• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
583
Reaction score
836
Points
93
அத்தியாயம் 6


சில்லென்று காற்று முகத்தில் மோத தண்ணீரில் துள்ளிக் குதிக்கும் மீன்களை பார்த்தவாறு கம்பிகளை பிடித்து நின்றிருந்தாள் ப்ரஷாந்தி.


"ஏன் தனியா நிக்கிற அங்க இருக்க கேர்ள்ஸோட போய் ஜாயின் பண்ணிக்க வேண்டியது தானே…?" என வினவியவாறு வந்த ஹரியின் குரலில்,


சட்டென முகம் விகசிக்க புன்னகையுடன் திரும்பிய ப்ரஷாந்தி "இல்லை அவங்க யாரையும் எனக்கு அவ்ளோவா பழக்கம் இல்லை…" என்றாள்.


"ஓ…." என்று பதில் வந்தது அவனிடம்.


"நீ ஏன் உன் ஃப்ரெண்ட்ஸை விட்டுட்டு இங்க வந்த நிக்கிற. உன்னை தேட போறாங்க…" என்று கூட்டத்தின் அந்த புறம் நின்றிருந்த அவனது நண்பர்களை பார்த்து ப்ரஷாந்தி கூற,


"அவங்ககிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். நீ தனியாக இருக்கியேன்னு கம்பெனிக்கு வந்தேன்" என்று மெல்லிய கீற்றாய் புன்னகை சிந்த,


ப்ரஷாந்தியின் மனதில் சாரலடித்தது.


அவன் சென்றதும் சுணங்கிய மனது அவன் சொல்லி வரத்தான் சென்றிருந்தான் என்று அறிந்த போது பேருவகை கொண்டது.


அவனை பார்த்து தானும் ஒரு புன்னகையை பதிலாக அளித்தாள்.


இருவரும் எதுவும் பேசவில்லை.


கம்பியை பிடித்த படி இருவரும் சுற்றியிருந்த இயற்கையை ரசிக்க தொடங்கினர்.


சில நிமிடங்களை மௌனம் விழுங்கியது. சலசலவென நீரின் சத்தமே இருவரது காதிலும் மோதியது.


மற்றவர்களிடமிருந்து சற்று தள்ளி தனியாக தான் இருவரும் நின்றிருந்தனர்.


முதலில் ஹரி தான் மௌனத்தை உடைத்து, "இப்போ ஹாப்பியா…கேரளா வந்ததுக்கு ஆழப்புழா போட்டிங்க்கு வந்தாச்சு" என்று கேள்வி எழுப்ப,


"ஹ்ம்ம் ரொம்ப ஹாப்பி. என்ன ஒரு சின்ன குறை என் ஃப்ரெண்ட்ஸ விட்டுட்டு தனியா இருக்கேன்" என்று அவன் முகம் நோக்கியவள் பின்,


"ஹ்ம்ம் இதுவும் கூட நல்லா தான் இருக்கு. தனியா இந்த நேச்சர பீல் பண்றது. அவங்க கூட வந்திருந்தா சிரிச்சு பேசி ஜாலியா இருந்ததுல இதை ரசிக்காம விட்ருப்பேன்" என்று தனக்கு தானே சமாதானம் கூறினாள்.


தலையசைத்து அவள் கூறுவதை ஆமோதித்தான்.


"எப்படி இந்த ஹிட்லருக்கு திடீர்னு ஞானோதயம் வந்திச்சுனு தெரியலை" என்று பேசியபடி அவன் முகம் நோக்கியவள் அதில் தெரிந்த புன்னகையில் இருந்து எதையே கண்டுபிடித்து,


"ஹேய் நீ தானே அவங்க கிட்ட பர்மிஷன் வாங்குனதா…?" என்று ஆர்ப்பரிக்க,


அமைதியான புன்னகையை பதிலாக அளித்தான்.


அந்த புன்னகையே அவன்தான் அதை செய்தான் என்று கூறிவிட,


"இது எப்படி பாஸிபிள். கேட்டவுடனே பர்மிஷன் கொடுத்திருச்சா…?" என்று வினவினாள்.


"ஸ்டூடன்ட்ஸ் ஆசைபடுறாங்க மேம்னு ரெக்வெஸ்ட் பண்ணி கேட்டேன். கொடுத்துட்டாங்க" என்று தோளை குலுக்கினான்.


"ஹ்ம்ம் சமூகம் பெரிய இடம் தான் போல" என்று அவள் அதிசயிக்க,


"அப்படிலாம் எதுவுமில்லை" என்று புன்னகைத்தான்.


