• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
597
Reaction score
836
Points
93
அத்தியாயம் 20

அவனது வரவை எதிர்ப்பாராதவள் ஒரு நொடி அதிர்ந்தாலும் பின்னர் சமாளித்து முகத்தை இயல்பாக வைத்து கொண்டாள்.


இதயம் தாறுமாறாக மத்தளம் கொட்டியது. நேற்றே அவன் கேள்வி கணைகளினால் துளைக்கப்பட்டவளுக்கு இப்போது சிறிது அச்சமாக தான் இருந்தது.


'இப்போது என்ன கேட்டு வைப்பானோ என்று'


நடந்து வெளியே சென்று விடலாம் என்று பார்த்தாலும் முடியவில்லை. கதவின் மேல் சாய்ந்து ஒய்யாரமாக நின்றிருந்தான்.


முகம் நேற்றை விட இன்னும் இறுக்கமாக இருந்தது போல தோன்றியது.


நேற்றை போல இன்றும் அதே துளைத்தெடுக்கும் பார்வை தான். இவளுக்குள் பதட்ட திவலைகள் விரவ தொடங்கியது.


"ஏன் ப்ரஷாந்தி என்னை பார்த்து பயப்பட்டுற…?" என்று சாய்ந்தபடியே வினா எழுப்பினான்.

"நா… நான் எதுக்கு உன்..‌. உங்களை பார்த்து பயப்பட போறேன். எனக்கென்ன பயம்" என்று பதட்டதுடனே பதிலளித்தாள்.

"ஹ்ம்ம் நீ என்னை பார்த்து பயந்து இங்க வரலை ரைட்" என்றவன்,


"அப்புறம் மிஸஸ் ப்ரஷாந்தி ஹரிகிருஷ்ணா மிஸ் ப்ரஷாந்தி ஆக முடிவு பண்ணிட்டிங்க போல" என்று அவளை உறுத்து விழித்தான்.


ப்ரஷாந்திக்கு ஒரு கணம் அதிர்ச்சி தான். அதற்குள் எப்படி இவனுக்கு விடயம் தெரிந்தது என்று.


அவன் அவளது முகத்தை அவதானித்த படி தான் இருந்தான்.


ப்ரஷாந்திக்கு பேச நா எழவில்லை. யோசிக்கும் போது சரியாக இருந்த ஒன்றை வாயை திறந்து கூற கூட இயலவில்லை.


"எப்படி எனக்கு டிவோர்ஸ் கொடுத்திட்டு நான் வேற நல்ல லைஃப் அமைச்சிக்கிட்டு வாழ்றதை பார்த்து சந்தோஷப்பட போறியா…?" என்று கேள்வியை தொடுக்க,


அதை கேட்கவே அத்துனை கடினமாக இருந்தது அவளுக்கு.



அவன் கூறுவது போல தன்னால் பார்க்க முடியுமா என்று எண்ணும் போதே சடுதியில் கண் கலங்கிவிட்டது.

முகத்தை அவனுக்கு காண்பிக்காமல் வலப்புறம் திரும்பி கொண்டாள்.


"பதில் சொல்லுங்க ப்ரஷாந்தி உங்ககிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்" என மீண்டும் அழுத்தமாக அவள் முன்பு நின்று கேள்வி எழுப்பினான்.


பதில் கூற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்து முயன்று கண்ணீரை உள்ளிழுத்தவள் தன்னை திடப்படுத்தி கொண்டு,

"ஆமா சொன்னேன்" என்று பதிலளித்தாள்.


அவளது பதிலில் அவன் முகம் மேலும் இறுக்கத்தை பூசி கொண்டது.

அவளால் இந்த பதிலை கூற இயலாது என்று எதிர்ப்பார்த்திருப்பான் போல அவள் கூறியதும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று நொறுங்கியது.


"இந்த நாலு வருஷத்துல ஒரு தடவை கூட என்னை பார்க்க வரணும்னு தோணலையா உனக்கு…?" என்று வினா எழுப்ப,


'இப்போது எதற்கு' என ஒரு பார்வை பார்த்தவளுக்கு தானே தெரியும்.


தினம் தினம் அவனது நினைவுகள் தன்னை கொல்லாமல் கொன்று கொண்டு இருப்பதை.


