• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
601
Reaction score
836
Points
93
அத்தியாயம் 24:

இருவருக்கும் ஒரு நொடி சர்வமும் உறைந்துவிட்டது‌. தங்களை தவிர ஏதும் உறைக்கவில்லை.


அவளது நிலையை பார்த்து கலங்கிய அவனது விழிகளை கண்டவள் ஓடி சென்று அவனை அணைத்து,


"என்னை மன்னிச்சிடு ஹரி. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். சாரி டா. உன்கிட்ட மன்னிப்பு கேட்குற அருகதை கூட எனக்கு இல்லை. தீர்க்கவே முடியாத பாவத்தை செஞ்சிட்டேன் நான்…" என்று கதறி அழத் தொடங்கவிட்டாள்.


அவனது விழிகளும் அவளை கண்டு நீரை சொரிந்தது.


"உன் கூடவே இருந்தும் உன் மனப்போராட்டம் கஷ்டம் எனக்கு தெரியலை. உன்னோட வேதனையை நான் புரிஞ்சுக்கலை. நீ சொன்ன மாதிரி பார்ன் வித் சில்வர் ஸ்பூனா இருந்த எனக்கு உன்னோட போராட்டம் குற்றவுணர்ச்சி எதுவுமே புரியலை. ஏன் இந்த நிமிஷம் வரைக்குமே நீ சொல்லியிருக்கலைன்னா எனக்கு தெரிஞ்சிருக்காது…" என்று கேவியவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன்,


"போதும் ப்ரஷாந்தி. நீ எந்த எக்ஸ்ப்ளனேஷனும் கொடுக்க தேவையில்லை" என்று அவளது கண்ணீரை துடைத்தான்.


"இல்லை நான் பேசணும். நான் செஞ்ச பாவத்துக்கு உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்" என்று மறுத்தவள்,



"உன்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னு தான் எல்லாத்தையும் அட்ஜெஸ்ட் பண்ணி போனேன். ஆனால் அதுவே உனக்கு பிராப்ளமா வரும்னு எனக்கு தெரியாம போயிடுச்சு. ஸ்டார்டிங்லே நீ சொன்னதை நான் கேட்ருக்கணும். அடம்பிடிச்சு அவசர அவசரமா கல்யாணம் பண்ணி அதை விட அவசரமா உன்னை பிரிஞ்சு தனியாளாக்கிட்டேன்"


"..."


"நீ சொன்னியே அநாதை ஏழைன்ற பட்டத்தோட கொலைகாரன்ற பட்டத்தை சேர்த்து கொடுத்திட்டேன்னு அந்த நிமிஷம் உயிரோட செத்துட்டேன் நான். உனக்கு எல்லாமுமா இருப்பேன்னு சொல்லிட்டு கொலைகாரன்னு பட்டத்தை கொடுத்து பாவியாகிட்டேன்"

"..."

"நீ சொல்ல வர்றதை காது கொடுத்து கேட்க கூட பொறுமையில்லாம உன்னை இத்தனை வருஷமா தண்டிச்சிட்டேன். அப்போவே நான் கேட்ருந்தா இவீளோ பிரச்சினை வந்திருக்காது. நீ எவ்ளோ தூரம் கஷ்டப்பட்டிருந்தா குழந்தையை வேண்டாம்னு சொல்லியிருப்ப அதை கூட நான் புரிஞ்சுக்கலை. ஆனால் நீ நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக இத்தனை வருஷமா என் கண்முன்னாடி வராம இருந்திருக்க" என்று கண்ணீர் கடலில் தத்தளித்தவள்,


"நான் உனக்கு கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை ஹரி… உன் வாழ்க்கையை கெடுத்திட்டேன். உன்னை தனியா கஷ்டப்படவிட்டுட்டேன். நீ எவ்ளோ கஷ்டப்பட்டிருந்தா அநாதையாவே செத்து போயிடுவேன்னு பயமா இருக்குன்னு சொல்லியிருப்ப. நான் உன் வாழ்க்கையில வராமலே இருந்திருக்கலாம். நான் பாவி. கொலைகார பாவி நான் தான் நம்ம கொழந்தையை கொன்னுட்டேன்."


"என் கவனகக்குறைவால தான் குழந்தை அழிஞ்சு போச்சு. எல்லாத்துக்கும் காரணம் நான் தான். உன் மேல வேற பழிய போட்டு உன் நிம்மதிய கெடுத்திட்டேன் நான் நல்லவ இல்லை. போயிடு என்னை விட்டு போயிடு. உனக்கு நான் எந்த விதத்திலயும் பொருத்தமில்லை" என்று அவனிடமிருந்து திமிறி விலக பார்த்தாள்.


