• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
605
Reaction score
836
Points
93
அத்தியாயம் 28:


பெங்களூரின் மிக பிரபலமான கல்யாண மண்டபம் அது.


நிச்சியத்திற்கு வந்த மக்கள் அங்குமிங்கும் நடமாடி கொண்டு இருக்க அவ்விடமே கலகலப்பாக காட்சியளித்தது.


மண்டபத்தின் வாயிலில் தீபிகா வெட்ஸ் சந்திரு என்ற வெண்மை நிறத்தில் எழுத்துக்கள் மின்னியது.


"ஹரி இந்தா இந்த பேக்கை கொண்டு போய் ப்ரோகிதர்க்கிட்ட கொடு" என்று பரத் ஒரு பையை நீட்ட,


"கொடுங்கண்ணா" என்று வாங்கி சென்று அவரிடம் கொடுத்தவன், கூல்ட்ரிங்ஸை எடுத்து வந்து அணைவருக்கும் கொடுக்க தொடங்கினான்.


இருவரும் ஒன்றிணைந்த பிறகு வாழ்க்கை அத்தனை அழகாக நகர்ந்தது.


தெளிந்த நீரோடை போல எந்த வித பிரச்சினையுமின்றி சென்றது. இருவரும் எந்த வித ஒளிவு மறைவும் வைத்து கொள்ளவில்லை.


எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்த்து கொண்டனர். ஏன் பிரச்சனையே வரவிடவில்லை.


வாழ்க்கையின் கடந்த கால நிகழ்வுகள் நிறைய கற்று தந்து இருந்தது.



நிதானம் புரிதல் அனைத்தும் தேவைக்கு அதிகமாகவே இருவரிடமும் இருந்தது.


வார்த்தைகள் அவசியமற்றதாக கண்பார்த்து நடக்க தொடங்கியிருந்தனர்.


மறந்தும் கூட கடந்து வந்த பாதையை பற்றி பேசி கொள்ளவில்லை.


தொடக்கத்தில் காயப்படுத்திவிடுவோமோ அல்லது காயப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சினாலும் வாழ்க்கையின் போக்கிலும் இணையின் புரிதலிலும் அதன் சுவடே தெரியாமல் மறைந்திருந்தது.


இரண்டு மாதங்கள் நேசத்தில் உருகி கரைந்தவர்களுக்கு இரண்டு நாட்களாக கடந்திருக்க தீபிகாவின் நிச்சிய தினம் வந்திருந்தது.


இந்த இடைப்பட்ட காலத்தில் ப்ரஷாந்தி தனது தொழில் கால்தடத்தை பதித்து ஓரளவிற்கு முன்னேற்ற பாதையை தொடங்கியிருக்க, ஹரி மிகவும் உறுதுணையாக இருந்தான்.


"ஹரி இந்த தண்ணீர் கேன் பத்தாதுன்னு இன்னொரு பதினைஞ்சு கேன் கொண்டு வர சொல்லி வாட்டர் கேன் சப்ளையர்கிட்ட கால் பண்ணி சொல்லியிருந்தேன். இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல வந்துட்றேன்னு கால் பண்ணிட்டாங்க போய் பார்த்து இறக்கி வைக்க சொல்றியா…?" என பரத் கேட்க,


"ஹான் நான் பாத்துக்கிறேன். நீங்க வந்தவர்களை கவனிங்கண்ணா" என்ற ஹரி வெளியேற போக,


"ஹரிப்பா நானு நானு" என்று தீக்ஷி குதிக்க,


"வாடா செல்லம்" என்று அள்ளி கொள்ள கை நீட்டினான்.


"தீக்ஷி ஹரிப்பாக்கு வேலை இருக்கு. பங்ஷன் முடியிற வரைக்கும் தொல்லை பண்ணாதா போ அம்மாக்கிட்ட போய் உட்காரு" என்று நிஷாந்தியை அழைக்க,


"ம்ஹூம் நான் ஹரிப்பா கூட தான் போவேன்" என்று அடம்பிடித்தாள்.