பேசிக்கொண்டு இருந்தவர்களை மணி சத்தம் கலைத்திட இருவரும் ஓசை வந்த திசையை நோக்கி திரும்பினார்கள்.


சிறிய படகு ஒன்றில் ஒருவர் ஐஸ் விற்று கொண்டு வந்தார்.


அதனை கண்ட ப்ரஷி, "வாவ் ஐஸ்க்ரீம். போட்ல சேல் பண்றாங்க" என்று வியக்க,


"வேணுமா உனக்கு…?" என்று வினா தொடுத்தான் அவன்.


"ஹ்ம்ம்" என பலமாக தலையாட்டினாள் அவள்.


ஹரி ஐஸ் விற்பவரை அழைக்க அனைத்து மாணவர்களும் அங்கே கூடிவிட்டனர்.


எல்லோரும் ஐஸை வாங்க கூட்டத்தில் நுழைந்து ப்ரஷி கேட்ட கோனை அவளுக்கும் தனக்கு வெண்ணிலா ஐஸ்ஸயும் வாங்கி வந்து அவளிடம் நீட்டினான்.


"தாங்க் யூ சோ மச்" என்று அவள் பெற்று கொள்ள அவளது தொலைபேசி இசைத்தது.


எடுத்து பார்க்க ரேஷ்மாவின் பெயர் திரையில் மின்னியது.


"ஒன் மினிட் ஹரி" என்றவள் ஓரமாக சென்று அழைப்பை ஏற்று,

"சொல்லு ரேஷ்" என்க,


"என்ன செய்ற ப்ரஷி. நாங்க இல்லாம போர் அடிக்கிதா…?" என்று அக்கறையுடன் வினா தொடுத்தாள்.


அவளது அக்கறையில் புன்னகைத்தவள், "ரேஷ் நான் இங்க ஜாலியா இருக்கேன் உங்க தொல்லை இல்லாம. அதுவும் இப்போ என்னோட பேவரைட் கோன் சாப்பிட போறேன்" என்க,


மறுமுனையில் அனைவரும் கோரஸாக, "வாட் எங்களைவிட்டு நீ மட்டும் ஐஸ் சாப்பிட்றியா…?" என்று வினா எழுப்பினர்.


அதில் எழுந்த சிரிப்பை கட்டுபடுத்தியவள், "எஸ் உங்களைவிட்டு தான் சாப்பிட்றேன். இங்க ஒரு அங்கிள் போட்ல சேல் பண்ணாங்க" என்றவள்,


"சரி ஓகே பாய். என்னோட கோன் மெல்ட் ஆகுது" என்று அழைப்பை துண்டித்துவிட்டாள்.


ப்ரஷாந்திக்கு தெரியும் இந்நேரம் தனது நண்பர்கள் தன்னை தான் கழுவி கழுவி ஊத்திக் கொண்டு இருப்பார்கள் என்று.


அவர்கள் வருந்த கூடாது என்பதற்க்காகவே இவ்வாறு கூறினாள்.

அதே போல தான் அங்கும் சஞ்சய், "நம்மள விட்டு சோகமா இருப்பான்னு பார்த்தா ஐஸ் சாப்பிட்டு என்ஜாய் பண்றா" என்று திட்ட,

வினுவும், "ஹ்ம்ம் ஆமா. இவளுக்காக நாம இங்க பீல் பண்ணிட்டு இருக்கோம். வாங்க நாமளும் என்ஜாய் பண்ணலாம்" என்று தங்களருகே சென்ற ஐஸ் விற்கும் படகை அழைத்தாள்.


அழைப்பை துண்டித்த ப்ரஷி ஹரியின் அருகே வந்து ஐஸை சாப்பிட தொடங்கினாள்.


தன்னுடையதை சாப்பிட்டு முடித்த ஹரி, "ப்ரஷாந்தி உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நினைச்சேன்" என்க,

என்ன‌‌ என்பதாய் சைகையில் ப்ரஷாந்தி வினவினாள்.


"என்னோட ப்ரசென்டேஷன் எப்படி இருந்திச்சுனு நீ சொல்லவே இல்லையே…?" என்று அவள் வதனம் நோக்க,


அவன் கேட்ட வினாவில் ப்ரஷாந்திக்கு புரை ஏறி இரும தொடங்கி விட்டாள்.


