அத்தியாயம் 21
அவன் கூறிய அநாதை என்ற வார்த்தையே அவனது மனக்காயத்தை அவளுக்கு உணர்த்தியிருந்தது.
அதுவும் அவனது வேதனை மிகுந்த முகமும் அந்த குரலும் அவளை உலுக்கியிருந்தது.
உயிரோடு மரிக்க செய்திருந்தது. எல்லாமுமாக இருப்பேன் என்று கூறிவிட்டு இடையில் விட்டுவிட்டேனே.
மீண்டும் அவனை தனிமை சிறையில் தள்ளிவிட்டேனே என்று உள்ளம் ஊமையாய் கதறியது.
தனிமை வரம் தானாக எடுத்து கொள்ளும் போது. அதுவே மற்றவர்களால் பரிசளிக்க படும் போது சாபாமாக மாறிவிடும் என்று எங்கோ படித்த வரிகள் நினைவு வந்தது.
தான் அவனுக்கு சாபத்தை வழங்கிவிட்டோம் என்று எண்ணி கண்கள் கலங்கியது.
காலையில் விரைவாகவே எழுந்தவள் முதல் ஆளாக குளித்து தயாராகியிருந்தாள் அவனை பார்க்கும் ஆவலில்.
தலையில் பேன்ட்டை போட்டுவிட்டு நேரத்தை பார்க்க எட்டு மணி தான் ஆகியிருந்தது.
பத்து மணிக்கு தான் அடுத்த நாள் திருமண சடங்குகள் எல்லாம் தொடங்குகிறது என்று வினுஷா கூறியிருந்தாள்.
ஒன்பது மணிக்கு உணவுன்னவும் அழைத்திருந்தாள். இன்னும் ஒரு மணி நேரம் உள்ளதே என்று தவிப்பு அவளிடத்தில்.
பரிதவிப்புடன் நேரத்தை கடத்தியவள் மற்ற தோழிகளின் அறைக்கு செல்ல அங்கே யாரும் இன்னும் கிளம்பவில்லை.
மேனகா, "ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுடி நான் கிளம்பிடுவேன்" என்று கூற, வேறு வழியின்றி அமர்ந்தாள்.
அப்போது தான் ரேஷ்மாவின் நினைவு வந்தது அவளிடம் பேசியதும் நினைவு வந்தது.
அவள் தான் ஹரியிடம் விவாகரத்து விடயத்தை கூறியிருப்பாள் என்று நேற்றே யூகித்திருந்தாள்.
இருந்தும் நேரடியாக அவளிடம் சென்று கேட்க மனதில்லை. அதை கேட்க சென்று வேறு எதாவது காயப்படுத்தி விடுவாளோ என்று அச்சமிருந்தது.
அவள் கூறுவதும் அனைத்தும் உண்மை தான். ஆனால் குழந்தை விடயத்தில் அவளால் நிதர்சனத்தை ஏற்று கொள்ள முடியவில்லை.
அவனது உடைந்து போன பிம்பத்தை மீண்டும் சேர்க்கவும் முடியவில்லை.
ஏதோ ஒன்று உள்ளுக்குள் உறுத்தி கொண்டே இருந்தது.
பத்து நிமிடம் என்றவள் இருபது நிமிடங்கள் ஆகியும் தயாராகி முடியவில்லை.
ப்ரஷாந்தியின் பொறுமை பறந்து போக, "இங்க எனக்கு போரிங்கா இருக்கு. நான் ஹால்ல போய் பங்க்ஷன் அரேன்ஜ்மென்ட்ஸ பார்த்திட்டு இருக்கேன்" என்று விட்டு தனியாகவே கிளம்பிவிட்டாள்.
அந்த தளத்தில் யாரும் இருக்கவில்லை. அமைதியாக இருந்தது. வேக எட்டுகளில் மின்தூக்கியை அடைந்தவள் போக வேண்டிய தளத்தை அழுத்திவிட்டு நிற்க, கதவு மூடும் நொடியில் தடதடவென்ற காலடி சத்தம் அவளது செவிகளில் நுழைந்தது.
