• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,269
Reaction score
3,715
Points
113
எண்ணம்‌ - 18

காலை சூரியன் உதித்து நேரம் கடந்தும் இன்னும் அவர்களுக்கு விடியவில்லை போல. தனஞ்செயனும் மலர்விழியும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.

மலர்தான் முதலில் கண்விழித்தாள். கன்னம் உணர்ந்த ஸ்பரிசம் அவனின் மார்புச் சூட்டைதான். அவளது கைகளைத் தன் மீது போட்டுகொண்டு தூங்கிக் கொண்டிருந்தான் தனா. நிமிர்ந்து அவனது முகத்தைதான் பார்த்தாள் மலர்விழி.

சில நொடிகளில் மீண்டும் அவன் மார்பில் தலை வைத்துப் படுத்துவிட்டாள். எழ மனமில்லை போலும். அந்தக் கையணைவின் பிடியில் வாழ்நாள் முழுவதும் கிடக்க வேண்டும் என காதல் கொண்ட மனது தொல்லை செய்தது.

நேற்று நெற்றியில் பதிந்த கணவன் இதழின் ஈரமும் கதகதப்பின் மிச்சமும் இன்னும் அவளுடலில் ஒட்டியிருந்ததை போல பிரம்மை. விழிகளை மூடி அந்நொடியை உள்வாங்கியவளுக்கு தன் திருமணமானநாள் தொட்டு அனைத்தும் நினைவு வந்தது.

வேண்டும், வேண்டாம் என மாறி மாறி மனம் ஜெபித்துக் கொண்டிருக்க, தனஞ்செயனின் திருமண நிகழ்வில் தான் அமர்ந்திருந்த போது மலர்விழியின் உயிரில் பாதி ஏற்கனவே பறிபோய்விட்டிருந்தது. இவனில்லாது என்னால் வாழ்ந்திட முடியும் என வைராக்கியத்துடன் திருமண மண்டபத்தில் அடியெடுத்து வைத்தவள், அவன் புன்னகை ததும்பும் முகத்தைப் பார்த்ததும் மொத்தமும் உடைந்து போனாள். முகத்தில் உடல் மொழியில் என எதையும் வெளிப்படுத்தவில்லை எனினும், நேசம் கொண்ட நெஞ்சம் அக்கணத்தில் மறித்துப் போனது.

‘இவன் என்னைப் பாதிக்கவில்லை. இத்தனை வருடங்களில் எங்கோ ஓர் மூலையில் இவனது நினைவு மறைந்துவிட்டது’ என மலர் தனக்குத் தானே வகுத்திருந்த வேலியின் கம்பிகளே கூறான ஆயுதமாய் மாறி அவளைக் குத்திக் கிழிக்க, வேதனையோடு தனஞ்செயன் திருமணத்தில் அமர்ந்து இருந்தாள். இன்னும் பத்து நிமிடங்களில் இந்த தனஞ்செயன் வேறொருத்திக்குச் சொந்தமாகப் போகிறான் என உள்ளமும் உடலும் தவித்துத் துடிதுடிக்க, கல்லைப் போல அமர்ந்திருந்தவளுக்கு, அதற்கு மேலே முடியவில்லை. பனித்திருந்த விழிகளை யாருக்கும் காட்டக் கூடாது என குனிந்து அலைபேசியில் முகத்தைப் புதைத்தாள், வலியையும் சேர்த்துதான்.

அந்த நேரம்தான் மாறன் வந்து மலரை அழைத்துச் சென்றது. அடுத்தடுத்து அவள் உணரும் முன்னே சில நிமிடங்களில் விரும்பியும் விரும்பாமலும் அவள் தனஞ்செயனின் சரிபாதியாகியிருந்தாள்.

