- Messages
- 1,251
- Reaction score
- 3,672
- Points
- 113
எண்ணம் – 4
அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தனஞ்செயனுக்கு கோபம் ஓரளவிற்கு மட்டுப்பட்டிருந்தாலும், தான் சொல்ல சொல்லக் கேட்காது ஏன் அத்தனை பேரின் முன்பும் அப்படியெல்லாம் வார்த்தையை விட வேண்டும்? என்று ஆற்றாமை தோன்றிற்று. ஏன் நான் பேச மாட்டேனா? இவளுக்கு மட்டும்தான் அவர்கள் தாய் தந்தையரா? எனக்கும் அவர்கள் அத்தை, மாமா தானே? அவர்களைப் பேசவிட்டு நான் வேடிக்கைப் பார்ப்பேனா? என உள்ளுக்குள் பொங்கினான்.
ராமலிங்கம் இருக்கும்போது தனா பெரிதாய் எதிலும் தலையிட மாட்டான். அவர்தான் வீட்டிற்கு பெரிய மனிதர் என்பதால், அவரே அனைத்தையும் பார்த்துக்கொள்வார். அவ்வாறு எண்ணியே தனஞ்செயன், தேவி பேசும்போது அமைதியாய் இருந்தான். அவன் இடையில் பேசி இருந்தால், அது தன் தந்தையின் மீதான மற்றவர்களின் மரியாதையும் பார்வையும் குறைத்துவிடுமே என்ற எண்ணம் அவனுக்கு
ஆனால், மலர் யாரையும் மதிக்கவில்லை. இதில் பாவப்பட்டு தனஞ்செயனுக்கு வாழ்க்கை கொடுத்தது போலொரு பேச்சு வேறு. எல்லாம் சேர்ந்து அவனை அதிகமாய் சீண்டியிருந்தது. இப்படியெல்லாம் பேச்சு எதிர்காலத்தில் வரலாம் என யோசித்துதான் திருமணம் நின்றது நின்றதாக அப்படியே இருக்கட்டும், எல்லாரிடமும் பேசி புரிய வைக்கலாம் என நினைத்திருந்தான். ஆனால் லீலாவதியும் ராமலிங்கமும்தான் அவனைக் கட்டாயப்படுத்தி மேடையில் அமர வைத்துவிட்டனர்.
தன் வாழ்க்கை இவளுடன்தான் என எழுதி வைத்திருக்கிறது போல என நினைத்துக்கொண்டு இஷ்டமும் கஷ்டமுமாய் இந்த வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்து நுழைந்தான். ஆனால், மலருடன் தன்னுடைய வாழ்க்கை கண்டிப்பாகப் போராட்டமாய் இருக்கக் கூடும் என அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அடிப்படையில் மலர் அத்தனை அன்பான குணமும் மனமும் உடையவள். ஆனால், இப்போதுதான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள். இந்த திடீர் திருமணம் அவளுக்குப் பிடிக்காததால், அது அவளுடைய செய்கையில் வெளிப்படுகிறது என தானாய் ஒரு அர்த்தம் கற்பித்துக்கொண்டான். யோசித்து யோசித்து தலைவேறு ஒருபுறம் வலித்தது.
எப்போது மலர்விழி வருவாள் என அவன் வாயிலை நோக்க, சரியாய் அதே நேரம் உள்ளே நுழைந்திருந்தாள். போர்வையும் தலையணையும் எடுத்துவிட்டு மலர் நகர, முன்னே வழியை மறைத்தது போல நின்றான் தனஞ்செயன்.
“என்ன வேணும் உங்களுக்கு?” இவள் கோபமாய் வினவ, “ஏன் விழி, நான் சொல்லியும் கேட்காம உன் இஷ்டத்துக்குதான் எல்லாத்தையும் செய்வீயா? பொறுமைன்னாலே உனக்கு என்னென்னு தெரியாதா?” இவனும் பதிலுக்கு இரைந்தான்.
