள் கவிழ தொடங்கிய பொழுதில் பள பளவென மின்னியது.
அது பீக் டைம் என்பதால் ஆட்கள் நிறைய பேர் வருவதும் போவதுமாக இருந்தனர்.
"ஹே பசிக்கிதுப்பா சீக்கிரம் வாங்க" என்று மற்றவர்களிடம் கூறிவிட்டு நடையை துரித படுத்தி உணவகத்தினுள் நுழைந்தான் ரேஷ்மா…
அவளின் பின்னே அவளது நண்பர்கள் குழுவினர் வந்தனர்.
எல்லோரும் கலந்தாய்வு முடித்துவிட்டு கேரளாவிலிருந்து பெங்களூருக்கு திரும்பி ஒரு வாரம் கடந்திருந்தது…
இந்த ஒரு வாரத்தில் ப்ரஷாந்தி ஹரிக்கு எந்த செய்தியும் அனுப்பவில்லை. அவனும் இவளுக்கு எதுவும் அனுப்பவில்லை.
அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ப்ரஷாந்தி வாட்ஸப்பில் அனுப்ப,
பதிலுக்கு நன்றி கூறும் விதமாய் சிரிக்கும் பொம்மை ஒன்றை அவன் அனுப்பினான்.
இவளும் ஏற்று கொள்ளும் விதமாக ஒரு எமோஜியை அனுப்ப, அதற்கு மேல் அங்கே என்ன பேசுவதென்று அவளுக்கு தெரியவில்லை.
அந்த உரையாடல் அதோடு நிறைவு பெற்றது. அவளுக்கு பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் என்ன பேசுவதென்று தெரியாமல் உரையாடலை தொடங்காமல் இருந்தாள்.
அதன் பின்னர் பெங்களூர் ரயில் நிலையத்தில் இறங்கி செல்லும் போது ஒரு சிறிய தலையசைப்பை கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டான்.
அந்த நிகழ்விற்கு பிறகு அவள் அவனை பார்க்கவே இல்லை. கல்லுாரியிலும் பார்க்க முடிவதில்லை…
அவனது டிபார்ட்மெண்ட் பக்கம் செல்லும் போதெல்லாம் அவளது கண்கள் அவனை தான் தேடி அலைந்தது. ஆனாலும் அவன் இவளது கண்களில் சிக்கவில்லை.
இது எதேச்சையாக நடந்ததா இல்லை வேண்டுமென நடத்தப்படும் ஒன்றா என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
கோல்டன் ஜூப்ளி அவர்களது கல்லூரிக்கு வெகு அருகில் அமைந்துள்ள உணவகம்.
என்ன தான் காலேஜ் கேண்டினில் சாப்பிட்டாலும் வாரத்திற்கு இரு முறை வெளி உணவகத்தில் சாப்பிடவில்லை என்றால் அவர்களுக்கு மனது கேட்காது.
இரவுணவை இங்கே முடித்துவிட்டு தான் வீட்டிற்க்கு செல்வார்கள்…
உள்ளே நுழைந்ததும் ஏசி மற்றும் நான் ஏசி என்று இரு பிரிவுகள் இருக்க அவர்கள் ஏசி அறையினுள் நுழைந்தனர்.
அவர்கள் அமர்வதற்கும் சஞ்சய் காரை பார்க் செய்துவிட்டு வருவதற்க்கும் சரியாக இருந்தது.
கடை சிப்பந்தி வந்து அவர்களிடம் ஆர்டரை கேட்க,
"வைட் சீஸ் பாஸ்தா, வெஜ் சாண்ட்வெஜ், அத்தோ, ஓரியோ மில்க்ஷேக்…" என்று ஒரு பட்டியலை அவரிடம் கூறிவிட்டு உணவிற்க்காக காத்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் இக்கால இளைஞர்களின் பிரதியாய் துரித உணவு பிரியர்கள்…
சிப்பந்தி சென்று பத்து நிமிடங்கள் கடந்தும் உணவு வரவில்லை.
ரேஷ்மா எப்போதும் பசி தாங்கமாட்டாள்.
"என்ன ஆர்டர் வாங்கிட்டு போய் இவ்ளோ நேரமாச்சு. இன்னும் ஃபுட் வரலை. ஐ ஆம் ஹங்க்ரி" என்று வயிற்றை பிடிக்க,
மேனகா, "இருடி குக் பண்ணி எடுத்திட்டு வர வேண்டாமா…? இங்க கொஞ்சம் ரஷ்ஷா வேற இருக்கு" என்று அவளை அமைதிபடுத்தினாள்.
