• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
589
Reaction score
836
Points
93
கவிதை 12

கன்னத்தில் கையை வைத்த படி இருந்தவன், "தாங்க்ஸ்…" என்ற வார்த்தை உதிர்க்க,

'எதற்கு' என்னும் விதமாக புருவம் உயர்த்தினாள்.


"எல்லாத்துக்கும்…" என்று பதிலளித்தவன் அவளது கரங்களை விட்டுட்டு பால்கனிக்கு சென்று நின்று கொண்டான்.


தலைகால் புரியாத மகிழ்ச்சி என்பார்களே அந்த நிலை தான் அவனுடையது.

பேச வார்த்தைகள் வரவில்லை. உணர்ச்சி குவியலான நிலை…


இத்தனை வருடங்களாக இருந்த அநாதை என்ற வார்த்தை அவன் அகராதியில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. நீக்கிவிட்டாள் அவனது மனையாள்…

பாரியவன் மேற்கில் மறைய தொடங்கியிருக்க சற்றே கருமை படற தொடங்கிய வானத்தை பார்த்தபடி நின்றுவிட்டான்.


அவளுக்கு தான் அவனது பதிலின் அர்த்தம் விளங்காது போக அவன் பின்னோடு சென்றவள்,

"எல்லாத்துக்கும்னா என்ன மீனிங்ல சொல்ற ஹரி…" என்க,


பால்கனி கம்பியை பிடித்த படி திரும்பி நின்றவன், "அது சொன்னா புரியாது…" என்றான்.


'சொன்னா புரியாது' என்ற வார்த்தைகள் அவளை சீண்டிவிட,

"என்ன புரியாது. பர்ஸ்ட் நீ சொல்லு எனக்கு புரியுதா இல்லையான்னு அப்புறம் பார்ப்போம்…" என்று அவன் முன்னே வந்து நின்று கொண்டாள்.


ப்ரஷாந்தி எப்போதும் இப்படி தான். உனக்கு புரியாது தெரியாது என்று கூறினால் அதை செய்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பாள்…


சிறு குழந்தையின் வீம்புடன் தன் முன்னால் நிற்பவளை பார்த்து இதழ்களில் புன்னகை எழ, அவளது தோள்பிடித்து அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தவன் அவளது காலடியில் அமர்ந்து அவளது கரங்களை பற்றி கொண்டான்.


'என்ன இப்படி காலடியில் அமர்ந்து விட்டான்' ப்ரஷாந்தி அதிர்ந்து பார்க்க,


"சின்ன வயசுல ஸ்கூலுக்கு போகும் போது நிறைய பசங்களை அவங்கம்மா அப்பா கொண்டு வந்துவிடும் போது எனக்கும் அவங்களை பார்த்து ஆசையா இருக்கும். நமக்கும் அம்மா அப்பா எல்லாம் இருந்தா காலையில எழுப்பி குளிக்க வச்சு தலைவாரி சாப்பாடு ஊட்டி ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போனா எப்படி இருக்கும்னு… எனக்கு இதெல்லாம் செய்ய யாருமே இல்லை. நானா எழுந்து குளிச்சு ட்ரெஸ் போட்டு ஸ்கூலுக்கு கிளம்பணும்"


"..."


"ஆர்ப்னேஜ்ல இருக்கும் போது மத்த ஸ்கூல் பசங்களை பார்த்து எனக்கும் அம்மா அப்பா வேணும்னு அடிக்கடி அழுது அடம் பிடிப்பேன். அப்போ அங்க இருக்க இன்சார்ஜ் உன்னோட அம்மா அப்பா ஊருக்கு போயிருக்காங்க. சீக்கிரமா வந்திடுவாங்கன்னு சொல்லி சமாதான படுத்துனாங்க…"


"..."


"நானும் அவங்க சீக்கிரமா வந்திடுவாங்க. என்னை அழைச்சிட்டு போயிடுவாங்க. எனக்கும் அம்மா அப்பா எல்லாம் கிடைப்பாங்கன்னு நம்பிட்டு இருந்தேன். தினமும் காலையில எழும் போது இன்னைக்கு நம்ம அப்பா அம்மா வந்திடுவாங்கன்னு நான் எதிர்பார்த்துட்டே இருப்பேன். ஒரு கார் சவுண்ட் கேட்டா போதும் நம்மள தேடி தான் அம்மா அப்பா வந்துட்டாங்க போலன்னு ஓடி போய் பார்ப்பேன். ஆனால் யாராவது பணக்கார வீட்டு பசங்க பர்த்டேக்கு எங்களுக்கு புட் கொடுக்க வந்திருப்பாங்க…"


"..."