எத்தனை இரவுகள் தூங்கா இரவுகளாக கண்ணீருடன் கழித்திருப்பாள்.


எங்கே தான் தவறினோம். எங்கே அவன் தவறினான். எப்போது எங்கள் நேசம் தவறியது என்று எண்ணாத நாளில்லை.


அதையெல்லாம் இவனிடம் கூற அவளுக்கு மனதில்லை.


பதில் கூறாது திடமாக நின்றிருந்தாள்.


"ஒரு தடவை கூட என் நினைப்பு வரலையா…?" என வினவியவன்,


பின்னர், "அந்தளவுக்கு நான் வேண்டாதவனா போய்ட்டேன்…" என்று கோபமாக வினவ,


இதற்கு மேல் தாளமாட்டாதவள் அங்கிருந்து விரைவாக நகர பார்க்க அவளது லெஹங்காவின் ஸ்கர் அவளை தட்டிவிட்டிருந்தது.

விழுந்துவிட போகிறோம் என அஞ்சியவள் அவனது கையை பிடித்திருந்தாள்.


அவனும் அவளை தாங்கி பிடிக்க கையை நீட்டியவன் பிடித்தும் விட்டான்.


தன்னை நிலைநிறுத்தி கொண்டவள் அடுத்த நொடியே அவனிடமிருந்து விலகி செல்ல முயற்சிக்க அச்சமயம் அவளது பார்வையில் பட்டது அவனது கையிலிருந்த காயம்.


சட்டென்று நின்றுவிட்டவள் தன் பின்புறம் திரும்பி பார்க்க வரிசையாக கம்பிகள் இருந்தது.


தன்னை பிடிக்க முயற்சித்த போது தான் அடிப்பட்டுவிட்டது என்று எண்ணியவள் அதிர்ந்து அவன் முகம் நோக்க,


அவளை பார்த்தவாறே கையை உதறினான் விரல்களிலிருந்து ரத்தம் வழிந்தது.


கம்பி ஆழமாக குத்திவிட்டதை உணர்ந்தவள் பதறி, "ஹரி ப்ளீடிங் ஆகுது" என்று அவனது கையை பிடிக்க போக,

சடுதியில் அவள் தொடும் முன் கையை விலக்கி கொண்டான்.


அவனது செயலில் அவள் அடிப்பட்ட பார்வை பார்க்க அவனிடம் சிறிதும் இளக்கமில்லை.


கையில் வழிந்த ரத்தத்தை பார்த்த படி இருந்தான்.


"ஹரி ப்ளீஸ் உன் கோபத்தை இதுல காட்டாத. ப்ளீடிங் அதிகமா இருக்கு…" கலங்கிய விழிகளுடன் கூற,


"எனக்கு என்ன ஆனா உங்களுக்கு என்ன மிஸ் ப்ரஷாந்தி. அதான் டிவோர்ஸ் கொடுக்குறேன்னு சொல்லிட்டிங்களே. ஸோ உங்க வேலையை பார்த்திட்டு போங்க…" என்று வழியை காட்டியவனின் முகத்தினில் கோபத் திவலைகள்.


அவள் தான் அவனது வார்த்தையில் பதில் இல்லாது அதிர்ந்து நின்றுவிட்டாள்.


இதுவரை அவள் காணாத அவனுடைய பிம்பத்தை இப்போது கண்டவளுக்கு சர்வமும் சமைந்துவிட்டது.


அவனுக்கு கோபமாகவும் இவளுக்கு பயமும் அதிர்ச்சியுமாக நொடிகள் கடக்க,


ஜல் ஜல் என்று சத்தத்துடன் இரட்டை குடுமியுடன் அங்கே ஓடி வந்தது ஒரு சிறு வாண்டு. சஞ்யின் மகள் கனிஷ்கா.


அவர்கள் இருவரையும் கண்டு, "நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட ஐஸ் பாய் விளையாடுறேன். யாராவது வந்தா நான் இல்லைன்னு சொல்லிடுங்க ப்ரஷி ஆன்ட்டி" அவளிடம் கூறிவிட்டு ஹரியின் பின்புறம் சென்று நின்றது.