கிடைக்கவே கிடைக்காது என நினைத்த வாழ்க்கை சட்டென தன் கையில் வந்து நிற்கவும், மலர்விழி திகைத்துப் போனாள். என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஏனோ இந்த தனஞ்செயனை அப்படியே அவள் வாழ்க்கையில் ஏற்க முடியாது தடுமாறி தவித்துப் போனாள். ஒவ்வொரு முறை சண்டை வரும்போது வார்த்தைகளை வீசினாலும், அவனை விட அதிகமாய்க் காயம்பட்டது விழிதான்.

சுமித்ராவிற்குப் பதிலாகத் தன்னை அந்த இடத்தில் அமர வைத்ததும் உள்ளுக்குள் வலித்து தொலைத்தது. அதைவிட, கோபமாய் வந்தது. இத்தனை வருடங்கள் தனக்குள்ளே வைத்து அழுத்திய பாரங்களும் கோபங்களும் தனஞ்செயன் மீது திரும்பின. தன் வார்த்தைகளால் கணவன் காயம்படுகிறான் என்று உணர்ந்தவள், தவித்துப் போனாள். அதனாலே, அவனிடம் பாரா முகத்தைக் காண்பித்தாள்.

கோபமாய் முகத்தைத் திருப்பியும், அவனை அலட்சியப்படுத்தியும் தனாவிடம் பேச்சைத் தவிர்த்தாள். அவளுக்கே தெரிந்தது. எங்கு எதை பேசினாலும் பேச்சு கடைசியில் சண்டையில் முடிகிறது என. அதனாலே அவனை அருகில் அண்டவிடவில்லை.

விழியின் கோபம் கொஞ்ச கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. ஆனால், அதற்குத் தூபம் போடுவது போல தேவி பேச, கொதித்துப் போனாள். தனாவும் அவன் பங்கிற்குப் பேச, மொத்தக் கோபத்தையும் கணவன் மீது காட்டினாள். போதாதற்கு தனா வேறு அவ்வப்போது எதையாவது பேசி, செய்து என இவளது பொறுமையை சோதிக்க, இருவருமே நிதானமிழந்து போயினர்.

அடுத்தடுத்து சண்டையும் மாறன் வந்து தீர்த்து வைப்பதுமாய் இருந்தது. திருமணம் முடிந்த இந்த இரண்டு மாதங்களில் எத்தனையோ முறை தன் காதலை அவனிடம் கூறி கதறிவிடு என மனம் கெஞ்ச, ஏனோ சுயமுனைப்பு தடுத்துவிட்டது. ஆனால், விதி மீண்டும் மாறன் உருவில் தனாவிடம் அனைத்தையும் தெரிவிக்க வைத்திருந்தது.

சத்தியமாய் மலர்விழி எதிர்பார்க்காதது நேற்றைய அவர்களுக்கு இடையேயான இணைவு. இன்னும் பேசித் தீர்க்கப்படாத விஷயங்கள் ஆயிரம் இருந்தன. அதையெல்லாம் பேசினால், மனக்கசப்புதான் விஞ்சும் என அவளும் அறிந்ததே. அதற்கான அவசியம் வந்தால் மட்டும் பேசிக்கொள்ளலாம் என நடந்த கசப்பான சம்பவங்களை மறக்க முடிவெடுத்திருந்தாள்.

சிறிது நேரம் கணவனின் கையணைப்பில் சுகமாய்ப் புதைந்து இருந்தவள், நேரத்தைப் பார்க்க அது அதிகாலை எட்டு மணியைக் கடந்திருந்தது.

‘கடவுளே! வெளியே அத்தை இருப்பார்களே!’ லேசாய் கூச்சம் எட்டிப் பார்க்க, கணவனை முறைத்து வைத்தவள், ‘எல்லாம் இவரால வந்தது... கெஞ்சி கொஞ்சி நைட்டெல்லாம் தூங்கவேவிடலை!’ மனம் சுகமாய் அலுத்துக் கொள்ள, அவன் தலையைக் கோதிக் கொடுத்தாள். இரவில் தனா செய்த அட்டகாசங்களில் அவனின் பேச்சில், ரசனையில், அது கொடுத்த சிலிர்ப்பில் என மொத்தமாய் சிவந்து போயிருந்தாள் விழி.