"ண்ணா குழந்தையை ஏன் திட்றிங்க அவ இருந்தா எனக்கு என்னை தொல்லை" என்றவன்,


"நீ வாடா. அப்பா உனக்கு சாக்லேட் வாங்கி தர்றேன்" அள்ளி கொண்டு செல்ல,


"அவளை சொல்ல கூடாது. உன்னை உதைக்கணும். ரொம்ப செல்லம் கொடுக்குற" என்று போலியாக முறைத்தான் பரத்.


இருவரும் பரத்தை பார்த்து புன்னகைத்துவிட்டு சென்றனர்.


பரத்திற்க்கும் ஹரிக்கும் இடையில் ஒரு அழகான உறவு மலர்ந்திருந்தது.


பரத் ஹரியை உடன் பிறவா தம்பியாக பார்க்க ஹரி அவனை சொந்த அண்ணனாக ஏற்றிருந்தான்.


உறவுகள் இல்லாமல் வளர்ந்தவனை ப்ரஷாந்தியின் குடும்பம் உறவாக ஏற்று கொள்ள, ஹரி அவர்களின் பாசத்தில் அக மகிழ்ந்து போனான்.


இது அடிக்கடி நடக்கும் ஒன்று தான். பரத் அவர்களை திட்டுவது போல பேசினாலும் தீக்ஷிக்கும் ஹரிக்கும் உள்ள பிணைப்பு அவனுக்கு புரிந்திருந்தது.

சுதர்ஷனுக்கு இரு மருமகனையும் நினைத்து பெருமை தாளவில்லை.


அவரை ஒரு துரும்பை கூட அசைக்கவிடாமல் மண்டபம் பார்ப்பதிலிருந்து சமையலுக்கு ஆர்டர் கொடுப்பது வரை அவர்களே பார்த்து கொண்டனர்.


ஒவ்வொரு விடயத்தையும் சிறு குறையுமின்றி பார்த்து பார்த்து செய்தனர்.


மணமகள் அறையில், "நிஷா எனக்கு இந்த வைட் ஸ்டோன் நெக்லஸ் நல்லாயிருக்கா…? இல்லை வேற போடவா…?" என்று கண்ணாடியை பார்த்த படி வினவ,


"எத்தனை டைம் டி உன்கிட்ட சொல்றது. இந்த சேரிக்கு இந்த நெக்லஸ் பெர்பெக்ட் மேட்ச்" என்று அலுத்து கொண்டாள்.


"ஆமா டி. நல்லா இருக்கு" என்று ப்ரஷியும் கூற,


"நீ பேசாத டி. இங்க நீ பொண்ணா நான் பொண்ணான்னு தெரியலை…?" என்று முறைத்தாள் தீபிகா.


"ஏன் நான் என்ன பண்ணேன். சிம்பிளா ஒரு லெஹெங்கா தான் போட்ருக்கேன்" என்று கேட்க,


"சிம்பிளா தான் இருக்க. ஆனாலும் நல்ல லுக்கா தெரியிற நீ" என்று இயம்பினாள்.


"அப்படியா…?" என்பது போல ப்ரஷி நிஷாவை பார்க்க,

அவளும் சிரிப்புடன் தலையசைத்தாள்.


அவர்கள் கூறுவது உண்மை தான். உண்மையான நேசம் தந்த மகிழ்ச்சியும் மனம் நிறைந்த வாழ்க்கையும் அவளை நன்கு மெருகேற்றியிருக்க உடலும் சற்று சதை போட்டு முகம் நன்றாக பளபளத்தது.


ப்ரஷாந்தி கண்ணாடியில் தோற்றத்தை பார்க்க அவளுக்கும் முகம் மினுமினுப்புடன் அதரங்கள் பளபளப்புடனும் தான் சற்று அழகாக தான் தோன்ற புன்னகையில் உதடு நெளிந்தது.