உடனே அருகில் உள்ளவரிடம் நீரை வாங்கி அவளிடம் நீட்டியவன், "பாத்து மெதுவா சாப்பிடு…" என்க,


நீரை வாங்கி தன் வாயில் சரித்து கொண்டவள் ஆசுவாசம் அடைய,


ஹரி தனது வினாவின் பதிலுக்காக அவள் முகத்தை தான் பார்த்திருந்தான்.


'விடமாட்டான் போல' என்று மனதில் நினைத்தவள்,


"அதான் அப்போவே சொன்னேனே நல்லா இருந்ததுன்னு…" என்று பதில் அளிக்க,


"எப்போ சொன்ன…? உன் ஃப்ரெண்ட்ஸ் தான் நல்லா இருக்குனு சொன்னாங்கன்னு நீ சொன்னதா ஞாபகம்" என்றான் யோசிக்கும் பாவனையில்.


'சரியா வார்த்தை மாறாம சொல்றானே இவன்கிட்ட யோசிச்சு தான் பேசணும் இனி' என நினைத்தவள்,

"ஹ்ம்ம் ரொம்ப நல்லா ப்ரசென்ட் பண்ண" என்க,


"ரியல்லி…?. நான் கூட பிஸிக்ஸ கண்டுபிடிச்ச மாதிரி தான் ப்ரெசென்ட் பண்ணேன்னு நினைச்சேனே" என்றவனின் முகத்தில் கள்ள புன்னகை.


இதில் அவளுக்கு கூச்சம் மேலிட லேசாக சிவந்துவிட்ட முகத்தை மறைக்க போராடியவள்,


"தெரியாம பேசிட்டேன். இனிமேல் பேசமாட்டேன். விட்றலாமே…" என்று இழுக்க,


"ஹ்ம்ம் தட்ஸ் குட்" என்று தலையசைத்தவனின் முகத்தில் ரசனையின் சாயல்.


'ஷப்பா தப்பிச்சிட்டோம்' என்று திரும்பியவளின் விழிகள் வியப்பில் விரிய,


"ஹே அது விண்ணை தாண்டி வருவாயா…? மூவி எடுத்த சர்ச் தானே…?" என்று குதிக்க,


"ஹ்ம்ம் ஆமா" என்று பதிலளித்தான்.


"அங்க போகலாமா…? போட்டை ஸ்டாப் பண்ண சொல்லேன்" என்று வினவ,


"நோ போக முடியாது. இந்த போட் எங்கேயும் நிக்காது. ஸ்ட்ரெயிட்டா மீனப்பள்ளி காயல் வரை போயிட்டு அப்படியே திரும்பிடும். அங்க கூட நிக்காது இந்த நைட் டைம்ல" என்று மறுத்தான்.


"நீ தான் பெரிய இடமாச்சே. ஹிட்லர்கிட்டயே பேசி சம்மதம் வாங்கிட்ட. இங்க வாங்க மாட்டியா…?" என வினா தொடுக்க,


"ஹே அது வேற இது வேற. அது காலேஜ். இது அப்படியா…?" என்றான்.


"எல்லாம் ஒன்னுதான். ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக ஒரு டைம் ட்ரை பண்ணி பாரேன்" என்று கெஞ்ச,


அவனும் மறுக்க முடியாது அந்த படகு நடத்துனரிடம் பேச சென்றான்.



ப்ரஷி இங்கே ஆர்வமாக அவனுக்காக காத்திருக்க சென்றவன் இரண்டு நிமிடங்களில் திரும்பி வர,

ப்ரஷி, "என்ன…ஓகே ஆகிடுச்சா…?" என்று வினவ,


"ஹ்ம்ம் ஓகே ஆகிடுச்சு" என்று பதில் அளித்தான்.


"நான் சொன்னேன்ல உன்னால முடியும்னு வா போகலாம்" என்று கதவருகே சென்று நிற்க,


நடத்துனர் வந்து கயிற்றை போட்டு வட்டகாயலில் படகை நிறுத்தி கதவை திறந்து விட்டு, "நாங்க ரிடர்ன் ஆகும்போது கரெக்டா இங்க வந்திடணும்" என்க,


இருவரும் சம்மதமாக தலையசைத்தனர்.


ஹரி முதலில் இறங்கிவிட்டு அவளுக்கு கையை நீட்ட அவனது கையை இறுக பற்றிய படி அச்சமின்றி இறக்கிவிட்டாள்.


அந்த கூதக்காற்றின் குளுமைக்கு அவனது கரத்தின் வெம்மை இவளுக்குள் குறுகுறுக்க செய்ய இறங்கிய நொடியே கையை எடுத்து கொண்டாள்.



