அத்தியாயம் 3
தன் முகத்தையே பார்த்திருந்தவளிடம் ஹரி, "ஹாய் ப்ரஷாந்தி" என்று புன்னகைத்தான்.
அவன் சற்று முன் நடந்த நிகழ்வை பற்றி கேட்க வந்துள்ளான் என்று நினைத்தவள் அவன் கூறிய 'ஹாய் ப்ரஷாந்தி' என்ற வார்த்தையில் விழித்தாள்.
இவனுக்கு எப்படி என் பெயர் தெரிந்தது. எங்கேயும் பார்த்தது போல தெரியவில்லையே.
இதற்கு முன்பு எங்காவது பார்த்திருக்கிறோமோ என்று நினைவடுக்கில் தேட எங்கேயும் அவன் முகம் தோன்றவில்லை.
ஆனால் இந்தக் கன்னக்குழியை மட்டும் எங்கேயோ பார்த்த உணர்வு.
ஒரு நொடி தயங்கிவிட்டு, "ஹாய்…" என்றவள் பின், "சாரி நீங்க யார்னு எனக்கு தெரியலை" என்று கூற,
ஹரி, "என்னை ஞாபகம் இல்லையா…? அதுக்குள்ள மறந்துட்டியா…?" என்று அதிர்ந்து வினவினான்.
அவன் அதிர்ச்சியில் ப்ரஷாந்தி 'இவன் என்ன இத்தனை அதிர்ச்சி அடைகிறான். எனக்கு நன்றாக தெரிந்தவன் போல. ஆனால் எனக்கு இந்த கன்னக்குழியை தவிர ஏதும் நினைவில்லையே' என்று எண்ணிவிட்டு,
அவனிடம் இல்லை என்பதாய் தலையை இடது வலமாக அசைத்தாள்.
ஹரி, "நேத்து நைட் என் கூட அவ்ளோ பேசுனயே. நான் உன்னை ப்ரமிளா மேம்கிட்ட இருந்து காப்பாத்தி உன் ரூம் வரைக்கும் வந்து விட்டுட்டு போனேனே" என்று அவள் முகம் நோக்க,
இப்போது அதிர்வது ப்ரஷாந்தியின் முறையாயிற்று.
எனது நினைவடுக்கில் எங்கெங்கோ தேடி அலைந்த நான் ஏன் இப்படி இருக்குமோ…? என்று சிந்தித்து பார்க்கவில்லை.
உதவி செய்தவனையே யாரென்று கேட்டுவிட்டேனே. இவன் என்னை பற்றி என்ன நினைப்பான்.
இவர்கள் கூறியது போல நான் கண்மண் தெரியாமல் தான் குடித்திருக்கிறேன் போல என்று வருந்தியவள்,
"ரியல்லி சாரி நைட் நடந்தது எதுவும் எனக்கு நினைவுல இல்லை" என்று கண்களை சுருக்கி அவள் மன்னிப்பை வேண்டினாள்.
அவளது பாவனையில் புன்னகைத்தவன், "இட்ஸ் ஓகே" என்று பதில் மொழிந்தான்.
அவன் புன்னகையில் மகிழ்ந்தவள், "ஆக்சுவலி நான் நைட் புல்லா குடிச்சிட்டேன் அதான் உங்களை எனக்கு அடையாளம் தெரியலை" என்றவள் கூறிவிட்ட பிறகு தான் தான் கூறியதின் அர்த்தம் உணர்ந்து ஒரு கண்ணை மூடி நாக்கை கடித்து அவனை கண்டாள்.
அவளது இந்த பாவனையில் அவன் வாய்விட்டே சிரித்துவிட்டான்.
ப்ரஷாந்தி மனதில், "ப்ரஷி என்ன பண்ணிட்டு இருக்க. ஸ்டார்ட்டிங்க்ல இருந்தே சொதப்பிட்டு இருக்க. நீ பேசுறதை வச்சு நீ ஒரு புல்டைம் ட்ரிங்கர்னு நினைக்க போறார்' என்று தனக்குள் புலம்பிய படி நின்றிருந்தாள்.