அதனை கூறினால் அவள் வருந்துவாள் என்று எண்ணியவள், "சே அப்படிலாம் எதுவுமில்லை. நான் கீழ போய் எதுவும் வேலை இருக்கான்னு பாக்குறேன்" என்று கீழிறங்கி சென்று ஹரியை தேடினாள்.


காலையில் இருந்து அவனை பார்க்கவே முடியவில்லை. இத்தனை பளபளப்பும் மன மகிழ்வும் அவன் ஒருவனால் தான் என்று தோன்ற மலர்ந்த புன்னகையுடன் அவனை தேடினாள்.


அங்குமிங்கும் ஓடியபடி அவ்வபோது கண்ணில் பட்டவனை இப்போது எங்கும் காணவில்லை.


அவள் தேடுவதை கவனித்த பரத், "ப்ரஷி ஹரியையா தேடுற…?" என வினவ,

"ஹான் ஆமா மாமா. ஆளையே காணோம் பாத்திங்களா…?" என பதில் வினா தொடுத்தாள்.


"நான் தான் வாட்டர் கேன் வந்திடுச்சான்னு பார்க்க வாசலுக்கு அனுப்புனேன்" என்று கூற,


"நான் போய் பாத்துக்கிறேன்" என்று வாசலுக்கு விரைந்தாள்.


இங்கே தீக்ஷியை தூக்கி சென்றவன், "செல்லக்குட்டிக்கு என்ன சாக்லேட் வேணும்…?" என வினா எழுப்ப,


"எனக்கு டேமரோலோன் வேணும்" என்று ஆசையுடன் தீக்ஷி பதிலளித்தாள்.


"டேமரோலோனா…? பங்க்ஷன் முடிஞ்சு போகும் போது அப்பா வாங்கி தர்றேன்" என்று கூறியபடி இருக்க, தண்ணீர் கேன் வேனில் வந்தது.


அவர்கள் அருகில் சென்றவன், "தம்பி நாங்க தான் கால் பண்ணி இருந்தோம். கேனை அப்படியே இந்த சைடுல கொண்டு போய் மெஸ்ல அடுக்கி வச்சிருங்க" என்றவன், அவர்களுக்கு வழியை காட்டி தூக்கி வைப்பதை கண்காணிப்பு செய்த படி இருந்தான்.


வெளியே வந்தவள் ஹரி வேனின் அருகில் நின்றிருப்பதை கண்டு அருகில் வர,


"சித்தி வந்துட்டா" அவளை பார்த்து குரல் கொடுத்தாள்


"அந்த லாஸ்ட்ல கொஞ்சம் இடமிருக்கு பாருங்க. அங்க ரெண்டு கேனை வச்சிடுங்க" என்றவன்,


அவள் புறம் திரும்பி, "என்ன மேடம் இங்க தேடி வந்திருக்கிங்க…?" என வினா தொடுத்தான்.


"சும்மா தான் ஹரி" என்றவள்,


"நான் இந்த ட்ரெஸ்ல ரொம்ப அழகா இருக்கதா தீபி சொன்னா உனக்கு பிடிச்சிருக்கா. உண்மையிலே அழகா இருக்கேனா…?" வினா எழுப்ப,


அவனது முகத்தில் மோகன புன்னகை. ஆயிரம் பேர் ஆயிரம் கூறினாலும் தன்னிடமிருந்து அவளுக்கு வார்த்தை வர வேண்டும் என்பது அவன் அறிந்ததே.


விழிகள் அவளை உச்சியில் இருந்து பாதம் வரை ஆராய்ந்தது. சாக்லேட் ப்ரௌன் நிறத்தில் ஜார்ஜெட்டில் ஸ்டோன் வைத்த லெஹெங்காவும் அதற்கேற்ப நகைகளுடன் முகத்தில் நிறைந்த புன்னகையுடன் தன் முன் நின்றிருந்தவளை வர்ணிக்க வார்த்தை தான் வரவில்லை அவனுக்கு.


