உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தாய்!..
அத்தியாயம் 1
மெரீனா ட்ரைவ் இன் ரெஸ்டாரன்ட், ஆழப்புழா
அந்த இரவு நேரத்திலும் நியான் விளக்குகளின் ஒளியால் அரண்மனை போல ஜொலித்து கொண்டிருத்தது மெரீனா ட்ரைவ் இன் ரெஸ்டாரன்ட்.
அந்த உணவகத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள அறை எண் முன்னூற்றி இருபத்தி இரண்டில் தனது பூனைப் பாதாங்களால் சத்தமில்லாமல் நடையிட்டு கதவின் கைப்பிடியில் கை வைத்த ப்ரஷாந்தி மெதுவாக தன் தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்க்க அந்த காரிடோர் யாருமற்று அநாதையாக இருந்தது.
அதில் ப்ரஷாந்தி இதழ்களில் அழகாய் புன்னகை வந்து அமர்ந்து கொள்ள,
"வெளியே யாருமில்லை ஸ்டார்ட் பண்ணலாம்" என்று கட்டை விரலை உயர்த்தி காண்பித்தாள்.
அடுத்த கணமே அந்த அறையே அதிரும் வண்ணம், "ஹே…." என்ற கூச்சல் கேட்க,
"ஷ்… கத்தாம அமைதியா இருங்க. சவுண்ட் கேட்டு அந்த லேடி ஹிட்லர் வந்துட போகுது" என்று ஒரு விரலை இதழ்களின் மேல் வைத்தவள் மெல்லிய குரலில் கூறினாள்.
ரேஷ்மா, "ப்ச் ப்ரஷி இட்ஸ் பார்ட்டி டைம் சவுண்ட் போடாம எப்படி இருக்க முடியும் நீ டோரை லாக் பண்ணிட்டு வா. இது சவுண்ட் ப்ரூஃப் தானே…?" என்று வினவ,
ப்ரஷி, "டோரை லாக் பண்ணிட்டா அந்த லேடி ஹிட்லர் வந்தாலும் நமக்கு தெரியாது. எல்லாரும் சேர்ந்து மாட்டிக்குவோம்" என்று பதில் மொழிந்தாள்.
வருண், "ப்ரஷி சொல்றதும் கரெக்ட் தான்" என்று கூற,
அதனை அறையில் இருந்த மற்ற ஏழு நண்பர்களும் ஆமோதித்தனர்.
சஞ்சய், "கிரண் மட்டும் தான் நம்ம கேங்க்ல ட்ரிங்க் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கான். அவனை வெளிய நின்னு பார்த்துக்க சொல்லுவோம்" என்று இயம்ப,
மற்றவர்களுக்கும் அது நல்ல யோசனையாக தோன்றியது.
கிரண் உடனடியாக, "நோ வே என்னால முடியாது…" இரண்டு கைகளையும் விரித்துவிட்டான்.
மேனகாவும் வினுஷாவும், "எதுக்குமே யூஸா இல்லாம எதுக்கு நீ உள்ள இருக்க. போ போய் வெளியே நில்லு" என்று அவனை வெளியே தள்ளியிருக்க,
கிரண் வேறு வழியின்றி அவர்களுக்கு காவலாக நிற்க ஆரம்பித்தான்.
ரேஷ்மா, "இன்னும் எவ்ளோ நேரம். சீக்கிரமா சரக்கை எடுங்கடா…" என்று பொறுமையிழந்து மொழிய,
சஞ்சய், "இரு ரேஷ் அந்த ஹிட்லருக்கு தெரியாம எடுத்துட்டு வர எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியுமா…?" என்று வினவியவாறே தனது பேக்கிலிருந்து மது பாட்டில்களை எடுத்தான்.
ப்ரஷி தனது பேக்கிலிருந்து காக்னாக் கிளாஸ்களை எடுத்து வைக்க,
வருண் தான் எடுத்து வந்திருந்த ப்ரெஞ் ப்ரைஸை ஒரு பௌலில் கொட்டி எல்லோருக்கும் பொதுவாக வைத்தான்.
சஞ்சய் கிளாஸ்களில் பாட்டிலில் இருந்தவற்றை நிரப்பினான்.