அவனை அழுத்தமாய்ப் பார்த்தவள், “உங்க அம்மா, அப்பாவை இத்தனை பேர் முன்னாடியும் வச்சு யாரோ ஒருத்தவங்க தரக்குறைவா பேசுனா, அங்கே நீங்க அமைதியா தானே இருப்பீங்க?” குரலில் கேலி இருந்தது.
“மலர், உனக்குப் புரியலையா? அதான் நான் எல்லாருக்கும் பதில் சொன்னேன் இல்ல?”
“எப்போ, உங்க அத்தை எங்க குடும்பத்தை வாய்க்கு வந்தபடி பேசி முடிச்ச பிறகா?” கையிலிருந்த தலையணையை எடுத்துத் தூக்கி வீசியிருந்தாள்.
“தேவி அத்தை வயசுல பெரியவங்க. அதான் அப்பா, அத்தையை அப்படி பேசக் கூடாதுன்னு சொல்லி திட்டுனாங்க இல்ல? அப்புறம் என்னடி?”
“ஒன்னைப் புரிஞ்சுக்கோங்க. உங்களைக் கல்யாணம் பண்ணி இந்த வீட்ல நான் வாழ வந்து இருக்கேன்ற ஒரு காரணத்துக்காக, என் அப்பா அம்மா எந்த இடத்திலும் பணிஞ்சு போகணும்னு அவசியம் இல்லை. அவங்களை அவமானப்படுத்துற மாதிரி யார் பேசுனாலும், நான் சும்மா இருக்க மாட்டேன். அப்படி அமைதியா இருக்கணும்னா, எனக்கொரு வாழ்க்கைத் தேவையே இல்லை...” என்றவளை கண்கள் இடுங்கப் பார்த்தான்.
“இப்போ என்ன சொல்ல வர்ற? என் கூட வாழ இஷ்டம் இல்லைன்னா?” அழுத்தமாய் கேட்டான். பதில் கூறாதவள், அவனைப் புறக்கணிக்க, “வாயைத் தொறந்து சொல்லு விழி. நான் உன்கிட்டதான் கேட்குறேன்...” அவளது முழங்கையைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்தான். அவள் வார்த்தையில் கோபம் கனன்றது தனாவிற்கு.
தன்னை அவனிடமிருந்து விடுபட முயன்றவாறே, “என் அப்பா, அம்மாவை மரியாதை இல்லாம நடத்துனா, அரண்மனையாவே இருந்தாலும் அங்க நான் வாழ மாட்டேன். உங்க வீடும் அதுல அடக்கம்” எனப் பதில் கூறினாள்.
“ஒன்னும் பிரச்சனை இல்லை, நீ உங்க வீட்டுக்கு கிளம்பு. அப்படி கஷ்டப்பட்டு என்கூட வாழணும்னு அவசியம் இல்லை...” என்றான் தனஞ்செயன். நிதானத்தை முற்றிலும் இழந்திருந்தனர் இருவருமே. அவனும் என்ன பேசிகிறோம் என நினைத்துப் பேசவில்லை. கேட்டிருந்தவளுக்கு பட்டென இதயத்தில் யாரோ ஓங்கி அடித்ததை போலொரு உணர்வு. தொண்டை வரை ஏதோ குபுகுபுவென மேலெழுந்தது.
“என்ன சொன்னீங்க?” மெல்லிய அதிர்வுடன் கேட்டாள். அகத்தை முகத்தில் காட்டாதவாறு வினவினாள்.
“என் கூட வாழ இஷ்டம் இல்லைன்னா, நீ கிளம்பி போய்ட்டே இரு...” என்று தனா மீண்டும் கூறியதும், “ஃபைன்... நான் என் வீட்டுக்கு கிளம்புறேன்.” என்றவள், கையில் அலைபேசியை மட்டும் எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினாள். ஏனோ, சுயமரியாதை அடிவாங்கிய பின்னர், இவனிடம் மீண்டும் நின்று பேச சத்தியமாய் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனாலே கிளம்பியிருந்தாள்.
‘போடி... இவ வேணும்னு யார் இப்போ அழறா ?’ என மனதிற்குள் கூறிக்கொண்டான் தனஞ்செயன்.