இருந்தும் அவளை வம்பிழுக்கும் பொருட்டு, "ஹ்ம்ம் நல்லாயிருக்கு. இருந்தாலும் என் செல்லக்குட்டி அளவுக்கு இல்லை. தீக்ஷி பேபி தான் க்யூட்" என்க,

"ஹ்ம்ம் ஆமா தீக்ஷி தான் க்யூட்" என்று தீக்ஷியும்,


சிரிப்புடன் அவர்களை முறைத்தவள், "அவ கூட இருந்தா நான் கண்ணுக்கு தெரிய மாட்றேன் உனக்கு. பார்த்துக்கிறேன் உன்னை" என்று கூறினாள்.


"இப்போவே பாத்துக்கலாம்" என்றவன் கண்ணடித்துவிட்டு கன்னம் குழிய அவன் சிரிக்க, குழந்தையும் சிரித்தது.


அந்த அழகியலில் தன்னுடைய உடலையும் மறந்து நொடி நேரம் ரசித்து நின்றிட,


"பாத்தாச்சா…?" என்று மந்தகாச புன்னகையுடன் வினவ,

"ப்ச் போடா…" என்று அவன் தோளில் அடித்தாள்.


"பாருடா செல்லம் உன் சித்தி என்ன அடிக்கிறா. கேட்க மாட்டியா நீ…?" என ஹரி குழந்தையிடம் பேசுகையிலே ப்ரஷியின் அலைபேசியின் கனா இசைத்தது.


எடுத்து பேசியவள், "நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வச்சிக்கலாம். என் ஃப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்க வா இன்வைட் பண்ணலாம்" என்க,

"நான் கேனுக்கு பே பண்ணிட்டு வர்றேன். நீ போ" என்று அவளை அனுப்பி வைத்தான்.


ப்ரஷாந்தி நுழைவு வாயிலிற்கு செல்ல அதே நேரம் அவளது நண்பர்களின் கார் உள்ளே நுழைந்தது.


"வாங்க வாங்க" என்று ப்ரஷி வரவேற்க,


"என்ன இப்படி வெறும் கையோட வந்து வரவேற்குற. ஒரு பொக்கே கூட இல்லை" என்று வருண் வினவ,


"உனக்குலாம் இதுவே அதிகம் வாடா டேய்" என்று அவனை தோளில் கைப்போட்டு இழுக்க,


"ஆமா வாடா உன்னைலாம் வரவேற்குறதே பெரிசு" என்று ப்ரஷியும் கலாய்க்க,

பேசி சிரித்த படியே உள்ளே நுழைந்தனர்.

பணத்தை கொடுத்து விட்டு ஹரி புன்னகையுடன் அவர்களுக்கு கை அசைத்து அருகில் வர,


அவனை கண்ட மேனகா ப்ரஷியிடம், "என்னடி நீ அன்னைக்கு போட்டோல பார்த்த பார்வைக்கு இன்னேரம் அவனை கடிச்சு தின்றுப்பேன்னு நினைச்சேன். இப்படி முழுசா வர்றான்" என்று கிசுகிசுக்க,


அதில் சட்டென்று முகம் சிவந்தவள், "ப்ச் சும்மா இருடி" என்று அவளை முறைக்க, மேனகா சிரித்தாள்.


அருகில் வந்துவிட்டவன், "என்ன ஒரே சிரிப்பும் முறைப்புமா இருக்கு" என வினவ,


மேனகா, " ஒன்னுமில்லை ஹரி ஒரு டவுட் கேட்டேன். அதுக்கு உன் வொய்ஃப் முறைக்கிறா" என்று மேனகா முந்தி கூற,

"முறைக்கிற அளவுக்கு என்ன கேட்ட" என்று ஹரி வினவினான்.