இரண்டு நிமிடங்கள் கழித்து சிப்பந்தி அவர்கள் கேட்ட உணவுகளை கொண்டு வர,
கிரண், "இதோ வந்திடுச்சு பாரு. சாப்பிடு" என்று அவள் கேட்ட வைட் சீஸ் பாஸ்தாவை அவள்புறம் நகர்த்தினான்.
பசியின் உச்சத்தில் ஆர்வமாக அதை வாயில் எடுத்து வைத்த அடுத்த நொடியே, "த்தூ…" என்று முகசுழிப்புடன் துப்பியிருந்தாள்.
மேனகா, "என்னாச்சு டி. ஏன் துப்பிட்ட உனக்கு பிடிக்கலையா…?" என்று வினவ,
"சே இதுல சுத்தமா உப்பே இல்லை. காரம் வேற ரொம்ப அதிகமா இருக்கு" என்று அசூகையான முகத்துடன் கூறியவள்,
"நல்ல பசியில சாப்பிடலாம்னு பார்த்தா இப்படி பண்ணிட்டாங்க" என்றும் புலம்பினாள்.
சஞ்சய், "என்னது உப்பில்லை. காரமும் அதிகமா இருக்கா…? பணம் கொடுத்து தானே சாப்பிட்றோம். சும்மாவா சாப்பிட்றோம்.. ஏன் இப்படி பண்றாங்க. நான் கேட்காம விடமாட்டேன்" என்று கோபமாக பேச,
ப்ரஷாந்தி, "விடு சஞ்சய் தெரியாம பண்ணியிருப்பாங்க. பிராப்ளம் வேண்டாம். வேற கொண்டு வர சொல்லுவோம்" என்று சமாதனப்படுத்த முயன்றாள்.
ரேஷ், "அவங்க இன்னொன்னு குக் பண்ணி எப்போ கொண்டு வர்றது. எனக்கு ரொம்ப பசிக்கிது" என்று சஞ்சயின் கோபத்தை அதிகப்படுத்த,
"யாரு இங்க மேனேஜர்" என்று சத்தமாக வினவியபடி எழுந்து விட்டான்.
எல்லோருடைய பார்வையும் அவர்கள் புறம் தான் திரும்பியது.
அங்கிருந்த பாதி நபர்கள் தமிழ் பேசுபவர்கள் தான். அந்த உணவகமும் தமிழ் நாட்டு உணவுகளையே அதிகமாக வழங்கும்.
மேனகா கூட, "எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க. ப்ராப்ளம் வேண்டாம் சஞ்சய்" என்று கூற அவன் இதை காதிலேயே வாங்கவில்லை.
அவன் போட்ட சத்தத்தில் சிப்பந்தி பதறி ஓடி வந்து, "என்ன சார் ஆச்சு. ஏன் மேனேஜரை கூப்பிட்றிங்க" என்று கேட்க,
"என்ன ரெஸ்டாரன்ட் வச்சு நடத்துறிங்க. சாப்பாட்ல உப்பே இல்லை. போதாததுக்கு ரொம்ப காரமா வேற இருக்கு" என்று கடிய,
சிப்பந்தி இதனை கேட்டு அதிர்ந்துவிட்டார்.
இதற்கு முன்னர் இது போல நடந்தது இல்லை.
இது மட்டும் முதலாளிக்கு தெரிந்தால் சமையல் செய்பவரின் நிலைமை அவ்வளது தான் என்று முதலாளியின் கண்டிப்பான குணத்தை பற்றி அறிந்தவர் பதட்டத்துடன், "சார் மன்னிச்சுடுங்க சார். தெரியாம நடந்திருச்சு. இதோ இப்பவே வேற கொண்டு வர சொல்றேன். எல்லாரும் பாக்குறாங்க சார். நீங்க உட்காருங்க சார்" என்று கூற,
சஞ்சய், "பர்ஸ்ட் டைம் கொண்டு வந்தப்பவே ஒழுங்கா கொண்டு வர தெரியாதா உங்களுக்கு. எங்க டைமை ஏன் வேஸ்ட் பண்றிங்க. நீங்க பர்ஸ்ட் மேனேஜரை கூப்பிடுங்க. நான் அவர்க்கிட்ட பேசிக்கிறேன். இல்லைன்னா ஓனரை கூப்பிடுங்க" என்றதும்,
சிப்பந்தி முதலாளியை நினைத்து பயந்து,
"ஓனர்க்கிட்ட எல்லாம் வேண்டாம் சார். நான் போய் மேனேஜரை அழைச்சிட்டு வர்றேன்" என்று உள்ளே செல்ல,
எல்லோருக்கும் காட்சி பொருளாவதை விரும்பாத ப்ரஷி, "ஒரு சின்ன விஷயத்தை ஏன் இப்படி பெரிசாக்குறிங்க" என்றாள்.