"உன்னை தவிர இந்த உலகத்தில யாராலும் எனக்கு பொருத்தமா இருக்க முடியாது…" என்று கூறி திமிறியவளை தன்னுள் இறுக்கமாக புதைத்து கொண்டான்.


"இல்லை விடு என்னை விடு இந்த கொலைகாரி வேணாம் நான் ஒரு கொலைகாரி நான் தான் குழந்தையை கொன்னுட்டேன்" என்று அவனிடமிருந்து விலகி முகத்தில் அறைந்து கொண்டு கதற தொடங்கி இருந்தாள்.


"இல்லை உன் மேல எந்த தப்பும் இல்லை எல்லாம் விதி நீயே உன்னை தண்டிச்சு என்னை கஷ்டப்படுத்தாத. அடிக்கணும்னா என்னை அடி" என்று அவளது கைகளை பிடித்து தன் முகத்தில் அடிக்க,


சடுதியில் அவனிடமிருந்து கையைப் உருவியவள்,

"என்னை மேலும் மேலும் பாவியாக்காதடா. ஏற்கனவே செஞ்ச தப்புக்கே பரிகாரம் தெரியாம தத்தளிச்சிட்டு இருக்கேன்" என்று அவனது மார்பில் அழுத்தமாக முகத்தை புதைத்து கொண்டவள்,


"என்னை மன்னிச்சு ஏத்துப்பியா ஹரி. திரும்பவும் உன் வாழ்க்கையில இடம் கொடுப்பியா ஹரி…" என்று முகமும் விழியும் அழுது சிவந்து வீங்கியிருக்க விழிகளில் தழும்பிய நீருடன் முகம் முழுவதும் நிரம்பிய தவிப்புடனும் வினவியவளை கண்டு மொத்தமாக உருகி உடைந்திருந்தான்.


"நீ இல்லாம எனக்கு எதுவுமே இல்லை டி. என் வாழ்க்கையில இடமில்லை. என் வாழ்க்கையே நீ தான் டி. நான் தான் உன்கிட்ட கேக்கணும். என்னை விட்டு போயிடாதடி" என்றவன் அவள் உச்சியில் முகத்தை பதித்து கொண்டான்.


"போக மாட்டேன் இனிமேல் நீயா போக சொன்னா கூட போக மாட்டேன்" என்றவள் அவனுடன் மேலும் ஒன்றினாள்.


புயலுக்கு அடித்த ஓய்ந்தது போல அமைதி அறையெங்கும் ஆட்சி செய்ய இணையை அடைந்துவிட்ட நிம்மதியுடன் துடித்த அவர்களது இதய துடிப்பு மூலையெங்கும் எதிரொளித்தது.


வாழ்வில் அனைத்து துன்பத்தையும் கடந்து விட்ட அயர்வுடன் விழிகள் மூடி கொள்ள சூழ்நிலையை உள்வாங்க முயற்சித்த படி நின்றிருந்தனர்.


மூடிய இமைகளில் வழியே சிறு துளி நீர் இறுதி கஷ்டத்தை சுமந்து வெளியேறியது. நிமிடங்கள் நொடிகளாக கடக்க இருவரும் வெகுநாட்களுக்கு பிறகு கிடைத்த துணையின் அருகாமை உள்ளத்தை நிறைத்தது.


ஏகாந்த நொடிகள் நிசப்தத்தை உள்வாங்கி இதயத்தில் உறவாடி பனி பூக்களாய் உவகையை அள்ளி தெளித்து நேசத்தினால் உருக்கி கொண்டிருந்தது.


மீளா முடியா நேச சுழலில் சிக்கி தவித்து கண்ணாளனின் கை பிடித்து கரை சேரும் நொடியை மெதுவாக ஆழமாக சுகித்த படி அவளும் கானல் நீராய் காரிகையின் கரங்களுக்கு ஏங்கி தவித்து கைப்பற்றிய உவகையில் அவனும்.


கலையா விரும்பா கனவாக அழிக்க விரும்பா கோலமாக
அவிழ்க்க விரும்பா முடிச்சாக
ஆர்ப்பரிக்க விரும்பா அலையாக
இருவரும் மற்றவரிடத்தில் கட்டுண்டு கிடந்த கனத்திற்கு கதவின் ஓசை முற்றுப்புள்ளி வைத்தது.


அவளை விட்டு பிரிந்தவன் அருகில் இருந்த சோபாவில் அவளை அமர வைத்துவிட்டு சென்று கதவை திறந்தான் ஹரி.