முடியைக் கோதும் கரத்தைப் பிடித்திழுத்த தனா, உதட்டில் வைத்து அழுத்தி முத்தமிட்டவன்,
“முழிச்சிருக்கும் போது முறைச்சுட்டே திரி டி. மனுஷன் தூங்கும் போது முடியைக் கோதுறது. வெறிச்சு வெறிச்சுப் பார்க்குறது!” போலியாய் அலுத்துப் போன குரலில் கூறியவன் அவளது கையை இன்னுமே இழுத்து இறுகி அணைத்தான்‌.

அவன் பேச்சில் லேசாய் முறைக்க முயன்று தோற்றவள், “என்னை விடுங்க முதல்ல. ரொம்ப நேரம் ஆகிடுச்சு. அத்தை வெளியில இருப்பாங்க!” என அவன் கையில் வலிக்காது கிள்ளினாள் விழி.

“ப்ம்ச்... எங்கம்மாவுக்கு உன்னை மாதிரி விவஸ்தை இல்லைன்னு நினைச்சீயா டி? அவங்க அதெல்லாம் புரிஞ்சுப்பாங்க!” என கிசுகிசுத்தவனின் குரலில் பல வர்ணஜாலங்கள். மனம் மங்கத் தொடங்க, அதை தட்டி அடக்கியவள், “எனக்கு என்ன விவஸ்தை இல்லைன்னு நீங்கப் பார்த்தீங்க?” முறைப்பாய் வினவினாள்.

இவனிடம் பதிலில்லை. மெல்லிய சிரிப்பு மட்டும்தான் வந்தது. அதில் கடுப்பானவள், “உங்களைத்தான் கேட்டேன். என்ன விவஸ்தை...” என ஆரம்பித்தவளின் உதட்டில் அழுந்த முத்தமிட்டு சில பல நிமிடங்களுக்குப் பேச்சை நிறுத்தியவன், “அஹம்... ஹக்கும். சண்டை வந்தா, இப்படித்தான் நிறுத்தணும்னு என் பொண்டாட்டி சொல்லிக் கொடுத்திருக்கா!” என்றான். குரல் முழுவதும் மனைவி மீதான மயக்கம்தான். இவளுக்குப் பேச நா எழவில்லை. லேசாய் அடிவயிற்றில் பறப்பது போலிருந்தது. நேற்றைய கொஞ்சல்கள், கெஞ்சல்களின் மிச்சத்தை தொடர தனஞ்செயன் முன்வர, மலர் அவனிடமிருந்து எழுந்துவிட்டாள்‌.

“என்ன டி?” அவள் பிரிந்ததில் கணவன் கடுப்பாக, “விவஸ்தை கெட்ட என்கிட்ட உங்களுக்கென்ன வேலை?” என சற்றே சடைத்துக்கொண்டு குளிக்கப் போனாள். இவனுக்கு அத்தனை சிரிப்பு.

எழ மனமில்லாது படுக்கையிலே அவன் புரண்டு கொண்டிருக்க, மலர்விழி தலைக்குக் குளித்து வந்தாள். அவளைப் பார்த்ததும் கண்கள் பளிச்சென மின்னின ஆடவனுக்கு.

அவன் பார்வை உணர்ந்தாலும் விழி சட்டை செய்யாது மின்விசிறிக்கு கீழே நின்று தலையை உலர்த்தினாள். சின்ன சிரிப்புடன் எழுந்து அவள் பின்னே வந்து நின்றவன், “ஈரக்கூந்தலில் கொஞ்சம் இரக்கம் உள்ளதா பெண்ணே?
அள்ளி முடிந்ததில் எந்தன் நெஞ்சும் சேர்ந்து கொண்டதே!
ஒரே பார்வை தான் என் மேல் வீசிச் சென்றால், நில நடுக்கம்தான் என் மனதில் தோன்றுதே...” மயக்கமும் கிறக்கமுமாய் பின்னிருந்து கைக்கொடுத்து அவளது இடையோடு அணைத்தவனின் குரல் செவியில் கிசுகிசுப்பாய் விழுந்தது.