அந்த தேவாலயத்தை அடைய சிறிது தூரம் நடக்க வேண்டும்.


இருவரும் நடக்க, "எனக்கு விண்ணை தாண்டி வருவாயா…? ரொம்ப பிடிச்ச மூவி…என்னை இங்க அழைச்சிட்டு வந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ் ஹரி" என்று நன்றி நவிழ, அவனும் அதனை ஏற்று கொண்டான் விழியசைத்து.


இருவரும் தேவாலயத்தினுள் நுழைய அங்கே பேரமைதி நிலவியது.


இன்று யாருக்கோ திருமணம் போல திருமணத்திற்கு வந்திருந்தோர் நாற்காலியில் அமர்ந்திருக்க மணமக்கள் இருவரும் மேல நின்றிருந்தனர்.


ப்ரஷாந்தி, "வா ஹரி உள்ளே போய் பார்க்கலாம் நான் க்ரிஸ்டின் மேரேஜை இதுவரைக்கும் பார்த்ததில்லை" என்க இருவரும் அமைதியாக சென்று கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டனர்.


மணமக்களின் அருகே பைபிளை திறந்து வைத்த படி நின்றிருந்த பாதிரியார், "அவர்கள் இருவருக்கும் இந்த திருமணத்தில் சம்மதமா…? என்று தனித்தனியாக வினவ,

இருவரும், "சம்மதம்" என்று சந்தோஷமாக பதிலளித்தனர்.


பின் பாதிரியார் மோதிரத்தை மாற்றி கொள்ளுமாறு அவர்களிடம் கூற அத்திருமணம் இனிதே நடைபெற்றது.


எல்லோரும் கைகளை தட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்க அதனை கண்ட ப்ரஷாந்திக்கும் ஹரிக்குமே மகிழ்ச்சி தொற்றி கொண்டது.



இருவரும் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு வெளியே வந்தனர்.


"ஹரி ஒன் செகெண்ட் என்னை இந்த ப்ளேஸ்ல வச்சு ஒரு பிக் இங்க எடுக்கிறியா…?" என்று தொலைபேசியை நீட்டியவள்,

மாறி மாறி நின்று போஸ் கொடுத்தாள்.


ஹரியும் அவளது அலப்பறையில் புன்னகையுடன் தொலைபேசியை வாங்கி ஒன்றிற்கு நான்கு புகைப்படங்களை எடுத்து கொடுத்தான்.


அவற்றை பார்த்தவள், "வாவ் எல்லா பிக்கஸும் சூப்பரா இருக்கு. வா நம்ம ஒரு செல்பீ எடுத்துக்கலாம்" என்று அவனை அழைத்தாள்.


"வேணாம் நீ எடுக்குறதுன்னா எடுத்துக்கோ" என்று மறுத்துவிட,


"ப்ச் ஓரே ஒரு பிக் தானே வா…" என்று அவனின் கை பிடித்து தன்னருகே நிற்க வைத்து இருவரையும் அந்த தொலைபேசியினுள் அழகாய் பிடித்து கொண்வள்,


"போட்டோ அழகா வந்திருக்கு. உன் நம்பர் கொடு ஷேர் பண்றேன்" என்று அவனது எண்ணையும் பெற்று கொண்டாள்.


பின் இருவரும் பேசிய படி திரும்பி நடக்க ப்ரஷாந்தி, "ஹரி நீ பெங்களூர் தானா…?" என்று அவனை பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கில் வினவினாள்.


"இல்லை சென்னை. இப்போ ஹாஸ்டல்ல தங்கி இருக்கேன். நீ…?" என்று பதிலுக்கு வினா எழுப்ப,


"நான் இங்க பெங்களுர் தான் இந்திரா நகர்ல இருக்கோம். அப்பா பிஸ்னஸ் பண்றாங்க. ஒரு அக்கா இப்போ தான் லாஸ்ட் மன்த் மேரேஜ் முடிஞ்சது. ஒரு தங்கச்சி காலேஜ் பர்ஸ்ட் இயர்" என்று தனது குடும்ப விவரத்தை கூறியவள்,


"உன்னை பத்தி சொல்லு" என்றாள்.


"என்னை பத்தி என்ன சொல்ல…?" என ஹரி வினவ,


"உன் ஃபேமிலி பத்தி சொல்லு. உன் நேட்டிவ் எது. அப்பா அம்மா என்ன பண்றாங்க. சிபிலிங்க்ஸ்" என்றவள் நிறுத்தி அவனை கண்டாள்.