எல்லோரும் ஆளுக்கொன்றாய் கிளாஸை எடுத்துக் கொள்ள,
சஞ்சய், "சியர்ஸ் சொல்லிட்டு ஸ்டார்ட் பண்ணுவோம்" என்றான்.
எல்லோரும் ஒரே நேரத்தில் "சியர்ஸ்" என்ற வார்த்தையை உதிர்த்திவிட்டு க்ளாஸை வாயில் சரித்தனர்.
ப்ரஷி, குடித்த அடுத்த நொடியே, "உவ்வே…இப்படி கசக்குது இதை எப்படி குடிக்கிறிங்க" என்று முகத்தை சுழிக்க,
வருண், "பர்ஸ்ட் டைம் அப்படி தான் இருக்கும். இந்தா இதை அப்படியே மொத்தமா குடி. போதை சுர்னு தலைக்கு ஏறும்" என்று பியர் பாட்டிலை நீட்டினான்.
ஒரு நொடி யோசித்தவள் பின்னர் அதை வாங்கி மொத்தமாய் வாயில் சரித்திருந்தாள்.
இப்படியே இரண்டாவது மூன்றாவது ரவுண்டை தாண்ட எல்லோரும் போதையில் உளற ஆரம்பித்திருந்தனர்.
வருணின் தொலைபேசி சிணுங்க கைகளால் துலவி அதனை எடுத்தவன் காதில் பொருத்தினான்.
மறுமுனையில் கிரண், "டேய் ஹிட்லர் செகென்ட் ப்ளோர்ல இருக்காம். அடுத்து இங்க தான் விசிட்" என்று கூறிய அடுத்த விநாடியே அழைப்பை துண்டித்தவன்,
"காய்ஸ் ஹரி அப் எல்லாரும் அவங்கவங்க ரூம்க்கு போங்க. ஹிட்லர் வர போகுது" என்று கூறினான்.
அவனது கூற்றில் போதையில் இருந்தவர்கள் அரக்க பறக்க எழுந்து தலை தெறிக்க ஓட ஆரம்பித்தனர்.
ப்ரஷாந்தி அதீத போதையில் இருந்ததால் அவளுக்கு ஏதும் புரியவில்லை.
சோபாவில் சாய்ந்திருந்தவளை ரேஷ்மா கையை பிடித்து இழுத்து செல்ல,
"ரேஷ் என் கையை விடு எங்க இழுத்துட்டு போற" என்று போதையில் உளறியவளின் மறுகையில் ஒரு கிளாஸ் இருந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் ரேஷ்மாவால் ப்ரஷாந்தியை இழுக்க முடியவில்லை.
எல்லோரும் தத்தமது அறையை அடைந்திருந்தனர்.
"நான் எங்கேயும் வரமாட்டேன்" என்று சட்டமாக அந்த காரிடோரின் தொடக்கத்தில் நின்றுக் கொண்டாள்.
ரேஷ்மாவிற்கு லேடி ஹிட்லர் என்ற அழைக்கப்படும் அவர்களது இன்சார்ஜ் ப்ரமிளா தூரத்தில் வருவது தெரிய,
ரேஷ்மா, "நீ இங்கயே கிடந்து மாட்டிக்கோ" என்று திட்டிவிட்டு தனதறைக்கு ஓடிவிட்டாள்.
ப்ரஷாந்தி நகராமல் அங்கேயே நிற்க, ப்ரமிளா அவளை அடையும் முன் வலிய கரமொன்று தீடீரென்று படிக் கட்டுகளின் இடைவெளியில் இழுத்திருந்தது.
எல்லாம் ஒரு நொடியில் நிகழ்ந்திருந்தது.
அந்த சிறிய இடைவெளியில் இருவரும் உரசாதவாறு நின்றிருந்தனர்.
ப்ரஷி தன்னை பிடித்தவனின் கரங்களை உதறி, "ஹே என்னை விடு நான் போகணும்" என்று உளறலாக கூற,
"ஷ்…போகலாம் ப்ரமிளா மேம் போகட்டும் உன்னை விட்றேன். இல்லைனா நீ மாட்டிக்குவ" என்று எதிலிருந்தவன் கிசு கிசுப்பான குரலில் பதில் மொழிந்தான்.
