அத்தியாயம் 19
எல்லோரும் பேசிவிட்டு அவர்களது அறைக்கு செல்ல,
ப்ரஷாந்தி ரேஷ்மாவின் அறைக்குள் நுழைந்தாள்.
இதனை ரேஷ்மா எதிர்ப்பார்த்திருந்தாள் போலும். எந்த எதிர்வினையையும் காண்பிக்கவில்லை.
அங்கே யாருமே இல்லாத பாவனையில், "லாவி டைம் ஆச்சு வா வந்து படு. ரெஸ்ட் ரூம் போறதுனா போய்ட்டு வா. அம்மா கூட வரவா" என்று வினவ,
லாவி என்று ரேஷ்மாவால் அழைக்கப்படும் லாவன்யா தாயிற்கு பதில் அளிக்காமல் அங்கு அமைதியாக நின்றிருந்த ப்ரஷாந்தியை பார்த்தாள்.
அவள் பார்வையை செல்லும் திசையை கவனித்த ரேஷ்மா, "நான் இங்க பேசிட்டு இருக்கும் போது அங்க என்னடி பார்வை. ரெஸ்ட் ரூம் போகணுமா…?" என அதட்ட,
லாவி பயந்து, "ம்ஹூம்" என்று இடம் வலமாக தலையசைத்து விட்டு வேகமாக பெட்டில் ஏறி படுத்துவிட்டாள்.
"ரேஷ் குழந்தையை ஏன் அதட்டுற. அவ பயப்பட்றா பாரு…" என்று ப்ரஷாந்தி கூற,
அவளை ஒரு கணம் பார்த்துவிட்டு பதிலேதும் கூறாமல் தான் படுப்பதற்கு படுக்கையை சரி செய்தாள்.
"ரேஷ் உன்கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்" என்று பொறுமை இழந்தவளாக கேட்க,
அவளை முறைத்து, "என் பொண்ணை நான் அதட்டுவேன். அடிக்க கூட செய்வேன். அதை கேட்க நீ யாரு" என்று முகத்தில் அடித்தாற் போல பதிலளித்தாள் ரேஷ்மா.
அவளது பதிலில் சட்டென்று ப்ரஷாந்தியின் விழிகள் கலங்கிவிட, "என்னடி இப்படி பேசுற" என்று வினவினாள்.
"முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட அப்படி தான் பேச முடியும்"
"நான் உனக்கு முன்ன பின்ன தெரியாதவளா…"
"ஆமா. நீ அப்படி தானே என்கிட்ட நடந்துக்கிட்ட. நான் உனக்கு எதுவுமே இல்லாத மாதிரி. இத்தனை வருஷம் எங்க போயிருந்த நீ"
ப்ரஷாந்திக்கு அவளது கோபத்தின் காரணம் புரிந்தது. பதில் தான் இல்லை.
"சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்க மட்டும் நாங்க வேணும். எதாவது பிரச்சினை வந்தா நாங்க யாரும்மே இல்லாம போய்டுவோம். யாரையும் பார்க்க பிடிக்காம போய்டும் அப்பிடி தான…?"
தொடர் தாக்குதலாக அவள் கேட்ட கேள்விக்கு ப்ரஷாந்தியால் விடை கூற இயலவில்லை.
"யாருக்கு தான் பிரச்சினை இல்லை. எல்லாருக்குமே எதோ ஒரு பிரச்சினை இருக்க தான் செய்யிது. எல்லாருமே லைஃப்ல எதாவது ஒன்னை இழந்திருப்பாங்க. மூவ் ஆன் பண்ணி வாழலை…? உன்னை மாதிரி யாரும் எல்லாத்தையும் துறந்த துறவி மாதிரி தனித்தீவுல போய் உட்காரலை…"
"யார் வேணா எது வேணா பேசலாம். என் நிலைமை எனக்கு தான் தெரியும். என்னோட இழப்பு எனக்கு தான்" என ப்ரஷாந்தி பதிலளித்தாள்.