மேனகா வாயை திறக்கும் முன் ப்ரஷி, "அது ஒன்னுமில்லை ஹரி. சும்மா விளையாடுறா" என்றவள்,


"உள்ள வாங்க வெளியே நிக்க வச்சு பேசிட்டு இருக்கோம்" என்று உள்ளே அழைத்து சென்று விட்டாள்.


அவளது அவசரமே மேனகா ஏதோ ஏடா கூடமாக கேட்டிருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்ல சிரித்தபடியே அவர்களுடன் சென்றான்.


ஆண்கள் மற்ற நண்பர்களுடன் பேச செல்ல,


ரேஷ்மா, "வாங்க நம்ம ஹீரோயின் தீபியை பார்த்திட்டு வருவோம்" என்று பெண்களை மணமகள் அறைக்கு அழைத்து சென்றிருந்தாள்.



அங்கே தீபிகா எல்லா அலங்காரமும் முடிந்து தயாராக அமர்ந்திருந்தாள்.


"வாழ்த்துக்கள் புது பொண்ணு"


"கங்கிராஜூலேசன்ஸ் தீபி" என்று பலவித வாழ்த்துக்களுடன் உள்ளே நுழைய,


புன்னகையுடன் நன்றி கூறி வரவேற்றாள் தீபிகா.


மேனகா நுழைந்ததும், "என்ன ப்ரஷி இது. இங்க பொண்ணு அவளா இல்லை நீயா…?" என வினவ,


ரேஷ்மாவும், "ஆமா டி. நீ தான் நல்லா பளபளக்குற" என்று கூற,


"நல்லா கேளுங்கக்கா. நானும் இதை தான் கேட்டேன்" என்று சோகமாக தீபி கூறினாள்.


"எல்லாம் இந்த காதல் தந்த பளபளப்பு" என்று கண்ணடித்தாள் வினுஷா.


"ஹே நீங்க வேற பேசாம இருங்க டி. ஏற்கனவே அவ அப்படி தான் சொல்லி பீல் பண்ணிட்டு இருக்கா" என்று சிரிப்புடன் அதட்டினாள்.


"நீ வா தீபி நான் உன்னை இவளை விட அழகாக்குறேன்" என்ற ரேஷ்மா மேலும் அவளுக்கு சில பல மாற்றங்கள் செய்து அழகாக்க,


தீபிகாவும் ஓரளவு தோற்றத்தில் திருப்தியாகி சமாதனமடைந்தாள்.


அதன் பின்னர் பெண்ணை அழைத்து வர கூற, தீபிகாவை அழைத்து சென்று மேடையில் அமர வைத்தனர்.


பரத்தும் ஹரியும் சந்திருவை அழைத்து வந்தனர். இருவரும் தங்களது பந்தத்தில் அவனையும் இணைத்து கொள்ளும் முயற்சியில் இருந்தனர்.


சொந்தங்கள் அனைவரும் வந்துவிட இருவீட்டு பெற்றோரும் தாம்பூல தட்டை மாற்றி கொண்டனர்.


பின்னர் சந்திருவும் தீபிகாவும் புன்னகையுடன் மோதிரங்களை மாற்றி கொள்ள நிகழ்வுக்கு வந்தவர்கள் வாழ்த்தி பரிசுகளை வழங்கிவிட்டு சென்றனர்.


நேரம் செல்ல செல்ல கூட்டம் குறைய தொடங்கினர். ஹரியும் பரத்தும் உணவருந்தும் இடத்தில் இருந்து அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினார்கள்.


ப்ரஷாந்தியின் நண்பர்கள் தான் அவளை கலாய்த்தே ஒரு வழி செய்திருந்தனர். அவள் அடிக்கடி சிவப்பேறிய முகத்துடன் நண்பர்களை அதட்டுவதை புன்னகையுடன் பார்த்தும் பார்க்காத பாவனையில் வேலை செய்திருந்தான்.


