• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
591
Reaction score
836
Points
93
கவிதை 14


மறுநாள் காலை உறக்கத்திலிருந்து கண்விழிக்க முதலில் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் விழித்த ப்ரஷாந்திக்கு தனக்கு திருமணமானது நினைவு வர இதழ்களில் ஒரு புன்னகை பிறக்க எழுந்து முகம் கழுவ சென்றாள்.


முகம் கழுவி காலை கடன்களை முடித்து விட்டு வெளியே வர ஹரி கிச்சனில் நின்றிருப்பது தெரிந்தது.


ப்ரஷாந்தி உள்ளே நுழைய அவளரவம் கேட்டு திரும்பியவன்,
"எழுந்துட்டியா ப்ரஷாந்தி ஒரு டூ மினிட்ஸ் காஃபியை சுட வைக்கிறேன்…?" என்று பதிலளித்தவனுக்கு அவளது விரல் காயம் நினைவு வர,

"கை எப்படி இருக்கு…? வலிக்குதா…?" என்று பிடித்து பார்க்க,


"ஹ்ம்ம் சரியாகிடுச்சு எந்த வலியும் இல்லை…" என்றவளுக்கு அப்போது தான் அவளுக்கு தான் இனி அவனுக்கு அனைத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என்று நினைத்ததது நினைவு வர,

"சாரி ஹரி கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். நாளையில இருந்து நான் இயர்லியா எழுந்து குக்கிங் வொர்க் எல்லாம் பார்த்துக்கிறேன்…" என்று வருந்தும் குரலில் கூறினாள்.

"ஹே இதுக்கு எதுக்கு நீ சாரிலாம் சொல்ற. உனக்கு சீக்கிரம் எழுந்து பழக்கமில்லைன்னு எனக்கு தெரியும். உனக்கு எப்ப முடியுதோ அப்போ எழுந்திரி. உன்னோட பழக்கத்தை மாத்திக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. நீ நீயாவே இரு" என்று புன்னகைத்த படி காஃபியை நீட்டினான்.


அவன் பதிலில் அவளுக்கு தான் மேலும் குற்றவுணர்வாகி போக நாளை கண்டிப்பாக எழ வேண்டும் என்று மனதில் நினைத்தபடி தலையசைப்புடன் காஃபியை பெற்று கொண்டாள்…


நேற்று அவன் வாழ்வின் ஏக்கங்களை கேட்ட நொடியில் இருந்து எடுத்த முடிவு தான் இது. இனி அவன் தனக்கென யாருமில்லை என எப்போதுமே எண்ண கூடாது…


அவனுக்கு தான் எல்லாமாக இருக்கிறேன் என்று ஒவ்வொரு விடயத்திலும் உணர்த்த வேண்டும்.


தானே பார்த்து பார்த்து சமைக்க வேண்டும் அதை ஊட்டிவிட வேண்டும் என்று பற்பல சிந்தனைகள் அவளது மனதில் வரிசை கட்டி நின்றது…


யோசனையுடனே காஃபியை பருகியவள், "என்ன ஹரி செய்யுற…?" என வினவ,


"வைட் சாஸ் பாஸ்தா…" என்று திரும்பாமலே பதில் வந்தது.


அவன் பெரும்பாலும் இதையெல்லாம் விரும்பி சாப்பிட மாட்டான். தனக்காக தான் இது எல்லாம் என புரிந்தது.


"இன்னும் ஒரு டென் மினிட்ஸ்ல ரெடியாகிடும்… ஆல்மோஸ்ட் ஓவர். டேஸ்ட் பண்ணிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு…" என்றவன் மேல் நேசம் கரைபுரண்டு ஓட பின்னிருந்து படியே அவளை அணைத்து கொண்டாள்.


அவளது செயலில் இதழில் சிரிப்புடன், "என்ன காலையிலே குளிக்காம வந்து ஹக் பண்ற டேர்ட்டி கேர்ள்…" என்று அவளை தன் முன் புறம் இழுக்க,

அவனது சீண்டல் புரிந்தவள், "ஆமா டேர்ட்டி கேர்ள் தான் அப்படி தான் ஹக் பண்ணுவேன். இன்னும் கூட டைட்டா பண்ணுவேன்" என்று மேலும் இறுக்கி கொண்டவள்,

"நான் ரொம்ப லக்கி ஹரி. நீ எனக்கு லைஃப் பார்னரா வந்ததுக்கு…" என்றாள்…


"இப்போ எதுக்கு இந்த காம்ப்ளிமென்ட் இந்த பாஸ்த்தாவுக்காகவா…?" என்று நகைத்தான்.