செவியோடு உரசிய இதழ்கள் இவளை லேசாய் அதிர்ந்து கூசச் செய்ய, அவன் கூறிய கவிதையில் மலர்விழி சிலிர்த்துப் போனாள். ஜில்லிட்டிருந்த இடையில் தனாவின் கரம் பதிய, நாடியில் முகம் புதைத்தான்.‌ தன்னையும் மீறி விழியின் உடலில் மெலிதான நடுக்கம் பிறந்தது.

“காலையே இப்படி குளிச்சு முடிச்சு வாசமா வந்தா, நான் என்ன பண்றதாம் விழி?” என்றவன் முகம் அவளின் கழுத்தடியில் புதைய, மனைவியின் சுகந்தத்தை ஆழ்ந்து சுகித்தான்.

"தெர்மோ டைனமிக்ஸ் தெரியுமா விழி..." கிறக்கமாய்க் கேட்டவன்
குளித்து வந்திருந்த மனைவியின் ஜில்லிட்டிருந்த உடலுக்கு லேசாய் வெப்பமூட்டினான்.

ஆசையாய் காதலாய் தன்னை நோக்குபவனை ஆச்சர்யமும் அதிசயமாய்ப் பார்த்து வைத்தாள் மலர். அவளது பார்வைக் கொடுத்த குறுகுறுப்பு அடிமனம் வரை தித்திக்கச் செய்ய, “ஹக்கும். என்ன வேணுமாம் இந்த விழிக்கு. ஏன் இப்படியொரு பார்வை?” என்றான் லேசாய் கிசுகிசுப்பான குரலில். கைகள் தன் போல முன்முடியை லேசாய் கலைத்துவிட்டன.
அவள் பேசாது கணவனையேப் பார்க்க, அந்தப் பார்வையில் தனா திணறிப் போனான்.

"என்ன டி?" கிசுகிசுப்பாய் கேட்டவன் குரல் முழுவதும் பெண்ணை மயக்கும் மாயாஜாலம் தான். தனது மூக்கை அவளது செவியில் லேசாய் நுழைக்க, கூசி சிலிர்த்தாள் விழி. அவனிடம் மனம் மட்டுமல்ல மொத்தமாய் மயங்கித்தானே கிடக்கிறாள் இந்தப் பெண். இன்று நேற்றல்ல, ஆறு வருடமாய் தீராத மயக்கமாகிற்றே.

“இல்ல, உங்களுக்குக் கோபமே வரலையா?” லேசாய் அதிசயித்து மனைவி கேட்க, இவனது இதழ்களில் இளம் புன்னகை பிறந்தது.

“எதுக்கு கோபப்படணும்?” தனா லேசாய் இழுக்க, “நான் உங்ககிட்ட ரெண்டு மாசமா முறைச்சுட்டே இருந்தேன். ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. நான் எந்த இடத்திலும் இறங்கி வரலை. ஆனால், நீ... நீங்க?” லேசாய் திணறியவளைப் பார்த்தவன், “ப்ம்ச்... தெரியலையே! கோபம் வரலைன்னு பொய் சொல்ல மாட்டேன். ரொம்ப ரொம்ப நிறைய வந்துச்சு. பட், அதெல்லாம் காட்டுனா, இந்த விழி தாங்கமாட்டா. என் பொண்டாட்டிக்கு வலிச்சா, கண்டிப்பா எனக்கும் வலிக்குமே! குழந்தைங்க அம்மா, அப்பாகிட்ட கோவிச்சுட்டு சண்டை போட்டா, அவங்க குழந்தை வேணாம்னு சொல்லுவாங்களா. அப்படித்தான் நீயும்?” என்றவனின் பேச்சில் இவளின் இமையோரம் ஈரம் கசிந்தது.

