• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
605
Reaction score
836
Points
93
அத்தியாயம் 26:


பெங்களூர் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு என்று அறிவிப்பு மும்பை விமான நிலையத்தில் வெளியாக ரேஷ்மாவின் கையை பிடித்திருந்த படி நின்றிருந்த ப்ரஷியின் கண்கள் கலங்கிவிட்டது.


ப்ரஷாந்தியின் நண்பர்களோடு அன்றைய நாள் மறக்க முடியாத நினைவாக கழிய மறுநாள் காலை எல்லோரும் ஊருக்கு புறப்பட்டிருந்தனர்.


அவர்களை வழியனுப்புவதற்காக விமான நிலையத்திற்கு ஹரியும் ப்ரஷியும் வந்திருந்தனர்.


அவளது விழிகளை கண்ட ரேஷ்மா, "ஹே ப்ரஷி பெங்களூர் என்ன அவ்ளோ தூரத்துலயா இருக்கு. ப்ளைட் ஏறுனா த்ரீ ஹவர்ஸ்ல வந்திட போது" என்று அவளை சமானதானப்படுத்த முயல,


சஞ்சய், "போதும் போதும் உங்க பாசமலர் படத்தை எங்களால பார்க்க முடியலை" என்று கலாய்க்க,

"சும்மா இருடா" என அவனை அதட்டிய மேனகாவும் அவளுக்கு ஆறுதல் கூறினாள்.


"நீ விட்ற கண்ணீர்ல இந்த ஏர்போர்ட்டே மூழ்கி போய்டும் போல" என்று வருண் வார,

"உங்களுக்கு எப்பவுமே கேர்ள்ஸோட பீலிங்ஸ் புரியாது" என்று மேனகா கூறியிருந்தாள்.

"என்ன பெரிய புடலங்கா பீலிங்ஸ். இப்போ என்ன அவளை சிரிக்க வைக்கணும் அவ்ளோ தானா. டேய் எட்றா அந்த ஆயுதத்தை" என்று சஞ்சய் கூற,

"டன் டன் டன். இதோ எடுத்துட்டேன்" என்று ஒரு கிஃப்ட் பாக்ஸை எடுத்தான் கிரண்.


மேனகா, "கிஃப்டா…? எங்களுக்கு தெரியாம எப்போடா வாங்குனிங்க. எங்க கூட தானடா வந்திங்க" என ஆச்சிரிரப்பட,

"அதெல்லாம் பாய்ஸ் பீலிங்ஸ் உங்களுக்கு புரியாது" என்று அவளை போலவே கூறிய சஞ்சய்,


இத்தனை நேரம் பார்வையாளனாக இருந்த ஹரியை ப்ரஷாந்தியிடம் பிடித்து நிறுத்தி அந்த பரிசை கொடுத்தான்.


மேனகா, "என்னமோ சிரிக்க வைக்கிறேன்னு சொன்ன. இந்த கிஃப்ட பார்த்ததும் அவ சிரிச்சிடுவாளா…?" என கிடைத்த வாய்ப்பில் வார,


"வெயிட் பண்ணு வெயிட் பண்ணு" என்றவன்,

அவர்களிடம்,"என்ன பார்த்துட்டே இருக்கிங்க. கிஃப்ட ஓபன் பண்ணுங்க" என்றான்.


இருவரும் பரிசை பிரிக்க உள்ளே ஒரு புகைப்படம் இருந்தது.

மேனகா எட்டி பார்க்க முயல, அவளது தலையில் கொட்டிய சஞ்சய், "முந்திரி கொட்டை கொஞ்சம் அமைதியா நில்லு" என்று அதட்ட,

அவனை முறைத்தப்படி தள்ளி நின்று கொண்டாள் மேனகா.


புகைப்படத்தை பார்த்த நொடி ப்ரஷாந்தியின் விழிகள் வியப்பில் விரிந்து பின்னர் முகத்தில் நாணம் படர,

ஹரயின் முகத்தில் மந்தகாச புன்னகை படர்ந்தது.

இவர்களது முகத்தை கண்ட பெண்களும் அப்படி என்ன உள்ளது என்று புகைப்படத்தை எட்டி பார்த்தனர்.