பாதி மூடிய கதவில் கை வைத்து, "ஸ்டாப்" என்ற ஒலியுடன் வந்து நின்றது சாட்சாத் அவளது சிந்தையின் நாயகனே.
அவனை அங்கு வந்து நிற்பான் என்று நினைக்காதவள் ஒரு நொடி உள்ளுக்குள் அதிர்ந்து ஒரு ஓரத்தில் தள்ளி நின்று கொண்டாள்.
அவன் உள்ளே வந்ததும் மின்தூக்கி கதவை மூடி இயங்க தொடங்கியது.
அவனை பார்ப்பாதற்க்காக விரைந்தோடி வந்தவளுக்கு யாருமற்ற மின்தூக்கியில் அவனது அருகாமை இதயத்தை தடதடக்க செய்தது.
உள்ளே ஏதோ ஒரு சொல்ல முடியாது உணர்வு அவளை அலைக்கழிக்க வியர்க்க துவங்கியது.
அவனது கை காயத்தை பார்க்க ஒரு ஓரத்தில் மனம் உந்தினாலும் அதை செய்ய விழையாது மேலும் லிஃப்டை நெருங்கி நின்று கொண்டாள்.
இன்னும் சில நொடிகளில் அவனது தளம் வந்துவிடும் என்று நினைத்திருக்க சடுதியில் அவளை நெருங்கியவன் இறுக்கமாக அணைத்து அவள் தோள்பட்டையில் இதழ் பதித்து, "மிஸ் யூ" என்ற வார்த்தைகளை உதிர்த்து அதே வேகத்தில் வெளியேறியும் இருந்தான்.
இவள் தான் அவனது செயலில் சர்வமும் அமைந்து நின்றுவிட்டாள். உள்ளுக்குள் மொத்தமாக உறைந்துவிட்டது.
அவனது இறுக்கமான அணைப்பும் வெப்ப மூச்சுடன் தோளில் பதிந்த அவனது இதழும் 'மிஸ் யூ' என உச்சரித்த குரலும் அவளது சர்வ அவயங்களின் இயக்கத்தையும் நிறுத்திரிருந்தது.
அதன் பின்னர் நடந்த எதுவும் அவளுக்கு உறைக்கவில்லை. அவள் உணரவும் இல்லை.
எப்படி வெளியே வந்தாள் எவ்வாறு விழா நடக்கும் இடத்திற்கு வந்தாள் என கேட்டாள் எந்த கேள்விக்கும் அவளிடம் பதிலில்லை.
நேற்றிலிருந்து அவன் கூறிய வார்த்தைகளை நினைத்து மருகியவள் இன்றைய அவன் செயலால் அனைத்தையும் மறந்து உறைந்திருந்தாள்.
காரா கர்டோலி மற்றும் ஹால்டி திருவிழா சடங்கு இன்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஹால்டி திருவிழா என்பது மணமக்கள் இருவரது வெளியில் தெரியும் உடல் பாகத்தில் மஞ்சள் சந்தனம் பூசப்படும்.
காரா கார்டோலி என்பது ஹால்டி சடங்கிற்கு பிறகு மணமகள் கோவிலுக்கு சென்று குளத்தில் நீராடி கருவறையில் உள்ள கடவுளை மணமுருகி வேண்டி கொள்ள வேண்டும்.
ஹால்டி சடங்கிற்கு தேவையான பொருட்களை எடுத்து மணபகளை கூடத்தின் நடுவில் அமர வைத்திருந்தனர்.
அரங்கே களைகட்டியிருந்தது. ஆளாளுக்கு கையில் மஞ்சள் சந்தனத்துடன் மணமக்களின் மேல் பூசுவதற்கு ஆர்வமாக இருந்தனர்.
ஒரு புறம் ஒலிபெருக்கியில் பாடல் சத்தமாக ஓடவிட்டிருக்க இடமே ஜெகஜோதியாக இருந்தது.