அவள் எதாவது தீவிரமாக பேசி நேற்றைய விடயத்திற்கு மீண்டும் வந்துவிடுவாளோ என்று அஞ்சியே அவளது பேச்சை கிண்டலடித்து மாற்றிவிட்டான்…

அவனை முறைத்தவள், "அதுக்காக ஒன்னும் சொல்லலை…" என்க,

"ஹே ஐ ஆம் ஜெஸ்ட் கிட்டிங் டா…" என்றபடி அவளை மீண்டும் அணைத்து கொண்டான்.

"தெரியும்…" என்றவள்,

"ஹரி நீ எனக்காக தான் இந்த பாஸ்த்தா எல்லாம் ஸ்பெஷலா செய்ய வேண்டாம். நீ எப்பவும் சாப்பிட்றதையே ரெண்டு பேரும் சாப்பிட்டுக்குவோம்…" என்று தீவிரமாக பேச,


சரி என்பதாய் தலையசைத்தவன்,

"டெய்லிலாம் செய்ய முடியாது. ஆபிஸ்க்கு ரெடியாகவே டைம் கரெக்டா இருக்கும். லீவ் டேஸ்ல தான் பண்ணுவேன். இந்த குட்டி மூளைய வச்சிக்கிட்டு ரொம்ப திங்க் பண்ணாத போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்…" என்றான்.


சரியென்றவள் குளித்துவிட்டு வர ஹரி சமையல் வேலை அனைத்தையும் முடித்திருந்தான்.


அவள் வந்ததும் இருவருக்கும் உணவை எடுத்து வைக்க உணவை எடுத்தவள் அவன் வாயருகே கொண்டு சென்றாள்…


அவனுக்கு புரிந்தது. இது தான் நேற்று கூறியதன் விளைவு என்று ஏதும் பேசாமல் புன்னகையுடன் உணவை வாங்கி கொண்டவன் தானும் அவளுக்கு ஊட்டிவிட்டான்…


இருவரும் சாப்பிட்ட பிறகு ப்ரஷாந்திக்கு அலுவலகத்திற்கு போட்டு செல்ல உடை வாங்க வெளியே சென்று வர அன்றைய பொழுது மிகவும் அழகாகவே சென்றது…


அதன் பின்னர் ப்ரஷாந்தி தான் நினைத்த படியே விரைவாக எழ பழகியிருந்தாள்…


முதலில் அலாரம் வைத்தவளுக்கு பின்னர் அது தேவையில்லாமல் போயிற்று…


அவனுக்கான அனைத்து வேலைகளையும் தானே பார்த்து பார்த்து செய்தாள்…


தன்னால் இயன்ற அளவு யூ ட்யூபை பார்த்து சமைத்தாள்…


அவள் எப்படி சமைத்திருந்தாலும் தனக்காக சமைக்கிறாள் என்ற எண்ணமே உவகை தர புன்னகையுடன் அதனை உண்டான்…

பிறந்ததிலிருந்தே வளமையான வாழ்விற்கு பழக்கப்பட்டவளுக்கு இந்த எளிமையான வாழ்க்கை மிகவும் கடினமாக தான் இருந்தது.


இருந்தும் அதனை கடந்து வாழ பழகினாள்…


இருவருக்கும் நிற்க நேரமில்லாமல் அலுவலக நேரம் பிடித்து கொள்ள வார கடைசி விடுமுறையில் தான் ஆசுவாசம் கிடைத்தது.


கிடைத்த நேரத்தை அழகாக தங்களுக்காக மாற்றி கொண்டனர்…


தெளிந்த நீரோடையாக வாழ்க்கை அவர்களை அழைத்து சென்றது…

அன்று ப்ரஷாந்திக்கு அலுவலக வேலை விரைவிலே முடிந்துவிட்டதால் வீட்டிற்கு வந்து சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாள்…


ஹரிக்கு அலுவலகம் அவர்களது பிளாட்டிலிருந்து பக்கம் தான்…


ஆனால் ப்ரஷாந்திக்கு வெகுதூரமாக இருந்தது பேருந்தில் போய் வர பழகி கொண்டாள்…


"ஹரி அவளது அலுவலகத்திற்கு அருகிலேயே ஒரு பிளாட்டை பார்த்து குடியேறலாமா…?" என்று வினவியதற்கு வேண்டாம் என மறுத்துவிட்டிருந்தாள்…