லீலாவதியின் அறைக் கதவை தட்டினாள் மலர்விழி. அறையைத் திறந்தவர் மருமகளை யோசனையுடன் பார்த்தார்.
“என்ன மலர், எதாவது வேணுமா?” என அவர் வினவ, ராமுவும் எழுந்து வந்துவிட்டார்.
“அத்தை, நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன். உங்ககிட்டே சொல்லிட்டு போகணும்னுதான் வந்தேன்...” என்றவள் முகம் மட்டும் சலனமில்லாது இருந்தது.
உள்ளுக்குள் ஆயிரம் பாகங்களாக சிதறியிருந்தாள்.
“என்னாச்சு மலர், எதுக்கு இப்போ அங்கப் போகணும்? உனக்கும் அவனுக்கும் எதாவது பிரச்சனையா?” அவர் பதட்டமாய் வினவினார்.
“உங்கப் பையன்தான் அத்தை என்னை வீட்டைவிட்டு போகச் சொன்னாரு. அவர்கிட்டே என்னென்னு கேட்டுக்கோங்க...” குரல் அடைக்க கூறியவள், விறுவிறுவென வெளியேறினாள்.
“மலர், எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம் டா. இந்த நேரத்துல தனியா எங்க போவ?” என்ற ராமலிங்கம் அவள் பின்னே வர, அதற்குள் ஒரு வாகனத்தை நிறுத்தி அதில் ஏறியிருந்தாள் மலர்விழி.
“டேய்! தனா, என்ன பிரச்சனைனாலும் இந்த நேரத்துல ஒரு பொண்ணை வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்லலாமா? அறிவிருக்கா டா உனக்கு? போ, போய் அவளைக் கூட்டீட்டு வா, இல்லை அவங்க வீட்ல விட்டுட்டு வா. தனியா போறா டா...” என லீலாவதி கூறியதும்தான் அவனுக்குமே அது உறைத்தது. நேரத்தைப் பார்த்தான், இரவு பதினொன்று.
மகிழுந்து சாவியை எடுத்துக்கொண்டு வெளியே விரைந்தவன், அவள் சென்ற தானியைப் பின்தொடர முயன்றான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தானி அகப்படாமல் போக, சாலை ஆள்அரவமின்றி கிடந்தது. அதிலே லேசாய் மனதிற்குள் பயபந்து சுழன்றது. என்னதான் கோபம் என்றாலும் இந்த நேரத்தில் அவளை வெளியே போகக் கூறியது பெரிய தவறு என மூளையும் மனதும் கூற, மகிழுந்தை வேகமாய் இயக்கினான்.
ஒரே ஒரு தானி மட்டும் சாலையில் தனியாய் நிற்க, அதனருகே சென்றான். ராமுவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதை புறக்கணித்தவனின் விழிகளில் ஓட்டுநர் வாகனத்தின் பின்புறக் கதவைத் திறந்து ஏதோ செய்து கொண்டிருந்தது விழுந்தது.
இரண்டு அடி முன்னே மகிழுந்தை செலுத்திய தனா, தானியினுள் எட்டிப் பார்க்க, மலர்விழி அமர்ந்திருந்தாள். அவளைக் கண்டதும்தான் மூச்சே வெளிவந்தது. சிறிது நேரத்தில் முழுவதும் பயந்துவிட்டிருந்தான் ஆடவன்.
“அண்ணா, என்னாச்சு?” இவன் ஓட்டுநரிடம் வினவ, “தெரியலை தம்பி. திடீர்னு நின்னுப் போச்சு. அதான் பார்க்குறேன்...” என்றவர் தன் வேலையில் கவனமாய் இருந்தார்.
“விழி, வா வீட்டுக்குப் போகலாம்...” என மகிழுந்திலிருந்து இறங்கி தனா அழைக்க, அவனைக் கண்டுகொள்ளவே இல்லை பெண்.