அரங்கின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த ப்ரஷாந்திக்கு எதுவும் புத்தியில் ஏறவில்லை.
அவள் ஒரு வித உறைந்த நிலையில் இருந்தாள். வெகுநாட்களுக்கு பிறகு கிடைத்த அவனது அருகாமை உணர்வுகளை தூண்டிவிட்டிருந்தது.
மீண்டும் வேண்டும் அவனது அருகாமை என்று உள்ளுக்குள் ஏதோ ஒன்று அரற்றி கொண்டு இருந்தது.
எல்லொரும் வந்துவிட சடங்கு தொடங்கியது.
"நான் தான் பர்ஸ்ட், மீ பர்ஸ்ட்" என்று மஞ்சள் வைப்பதற்கு இளசுகளிடம் சிறு சண்டை வேறு தொடங்கியிருந்தது.
ஆளாளுக்கு முந்தி கொண்டு மணமக்களை சந்தனம் மற்றும் மஞ்சளால் அபிஷேகம் செய்து ஒரு வழியாக்கியிருந்தனர்.
மீதமிருந்த மஞ்சளை மற்றவர்களிடம் பூசி விளையாட தொடங்க இளைஞர்கள் அங்குமிங்கும் ஓட தொடங்கினர்.
மஞ்சளை எடுத்து கொண்டு ஓடி வந்த மேனகா ப்ரஷாந்தி தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து, "ஹே ப்ரஷி ஆளுக்கு முன்னாடி கிளம்புன வந்து ஒரு கலக்கு கலக்குவேன்னு பார்த்தா இப்படி ஓரத்துல புத்தர் மாதிரி உட்கார்ந்திருக்க" என்று உலுக்கினாள்.
அதில் சுயம் பெற்றவள், "ஹான்" என்று விழித்தாள்.
"என்னடி தூக்கத்துல இருந்து எழுந்த மாதிரி முழிக்கிற…?" என்றவளுக்கு தெரியவில்லை அவள் உண்மையிலே ஒரு உறைந்த நிலையில் தான் இருந்தாள் என்று.
சுற்று புறத்தை அப்போது தான் உணர்ந்தவளுக்கு நடந்து கொண்டிருந்த சடங்கும் புரிந்தது.
"ஒன்னுமில்ல டி. ஏதோ திங்கிங்"
"இங்க வந்து என்ன திங்கிங் உனக்கு நீயும் வா" என்று அவளது முகத்தில் சந்தனத்தை அப்பிவிட்டு கூட்டத்திலும் இழுத்து விட்டிருந்தாள்.
"ஹே இன்னும் ப்ரஷாந்தி மட்டும் நீட்டா இருக்கா" என்று நண்பர்களில் ஒருவர் கத்த, எல்லோரும் கையில் மஞ்சளுடன் அவளருகில் கூடிவிட்டனர்.
"எப்படி அவ மட்டும் நீட்டா இருக்கலாம் தப்பாச்சே…" என்று கிரண் கூற,
"எடு டா அந்த மஞ்சள…" என்றான் சஞ்சய்.
அதில் அதிர்ந்தவள் தன்னுடைய நிலையில் இருந்து வெளிவந்து, "நோ வேணாம்" அலற அதையெல்லாம் காதில் வாங்கதவர்கள் அவளது உடையை மஞ்சள் நிறத்தில் மாற்றியிருந்தனர்.
சஞ்சய், "பத்தலை. இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு வாடா மச்சான்" என்று கூற,
ப்ரஷாந்தி, "ஆல்ரெடி ட்ரெஸ் புல்லா யெல்லோவா மாறிடுச்சு போதும் ப்ளீஸ்…" என்று கெஞ்ச,
காதில் வாங்கி கொள்ளவில்லை அவர்கள்.
ப்ரஷாந்தி அவர்களை விலக்கிவிட்டு தப்பித்து ஓடிவர பின்னாடியே துரத்தி வந்தனர்.
