அத்தியாயம் 27:
அவள் முறைப்பை கண்ட ஒருவன்,
"ஹே நம்ம சாரையும் மிரட்ட ஆள் வந்தாச்சு" என்று கூற,
"ஹே…." என பெரும் கூச்சல் எழுந்தது.
இருவருக்கும் புன்னகையில் இதழ் மலர்ந்தது.
"ஓகே லெட்ஸ் ஸ்டார்ட் அவர் செலிப்பிரேஷன்" என்று ஒருவன் கூற,
"இதோ நம்ம கேக் வந்தாச்சு" என்று பெட்டியுடன் உள்ளே நுழைந்தான்.
சரசரவென அனைவரும் எழுந்து நிற்க நடுவில் டேபிளை கொண்டு வந்து வைத்து கேக் பெட்டியை பிரித்து வைத்திருந்தனர்.
ஹரி 'இதை எப்போது வாங்கினார்கள்' என்ற ரீதியில் பார்க்க,
அதை உணர்ந்த நீரஜா, "நான் தான் சார் ஐடியா கொடுத்தேன். நம்ம ஹனி பீஸ்ல தான் வாங்கிட்டு வந்தோம்" என்று பதிலளித்தாள்.
இதை எதிர்ப்பார்க்காத ப்ரஷி திகைத்து பின் புன்சிரிப்புடன், "இப்போ தான் ஒன்சைட் லவ்வுக்கு சோக கீதம் பாடுன…?" என புருவம் உயர்த்தி நீரஜாவிடன் வினா எழுப்ப,
"வொய்ஃப்னு நீங்க வந்த பிறகு என்ன பண்றது. அதான் ஹரி கிருஷ்ணா இல்லைன்னா ஒரு குரு கிருஷ்ணா அதுவும் இல்லைன்னா ஜெய் கிருஷ்ணானு மனசை தேத்திக்கலாம்னு இருக்கேன்" என்று சோகமாக அவள் கூறிய விதத்தில் எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
மது, "போதும் உன் சோக கீதம். இட்ஸ் டைம் டூ செலிப்ரேஷன்" என்று கூற,
அவர்களே ஹரியையும் ப்ரஷாந்தியையும் கேக்கின் முன் நிற்க வைத்து கையில் கத்தியை கொடுத்தனர்.
கேக்கில் 'ஹாப்பி மேரிட் லைஃப்' என்று அழகாக எழுதப்பட்டிருந்தது.
இருவரும் முகம் முழுவதும் விரவிய மகிழ்ச்சியுடன் கேக்கை வெட்டி மற்றவருக்கு ஊட்டி விட,
சத்தமாக கூச்சலிட்டு தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
ப்ரஷாந்தி கேக்கை வெட்டி அனைவருக்கும் தானே கொடுத்து ஆனந்தத்தையும் நன்றியையும் தெரிவித்தாள்.
அதன் பின்னர், 'அவர்களது காதல் திருமணமா…? பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதா…?' என்று கேட்டு,
'காதல் திருமணம்' என்று அறிந்த பிறகு,
'காதல் கதையை கூறுமாறு' ப்ரஷாந்தியை பிடித்து கொண்டனர்.
அவள் தொடக்கத்திலிருந்து திருமணம் வரை கூறிய பிறகு தான் அவளை விட்டனர்.
ஹரி, "போதும் போய் வொர்க்க பாருங்க. டைம் ஆச்சு" என்று இயம்பிய பிறகு தான் அங்கிருந்து சென்றனர்.
அவர்கள் நகர்ந்ததும் புயலடித்து ஓய்ந்தது போல அமைதி.
"நான் சொன்னேன்ல ரொம்ப சேட்டை. நான் ஸ்ட்ரிக்டா இருக்கும் போதே இவ்ளோ பண்றாங்க" என்று சிரிப்புடன் கூற,
"ஹ்ம்ம் சரிதான். பட் க்யூட் கைஸ். ஸ்வீட் சர்ப்ரைஸ்" என்று புன்னகைத்தாள்.
"ஹ்ம்ம் இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு உனக்கு வா" என்று கை பிடித்து அழைத்து செல்ல,
"இன்னுமா…? நேத்துல இருந்து சர்ப்ரைஸ் மழையா பொழியுதே என் காட்டுல" என்று சிரித்தபடியே அவனுடன் நடந்து சென்றாள்.