இன்று அவனுக்கு மிகவும் பிடித்த பூரியை சுடலாம் என்று முடிவு செய்தவள் சப்பாத்தி மாவை எடுத்து பிசைந்து வைத்தவள் அவன் வந்ததவுடன் தேய்த்து கொள்ளலாம் என எடுத்து வைத்து விட்டு வீட்டை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டாள்…


இருவரும் இருந்தால் ஆளுக்கொரு வேலையாக முடிந்துவிடும்…


ஹரி அலுவலகம் முடிந்து வந்து கதவை திறக்க அவனை வரவேற்றது ஓரு சிறிய ஸ்டெப் ஸ்டூலில் ஏறி நின்று துடைத்து கொண்டிருந்த ப்ரஷாந்தியின் தோற்றம்…


இப்போதெல்லாம் வீட்டிற்கு வரும் நொடி ஹரிக்கு சொல்ல முடியாத உணர்வு…


இத்தனை நாள் வீட்டிற்கு வந்து யாருக்குமற்ற தனிமையே அவனே வரவேற்கும்…


இருட்டினுள் தன்னை தொலைத்திடும் வெறுமையை அவன் வெறுத்திருந்தான்…

ஆசிரமத்தில் இருந்த‌ வரை அங்கிருந்தவர்களுடன் நேரம் சென்றுவிடும்.


கல்லூரி விடுதியிலும் அவ்வாறு தான். ஆனால் இந்த பிளாட் எடுத்து தங்கிய போது ஆள் அரவமற்ற தனிமை அவனை அச்சப்படுத்தியது…


தன்னை மொத்தமாக விழுங்கி கொள்ளும் தனிமை அவனுக்கு பிடிக்கவில்லை.


இந்த பிளாட்டிற்கு வந்த நான்கு மாதங்களை அவன் வெறுத்தான்…


ஆனால் இப்போது அவனுக்காகவே அவனை எதிர்பார்த்து அவனது காதல் மனையாள்.


நினைவே நன்னெஞ்சில் தித்திப்பாய் ஒரு சாரலை தூவியது…


அவனை தனிமை துயர் நீக்க வந்த யட்சி அவள்…

சிலவற்றை வார்த்தைகளால் விவரிக்க முடியாது… வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.

அது போல தான் அவனுடைய வாழ்க்கை அனுபவம்…

கீழுதட்டை அழுந்த கடித்த படி எக்கி எக்கி துடைத்து கொண்டு இருந்தாள்…

ஸ்டூல் போட்டும் அவளுயரத்திற்கு எட்டவில்லை. பார்த்தவனின் இதழ்களில் புன்னகை தாமாக வந்து அமர்ந்து கொண்டது…


அமைதியாக ஆர்பாட்டமில்லாமல் அவளை உள்வாங்கினான்.


க்ரிம்சன் கலரில் ஒரு ரௌண்ட் நெக் டீ சர்ட்டும் த்ரீ போர்த்தில் ஒரு ட்ராக் ஸூட்டும் அணிந்திருந்தவள் இப்போது தான் முகத்தை கழுவியிருப்பாள் போலும். ஆங்காங்கே நீர்த்துளிகள் வைரங்களாக மின்னி கொண்டு இருக்க அவற்றை இதழ்களால் அமிழ்த்திட மனம் அவா கொண்டது…


அவன் வந்ததை அவள் இன்னும் உணரவில்லை போல. கருமமே கண்ணாக தனது வேலையில் கவனமாக இருந்தாள்…


கையிலிருந்த பேக்கை ஓரமாக வைத்தவன் தானும் மிகச்சிறிய அளவில் இடமிருந்த அந்த ஸ்டெப் ஸ்டூலில் ஏற ஒரு நொடி இதயம் துடிப்பை நிறுத்திவிட பயந்துவிட்டாள்…


திரும்பி பார்த்து அவனது இருப்பை உணர்ந்தவள்,

" பயத்துட்டேன் ஹரி… வந்துட்டேன்னா ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா…? எப்போ வந்த…? என்க,

"இப்போ தான் வந்தேன்…" என்றவன்,

"உனக்கு எட்டலைல அதான் ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்…" என்றான்.


"ப்ச் ஆமா ஹரி எவ்ளோ ட்ரை பண்ணியும் என்னால அதை துடைக்க முடியலை. நீயே பண்ணு" என்றபடி இறங்க பார்க்க,

"எங்க போற நில்லு ரெண்டு பேரும் சேர்ந்தே பண்ணுவோம்…" என்ற படி அவளை அணைத்தவாறு நின்றவன் துடைக்க தொடங்க,


ப்ரஷாந்தி தான் அவனது நெருக்கத்தில் நெளிந்தாள்…


வேலை விட்டு வந்தவனின் வியர்வை வாசமும் சூடாக அவள் முகத்தில் மோதிய மூச்சு காற்றும் அவளை அவஸ்த்தை பட வைத்தது.