"விட்ருங்கடா…" என்று கூவியபடி ஓடியவள் சற்று நேரத்திற்கு முன்பு அவளை உறைய செய்திருந்த விடயத்தை மறந்திருந்தாள்.
அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது என்று எண்ணியவள் படிகளின் அருகே சென்று அதன் கீழுள்ள இடைவெளியில் நின்று கொள்ள மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
சத்தமின்றி அங்கேயே நின்று கொள்ள வந்தவர்கள் அவளை தேடி அரங்கத்திற்குள்ளேயே சென்றிருந்தனர்.
அவர்கள் சென்றுவிட்டதை உறுதிபடுத்தியவள் அமைதியாக வெளியே வந்து தனது உடையை பார்த்தாள்.
முழுவதுமாக பச்சை நிறம் மஞ்சளாக மாறியிருந்தது.
தானிருந்த மனநிலையை சில நிமிடங்களில் தலைகீழாக மாற்றிவிட்ட நண்பர்களை எண்ணி இதழ்களில் குறுநகை பூத்தது.
உடையை கழுவுவதற்க்காக யாருமறியாமல் அரங்கத்தின் வலதுபுறமுள்ள வாஷ் பேஸினுக்கு சென்றவள் நீரால் சுத்தம் செய்தாள்.
ஓரளவுக்கு உடையை சுத்தம் செய்துவிட்டு நிமிர்ந்தவள் கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தை பார்த்து அதிர்ந்துவிட்டாள்.
அவளை பார்த்த படி அவளது பின்புறம் ஹரி நின்றிருந்தான்.
சடுதியில் வியர்வை ஆறாக பெருகியது. மின்தூக்கியில் அவன் அணைத்தது நினைவு வந்தது மனம் உறைந்தது.
சட்டென்று திரும்பியவள் அங்கிருந்து நகர பார்க்க அவளுக்கு வெகு அருகில் வந்திருந்தான்.
அப்போதை போல இப்போதும் எதாவது செய்துவிடுவானோ என்று அஞ்சியவள் ஓரடி பின்னோக்கி எடுத்து வைக்க பின்னால் வாஸ் பேசின் இடித்தது.
"ஹரி ப்ளீஸ் போ… போய்டு" என்றவளுக்கு வார்த்தை தந்தியடித்தது.
மிக அருகில் நெருங்கியவன் அவளை பார்த்தவாறே கையில் இருந்த மஞ்சளை அவளது இரு கன்னங்களிலும் பூசிவிட்டான்.
இதை எதிர்பாராவள் விழிக்க, அவளது முகத்தை பார்த்தபடியே மேலும் நெருங்கி குனிய இவளது இதயம் எகிறி குதித்தது.
செவிக்கருகில் வந்தவன் இதழ்கள் மடலில் உரசும் படி, "மிஸ் யூ ப்ரஷாந்தி…" என்று அழுத்தமாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தான்.
இவள் மீண்டும் ஒரு முறை அவனது 'மிஸ் யூ' வில் உறைந்து நின்றாள்.
போன முறை போலவே இம்முறையும் உணர்வுகள் பேயாட்டம் போட்டது.
சில நொடிகள் உணர்ந்த அந்த கதகதப்பும் அவளை ஆழ்ந்து பார்க்கும் விழிகளும் அவளை உறைய வைக்கும் அந்த குரலும் வேண்டும் என்று உள்ளம் ஊமையாக கதறியது.
அவனது இரண்டு நொடி அருகாமையில் தன்னை மீறிவிட்ட உணர்வுகளையும் தன் மனதினையும் கண்டு தன்னை தானே வெறுத்து போனாள்.
இவ்வளவு தானா உன் மனோதிடம். இத்தனை பலவீனமானவளா நான் என தனக்கு தானே கேள்வி எழுந்தது.
தன் மீதிருந்த கோபம் அவன் மேல் திரும்பியது. தன்னுடைய உணர்வுகளில் விளையாடுகிறான் என்று சினமடைந்தவளுக்கு, 'ஏன்டா இப்படி செய்கிறாய்' என்று உலுக்கும் வேகம்.