“விழி, இந்த நைட் நேரத்துல சீன் கிரியேட் பண்ணாத டி. ஒழுங்கா கிளம்பு வீட்டுக்குப் போகலாம்...” என தனா அடிக்குரலில் அதட்டல் போட, அவனை நிமிர்ந்து தீர்க்கமாய்ப் பார்த்தவள், “நைட்டுன்னு இப்போதான் தெரியுதா? வீட்டைவிட்டு வெளியே போக சொன்னப்போ, தெரியலையோ?” என்றவள், அமர்ந்த இடத்திலிருந்து அசையவே இல்லை. கோபம் அத்தனை கோபம் எதிரிலிருந்தவன் மீது.
அலைபேசி வேறு தொடர்ந்து இசைத்துக் கொண்டிருந்தது. அழைப்பை ஏற்றவன், “ஹம்ம் பா. இங்க ஆட்டோ ரிப்பேர்னு நிக்கிறா. நான் கூப்ட்டேன் வர மாட்றா...” தனா பேச,
“சரி, எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம். அவளை பத்திரமா வீட்டுல விட்டுவிட்டு அப்புறம் நீ வா...” என ராமலிங்கம் அழைப்பைத் துண்டித்தார். மேலும் பத்து நிமிடங்கள் கடந்தப் பின்னர் தானி இயங்கத் தொடங்க, அவனும் பின் தொடர்ந்தான்.
மலர்விழியின் வீடு வந்துவிட, அவள் உள்ளே நுழைந்து அழைப்பு மணியை அழுத்த, தனாவும் அவளருகே வந்து நின்றான். கதவைத் திறந்த லோகநாயகி அந்நேரத்தில் அவர்கள் இருவரையும் எதிர்பார்க்கவில்லை போல.
ஒரு நொடி அதிர்ந்தவர், “என்னாச்சு மலர், ஏன் இந்த நேரத்துல வந்து இருக்கீங்க? மாப்பிள்ளை எதுவும் பிரச்சனையா?” என வினவினார்.
“அதை உன் மாப்பிளைக்கிட்டேயே கேளு மா. அவர்தான் என்னை வீட்டைவிட்டு வெளியே போகச் சொன்னாரு...” என்று இரைந்தவள், அவ்வளவுதான் என்பது போல அறைக்குள் சென்று கதவை பட்டென அடைத்தாள். அவளது பதிலில் லோகு தனாவைப் பார்க்க, அவன் சங்கடமாய் அவரை நோக்கினான்.
“தனாவை உள்ள வரச் சொல்லு முதல்ல...” என்ற சாரதியும் நடந்ததை கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.
தனஞ்செயன் உள்ளே வந்து அமர, மாறனும் எழுந்து வந்துவிட்டான்.
“என்னாச்சு மாப்பிள்ளை?” என சாரதி வினவ, தனஞ்செயன் தங்களுக்கு இடையில் நடந்த உரையாடலை சுருக்கமாய்க் கூறினான்.
“தனா, மலருக்கு எங்க மேல பாசம் அதிகம். அதனால்தான் அவ இந்த மாதிரி நடந்துகிட்டா. நீங்களும் கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம் பா. அவ கொஞ்சம் கோபக்காரி. உனக்கு ஏற்கனவே தெரியுமே. அதுக்காக இந்த நேரத்துல வெளிய போக சொல்றது எல்லாம் சரியில்லை. அதுவும் தனியா வேற வந்திருக்கா. காலம் ரொம்ப கெட்டுக் கிடக்கு. எங்கப் பொண்ணு எங்களுக்கு முக்கியம் பா. அவ சந்தோஷமா வாழணும்னுதான் கல்யாணம் பண்ணி வச்சோம் ..” சாரதி கூற, சங்கடமாய் அவரைப் பார்த்தவன், தலையை சரியென்பதாய் அசைத்தான். மாறன் நண்பனை பார்த்தவாறு நின்றான்.
“சரிங்க மாமா, நான் வீட்டுக்கு கிளம்புறேன்...” என அவன் எழ,
“நான் விட்டுட்டு வரேன்...” என மாறனும் உடன் சென்றான்.