"இருந்தா தானே சொல்றதுக்கு. எனக்கு அம்மா அப்பா ஃபேமிலினு சொல்லிக்க யாருமே இல்லை. சின்ன வயசுல இருந்து ஒரு ஆர்ஃபனேஜ்ல வளர்ந்தேன். அவங்க தான் என்னை ஸ்கூல் வரை என்ன படிக்க வச்சாங்க. இப்போ ஸ்காலர்ஷிப்ல இந்த காலேஜ்ல படிக்கிறேன் அவ்ளோ தான்" என்று நடந்த படி பேச,

ப்ரஷி தான் எனக்கு 'ஃபேமிலின்னு சொல்லிக்க யாருமில்லை' என்று கூறிய நொடியே அதிர்ச்சியில்
உறைந்து விட்டாள்.


அடுத்து அவன் கூறிய எதுவும் கருத்தில் பதியவில்லை.


சில அடிகள் நடந்தவன் அவள் வராததை உணர்ந்து திரும்பி, "ஏன் ப்ரஷாந்தி அங்கேயே நின்னுட்ட வா…" என்று அழைக்க,


அதில் மீண்டவள் அவனை வேதனை படுத்திவிட்டோமோ…?
என்று கலங்கி அவன் முகம் நோக்கினாள்.


ஆனால் எப்போதும் போல சாதரணமாக தான் இருந்தது.


தயங்கியபடி, "ஐ ஆம் சாரி ஹரி…நான் ஜெஸ்ட் தெரிஞ்சுக்க தான் கேட்டேன்" வருத்தத்துடன் கூற,

"ஹே நான் எதுவும் நினைக்கலை. நீ எதுக்கு இவ்ளோ பீல் பண்ற" என்று புன்னகைக்க அப்போது தான் அவளுக்கு சிறிது ஆசுவாசம் பிறந்தது.


இருந்தும் அவனுக்கு யாருமில்லை என்ற எண்ணமே மனதை குடைந்தது.


முகத்தில் எதையும் காண்பிக்காமல் அவனுடன் இணைந்து நடக்க,


"ப்ரஷாந்தி அங்க ஒரு தாபா இருக்கு. குளிருக்கு சூடா டீ குடிச்சா நல்லா இருக்கும் போகலாமா…?" என்று வினவினான்.


தன்னை சாதரணமாக்க தான் முயற்சிக்கிறான் என்று புரிந்தவள் இளநகையுடன் மெலிதாக தலையைசைத்தாள்.


இரவு நேரத்தில் சிறிய நியான் விளக்கின் ஒளியில் மின்னி கொண்டு இருந்தது.


இருவரும் சென்று அமர்ந்ததும் ஹரி, "சேட்டா டூ சாயா…?" என்று குரல் கொடுக்க இருவருக்கும் தேனீர் வந்தது.



அமைதியாக தேநீரை பருகினர். குளிருக்கு இதமாக ஏலக்காய் மனம் வீசும் தேனீர் தொண்டையில் இறங்கியது.


அதுவரை வளவளத்த ப்ரஷி அமைதியாகிவிட அவளை சரியாக்க ஹரி பேசினான்.


அவளும் அமைதியாக கேட்டு கொண்டாள்.


பின் இருவரும் அங்கிருந்து வெளியேறி வட்டகாயலுக்கு செல்ல அச்சமயம் அவர்களது படகும் வந்திருந்தது.


இருவரும் ஏறி கொள்ள படகு கிளம்பியது.


********



விமானம் கிளம்பும் நேரம் வந்துவிட்டது. பயணிகள் அனைவரும் சீட் பெல்ட்டை அணியுமாறு கேட்டு கொள்கிறோம் என்று விமான பணிப்பெண் ஆங்கிலத்தில் கூற,


சாரளத்தின் வழியே வேடிக்கை பார்த்த படி இருந்த ப்ரஷாந்தி கவனம் கலைந்து தனது சீட் பெல்ட்டை அணிந்து கொள்ள பெங்களூர் விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் மாலத்தீவை நோக்கி புறப்பட்டது.


ப்ரஷாந்தி மனதில் ஒரு ஆனந்தம் வெகு நாட்களுக்கு பிறகு நண்பர்கள் எல்லோரையும் ஒன்றாக காணப்போகும் ஆனந்தம்.


வினுஷாவின் திருமணம் மாலத்தீவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொள்வதற்க்காக தான் ப்ரஷாந்தி மாலத்தீவிற்கு செல்கிறாள்.


இரண்டு நாட்களுக்கு முன்பு ப்ரஷாந்திக்கு அழைத்த வினுஷா திருமணத்திற்கு அழைப்பு விடுத்தாள்.