"இப்படியே நிறைய தடவை ஏமாந்து போயிருக்கேன். அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல வளர்ந்த பிறகு தான் தெரிஞ்சது. அப்படி யாருமே என் லைஃப்ல இல்லைன்னு. எதார்த்தம் புரிஞ்சது. கடவுள் எனக்குன்னு எந்த சொந்தத்தையும் விட்டுட்டு போகலைன்னு…" என்ற வரிகளை கூறும் போதே அவன் குரல் கரகரக்க,

கலங்கிய விழிகளுடன், "வேணாம் ஹரி…" என்றாள்.


"ம்ஹூம் என்னை பேச விடு… என் மனசுல இருக்கதை சொல்ல கூட இதுவரைக்கும் என் லைஃப்ல யாருமில்லை…" என்றவனின் கூற்றில் அவன் உணர்ச்சி வசப்பட்டிருப்பதை உணர்ந்தவள் அவன் பேசுவதை கேட்கலானாள்…


"அப்போ ரொம்ப அழுதேன். அந்த வயசுல அது ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. இன்சார்ஜ் கிட்ட கேட்டேன் என் அம்மா அப்பா யாருன்னு தெரியுமான்னு. என் அம்மா அப்பா ஏதோ ஆக்சிடென்ட்ல இறந்துட்டதாவும் நான் மட்டும் அதுல பிழைச்சிட யாரோ தெரியாவதவங்க இங்க வந்து சேர்த்துவிட்டதா சொன்னாங்க…"


"...."


"அதை கேட்டு அவ்ளோ வருத்தமா இருந்துச்சு. அவங்க கூடவே நானும் இறந்து போயிருக்க கூடாதுன்னு நினைச்சேன். அம்மா அப்பா குடும்பம்ன்ற என்னோட ஆசை எல்லாம் மனசுல ஏக்கமா மாறிடுச்சு… ஸ்கூல்ல பங்க்ஷன் வச்சு காம்பெடிஷன் வின் பண்ணா பேரண்ட்ஸ வரவழைச்சு ஸ்டேஜ்ல ப்ரைஸ் கொடுப்பாங்க. ஆனால் நான் மட்டும் எப்பவுமே தனியா தான் போய் ப்ரைஸ் வாங்குவேன். நான் ஸ்டேஜ்ல நிக்கிறதை பார்த்து சந்தோஷப்பட எனக்காக யாருமே கீழ உட்காந்திருக்க மாட்டாங்க…"‌ என்றவனின் கூற்றில் சிறுவயதில் உறவுகளுக்காக பாசத்திற்க்காக ஏங்கிய சிறுவனின் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக அவளுக்கு தெரிந்தது…


"..."


"அப்போ எல்லாம் எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை. எல்லார மாதிரியும் ஏன் எனக்கு பேமிலி இல்லைன்னு நைட் புல்லா அழுவேன். உடம்பு சரியில்லாம போனா கூட நம்மள பார்த்துக்க யாரும் இருக்கமாட்டாங்க. நம்மள நாம தான் பாத்துக்கணும். நிறைய டைம் பீவர் வந்து படுக்கும் போது அம்மாவோட மடி கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்னு ரொம்ப ஏங்கியிருக்கேன்"


"சாப்பிட்டியான்னு கேட்க கூட ஆள் இருக்காது. சாப்பாடு டைம்க்கு பெல் அடிப்பாங்க நாம ப்ளேட் எடுத்திட்டு போய் வரிசைல நின்னு வாங்கி சாப்பிடனும். யாராவது சாப்பிட்டியான்னு கேட்டா எவ்ளோ நல்லா இருக்கும்னு தோணும். ஆனால் நான் சாப்பிடவே இல்லைன்னாலும் யாரும் கேட்க மாட்டாங்க. ஸ்கூல் லஞ்ச் டைம்ல எல்லாரும் சாப்பிடும் போது அம்மா கையால சாப்பாடு கிடைச்சா நல்லாயிருக்குமேன்னு தோணும். ஆனால் இப்பவரைக்கும் எனக்கு அம்மா கையால சமைச்ச சாப்பாடு கிடைக்கலை. இவ்வளவு ஏன் இப்போ வரைக்கும் வீட்டு சாப்பாடு எப்படி இருக்கும்னு தெரியாது…"

"..."