நேரம் மதியத்திற்கு மேல் ஆகிவிட வந்த உறவினர்கள் அனைவரும் கிளம்பியிருந்தனர்.


ப்ரஷியின் நண்பர்களும் ஒரு வழியாக கிளம்பி செல்ல சிரிப்புடன் அவர்களை வழியனுப்பி விட்டு வர,


இருவீட்டாரும் மண்டபத்தில் இருந்து கிளம்பினர்.


ஹரியும் பரத்தும் மட்டும் மண்டபத்தில் கணக்குகளை பார்த்து பணத்தை கொடுத்து வர தேங்கிவிட்டனர்.


இருவரும் அனைத்து கணக்கையும் பார்த்து சம்ளத்தை கொடுத்து விட்டு வர நேரம் மாலையை நெருங்கிவிட்டிருந்தது.


வந்து உறங்கி எழுந்தவள் இன்னும் அவன் வராததை அறிந்து முகம் கழுவிவிட்டு அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைக்க முயல ஹரி அறைக்குள் நுழைந்தான்.


"எல்லா ஒர்க்கும் ஓவரா ஹரி. இவ்ளோ நேரமாகிடுச்சு" என்று வினவ,


"ஹ்ம்ம் ஆல்மோஸ்ட் ஓவர் ஒரே ஒரு ஒர்க் மட்டும் பேலன்ஸ் இருக்கு" என்றபடி அவளை இழுத்து வாசம் பிடித்தான்.


"என்ன ஒர்க்‌…?" என அவள் கேட்க,


அவன் இதழ்களில் விஷமப் புன்னகை மிளிற, இவளுக்குள் அபாய மணி ஒலித்தது ஏதோ விவகாரமாக கேட்க போகிறான் என்று.


சமீப நாட்களாக இப்படி தான் செய்கிறான். ஏதாவது ஒன்றை சாதாரணமாக கேட்டு அவளை முகம் சிவக்க வைத்துவிட்டு எதுவுமே நடவாதது போல நடந்து கொள்கிறான்.


அவள் சிந்திக்கும் போதே, "மேனகா உன்கிட்ட ஏதோ டவுட் கேட்டதா சொன்னாங்களே. அதை சொல்லு நான் க்ளியர் பண்ணுறேன்" என்றவனின் இதழ்கள் நெளிய,


அவளது வினா நினைவு வந்து இவளுக்கு சடுதியில் முகம் சிவந்து விட்டது.


"அதெல்லாம் எதுவுமில்லை. அவ ஏதோ விளையாண்டா" என்று சமாளிக்க பார்க்க,


"இல்லையே உன் முகம் இருக்க கலர பார்த்தா வேற ஏதோ இருக்கு" என்று விடாமல் வினவினான்.


அதில் சிவந்த முகத்தை திருப்பி இதழ் கடித்து ஏதோ கூற வந்தவள் சட்டென்று வாயில் கை வைத்த படி வாஷ்ரூமை நோக்கி ஓடினாள்.


ஹரி பதறியபடி அவள் பின்னே செல்ல, ஹரி மதியம் உண்டதை வாந்தி எடுத்திருந்தாள்.


அனைத்தும் வெளியேறி சோர்ந்தவளை முகம் கழுவி வெளியே அழைத்து வந்தவன், "என்னாச்சு டா‌. திடீர்னு வாமிட் பண்ற" என்று கவலையுடன் கேட்க,


ப்ரஷாந்திக்கு உள்ளுக்குள் ஒரு சொல்ல முடியாத உணர்வு தான். மனமும் நாட்களை கணக்கிட்டது.


இருந்தும் கடந்த கால சுவடுகள் எஞ்சியிருந்ததின் விளைவாக எதையும் கற்பனை செய்யாது,
"தெரியலை. மார்னிங் கூட நல்லா தான் இருந்தேன்" என்று பதிலளித்தாள்.