நிச்சியத்திற்கு அழைக்காமல் திருமணத்திற்கு ஏன் அழைக்கிறாள் என்ற கேள்வி மனதில் எழுந்த போதும் அவள் கேட்கவில்லை.


ஆனால் கேட்காமலே வினுஷா கூறினாள். அவளது திருமணம் காதல் திருமணம் என்றும் அதனால் வீட்டில் பெரிய பிரச்சினை எழுந்து சண்டையாகிவிட்டது.


வினுஷா வேறுவழியில்லாமல் வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறிவிட, இது அவர்களது சொந்த பந்தங்களுக்குள் காட்டு தீயாய் பரவியது.


தங்கள் கவுரவத்தை காத்து கொள்வதற்க்காக வினுஷாவின் வீட்டினர் அவளை அழைத்து இருவருக்கும் திருமணம் செய்து கொள்வதாக கூறிய அவசர கதியில் நிச்சியத்தையும் நடத்தி இருந்தனர்.



இதனால் தான் யாரையும் நிச்சியத்திற்கு அழைக்க முடியவில்லை என்று கூறி மிகவும் வருந்தினாள்.


மேலும் ஒரு வாரத்திற்கு முன்பே வந்துவிடுமாறு அன்பு கட்டளை விதித்திருக்க ப்ரஷாந்தியும் அலுவலகத்தில் விடுப்பு கூறிவிட்டு
கிளம்பிவிட்டாள்…


விமானம் மேலேறி செல்ல துவங்க ப்ரஷாந்தி கண்மூடி இருக்கையில் சாய்ந்துவிட்டாள்.


விழி மூடியவளின் நினைவுகள் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த தீபிகாவின் பெண் பார்க்கும் நிகழ்வில் வந்து நின்றது…

ப்ரஷாந்தி காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய அவளை எதிர்கொண்ட சுபத்ரா, "வாடி. இதான் நீ வர்ற நேரமா…?" என கடிந்து கொள்ள,


"சாரிம்மா கொஞ்சம் லேட்டாயிடுச்சு" என்றவள்,


"தீபி ரெடியாகிட்டாளா…?" என்று வினவினாள்.


"ஹ்ம்ம் மேல ரூம்ல ரெடியாகிட்டே இருக்கா…? நிஷாவும் மேலதான்
இருக்கா" என்று பதில் மொழிய,


"சரிம்மா நான் போய் அவளுக்கு ஹெல்ப் பண்றேன்" என்று மேலே ஏற போனவள் ஹாலில் அமர்ந்து இருந்த தந்தையை பார்த்து நின்று விட, போய் பார்த்து வா எனும் விதமாக அவர் தலையசைத்தார்.


ப்ரஷி அறைக்குள் நுழைய, "இதோ வந்துட்டாங்க மேடம்…?" என்று நிஷா கோபத்துடன் மொழிய,


தீக்ஷி, "சித்தி…" என்று அவளது கரங்களில் தொற்றி கொண்டாள்.

நிஷாவின் கோபத்திற்கு புன்னகையை பதிலாக தந்தவள், "புதுப்பொண்ணு ரெடியாகியாச்சா" என்றபடி தீபியின் அருகில் சென்று அமர்ந்தாள்.


"வா ப்ரஷி. நான் ரெடியாகிட்டேன்" என்றவள் எழுந்து நின்று,


"எப்படி இருக்கேன் சாரில" என்க,


ப்ரஷாந்தி தங்கையை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தாள்.


கபிலை நிறத்தில் மெல்லிய சரிகை வைத்த பட்டுப் புடவையில் அழகாக இருந்தாள்.


"ஹ்ம்ம் எல்லாம் நல்லா இருக்கு. பட் அந்த கோல்டன் கலர் நெக்லெஸ் வேண்டாம் வொயிட் ஸ்டோன்ல இருந்தா போட்டுக்கோ" என்க,


"ஏன் இது நல்லா இல்லையா…?" என்று கேள்வி வந்தது தீபியிடம்.


ப்ரஷாந்தி பதில் கூறுவதற்குள் நிஷா அந்த நகையை எடுத்து வந்து, "வா போட்டு பாக்கலாம்" என்று அதனை அணிவித்தாள்.


தீபி, "என்ன ஓகே வா…?" என்று வினவ,


"வாவ் ரியல்லி சூப்பரா இருக்கு. பெர்பெக்ட். நீயே பாரு" என்று கண்ணாடியில் காண்பித்தாள் நிஷா.