அதில் நேற்று ப்ரஷாந்தி ஹரியை ஓரக்கண்ணால் ரசிப்பதும் அதனை கண்டு கொண்ட ஹரியின் கண்ணோரச் சிரிப்பும் தத்ரூபமாக அழகாய் இருந்தது.


மேனகா, "ஹே வாவ், யாரு இதை எடுத்தா. சூப்பரா இருக்கு" என்று ஆர்ப்பரிக்க,


"ரியல்லி அமேஸிங்" என்று ரேஷ்மாவும் புகழ்ந்தாள்.


"போதும் போதும் புகழ்ச்சி போரடிக்கிறது" என்று வருண் பிகு பண்ண,


"ஏதோ நாய் தெரியாம எடுத்திட்டு எவ்ளோ சீன் போடுது பாரு" என்று அவன் தலையில் தட்டிய சஞ்சய்,

"போட்டோ எடுத்தவங்களையே இவ்ளோ புகழ்றிங்களே. அதுக்கு இவ்ளோ அழகா போஸ் கொடுத்த நம்ம ரொமாண்டிக் கப்பிள்ஸ் புகழ வேண்டாமா…?" என அவர்கள் பக்கம் அனைவரையும் திருப்பி விட்டான்.


"ஆமா அதுவும் ப்ரஷி பார்க்குற பார்வையை பாருங்க" என்று கிரண் வம்பிழுக்க,


இவர்களது கலாட்டாவில் கூச்சத்தினால் அவளது முகம் சிவந்து விட்டது.


"அட அட என்ன ஒரு ரொமாண்டிக் போஸ்" என்று மேனகாவும் கலாய்க்க,

"சும்மா இருடி" என்று அவளை அடித்தவளை

ஹரி ஓரப்பார்வையில் சிரிப்பில் இதழ்துடிக்க பார்த்தான்.


அவனது சிரிப்பில் மேலும் சிவந்தவளுக்கு முகத்தை எங்கு கொண்டு வைப்பதென்று தெரியவில்லை.

ஹரியின் பின்னால் சென்று நின்று கொண்டவள்,

"உங்களுக்கு ப்ளைட்க்கு டைம் ஆகிடுச்சே கிளம்பலையா…?" என வினவ,

"பார்த்திங்களா…? இவளுக்கா இவ்ளோ நேரம் ஆறுதல் சொன்னிங்க. இன்னும் ஒரு நாள் தங்கியிருந்தாலும் அவளே நம்மள துரத்தியிருப்பா" என்ற சஞ்சய், ப்ரஷியிடம் நாலு அடிகளையும் பெற்று கொண்டான்.


நண்பர்கள் செய்த கலாட்டாவில் அழுகையில் சிவந்திருந்த முகம் வெட்கத்தினால் சிவந்து விட்டது.


சிரிப்பும் முறைப்புமாக அவர்களை வழியனுப்பிவிட்டு திரும்பியவளை அதே மந்தகாச சிரிப்புடன் எதிர்கொண்டான் ஹரி.


அவனது பார்வையில் முகத்தினை திருப்பியவள் சிவந்த கன்னத்தை தேய்த்தபடி வேக எட்டுகளில் நடந்து சென்று காரினுள் அமர்ந்துவிட்டாள்.


நண்பர்கள் கிளம்பியதும் நேற்று கொண்ட ஊடல் நினைவு வந்துவிட்டது.


நான்கு நாட்களாக கண்டு கொள்ளாதவனை அலைய விட வேண்டும் என்று நினைத்தவள் முகத்தை ஜன்னல் புறம் திருப்பி கொண்டாள்.


அவள் செயலை பார்த்து சிரிப்புடன் காரில் அமர்ந்தவன் காரை எடுக்கவில்லை.


வெகுநேரம் காரை இயக்காததால் அவன் புறம் திரும்ப முகம் முழுவதும் சிரிப்புடன் அவளையே இமைக்காது பார்த்திருந்தான்.


அவனது பார்வையில் இதயம் மத்தளம் கொட்ட முகம் சூடேற மொத்த ரத்தமும் முகத்திற்கு பாய்ந்து சிவந்துவிட்டது.
அவனது பார்வையில் ரசனை ஊறியது. தலை சரித்து புன்னகையுடன் அவளை ரசித்தவனின் மனம் ஏதேதோ செய்ய உந்தி தள்ளியது.