இவர்களது சத்தத்தில் திரும்பிய சஞ்சய் ப்ரஷாந்தியிடம் குனிந்து, "ஏய் யாரு இவர்…இப்படி சிரிச்சு பேசிட்டு இருக்க" என்று வினா எழுப்ப,
ப்ரஷாந்தி, "நேத்து நைட் எனக்கு இவர் தான் ஹெல்ப் பண்ணாரு" என்று குறைந்த குரலில் பதில் அளித்தாள்.
சஞ்சய், "இவ்ளோ நேரம் ஹெல்ப் பண்ணது யாருன்னு கேட்டதுக்கு தெரியாது சொன்ன…?" என அதிர்ந்து வினா தொடுக்க,
ப்ரஷாந்தி, "எனக்கே இப்போ தான் தெரியும். நான் அப்புறமா உன்கிட்ட சொல்றேன். நீ ஃபுட்ட வாங்கிட்டு போ" என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு ஹரியிடம் திரும்பினாள்.
அவன் இன்னும் சிரிப்பின் தடயம் இதழ்களில் மீதமிருக்க அவர்களை தான் பார்த்தபடி இருந்தான்.
அவர்களுக்கு பின்னே ஆட்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட,
ஹரி, "ப்ரஷாந்தி க்யூல ஆள் வர ஆரம்பிச்சுட்டாங்க. நாம அந்த டேபிளுக்கு போகலாமா…?" என்று கேள்வி எழுப்ப,
"ஹான் போகலாம்" என்று தலையசைத்தாள்.
அவளுக்கு நேற்று என்ன நடந்தது என்று தெரிய வேண்டியது இருந்தது. அதனை கேட்பதற்க்காக அவனுடன் பேச வேண்டும் என்றும் செய்த உதவிக்கு நன்றி நவிழ்வதற்க்கும் சரியென கூறியிருந்தாள்.
ஹரி, "உனக்கு சாப்பிட என்ன வேணும்…?" என்று வினவ,
ஒரு நொடி சிந்தித்துவிட்டு, "ஸ்ட்ராபெரி கோப்லர்" என்று பதில் மொழிந்தாள்.
ஹரி தனக்கு ஒரு சாக்லேட் மில்க் ஷேக்கும் அவளுக்கு அவள் கேட்ட உணவையும் வாங்கிட்டு வந்து அவளெதிரே வந்து அமர்ந்தான்.
இதற்குள் சஞ்சய் தன் நண்பர்களிடம் அனைத்தையும் கூறியிருக்க அவர்கள் அனைவரது பார்வையும் இவர்கள் மேல் தான் இருந்தது.
ப்ரஷாந்திக்கு இது தான் நடக்கும் என்று தெரிந்திருக்க அவர்கள் புறம் திரும்பி வேலையை பாருங்கள் என்று கையால் சைகை செய்துவிட்டு அவன் வருவதற்குள் திரும்பி கொண்டாள்.
ஹரி அவள் கேட்ட ஸ்ட்ராபெரி கோப்லரை அவள் புறம் நகர்த்தி விட்டு, "சாப்பிடு ப்ரஷாந்தி" என்று கூற,
ப்ரஷாந்திக்கு உணவை விட அவனிடம் தன்னை நிரூபிப்பது முக்கியமாக போய்விட,
"அது நான் இதுவரைக்கும் ட்ரிங்க் பண்ணது இல்லை. திஸ் இஸ் தி பர்ஸ்ட் டைம். ஒரு எக்ஸ்பீரியன்ஸ்க்காக. நான் பர்ஸ்ட் வேண்டாம்னு தான் சொன்னேன். என் ஃப்ரெண்ட்ஸ் தான்" என்று தயக்கத்துடன் அவன் தவறாக நினைத்துவிட கூடாதே என்றவாறு அவன் முகம் பார்த்தாள்.
அவளது எண்ணம் புரிந்தவன் இதழில் மலர்ந்த சிரிப்புடன், "எனக்கு ஆல்ரெடி தெரியும்" என்றான்.
"ஆல்ரெடி தெரியுமா…? எப்படி தெரியும்…?" என்று வியப்படைந்த குரலில் ப்ரஷாந்தி வினா தொடுக்க,
"நீ தான் நேத்து நைட் சொன்ன" என்றான் மாறாத சிரிப்புடன்.