"நீ சும்மா இரு ப்ரஷி. இப்படி சத்தம் போட்டா தான் நெக்ஸ்ட் டைம் இது மாதிரி நடக்காது" என்று ரேஷ்மா கூற,
சிப்பந்தியுடன் பார்மல் சர்ட் பேண்ட் சகிதமாக வந்து கொண்டிருந்தான் ஹரி கிருஷ்ணா.
மற்றவர்கள் அவனை கவனிக்கவில்லை. ஆனால் ப்ரஷாந்தி கவனித்துவிட்டாள்.
சிப்பந்தியிடம், "நீங்க போய் மத்த கஸ்டமர்ஸ கவனிங்கண்ணா. நான் பேசிக்கிறேன்" என்று அவரை அனுப்பி வைத்தவன் அவர்களை நெருங்கி இருந்தான்.
ஹரிக்கு அவர்களை பார்த்து எந்த ஆச்சரியமும் இல்லை.
அவன் தான் அவர்களை ஏற்கனவே கண்காணிப்பு கேமெரா வழியே பார்த்திருந்தான்.
சஞ்சய் ஏதோ கோபமாக பேசுவதை கண்டு ஏதோ பிரச்சினை என்று நினைத்து எழுந்து வர சிப்பந்தியும் வழியிலே பார்த்து நடந்தவற்றை கூறியிருந்தார்.
எல்லோரும் அவனை பார்த்து அதிர்ச்சி அடைய,
ரேஷ்மா, "இவனா இங்க மேனேஜர்…?" என்று வாய்விட்டே கேட்டிருந்தாள்.
அவன் அருகில் வந்து சஞ்சயிடம், "எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்… இதுவரைக்கும் இது மாதிரி நடந்தது இல்லை. இது தான் பர்ஸ்ட் டைம். நான் உடனே வேற ஃபுட் கொண்டு வர சொல்றேன்" என்று மன்னிப்பை வேண்ட,
சஞ்சய் அவனை எதிர்ப்பார்க்கததால் ஒரு நொடி அதிர்ந்து பின்னர் சுதாரித்தவன், அவனிடம் கோபமாக பேச முடியாமல், "இட்ஸ் ஓகே. இனிமேல் இது மாதிரி நடக்காம பாத்துக்கோங்க" என்று பதிலளித்தான்.
"தாங்க் யூ சார். இனிமேல் கண்டிப்பா இது மாதிரி நடக்காது. நான் போய் உங்க ஃபுட்ட கொண்டு வர சொல்றேன்" என்றவன் ப்ரஷாந்தியின் மீது ஒரு பார்வையை வீசிவிட்டு நகர்ந்துவிட்டான்.
ப்ரஷியின் நண்பர்கள் அனைவரும், "ஹரி இங்க மேனேஜரா பார்ட் டைமா ஒர்க் பண்றானா…?",
"பார்த்தா நம்மள மாதிரி தான் தெரியிறான் ஏன் பார்ட் டைம் பாக்குறான்…"
"அவங்க அம்மா அப்பா என்ன பண்றாங்க…?" என்று கேள்விகளால் அவளை துளைத்தெடுத்தனர்.
ப்ரஷாந்திக்கு அப்பொழுது தான் அவன் வேலை செய்து தனது தேவையை தானே நிறைவேற்றி கொள்கிறேன் என்று கூறியது நினைவு வந்தது.
தனது எண்ணங்களில் இருந்து வெளிவந்தவள், "அவனுக்கு அம்மா அப்பா யாருமில்லை. சின்ன வயசுல இருந்து சென்னைல ஒரு ஆர்ப்பனேஜ்ல வளர்ந்தான். இப்போ ஸ்காலர்ஷிப்ல நம்ம காலேஜ்ல படிக்கிறான். அவனோட செலவுக்காக பார்ட் டைம் பாக்குறான்" என்று தனக்கு தெரிந்தவற்றை கூறி முடிக்க,
அங்கே ஒரு கணம் அசாத்திய அமைதி.