தீபியும் பார்த்து விட்டு, "ஹ்ம்ம் இந்த சேரிக்கு பக்கா மேட்சிங்கா இருக்கு. இதுக்கு தான் ப்ரஷாந்தி வேணும்றது எல்லாத்தையும் பர்பெக்டா பண்ணுவா…" என்று கூற,


மற்ற இருவர் முகத்திலும் புன்னகை.


சுபத்ரா வந்து, "தீபி ரெடியா. அவங்க பக்கத்துல வந்துட்டாங்க" என்று வினவ,


"ஹ்ம்ம் அவ ரெடி தான் மா. நீங்க வர்றவங்களை போய் பாருங்க" என்று அவரை அனுப்பி வைத்தாள் நிஷா.


மாப்பிள்ளை வீட்டினரின் கார் வர சுதர்ஷனும் சுபத்ராவும் வெளியே சென்று அவர்களை வரவேற்று உபசரித்தனர்.


பின்னர் சில நிமிடங்கள் சம்பிரதாயமான பேச்சுகளில் கழிய,

சுதர்ஷன், "சுபா தீபிய அழைச்சிட்டு வர சொல்லு" என்றார்.


சுபத்ரா, "இதோ அழைச்சிட்டு வர சொல்றேன்" என்றவர் அறைக்கு சென்று நிஷாவை அழைத்து வர கூறினார்.


நிஷாவும் ப்ரஷாந்தியும் தீபிகாவை கீழே அழைத்து வந்தனர்.


தீக்ஷி ப்ரஷியின் கையை பிடித்து நடந்து வந்தாள்.



ஏற்கனவே புகைப்படத்தில் பார்த்து பிடித்திருந்தாலும் நேரில் பார்த்தவர்களுக்கு பரம திருப்தி அளித்தது.


அது அவர்களது முகத்திலேயே பிரதிபலித்தது.


சுபத்ரா, "எல்லோருக்கும் வணக்கம் சொல்லு" என்க, தீபியும் குனிந்து அணைவரையும் நமஸ்கரித்தாள்.


சுமதி, "பொண்ணு நல்ல லட்சனமா இருக்கா…" என்று புன்னகைத்துவிட்டு,


"வாம்மா வந்து உட்காரு" என்று தன்னருகே அழைத்தார்.


நிஷா, "போய் உட்காரு" என்று மெல்லிய குரலில் முணுமுணுக்க,


தீபி சென்று அவரருகில் அமர்ந்தாள்.


சுதர்ஷன், "இது என்னோட பெரிய பொண்ணு நிஷாந்தி. இது என்னோட ரெண்டாவது பொண்ணு ப்ரஷாந்தி" என்று அறிமுகம் செய்து வைக்க, அவர்களும் புன்னகையுடன் வரவேற்றனர்.


சந்திருவின் தங்கை ஹரிணி, "அண்ணி நிமிர்ந்து அண்ணாவ பார்த்துக்கோங்க" என்க,


சுமதியும், "ஆமம்மா நல்லா பார்த்துக்கோ" என்றார்.


தீபிகா நிமிர்ந்து தன்னெதிரே அமர்ந்திருந்தவனை பார்க்க, சந்திருவும் அவளை தான் புன்னகையுடன் பார்த்திருந்தான்.



ஒரு நொடி அவன் மேல் பார்வையை பதித்தவள் மீண்டும் தலையை தாழ்த்தி கொண்டாள்.


மணிகண்டன், "பொண்ணும் பையனும் அவங்களுக்குள்ள பேசிட்டு முடிவை சொல்லட்டுமே" என்க,


சுதர்ஷனும், "ஹ்ம்ம் தாராளமா…வாழ போறது அவங்க தானே. டெரஸ்ல போய் பேசிட்டு வரட்டும்" என்றார்.


இருவரும் மாடியை நோக்கி சென்றனர்.


ஹரிணி, "ஹாய் குட்டி" என்று தீக்ஷியை பார்த்து கையசைக்க,


அவள் வெட்கத்துடன் ப்ரஷியின் கையை பிடித்து கொண்டாள்.


ஹரிணி புன்னகையுடன், "இங்க வா…" என்று கைநீட்டி அழைக்க,


தீக்ஷி, "ம்ஹும்" என்று தலையசைத்தாள்.


ப்ரஷி, "தீக்ஷி போ ஆன்ட்டி கூப்பிட்றாங்கல்ல" என்க,


மாட்டேன் என்பதாய் மீண்டும் தலையசைத்தாள்.