"ஓகே ஓகே ஓகே…" என்று வலது கை விரலை உதட்டின் மேல் வைத்தவள்,
பின் அவனுயரத்திற்கு எம்பி மெதுவாக அவனை போலவே கிசுகிசுவென குரலில், "அந்த லேடி ஹிட்லர் இங்கேயும் வந்துடுச்சா…?" என்று கூற,
அவளது பாவனையில் புன்னகைத்தவன், "ஆமா" என்று தலையசைத்தான்.
தன் இடது கையில் இருந்த கிளாஸை வாயில் கவிழ்த்தவள் எதிரில் இருப்பவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து, "உனக்கு வேணுமா…?" என்று வினவ,
அவன் இல்லை என்பதாய் தலையாட்டினான்.
ப்ரஷி, 'ப்ரமிளா சென்றுவிட்டாரா…?' என்று பார்ப்பதற்காக வெளியே எம்பி பார்க்க அவளால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை.
கால்கள் தடுமாறி அவன் மேல விழப் போக அவள் தோள்களை பிடித்து நிறுத்தினான் அவன்.
"சாரி மிஸ்டர்" என்ற குழறிய படி நிறுத்த,
எதிரில் நின்றிருந்தவன் இதழில் மலர்ந்த சிரிப்புடன், "ஐ ஆம் ஹரி கிருஷ்ணன்" என்றான்.
"ஐ ஆம் ப்ரஷாதி" என்று பெயரை புரியாத படி உளர,
ஹரி, "புரியலை" என்று தலையை இருபுறம் ஆட்டினான்.
"ப்ரஷாந்தி ப்ரஷாந்தி" என்று அழுத்திக் கூற,
"ப்ரஷாந்தி" என்றவன், "நைஸ் நேம்" என்று மொழிந்தான்.
"தாங்க் யூ ஹரி" என்றவள்,
"பட் என் நேம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது" என்று இயம்பினாள்.
ஹரி ஏன் என்பதாய் புருவம் உயர்த்த, அவள் பதில் கூறும் முன் யாரோ வரும் அரவம் கேட்க ஹரி எட்டிப் பார்த்து ப்ரமிளா தங்களை நெருங்கிவிட்டதை கண்டுக்கொண்டான்.
உடனே அவளை நெருங்கி உதட்டின் மேல் கையை வைத்தவன், "மேம் பக்கத்துல வந்துட்டாங்க" என்று கூறினான்.
ப்ரஷியும் பேச மாட்டேன் என்பது போல தலையை இருபுறமும் ஆட்டினாள்.
இதில் அவன் இதழ்கள் சிறு கீற்றாய் புன்னகைக்க அவளை மேலிருந்து ஆராய தொடங்கினான்.
அடர் பச்சை நிறத்தில் "ஃபர்" துணியால் செய்யப்பட்ட ஸ்னீக்கர்ஸ் கீழே அடர் கருப்பு நிறத்தில் ஜீன்ஸ் அணிந்து இருந்தவள் அதனை முட்டி வரை ஏற்றி விட்டு இருந்தாள்.
தலையில் மெஸ்ஸி பன் கொண்டை போட்டிருக்க அதில் தப்பிய கூந்தல் இழைகள் அவள் முகத்தில் அங்கும் இங்கும் வாசம் செய்திருந்தது.
வலது கையில் கருப்பில் ஒரு பேன்ட் இடது கையில் குவார்ட்ஸ் வாட்ச். காதில் சிறிதாக மின்னிய பிளாட்டின தோடு அசைந்தாட தலையை ஆட்டிய படி பேசினாள்.
ப்ரமிளா அந்த தளத்தை விட்டு நகர்ந்ததை உறுதி செய்தவன் அவளிடம் இருந்து கையை எடுத்தான்.
"அந்த ஹிட்லர் போயிடுச்சா…?" என்று ப்ரஷி வினவ,
"ஹ்ம்ம் கீழ ப்ளோருக்கு போயிருக்காங்க" என்று பதில் மொழிந்தான் ஹரி.