எல்லோருக்கும் அவனது பின்னனியை கேட்டதும் பரிதாபமாக போய்விட்டது.
"சே பாவம். சின்ன வயசுல இருந்து யாருமே இல்லாம வளர்த்தானா…?" என்று மேனகா பரிதாபப்பட்டு கூற, மற்றவர்களும் தங்களது வருத்தத்தை கூறினர்.
ப்ரஷி அமைதியாக அவர்கள் பேசுவதை அவதானித்த படி இருந்தாள்.
'இவன் பகுதி நேர வேலைக்காக இங்கு வந்துவிடுவதால் தான் தான் மாலை கல்லூரி முடிந்த பிறகும் கூட இவனை பார்க்க முடியவில்லையா…?' என்று சிந்தித்தபடி இருந்தாள்.
இவர்கள் பேசியபடி இருக்க ஹரி வைட் சாஸ் பாஸ்தாவை தானே கொண்டு வந்தான்.
அவனது வரவை கண்டுகொண்டவள், "எல்லாரும் அமைதியாகுங்க. அவன் வந்துட்டான். யாரும் எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதிங்க" என்று அறிவுறுத்த, அனைவரும் அமைதியாகியிருந்தனர்.
ரேஷ்மாவின் முன்பு உணவை வைத்தவன், "ஒன்ஸ் அகெய்ன் சாரி மேம்" என்று மன்னிப்பை வேண்ட,
ரேஷ்மாவிற்கு ஏதோ போலாகிவிட்டது.
ப்ரஷி கூறியது போல இது ஒரு சிறிய விடயம். இதை பெரிய பிரச்சினை ஆக்கிவிட்டோம் என்று உள்ளுக்குள் வருந்தியவள்,
"இட்ஸ் ஓகே. இது சின்ன இஸூ தான். நாங்க தான் பெரிசாக்கிட்டோம்" என்று மனதில் உள்ளதை கூறியிருக்க, ஹரி ஏற்று கொள்வதை போல தலையசைத்தான்.
சாப்பிட்டு கொண்டு இருந்த மற்றவர்கள் இவர்களை கவனித்து விட்டு மீண்டும் தங்களது வேலையை தொடங்கினர்.
இந்த விடயம் எப்படியோ உணவகத்தின் முகப்பில் அமர்ந்திருந்த முதலாளிக்கு தெரிய அங்கு வந்துவிட்டார்.
"என்ன ஹரி எதுவும் பிராப்ளமா…?" என்றவர்,
சஞ்சயிடம் திரும்பி, "என்ன சார் எதுவும் பிராப்ளமா…? எங்க சர்விஸ் உங்களுக்கு பிடிக்கலையா…?" என்று வினவினார்.
ப்ரஷாந்தியும் அவளது நண்பர்களும் இங்கே அடிக்கடி வரும் வாடிக்கையாளர் ஆயிற்றே அதனால் தான் முதலாளியே வந்திருந்தார்…
அவர்களுக்கு பரிமாறிய சிப்பந்தி வேறு முதலாளிக்கு தெரிந்தால் சமையல் செய்பவரை வேலையை விட்டு தூக்கி விடுவார் என்று பயந்து அங்கு நடப்பதை உன்னிப்பாக கவனித்தார்.
சஞ்சய் உடனடியாக, "இல்லை சார். எந்த பிராப்ளமும் இல்லை. ஹரி எங்க காலேஜ் ப்ரெண்ட் அதான் பேசிட்டு இருந்தோம்" என்று கூற,
"ஓ…அப்படியா. சரிங்க சார்" என்றவர் ஹரியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
ஹரி, "உங்களுக்கு வேற எதாவது வேணுமா…?" என்று எல்லோரிடமும் பொதுவாக கேட்க,
சஞ்சய்க்கும் சிறிதாக குற்றவுணர்வு வந்து விட, "இல்லை எதுவும் வேண்டாம்" என்றவனுக்கு அதற்கு மேல் என்ன கூறுவதென்று தெரியவில்லை.
"தாங்க் யூ சார்" என்றுவிட்டு அவன் நகர்ந்து செல்ல,
"ஹரி…" என்ற அழைப்புடன் அவன் பின்னே சென்றிருந்தாள் ப்ரஷாந்தி.
திரும்பி பார்த்தவன், "வா உள்ள போய் பேசலாம்" என்று ஒரு அறைக்கு அழைத்து சென்றான்.
அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும் அவர்களுக்கு பரிமாறிய சிப்பந்தி வந்து, "ரொம்ப தாங்க்ஸ் சார் ஓனர்க்கிட்ட உண்மையை சொல்லாம இருந்ததுக்கு. நடந்தது மட்டும் அவருக்கு தெரிஞ்சா கண்டிப்பா குக்கை வேலையை விட்டு தூக்கிடுவாரு. எனக்கும் கூட திட்டு விழுந்திருக்கும்" என்று நன்றி கூற, அதனை கேட்ட அவர்கள் அனைவருக்கும் வருத்தமாக போய்விட்டது.
மேனகா தலையசைத்து அவர் நன்றியை ஏற்று கொண்டவள் அவர் அகன்றவுடன், "அப்பவே சொன்னேன் கேட்டிங்களா…? இந்த சின்ன விஷயத்தை பெரிசாக்காதிங்கன்னு. இந்த விஷயம் ஓனருக்கு தெரிஞ்சு அவங்களை வேலையை விட்டு தூக்கியிருந்தா. அவங்க என்ன பண்ணுவாங்க. எல்லாரும் எல்லா நேரத்திலயும் பெர்பெக்டா இருக்கிறது இல்லை" என்று கடிந்து கொண்டாள்.
சஞ்சயும் ரேஷ்மாவும் தங்களது செயலுக்கு மிகவும் மனம் வருந்தினர்.
ப்ரஷாந்தியை உள்ளே அழைத்து சென்றவன், "உட்காரு ப்ரஷாந்தி" என்று ஒரு இருக்கையை காண்பித்து விட்டு தானும் அமர்ந்தான்.
அந்த அறையை ஒரு முறை சுற்றி பார்த்தவள், "ஹரி வாட் அ சர்ப்பிரைஸ் நான் உன்னை இங்க பார்ப்பேன்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை. நீ இங்க தான் பார்ட் டைமா வொர்க் பண்றியா…?" என்று வினவ,
"ஹ்ம்ம் ஆமா" என்று அமைதியாக பதிலளித்தான்.
"நாங்க இங்க தான் ரெகுலரா வருவோம். இதுக்கு முன்னே நான் உன்னை இங்க பார்த்ததே இல்லையே…?" என்று ப்ரஷி வினவ,
"நான் இப்போ தான் லாஸ்ட் வீக் இங்க ஜாயின் பண்ணேன். முன்னாடி இந்திரா நகர்ல ஒரு ரெஸ்டாரன்ட்ல ஒர்க் பண்ணேன். பட் அது லாங்க் டிஸ்டன்ஸா இருக்கதால இங்க மாறிட்டேன்" என்று புன்னகையுடன் பதில் அளித்தான்.
"ஹ்ம்ம்" என்று கேட்டு கொண்டவளுக்கு என்ன பேசுவதென்று தெரியாமல்,
"கேரளாவுல இருந்து வந்ததுக்கு அப்புறம் உன்னை நான் காலேஜ்ல பாக்கவே இல்லை" என்று வினவ,
"என்னை தேடுனியா என்ன…?" என்று சிரிப்புடன் வினா எழுப்பினான்.
அந்த பாவனையில் உள்ளம் தடுமாற, "இல்லை. எதாவது ஓர்க்கா உன் டிபார்ட்மெண்ட் பக்கம் வந்தா பார்ப்பேன்" என்றவள் நேரமாகிவிட்டதை உணர்ந்து எழுந்து கொண்டாள்.
"டைம் ஆகிடுச்சா…?" என்று ஹரி வினவ,
"ஹ்ம்ம் ஆமா. லேட்டா போனா அந்த ஹிட்லர் திட்டுவாரு. போய்ட்டு வர்றேன்" என்று அவள் கூறிய விதத்தில் புன்னகைத்தவன்,
"ஹ்ம்ம்" என்று விடையளித்தான்.
வாசல் வரை சென்றவள் திரும்பி, "ஹரி எப்போ ப்ரீயா இருப்ப…?" என வினா எழுப்ப, அவன் கேள்வியாக பார்த்தான்.
"சும்மா மெசேஜ் பண்ண தான்"
"ஜாப் டென் வரைக்கும் தான். அதுக்கு பின்னாடி நான் ப்ரீதான். மார்னிங் ப்ரீயா தான் இருப்பேன் அப்போ பண்ணு"
"ஹ்ம்ம் ஓகே…"
"காலேஜ் லஞ்ச் டைம்ல நான் கேண்டின் பக்கத்துல இருக்க பெஞ்ச்ல தான் உட்கார்ந்து இருப்பேன். அங்க வா…" என்றவனின் வார்த்தையில் அகம் மலர்ந்தவள்,
"ஹான் நாளைக்கு வர்றேன்" என்றுவிட்டு வெளியேறினாள்.