"மண்ணாங்கட்டி" என்றவளின் ஆக்ரோஷமான பதிலில் ப்ரஷி அதிர்ந்து பார்க்க,
"உனக்கு தெரியாது. லாவி என்னோட தர்ட் பேபி. எனக்கு ரெண்டு தடவை அபார்ட் ஆகிடுச்சு…" என்றவளின் பதிலில் ப்ரஷாந்தி ஏகத்திற்கும் அதிர்ந்து நின்றுவிட்டாள்.
கேட்க கேள்விகள் இருந்தாலும் பேச நா எழவில்லை.
"என்ன ஷாக்கா இருக்கா…? உன்னை மாதிரி ஓய்ஞ்சு போய் உட்காரணும்னா நான் இன்னேரம் ரெண்டு அபார்ஷன்னால என்னவாகியிருப்பேன்னு எனக்கே தெரியலை…"
"ஏன்டி இதெல்லாம் என்கிட்ட முன்னாடியே சொல்லலை" என்று தோழியின் பிரச்சனையில் தன்னுடையதை மறந்தவளுக்கு தான் அவளுடன் இத்தனை வருடங்களாக தொடர்பில் இல்லாதது வசதியாக மறந்தும் போயிற்று.
"நீ உனக்கு பிராப்ளம் வந்தப்போ என்னை கூப்பிட்டியா…?" என சடுதியில் அவளிடமிருந்து பதில் வந்தது.
"சாரி டி, நான் அப்போ என்னோட மனநிலையை எப்படி உனக்கு எக்ஸ்பிளைன் பண்றதுன்னு தெரியலை. ஹரி மேல கோபம் அம்மா மேல கோபம் பார்க்குற எல்லார் மேலயும் கோபம் வந்திச்சு. அதான் நான் யாரையும் பாக்க விரும்பலை அப்போ"
"தப்பெல்லாம் உன் மேல வச்சிக்கிட்டு ஹரியையும் அம்மாவையும் ஏன் ப்ளேம் பண்ற"
"என் மேல என்ன தப்பிருக்கு. அவன் தான் குழந்தையை வேணாம்னு சொன்னான்"
"லூசு மாதிரி பேசாத தீன்னு சொன்னா சுட்டுடுமா…? அவன் குழந்தையை வேணாம்னு சொன்னதும் குழந்தை இல்லாம போயிடுச்சாம். அப்போ எனக்கு ரெண்டு தடவை அபார்ட் ஆச்சே. நான் வேணாம்னா சொன்னேன்" என்றவளின் கோப வார்த்தைகளுக்கு எந்த எழுத்துகளையும் கோர்த்து வார்த்தைகளாக அவளால் பதிலலளிக்க முடியவில்லை.
அவளது அமைதியை கண்டவள் தொடர்ந்தாள்.
"உன் மேல தப்பை வச்சிக்கிட்டு ஹரியையும் உன் பேரண்ட்ஸயும் ப்ளேம் பண்றதை ஸ்டாப் பண்ணு. நீ ஒரு அவசர குடுக்கை. எல்லாத்துலயும் அவசரம். வயசு துடிப்புல எல்லாத்தையும் செஞ்சிருக்க. உன் அம்மா அப்பாக்கு உன் காதல் விஷயம் தெரிஞச உடனே நீ என்னை பண்ணி இருக்கணும். அவங்க கோபப்பட்டா கூட எடுத்து சொல்லி புரிய வச்சு இருக்கணும்"
"..."
"ஆனால் நீ என்னை பண்ண உடனே சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்துட்ட. எந்த வீட்ல தான் பேரண்ட்ஸ் லவ்வ உடனே அக்சப்ட் பண்ணிக்கிறாங்க. எல்லா வீட்லயுமே அப்போஸ் தான் பண்ணுவாங்க. அவங்க பிள்ளைகங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு தரணும்னு ஆயிரம் கனவோட இருப்பாங்க. நீ நான் லவ் பண்றேன்னு சொன்னதும் உடனே ஓத்துக்கிட்டு வாப்பான்னு கல்யாணம் பண்ணி வைப்பாங்களா…?"
"..."
