அத்தியாயம் 18
தூரத்தில் இருந்து பேச்சு குரல்கள் செவியினுள் ஆழ்ந்து நுழைய மெதுவாக விழிகளை திறக்க முற்ப்பட்டாள் ப்ரஷாந்தி…
திறக்க முடியவில்லை இமைகள் இரண்டும் பாறையை போல கனத்தது.மிகவும் சிரமப்பட்டு விழிகளை திறந்தாள்.
"ப்ரஷி கண் விழிச்சிட்டா…" என்ற குரல் காதிற்குள் நுழைந்த போதே அது தாயினுடையது என்பதை உணர்ந்து கொண்டவள் விழிகளை மலர்த்தி பார்க்க,
எதிரே பதட்டமும் வேதனையும் சுமந்த விழிகளுடன் அவளை பார்த்தபடி நின்றிருந்தார் சுபத்ரா. அவரருகில் சுதர்ஷன்.
ப்ரஷாந்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த லக்ஷ்மி மற்றவர்கள் உதவியுடன் அவளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.
ப்ரஷாந்தியின் அலைபேசியில் மூலம் ஹரிக்கு தொடர்பு கொள்ள முயற்சிக்க அழைப்பு செல்லவில்லை. பின்னர் அம்மா என்ற பெயரில் சேமிக்கப்பட்டிருந்த சுபத்ராவின் எண்ணிற்கு அழைத்து தகவல் கூறினார்.
என்ன தான் கோபம் இருந்தாலும் பெற்ற மகளுக்கு ஒன்று என்றதும் இருவரும் துடி துடித்து ஓடி வந்திருந்தனர்.
அவர்கள் தலையில் தான் அடிப்பட்டுள்ளது என்று எண்ணியிருக்க,
மருத்துவர் வந்து, "உங்களது பெண்ணிற்கு கருகலைந்துவிட்டது" என்று பேரிடியை தலையில் இறக்கியிருந்தார்.
இருவரும் அதிர்ச்சியில் உறைந்து செய்வதறியாது ஒரு கணம் நின்று விட்டனர்.
சுபத்ரா மகளின் நிலையை எண்ணி கண்ணீர் சிந்த, உள்ளுக்குள் உடைந்து நின்றாலும் சுதர்ஷன் மனைவிக்கு ஆறுதல் கூறி தேற்ற முயன்றார்.
ஆனால் அவர்கள் ப்ரஷாந்திக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று தெரியாமல் தவித்தபடி அவள் முன் வேதனையோடு நின்றிருந்தனர்.
அவளால் எதிரில் இருக்கும் தாய் தந்தையை நம்பாமல் பார்த்தபடி எழுந்தமர முயற்சித்தவளுக்கு தலை விண்ணென்று வலித்தது.
விரல்கள் தலையை தொட்டு பார்க்க கட்டு போட்டிருப்பது தெரிந்தது.
கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டள்ளது போலும் என்று நினைத்தவள்,
தாயின் கலங்கிய முகத்தினை கண்டு, "ம்மா எதுக்கு அழுதிட்டு நிற்கிறிங்க. தலையில சின்ன இன்ஜுரி தான்" என்று கூறினாள்.
"ப்ரஷி…" என்றவருக்கு அழுகையினூடே வார்த்தை வர மறுத்தது.
அவரது அழுகை அவளுக்கு எதையோ உணர்த்த மூளை சடுதியில் வேகமாக இயங்க கைகள் வயிற்றில் படிந்தது.
அதிர்ச்சியில் ஒரு நொடி இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது.
கண்களில் இருந்து நீர் தன்னிச்சையாக வழிய தாயை பார்த்தவளுக்கு அவளது நிலை புரிந்தது.
"நோ…." என்று திக் பிரம்மை பிடித்தவள் போல அந்த கட்டிடமே அதிரும் அளவு கத்தியவள்,
"நோ நான் நம்ப மாட்டேன். என் குழந்தை என்னை விட்டு போயிருக்காது. என்னை விட்டு போக அதுக்கு மனசு வராது…" என்று கதறி அழ தொடங்கியிருந்தாள்.