ப்ரஷாந்தி வருவதை கண்ட வினுஷா, "என்ன பேசி முடிச்சிட்டியா…?" என்க,
"ஹான் டி. கிளம்பலாமா…?" என்று மற்றவர்களை பார்த்து கேட்க,
"நீ இன்னும் சாப்பிட்டு முடிக்கலையே…" என அவள் பாதி வைத்திருந்த உணவை பார்த்து மேனகா வினா தொடுத்தாள்.
"டைம் ஆகிடுச்சு டி. வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கிறேன். போகலாம்" என்க,
எல்லோரும் கிளம்ப முடிவு செய்தனர்.
சஞ்சய் சிப்பந்தியை அழைத்து பில் கொண்டு வருமாறு கூறியவன் அவர் கொண்டு வந்ததும் பில்லை பார்க்க இரண்டாயிரத்து முன்னூறு வந்திருந்தது.
வாரம் ஒருவர் பணம் செலுத்த வேண்டும் என்பது அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம்.
இந்த முறை சஞ்சயினுடையது.
இரண்டாயிரத்து ஐநூறு ரூபாவை எடுத்து வைத்தவன்,
"பேலன்ஸ டிப்ஸா வச்சுக்கோங்க" என்று கூற,
சிப்பந்தி முகத்தில் புன்னகையுடன் நன்றி கூறினார்.
அதில் அவனது குற்றவுணர்வு குறைந்தது போல பிரம்மை அவனுக்கு.
எல்லோரும் கிளம்ப கண்ணாடி கதவின் அருகே சென்றவள் திரும்பி பார்க்க அவளுக்காகவே அங்கு நின்றிருந்த ஹரி தலையசைத்து விடை கொடுக்க அவளும் தலையைத்து வெளியேறினாள்.
****************
பயணிகள் கவனத்திற்கு தாங்கள் இறங்கும் இடம் வந்துவிட்டது என்று விமான பணிப்பெண் அறிவிக்க ப்ரஷாந்தி தனது நினைவுகளில் இருந்து வெளியே வந்தாள்…
விமானம் மாலத்தீவில் தரையிறங்க அனைத்து செக்கிங்க்கையும் முடித்து விட்டு ப்ரஷாந்தி வெளியே வர அவளது பெயர் பலகையை வைத்து கொண்டு ஓட்டுநர் நின்றிருந்தார்.
வினுஷா ஏற்கனவே கூறியிருந்தாள் ஓட்டுநரை அனுப்புவதாக. அவரிடம் சென்று தான் தான் ப்ரஷாந்தி என்று கூறி காரில் ஏறி அமர, கார் திருமணம் நடக்கவிருக்கும் ரெசார்ட்டை நோக்கி சென்றது.
ப்ரஷாந்தி ரெசார்ட்டை அடைந்து வினுஷாவிற்கு அழைக்க அவள் ஒரு காட்டேஜின் எண்ணை சொல்லி வருமாறு அழைத்தாள்.
ஒரு ஓரத்தில் கடல் அதனருகே சிறு சிறு குடில்கள் போல காட்டேஜ்கள். அதனிடையே சிறிய கடைகள் என்று பார்க்கவே அழாகாக இருந்தது.
வெள்ளை நிறத்தில் துகள்களாக இருந்த மணலில் கால்கள் புதைய நடந்து சென்றவள் ரிசெப்ஷனில் விசாரிக்க, பூங்கொத்தை கொடுத்து வரவேற்றார்கள் காட்டேஜிற்கு செல்லும் வழியை கூறினர்.
ப்ரஷாந்தி காட்டேஜை அடைந்து அழைப்பு மணியை அழுத்த,
"சர்ப்ரைஸ்…" என்று பலத்த சத்தத்துடன் கதவை திறந்த கூட்டத்தை கண்டு ப்ரஷாந்தி உண்மையிலே ஆனந்த அதிர்ச்சி தான் அடைந்து விட்டாள்.