"சாரி பார் ஸே திஸ். நார்மலாவே லவ்வ அப்போஸ் பண்றவங்க. ஹரிக்கு உன்னை கல்யாணம் பண்ணி குடுக்க எப்படி ஒத்துப்பாங்க. நீயே உன் மனசாட்சிய தொட்டு பதில் சொல்லு…" என்று கேட்க, அதிலுள்ள நியாயம் புரிந்தவள் மௌனியாகி போனாள்.
"வெயிட் பண்ணி புரிய வைக்காம அவசரப்பட்டு மேரேஜ் பண்ணிக்கிட்டு அதே அவசரத்தோட சண்டை போட்டு பிரிஞ்சும் வந்துட்ட. நீ இப்போ தனியா இருக்கதை பார்த்து உன் பேரண்ட்ஸ் எவ்ளோ பீல் பண்ணுவாங்கன்னு திங்க் பண்ணி பார்த்தியா…? அப்போவே ஹரி இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொன்னான் கேட்டியா…? இல்லை நான் அத்தனை டைம் கேட்டேன்னே நீ தானே பிடிவாதம் பிடிச்ச. சரியான செல்பிஷ்டி நீ…" என்றவளின் இறுதி வார்த்தையில் ப்ரஷியின் கண்கள் கலங்கிவிட்டது…
அவள் கேட்ட அத்தனை கேள்வியும் முள்ளாக அவளை குத்தியது. அவள் தொடுத்த எதற்கும் கொடுக்க விடையில்லை.
அவள் கூறிய அனைத்தும் அவள் இத்தனை வருடங்களில் சிந்தித்திருந்தாள். கடந்து வந்த பாதை நிறைய சிந்திக்க கற்று கொடுத்திருந்தது…
தனிமை சிந்தனையும் பக்குவத்தையும் கொடுத்திருந்தது. அன்றைய சூழ்நிலையில் தான் எடுத்த முடிவு தவறு வயது கோளாறில் செய்துவிட்டோம் என்று என்றே புரிந்தது.
அதனை உணர்ந்தும் இருந்தாள். ஆனால் ஹரி குழந்தை வேண்டாம் என்று கூறியதை அவளால் இன்று வரை ஏற்று கொள்ள முடியவில்லை.
ஹரி மேல் அவள் வைத்திருந்த பிம்பத்தை நேசத்தை அந்த ஒற்றை வார்த்தை சிதைத்திருந்தது. உடைத்திருந்தது.
அந்த ஒன்று தான் அவளை நடந்ந நிகழ்வுகளை கடந்து வர விடாமல் செய்கிறது. அவளை அங்கேயே இருத்தி பிடித்திருக்கிறது.
அவளுக்கு தனது தவற்றை ஒத்து கொள்ள ஈகோவெல்லாம் ஏதுமில்லை. இதுவே பழைய ப்ரஷாந்தியாக இருந்திருந்தாள் இதனை ஒற்று கொண்டிருக்க மாட்டாள்.
ஆனால் இப்போது இருப்பவள் அனைத்தையும் கடந்து வாழ்வை உணர்ந்தவள்.
அவளது கலங்கிய விழிகளை கண்ட ரேஷ்மாவிற்கு வருத்தமாக தான் இருந்தது. ஆனால் வேறுவழியில்லையே.
இவளிடம் இப்படி கடுமையாக பேசினால் தான் வேலை நடக்கும். இல்லையெனில் இன்னும் நாற்பது வருடங்களுக்கு நடந்ததை நினைத்து வனவாசம் இருப்பாள் என்று நினைத்தவள்,
"என்ன நான் கேட்கிறது சரி தானே…?" என்று உறுத்து விழிக்க,
வழி நீரை விரலால் சுண்டியவள்,
"ஆமா நீ சொல்றது சரி தான். நான் அவசர பட்டிருக்க கூடாது." என்றவள் மனதின் நினைத்த மற்றொன்றை கூற முயலவில்லை.