அவனது பார்வையில் முகம் மேலும் ரத்தமென சிவந்துவிட்டது. பதட்டத்தை குறைக்க கீழுதட்டை பற்களால் அழுந்த கடித்து கொள்ள,


இவனுடைய இதய துடிப்பு எகிறியது. இதற்கு மேல் தாங்காது என நினைத்தவன் பார்வையை திருப்பி 'ஊஃப்' என பெருமூச்சை வெளியிட்டு நெஞ்சை நீவிவிட்டு கொண்டான்.


சிரிப்புடன் முன்னுச்சி முடியை கோதியவனின் கன்னக்குழியில் அவளது பார்வை ரசனையாக மாறியது.


ஓரப்பார்வையில், "போதும் பார்வையால என்ன தின்றுவ போல. அவங்க சொன்னது கரெக்ட் தான் போல" என்று அவளை வம்பிழுத்த படி காரை இயக்க,


கோபமாக ஏதோ கூற வந்தவள் அவன் மேல் கொண்ட ஊடல் நினைவு வர கப்பென்று வாயை மூடி கொண்டு முகத்தை திருப்பி கொண்டாள்.


இத்தனை நாட்களாக இவ்வளவு உணர்வுகளை எங்கு வைத்திருந்தான். காதலிக்கும் நாட்களிலும் சரி திருமணமான பிறகும் சரி இத்தனை வெளிப்படையாக உணர்வுகளை அவளிடம் வெளிப்படுத்தியது இல்லை.


அதற்கான காரணத்தை மனம் யோசிக்காமலே கண்டறிந்திருந்தது. இப்போது தான் அவன் அவனாக எந்த வித மனப்போராட்டமுல் இல்லாமல் இருக்கிறான் என்று நினைத்தவளின் மனம் நிறைந்து போனது.


அவளது செயலில் விரிந்த நகையுடன் காரை இயக்கி கொண்டு இருந்தவன் வேறு பாதையில் காரை செலுத்தினான்.


சிந்தனையுடன் வந்தவள் சிறிது நேரம் கழித்து இது தாங்கள் வந்த பாதை இல்லையே என்று நினைத்த படி அவனை பார்க்க,


இவனோ அவளது பார்வையை கண்டு கொள்ளாது தன் வேலையில் கவனமாயிருந்தான்.


கோபத்தில் மூக்கின் நுனி சிவக்க அவனை பார்த்தவள் நீ கூறாமல் நான் கேட்க மாட்டேன் வீம்புடன் இருந்து கொண்டாள்.


அரை மணி நேர பயணத்தில் கார் ஒரு பெரிய கண்ணாடி கட்டிடத்தின் முன் நின்றது.


ப்ரஷாந்நி எதற்காக இங்கு வந்துள்ளோம் இது எந்த இடம் என்று சிந்தனையுடன் பார்க்க,


"இறங்கு ப்ரஷாந்தி" என்றவன் தானும் இறங்கி கொண்டான்.


காரிலிருந்து இறங்கியவளது விழிகள் 'ப்ரஷாந்தி டெக்னாலஜிஸ்' நலினமாக மின்னிய எழுத்துகளை பார்த்து அதிசயிக்க அப்படியே நின்றுவிட்டாள்


"என்ன அப்படியே நிக்கிற. வா உள்ள போகலாம்…" என்றவன் கைப்பிடித்து புன்னகையுடன் அழைத்து செல்ல, பிரம்மிப்புடன் அவனுடன் சென்றாள்.


அவன் இந்த நான்கு வருடங்களில் முன்னேறியிருக்கிறான் என்று அவளுக்கு தெரிந்திருந்தது.


ஆனால் இத்தனை பெரிய வளாகம் அபார வளர்ச்சி எதையும் அவள் எதிர்பார்க்கவில்லை.


ப்ரஷாந்தி டெக்னாலஜிஸ் என்ற பெயர் பலகை நலினமாக மின்னியது.

இந்த நான்கு நாட்களில் அவளும் அலுவலகத்தை பற்றி கேட்கவில்லை. அவனும் கூறவில்லை.


பிரச்சனையை மட்டும் தான் கூறியிருந்தான். தன் பெயரில் மென் பொருள் நிறுவனம் நடத்துகிறான் என்று மட்டும் தான் தெரியும்.