"நாள் போக போக ஓரளவு மெச்சூரிட்டி வந்திச்சு. நான் என்ன அழுதாலும் எதுவும் மாறாதுன்னு தெளிவா தெரிஞ்சது. என்னோட ஏக்கங்களை எனக்குள்ளேயே புதைச்சுக்கிட்டு வாழ பழகிட்டேன். அப்புறம் காலேஜ் வந்தேன் ஹாஸ்டல்ல சேர்த்தேன். இடமாற்றம் இருந்துச்சு. ஆனால் என் மனசு தான் அப்படியே இருந்துச்சு. தெரியாம சின்ன அடி கூட பட்டிட கூடாதுன்னு அவ்ளோ கவனமா இருப்பேன். ஏன்னா எனக்கு எதுவும் வந்தாலும் பார்க்க நான் மட்டும் தான். எனக்காக வருத்தப்படவோ என் மேல பாசம் வைக்கவோ இந்த உலகத்தில யாருமே இல்லைன்ற எண்ணம் ரொம்ப ஆழமா பதிஞ்சு போச்சு. ஒரு கட்டத்துல விரக்தி அதிகமாகி கடைசி வரைக்கும் ஆநாதையாவே இருந்தே செத்துப் போயிடுவேனோன்னு கூட நினைச்சிருக்கேன்" என்று கூறுகையிலே கண்களில் கண்ணீரோடு அவனது வாயில் கை வைத்து இதற்கு மேல் பேசாத என்று தலையை இடம் வலமாக ஆட்டினாள்…


"நோ நான் பேசணும்" என்று அவளது கையை எடுத்து விட்டவன்,


"அப்போ தான் என் லைஃப்ல நீ வந்த" என்றவனின் இதழ்களில் பாலைவனத்தில் சிறு செடியாய் புன்னகை இழையோடியது.


"உன்னை பார்த்ததும் உன்னோட அந்த துறுதுறு பேச்சும் ஆக்டிவிட்டிஸூம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பர்ஸ்ட் டைம் உன்னை கேண்டின்ல தான் பார்த்தேன். ‌அப்புறம் அப்பப்போ எப்பவாது கேண்டின்லயோ இல்லை கிரவுண்ட்லயோ பார்ப்பேன். அப்போ ஒரு செகெண்ட்டாவது நின்னு உன்னை பார்த்திட்டு போவேன். ஆனால் உனக்கு நான் இருக்கது கூட தெரியாது… ‌ அப்புறம் கொஞ்ச நாள்ல என் மனசை உன் பார்க்கணும்னு எதிர்ப்பார்க்க ஆரம்பிச்சிடுச்சு"


"..."


"உன்னை பார்த்தாலே தெரிஞ்சது நீ கொஞ்சம் ரிச் பேமிலில இருந்து தான் வந்திருப்பேன்னு. சும்மா ஜெஸ்ட் பாக்கதான் செய்யுறோம் வேற ஒண்ணும் இல்லை. அவளோட ஸ்டேட்டஸ்க்கு முன்னாடி நீ பக்கத்துல கூட வர முடியாதுன்னு எனக்கு நானே அடிக்கடி எச்சரிக்கை பண்ணுவேன். இருந்தும் மனசுல ஒரு ஆசை இருந்துச்சு. அப்படியே வருஷமும் போச்சு நான் உன்னை பார்க்குறதும் தொடர்ந்துச்சு. ஆனால் ஒரு தடவை கூட நான் உன்னை கண்ணுக்கே தெரியலைன்றது எனக்கு வருத்தமாயிருந்துச்சு…"


"..."