"ஹ்ம்ம் புரிஞ்சா சரி. அம்மாக்கிட்ட பேசும் போது உன்னை பத்தி எவ்ளோ கவலை போடுறாங்க தெரியுமா…? உனக்கு அதெல்லாம் எங்க தெரிய போகுது. நீ தான் தனியா ஒரு கூடு கட்டி வாழ்றியே…" என்று இழுத்தவள்,
"இப்படியே தனியா இருந்து அவங்களை கஷ்டப்படுத்த போறியா…? சரி உன் விஷயத்தை விடு நீ செஞ்ச தப்புக்கு ஹரி என்ன பண்ணுவான் அவன் ஏன் காலம் முழுக்க தனியா இருக்கணும். அவனுக்குன்னு ஒரு குடும்பம் வேண்டாமா…? உனக்கு உறவுன்னு சொல்லிக்க குடும்பம் இருக்கு. ஆனால் அவனுக்கு யோசிச்சு பார்த்தியா…? பிறந்ததிலே இருந்தே தனியா இருந்தவன் இனியும் தனியாவே காலத்தை கழிக்கணுமா…? அவனுக்கு தனியா இருக்கணும்னு என்ன தலையெழுத்தா…? ஓ… உன் குழந்தையை கொன்னுடான்னு பழிவாங்கிறியா…?" என்று வினா தொடுக்க,ப்ரஷி பதறி போய்விட்டாள.
"என்னை பத்தி நீ தெரிஞ்சுக்கிட்டது இவ்ளோ தானா…? நான் போய் பழிவாங்குறதுக்காக…" என்றவளுக்கு என்ன முயன்றும் குரல் தழுதழுத்தது.
ஆனால் சிறிதும் இளக்கமின்றி, "அப்போ டிவோர்ஸ் கொடு. அவனாவது வேற லைஃப் அமைச்சுக்கிட்டு ஹாப்பியா இருப்பான்…" என்று மின்னாமல் முழங்கால் இடியை இறக்கினாள்.
'டிவோர்ஸ்' என்ற வார்த்தையே அவளது உள்ளத்தினை நடுநடுங்க செய்தது.
அவனுக்கு வேறு ஒரு வாழ்க்கை தானில்லாமல் நினைப்பே கசந்தது.
தன்னையன்றி யாருடன் அவன் வாழ முடியும் என்று உள்ளம் வினவியது.
விழிகளை இறுக திறந்து மூடி உணர்வுகளை கிரகிக்க முயற்சித்தாள்.
அவளது முக உணர்வுகளை படித்தவள், "என்ன டிவோர்ஸ் தர்றீயா…?" அழுத்தமாக வினவ,
மீண்டும் கேள்வியை உள்வாங்கியவளுக்கு சர்வமும் செயலற்றது.
அவள் கூறுவதும் நியாயம் தானே. தான் தனியாக இருப்பது தன்னுடைய தனிப்பட்ட விருப்பம்.
அவனும் அப்படியே இருக்க வேண்டும் என்று எண்ண அவசியம் என்று தனக்கு தானே கேட்டு கொண்டவள்,
துக்கத்தை தொண்டைக்குள் விழுங்கிவிட்டு, "ஹ்ம்ம் தர்றேன். டிவோர்ஸ்தானே தந்திட்றேன். வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் சந்தோசமாக வாழட்டும்" என்றவள் விறுவிறுவென வெளியேறி தன்னுடைய அறைக்குள் நுழைந்துவிட்டாள்.
உள்ளே வந்தவளுக்கு துக்கம் தாளவில்லை. கதறி அழுக தோன்றியது.
தன்னை விட்டு வேறொருவருடன் அவனது வாழ்க்கை அதுவும் மகிழ்ச்சியான வாழ்க்கை நினைக்க நினைக்க கண்ணீர் பெருகியது.
தன்னால் அவனுடன் சேர்ந்து வாழவும் முடியவில்லை. அவனை வேறொரு பெண்ணுடன் சேர்த்து நினைக்கவும் முடியவில்லை.
'என்ன வாழ்க்கை இது' என வெறுத்து போனது.
'ஏன்டா நம் குழந்தையை வேண்டாம் என்றாய்'
அவனது சட்டையை பிடித்து உளுக்க தோன்றியது. ஆனால் செயல்படுத்த தான் திரணியில்லை.