ப்ரஷாந்திக்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்று தெரியவில்லை.


ஹரியின் பின்புறம் வந்த கனிஷ்கா அவனது கையை பார்த்து விட்டு, "அங்கிள் கையில ப்ளட் வருது. மருந்து போடுங்க…" என்று அதிர்ந்து கூற,


"தேவையில்லைம்மா அதுவே சரியாகிடும்"


"அதுவே எப்படி சரியாகும். மருந்து போட்டால்தான் சரியாகும். நான் கீழ விழுந்து அடிப்பட்டுக்கி
ட்டா அம்மா மருந்து போட்டுவிடுவாங்க அப்புறம் தான் சரியாகும். மருந்து போடலைன்னா திட்டுவாங்க. உங்க அம்மா உங்களை திட்ட மாட்டாங்களா…?" எனவே வியப்புடன் வினவ,



"திட்ட மாட்டாங்க" என்றவனின் பதிலில் ஆச்சர்யமடைந்த கனிஷ்கா,


"ஏன் திட்ட மாட்டாங்க…?" என வினா தொடுத்தாள்.

இருவரது சம்பாஷனைகளை கேட்ட படி இருந்த ப்ரஷாந்திக்கு தான் இந்த கேள்வி உச்சபட்ச அச்சத்தை வாரி வழங்கியது. நெஞ்சம் பரிதவிக்க தொடங்கியது.


ப்ரஷாந்தியை ஒரு நொடி பார்த்தவன், "எனக்கு அம்மா அப்பாவே யாருமே இல்லை. நான் ஒரு அநாதை" என்று பதிலளிக்க,


இவளுக்கு சர்வ அவயங்களும் உடைந்தது.


"யாருமே இல்லையா…?"

"இருந்தாங்க. அவங்களுக்கு எங்கூட இருக்க விருப்பமில்லை. இடையில வந்த ஒரு உறவு கூட என்கூட இருக்க பிடிக்காம என்னை வெறுத்து என்னை விட்டு போய்டுச்சு. ஏன்னா நான் ஒரு கொலைகாரன்…" என்றவனது பார்வை ப்ரஷாந்தியை மொய்த்தது.


கன்னம் தாண்டி வழிந்த நீரை புறங்கையால் துடைத்தவள் தொண்டையை அடைக்கும் துக்கத்தை தாங்கவியலாது அங்கிருந்து ஓடிவிட்டாள்.


ஓடும் அவளையே வேதனையை சுமந்து பார்த்திருந்த ஹரியின் கைகளில் ரத்தம் சொட்டு சொட்டாக வடிந்த படி இருந்தது.



ஹரி சொல்வதில் பாதி புரிந்தும் புரியாத நிலையில் இருந்த கனிஷ்கா விளையாட்டை விட்டுவிட்டு தந்தையிடம் போய் நின்றாள்.


மனைவியுடன் சேர்ந்து நடனமாடி களைத்து போய் அமர்ந்திருந்த சஞ்சய் மகள் ஓடி வருவதை கவனித்து, "கனி ஏன் இப்படி ஓடி வர்ற. மெதுவா வா" என்று அதட்ட,


தந்தையின் அருகில் வந்து மூச்சை வாங்கியவள், "டாடி அங்க ஒரு அங்கிளுக்கு கையில அடிப்பட்டிருச்சு. ப்ளட் வருது. நான் மருந்து போட சொன்னா அந்த அங்கிள் கேட்க மாட்றாரு" என்று கூறினாள்.


"எந்த அங்கிள். எங்க இருக்காங்க" என்று சஞ்சய் புரியாமல் வினவ,


"அதான் நேத்து பார்த்தோமே அந்த ஹைட்டான அங்கிள்" என்றாள்.


யாரை கூறுகிறாள் என்று கண்டறிய முடியாதவன், "இப்போ எங்க அந்த அங்கிள்…?" என வினவினான்.


"பால்கனில நிக்கிறாங்க" என்றவள் தானே அழைத்து சென்றாள்.

சஞ்சய் சென்று பார்க்க ஹரி இன்னும் அதே இடத்தில் தான் நின்றிருந்தான்.