அடுத்த தளத்திற்கு மின் தூக்கியில் அழைத்து சென்றவன்,
அவளது கண்களை விரல்களால் மூடிய படி அழைத்து சென்றான்.
"கண்ணெல்லாம் மூடி அழைச்சிட்டு போற சர்ப்ரைஸ் ரொம்ப பெருசா இருக்கும் போலவே"
"சர்ப்ரைஸ பார்த்த பிறகு நீ தான் சொல்லணும் பெருசா சின்னதான்னு" என்றவன் கரங்களை எடுத்து கொள்ள,
மங்கலாக கண்முன்னே தெரிந்த போர்டை பார்ப்பதற்க்காக தேய்த்துவிட்டு பார்த்தாள்.
'ப்ரஷாந்தி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' என்ற பலகை பெரிதாக விரவியிருக்க,
மிகப்பெரிய தளம் விரிந்திருக்க தடுப்புகளால் பிரிக்கப்பட்டிருந்த டெஸ்க்கின் மீது கணினிகள் அடுக்கப்ப்பட்டிருந்தது.
அதனை பார்த்தவள் பேச்சற்று நின்றுவிட்டாள். அவள் இதனை நிச்சயமாக எதிர்ப்பார்க்கவில்லை.
ஆனந்த அதிர்ச்சி தான். அவளை உறைய வைத்திடும் அதிர்ச்சி இது.
அவளுக்காகவே அவளுடைய வேலைக்காக தளம் உருவாக்கப்பட்டிருந்தது.
கண்கள் சடுதியில் கலங்கிவிட்டது மகிழ்ச்சியின் உச்சத்தில்.
எத்தனை கணவன்மார்கள் மனைவிக்கென தனி அடையாளத்தை உருவாக்க நினைக்கின்றனர்.
ஆனால் இவன் செய்து முடித்திருந்தான். தனக்காக தனக்காக மட்டுமே தன்னுடைய ஆசையை நிறைவேற்றி இருக்கின்றான்.
என்னுடைய ஆசைக்காகவும் சேர்த்து போராடி இருக்கிறான் என்று எண்ணமே உவகையை அள்ளி தெளித்தது.
"எப்படி என் சர்ப்ரைஸ் பெருசா இருக்கா…?" என கண்ணடித்து வினவ,
அவளது விழி நீர் கன்னத்தை தொட்டிருக்க, "இதுக்கு தான் நாலு நாளா அலைஞ்சிட்டு இருந்தியா…?" என்றாள்.
'ஆமாம்' என்று தலையசைத்தவன்,
"என்னடா ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற" என்று கேட்ட நொடி,
அழுகையுடன் அவனை அணைத்திருந்தாள்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்த தெரியாதவளுக்கு கண்ணீர் மேலும் பெருகியது.
"ப்ரஷாந்தி சொல்றேன்ல அழறதை நிறுத்து" என்று கூற,
"ம்ஹூம் என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை. நீ ஏன்டா இப்படி இருக்க…" வழிந்த நீரை துடைத்தபடி கேட்க,
"எப்படி இருக்கேன் நல்லா தானே இருக்கேன்" ஒரு முறை சுற்றி காண்பித்தவன் இதழ் வளைத்து வினா எழுப்பினான்.
"ப்ச்…" சந்தோஷமாய் அவனை பார்த்து சலித்தவள் முகத்தை திருப்பி கொள்ள,
"சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்தில எதுக்கு அழுகை. வா உன்னோட கேபின பாரு. எனக்கு பிடிச்ச மாதிரி டிசைன் பண்ணி இருக்கேன். உனக்கு ஓகேவான்னு பாரு. இல்லைன்னா ஆல்டர் பண்ணிக்கலாம்" என்று,
'எம்.டி ப்ரஷாந்தி ஹரி கிருஷ்ணா' என்று பெயர் பலகை பொறிக்கப்பட்டுள்ள அறைக்கு அழைத்து சென்று அவளது இருக்கையில் அமர வைத்தவன்,
"ஹ்ம்ம் பெர்பெக்டா இருக்கு" என்று புன்னகையுடன் மொழிந்தான்.
அறையை சுற்றி விழிகளை ஒட்டியவளுக்கு ஒவ்வொன்றும் அவனது காதலை அக்கறையை அன்பை உணர்த்தியது.