“ஏன் டா, கொஞ்சம் பொறுமையா பேசி இருக்கலாம் இல்லை. அவதான் எதுவும் புரியாம பேசுறான்னா, நீயுமா?” மாறன் தனாவின் தோளைத் தட்ட,
“சத்தியமாய் எனக்குப் புரியலை டா. உன் தங்கச்சி ரொம்ப கிரிட்டிக்கல் டூ ஹேண்டில். எல்லா வார்த்தைக்கும் அர்த்தத்தை அவளா தேடிக்குறா. எனக்கு இவ்வளோ கோபமா பேசத் தெரியும்னு இன்னைக்குத்தான் டா எனக்கே தெரியும். இவக்கிட்ட என் நிதானம் தவறுது. சின்ன வயசுல பார்த்த மலர் இல்லை டா இவ...” என்ற தனா தலையைக் கோதி பெருமூச்சுவிட்டான்.
“உண்மையை சொன்னா, அவ கிரிட்டிக்கல் டூ ஹேண்டில்தான். நீதான் டா அவளைப் பார்த்துக்கணும். வேணாம்னு சொன்னவளை, நான் தான் சம்மதிக்க வச்சேன். உன்னைப் பத்தி எனக்குத் தெரியும் டா. உன் பொறுமையான குணம் அவளை அட்ஜஸ்ட் பண்ணிக்கும்...”
“புரியுது டா. மே பீ, மேரேஜ் நல்லபடியா நடந்து இருந்தா, இந்த மாதிரி எதுவும் சிட்சுவேஷன் வராம, நான் மலரை புரிஞ்சுக்க ட்ரை பண்ணி இருப்பேன். அவளும் மே பீ பண்ணி இருக்கலாம். பட், இப்போ ரெண்டு பேருக்கும் முட்டிக்கிது டா!” தனாவின் குரலில் சோர்விருந்தது.
அவனது தோளைத் தட்டிய மாறன், “விட்றா, எல்லாத்தையும் பார்த்துக்கலாம். நீ பத்திரமா வீட்டுக்குப் போ...” என்றான். தனாவும் தலையை அசைத்துவிட்டுச் செல்ல, மலர் அனைத்தையும் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தாலும், பெரிதாய் எதையும் அலட்டிக் கொள்ளவில்லை. 'போகட்டும்... போகிறான். இவன் வேண்டாம்' என மனதினுள் கூறினாள்.
இரவு எதுவும் பேச வேண்டாம். காலையில் பேசிக் கொள்ளலாம் என்ற ராமலிங்கம் மகனை முறைத்துவிட்டு செல்ல, தனா சோர்ந்து போனான். இந்தப் பெண்ணை தன்னால் கையாள முடியாதோ? எங்கே என் நிதானம்? எங்கு தவறினேன்? என யோசித்து அன்றைய தூக்கத்தைத் தொலைத்தான்.
காலையில் தேநீரோடு லீலாவின் சுப்ரபாதமும் தனஞ்செயனின் செவியை நிறைத்தன. “கல்யாணமாகி ரெண்டு நாள் கூட முடியலை. அதுக்குள்ளேயும் ஏன் டா இப்படி பண்ற? மலர் ஏதோ திடீர்னு கல்யாணம் ஆன கோபத்துல இருக்கா. நீயும் இப்படி பண்ணலாமா? நேரங்கெட்ட நேரத்துல உன்னை நம்பி வந்தப் பொண்ணை வீட்டைவிட்டு வெளியே போக சொல்லலாமா? இப்படித்தான் உன்னை நான் வளர்த்தேனா? இப்படி பண்ணது இதுதான் முதலும் கடைசியுமா இருக்கணும்...” எனக் கடிக்காத குறையாகச் சொல்லிவிட்டு அவர் செல்ல, ஏற்கனவே சிறிது குற்றவுணர்வில்தான் இருந்தான் தனஞ்செயன். இப்போது லீலாவும் அவன்மீதுதான் தவறு என்பது போல பேசிவிட்டு செல்ல, தலையில் கையை வைத்து அமர்ந்துவிட்டான்.