"இந்த ஹிட்லரை பார்த்தாலே எனக்கு பிடிக்காது. என் டாடி ஹிட்லர் நம்பர் ஒன். இது ஹிட்லர் நம்பர் டூ" என்று முகத்தை கொடூரமாக வைத்துக் கொண்டு அவள் கூறிய விதத்தில் சத்தமாய் சிரித்துவிட்டான்.
ப்ரஷி, "ஹே உன் கன்னத்துல குழி விழுகுது ஸோ க்யூட்" என்று அவனது கன்னக்குழியில் கை வைக்க,
அவனது புன்னகை சட்டென்று மறைந்தது.
அவளது விரலை கன்னத்திலிருந்து எடுத்துவிட்டவன், "தாங்க்ஸ்" என்று விட்டு, "வா உன் ரூம்ல உன்னை விட்றேன்" என்று முன்னே செல்ல,
அவன் பின்னே சென்றவள் தள்ளாடி விழப் போக ஹரி திரும்பி பிடித்துவிட்டான்.
"ஐம் ஒகே…பர்ஸ்ட் டைம் ட்ரிங்க் பண்ணி இருக்கேன் அதான்" என்றவள் அவனது இடது கையை பிடித்த படி நடந்தாள்.
ஹரி, "ப்ரஷாந்தி உன் ரூம் நம்பர் என்ன…?" என்று வினா தொடுக்க,
"த்ரீ த்ரீ த்ரீ" என்று மூன்று விரல்களை காண்பிக்க அவளது அறை வாசலுக்கு அழைத்து சென்றான்.
ப்ரஷாந்தி, "ஓகே ஹரி நானே உள்ள போய்க்குறேன் தாங்க் யூ" என்று தள்ளாட்டத்துடன் கூற,
"நிக்கவே முடியாம தள்ளாடுற. இதுல நீயே போய்க்கிறியா…?" என்றவன் கதவை அவளிடம் உள்ள கார்டின் மூலம் திறந்து உள்ளே அழைத்து செல்ல,
அவனது கையை உருவியவள் இரண்டு கைகளையும் கால்களையும் விரித்தவாறு போம் மெத்தையில் விழுந்தாள்.
அவளது அந்த போஸை பார்த்து இளநகை புரிந்தவன் பெட்ஷீட்டால் போர்த்திவிட்டு கதவை பூட்டிவிட்டு வெளியேறினான்.
……………………………
பெங்களூர் பனாஷங்கரி
ஆல்பா அபார்ட்மெண்ட்.
தனது ஹான்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டியவள் கதவை பூட்டிவிட்டு தட தட வென்று படிகளில் இறங்க தொடங்கினாள்.
அவள் ப்ரஷாந்தி. ஆலிவ் க்ரீன் நிறத்தில் முட்டி வரையிலான டாப்ஸ்ஸூம் அதற்கு பொருத்தமாக பர்புல் நிறத்தில் லெகின்ஸ் அணிந்திருந்தவளின் வலது கையை ஒரு சிறிய ப்ரேஸ்லெட்டும் இடது கையை வாட்ச்சும் ஆக்கிரமித்து இருந்தது.
இரண்டு தளத்தை கடந்த பிறகு தான் பென்ட்ரைவ்வை மறந்து விட்டு வந்தது நினைவு வந்தது.
ஒரு நொடி கால்களுக்கு தடை போட்டு பெருவிரலால் நெற்றியை தேய்த்தவள் மீண்டும் வந்த வழியே படிகளில் தடதடவென ஏற ஆரம்பித்திருந்தாள்.
வேகமாக கதவை திறந்து உள்ளே நுழைந்தவள் டீபாயின் மீது எடுத்து வைத்திருந்த பென்ட்ரைவ்வை ஹான்ட் பேக்கிற்க்கு இடம் மாற்றிவிட்டு மீண்டும் வெளியேறினாள்.
அபார்ட்மெண்டை விட்டு வெளியே வர நேற்று பெய்த மழையின் தாக்கம் மிச்ச சொச்சமாய் தூறல் விழுந்து கொண்டிருக்க காலை எட்டு மணியும் ஆறு மணி போல காட்சியளித்தது.
இரண்டு புற புல்வெளிகளுக்ககு இடையே சிமெண்ட் தரையால் நேராக போடப்பட்டிருந்த பாதையில் விறுவிறுவென நடந்தவள் கார் பார்க்கிங்கை அடைந்திருந்தாள்.