உள்ளே அவளது நண்பர் குழுவின் எல்லோருமே சிரிப்புடன் நின்றிருந்தனர்…
ஒரு வாரத்திற்கு முன்பே செல்வதால் தான் தான் அங்கே முதலில் செல்வதாக எண்ணியிருக்க ஆனால் தனக்கு முன்னரே எல்லோரையும் இவள் எதிர்ப்பார்க்கவில்லை…
அதிர்ச்சியில் விழிவிரித்து நின்றிருந்த ப்ரஷாந்தியை உலுக்கிய மேனகா, "என்னடி இன்னும் எவ்ளோ நேரம் ஷாக் ரியாக்ஷனை கொடுக்க போற. வா உள்ள…" என்று கையை பிடித்து இழுக்க,
அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த ப்ரஷாந்தி, "ஹே நீங்க எல்லாம் எனக்கு முன்னாடியே வந்திட்டிங்களா… இட்ஸ் ரியல்லி பிக் சர்ப்ரைஸ்" என்று நண்பர்களை அணைத்து கொண்டாள்.
ப்ரஷாந்தியை கண்டதில் மற்றவர்களுக்கும் ஆனந்தம். எத்தனை நாட்களாகிற்று அவளை சந்தித்து…
"எப்படி இருக்க ப்ரஷி…?"
"ஒர்க் எப்படி போகுது…?"
"ஒரு போன் கூட பண்ணலை நீ…?" என்று வரிசையாக உரிமையுடனும் அதட்டலுடனும் கேள்வி வர, ப்ரஷாந்தி தான் பதில் கூற இயலாது விழி பிதுங்கி போனாள்…
அவளின் நிலையை கண்ட வினுஷா, "காய்ஸ் போதும் நிறுத்துங்க. அவ இப்போதான் வந்திருக்கா. போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வரட்டும். அப்புறம் வச்சுக்கோங்க உங்க என்கொயரியை…" என்று அவளை காப்பாற்ற, ப்ரஷாந்தி புன்னகையுடன் உள்ளே சென்று முகம் கழுவி உடை மாற்றி வந்தாள்…
வினு, "ப்ரஷி எப்படி நான் கொடுத்த சர்ப்ரைஸ்…?" என்க,
ப்ரஷாந்தி பதில் கூறும் முன்,
கிரண், "அவளுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் இருக்கட்டும்… நீ எங்களுக்கு எல்லாம் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கியே அதுக்கு பர்ஸ்ட் ஆன்சர் பண்ணு…?" என்று கேட்க,
எல்லோரும் அவளை சூழ்ந்து கொண்டனர்…
மேனகா, "ஆமா பதில் சொல்லு. அதுவும் தமிழ் நாட்டு பசங்களை விட்டுட்டு பஞ்சாப் சிங்கை கரெக்ட் பண்ணியிருக்க…" என்று சிரிக்க,
ப்ரஷாந்திக்கு இந்த விடயம் புதிது.
விழிவிரித்து ஆச்சரியமாக பார்த்தவள், "ரியல்லி…?" என்று வினவ,
வினுஷா வெட்கத்துடன், 'ஆமாம்' என்று தலையசைத்தாள்…
உடனே எல்லோரும், "ஹே…." என்று கூச்சலிட,
வினு, "போதும் போதும் நிறுத்துங்க…" என்று முகத்தை மூடிக்கொள்ள,
மேனகா, "இப்போ தான ஸ்டார்ட் பண்ணி இருக்கோம் அதுக்குள்ள எப்படி ஸ்டாப் பண்றது. நீ பர்ஸ்ட் உன்னோட லவ் ஸ்டோரிய சொல்லு…?" என்றாள்.
"அதெல்லாம் நாளைக்கு சொல்றேன் இப்போ வேண்டாம்…" என்று வினுஷா தப்பிக்க பார்க்க,
"எங்களுக்கு இப்போவே உன்னோட தெய்வீக காதல் கதை தெரியணும். சொல்லு" என்றவாறு நடுவில் அமர்ந்து கொண்டான் சஞ்சய்.
"நான் சொல்லமாட்டேன். நீங்க ஹர்ஷத்க்கிட்டயே கேட்டுக்கோங்க… வாங்க உங்க எல்லாரையும் இன்ட்ரொடியூஸ் பண்ணி வைக்கிறேன்" என்று அந்த ரெசார்டின் உள்ளே இருந்த பெரிய ஹாலிற்கு அழைத்து சென்றாள்.
அவர்களது நண்பர்கள் குழுவிலே வினுஷா தான் சற்று மிகவும் வசதிபடைத்த குடும்பத்தை சார்ந்தவர்கள்.
ஒரு வாரத்திற்கு அந்த ரெசார்டில் உள்ள காட்டேஜ் மற்றும் ஹாலினை அவர்களுக்காகவே பதிவு செய்து இருந்தனர்.