வெளியே சுமதி, "தம்பி காஃபி கொண்டு வந்திருக்கேன் எடுத்துக்கோப்பா" என்று கூற,

நன்றி கூறி அவர் கையிலிருந்த பிளேட்டை வாங்கி கொண்டான்.


"வேற எதாவது ஸ்னாக்ஸ் கொண்டு வரட்டுமா தம்பி…?"


"வேணாம் சுமதிம்மா…" என்றவன் திரும்பி செல்ல எத்தனித்த விநாடி,


"ஹரி தம்பி" என்று மீண்டும் அழைத்தார்.


ஹரி அவரது குரலுக்கு திரும்ப அவர் தயங்கிய படி அவன் முகம் பார்த்தார்.


'அவருக்கு ப்ரஷாந்தி வந்ததை இவன் அறிந்து கொண்டானா…? இருவருக்கும் மீண்டும் ஏதாவது சண்டை வந்துவிடுமோ…?' என்று நலம்விரும்பியாக சிறிது அச்சம் இருந்தது.


தயங்கி, "ப்ரஷாந்திம்மா…" என்று இழுக்க,


அவரது தவிப்பை உணர்ந்தவனுக்கு இதழ்கள் சிறிதாக மலர்ந்தது.


"எந்த பிரச்சனையும் இல்லை. சுமதிம்மா" என்று கூற,

அவனது மலர்ந்த முகத்தினை கண்டவருக்கு மனது நிறைந்து போனது.

"இங்க வந்ததில இருந்து இப்போ தான் தம்பி முகத்துல நிறைஞ்ச சிரிப்பை பாக்குறேன். அவ்ளோ சந்தோஷமாக இருக்கு தம்பி. இந்த சந்தோஷத்தோடவே சமையலை இன்னைக்கு அசத்திட்றேன்" ஆனந்தமாக கூறி சென்றார்.


அவரது கூற்றில் அவனது முகம் மேலும் விகசித்தது. இருக்காத பின்னே அவனுடைய உயிர் அவனை வந்தடைந்துவிட்டதே.

கதவடைத்துவிட்டு உள்ளே செல்ல சிவந்த முகத்துடன் சோஃபாவில் சற்று சாய்ந்தவாறு அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.


பயண களைப்பு அழுத சோர்வு என்று மிகவும் நலிந்து தெரிந்தாள் அவள்.


அவள் முன்னே நின்றவன், "அழுதழுது முகம் வீங்கி சிவப்பாகிடுச்சு. போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா" முகத்தை துடைத்து விட்டபடி கூற,


அவனது கரங்களை அப்படியே கன்னத்தோடு சேர்த்து பிடித்து கொண்டவள் விழிகள் கலங்கியது.


மீண்டும் கலங்கிய அவளது விழிகளை கண்டவன் பதறி, "என்னடா…" என்று கேட்க,


'அதில் உருகிய நெஞ்சம் விம்மியது. ஒற்றை வார்த்தையில்
எத்தனை நேசம் எவ்வளவு பரிவு. இப்படி அன்பு காண்பிப்பவனை எவ்வளவு தூரம் துன்பப் படுத்தியிருக்கிறேன்' என்று மழுக்கென்று விழி நீர் வெளியேறியது.
அவனது இடையை கரங்களால் வளைத்தவள் முகத்தை வயிற்றில் அழுத்தி கொண்டாள்.


மனது ஆற மறுத்தது. எத்தனை பெரிய வார்த்தை.


'அநாதை ஆசிரமத்தில் வாழ்ந்ததினால் உறவுகள் அருமை தெரியவில்லை' என்று விட்டேனே.


உண்மையில் யாருக்கு எதன் அருமை தெரியவில்லை என்று மனசாட்சி எள்ளி நகையாடியது.


விழி நீர் அவனது சட்டையை நனைக்க,

"என்னடா ஏன் திரும்பவும் அழற. அதான் எல்லாம் சரியாகிடுச்சே. முடிஞ்சது முடிஞ்சு போச்சு. அதை நினைக்காத" என்று அவளது தலையை கோதினான்.


"நான் உன்னை உன்னை…" என்றவள் அதற்கு மேல் கூற முடியாது திணறினாள். சொல்லிய வார்த்தையின் வீரியம் அத்தகையது.


"அதான் போதும் விடுன்னு சொல்றேன்ல அப்புறமும் ஏன் அதைய நினைச்ச பீல் பண்ற…" என்று அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்ப,


முகம் காட்ட மறுத்தவள், "நான் உன்னை அன்னைக்கு அப்படி பேசியிருக்க கூடாது ஹரி. மன்னிப்பு கேட்டா சரியாகுற வார்த்தையில்லை அது" என்று விம்மியவளுக்கு அவன் அத்தனை தூரம் வேதனை சுமந்து கூறிய விநாடி தோன்றி உள்ளத்தினை உலுக்கியது.