"போயிருச்சு ப்ரஷி. உன் குழந்தை நம்மள விட்டு போயிடுச்சும்மா" என்று சுபத்ரா மகளின் வேதனை தாங்காது கண்ணீருடன் அவளை அணைத்து கொண்டார்.
அவரை பட்டென்று தள்ளிவிட்டவள், "நீ பொய் சொல்ற. நான் நம்ப மாட்டேன்…" என்று கண்ணீருடன் கரைந்தாள்.
உண்மையை மூளை உணர்ந்தாலும் மனம் ஏற்று கொள்ள மறுத்தது.
இவளது அலறல் கேட்டு மருத்துவரே அங்கு வந்துவிட்டார்.
மருத்துவரை அங்கு கண்டவள், "டாக்டர் நீங்களே சொல்லுங்க டாக்டர். என் குழந்தைக்கு எதுவும் ஆகலைல டாக்டர்" என்று அவரிடம் கெஞ்சினாள்.
மருத்துவருக்கும் அவளது நிலையை பார்த்து பரிதாபமாக போய்விட்டது. இதே போல நிறைய பெண்களை பார்த்தவர் தான் அவரும்.
"ப்ரஷாந்தி ரிலாக்ஸ்…" என்றவர்,
"அவங்க சொல்றது உண்மை தான். கீழே விழுந்ததுல பலமா அடிப்பட்டு உங்களுக்கு அபார்ட் ஆகிடுச்சு" என்று வார்த்தையால் அவளை கொன்றிருந்தார்.
அவர் அவரது கடமையை செய்கிறார். ஆனால் அவர் கூறியதை கேட்டவள் தான் மொத்தமாக நொறுங்கியிருந்தாள்.
அவளது நிலையை உணர்ந்தவர்,
"ப்ரஷாந்தி உங்களுக்கு ஒன்னும் அவ்ளோ ஏஜ் ஆகலை. உங்களோட ஹெல்த்தும் நல்லா இருக்கு. கண்டிப்பா உங்களுக்கு அடுத்த பேபி நல்லா பிறக்கும்" என்று ஆறுதல் கூறி வெளியேறிவிட்டார்.
"அழாத ப்ரஷி டாக்டர் சொன்னதை கேட்டேல. அடுத்த குழந்தை நல்லா பிறக்கும்" என்று ஆறுதல் கூறுகையில் இடையில் நுழைந்தவள்,
"நீ போசாத பெத்தவங்க பேச்சை மதிக்காம போனா உன் வாழ்க்கை நல்லா இருக்காதுன்னு சாபம் விட்டேல. அது இப்போ பழிச்சிடுச்சு. என் குழந்தையை கொன்னுடுச்சு…" என்று கோபத்தில் தன்னை மறந்து கத்திவிட்டாள்.
அவளது வாரத்தைகளை வாங்கியவருக்கு தான் சர்வமும் நடுங்கிவிட்டது.
பெற்ற தாய் பிள்ளை நன்றாக இருக்க கூடாது என்று எண்ணுவாளா…?
கோபத்தில் கூறிய வார்த்தைகள் இன்று என்னை அம்பால் தாக்குகிறதே… என்று எண்ணி கலங்கி நின்றுவிட்டார்.
சுதர்ஷன், "ப்ரஷாந்தி கோபத்துல அம்மாவ பார்த்து என்ன வார்த்தை பேசுற நீ…" என்று அதட்ட, அதெல்லாம் அவளிடம் வேலை செய்யவில்லை.
"நான் அப்படி நினைச்சு எல்லாம் பேசலை டி. கோபத்துல பேசிட்டேன்…" என்று கண்ணீர் மல்க உரைக்க,
"நீ அப்படி நினைச்சு தான் சொல்லியிருக்க… யாரும் நிக்காதிங்க என் கண் முன்னாடி.. போங்க இங்க இருந்து போங்க…" என்று கத்த தொடங்யிருந்தாள்.
அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை.
இழப்பை தாங்க இயலவில்லை.
எத்தனை ஆசை எத்தனை கனவு அனைத்தும் ஒரு நொடியில் தகர்ந்துவிட்டது.
ஆசை ஆசையாக கட்டிய கனவு கோட்டை அவள் கண்முன்னே சரிந்துவிட்டது. சில இழப்புகளை என்ன செய்தும் ஈடுகட்ட இயலாது.
இழந்தவர்களுக்கு தான் இழப்பின் வீரியம் தெரியும்.
கண்கள் கண்ணீரை கொட்டும் அருவியாகி போனது. இரண்டு நாட்களாக நடந்த நிகழ்கள் எண்ணங்களில் நழுவியது.
பரிசோதனை கருவியின் முடிவை எதிர்ப்பார்த்து தட தட இதயத்துடன் காத்திருந்தது.
இரு கோடுகளை கண்டதும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றது.
இந்த இரண்டு நாட்களில் தனது பிள்ளைக்கென தனக்குள் ஒரு உலகத்தை உருவாக்கி வைத்திருந்தது நினைவில் வரிசை கட்டியது.
தங்களது குடும்ப கூட்டில் புதிதாக பூத்திருந்த மொட்டு முளையிலேயே கருகியதை எண்ணி இதயத்தில் உதிரம் கொட்டியது…
செவிலியர் வந்து மயக்க ஊசி போட்டு செல்லவும் தான் அமைதியாகினாள்.
"என்னங்க என்ன பார்த்து என்ன வாரத்தை சொல்லிட்டா பாருங்க நான் அப்படி நினைப்பேனா…" சுபத்ரா அழுகையில் கரைய,
"அவ இழப்பை ஏத்துக்கமுடியாத கோபத்தை உன்கிட்ட காட்டிட்டா. நீ அதை நினைச்சு வருத்தப்படாத" என்று அவளை சுதர்ஷன் தேற்ற முயற்சித்தார்.
ஒரு கட்டத்தில் அவரும், "அவ சொல்ற மாதிரி என் வார்த்தை தான் அவ குழந்தையை அழிச்சிடுச்சோ…" என்று புலம்ப தொடங்கிவிட்டார்…
சுதர்ஷனால் அவரை சமாளிக்க முடியவில்லை. விடயம் கேள்விப்பட்டு ஓடிவந்த நிஷாந்தி தான் தாய்க்கு ஆறுதலுரைத்து அவரை தேற்ற முயற்சித்த படி இருந்தாள்…
ஆட்டோவில் இறங்கி மருத்துவமனைக்குள் நுழைந்து ப்ரஷாந்தியின் பெயரை கூறி விசாரித்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஏறக்குறைய ஓடி கொண்டிருந்த ஹரிக்கு உயிரே இல்லை.
முகமெல்லாம் கலங்கி சிவந்து மனதளவில் சோர்ந்து உடைந்து அங்கு வந்து சேர்ந்திருந்தான்.
லக்ஷ்மியின் அழைப்பை பார்த்து அலைபேசியில் மீண்டும் அழைத்தவனுக்கு அவர் தான் விடயத்தை கூறியிருந்தார்.
நடந்தவற்றை கேட்ட விநாடி உள்ளுக்குள் மொத்தமாக நொருங்கிவிட்டவன் தன்னவளை காண ஓடி வந்திருந்தான்.
அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்து அவன் கண்டது கலங்கி போய் அமர்ந்திருந்த ப்ரஷாந்தியின் குடும்பத்தினரை தான்.
அவர்களுக்கு அவனை அடையாளம் தெரிந்தது. அவனது கலங்கி தவித்த தோற்றமே அவனது நிலையை பறைசாற்ற, நிஷா ப்ரஷாந்தி இருக்கும் அறையை நோக்கி கையை காண்பித்தாள்.