சஞ்சய், "அதோ அங்க இருக்காரே அவர் தான் உன்னோட ஹர்பஜன் சிங்கா…?" என்று வினா தொடுக்க,
வினுஷா, "ஆமாம்" என்றாள்.
எல்லோரும் சென்று ஹர்ஷாவை சூழ்ந்து கொண்டனர்.
சஞ்சய், "ஹாய் ஹர்பஜன் சிங்.." என்று அழைக்க,
அவன் அழைப்பில் புன்னகைத்தவன், "நான் ஹர்ஷத்…" என்று பதில் மொழிந்தான்.
வருண், "இருக்கட்டும் நீங்க எங்களுக்கு இனிமே ஹர்பஜன் சிங் தான். ஏன்னா எங்கள பொறுத்தவரை சிங்குன்னாலே ஹர்பஜன் சிங் தான்" என்க,
"ஆமா…" என்று சிரிப்புடன் எல்லோரும் கோரஸ் பாடினர்..
மேனகா, "அப்புறம் ஹர்பஜன் சிங் எப்படி எங்க வினுவை கரெக்ட் பண்ணிங்க…? காலேஜ்ல யார்க்கிட்டயும் சிக்காதவ உங்ககிட்ட எப்படி மாட்டுனா…?" என்று வினவ,
ஹர்ஷத் முகத்தில் வெட்க புன்னகை…
வினுஷா மூலமாக தமிழ் நன்றாக கற்றிருந்தான்…
"பாருடா மாப்பிள்ளைக்கு வெட்கத்தை…" என்று அதற்கும் ஆர்ப்பரித்தனர்.
வினு, "ஹே என்ன அவரை ரொம்ப கலாய்க்கிறிங்க…" என்று வர,
"ஆஹான் இப்பவே சப்போர்டா…? உன்னோட சப்போர்ட்டை அப்புறம் வச்ஞுங்கோ. இப்போ இந்த மொமண்ட்டை செலிபரேட் பண்ணுவோம்" என்று ரகசியமாக கொண்டு வந்த கேக்கை எடுத்து நடுவில் வைத்தாள்.
வினுஷா, "இதை எப்போடி வாங்குனிங்க…" என்று வியப்புடன் வினவ,
"நீ மட்டும் தான் எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பியா…? நாங்களும் கொடுப்போம்ல…" என்று கத்தியை இருவரிடமும் கிரண் நீட்டினான்.
இருவரும் கேக்கை வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டு கொள்ள அங்கே ஒரே கொண்டாட்டம் தான்.
எல்லோரும் உண்டுவிட்டு மீதம் உள்ள கேக்கை மற்றவரின் முகத்தில் பூசி விளையாட ப்ரஷாந்தி தப்பித்து கொள்ள தனியாக சென்று நின்று விட்டாள்.
சஞ்சய், "அதெப்படி நீ மட்டும் தப்பிக்கலாம்" அவள் மறுக்க மறுக்க முகம் முழுவதும் க்ரீமை பூசிவிட்டான்.
"டேய் லூசு ஏன்டா முகத்துல க்ரீமை பூசுன. நான் பாட்டுக்கு தானே தனியா நின்னுட்டு இருந்தேன்…" என்று திட்டிவிட்டு ப்ரஷாந்தி முகம் கழுவ செல்ல, சஞ்சயின் முகத்தில் தங்களது கல்லூரி தோழி ப்ரஷாந்தி திரும்பி விட்டாள் என்று புன்னகை நிறைந்தது.
மற்றவர்களின் முகத்திலும் புன்னகை தான் தவழ்ந்தது.
"எருமை எருமை…" என்று திட்டியவாறு முகத்தை கழுவியவள் துப்பட்டாவால் முகத்தை துடைக்க முயல, அவள் முகத்தின் முன் கைக்குட்டை நீட்டப்பட்டது.
அவளது தோழிகள் தான் தந்திருப்பார்கள் என்று எண்ணி அதனை வாங்கி துடைக்க அந்த கைக்குட்டையிலிருந்து வந்த வாசம் அவளது சுவாசத்தை ஒரு நொடி நிறுத்த,
சடுதியில் நிமிர்ந்து பார்க்க அவளெதிரே நின்றிருந்தான் ஹரி கிருஷ்ணா.
அவளது ஆருயிர் கணவன் ஹரி கிருஷ்ணா…
ப்ரஷாந்திக்கு தான் ஒரு நொடி உலகம் உறைந்துவிட்டது…