"வா டாக்டர்கிட்ட போகலாம். எதாவது டைஜெஷன் ப்ராப்ளமா இருக்கும்" என்று கூறிவிட்டு வீட்டினரிடமும் தெரிவித்து கிளம்பினான்.


விடயம் அறிந்த அனைவரும் பதற ஹரி தான் அனைவரையும் சமாளித்து "ஒன்றுமில்லை நானே பார்த்து கொள்கிறேன்" என்றிருந்தான்.


ஹரி கவலையாக அவள் மேல் ஒரு பார்வையை பதித்த படி காரை ஓட்ட,


ப்ரஷாந்திக்கு திக் திக் நிமிடங்கள். எதனையும் வாயை திறந்தும் கூறமுடியவில்லை.


கூறி எதுவும் இல்லாமல் போய்விட்டால் ஏமாற்றமாகிவிடும் என்று எண்ணியவளுக்கு சிறிதான ஏக்கம் எட்டிப்பார்த்தது என்னவோ உண்மை தான்.


இருவரும் இதுவரை இதனை பற்றி ஏதும் பேசி கொள்ளவில்லை. குழந்தை என்பது வரம் அந்த வரம் கடவுள் அருளும் போது வரட்டும் என்று முடிவு செய்து விட்டு ஹரி வளர்ந்த ஆசிரமத்தை தத்தெடுத்து அங்குள்ள அனைத்து குழந்தைகளையும் படிக்க வைத்து பராமரித்து கொள்கின்றனர்.


தன்னை கவலையாக பார்த்து வருபவனிடம், "ஹரி எனக்கு ஒன்னுமில்லை. ஏன் இப்படி முகத்தை வச்சிருக்க" என்று சமாதானம் கூற,


"அதை டாக்டர் சொல்லட்டும்" என்றவன் மருத்துவமனை வாயில் காரை நிறுத்தினான்.


உள்ளே நுழைந்து மருத்துவருக்காக காத்திருந்த நொடிகள் யுகங்களாக கழிந்தது அவளுக்கு.


செவிலியர் வந்து இருவரும் மருத்துவரை பார்க்க சென்றனர்.


ஹரி ப்ரஷாந்தியின் உடல் உபாதைகளை கூற, அதனை கேட்டு கொண்ட மருத்துவர் அவளை பரிசோதிப்பதற்க்காக அழைத்து சென்றார்.


விழிகளை மூடி கடவுளை ஆழ்ந்து வேண்டிய நொடி மருத்துவர் கூறிய, "யு ஆர் ப்ரெக்னன்ட்" என்ற வார்த்தைகள் தேனாய் செவிக்குள் தித்தித்தது.


முகம் விகசிக்க நாணம் குடி கொள்ள மருத்துவரது பின்னே அவள் நடந்துவர,


"கங்கிராஜுலேஷன்ஸ் போத் ஆப் யூ. நீங்க அப்பாவாக போறிங்க" கூறியடி மருத்துவர் அமர்ந்தார்.


செவிக்குள் இன்ப அதிர்ச்சியாக நுழைந்த வார்த்தைகளின் விளைவால் வார்த்தை வரவில்லை அவனுக்கு.


இருவருக்கும் இன்ப நொடிகள். மகிழ்ச்சியில் பேச்சடைத்த நிமிடங்கள்.


வாழ்வில் மிகப் பொக்கிஷமான நிமிடங்கள். மருத்துவரிடம் என்ன கூறினோம் என்று இருவருக்கும் நினைவு வரவில்லை.


காரில் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த இருவரும் தங்களுக்குள் எதுவும் பேசவில்லை.


ஆனந்தமாக ஒரு பேரமைதி கோலோச்சியது அங்கே.


வரம் அருளிய கடவுளின் முன் மெய் மறந்து நிற்கும் பக்தனின் நிலை.


அதனை உணர்ந்து அனுபவித்தனர். வார்த்தைகள் அவசிரமற்றதாகியது.