இத்தனை தூரம் ஓடோடி வந்துவிட்டவனால் அவ்வறைக்குள் நுழைய முடியவில்லை.
அவளை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்று நினைத்து உள்ளம் பரிதவித்தது.
இரும்பாய் கனத்த இதயத்துடன் உள்ளே நுழைந்தவன் கண்டது வாடிய கெடியாய் துவண்டு மயக்கத்தில் இருந்தவளை தான்.
தன்னவளை இத்தகைய கோலத்தில் அவனால் காணமுடியவில்லை.
நெஞ்சில் சுருக்கென்ற வலி எழுந்தது. தான் தான் அவளது நிலைக்கு காரணம் என்று உள்ளம் சாடியது.
தனக்கென வந்த ஒற்றை உறவையும் இப்படி உடைத்துவிட்டோமே என்று மௌனமாக கதறியது.
குற்றவுணர்ச்சி கொல்லாமல் கொனறு குவித்தது. தான் வேண்டாம் என கூறியதால் தான் தன் பிள்ளை தன்னை விட்டு சென்று விட்டது என்று மனம் நொருங்கியது.
அவளை நெருங்கி கைளை பிடித்தவன் அதில் முகம் புதைத்து கண்ணீரை உகுக்க தொடங்கிவிட்டான்.
அவளது முகத்தை கூட பார்க்க தகுதியற்று போய்விட்டேனே என்று மருகியது.
கரங்களை நனைத்த கண்ணீரால் அவளுக்கும் விழிப்பு வந்தது.
அவனை உணர முடிந்தது. அவனது அருகாமையை உணர முடிந்தது. விழிகள் அமைதியாக கண்ணீரை பொழிந்தது.
உள்ளம் ஊமையாக அழுதது.
அவனும் பரிதவித்த விழிகளுடன் அவளை நோக்கினான்.
"ஹரி நீ ஆசைப்பட்ட மாதிரியே நம்ம குழந்தை அழிஞ்சு போச்சு…" என கத்தாமல் கதறாமல் அவனது நெஞ்சில் ஈட்டியை சொருகியிருந்தாள்…
கண்ணீருடன் பேச நா எழாது தலையை இடம் வலமாக அசைத்தான்.
"இப்போ உனக்கு ஹாப்பியா ஹரி… நம்ம குழந்தை நீ வேண்டாம்னு சொன்ன நம்ம குழந்தை இல்லாமலே போயிடுச்சு. எங்கேயோ மறைஞ்சு போயிடுச்சு. இனிமேல் உனக்கு எந்த பிரச்சனையும் வராது. நீ நிம்மதியா இருக்கலாம்" என்றவள் அவனது நிம்மதியை நிரந்தரமாக பறித்திருந்தாள்…
"ஐயோ என்னை வார்த்தையால கொல்லாத டி. இதுக்கு மேல என்னால உன் வார்த்தையை தாங்க முடியாது டி…" என்று கதறி துடித்து அவளை நெஞ்சோடு அணைத்து கொள்ள,
"நான் உன்னை வார்த்தையால கொல்றேனா…? நீங்க எல்லாரும் சேர்ந்து தான் என் புள்ளை கொன்னு என்னை உயிரோட புதைச்சிட்டிங்க…" என்று அவனை விலக்க பார்த்தாள்.
"நம்ம புள்ளையை நான் கொல்லுவேனா…" மன்றாட,
"ஆமா நீ தான் கொன்னுட்ட. என் பிள்ளைய கொன்னுட்ட. கொலைகாரன் நீ…" என்று தன்னிடமிந்து தள்ளியிருந்தாள்.