அகம் நிறைந்த முழு சிரிப்புடன் ஒரு பெண்ணை கைப்பிடித்து அழைத்து வரும் எம்.டியை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.


அவர்களது எண்ண போக்கை அறிந்தவனுக்கு மேலும் இதழ் வளைய மின்தூக்கியினுள் ஏறினான்.


ப்ரஷாந்தி ஒரு வித அதிசயித்து நிலையிலே அவனுடன் வந்தாள்.


நான்காம் தளத்தில் இருந்த அவனுடைய அறைக்கு அழைத்து செல்ல, சட்டென அங்கே ஒரு ஆழ்ந்த அமைதி.


வாயை பிளந்த படி எல்லோரும் தங்களை நோக்குவதை ப்ரஷாந்தியும் பார்த்த படி தான் வந்தாள்.


அறையினுள் அழைத்து சென்றவன் எம்.டி ஹரி கிருஷ்ணா என்ற பெயர் பலகையின் பின்னே இருந்த சுழல் நாற்காலியில் அமர வைத்துவிட்டு டேபிளின் முன்னே உள்ள நாற்காலியில் அமர்ந்து சிரிப்புடன் அவளை பார்த்தான்.


அவள் இன்னும் ஆச்சரியம் விலகாத முகத்துடன் அவனை பார்க்க,


புன்னகையுடன் ஒற்றை புருவத்தை ஏற்றி என்னவென வினவ அதற்கும் பதிலில்லை.


"எப்படி இருக்கு நம்ம ஆபிஸ். உனக்கு பிடிச்சிருக்கா ப்ரஷாந்தி. எந்த பதிலும் சொல்லாம இருக்க" என அவளை நினைவுலகிற்கு அழைத்து வர,


அவனது குரலில் நடப்பை அடைந்தவளுக்கு சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை.


அவனுடைய உழைப்பு கண்முன்னே வளர்ந்து நின்ற நொடி பேச்சே வரவில்லை. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய நிலை.


பதிலளிக்காமல் எழுந்து சென்றவள் சுவற்றில் கை வைத்து வருடினாள்.


ஜன்னல் கதவுகளை திறந்து மூடினாள். விழி மூடி ஆழ்ந்து சுவாசித்தவளுக்கு இது அத்தனையும் அவனுடைய அயராத உழைப்பு. அவனுடைய கனவு என‌ எண்ணுகையிலே உள்ளே ஒரு பரவசம் நிம்மதி.


விழி மூடி சாய்ந்து நின்று விட்டாள். ஆழ்ந்த அமைதி கோலோச்சியது அங்கு.


அமைதியாக அவளது செயலை உணர்ந்து உள்வாங்கியபடி அமர்ந்திருந்தவன் எழுந்து அவளருகே செல்ல விழி திறந்தவள் அனைத்து கொண்டாள்.


தானும் அவளை கரங்கொண்டு அனைத்து நின்றுவிட்டான். இருவரும் தங்களை உணர்ந்து கொள்ளும் நொடி.


எத்தனை நாள் விழிகள் மின்ன அவன் தனது கனவை பற்றி கூற கேட்டிருக்கிறாள். அது நினைவாகிய நொடி கடலின் ஆழ்ந்த அமைதியாய் மனம் சலனமில்லாமல் ஆனந்தத்தில் திளைத்தது.


"ஐ ஆம் ஸோ ஹாப்பி பார் யூ. யு டிஸர்வ் இட்" என்றபடி அவன் மார்பில் இதழ்பதித்தாள்.


இத்தனை வருடமாக புகழ் பணம் தராத ஒன்றை அவளது ஒற்றை வார்த்தை கொடுத்ததில் அவனுமே மகிழ்ச்சியில் நிறைந்து போனான்.


மௌனமான நொடிகள் ஆர்பரிப்பில்லாமல் மெல்ல இருவரையும் கடந்து செல்ல சந்தோஷ சாரல் ஜில்லென்று வீசியது.


"மே ஐ கம்மின் சார்" என்ற குரல் இருவரையும் நினைவிற்கு வர தன்னை நிதானித்து கொண்டவர்கள் விலக, ப்ரஷாந்தி சென்று அருகில் உள்ள சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.


தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவன், "எஸ் கம்மின்" என்று குரல் கொடுக்க,


உள்ளே நுழைந்த அவனது காரியதரிசி நீரஜா, "சார் இன்னைக்கு உங்களோட ஷெட்யூல்" என்று ஆரம்பித்தாள்.


"அதை என் டேபிள்ள வைச்சிடுங்க நான் பாத்துக்கிறேன். இன்னும் பைவ் மினிட்ஸ்ல எல்லாரும் கான்ஃபிரன்ஸ் ஹால்ல இருக்கணும். ஒரு இம்பார்ட்டன்ட் அனௌன்ஸ்மென்ட்" என்று ஆளுமையுடன் கூறினான்.


ப்ரஷியின் விழிகள் அவனது ஆளுமையை ரசிக்க தவறவில்லை.


நீரஜா ப்ரஷியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சரியென தலையசைத்து வெளியேறினாள்.


"இப்போ வந்திட்டு போனது என்னோட பி.ஏ நீரஜா" என்றவன்,


"வா கான்பிரன்ஸ் ஹால் போகலாம். உன்னை எல்லாருக்கும் இன்ட்ரொடியூஸ் பண்றேன்" என்க,


"சார் ஆபிஸ்ல பயங்கர டெரர் போலவே. நான் உன்கூட வந்ததை எல்லாரும் அப்படி பார்த்தாங்க" எனறு வினவ,


"லைட்டா. இல்லைனா இவங்ககிட்ட வேலை வாங்க முடியாது" என்று புன்சிரிப்புடன் அவளது கைப்பற்றி கான்பிரன்ஸ் ஹாலிற்கு அழைத்து சென்றான்.


அங்கே இதற்குள் எல்லோரும் எம்.டி ஒரு பெண்ணுடன் அதுவும் சிரித்து கொண்டு வந்தது காட்டு தீயாய் பரவியிருக்க, எல்லோரும் சலசலத்த படியே இருந்தனர்.


ஹரி உள்ளே நுழைந்த நொடி அப்படி ஒரு அமைதி அரங்கினுள்.


உள்ளே நுழைந்த நொடி அவனது உடல் மொழியிலும் ஒரு மாற்றம் சூழ ஆளுமை வந்தது.


மேடை ஏறி "ஹாய் காய்ஸ், ஹாப்பி மார்னிங் டு எவ்ரிவொன். உங்களை இங்க வர சொன்னதுக்கான காரணம். ஒரு இம்பார்ட்டன்ட் பெர்ஸனை இன்ட்ரொடியூஸ் பண்ணதான்" என்றவன்,


இதழ் விரிந்த புன்னகையுடன் அவள் கரம் பற்றி தன்னருகே நிற்க வைத்தவன், "இவங்க மை வைஃப் ப்ரஷாந்தி ஹரி கிருஷ்ணா" என்று கூறிய கணம் எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.


"சார் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா…?" என அதிர்ச்சி தாங்காமல் ஒரு பெண் எழுந்து கேட்டே விட,


சிரித்து கொண்டே, "எஸ் ஐ ஆம் மேரிட்" என்று பதிலளித்தான்.


இதனை கேட்டு நிறைய மக்களுக்கு ஆனந்தம் சிலருக்கு பொறாமை வருத்தம் என்று ஏகப்பட்ட உணர்வுகள் முகத்தில் வந்து போனது.


ஜி. எம் எழுந்து வாழ்த்துக்கள் கூற, ஒவ்வொராக எழுந்து இருவரையும் வாழ்த்திவிட்டு சென்றனர்.


ஹரியும் ப்ரஷாந்தியும் புன்னகையுடன் நன்றி கூறினர்.


எல்லோரும் எழுந்து சென்று விட ஒரு பதினைந்து இளம் வயதினர் மட்டும் அங்கு அமர்ந்து இருவரையுமே பார்ப்பதும் தங்களுக்குள் பேசுவதுமாக இருந்தனர்.


ப்ரஷாந்தி என்னவென்பதாய் ஹரியை பார்க்க,


"இவங்க என்னோட மேற்பார்வையில வொர்க் பண்ற நியூ ஜாய்னீஸ். கொஞ்சம் வாலு பசங்க. உன் ஃப்ரெண்ட்ஸ் கேங்க் மாதிரி" என் கூறி கொண்டு இருக்கும் போதே எல்லோரும் இணைந்து வந்து கோரஸாக,


"கங்கிராஜுலேசன்ஸ் மேம் அண்ட் சார்" என்று கத்த,


ப்ரஷாந்தி ஒரு கணம் பயந்துவிட்டாள்.