"எல்லாம் ஓகே வா. எதையும் ஆல்டர் பண்ணனுமா…?" என கேட்டவனுக்கு,
"இல்லை" எனும் விதமாக தலையசைத்தவளுக்கு பேச்சு வற்றியிருந்தது.
அவனது நேச வெள்ளத்தில் சொல்லாமல் கொள்ளாமல் அடித்து சென்றுவிட்டவளுக்கு திசை தெரியவில்லை. பேச்சு வரவில்லை.
அது ஒரு உன்னத நிலை. அனைத்தையும் உணர்ந்தும் உணராத நிலை. சொல்லிலடங்கா நிலை.
எங்கும் எதிலும் நிறைந்திருவந்தவன் அவளை முழுதாய் காதல் சாரலில் நனைத்திருந்தான்.
விழியெடுக்காது அவனையே பார்த்திருந்தாள்.
இத்தனை நேசத்தை ஒருவரால் கொட்ட முடியமா. இதனை அனுபவிக்க ஒரு ஜென்மம் போதாதென அவனையே பார்வையால் சமீபித்திருந்தாள்.
அவனும் அவளை தான் விழிகளில் நிறைத்து கொண்டிருந்தான்.
பிரிவிற்கு எல்லாம் சேர்த்து வைத்து காதல் செய்து அவளை திக்கு முக்காட செய்திருந்தான்.
விழிகள் இரண்டும் பார்வையால் காதல் மொழிகள் பேசி கொள்ளும் மோன நிலை.
அவள் பார்வையை விலக்குவதாக தெரியவில்லை. இவனுக்கே அவளது பார்வையில் நாணம் குடியேறிவிட்டது.
"ஹே போதும் டி எனக்கே வெட்கம் வந்துடும் போல" என்று லேசாக சிவந்த முகத்துடன் கூற,
அவளது பார்வையில் ரசனை மெருகேறியதே தவிர பார்வையை தளரத்தவில்லை.
"இப்படியே பார்த்திட்டே இருக்கலாம்னு ஐடியாவா உனக்கு…?" என சிரிப்புடன் கேட்க, அதற்கும் பதிலில்லை.
'ம்ஹூம் இவள் இப்போதைக்கு தன்னிலைக்கு வர மாட்டாள்' என்று நினைத்தவன்,
"வா போகலாம்" என்று கைபிடித்து இழுத்து செல்ல,
முகத்தில் மின்னிய சிரிப்புடன் அவனுடன் சென்றாள்.
கரேஜிற்கு சென்று காரை எடுத்து ஏறி கிளம்பிய பிறகும் அவளது பார்வை மாறவில்லை.
பார்த்தது பார்த்த படியே இருந்தாள். இவனுக்கு தான் அவளது பார்வையில் குறுகுறுப்பு.
அவள் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. அவளது விழிகளுக்கு இப்போது அவன் மட்டுமே.
"இவ்ளோ நேரம் ஆச்சே இன்னும் வீட்டுக்கு போகலை. என்னன்னு கேட்க மாட்டியா…?" என அவளை திசை திருப்புவதற்க்காக வினவ,
"கேட்க மாட்டேன்" என்று தலையசைத்தாள்.
"ஏனாம்" என்றவன் சிரிப்புடன் கேட்க,
"சொல்ல மாட்டேன்" என்று சிரிப்புடனே கூறி விழி மூடி சாய்ந்துவிட்டவள் சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.
ஒரு புறமாக சாய்ந்து விழி மூடி ஒயிலாக உறங்குபவளை கண்டவனின் மனம் களிப்புற அவள் நன்றாக உறங்குவதற்க்காக சீட்டை சாய்த்து வைத்தான்.
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே…
பெங்களூரை நோக்கிய கார் பயணம். ப்ரஷாந்தியின் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
இரவுணவை ஒரு உணவகத்தில் முடித்து விட்டு பயணத்தை தொடர்ந்தனர்.
ப்ரஷாந்தி தான் காரை இயக்குவதாக கூற மறுத்துவிட்டவன் தானே இயக்கினான்.
பதிமூன்று மணி நேர பயணத்தில் பெங்களூரின் எல்லைக்குள் நுழைந்திருந்தனர்.
அதிகாலை நான்கு மணி பனி மூட்டம் அலை அலையாய் விரவி சாலையோர குல்மெஹெர் மரங்களின் சுகந்த நறுமணமும் அவர்களை வரவேற்று கொள்ளை கொண்டது.