ப்ரஷாந்தி விழிவிரித்து, "நான் சொன்னேனா…? வேற என்ன சொன்னேன்…?" ஆவலுடன் கேள்வி கேட்க,
ஹரி, "கண்டிப்பா சொல்லணுமா…?" என்று நிறுத்திவிட்டு அவள் முகம் நோக்கினான்.
கண்களை சுருக்கி கெஞ்சும் பாவனையில், "ப்ளீஸ்" என்று ப்ரஷாந்தி மொழிய,
ஹரி, "உனக்கு ப்ரமிளா மேமை பார்த்தாலே பிடிக்காது. அவங்களுக்கு லேடி ஹிட்லர்னு நிக் நேம் வச்சு இருக்க. தென் உன் டாடி ஹிட்லர் நம்பர் ஒன். ப்ரமிளா மேம் ஹிட்லர் நம்பர் டூன்னு சொன்ன. ஹ்ம்ம் வேற" என்றவன் நாடியில் கைவைத்து சிந்திக்க,
இங்கே ப்ரஷாந்தி அதிர்ச்சியில் விழிகள் தெறித்துவிடும் அளவிற்கு விழிவிரித்து அமர்ந்திருந்தாள்.
'ஹே ப்ரஷி என்ன செஞ்சு வச்சிருக்க. போதையில இப்படி எல்லா உண்மையையும் உளறி வச்சிருக்க. இன்னும் என்னென்ன பண்ணி வச்சிருக்கியோ…' என்று தன்னைத் தானே நிந்தித்தபடி விழிவிரித்த படி அவன் மேல் விழி வைத்திருந்தாள்.
அவள் முகத்தை கண்டு உள்ளுக்குள் புன்னகைத்த ஹரி, "ஹான் ஞாபகம் வந்திருச்சு. நான் சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கேன். என் கன்னக்குழி ரொம்ப அழகா இருக்குனு விரல் வச்சுப் பார்த்த" என்று கூற,
ப்ரஷாந்தி இதற்கு மேலும் எதையும் தாங்கவியலாத பாவனையில், "போதும் போதும் இதுக்கு மேல எதுவும் சொல்லாதிங்க" என்று கூறி ஒரு கையால் முகத்தை மூடிக் கொண்டாள்.
அவன் கூறியவற்றை கேட்டவளுக்கு கூச்சத்தில் முகம் சிவந்து விட்டது.
தன் முன்னே சிவந்த முகத்தை ஒரு கையால் மறைத்த படி கூச்சத்துடன் அமர்ந்திருப்பவளை கண்டதும் அவனுக்குள் இருக்கும் ரசிகன் விழித்துக் கொண்டான்.
தலை சாய்த்து ரசனையுடன் கூடிய புன்னகையை இதழ்களில் தவழவிட்ட படி அவளை பார்த்தான்.
அவனது பார்வையில் பாவைக்கு தான் கூச்சம் பிடிங்கி திண்றது.
இதற்கு மேலும் அவளை தவிக்க விட விரும்பாதவன் தன் பார்வையை மாற்றிக் கொண்டு, "நான் வேண்டாம்னு தான் சொன்னேன். நீ தான் ப்ளீஸ் பண்ணி கேட்ட" இதில் நான் ஒன்றும் செய்யவில்லை என்ற பாவனையில் தோள் குலுக்கினான்.
தன்னை சமன்படுத்தியவள், "நான் ஏதோ ஆர்வத்துல கேட்டுட்டேன்" என்று அசட்டு புன்னகையை பதிலளிக்க,
ஹரி, "இன்னும் வேற எதாவது டீடெய்ல் வேணுமா…?" என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் வினவினான்.
ப்ரஷி பதறி, "நோ போதும் இதுவரைக்கும் தெரிஞ்சதே போதும்" என்றவள் பேச்சை திசை திருப்பும் பொருட்டு,
"வந்நதில இருந்து உங்க நேம் சொல்லவே இல்லையே…?" என்றாள்.