'என் உணர்வுகளுடன் ஏன் விளையாடுகிறாய்…?' என கத்தி கேட்க வேண்டும் என்று தோன்றியது.
முகத்தில் இருந்த மஞ்சளை நீரால் அடித்து கழுவியவள் வேக எட்டுகளில் வெளியேறி அவனை தேடினாள்.
அங்கிருந்த கூட்டத்தில் அவனை தேட முடியவில்லை.
தானே சென்று ஒவ்வொரு இடமாக தேடினாள்.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
ஓடியாடி விளையாடிய கூட்டம் சிறிது இளைப்பாறி கொண்டு இருக்க இவளை தேடவில்லை.
விழிகள் அங்குமிங்கும் அலைபாய்ந்த படி இருக்க தனக்கு பின்னே அரவம் கேட்டு திரும்ப, ரேஷ்மா நின்றிருந்தாள்.
இவள் தேடலை பார்த்து அங்கு வந்தவள், "யார தேடுறடி…?" என வினவ,
ப்ரஷாந்தி, "யாரையும் தேடலை. சும்மா தான் வேடிக்கை பார்த்திட்டு இருந்தேன்" என்று சடுதியில் பதிலளித்தாள்.
"நீ தேடறதை பார்த்திட்டு தான் வந்திருக்கேன். நீ ஹரியை தான் தேடுறேன்னு எனக்கு தெரியும். ஆமா அவனை தான் தேடுறேன்னு சொன்னா என்ன குறைஞ்சா போய்ட போற" என்று முகத்தில் அடித்தாற் போல கேட்க,
இவள் தான் பதிலற்று போனாள்.
"நீ கேட்க மாட்ட. நீ ஒரு ஈகோ புடிச்சவ. இந்த ஈகோ புடிச்சவள பார்க்க கூடாதுன்னு தான் அவன் கிளம்பி போறான்…" என்றவளின் வார்த்தையில் ப்ரஷாந்தி அதிர்ந்து பார்த்தாள்.
"என்ன ஷாக் ஆகுற. இனிமேல் உன் முன்னாடி வரவே மாட்டான். உனக்கு இப்ப சந்தோஷமா இருககா…?" என வினவ,
அந்த வார்த்தையில் அவளது இதயம் தடதடக்க தொடங்கியது.
அவனை பார்க்கவே முடியாது என்ற நினைப்பில் உள்ளம் பதறியது. விழிகள் நொடியில் கலங்கிவிட்டது.
அவனை பார்க்காத போது அமைதியாக இருந்த மனம் அவனை பார்த்த ஆர்பரிக்க தொடங்கியிருந்தது.
அவனது 'மிஸ் யூ'வின் அர்த்தம் இப்போது தான் புத்திக்கு உறைத்தது.
அந்த குரலின் பேதத்தை உள்ளம் உணர்ந்தது.
"இன்னும் ஏன் இங்க நிக்கிற போ போய் நீ மட்டும் என்ஜாய் பண்ணு. யார் எப்படி போனா உனக்கென்ன" என்று அவளது தோளை பிடித்து தள்ளி விட,
மரத்து போனவளாய் நின்றிருந்தாள்.
"சந்தோஷத்துல ப்ரீஸ் ஆகிட்டியா. எல்லாரும் கார்டோலிக்கு அம்மன் கோவிலுக்கு போறாங்க. நீயும் போ. போய் உனக்கு நிம்மதியை கொடுத்ததுக்கு அம்மனுக்கு நன்றி சொல்லு" என்றவள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
அவளது நிம்மதியை மொத்தமாக பறித்து சென்றுவிட்டாள்.
அத்தனை கோபத்தையும் ஒற்றை வார்த்தை அவன் செல்ல போகிறான் என்ற ஒற்றை வார்த்தை தகர்த்துவிட்டதா.
வந்த நாளிலிருந்து அவன் வேண்டாம்…பார்க்க வேண்டாம்… விவாகரத்து கூறிவிடுகிறேன் என்று கூறி கொண்டு இருந்த மனது இப்போது அவனது பிரிவை எண்ணி கலங்கியதை கண்டு சிந்தையிழந்து நின்றாள்.