"உனக்கு தான் அவளை பிடிச்சிருக்கு. நீ தான் அவளை பாக்குற. அவளுக்கு உன்னை பிடிக்கணும்ற எந்த அவசியமும் இல்லைன்னு என்ன நானோ சமாதானம் பண்ணிக்கிட்டேன். ஒரு தடவை கேண்டின்ல என்னை நீ தெரியாம இடிச்சிட்டு என் முகத்தை கூட பார்க்காம சாரி சொல்லிட்டு போய்ட்ட. அந்த செகெண்ட் உள்ளுக்குள்ள சொல்ல முடியாத வலி. அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை. அன்னைக்கு தான் தெரிஞ்சது நீ என் வாழ்க்கையில வர எந்தவிதமான வாய்ப்பும் இல்லைன்னு. இனிமேல் உன்னை பார்க்க கூடாது உன்னை பத்தி நினைக்க கூடாதுன்னு எனக்கு நானே கட்டுப்பாடு விதிச்சேன். ஓரளவுக்கு அதை ஃபாலோ பண்ணவும் செஞ்சேன். தெரியாம உன்னை பாக்க நேர்ந்தாலும் பாக்காம போய்டுவேன். பட் என் நினைப்புல இருந்து உன்னை போக வைக்க முடியலை" என்றவனின் குரலே அவனது வேதனையை பிரதிபலித்தது.




ஒரு கணம் கண்களை இறுக மூடி திறந்து அதை கிரகித்தவன் "அப்போ தான் நமக்கு கேரளா கான்பிரன்ஸ்க்கு போக சான்ஸ் கிடைச்சது. ஆனால் நான் அன்னைக்கு நைட் உன்கிட்ட பேசுவேன்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை. எதேச்சையா தான் உன்னை காரிடோர்ல பார்த்தேன். அப்போ உன்னை காப்பாத்துக்குறதுக்காக கைய பிடிச்சு இழுத்திட்டேன்"


"..."


"அப்போ தான் உன்கிட்ட பர்ஸ்ட் டைம் பேசுனேன். உன்னை அவ்ளோ பக்கத்துல பார்த்தேன். நீ என் முகத்தை பார்த்து பேசுனே. பட் அப்போ உனக்கு கான்சியஸ் இல்லை அதுனால தான் என்கிட்ட பேசுறியோன்னு ஒரு செகெண்ட் தோணுச்சு. பட் உடனே இல்லைன்னு எனக்கு நானே பதில் சொல்லிட்டு உன்கிட்ட பேசுனேன். உன் ஃப்ரெண்ட்ஸ் ப்ரஷின்னு கூப்பிட்றதை பார்த்திருக்கேன். பட் உன்னோட புல் நேம் தெரியாது. நீ என்கிட்ட பேசுன அந்த ஒரு நொடி அவ்ளோ சந்தோஷமா இருந்த்தது. உன்கிட்ட பேசிட்டே இருக்கலாம்னு ஆசை வந்துச்சு. உன்னை ரூம்ல விட்டுட்டு வந்த அந்த நைட் எனக்கு சந்தோஷத்துல தூக்கமே வரலை…"


"..."


"மறுநாள் உன்னை ரெஸ்டாரன்ட்ல பார்க்கும் போது நீ என்னையே பார்த்திட்டு இருந்ததை பார்த்து தான் உன்கிட்ட பேச வந்தேன். நீ பாக்கலைன்னாலும் நான் உன்கிட்ட பேசியிருப்பேன் தான். ஏன்னா நைட் உங்கிட்ட பேசுனதுல இருந்து உன்னோட நினைவு வழக்கத்தைவிட அதிகமா இருந்துச்சு. உன்கிட்ட திரும்பவும் பேசணும்னு உள்ள ஆசை பொங்கி வந்துச்சு. பட் உனக்கு என்னை யாருன்னே அடையாளம் தெரியலை. சுருக்குன்னு உள்ள வலி. என்னோட ஆசை அப்படியே வடிஞ்சு போச்சு. பட் உனக்கு ட்ரிங்க் பண்ணதால தான் ஞாபகம் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன். என்கிட்ட பேசும் போது உன் கண்ணுல தெரிஞ்ச அந்த ஆர்வம் எனக்கு நல்லா புரிஞ்சது"


"..."