வெகுநேரம் உறங்கியதில் விரைவாக கண்விழித்திருந்த ப்ரஷாந்தி இதனை பார்த்து ஆர்ப்பரித்தாள்.
எங்கே செல்கிறோம் என்று கேட்காதவளிடம் இரவே கூறியிருந்தான்.
பத்து நாட்களுக்கு பிறகு பிறந்த மண்ணின் வாசம் ஆழ்ந்து சுவாசித்தாள்.
மேலும் சில மணிகளில் ப்ரஷாந்தியின் வீட்டை அடைந்திருந்தனர்.
'தாங்கள் வருவதை கூறிவிட்டானா…? இல்லையா…?' என எதையும் கேட்கவில்லை.
'எதுவென்றாலும் அவனே செய்யட்டும். தன் பணி அவனுடைய தேசத்தில் நனைந்து மூழ்குவது தான்' எதையும் நினைத்து கொண்டாள்.
அவர்கள் காரை கண்டதும் சுதர்ஷனும் சுபத்ராவும், வெளியே வந்து, "வாங்க மாப்பிள்ளை. வாம்மா" என்று மகிழ்வுடன் வரவேற்றதில் அவன் கூறிவிட்டதை அறிந்தாள்.
வீட்டினுள் நுழைய அந்த அதிகாலை நேரத்தில் குடும்பமே அங்கு கூடியிருந்தது.
"வெல்கம் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஹரி கிருஷ்ணா" தீப்தியும் நிஷாந்தியும் வரவேற்றனர்.
சுபத்ரா, "கார்லயே ட்ராவல் பண்ணிட்டு வந்தது டையர்டா இருக்கும். போய் ரிப்ரெஷ் ஆகிட்டு வாங்க" என்று இருவரையும் அறைக்கு அனுப்பி வைத்தார்.
"வா ஹரி" என்று தனது வீடு என்று துள்ளலுடன் அழைத்து சென்றவளுக்கு தனது அறையில் அவனது வாசம் தித்திப்பை தந்தது.
இருவரும் குளித்து விட்டு கீழிறங்கி வர வாக்கிங் சென்றிருந்த நிஷாவின் கணவன் பரத்தும் தீக்ஷியும் வந்திருந்தனர்.
"சித்தி…" என்று ப்ரஷியை கண்டதும் தீக்ஷி ஓடி வர,
"செல்லக்குட்டி" என்றவாறு அவளை அள்ளி கொண்டாள்.
"சித்தி சாக்கி" என்று எப்போதும் போல அவள் வினவ,
"அச்சச்சோ மறந்துட்டேனே" என்றவள் முகத்தை சோகமாக வைத்து கொள்ள,
தீக்ஷி அவளை பாவமாக பார்த்து வைத்தாள்.
"நான் உனக்கு சாக்லேட் கொண்டு வந்திருக்கேன் பட்டு" என்று ஹரி புன்னகையுடன் சாக்லேட்டை நீட்ட,
சாக்லெட்டை பார்த்து மனம் மகிழ்ந்தாலும் அந்த புதியவனை அச்சத்துடன் பார்த்த தீக்ஷி ப்ரஷியை கண்டாள்.
"ஹ்ம்ம் வாங்கிக்கோ. அவர் உன்னோட சித்தப்பா ஹரி சித்தப்பா" என்று ப்ரஷி கூற,
அவள் நம்பாமல் தாயை நோக்கினாள்.
"சித்தி சொல்றால்ல. அவர் உன் சித்தப்பா தான்" என்று நிஷா கூறி,
பரத்தும் தன் பங்கிற்கு, "சித்தப்பா தான் டா" என்று கூறிய பின்பு தான் அவனிடம் இருந்து சாக்லெட்டை பெற்று கொண்டாள்.
ப்ரஷி, "சித்தப்பாட்ட போறியா…?" என வினவ,
ஹரியும், "சித்தப்பாட்ட வர்றியா. நான் உனக்கு நிறைய சாக்லேட் வாங்கி தர்றேன்" என்று அழைக்க, தயங்கினாலும் அவனிடம் சென்றுவிட்டாள்.
வெள்ளை நிறத்தில் பூச்செண்டை கையில் வாங்கி உச்சி முகர்ந்தவனின் மனம் நிறைந்து போனது.