"சத்தியமா நான் அப்படி நினைக்கலம்மா. என்னை நம்பு" என்று கெஞ்ச,
"நினைக்கலைன்னா நீ எதுக்குடா குழந்தை வேணாம்னு சொன்ன சொல்லு. அதுக்கு என்ன அர்த்தம்…" என்று வெறி பிடித்தவள் போல ஆவேசமாக கத்தி அவனை உலுக்க,
அவன் செய்வதறியாது அதிர்ந்து நின்றுவிட்டான். அவளிடமிருந்து இப்படி ஒரு ஆக்ரோஷத்தை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
அவனுக்கு தெரிந்த ப்ரஷாந்தி அதிர்ந்து கூட பேச தெரியாதவள். ஆனால் இப்போது கண்முன் காண்பது…?
அவனிடமிருந்து பதில் வரவில்லை. அவளிடமிருந்த ஆக்ரோஷமும் குறையவில்லை.
"சொல்லுடா சொல்லு எதுக்கு என் குழந்தையை எதுக்கு கொலை பண்ண. நீ வேணாம்னு சொன்னதுனால தான் அது உலகத்தை விட்டு போயிடுச்சு" என்று உச்சஸ்தாயியில் கத்த,
எல்லோரும் உள்ளே கூடிவிட்டனர்.
மருத்துவரே வந்து பார்த்து மயக்க மருந்தை செலுத்திவிட்டு சென்ற பின்பு மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.
ஹரி நொறுங்கி போய் அமர்ந்துவிட்டான். ப்ரஷாந்தியின் குடும்பத்தினருக்கு ஹரியிடம் என்ன ஆறுதல் கூறுவதென தெரியவில்லை.
நிஷாந்தியின் கணவன் முகிலன் தான் வந்து அவனை தேற்றும் விதமாக பேசினான்.
இருந்தும் ஹரியால் அதிர்ச்சியிலிருந்து வெளிவர இயலவில்லை.
ஏற்கனவே தன்னால் தான் இத்தனை இழப்பு என்று நினைத்தவனின் குற்றவுணர்வை மேலும் அதிகரித்துவிட்டாள்.
அவளது இந்நிலைக்கு காரணம் தான் மட்டுமே என்று நினைத்து மருகி வருந்தி வேதனையில் தவித்தான்.
அவள் கூறியது போல தான் கொலைகாரன் தான். என் பிள்ளையை நானே கொலை செய்துவிட்டேன்.
அவள் கூறியது போல நான் வேண்டாம் என்று கூறியதால் தான் என் பிள்ளை என்னை விட்டு சென்றுவிட்டது.
கண் காணாத இடத்திற்கு சென்று விட்டது. என்னால் பார்க்க முடியாமல் மறைந்துவிட்டது…
எங்களுக்காக உலகில் தோன்றிய முதல் ஜீவனை நானே அழித்துவிட்டேன். வார்த்தையால் வதைத்து விட்டேன் என்று வருந்தி வாடினான்…
அதன் பின்னர் ப்ரஷாந்தி ஒவ்வொரு முறை கண் விழிக்கும் சமயமும் இது தான் நடந்தது.
நினைவு வந்தாலே கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கினாள்.
ஏமாற்றத்தை ஏற்க முடியாது கோபத்தில் தன்னை மறந்து ஆக்ரோஷமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள். குடும்பத்தினரிடம் சண்டையிட்டாள்.
ஹரியை பார்த்தாளே அத்தனை ஆவேசத்துடன் நடந்து கொண்டாள். அவனது முகத்தை பார்க்கவே மறுத்தாள்…
அவனால் குழந்தை இறந்துவிட்டது என்று ஆழ்மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதை வெளிப்படுத்தவும் செய்தாள்…
"இனி என் வாழ்வில் வராதே. உனக்கு என் வாழ்வில் எந்த இடமும் இல்லை. என் கண் முன் வராதே…" என்று கத்தி தன்னை காயப்படுத்தி கொண்டாள்…
உடல் நிலை சரியாகி வீடு திரும்பும் நிலை வரும் போதும் அவனை காண மறுத்துவிட்டு பெற்றோருடன் சென்றுவிட்டாள்…
குழந்தை விடயத்தில் விழுந்த விரிசல் அவளது கோபத்தால் பிரிவாக மாறி போனது…
ஒரு கட்டத்தில் வாழ்வை வெறுத்த ஹரி, 'தன்னால் அவளுக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம்' என நினைத்து விலகி சென்றுவிட்டான்.