வீட்டினுள் நுழைந்ததும் எல்லோரும் பதற்றத்துடன் அவர்களை எதிர்கொள்ள ப்ரஷி புன்னகையுடன் தான் கருவுற்றிருப்பதை கூற அங்கே இரட்டிப்பு மகிழ்ச்சி.


எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இத்தனை வருடங்களாக இருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டது.


குடும்பத்தினர் இருவரையும் கொண்டாடி தீர்த்துவிட்டனர். இருவருக்கும் வாழ்த்து மழை தான்.


விடயம் அறிந்து நண்பர்கள் அலைபேசியில் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.


ஹரி அனைத்தையும் புன்னகையுடன் ஏற்று கொண்டான்.


இரவுணவை முடித்து விட்டு தாயிடம் அறிவுரைகளை கேட்டு விட்டு ப்ரஷி அறைக்குள் வர ஹரி அங்கில்லை.


எல்லா இடமும் தேடிவிட்டு மாடிக்கு செல்ல அங்கே வானத்தை பார்த்த படி நின்றிருந்தான்.


ப்ரஷி சென்று அவனை பின்புறமாக அணைத்தவள் முதுகில் முகத்தை பதித்து கொண்டவள்,


"என்ன ஹரி ஹாஸ்பிட்டல்ல இருந்தே நீ எதுவுமே பேசலை" என்று கேட்க,


அவளை தன்புறம் திருப்பியவனின் கீழிமையில் நீர் கோர்த்திருந்தது.

அவனது முகத்தை பார்த்தவளுக்கும் அவனது நிலை புரிந்தது.


அவளை இறுக்கமாக அணைத்தவன் தோளில் முகத்தை புதைத்தான்.


தன் தோளில் ஈரத்தை உணர்ந்தவள் ஆதுரமாக அவனது முதுகை வருடினாள்.


அவள் இதனை ஓரளவு யூகித்திருந்ததால் ஆனந்தத்தை ஆர்ப்பாட்டமில்லாமல் உள்வாங்கி இருந்தாள். ஆனால் இவன் சுத்தமாக எதிர்பாரததினால் மகிழ்ச்சியில் உறைந்திருந்தான்.


நொடிகள் நிமிடங்களாக கழிய தன்னை நிதானித்தவன் முகத்தை நிமிர்த்தி, "லைஃப் நமக்கு செகெண்ட் சேன்ஸ் கொடுத்திருக்கு. நமக்கு குழந்தை நம்மளோட உறவா வர போகுது" என்று புன்னகைக்க,


"ஹ்ம்ம் ஆமா நமக்காக ஒரு ஜீவன் உருவாகியிருக்கு" என்று பதிலுக்கு புன்னகைத்தவளின் விழிகளும் நீரினால் பளபளத்தது.


இருவரும் உணர்ச்சி குவியலாக இருந்த பொழுதுகள் மகிழ்ச்சியை அள்ளி தெளித்தது.


"சந்தோஷமா இருக்கியா ஹரி…" என்று அவன் எப்போதும் கேட்கும் கேள்வியை இவள் கேட்க,


"ஹ்ம்ம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த உலகத்துல இந்த நிமி
ஷம் யாருமே இவ்ளோ சந்தோஷமா இருக்க மாட்டாங்க. தாங்க் யூ சோ மச். நீ என் வாழ்க்கையில கிடைச்ச வரம்" என்க,


"நானும் தான் ஹரி. யூ ஆர் தி ப்ரிசியஸ் கிஃப்ட் இன் மை லைஃப்" என்று கூறி அவனது நெற்றியில் இதழ் பதிக்க, விழிகளை மூடி ஆழ்ந்து அந்த முத்தத்தை அனுபவித்தான். இருவர் முகத்திலும் சொல்ல முடியாத நிறைவு குடிகொண்டது.


எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களுக்கு கிடைக்க அதனை அழகாக அமைத்து கொண்டனர்…


முற்றும்…

இவள் மீரா க்ரிஷ் ♥️♥️♥️






















 
Top