அவள் சாக்லேட்டை பிரிக்க சிரமப்படுவதை கண்டு ஹரி வாங்கி பிரித்து ஊட்டிவிட தீக்ஷிக்கு அவனை மிகவும் பிடித்து போனது.
ஹரி சித்தப்பா என்று கூற சிரமப்பட்டவள், 'ஹரிப்பா' என்று அழைப்பை மாற்றியிருந்தாள்.
அவளது அந்த அழைப்பு அவனது சொல்லவென்னா மகிழ்ச்சிக்கு உள்ளாக்க அவளுடன் ஒன்றி போனான்.
அவர்கள் இருவரையும் பார்த்திருந்தவளை கை பிடித்து தனியாக அழைத்து சென்ற தீபியும் நிஷாவும், "ஹ்ம்ம் அப்புறம் மேடம் எங்களை ஞாபகம் இருக்கா. இவ தீபி நான் நிஷா" என்று கேட்க,
ப்ரஷாந்தி அவர்களை முறைத்தாள்.
"என்ன முறைப்பு வேண்டிக்கெடக்கு. நாலு நாள் முன்னாடி மும்பைக்கு போனதை சொல்ல இன்பார்ம் பண்ண கால் பண்ண. அதுக்குப்புறம் ஒரு காலும் இல்லை" என்று நிஷா அங்கலாய்க்க,
"டைம் இருந்திருக்காது. என்ன அப்படி தானே" என்று தீபி கண்ணடிக்க,
"இதோ இப்படி கலாய்ப்பிங்கன்னு தான் நான் கால் பண்ணலை" என்று சிணுங்கியபடி ப்ரஷாந்தி பதிலளித்தாள்.
"ஆஹான் நீ கால் பண்ணலைனாலும் நேர்ல சேர்த்து வச்சு கலாய்ப்போம்" என்றவள்,
"நாலு நாள் தானேடி ஆச்சு. அதுக்குள்ள ஒரு சுத்து வெயிட் போட்டு நல்ல பளபளன்னு ஆகிட்டியே…?" என்றாள் நிஷா.
"எல்லாம் அத்தான் செஞ்ச மாயம் தான" என்று தீபி கூற,
அவளுக்கு கூச்சத்தில் கன்னம் சிவந்து விட்டது.
"ப்ச் போதும் விடுங்கடி" என்று கெஞ்ச,
"வந்தவுடனே அவளை வம்பிழுக்காதிங்க டி. நீ காஃபி குடிம்மா" என்று காஃபியுடன் வந்த சுபத்ரா தான் காப்பாற்றினார்.
காஃபியை அருந்தியபடி வெளியே வந்தவள் கண்டது தீக்ஷியுடன் தனி உலகில் வாழ்ந்து கொண்டிருந்த ஹரியை தான்.
தீக்ஷி ஏதோ கைகளை ஆட்டி கதை கூறி கொண்டு இருக்க, ஹரி புன்னகையுடன் கேட்டு கொண்டிருந்தான்.
காணவே கண்கொள்ளா கவிதையாக இருந்தது. பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.
ஒரு நொடி அதனை பார்த்த படி நின்றுவிட்டாள். அருகில் பரத்தும் சதர்ஷனும் பேசி கொண்டு இருக்க,
'தன்னவனும் ஏன் தந்தையுடன் சகஜமாக பேசவில்லை. ஒருவேளை இருவருக்கும் இன்னும் எதுவும் சரியாகவில்லையோ. இருவரும் வந்ததிலிருந்து பேசி கொண்டது போல தெரியவில்லையே' என்று சிந்தித்த படி இருந்தவளை,
"என்னடி நின்னுட்ட வா சாப்பிட அம்மா கூப்பிட்றாங்க" என்ற தீபியின் குரல் கலைத்தது.
எல்லோரும் உணவருந்த அமர்ந்திருக்க யோசனையை விட்டு தானும் அமர்ந்துவிட்டாள்.
ஹரி தீக்ஷிக்கு ஊட்டியபடியே தானும் உண்டவாறு இருந்தான்.
பொழுது ரம்மியமாக குடும்பத்தினருடன் கழிய மதிய உணவையும் முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க அறைக்கு சென்றிருந்தனர்.
மாலை வெயில் சிறிதாக மங்க துவங்கும் நேரம் கண்விழித்த ப்ரஷாந்தி அருகில் ஹரியை தேட காணவில்லை.