ஹரியும் அதை புரிந்து கொண்டு, "ஐ ஆம் ஹரி கிருஷ்ணன்" என்று கை நீட்டினான்.
"ஐ ஆம் ப்ரஷாந்தி" என்றவள் அவன் ப்ரமிளா மேமை பற்றி பேசியது நினைவு வர,
"நீங்களும் நான் படிக்கிற காலேஜ் தானா…? விச் டிபார்ட்மெண்ட்…?" என்று வினா தொடுக்க,
"ஹ்ம்ம் ஆமா. சி.எஸ்.இ டிபார்ட்மெண்ட்" என்று பதிலளித்தான்.
"ரியல்லி நான் சிவில் டிபார்ட்மெண்ட் தான். பட் உங்களை பார்த்ததே இல்லையே…?" என்று வியப்புடன் வினவ,
ஹரி, "நான் உன்னை பார்த்திருக்கேன். உன் ப்ரெண்ட்ஸோட. நிறைய டைம் கேண்டின்ல" என்று கூறினான்.
"அது நாங்க மோஸ்ட் ஆப் தி டைம் கேண்டின்ல தான் இருப்போம்" என்று கூறி புன்னகையுடன் கூறினாள்.
ஹரி பதில் மொழிவதற்குள் ப்ரஷாந்தியின் நண்பர்களிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்துவிட்டது.
தான் வெகுநேரம் ஹரியுடன் பேசிக் கொண்டு இருப்பதை உணர்ந்தவள், "ஓகே ஹரி. நாம இன்னொரு நாள் பேசலாம் இட்ஸ் கெட்டிங் லேட்" என்று கூற,
ஹரியும் சரியென்பதாய் தலையசைத்து விடைக் கொடுத்தான்.
எழுந்து நண்பர்களை நோக்கி அடியெடுத்து வைத்தவள் திடீரென அவன் புறம் திரும்பினாள்.
ஹரி என்னவென்பதாய் புருவம் உயர்த்த,
"தேங்க்ஸ் சொல்ல மறந்துட்டேன். தாங்க் யூ சோ மச் ஹரி. நேத்து எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு" என்று நன்றி நவிழ்ந்தாள்.
ஹரியும் புன்னகைத்து அவளது நன்றியை ஏற்றுக் கொண்டான்.
அவனிடம் விடைபெற்று வந்தவளுக்கு அவன் கூறியது நினைவு வர, 'இத்தனை அழகாய் சிரித்தால், யாருக்கு தான் பிடிக்காது. இப்போது கூட இவர்கள் அவனது சிரிப்பை பற்றி தானே பேசினார்கள். ஏதோ போதையில் அப்படி செய்துவிட்டேன்' என்று தனக்கு தானே சமாதானம் கூறியவளுக்கு உள்ளுக்குள் குளுமை பரவியது.
************************************************
சுபத்ரா பதில் கூறுவதற்குள் அவளுக்குள் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதியது.
முகத்தில் எதையும் காண்பிக்காமல் இருக்க வெகு சிரமப்பட்டாள்.
'இது வேறு எதோ ஒன்று நீ நினைப்பது அல்ல' என்று தனக்கு தானே கூறிய படி சுபத்ராவை பார்த்திருந்தாள்.
தன்னையே கேள்வியாக நோக்குபவளிடம், "தீபிக்கு ஒரு வரன் வந்திருக்கு" என்று பதில் அளித்தார் சுபத்ரா.
"ஓ…நல்ல விஷயம்" என்றவளின் மனதில் சொல்லவிரலா நிம்மதி பிறந்தது.
'நீ நினைத்தது போல அல்ல. உன்னிஷ்டத்திற்கு எதையும் கற்பனை செய்து கொள்ளாதே…: தன்னையே நிந்தித்தவள்,
அந்த புகைப்படத்தை எடுத்து பார்த்தாள்.
ப்ளாக் போலோ சர்ட்டும் லைட் ப்ளூ ஜீன்ஸும் அணிந்து புன்னகையுடன் நின்றிருந்தவனின் தோற்றம் அவளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் தான் இருந்தது.