அவளை நிலையை கண்டு உள்ளுக்குள் புன்னகைத்தவன் கவனியாது அவளை மேலும் நெருங்கியவன் துடைக்கும் வேலையை தொடர்ந்தான்.


இவள் அவனது நெருக்கத்தை தாளாமல், "ஹரி நான் இறங்கிக்கிறேன். நீ அப்புறம் செய். ரொம்ப கன்ஜஸ்ட்டடா இருக்கு…" என்று அவஸ்தையுடன் கூற,


"இதோ முடிக்க போறேன். டூ மினிட்ஸ்" என்றவன் துடைத்துவிட்டு இறங்க,


ப்ரஷாந்தி அப்போது தான் ஆசுவாசமாக மூச்சை விட்டாள்…


ஆனால் அதை தடுக்கும் விதமாக அவள் இறங்கும் முன் கைகளில் ஏந்தியிருந்தான் இந்த காதலன்…


திடும்மென்ற அவனது செயலில் அவள் அதிர்ந்து பார்க்க அவனோ அவளை ரசனையுடன் பார்த்த படி இருந்தான்.


அவனது பார்வையில் இவளுக்கு அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது…


உள்ளுக்குள் என்னவோ செய்தது. முயன்று பார்வையை திருப்ப,


அவனது விழிகள் அவளது கன்ன கதுப்பில் இருந்த நீர்த்துளியின் மேல் விழுந்தது.


இத்தனை நெருக்கத்தில் அவா பேராசையாக உருபெற தனது இதழ்களால் அதை துடைத்தெடுக்க ப்ரஷாந்தி விழிகளை இறுக்கமாக மூடியபடி அவனது சட்டை காலரை அழுத்தமாக பற்றி கொண்டாள்…


கன்ன கதுப்பில் இருந்த இதழ்கள் மெல்ல அவளது கன்னத்தின் மையத்தில் வந்து அதன் மென்மையை சோதிக்க அவள் அப்படியே உறைந்து போனாள்…


உடல் லேசாகி பறப்பது போல பிரம்மை… அவனதரங்கள் கன்னத்தில் உரச உள்ளுக்குள் காதல் தீ பற்றியது…


முத்தம் பல நிமிடங்களை விழுங்கி கொள்ள ஹரி முகத்தை நிமிர்த்தி பார்க்க இறுக விழிகளை மூடியிருந்தவளின் கன்னம் அவனது எச்சில் பட்டு மினுமினுத்து கொண்டு இருந்தது…


நொடிகள் கடந்தும் அவள் விழிகளை திறக்காது ஒரு வித மோனநிலையில் இருக்க, "ப்ரஷாந்தி போதும் மத்ததை சாப்பிட்டு பாத்துக்குவோம்…" என்றவனின் கூற்றில் சட்டென விழிகளை திறந்தவளது முகம் குப்பென சிவந்து போனது…


அவனிடம் இருந்து இறங்கி அவனுக்கு முதுகை காட்டியபடி நின்று கொண்டாள்…


அவளது கூச்சத்தை உணர்ந்தவன்,"எனக்கு ஒரு காஃபி கிடைக்குமா…?" என்று அவளை சகஜமாக்கும் பொருட்டு வினவ,


"ஹ்ம்ம்…" என்ற முனங்கலுடன் சமையலைறைக்குள் நுழைந்து கொண்டாள்…


ஹரியும் சிரித்தபடியே ப்ரெஷ் ஆகி வர அவனுக்கான காஃபியை ஹாலில் உள்ள நாற்காலியில் வைத்து விட்டு மாவை தேய்க்க தொடங்கினாள்…


இன்னும் அவள் தான் தந்த முத்தத்திலிருந்து வெளிவரவில்லை என்றறிந்தவன்,


காஃபியை பருகிய படி, "என்ன டின்னர்…?" என்று ஹாலில் இருந்தவாறே வினா தொடுக்க,


"பூரி போட்றதுக்கு தேய்க்க போறேன்…" என்று முகம் பார்க்காமல் பதிலளித்தாள்…


காஃபியை குடித்துவிட்டு கப்பை சிங்கில் போட சென்றவன் அவளை எட்டி பார்க்க பூரியை தேய்க்க தெரியாமல் அலங்கோலம் செய்த படி இருந்தவளை பார்த்து,

"என்ன இது இந்தியா மேப்பை தேய்த்து வச்சிருக்க…" என்று சிரிக்க தொடங்கிவிட்டான்…


அவனது நகைப்பில் திரும்பி இடுப்பில் கைவைத்தவாறு ப்ரஷாந்தி அவனை முறைக்க,

"ரியல்லி என்னால சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியலை…" என்றவனது நகைப்பில் அவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.