இயலாமை கோபத்தை பெருக்கியது. தலையை பிடித்து கொண்டாள்.
அந்த இரவு பகலாகி போனது பாவைக்கு.
மறுநாள் காலை, "ப்ரஷி எழுந்திரு. டைம் ஆச்சு" என்ற மேனகாவின் குரல் ப்ரஷாந்தியின் உறகத்தை கலைத்தது.
இரவு தாமதமாக உறங்கியதால் கண்கள் இரண்டும் எரிந்தது. கண்களை தேய்த்த படியே எழுந்து வந்தவள் கதவை திறக்க,
"எவ்ளோ நேரம் டி கதவை தட்டுறது நல்ல தூக்கமா…? எல்லாரும் சங்கீத்க்கு ரெடியாகிட்டாங்க. நீ மட்டும் தான் இன்னும் வரலை. இந்தா இந்த ட்ரெஸ்ஸை போட்டுட்டு சீக்கிரம் ரெடியாகி வா" என்ற மேனகா அவள் கையில் உடையை திணித்து விட்டு சென்றாள்.
உடையை பிரித்து பார்க்க அதிக வேலைப்பாடுகளுடன் கூடிய ஆகாய நீல நிறத்தில் ஒரு லெஹெங்கா இருந்தது.
'இத்தனை வேலை பாடுகளுடன் கூடிய உடையை அணிய வேண்டுமா…?' என்று தோன்றினாலும் வேறு வழியில்லை எல்லோரும் அணிந்திருப்பார்கள் என நினைத்து பெருமூச்சு விட்டவள் குளித்து ஆயத்தமானாள்.
முகம் அவள் இரவெல்லாம் உறங்காமல் அழுததை அப்பட்டமாக காண்பிக்க அதனை மறைக்க சிறிது மேக்கப்பை கொண்டாள் அவர்கள் கொடுத்திருந்த அணிகலனையும் அணிந்து கொண்டவள் ஹாலிற்கு சென்றாள்.
அங்கே ஏற்கனவே நிறைய உறவினர்கள் வந்திருந்தனர். தமிழ் நாட்டு உடைகளுக்கு இடையே பஞ்சாப் உடைகளும் கொண்டைகளும் நன்றாகவே தெரிந்தது.
பெரியவர்கள் பின்னால் போட பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த வயது பெண்கள் ஆண்கள் வேறுபாடின்றி சங்கீத் விழாவிற்கு நடனமாட ஒத்திகை பார்த்த படி இருந்தனர்.
பெண்கள் அனைவரும் அவள் அணிந்தது போலவே நீல நிறத்தில் லெஹெங்காவும் ஆண்கள் அவர்களுக்கு பொருத்தமாக ஷெர்வானியும் அணிந்திருந்தனர்.
மேனகா, "ஹே ப்ரஷி வந்துட்டியா உன்னை தான் தேடிட்டு இருந்தோம். இந்த ட்ரெஸ்ல செம்மயா இருக்க" என்று பாராட்ட,
பதிலாக புன்னகைத்தவள் அங்கிருந்த இருக்கையில் அமர செல்ல,
"ஹேய் எங்க போற. வா வந்து எங்களோட டான்ஸ் ஆடு. உனக்காக நான் இங்க எல்லாரும் வெயிட்டிங்" என்று அவளை இழுக்க,
"ம்ஹூம் நான் வரலை நீங்க ஆடுங்க" என்று மறுத்துவிட்டாள்.
"ஹே காய்ஸ் ப்ரஷி டான்ஸ்க்கு வரலையாம்" என்று நண்பர்களிடம் கூற,
எல்லோரும் அவளை சூழ்ந்துவிட்டனர்.
வினுஷா, "நீ வந்ததும் ஸ்டார்ட் பண்ணலாம்னு நாங்க வெயிட் பண்ணா. நீ என்னடான்னா வரமாட்டேன்ற. ஒழுங்கா வந்து ஆடுடி" என்று உரிமையாய் அதட்ட, மற்றவர்களும் அழைத்தனர்.