அவனது கையில் வடிந்த குருதியை கண்ட சஞ்சய் பதறி, "ஹரி கையில எப்படி அடிப்பட்டுச்சு. ஏன் பர்ஸ்ட் எய்ட் பண்ணாம நின்னுட்டு இருக்க* என்று வினவ,


"ஒன்னுமில்லை சஞ்சய். சின்ன காயம் தான் அதுவே சரியாகிடும்" என்று கூறினான்.


"ப்ச் இது சின்ன காயமா…? எப்படி அடிப்பட்டிருக்கு பாரு" என்றவன் மகளிடம் திரும்பி,

"கனி போய் அம்மாக்கிட்ட பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்துட்டு வர சொல்லு" என்றான்.


கனிஷ்கா ஓடி சென்று தாய் வித்யாவிடம் நடந்தவற்றை கூற அவள் முதலுதவி பெட்டியை எடுக்க விரைந்தாள். வித்யா குழந்தைகள் நல மருத்துவர்.


வித்யா முதலுதவி பெட்டியை எடுத்து வர அதற்குள் சஞ்சய் ஹரியின் கைகளை நீரினால் கழுவ செய்திருந்தான்.


"எப்படி ஆச்சு. எங்கேயோ இடிச்ச மாதிரி இருக்கு…?" என வினவியபடி மருந்தையை வைத்து கட்ட,

"இந்த கம்பில தான் தெரியாம இடிச்சிக்கிட்டேன்" என்று பதில் மொழிந்தான்.


கட்டிவிட்டு கம்பியை பார்த்தவள், "அந்த ஸ்டீல் லைட்டா துருபிடிச்சிருக்கு செப்டிக் ஆகாம இருக்க ஒரு டி.டி போட்றேன்" என்று ஊசியில் மருந்தை ஏற்றி அவனுக்கு செலுத்தினாள்.


இதற்குள் மற்றவர்களுக்கும் விடயம் தெரிந்துவிட்டது.


மணமக்கள் வினுஷாவும் ஹர்ஷத்துமே வந்துவிட்டனர்.


வினுஷா, "ஹரி பார்த்து இருந்திருக்கலாமே" என்று வருந்த,

"எனக்கு ஒன்னுமில்லை. இது சின்ன காயம் தான். போய் பங்கஷனை எஞ்சாய் பண்ணுங்க" என்று எல்லோரையும் சமாதானபடுத்தி அனுப்புவதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.


அனைவரும் சென்றிருக்க கனிஷ்கா மட்டும் அங்கேயே நின்றிருந்தவள், "அங்கிள் அம்மா மருந்து போட்டுட்டாங்கல்ல இனிமே சீக்கிரம் சரியாகிடும்" என்று கூற,


அவளுயரத்திற்கு குனிந்து,"சரிடா குட்டி" என தலையசைத்தவனுக்கு தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தாள் இவளை போல தானே இருப்பாள் என்று தோன்ற சடுதியில் விழிகள் கலங்கிவிட்டது.


அவனது கலங்கிய விழிகளை கண்டவள், "அங்கிள் ஏன் கண்ணு கலங்கிடுச்சு. ரொம்ப வலிக்குதா?" என்க,

"இல்லை" என்று தலையை இடம் வலமாக ஆட்டியவன்,


"உன் நேம் என்ன…?" என்று வினா எழுப்பினான்.


"கனிஷ்கா அங்கிள்" என்றவள்,

அவன் காயத்தில் ஊதிவிட்டு,

"இனி சரியாகிடும்" என்று விளையாட்டை தொடர ஓடிவிட்டாள்.


அவளது செயலில் மேலும் உள்ளம் உடைந்து நின்றான்‌.

இங்கே ஹரியிடமிருந்து ஓடிவந்தவளோ அறைக்குள் நுழைந்து ஒரு மூச்சு அழுது தீர்த்துவிட்டாள்.


அவனுடைய வார்த்தைகளை அவளால் தாளவே முடியவில்லை.


மற்றவர்கள் அவனை 'அநாதை' என்று கூறினாளே கடிந்து கொள்ளும் தன்னாலேயே அவன் இந்த வார்த்தையை அவன் வாயால் கூறும்படி ஆயிற்றே… என்று மருகி நின்றாள்.