புகைப்படத்திலிருந்து தலையை நிமிர்த்தியவள், "ஹ்ம்ம் நல்லா இருக்காங்க மா. யார் மூலமா வந்தது மா…?" என்று வினா எழுப்பினாள்.
சுபத்ரா, "நம்ம வெற்றி அண்ணாக்கு தூரத்து சொந்தமாம். தீபிய ஏதோ பங்சன்ல பாத்து இந்த பையனுக்கு பிடிச்சுப் போச்சாம்"
"..."
"நேம் சந்த்ரு. படிச்சிட்டு அப்பாவோட பிஸ்னஸ பாத்துக்கிறாரு. ஒரு தங்கச்சி காலேஜ் படிக்கிறாளாம். பேமிலி பேக்ரவுண்ட் நல்லாதான் இருக்கு" என்று முடித்துவிட்டார்.
அவர் கூறியவற்றை கேட்டவள், "எல்லாம் ஓகே. தீபிக்கு இதுல விருப்பம் இருக்கா…?" என்று வினா எழுப்பினாள்.
சரியாக அதே சமயம் காரின் ஹாரன் சத்தம் கேட்க,
சுபத்ரா, "இதோ அவங்களே ஷாப்பிங் முடிச்சிட்டு வந்துட்டாங்க. நீயே தீபிக்கிட்ட கேட்டுக்கோ" என்றுவிட்டார்.
கை நிறைய பைகளுடன் உள்ளே நுழைந்த இருவர் முகத்திலும் ப்ரஷாந்தியை கண்டதும் அத்தனை ஆனந்தம்.
"ஹே ப்ரஷி எப்போ வந்த" என்று வினவிய படி இருவரும் ப்ரஷாந்தியை கட்டிக் கொண்டனர்.
அவர்களது புன்னகை தன்னையும் தொற்றிக் கொள்ள, "இப்போ தான் வந்தேன்" என்று மகிழ்வுடன் பதில் அளித்தாள்.
தீபி, "ப்ரஷி நான் நிறைய திங்க்ஸ் பர்சேஸ் பண்ணி இருக்கேன். உனக்கும் நிறைய வாங்கி இருக்கேன்" என்று தான் வாங்கியதை காண்பிக்க முயல,
ப்ரஷாந்தி, "அதெல்லாம் இருக்கட்டும் அம்மா ஒரு அலையன்ஸ் வந்து இருக்குனு சொன்னாங்க. என்ன உனக்கு பிடிச்சிருக்கா…?" என்று வினவினாள்.
ப்ரஷாந்தியின் கேள்வியில் முகம் முழுவதும் வெட்கப் புன்னகையுடன் தலை குனிந்து கொண்டாள் தீபிகா.
அவளது வெட்கத்தினை கண்டு ஆச்சிர்யமடைந்த ப்ரஷி, "பாருடா. வாய் மூடாம பேசுற தீபிக்கு இப்போ வெட்கம் வந்திடுச்சு. கொஸ்டின் கேட்டா தலை குனிஞ்சுக்கிறா…?" என்று அவளது முகத்தை பார்க்க முயல,
"அச்சோ போடி" என்றவள்,
"ம்மா பாருங்கம்மா இவளை" என்று தன் தாயிடம் முறையிட்டாள்.
சுபத்ரா, "உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் வரலை…" என்று விலகிக் கொண்டார்.
நிஷா, "ப்ரஷி நீ வேற இவ அந்த போட்டோவ காலையில இருந்து எவ்ளோ டைம்ஸ் பார்த்திட்டா தெரியுமா…?" என்று தானும் அவள் பங்கிற்கு அவளை கிண்டலடிக்க,
தீபிகா இதற்கு மேல் இங்கிருந்தால் தன்னை கலாய்த்தே தள்ளி விடுவார்கள் என்று நினைத்தவள் எழுந்து அறைக்குள் ஓடிவிட்டாள்.
அவள் செல்வதை புன்னகையுடன் பார்த்த சுபத்ரா, "தீபிக்கு இந்த வரன் ரொம்ப பிடிச்சுப் போச்சு. நல்ல படியா முடியணும்" என்று கூற,
ப்ரஷாந்தி, "எல்லாம் நல்ல படியா நடக்கும்" ஆறுதலாக கையைப் பற்றிக் கொண்டாள்.