ஹர்ஷத் கூட, "வாங்க சிஸ். ஃபன்னா இருக்கும்" என்றழைக்க,
"இல்லை லைட்டா ஹெட் ஏக் நீங்க போய் ஆடுங்க. நான் ஆடியன்ஸா இருக்கேன்" என்று கூறிவிட்டாள். அதற்கு மேலும் யாரும் வற்புறுத்தாமல் நடனமாட சென்றுவிட்டனர்.
ப்ரஷாந்தி முன்புறம் உள்ள இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ள சங்கீத் விழா ஆர்ப்பாட்டமாக தொடங்கியது.
முதலில் தமிழில் பாட்டு போடுவோம் என்று முடிவு செய்து,
வராயோவாராயோ வாராயோ
காதல்கொள்ள பூவோடு பேசாத
காற்று இல்ல ஏன் இந்த காதலும்
நேற்று இல்ல நீயே சொல் மனமே
பாடலை போட எல்லாரும் தங்களது இணையுடன் நடனமாட தொடங்கினார்கள்.
பாடல் இசைத்ததும் இடமே கலகலப்பும் ஆரவாரமாக மாறியது.
எல்லோரும் கை தட்டி கூச்சலிட்டு ஆர்ப்பரிக்க தொடங்க களைகட்டியது.
ப்ரஷாந்தியும் கைகளை தட்டி மென் புன்னகையுடன் பார்த்தாள். எல்லோரும் ஒன்று போல ஆட பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.
நடனத்தை பார்த்தபடி இருந்தவளுக்கு யாரோ வெகுநேரம் தன்னை பார்வையால் துளைப்பது போல பிரம்மை ஏற்ப்பட சுற்றும் முற்றும் பார்த்தாள்.
பார்த்தவளின் விழிகள் ஓரிடத்தில் நிலை கொள்ள அங்கே ஹரி அமர்ந்து இவளையே தான் பார்த்திருந்தான்.
இத்தனை நேரம் அவனை பார்க்கவில்லை என்று அமைதியாக சென்ற மனது அவனை கண்டதும் அலைக்கழிக்க தொடங்கியது.
நேற்றைய நினைவுகள் வரிசை கட்டி தாக்கியது. அவனிடமிருந்தும் அவனது நினைவுகளிடமிருந்தும் தப்பிக்க நினைத்தவள் எழுந்து ஹாலின் மறு முனையில் இருந்த பால்கனிக்கு போய் நின்றுவிட்டாள்.
மனசு ஆசுவாசப்பட்டது. எதிலிருந்தோ தப்பித்த உணர்வு.
இரவெல்லாம் சிந்தித்தவள் ஒரு முடிவிற்கு வந்திருந்தாள். தானும் வாழாமல் அவனையும் வாழ விடாமல் கெடுப்பது எந்த விதத்திலும் சரியல்ல.
அவனுக்கு விவாகரத்து கொடுத்து விட வேண்டும் என்று.
இதனை எடுக்கும் போதே மனது வலித்தது. இருந்தும் தன்னால் அவன் வாழ்க்கை அழிய வேண்டாம் என்று எண்ணத்திற்கு வந்திருந்தாள்.
அதன் விளைவு தான் இப்போது அவனிடமிருந்து தப்பித்து வந்தது. மேலும் மற்றொரு காரணம் நேற்று அவன் வார்த்தைகளால் அவளை தாக்கியதும் தான்.
நேற்று போல இன்றும் வார்த்
தைகளால் அம்பு தொடுத்தால் இருக்கும் மனநிலையில் பதிலளிக்க முடியாது என்று சிந்தித்த படியே சிறிது நேரம் நின்றிருந்தவள் அறைக்கு சென்றுவிடலாம் என நினைத்து திரும்ப,
பால்கனி கதவின் மேல் சாய்ந்து கைகளை கட்டியபடி அவளை பார்த்தபடி படு ஸ்டைலாக நின்றிருந்தான் ஹரி கிருஷ்ணா.
தொடரும்…
இவள் மீரா க்ரிஷ்