"என் முன்னாடி நீ கூச்சப்பட்டு நின்னியே அப்படியே ஒரு சொல்ல முடியாத பீல். தென் உன்னை கான்பிரன்ஸ் ஹால்ல பார்த்தேன். உனக்காக நான் ப்ரமிளா மேம்கிட்ட பேசி போட்டிங் பெர்மிஷன் வாங்குனேன். அப்போ தான் நீ என்கூட போட்ல வந்தா நல்லாயிருக்கும்னு ஒரு விபரீத ஆசை வந்துச்சு. பட் அடுத்த விநாடியே நீ உன் ஃப்ரெண்ட்ஸ விட்டுட்டு வரமாட்டேன்னு மூளை உரைக்கிற மாதிரி சொல்லுச்சு. எந்த விஷயத்திலயும் என் மேல கருணை காட்டாத கடவுள் உன்னோட விஷயத்தில காட்டிட்டார். உன் ஃப்ரெண்ட்ஸ விட்டுட்டு நீ மட்டும் தனியா போட்ல ஏறி என்கிட்ட பேசிட்டு வரும் போது எப்படி இருந்ததுன்னு சொல்ல தெரியலை. அப்புறம் சர்ச்ல வச்சு நீ எனக்காக வருத்தப்பட்டியே அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துது"


"..."


"இதுக்கு முன்னாடி நிறைய பேர் நான் அநாதைன்னு தெரிஞ்சு என்னை பாவமா பார்த்து இருக்காங்க. ஆனால் உன் கண்ணுல தெரிஞ்ச அந்த வருத்தம் எனக்கு அளவில்லா சந்தோஷத்தை கொடுத்திச்சு… கான்பிரன்ஸ் முடிஞ்சு காலேஜ்க்கு ரிட்டர்ன் ஆனதும் என்னோட ரொட்டின் லைஃப் மூவ் ஆச்சு. உன் ஞாபகம் வரும் போது உன் கூட கேரளால இருந்ததை நினைச்சு பார்த்துப்பேன். அதையே வச்சு வாழ்ந்துடலாம்னு நினைச்சேன். முன்னாடி எடுத்திருந்த தீர்மானத்தை அப்பவும் பாலோ பண்ண ஆரம்பிச்சேன். பட் உன்கிட்ட பேசி பழகிட்ட பிறகு அதை ஃபாலோ பண்ண ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இருந்தும் உன்னை பார்க்காம ஒரு வாரம் இருந்துட்டேன். அந்த ஒரு வாரம் என்னோட தவிப்பு அந்த கடவுளுக்கு கூட புரியாது"


"..."


"அந்த ரெஸ்டாரன்ட்ல உன்னை மீட் பண்ணுவேன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை. எனக்கு தெரியாது நீங்க அங்க ரெகுலர் கஷ்டமர்னு. நீயா வந்து என்கிட்ட பேசுனப்போ கடவுள் எனக்காக ஒரு சான்ஸ் கொடுத்த மாதிரி இருந்துச்சு. நானும் உன்கூட பேசுனேன். உன்னை பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். நீ ஒவ்வொரு டைம் சாப்பிட்டியான்னு கேக்கும் போது எனக்குள்ள ஒரு அளவிட முடியாத சந்தோஷம். நம்மையும் சாப்பிட்டியான்னு கேக்க ஒரு உறவு வந்திடுச்சுனு. நீ வந்ததுக்ப்புறம் என் வாழ்க்கை ரொம்ப அழகா மாறிடுச்சு. எனக்கு அம்மாவா அப்பாவா உறவா எல்லாமுமாவே நீ வந்துட்ட. என் வாழ்க்கையில நான் படிச்சு வாங்குன பட்டம் மாதிரி என் பின்னாடியே வந்த அநாதைன்ற வார்த்தைய அடைமொழிய இப்போ நீ தூக்கி எறிஞ்சுட்ட. ஒவ்வொரு முறையும் நான் அநாதைன்னு சொல்லும் போது வேதனையில தொண்டைக்குள்ள வார்த்தை மாட்டிக்கிரும்" என்று பேசியவனின் வார்த்தையில் மொத்தமாக உடைந்து போனவள்,

"வேணாம் இதுக்கு மேல எனது பேசாத என்னால தாங்க முடியாது…" என்ற கேவலுடன் அவனை இடையோடு அணைத்து கொண்டான்.


அவனும் பற்று கோலாய் அவளை அணைத்து கொண்டான்.


ப்ரஷாந்திக்கு கண்களிலிருந்து நீர் நிற்க்காமல் வழிந்தோடியது…


அவனது இத்தனை வருட போராட்டத்தை கேட்டவள் மொத்தமாக உடைந்துவிட்டாள். அவனது குரலில் இருந்த வேதனை வருத்தம் விரக்தி அவளை மொத்தமாக வாரி சுருட்டி கொண்டது. மனதின் மேல பாராங்கல்லை இறக்கியது போல பாரம் ஏறி கொண்டது…


அவனது காதல் நிலை குலைய செய்துவிட்டது. இத்தனை நாட்களாக தன்னிடம் சிரித்து பேசியவனுக்கு இப்படி ஒரு கருப்பு பக்கம் இருக்கும் என்று கனவில் கூட எதிர்ப்பார்க்கவில்லை.