'தீக்ஷியுடன் இருப்பான்' என்று எண்ணியவள் கீழே இறங்கி செல்ல சிட் அவுட்டில் கண்ட காட்சியில் ஆச்சிரியத்தில் விழிவிரித்து நின்றுவிட்டாள்.
அவள் பார்த்தது சுதர்ஷனும் ஹரியை அருகருமே அமர்ந்து சிரித்து பேசி கொண்டு இருப்பதை தான்.
அதுவும் சுதர்ஷன் ஏதோ கூறி ஹரியின் தோளில் அடிக்க அவன் சிரித்த படி பதிலளித்தான்.
இந்த அதிசயம் எப்போது நடந்தது. எப்படி நடந்தது என ஆச்சரியமாக விழிவிரித்து பார்த்தவளிடம்,
"என்னடி அப்படி பார்த்திட்டு இருக்க" என்று கேட்டாள் நிஷா.
"அப்பாவும் ஹரியும் இவ்ளோ கேஷுவலா பேசிட்டு இருக்காங்க. இது எப்போதுல இருந்து" என்று வியப்பு விலகாமல் விலக,
"ஹ்ம்ம் நீ ஹரி வீட்டுக்கு போனதுல இருந்து. நீ மும்பை போன மறுநாளே ஹரி அம்மாக்கு அப்பாவுக்கும் கால் பண்ணி நடந்ததுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டாரு. அப்போவே எங்களுடைய எல்லாம் அவ்ளோ சந்தோஷம். நீ ஒரு நல்லவரை தான் உன் வாழ்க்கைக்கு தேர்ந்தெடுத்திருக்கேன்னு. இப்போ வீட்டுக்கு வர்றதுக்கு கூட அவர் தான் அப்பாட்ட பேசுனாரு" என்று நடந்தவற்றை கூற,
அவளுக்கு அது புதிய விடயம் ஆதலால் திகைப்பு தான். மனம் முழுவதும் அத்தனை சந்தோஷம்.
தன்னை மட்டுமல்ல தன்னுடைய குடும்பத்தினரையும் பார்க்கிறான் என்று நினைக்கையிலே நெஞ்சம் விம்மியது மகிழ்ச்சியில்.
விழிகள் கன்னக்குழிய சிரிப்புடன் பேசுபவனை ரசித்தது. அவளது பார்வையை உணர்ந்தவன் திரும்பி பார்த்து 'என்னவென' புருவம் உயர்த்த,
'ஒன்றுமில்லை' என்று தலையாட்டிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
அதன் பின் தீக்ஷி அவளது நேரத்தை இழுத்து கொண்டாலும் பார்வை நிமிடத்திற்கு ஒரு முறை அவனை தொட்டு மீண்டது.
தன்னுடைய குடும்பத்தில் வெகு வாகாய் பொருந்தி போனவனை விழிகளால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
பரத்துடனும் நன்றாக பேசினான்.
"அண்ணா" என உரிமையாக அழைத்தான். பரத்தும் சகோதரனை போல ஏற்று பழகினான்.
என்னவோ வாழ்வில் அனைத்தும் சரியாகிவிட்டது. சரியாக்கிவிட்டான் என்னவன் என்ற எண்ணமே சுற்றி வந்தது.
இரவுணவை அனைவரும் சேர்ந்து முடிக்கும் போதும் சரி அவளுடைய பார்வை அவனை தான் வட்டமிட்டது.
கண்டும் காணாமல் பார்த்தவனது இதழ்களில் கள்ள புன்னகை.
உண்டுவிட்டு எல்லோரும் உறங்க செல்ல,
சுதர்ஷன், "ப்ரஷி உன்கிட்ட பேசணும்" என்று கூறினார்.
"நீ பேசிட்டு வா" என்றவன் இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு விலகி சென்றான்.
சுதர்ஷன் ஏதும் பேசாமல் அவளது கைகளை பிடித்து கொண்டார்.
"என்னப்பா" என்று என்று கேட்க,
அவள் தலையில் கைவத்தவர், "நல்லாயிரும்மா. இதே போல எப்பவுமே சந்தோஷமா இரு. நானே தேடி பார்த்திருந்தா கூட உனக்கு இப்படி ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுக்க முடியாது" என்று கூறி எழுந்து சென்று விட்டார்.