அங்கே அமர்ந்திருந்த காவலாளி எப்போதும் போல அவளை பார்த்து சினேகமாய் புன்னகைக்க பதிலுக்கு தானும் மெல்லிய கீற்றாய் புன்னகையை உதிர்த்தவள்,
தனது சிவப்பு நிற வெஸ்பாவில் ஏறி அதனை இயக்கி அலுவலகம் நோக்கி பயணமானாள் ப்ரஷாந்தி.
அவள் வழக்கம் போல ம்யூஸிக் ப்ளேயரை ஆன் செய்ய,
நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ் கொண்டதோ!...
உன்னை விட்டு உடல் மீளவில்லை
என் கால்கள் வேர் கொண்டதோ!..
ஹரிஹரன் உருகி பாடிக் கொண்டிருந்தார்.
கைகள் ஒரு விநாடி இயக்கத்தை நிறுத்தி விட மனக்கண்ணில் ஒரு முகம் தோன்றி மறைந்தது.
கண்களை மூடி திறந்து தன்னை சமாளித்தவளின் கை பின் இயங்க தொடங்கியது.
பெங்களூரின் வாகன நெரிசலில் பதினைந்து நிமிடத்தில் செல்ல வேண்டிய அலுவலகத்தினை அரை மணி நேரத்தில் அடைந்தாள்.
ஏபிஸ் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் என்ற பெயர் பலகை கொண்ட கண்ணாடி கட்டிடம் பல அடுக்கு மாடிகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளித்தது.
தனது வெஸ்பாவை பார்க் செய்துவிட்டு நான்காவது தளத்திற்கு மின்தூக்கியில் சென்றவள் மரத்தடுப்புகளால் பிரிக்கப்பட்ட தனது இருக்கைக்கு சென்றமர்ந்தாள்.
அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டவளை இன்டர்காம் அலைத்தது.
எடுத்து காதில் பொருத்தியவள், "ஹலோ…" என்று மொழிய,
மறுமுனையில், "ப்ரஷி என்னோட கேபினுக்கு வா…?" என்று குரல் கேட்டது.
"ஹ்ம்ம் வர்றேன் சார்" என்று அழைப்பை துண்டித்தவள்,
திவாகர் மேனேஜிங் டேரெக்டர் என்று பெயர் பொதிக்கப்பட்ட கண்ணாடி அறைக்குள் அனுமதி பெற்றுவிட்டு நுழைந்தாள்.
திவாகர், "சிட் டவுன் ப்ரஷி" என்றவன்,
"கே.வி பில்டர்ஸ்க்கு கொட்டேஷன் ரெடி பண்ண சொன்னேனே பண்ணியாச்சா…?" என்று வினா தொடுக்க,
"நேத்தே கொட்டேஷனை ரெடி பண்ணி உங்களுக்கு மெயில் பண்ணிட்டேன் சார்" என்று பதில் வந்து விழுந்தது அவளிடம்.
"ஹ்ம்ம் நான் இன்னும் மெயில் செக் பண்ணலை பாக்குறேன்" என்றவன்,
"வர்ஷா சிமெண்ட்ஸ்க்கு பேமென்ட் செக் சென்ட் பண்ணியாச்சா…?" என்று வினவினான்.
"செக் ரீசீவ் ஆகி அடுத்த ஆர்டர்க்கு பேப்பர் ரெடி ஆகிடுச்சு சார்" என்று இயம்பினாள்.
அவள் எப்போதும் எள் எனும் முன் எண்ணெய்யாக இருப்பவள் என்று அறிந்திருந்தவன் திவாகர்.
"ஹ்ம்ம் குட்" என்றவன் இன்னும் அலுவலகம் தொடர்பான பல விடயங்களை கேட்டுவிட்டு,
"ஆபிஸ் ஓர்க் ஓவர் இப்போ கொஞ்சம் பர்சனலா பேசலாமா…?" என்றான்.