‘இந்தப் பெண் என் வாழ்வில் நுழைந்து வெறும் இரண்டு நாட்கள்தான் ஆகிறது. அதற்குள்ளே இரண்டு சண்டைகள். போதாத குறைக்கு இருவீட்டுப் பெற்றவர்களும் அறிவுரை வழங்கிவிட்டனர். இவளுடனான என் வாழ்வு எப்படி இருக்கும்? முதலில் இவளை எப்படி கையாள்வது என யோசிக்க வேண்டும்!’ என நினைத்தவன், பெருமூச்சை வெளிவிட்டான். இனிமேல் மலர் என்ன பேசினாலும் கோபம் கொள்ளக் கூடாது. நிதானத்தை இழுத்துப் பிடிக்க வேண்டும் என நினைத்தான். அதையெல்லாம் தன் மனைவி தூள் தூளாக்கப் போவதை அறியாது.
“மலர், கதவைத் தொற டி...” லோகு இரண்டு முறை கத்தி அழைத்தும், மகள் அசைந்தாள் இல்லை. மாறன்தான் அவளுக்கு அலைபேசியில் அழைத்து கதவை திறக்கச் சொன்னான். முகத்தைக் கழுவிவிட்டு எழுந்து வந்து கதவைத் திறந்தாள் மலர்விழி. விழியும் முகமும் சிவந்திருந்தன.
“ஏன் டி, கதவு தட்றது கூட காதுல விழலையா?” லோகு வினவ, “ம்மா... செம்ம தூக்கம். அதான் மா...” எனப் பதிலளித்தவள், சமையலறை நோக்கிச் சென்றாள். மூவரும் அவளை முறைத்தனர். நேரம் கெட்ட நேரத்தில் வந்து அவர்களது தூக்கத்தைக் கெடுத்துவிட்டு, நன்றாய் தூங்கினேன் என கூறியவளை என்ன செய்தால் தகும்? என்பதைப் போல பார்த்தார் தாய்.
லோகநாயகி ஏற்கனவே தயாரித்திருந்த தேநீரை சூடுபடுத்தி குவளையில் ஊற்றி எடுத்துக்கொண்டு வந்த மலர் இருக்கையில் அமர, மூவரும் அமைதியாய் அவளைப் பார்த்தனர். அவர்களது பார்வை உணர்ந்தாலும், மலரிடம் எதிர்வினை இல்லை. சூடான தேநீரை உள்ளே இறக்கிக்
கொண்டிருந்தாள்.
“ஏன்டி, எதுவுமே நடக்காத மாதிரி எப்படி இப்படி இருக்க முடியுது. உன்னால நாங்கதான் பதறீட்டு இருக்கோம்...” லோகநாயகி குரலை உயர்த்தினார். அவரை சலனமில்லாது பார்த்தாள் மகள்.
“மலர், அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? முதல்ல எதுக்காக நடுராத்திரியில நீ தனியா வந்த? எவ்வளவு தைரியம் உனக்கு? ஒன்னுகிடக்க ஒன்னு ஆகியிருந்தா, என்ன டி பண்றது?” எனத் தாயாய் தன் ஆதங்கத்தைக் கொட்டினார் லோகநாயகி.
சாரதி எதுவும் கூறவில்லை. மகளைதான் பார்த்துக்
கொண்டிருந்தார்.
“ம்மா, நான் எதையும் வேணும்னு செய்யலை. என் அப்பா, அம்மாவை கீழ்த்தரமா பேசுவாங்க. அதை ஏன்னு கேள்வி கேட்காம, என் வாழ்க்கைதான் முக்கியம்னு சுயநலமா என்னால வாழ முடியாது மா. அதை கேட்டதுக்கு உன் மருமகன் வெளிய போகச் சொன்னாரு. நான் வந்துட்டேன். அப்படியொன்னும் நான் தரம் தாழ்ந்து போய்டலை. வேணாம்னு சொல்ற வீட்ல உட்கார்ந்து இருக்க. உங்களுக்கு நான் வந்தது தொல்லையா இருந்தா சொல்லிடுங்க. நல்ல ஹாஸ்டலா பார்த்து போயிட்றேன்...” என்றவளை லோகநாயகி முறைத்து வைத்தார்.