இதனை கேட்ட அவள் தான் அங்கேயே சமைந்துவிட்டாள். எவ்வளவு பெரிய வார்த்தைகள் என்று சில நொடிகள் ஒன்றும் உரைக்கவில்லை.
சில நிமிடங்களில் தன்னிலை அடைந்தவளுக்கு இதற்கு மேல் என்ன வேண்டும் என்ற நிலையில் மகிழ்ச்சி இதழ்கள் மலர்ந்தது.
எழுந்து அதே பாவனையுடன் உள்ளே சென்றவள் உறங்காமல் காத்திருந்தவனை பார்க்க,
"என்ன மேடம் ஈவ்னிங்ல இருந்து பார்வை ஒரு மார்க்கமா இருக்கு. யாராவது கவனிச்சா என்ன நினைப்பாங்க…" என்று வினவினான்.
"என்ன நினைச்சா எனக்கென்ன. என் புருஷன நான் பாக்குறேன்" என்று அவன் மடியில் அமர்ந்து கொள்ள,
"ஹ்ம்ம் ரொம்ப தான் தைரியம்" என்று சிரித்தான்.
"ஆமா தைரியம் தான்" என்றவள்,
"அப்படி என்ன சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்திங்க மாமாவும் மருமகனும்" என்று வினா எழுப்ப,
"அது எனக்கும் என் மாமாக்கும் உள்ள சீக்ரெட் யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேன்" என்றான்.
"க்கும் ரொம்பத்தான். சொல்லவேணாம்" என்றவள்,
"நான் சொல்லுவேன் அப்பா என்ன சொன்னார் தெரியுமா…? என் தலை மேல கைய வச்சு. நல்லாயிரும்மா. நானே தேடியிருந்தா கூட இவ்ளோ நல்ல வாழ்க்கை உனக்கு அமைஞ்சிருக்காதுன்னு சொன்னாரு. அதை கேட்டப்போ எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்திச்சு. எவ்ளோ பெரிய வார்த்தை இல்ல" என்று கண்கள் மின்ன கூறியவளை புன்னகையுடன் பார்த்தான்.
"எல்லாம் உன்னால தான் ஹரி" என்க,
"நான் என்ன பண்ணேன். நான் எதுவும் பண்ணலை" என்றான்.
"ம்ஹூம் எல்லாம் உன்னால தான். உன்னை எவ்ளோ நம்பியிருந்தா இவ்ளோ பெரிய வார்த்தையை சொல்லியிருப்பாரு. நீ என் வாழ்க்கையில வந்தது எவ்ளோ பெரிய வரம்." என்க,
"நோ நீ தான் என் வாழ்க்கையோட வரம். எனக்கு இவ்ளோ அழகான குடும்பத்தை குடுத்திருக்க" என்று மறுக்க,
"நோ. உன்னை தவிர என் வாழ்க்கையில யார் வந்திருந்தாலும் என் வாழ்க்கை இவ்ளோ அழகா சந்தோஷமா அர்த்தமுள்ள தான் இருந்திருக்காது" என்றவள் அவனது கன்னக்குழியில் இதழ் பதித்தாள்.
அவளது இதழொற்றலை விழி மூடி சுகித்தவன், "இங்க…" என்று உதட்டை காண்பிக்க,
"ம்ஹும்" என்று சிவந்த கன்னங்களுடன் மறுத்தாள்.
"நான் தர்றேன்" என்றவன் அவள் முகத்தை ஏந்
தி அவளிதழ்களில் தன்னிதழை ஆழ்ந்து புதைத்தான்.
உணர்ச்சியின் பிடியில் அவன் கேசத்தில் விரல் நுழைத்தவள் இறுக பிடித்து கொள்ள மெது மெதுவாக அவனிதழ்கள் கழுத்தில் இடம் பெயர்ந்து அழுத்தமாக அச்சாரத்தை பதித்தது.
விரல்கள் அவளினுள் ஊர்ந்து செல்ல இதழ்கள் அவளை வசமிழக்க செய்திருந்தது.
நொடிகள் நிமிடங்களாக இருவரும் ஒருவருள் மற்றொருவர் தொலைய தொடங்கினர்.
வெகு நாட்களுக்கு பிறகான இணையின் அருகாமையை அனு அனுவாக உணர்ந்து உள்வாங்கி காதலில் திளைத்தனர்.
தொடரும்…
இவள் மீரா க்ரிஷ்
…