"உங்க பொண்ணாக்கா ரொம்ப க்யூட்டா இருக்கா…" என்று ஹரிணி வினவ,


சடுதியில் ப்ரஷியின் முகத்தில் ஒரு மாற்றம்.


அவளால் பதில் கூற இயலவில்லை. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டி கொண்டது.


அவளது நிலையை மற்ற மூவரும் அறிந்தே இருந்தனர்.


நிஷா, "அவ என்னோட பொண்ணு தீக்ஷி" என்று ப்ரஷாந்தியை காக்கும் பொருட்டு பதில் கூறினாள்.


இப்போது தான் ப்ரஷாந்திக்கு போன உயிர் திரும்ப வந்தது.


இருந்தும் ஆழ்மனதில் உறங்கி கொண்டிருந்த நினைவுகள் இப்போது மேலெழும்புவது போல பிரம்மை…


"ஓ…அவங்க கூடவே ஒட்டிக்கிட்டு இருந்தாளா…அதான் அவங்க பொண்ணுன்னு நெனச்சுட்டேன்" என்று ஹரிணி கூற,


"அவளுக்கு என்னை விட ப்ரஷிய தான் ரொம்ப பிடிக்கும்" என்று புன்னகையுடன் நிஷா பதில் அளித்தாள்.


சுமதி, "உன் ஹஸ்பண்ட் பிஸ்னஸ் பண்றதா அண்ணா சொன்னாங்க" என்று நிஷாவிடம் கூறியவர்,


"உன் ஹஸ்பண்ட் என்ன பண்றாரும்மா…" என்று ப்ரஷியிடம் கேட்க,


அவள் அவரது கேள்வியில் பதிலற்று நின்றுவிட்டாள்.


தங்கைக்கு திருமணம் என்று வந்துவிட்டால் இது போன்ற சூழ்நிலைகள் வரும் என்று அவள் எதிர்பார்த்தது தான் இருந்தும் அதனை அவளால் கையாள முடியவில்லை.


கடந்த முறை காப்பாற்றிய நிஷாவுக்கும் இம்முறை என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை.


சுமதி பதிலுக்காக தன்னையே பார்த்திருப்பதை உணர்ந்தவள் தவித்து போய்விட்டாள்.


அவளை காக்கும் விதமாக சந்திருவும் தீபியும் இறங்கி வர,

சுதர்ஷன், "இதோ ரெண்டு பேரும் பேசிட்டு வந்துட்டாங்க. அவங்க முடிவு என்னென்னு கேட்டு தெரிஞ்சுக்குவோம்" என்று பேச்சை மாற்றிவிட்டார்.


சுமதி சந்திருவிடம், "என்னடா எல்லாம் பேசிட்டிங்களா சம்மதாமா…?" என வினவ,


"ஹ்ம்ம் சம்மதம்மா" என்று சந்திரு பதில் அளித்தான்.


சுபத்ரா கேட்கும் முன் சுமதியே முந்தி கொண்டு, "என்னம்மா உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா…? என் பையனை பிடிச்சிருக்கா…?" என்று வினா தொடுத்தார்.


"ஹ்ம்ம் பிடிச்சிருக்கு" என்றவள் தலையை தாழ்த்தி கொண்டாள்.


மணிகண்டன், "பொண்ணுக்கும் பையனுக்கும் பிடிச்சிருக்கு. வேறென்ன அடுத்த செய்ய வேண்டியதை பேசுவோமா…?"
என்று நிச்சியம் திருமணத்தை பற்றி பேச தொடங்கிவிட்டனர்.


அதன் பின்னர் ப்ரஷாந்தியை பற்றி யாரும் பேசவில்லை.


அவர்களுடைய இந்த வெளிப்படையான பேச்சு சுதர்ஷனின் குடும்பத்திற்கு பிடித்துவிட எல்லாவற்றையும் பேசி முடித்திருந்தனர்.


ஆனால் ப்ரஷாந்தி தான் அவர்கள் கேட்ட கேள்வியின் வீரியத்தில் உடைந்து போயிருந்தாள்…


அவர்கள் எப்போதடா கிளம்புவார்கள் என்று காத்திருந்தவள் அவர்கள் சென்ற அடுத்த நொடியே தனது வெஸ்பாவை எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.


அவள் இப்படி கிளம்புவதின் காரணம் அறிந்தவர்கள் அவளை தடுக்கவில்லை.


ஆனால் இதற்கு எப்போதடா ஒரு விடிவு காலம் வரும் என்று தான் பார்த்திருந்தனர்…

















.
 
Top