சுதர்ஷனின் பாஜீரோ உள்ளே நுழையும் ஓசை கேட்க,
சுபத்ரா, "உங்கப்பா வந்துட்டாரு. நான் போய் அவருக்கு காஃபி போட்றேன்" என்று கிச்சனை நோக்கி செல்ல,
"நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்மா" என்றவாறு அவர் பின்னே சென்று விட்டாள் ப்ரஷாந்தி.
போகும் தனது தங்கையையே மனம் முழுவதும் விரவிய வேதனையுடன் பார்த்தாள் நிஷாந்தி.
தீபிகாவிற்கும் நல் வாழ்வு அமைய போகிறது.
எப்போது இவளின் வாழ்வு சீராகும்.எப்படி கலகலவென்று இருப்பவள் இப்படி அமைதியின் சொரரூபமாக மாறிவிட்டாளே.
ஒரு இழப்பு ஒருவரை இந்த அளவு பாதிக்குமா என்ன. எத்தனை நாட்களுக்கு இப்படி தனிமரமாக நிற்பாள்.
தான் மட்டும் கணவன் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்க, இவள் இப்படி தனியாக துன்படுகிறாளே என்று மனது தவித்தது.
விரைவில் அவளது வாழ்வை சீராக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியபடி அமர்ந்திருந்தவள் அருகில் வந்து அமர்ந்த தந்தையை உணரவில்லை.
"என்னம்மா யோசனை பலமா இருக்கு" என்று சுதர்ஷன் வினா தொடுக்க,
தன் சிந்தனையில் இருந்து கலைந்தவள், "ஒன்னுமில்லை பா. எல்லாம் நம்ம ப்ரஷி லைஃபை பத்தி தான் நினைச்சிட்டு இருந்தேன்" என்று பதில் அளித்தாள்.
சுதர்ஷன், "எல்லாம் சீக்கிரமா சரியாகிடும். அவளும் பழைய படி மாறிடுவா" என்று மகளுக்கு ஆறுதல் அளிக்க,
இவர்களது சிந்தனையின் நாயகி, "அப்பா இந்தாங்க காஃபி" என்றவாறு வந்தாள்.
இருவரும் தங்களது பேச்சை அதோடு நிறுத்திக் கொண்டனர்.
இல்லையேல் அவர்கள் பேசுவதை ப்ரஷாந்தி கேட்டுவிடும் வாய்ப்புண்டு.
அப்படி கேட்டுவிட்டால் இவர்களது கவலையை உணர்ந்து இங்கு வருவதை குறைத்துக் கொள்வாள். ஏற்கனவே இதுபோல் நடந்திருக்கிறது.
இதன் காரணமாகவே ப்ரஷாந்தி இருக்கும் சமயம் சற்று கவனமாக எல்லோரும் பேசிக் கொள்வர்.
அதன் பின்னர் சுதர்ஷன் மகள்களிடம் தனது பிஸ்னஸ் பற்றி பேச தொடங்கிவிட்டார்.
சுபத்ரா வந்து இரவு உணவு உண்ண அழைக்கும் வரை உரையாடல் தொடர்ந்தது.
சாப்பிட்டு முடித்ததும் ப்ரஷாந்தி தனது வீட்டிற்கு செல்ல ஆயத்தமாக,
எல்லோர் மனதிலும் அவள் இங்கேயே இருந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோணாமல் இல்லை.
ஆனால் கேட்டாலும் அவள் சம்மதிக்க மாட்டாள் என்று உறுதியாக தெரியுமே.
'இன்று இரவு தங்கிவிட்டு போயேன்' என்று வாயை வரை வந்த வார்த்தையை விழுங்கிவிட்டு, "சரி பார்த்து போ ப்ரஷி. ரீச் ஆகிட்டு மெசேஜ் பண்ணு" என்று வழியனுப்பினார் சுபத்ரா.
எல்லோரிடமும் புன்னகை முகமாக விடைபெற்றவள் தீக்ஷியின் குண்டு கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு கிளம்பினாள்.