அவன் பேச போகும் விடயத்தின் சாரம்சம் அறிந்திருந்தும் ப்ராஷாந்தி ஏதும் கூறாமல் அவனை நோக்க,
திவாகர், "ரெண்டு நாளா அம்மாக்கு கால் பண்ணலையாம். நேர்ல போயும் இந்த வாரம் பார்க்கலையாம். என்கிட்ட சொல்லி புலம்புறாங்க. அவங்களுக்கு போன் பண்ணி பேச வேண்டியது தானே" என்று வினா எழுப்பினான்.
"ஹ்ம்ம் பேசுறேன்" என்ற ஒற்றை வார்த்தையை இள முறுவலுடன் முடித்து விட,
திவாகருக்குத்தான் இதற்கு மேல் என்ன கூறுவதென்று தெரியவில்லை.
இருந்தும் மனது கேளாமல், "ஏன் ப்ரஷாந்தி இப்படி இருக்க…?" என நண்பனுக்குரிய ஆதங்கத்துடன் வினவினான்.
இது அவனிடமிருந்து அடிக்கடி வந்து விழும் வினா தான். ஆனால் பதில் தான் ப்ரஷாந்தியிடமிருந்து சரியாக வராது.
அவனது கேள்வியில் புன்னகைத்தவள், "எப்படி இருக்கேன்…?" என்று பதில் வினா தொடுத்தாள்.
இப்படி கேட்பவளிடம் என்னவென்று பேச என்று தோன்ற பெருமூச்சு ஒன்றுடன், "யூ கேன் கோ" என்றான்.
"தேங்க் யூ சார்" என்றவள் எழுந்து வெளியேறினாள்…
தனது இருக்கைக்கு வந்தவள் முதல் செயலாய் தொலைபேசியை எடுத்து தாய்க்கு அழைப்பை விடுத்தாள்.
மறுமுனையில் அழைப்பை ஏற்றவுடன் சுபத்ரா, "ஏன் ப்ரஷி எனக்கு ஒரு கால் பண்ணி பேச கூட நேரமில்லையா உனக்கு. போன் பண்ணாலும் எடுக்கிறது இல்லை" என்று அம்மாக்களுக்கே உரிய அக்கறையில் அதட்ட,
அவர் பேசும் வரை அமைதியாக கேட்டவள் பின்னர், "ம்மா கொஞ்சம் கேப் விட்டு பேசுங்க. எப்படி மூச்சு வாங்குது பாருங்க" என்று பதில் மொழிய,
"நான் என்ன பேசிட்டு இருக்கேன். நீ என்ன சொல்லிட்டு இருக்க" சினத்துடன் வினவினார்.
கோபத்தின் உச்சியில் இருக்கிறார் என்பதை உணர்ந்தவள், "சாரிம்மா வொர்க் டென்சன்ல நீங்க கால் பண்ணதை நான் கவனிக்காம விட்டுட்டேன்" என்று கூற,
வொர்க் டென்சன் என்றதும் தன் கோபத்தை மறந்து, "வேலை வேலைன்னு உடம்பை கவனிக்காம விட்டுடாத. கரெக்டா நேரத்துக்கு சாப்பிடு" என்று அக்கறையுடன் இயம்பினார்.
அவரது அக்கறையில் புன்னகைத்தவள், "சரிம்மா நான் கரெக்டா சாப்பிட்றேன். நீங்களும் ஹெல்த்த பாத்துக்கோங்க" என்றாள்.
"எனக்கென்ன நான் நல்லா தான் இருக்கேன். ஒரு போன் கூட பண்ண முடியாத அளவுக்கு என்ன வேலையோ…" என்று சலித்தவர்,
"சரிடி ஈவ்னிங் வீட்டுக்கு வந்துட்டு போ. தீக்ஷி வேற உன்னை பாக்கணும்னு கேட்டுட்டே இருக்கா…?" என்று சுபத்ரா மொழிய,
"ஹ்ம்ம் சரிம்மா வர்றேன்" என்றாள்.
"வர்றேன் வர்றேன்னுட்டு வராம இருந்திடாத… உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"
என்க,
அது என்னவென்று கேட்க தோன்றினாலும் அவரே மாலை கூறிவிடுவார் என்று நினைத்தவள்,
"ஹான் மா. கண்டிப்பா வர்றேன்" என்றிருந்தாள்…
தொடரும்…
இவள் மீரா க்ரிஷ்
…