“மலர், நீ சொல்றது எல்லாம் எங்களுக்குப் புரியுது. சொந்தக்காரங்கன்னு இருந்தா, நாலு பேர் நாலு விதமா இருக்கத்தான் செய்வாங்க. இப்படி ஒவ்வொரு முறையும் அவங்க பேசும்போது, நீ இங்க வருவீயா? இதெல்லாம் நல்லா இல்லை டா. தெரிஞ்சோ, தெரியாமலோ அந்த வீட்டுக்கு நீ மருமகளா போய்ட்ட. அதனால், பெரியவங்களை எடுத்தெறிஞ்சு பேசக் கூடாது. தனா நேத்து பேசுனதை பார்த்த இல்ல? அவன் தங்கம்... லீலாவும், ராமுவும் கூட குணமானவங்க. அவங்களோட தான் நீ வாழப் போற. நேத்து வந்திருந்த எல்லாரோடவும் இல்லை. அவங்க பேசுறதை எல்லாம் பெருசுபடுத்தாத. நாலு நாள்ல சடங்கு சம்பிரதாயம் முடிஞ்சா, அவங்க அவங்க வீட்டைப் பார்த்துப் போய்டுவாங்க...” சாரதி பொறுமையாய்க் கூறினார்.
“நான் தான் சொல்றேன்ல பா. என்னால அப்படி பொறுமையா இருக்க முடியலை...” மகள் தன் பிடியிலே நின்றாள்.
“என்னடி இருக்க முடியலை? ஹம்ம்... சொல்லு. அவங்க எங்களைத்தானே பேசுனாங்க. நீ ஏன் சப்போர்ட்டுக்கு வர்ற. எங்களுக்குப் பதில் பேசத் தெரியும். எங்களைக்கொண்டு நீ எந்த காரணத்துக்காகவும் பிரச்சனை பண்ணக் கூடாது...” லோகநாயகி பட்டென கூறினார்.
“ஓ... உங்களுக்கு நான் சப்போர்ட்டா வரக் கூடாது. சரி மா, நீயும் இவரும் தானே என்னைப் பெத்தீங்க? நீங்க தானே என் அம்மா, அப்பா? அப்படியில்லை, எங்கயாவது இருந்து தூக்கிட்டு வந்தேன்னு சொல்லு. நான் இனிமே உங்களுக்கு சப்போர்ட் பண்ணலை. அப்படி உன்னால சொல்ல முடியாதுன்னா, என் அப்பா, அம்மாவைப் பேசுறது யாரா இருந்தாலும், நான் பதிலுக்குப் பேசுவேன்...” என்று கோபமாகக் கூறியவள், விறுவிறுவென அறைக்குள் நுழைந்தாள்.
“பார்த்தீங்களா? உங்கப் பொண்ணு பேசுறதை. இவளுக்கு அங்கப் போய் வாழ இஷ்டம் இல்லை போல. அதான் இந்த மாதிரி பேசீட்டு இருக்கா. பேசாம, நம்ம யோசிச்சு இருக்கணும். இவ குணம் தெரிஞ்சும் அந்தத் தம்பி தனா வாழ்க்கையை நம்ம வீண் பண்ணிட்டோம்...” தாயின் பேச்சு காதில் விழவும், பல்லைக் கடித்தவள் அதற்கு பதில் கூற வெளியே வந்தாள்.
“மலர், உள்ள வா. உன்கிட்ட பேசணும்...” என மாறன் அவளைப் பேசவிடாமல் அறைக்குள் இழுத்துச் சென்றுவிட்டான்.
“கையை விடு மாறா! இதெல்லாம் உன்னாலதான். நான் உண்டு என் படிப்பு உண்டுன்னு இருந்தேன். என்னை மாட்டிவிட்டுட்டு நீ வேடிக்கைப் பார்க்குற...” இப்போது தமையனிடம் காய்ந்தாள் மலர்விழி.