தனக்கு என்ன வேண்டும் என்று தெளிவாக புரியாத சூழ்நிலை. தன்னை இத்தகைய இக்கட்டில் ஆழ்த்தியவனின் மீதே மீண்டும் தேவையில்லாமல் கோபம் எழுந்தது.
அவன் எங்கு சென்றால் உனக்கென்ன என்று அதட்டிய போதும் மனது அமைதியடையவில்லை.
இப்போதே இந்த கணமே அவனை பார்க்க வேண்டும் என்று கூவியது மனம்.
இறுதியில் அவளுக்கு புரிந்தது. தன்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் அவன் தான் தீர்வு. அவனால் தான் பதில் கூற முடியும் என்று தோன்றியது.
அரங்கில் இருந்த பாதி கூட்டம் கோவிலுக்கு செல்வதற்க்காக வெளியேறியிருந்தது.
கூட்டத்தில் கலக்காமல் வெளியேறியவள் மின்தூக்கியை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.
பொத்தானை அழுத்திவிட்டு காத்திருந்த நொடிகள் யுகங்களாக கழிந்தது.
மின் தூக்கி தளத்தில் நிற்க உள்ளே ஏறியவள் ஐந்து நிமிடங்களில் அவர்கள் அறை இருக்கும் தளத்தை அடைந்தவள் வெளியேறி அவனது அறையை நோக்கி ஓடினாள்.
அந்த தளத்திலேயே இறுதி அறை அவனுடையது தான். கதவு திறந்து தான் இருந்தது.
என்ன ஏதென்று சிந்திக்காமல் அவனுடைய அறைக்குள் நுழைய அங்கே தனது சூட்கேஸ் சகிதம் கிளம்புவதற்க்காக நின்றிருந்தான்.
அதனை பார்த்ததும் அவளுக்கு கண்மண் தெரியாத கோபம் ஏறியது.
"ஏன்டா ஏன் இப்படி என்னை கொல்லாம கொல்ற. நான் என்ன பண்ணேன் அப்படி. இப்போ எதுக்குடா திரும்பி வந்த. நிம்மதியா போயிட்டிருந்த என் லைஃப்ல எதுக்குடா திரும்பி வந்த. ஏன் இப்படி உணர்வுகளோட விளையாடுற…" என்று ஆவேசமாக அவனை உலுக்கியவளுக்கு விழிகள் நிறைந்து போனது.
இவளது வரவை எதிர்பாராது திகைத்து சூட்கேஸை தவற விட்டிருந்தவன் அவளது கலங்கிய விழிகளினால் தாக்கப்பட்டு மார்போடு அணைத்து கொண்டான்.
"ஏன்டா திரும்பி வந்த…" என்று அரற்றிய படி அவனது மார்பில் கைகளால் குத்தியவளின் விழிகளில் இருந்து கண்ணீர் உகுந்த படியே இருந்தது.
ஒரு கட்டத்தில் ஓய்ந்து போய்
மார்பில் முகத்தை புதைத்து கண்ணீரை வெளியேற்றினாள்.
திடீரென வெறி வந்தவள் போல, "போ நீ எனக்கு வேணாம் போ வேணாம்…" என்றபடி அவனை விலக்க பார்க்க,
கலங்கிய விழிகளுடன் அவளை நெஞ்சோடு இறுக்கி பிடித்து கொண்டான்.
"ஏன் என் குழந்தையை வேணாம்னு சொன்ன சொல்லுடா சொல்லு. பதில் சொல்லு…" என்று அவனிடமிருந்து கத்தியபடி இருந்தவள் அவன் கூறிய,
"அநாதையாவே செத்து போய்டுவேனோன்னு பயமா இருக்கு டி" என்றவனின் குரலில் பேச்சற்று போனாள்…
தொடரும்…
இவள் மீரா க்ரிஷ்
…