தனது பிளாட்டிற்கு வந்து ரெப்ரெஷ்ஷாகிவிட்டு படுக்கையில் விழுந்தவளுக்கு எப்போதும் போல மனம் முழுவதும் வெறுமை சூழ்ந்துக் கொள்ள கண்மூடி உறங்க முயற்சித்தாள்…
உறக்கம் வந்தபாடில்லை. சுபத்ரா அந்த புகைப்படத்தை கொடுத்துவிட்டு அவள் முகம் நோக்கிய அந்த ஒரு நொடியில் அவளுக்குள் எழுந்த எண்ணங்கள் இன்னும் மிச்ச சொச்சத்தை விட்டுவிட்டு சென்றிருந்தது.
ஒரு நொடியேனும் தோன்றிய அந்த முகம் அவளை தூங்கவிடாமல் செய்தது.
'இப்போதும் நீயாத்தானே அனைத்தையும் நினைவு படுத்தி கொண்டாய்…?' என்று மனசாட்சி எள்ளி நகையாடியது.
'இதில் தன் தவறு ஏதுமில்லை இதற்கு முன் அவர்கள் செய்த செயல் தான் என்னை அப்படி சிந்திக்க வைத்தது' என்று எண்ணியவளின் மனதில் குடும்பத்தினர் கூறிய வார்த்தைகள் நினைவு வந்தது.
"இன்னும் எத்தனை நாள் நடந்ததையே நினைச்சிட்டு இருக்க போற…? இப்படியே வாழ்க்கைய தனியாவே வாழ்ந்திட போறியா…?
உங்க மாமாவோட ப்ரெண்ட் ப்ரதாப் தெரியும் தானே… தீக்ஷி பர்த் டே பார்டில கூட பார்த்தியே அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம். நடந்த எல்லாமே அவருக்கு தெரிஞ்சும் எந்த ப்ராப்ளமும் இல்லைன்னு சொல்லிட்டாரு…" என்று நிஷா கூற,
"ஆமா டி. அந்த தம்பி ரொம்ப நல்ல கேரக்டர் மாதிரி தெரியிது. அவங்க வீட்ல கூட எல்லாரும் சம்மதம் சொல்லிட்டாங்க. கொஞ்சம் யோசிச்சு முடிவை சொல்லேன்" என்று சுபத்ரா தன் பங்கிற்கு கூற,
தீபிகா, "ஆமா கா. கெஞ்சம் கன்சிடர் பண்ணேன்…" என்று இயம்ப,
அவ்வளவு தான், "நிறுத்துங்க…" என்று காதுகள் இரெண்டையும் பொத்தி கொண்ட ப்ரஷாந்தி கத்தியேவிட்டாள்.
அவளிடம் இத்தனை ஆக்ரோஷத்தை எதிர்ப்பார்க்காத குடும்பத்தினர் அதிர்ந்து தான் போயினர்.
அன்று நடந்த கலவரத்திற்கு பிறகு ப்ரஷாந்தி யாரிடமும் பேச தயாராக இல்லை.
வீட்டிற்கும் வரவில்லை. யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை. நிஷா தீபி என்று மாற்றி மாற்றி வந்து கெஞ்சியும் எந்த பலனும் இல்லை.
சுபத்ராவும் சுதர்ஷனும் இனி இது பற்றி எக்காலமும் பேச போவதில்லை என்று உறுதியளித்த பின்னர் தான் அவர்களிடம் பேசினால்.
அதுவும் முன்பு போல இவள் இறுகி போய்விட மிகவும் சிரமப்பட்டே அவளை இயல்பிற்கு மாற்ற முயற்
சித்தனர்.
இப்போது தான் ஓரளவு இயல்பாக நடக்கிறாள். குடும்பத்தினருடன் ஓரளவு பேசுகிறாள்…
அனைத்தையும் நினைத்து பார்த்தவளுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் அனுமதியின்றி வெளியேறியது…
கண்ணோடு உந்தன் முகம்
காதோரம் உந்தன் குரல்
கண்ணீரில் நெஞ்சம் நனைந்தாலும்
போகவில்லேயே
உந்தன் நினைவுகள்!...
தொடரும்…
இவள் மீரா க்ரிஷ்
…