அவளை ஒரு இருக்கையில் அமர்த்திய மாறன், “மலர், எதுக்கு டி இவ்ளோ கோபம். இந்த ரெண்டு நாளா உன்கிட்ட பொறுமை, நிதானம் இது ரெண்டுமே இல்லாம போச்சு. இப்போலாம் எதுக்கெடுத்தாலும் கோபப்பட்ற. அப்புறம் உன் கோபத்துக்கு வேல்யூவே இல்லாம போய்டும். இது நீயே இல்லை. முதல்ல பொறுமையா யோசி...” என்றவனை சலனமில்லாமல் பார்த்து வைத்தாள்.
“முதல்ல இந்த மாதிரி பார்க்குறதை விடு. உன் கோபம் தனாவை கல்யாணம் பண்ணதாலன்னு அம்மா சொல்றாங்க. ஆனால், என்னால அதை நம்ப முடியலை. முதல்ல உன் மனசு என்ன சொல்லுதுன்னு கேளு. எதுவுமே இல்லாத சப்பைக் காரணத்துக்காக நீ இங்க வந்திருக்க? நீ நினைச்சிருந்தா, தனாகிட்டே பொறுமையாய் பேசி புரிய வைச்சிருக்கலாம். ஆனால், நீ பண்ணலை. ஏன்? அர்த்தமில்லாத உன் கோபத்தைத் தூக்கிப் போட்டுட்டு ரியாலிடிக்கு வா. யாரு சொன்னாலும் உனக்குப் புரியாது. நீயா புரிஞ்சுகிட்டாதான் உண்டு...” என்றவனிடம் கூற, சத்தியமாய் அவளிடம் பதிலில்லை.
“இந்த தனாவை உன்னால சமாளிக்க முடியலையா? முடியும்னு தோணலையா? அவன் ஈஸி டூ ஹேண்டில். அவனைப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு டா...” என மாறன் வெளியேற, இங்கு மலர் அமைதியாய் அமர்ந்துவிட்டாள். மாறனின் பேச்சில் லேசாய் விழிகள் கலங்குவதை போலிருக்க, எழுந்து பால்கனிக்குச் சென்றுவிட்டாள்.
அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவளின் கையில் அலைபேசி இருந்தது. தங்களது திருமண புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள். இறுகிய முகத்துடன் அவனும், சலனமில்லாமல் அவளும். இதுதான் அவள் விரும்பியதா? அவளுடைய கனவுகள் எல்லாம் அத்தனை வண்ணமயமானவை. நிறைவேறாத கானல் நீர் எனத் தெரிந்தும் அந்தக் கனவிற்கு உயிர்க்கொடுத்து வளர்த்திருந்தாளே! நினைத்ததும் விழிகளில் குபுகுபுவென நீர் வழிந்தது. நெஞ்சு முழுக்க வேதனை நிரம்பி வழிந்தது.
அமைதியாய் இருக்கையில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள். ‘அவனை உன்னால ஹேண்டில் பண்ண முடியலையா? அவனைப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு’ மாறனின் வார்த்தைகள் செவியைத் துளைக்க, இவளது இதழ்களில் கேலிப் புன்னகை. ‘என்னைவிட அவனை யாராலும் சரியாய் புரிந்து கொள்ள முடியாது!’ என மனம் இறுமாப்பாய்க் கூற, விழிகள் முழுவதும் தனஞ்செயனின் சிரித்த முகம்தான். நிறைத்தான், பெண்ண மட்டுமல்ல... அகமும் புறமும் அவளை முழுதாய் நிறைத்திருந்தான் இந்த தனஞ்செயன். பட்டென விழிகளை திறந்து அவனை அழிக்க முயல, இப்போது நிழல் அல்லாது நிஜத்திலே அவளது விழிகளை நிறைத்தன தனஞ்செயனின் உருவம். ஆம்! விடிந்ததும் விடியாததுமாய் மலர்விழியைக் காண வந்திருந்தான் அவளின் கணவன்.
தொடரும்...