அழுத்தமாக தன்னை நோக்கி திருப்பியவன்,"என்ன வார்த்தை எப்போ கேட்ட" என்றவனுக்கு அவள் அப்படி எதை நினைத்து மருகுகிறாள் என்று தெரியவில்லை.


"ஹாஸ்பிட்டல்ல நீ அநாதை ஆசிரமத்துல…" என்றவளுக்கு பேச நா எழவில்லை கண்ணீர் முட்டி கொண்டு நின்றது.


அவள் கூறி முடிக்கவில்லை இருந்தும் அவனுக்கு அவள் கூற‌ வருவது புரிந்தது.


அவள் அந்த வாக்கியத்தை சொல்லிய நொடி அவனும் உயிரோடு மரித்திருந்தான்.


இன்றுவரை அவனை கொல்லாமல் கொன்று தின்று கொண்டிருந்தது.

ஆறாத வடுவாய் வதைத்த ஒன்று. ஆனால் இப்போது அந்த கேள்வி எல்லாம் ஒன்றுமே இல்லை அவனுக்கு.


இன்னும் எத்தனை கேள்வி வேண்டுமானால் கேட்டிருக்கட்டும். அவள் தன்னுடன் வந்து நின்ற பொழுது எதுவுமே பெரிதாக தெரியவில்லை கோமனுக்கு.


"ப்ச் அதை தான் அப்போவே மறந்திட சொன்னேன்ல. கோபத்துல யாரா இருந்தாலும் நாலு வார்த்தையை விட தான் செய்வாங்க. அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்க முடியுமா. போ போய் முகத்தை கழுவி ப்ரெஷ் ஆகிட்டு வா" என்று கைபிடித்து எழுப்பி குளியலறைக்குள் விட்டு வந்தான்.


பழையதையே நினைத்து தானும் வருந்தி அவனையும் வருத்த வேண்டாம் என்று நினைத்தவள் நடந்த அனைத்தையும் கழுவி தொலைத்திடும் நோக்கில் முகத்தில் நீரை அடித்து கழுவி வெளியே வர, ஹரி பூத்துவாலையை அவளிடம் நீட்டினான்.


அவள் முகம் துடைக்கும் நேரத்தில் ப்ரெஷ் ஆகி வந்தவன் அவளுக்கு காஃபி கப்பை கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்து கொண்டான்.


எதிரெதிரே அமர்ந்து காஃபியை மிடறு மிடறாக அருந்தியவர்களுக்கு இடையே ஆழ்ந்த அமைதி.


எதுவும் பேச இருவருக்கும் விருப்பமில்லை. ஹரி காஃபி அருந்தியவுடன் கப்பை கீழே வைக்க செல்ல,


"வருடங்கள் சென்றாலும் தோற்றம் மாறினாலும் இவன் இன்னும் மாறவில்லை" என்று நினைத்து இதழ்கள் நெளிந்தது.


இத்தனை நேரம் தெரியாத அயர்வு இப்போது உறைக்க விழிகளை மூடியவள் சோஃபாவில் சாய்ந்துவிட்டாள்.


கீழே சென்று வந்தவன் அவளை பார்த்து, "ட்ராவலிங் டயர்ட் இருக்கும். நீ கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடு" என்க,


விழி திறந்தவள் வேண்டாம் என்று தலையசைத்து விட்டு மீண்டும் விழி மூடி கொண்டாள்.

ஹரி அவளையே பார்த்த படி அருகில் அமர சற்று நெருங்கியவள் அவன் தோளில் தலையை சாய்த்து கொண்டாள்.

அவள் சாய ஏதுவாக சாய்ந்து அமர்ந்தவன் கைகளை கோர்த்து கொண்டு விழிகளை மூடி கொண்டான்.


இருள் கவிழ்ந்த நேரம் சுமதி, "தம்பி நேரமாச்சு சாப்பிட வர்றிங்களா ரெண்டு பேரும்" என்றவாறு வந்து நிற்கவும் தான் ஹரிக்கு விழிப்பு வந்தது.


அமர்ந்த நிலையிலேயே அவளுடன் தானும் உறங்கியிருப்பதை உணர்ந்தவன் அவளது தலையை பின்னோக்கி சாய்த்து வைத்தவன் எழுந்து வெளியே வந்தான்.

"என்ன தம்பி தூங்கிட்டு இருந்திங்களா எழுப்பி விட்டுட்டேனா…?" என்று வருந்தியவர்,

"சாப்பிட நேரமாகிடுச்சு அதான் கூப்பிட வந்தேன்" என்று சங்கடப்பட்டார்.