அதுவும் சிறுவயதில் தாய் தந்தையரின் பாசத்துக்காக ஏங்கியதாக அவன் கூறிய நொடி ஒன்றுமறியா சிறுவனின் ஏக்கத்தினை ஏமாற்றத்தின் வலியை கண்டவளுக்கு நெஞ்சை பிசைந்தது.


அவனது காதலில் உள்ளம் சிதறியது. கடைசி வரை அநாதையாக இறந்துவிடுவோமோ என்றவனின் குரலில் இருந்த விரக்தி அதை ஆயிரம் பாகங்களாக உடைய செய்ய,


"இனிமேல் இப்படி எல்லாம் பேசாத ஹரி உனக்கு நான் இருக்கேன்.‌ எல்லாமுமா…" என்று தேம்பியவளின் கண்ணீர் உடைந்த அணையாய் பெருக்கெடுத்தது.


அவனது விழிகளிலிருந்தும் கண்ணீர் வழிந்தோடியது…


இருவராலும் அந்த சூழ்நிலையின் கணத்தை தாள முடியவில்லை. கடந்து வர முடியவில்லை.


நேரம் செல்ல செல்ல ப்ரஷாந்தியின் அழுகை அதிகமாகியது.


இத்தனை வருட சுமையை பாரத்தை போராட்டத்தை காதலை அவளிடம் இறக்கி வைத்து அவளிடம் சேயாய் மாறியவனுக்கு சிறிதளவு தெளிவு வந்திருந்தது.


அவனும் இதை இப்போது கூற வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏதோ உணர்ச்சிவசப்பட்டு விட்டான்.


அவள் தேம்பி தேம்பி அழுவதை கண்டு தன்னை தானே நிந்தித்தவன் நிதானித்து நிமிர்ந்து கொண்டு, "ப்ரஷாந்தி இங்க பாரு…" என்றழைக்க,


"ம்ஹூம்…" என்று அழுகையுடன் தலையசைத்தவள் அவள் தோளில் முகத்தை புதைத்து கொண்டாள்.


அவளது கண்ணீர் அவனது சட்டையை தாண்டி மார்பினை நனைக்க, "இங்க என் முகத்தை நிமிர்ந்து பாரு. அழுதது போதும் நிறுத்து…" என்று அவளது முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தினான்.


இறக்கி வைத்தவன் நிதானித்து விட்டான் அதனை வாங்கி கொண்டவளால் தான் பாரத்தை தாங்க முடியவில்லை.


அழுகையில் குலுங்கியவாறு அவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் இரண்டிலும் கண்ணீர் தழும்பி நிற்க அழுததில் முகம் மொத்தமாக கோவைப்பழமாக சிவந்து விட்டது.


'அதனை கண்டு வந்த முதல் நாளே அவளை இப்படி நிலைகுலைய செய்துவிட்டாயே…' என்று தன்னை தானே நொந்தவன்,


"எழுந்திரு வா வந்து பேஸ் வாஷ் பண்ணு. இது எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு…" என்று அவளை எழுப்ப,


"ஏன் என்கிட்ட இத்தனை நாள் இதெல்லாம் சொல்லலை. உனக்குள்ள வச்சுக்கிட்டே கஷ்டப்பட்டியா…?" என்றவள் மீண்டும் அவனது மார்பில் முகத்தை புதைத்து கொண்டாள்.


கரங்கள் இறுக்கமாக உன்னை விடமாட்டேன் என்று பிடித்து கொண்டது.


அவளது அழுகை இப்போதைக்கு குறையாது அழது ஓயட்டும் எ
ன்று எண்ணியவன், "இதோ இப்போ சொல்லணும்னு சொல்லலை. ஏதோ நீ கேட்கும் போது எமோஷ்னல் ஆகி சொல்லிட்டேன்" என்றவன் அவளின் உச்சியில் இதழை பதித்தான் ஆதுரமாக.



தொடரும்…

இவள் மீரா க்ரிஷ்♥️♥️
 
Top