ஒரு முறை கூட என் நினைவு வரவில்லையா…? என வினவுகிறானே அவன் நினைப்பில்லாத நாட்கள் இந்த நான்கு ஆண்டுகளில் உண்டா…


தனிமையில் உருகும் அனிச்சமாய் உருகி உன்னிடம் சேரவும் முடியாமல் தனித்திருக்கவும் முடியாமல் என் மனம் படும்பாடு நான் மட்டுமே அறிவேன்.


அவன் கூறியது சரிதான். நூற்றுக்கு நூறு உண்மை. தன்னால் அவனுடன் வேறு எந்த பெண்ணையும் மணக்கோலத்தில் கனவிலும் கற்பனை செய்ய இயலாது என்று நினைத்து நினைத்து புழுங்கினாள்.



அத்தனை பெருந்தன்மையான மனம் தனக்கில்லை என்பதை அவன் விவாகரத்து என்று கூறிய நொடி உறைந்த உள்ளம் தம்பட்டம் அடித்து கூறிவிட்டது.


கண்ணீரிலே கரைந்தவள் மதிய உணவிற்கு கூட வெளியே வரவில்லை. அறைக்குள்ளே அடைந்து கிடந்தாள்.
தனிமை வேலியை மீண்டும் பூட்டி கொண்டாள்.


யாரையும் பார்க்கவோ பேசவோ பிடிக்கவில்லை. இங்கிருந்து சென்றுவிடலாமா…? என்று கூட சிந்தனை தோன்றியது.


மாலை போல எழுந்தவள் முகத்தை கழுவிவிட்டு பால்கனி கம்பியை பிடித்தவாறு நின்றுவிட்டாள். மனதெங்கும் வெறுமை கொட்டி கிடந்தது.


பால்கனி அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அது எந்த இடமாக இருந்தாலும். அமைதியாக விழி மூடி நின்றிருந்தாள்.


"ப்ரஷி ஏன் நீ இப்படி ரூம்க்குள்ளேயே அடைஞ்சு கிடக்குற. எல்லாரோடையும் சேர்ந்து இருக்க வேண்டியது தானே" என்றவள் சிந்தித்து பின்னர்,

"ஹரியை கூட நான் அவ்ளோவா பாக்கலை. உனக்கும் அவனுக்கும் எதாவது பைட்டா…?" என்று கேள்வி கேட்க,


அவனுக்கும் தனக்குமானவற்றை மற்றவர்களிடம் கடை பரப்ப விரும்பாதவள், "அதெல்லாம் ஒன்னுமில்லை டி" என்று அவசரமாக மறுத்தலித்தாள்.


"அப்புறம் ஏன் இப்படி சோகமாக உட்கார்ந்து இருக்க. நைட் கேம்ப் ஃபையருக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். செம ஃபன்னா இருக்கும் வந்திடு" என்க, சரியென்று பதிலளித்தாள்.


ப்ரஷாந்தி குளித்து உடை மாற்றி விட்டு கேம்ப் ஃபையர் எங்கு நடக்கிறது என்று விசாரித்து செல்ல இருள் சூழ தொடங்கியிருந்தது.


நடுவில் மரக்கட்டைகள் பொன்னிறத்தில் எரிந்து கொண்டிருக்க சுற்றி பெரிய வட்டமிட்டு எல்லோரும் அமர்ந்திருந்தனர்.


அங்கு சென்றவுடன் அவளது விழிகள் ஹரியை தான் தேடியது. ஆனால் அவன் அங்கே இல்லை.


மனதில் ஏமாற்றம் சூழ்ந்தது. கையில் அடிப்பட்டதே இப்போது எப்படி இருக்கிறதோ என்று மனது அடித்து கொண்டது.


முயன்று அதனை
மறைத்தவள் அங்கே சென்று அமர்ந்துவிட்டாள். ஏதேதே விளையாட்டுகளை எல்லோரும் ஆர்வமுடன் விளையாடினர்.


ப்ரஷாந்தி தானும் சென்றேன் என்று பெயருக்கு ஏனோ தானோவென கலந்து கொண்டாள்…
 
Well-known member
Messages
1,076
Reaction score
770
Points
113
Super super super super super super super super super super super super
 
Top