"இல்லைம்மா சும்மா தான் கண்ணை மூடி படுத்திருந்தேன். நீங்க சாப்பாடை எடுத்து வைங்க நாங்க வர்றோம்" என்றவன் அவனை எழுப்ப செல்ல,


தலையை ஒருபுறம் சாய்த்து குழந்தை போல அசதியில் உறங்குபவளை எழுப்ப மனமில்லை.


விழிகளும் அவள் உறங்கும் அழகை ரசித்து கொண்டிருந்தது.

'சாப்பிட வேண்டுமே' என்று நினைத்தவன்,


"ப்ரஷாந்தி ப்ரஷாந்தி" என்று கன்னத்தில் தட்ட,

"ஹான்" என்று கண் திறந்தவள் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் விழித்து பின்னர் நிலை உணர்ந்தாள்.

அவளது பாவனைகளை மிகவும் மெலிதான புன்னகையுடன் பார்த்திருந்தவன், "டைம் ஆச்சு சாப்பிட போகலாமா…? சாப்பிட்டு வந்து தூங்கிக்க" என்க,

"சரி" என்பதாய் தலையசைத்தவள் எழுந்து குளியலறை சென்று விட்டு வர இருவரும் ஒன்றாக கீழே சென்றனர்.


உணவு மேஜையில் சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டு இவர்களுக்காக காத்திருந்த சுமதி இருவரும் சேர்ந்து வருவதை கண் குளிர கண்டு மகிழ்ந்து,


"நீங்க ரெண்டு பேரும் ஜோடியா நடந்து வர்றதை பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தலை எனக்கு. மனசு நிறைஞ்சு போச்சு. இன்னைக்கு மாதிரி நீங்க எப்பவும் சேர்ந்து சந்தோஷமா இருக்கணும்" என்று வாழ்த்த,

இருவருக்கும் புன்னகை ஜனித்தது.

"கண்டிப்பா வாழ்வோம் சுமதிம்மா. நீங்க தான் இனிமேல் எங்களுக்கு நல்லா சமைச்சு போட்டு பாத்துக்கணும்" என்றபடி ஹரி அமர, அவள் அருகில் அமர்ந்தாள்.


"அதை தவிர வேற வேலை என்ன இருக்கு எனக்கு. விதவிதமா சமைச்சு போட்டு அசத்துறேன்" என்றவர் புன்னகையுடன் பேசியடி பரிமாறினார்.


ப்ரஷாந்தி கொஞ்சமாக உண்பதை கண்டவர், "இப்படி கொஞ்சமா சாப்பிட்டா எப்படி உடம்புல ஒட்டும். இன்னும் எலும்பும் தோளுமா தான் ஆவிங்க. நல்லா சாப்பிடும்மா" என்று அள்ளி அள்ளி வைக்க அவள் விழி பிதுங்கி போனாள்.


புன்சிரிப்புடன் இதை பார்த்திருந்தவன், "சுமதிம்மா போதும். ஒரே நாள்ல அவளை பயம்படுத்திறாதிங்க. அவ கொஞ்சமா தான் சாப்பிடுவா விடுங்க" என்றதும் தான் விட்டார்.


அவர்கள் சாப்பிடவும்,

"பசுமஞ்சளும் பனைவெல்லமும் தட்டி போட்டு பால் காய்ச்சிருக்கேன். உடம்புக்கு நல்லது" என்று குடிக்க வைத்து தான் விட்டார்.


இருவரும் சாப்பிட்டு விட்டு அறைக்கு உறங்க செல்ல ஹரி படுக்கை விரிப்பை சரி செய்துவிட்டு, "நீ படு. நான் ஒரு கால் பேசிட்டு வர்றேன்" என்று பால்கனிக்கு சென்றான்.


படுக்கை விழுந்தவள் விழிகளை மூட உறக்கம் வரவில்லை. அவன் பேசிவிட்டு வந்து விளக்கை அணைத்து விட்டு படுக்கையில் விழுந்தவன் இடையில் கைகொடுத்து அவளை அணைத்து கொள்ள தானும் கரங்கொண்டு அவனை இறுக அணைத்தவள் விழிகளை மூடி கொண்டாள்.



இணையின் அருகாமை தந்த கதகதப்பில் இருவரையும் சுகமாக உறக்கம் தழுவ ஆழ்ந்த சயனத்திற்கு சென்றனர். உறங்கா இரவுகள் நினைவுகளில் நழுவி நின்றது…


எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே

கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே…
 
Top