அவளது கண்ணில் படாத தூரத்தில்.
உடல் நலம் குணமடைந்து வீடு திரும்பிய பிறகு ப்ரஷாந்தியின் மனநிலை நாளுக்கு நாள் மோசமாகியது…
"இந்நேரம் என் குழந்தை இருந்திருந்தால் எப்படி வளர்ந்திருக்கும். என் வயிறு பெரிதாகி இருக்குமே…" என்று எந்நேரமும் அதே சிந்தனை தான்.
ஒரு மீளாத் துயரில் ஆழ்ந்து போனாள்.
இந்த குழந்தை போனால் என்ன அடுத்த குழந்தை பிறக்கும் என்று மற்றவர்கள் கூறலாம்.
ஆனால் எத்தனை குழந்தை இருந்தாலும் இல்லாமல் போன அந்த குழந்தையை பெற்ற உள்ளம் என்றுமே மறக்காது என்பது இழந்தவர்களுக்கு தான் தெரியும்.
எப்போது குழந்தை பற்றிய பேச்சு தான். தனக்கு தானே பேசி கொண்டு ஒரு வித ஒதுக்கத்தை எல்லோரிடமும் காண்பித்தாள்…
நண்பர்களை கூட பார்க்க மறுத்துவிட்டாள்…
அறையை விட்டு வெளியே வருவதில்லை.
சில நேரம் பேசினால் சில நேரம் ஆழ்ந்த அமைதி அவளிடம். நாட்கள் செல்ல செல்ல நடந்ததை மறந்து சரியாகிவிடுவாள் என மற்றவர்கள் நினைத்திருக்க, அவளது நிலை அதள பாளத்திற்குள் விழுந்திருந்தது.
ஒரு கட்டத்தில் மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்ற போது அவர் ப்ரஷாந்தி மிக அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளானதாக கூறிவிட்டார்.
அதன் பிறகு நிறைய ஆலோசனைகள் மருந்துகள் அவளது வாழ்வில் இடம் பிடித்தது.
நிறைய ஆலோசனைகளுக்கு பிறகு சில மாற்றங்கள் அவளிடம் தென்ப்பட்டது…
நாட்கள் செல்ல செல்ல மனநிலையில் அவளிடம் நல்ல முன்னேற்றம்.
ஆனால் அவளது இயல்பை மொத்தமாக தொலைத்திருந்தாள்…
எந்நேரமும் பேசி கொண்டே இருப்பவள் இப்போது அமைதியின் உருவமாகி போனாள்.
தேவைகேற்ற பேச்சு. எப்போதாவது தென்படும் சிறு புன்னகை.
தனியாக பிளாட் எடுத்து குடியேறினாள். பெற்றவர்கள் தடுத்தும் கேட்கவில்லை.
பள்ளி கால நண்பனது நிறுவனத்திலேயே பணிக்கு சேர்ந்தாள்.
பின்னர் தீக்ஷி பிறந்த பிறகு ஓரளவு மனநிலையில் மாற்றம். அவளை பார்க்கவென பிறந்த வீட்டிற்கு வந்து செ
ல்வாள்…
நாட்கள் அதன் போக்கில் செல்ல அவளும் அதனோடு செல்ல பழகினாள்.
ஹரியை பற்றி பின்னர் அவனது குடும்பத்தினர் பேசவும் இல்லை. அவனை தொடர்பு கொள்ளவும் முயலவில்லை.
அவ்வப்பொழுது எழும் ஹரியின் நினைவில் ஒரு நொடி நின்றாலும் அடுத்த கணமே அதனை ஒதுக்கி தள்ளி வாழ பழகி கொண்டாள்.
ஆனால் என்ன முயன்றும் அவளது குடும்பத்தினரால் பழைய ப்ரஷாந்தியை மீட்க முடியவில்லை.