"தள்ளு நான் தேய்ச்சு தர்றேன்…" என்றவன் தேய்க்க தொடங்க,

ப்ரஷாந்தி அதனை பொறித்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாள்.


தேய்த்தபடி இருந்தவனின் கன்னக்கதுப்பு இன்னும் சிரிப்பில் துடிக்க அவனது கன்னக்குழியில் விழுந்தது அவளது ரசனை பார்வை…


மனைவியின் பார்வை கண்டு கொண்டவன் இதழோர சிரிப்புடன் திரும்ப சடுதியில் பார்வையை மாற்றி கொண்டாள் பாவை…


ஒருவருக்கொருவர் ரசனை பார்வையுடன் பூரியை போட்டு முடித்து சாப்பிட அமர்ந்தனர்…


ப்ரஷாந்தி அவனுக்கு ஊட்ட அவன் அவளுக்கு ஊட்டினான்…

திருமணமான மறுநாள் தொடங்கிய பழக்கம் இன்று வரை தொடர்கிறது…

சாப்பிட்டு முடித்து எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு அறைக்குள் நுழைந்தவளை பதற்றம் தொற்றி கொண்டது.

'மத்ததை நைட் பாத்துக்கலாம்' என்ற கணவனின் குரல் உள்ளுக்குள் எதிரொலிக்க ஒரு வித அவஸ்தையான ஆர்வமான மனநிலையில் உள்ளே சென்றாள்…


அவளது பின்னோடு வந்தவன் லைட்டை ஆஃப் செய்துவிட்டு படுக்கை சரி செய்து படுக்கையில் விழ உறங்க போகிறான் என்று அவளுக்குள் ஒரு வித ஏமாற்றம் சூழ தானும் அவனருகில் படுத்து கொண்டாள்.


அவள் படுத்த அடுத்த கணமே இடையில் கை கொடுத்து தன்னருகில் இழுத்தவனது இதழ்கள் அவளது கழுத்தில் அழுத்தமாய் உரசியது…


இவளுக்குள் தடதடத்த இதயம் குதிரை வேகத்தில் ஓட துவங்க அவனை ஆதரவிற்க்காக பற்றி கொண்டாள்…


கழுத்தில் அழுத்தி அச்சாரத்தை பதித்தவனின் இதழ்கள் மெதுவாக அவளது நெற்றி நாசி என வலம் வந்து இதழ்களில் தஞ்சம் புகுந்தது.


நொடிகள் நிமிடங்களாக கடக்க உயிரை உருக்கிடும் ஆழ்ந்த இதழணைப்பில் அவள் கரைந்து கொண்டிருந்தாள்.


அவளை தனக்குள் கரைத்து கொண்டிருந்தான்…


மெலிதாக சிறு சிறு தூறலாய் தொடங்கியவன் அடைமழையாக அடித்து சென்றுவிட்டான்…

மழை பெய்து ஒய்ந்த பின் வரும் மண் வாசமாய் அவளை நாசிக்குள் நிரப்பியவன் அவளுக்குள்ளும் நிரம்பி போனான்…

அவனது காதலில் திளைத்து மூச்சு முட்டிடும் வேளை அவனிலே அமிழ்ந்து போனாள்…

சின்ன சின்ன சப்தங்கள் அவர்களை நிறைக்க காதல் வெள்ளத்தில் தெரிந்தே மூழ்கி போயினர்…

ஆலிங்கனமாய் அவளுக்குள் விரவியவன் மொத்தமாக வாரி சுருட்டி கொண்டான்…


சிறு கிள்ளாய் தத்தி தவித்து மலங்
க விழித்து நின்றவளை உயிர் வரை ஊடுருவி திக்கு முக்காட செய்துவிட்டான்…

திணறல்களை திக்காமல் உள்வாங்கியவன் அமைதியாய் ஆர்பரிப்பில்லாமல் அழகாய் தனக்குள் பொருத்தி கொண்டான்…


மிச்சமான பொழுதுகள் இதழ் அச்சாரத்தில் மூழ்கிட மொட்டவிழும் பூவாய் அழகாய் மலர்ந்தது காதல்…


தொடரும்…

இவள் மீரா க்ரிஷ் ♥️♥️
























 
Top