ஹரி நான் சொன்னேனே என்பது போல பார்க்க,

ஒருவன் வந்து, "மேம் நீங்க வாங்க உங்க கிட்ட நாங்க தனியா பேசணும்" என்றழைத்தான்.


ப்ரஷாந்தி திகைத்து முழிக்க,

ஹரி, "என்ன பேசணும். இங்கேயே பேசுங்க" என்றான்.


"நோ. எங்களுக்கும் மேம்க்கும் ஆயிரம் இருக்கும்" என்ற ஒரு பெண்,

"வாங்க மேம்" என்று அழைத்து சென்று ஒரு நாற்காலியில் அமர வைத்து சுற்றி அமர்ந்து கொண்டனர்.


ஹரி இருந்த இடத்திலே அமர்ந்து வேடிக்கை பார்க்க தொடங்கினான்.


"மேம் எனக்கு ஒரு டவுட். ம்ஹூம் எங்க எல்லாருக்கும் அதான் டவுட்" என்றவன்,


"ரோபாவா இருந்த எங்க சாரை எப்படி ரெமோவா மாத்தினிங்க. ஹவ் இஸ் இட் பாஸிபிள்" என்று வினவ,


எல்லோரும், "ஆமாம் மேம்" என்று கோரஸ் போட்டனர்.


அவனை பார்த்து விட்டு, "அவ்ளோ டெரர்ரா உங்க எம்.டி…?" என நகைப்புடன் வினா தொடுக்க,


"ஆமாம் மேம். ரொம்ப டெரர்" என்று பதில் வர,


"கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் மேனேஜ் பண்றேன்" என்று சோகமாக பதிலளித்தாள்.


"மேம் நீங்க வந்ததுல ஆபிஸே ஹாப்பியா இருக்கு. ஆனால் ஒருத்தி மட்டும் சோகமா இருக்கா" மது சிரிப்புடன் கூற,


"யார் அது என்னை பார்த்து சோகமானது" என்று வியப்புடன் ப்ரஷாந்தி கேட்டாள்.

"நான் தான் மேம் அந்த அப்பாவி" முகத்தை சோகமாக வைத்தபடி கையை உயர்த்தினாள் நீரஜா.


"ஏன் நான் உன்னை என்ன பண்ணேன்" என்று வினவியவளது முகம் வாடாத புன்னகையில் மிளிர்ந்தது.


"இத்தனை நாளா சார் சிங்கிளுன்னு நினைச்சிட்டு சைட் அடிச்சிட்டு இருந்தேன். ப்யூச்சர்ல மேரேஜ் கூட பண்ணலாம்னு ஒரு கோட்டையே கட்டி வச்சிருந்தேன். இப்படி திடுதிடுப்பினு வைஃப்னு சொல்லிட்டு வந்து என் ஸ்மால் ஹார்ட்ட ப்ரேக் பண்ணிட்டிங்களே…" என்று சோக கீதம் பாடி நெஞ்சில் கை வைக்க,


சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது ப்ரஷாந்திக்கு அவளது செயலில்.

சிரிப்புடன் ஹரியை ஒரு பார்வை பார்த்தவள்,

"இப்
போ கூட நோ இஸ்ஸூஸ் வேணும்னா நீ இவர கட்டிக்கோ" என்று கண்ணடித்தாள்.


நீராஜா, "ரியல்லி" விழி விரித்து ஹரியை பார்க்க,

"எனக்கு நோ அப்ஜக்ஷன்" என்றவனின் கண்ணோரம் சிரிப்பில் மின்னியது.

சடுதியில் அவன் புறம் திரும்பியவள் சிரிப்பும் முறைப்புமாக பார்க்க,


சொல்லாமல் கொள்ளாமல்
நெஞ்சோடு காதல் சேர
நெஞ்சோடு காதல் சேர
மூச்சு முட்டுதே…


தொடரும்…

இவள் மீரா க்ரிஷ்♥️♥️








 
Top