அதை சிமிட்டி உள்ளிழுத்தவள், அப்படியே பக்கவாட்டில் திரும்பி கணவனின் தாடியடர்ந்த கன்னத்தில் முத்தமிட, அவன் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது. “ஹக்கும்... இதென்னடி கன்னத்துல கிஸ் பண்ற பழக்கம். செல்லாது, செல்லாது... ஒழுங்கா இங்க கிஸ் பண்ணு!” என அவளது உதட்டையும் தன்னுடைய உதட்டையும் தொட்டுக் காண்பித்தான்.

“ச்சு... போங்க. போய் குளிச்சுட்டு வாங்க...” தனாவின் புறம் திரும்பி அவன் மார்பில் கையை வைத்துத் தள்ள முயன்றவளின் கரத்தை அப்படியே நெஞ்சோடு அணைத்தவன், “எப்ப பார்த்தாலும் அதென்னடி தள்ளி விட்ற பழக்கம்.‌ இப்படி இழுத்து அணைக்கவும் செய்யலாம். தெரியாதா?” என மனைவியின் கையைப் பிடித்திழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“ம்ப்ச்...” சலித்தவாறே அவனுள் பொருந்தியவள், “மணி இப்போ பத்தாகுது...” என்றாள் சுகமாய் சலுகையாய், கெஞ்சலாய், கொஞ்சலாய், சிணுங்கலாய். இன்னும் எத்தனையோ!

“ஆகிட்டுப் போகுது. உன்னை விட்ற ஐடியா இல்லை டி!” கிசுகிசுப்பும் கிறக்கமுமாய்க் கூறியவனின் விரல்கள் அவளின் கூந்தலிலிருந்து வடியும் நீரை சுண்டிவிட்டன.

“பேசி பேசியே ஆளை செட்யூஸ் பண்ணுங்க!” மெல்லிய முறைப்புடன் கூறியவளைப் பார்த்து உதட்டைக் கடித்தவன், “அதான் ஆறு வருஷத்துக்கு முன்னாடியே செட்யூஸ் பண்ணிட்டேனே! தனியா இப்போ எதுக்கு மயக்கணும்?” குறும்பாய்க் கேட்டான்.

“ஆசை ஐயாவுக்கு...” என சடைத்து அவனிடமிருந்து பிரிந்தவள் முறைத்துக்கொண்டே வெளியேற, “உண்மையை சொன்னா, யார் நம்புறா?” என்றவாறே அவனும் குளிக்கச் சென்றான்.

தாமதமாய் வந்ததற்கு லீலாவதி ஏதேனும் கேட்பாரோ என சங்கடமாய் நெளிந்தாள் விழி.
“வா விழி, நல்ல தூக்கமா? இன்னைக்கு நானே சமைச்சுட்டேன். உனக்குப் பிடிச்ச சப்பாத்தியும் பன்னீர் பட்டர் மசாலாவும் செஞ்சு இருக்கேன்!” என அவர் யதார்த்தமாய் பேச, இவளும் இயல்புக்கு வந்தாள்.

அவருடன் பேசிக்கொண்டே விழி உண்ண அமர்ந்தாள். பசி வயிற்றைக் கிள்ளியது. தனாவும் குளித்து வந்து உண்டான்.

மலர்விழி இந்தப் பத்து நாட்களில் மாமியாரிடம் சமைக்க கற்றுக் கொண்டாள். அவளுக்கு தேநீர், குளம்பியைத் தவிர பெரிதாய் எதுவும் சமைக்கத் தெரியாது. லீலாதான் பொறுமையாக அவளுக்குக் கற்றுக் கொடுத்தார்.

தனாவுடனான அவளது நாட்கள் ஏன் இத்தனை தித்திப்பாய் செல்கிறது என எண்ணுமளவிற்கு சென்றன நாட்கள். கண்டிப்பாக தான் காதலை உரைக்காததற்கு கோபம் கொள்வான், சண்டையிடுவான் கணவன் என விழி எண்ணியிருக்க, தனஞ்செயன் முற்றிலும் தலைகீழாக நடந்து கொள்வது இவளை அத்தனை ஆச்சர்யப்படுத்தியது.

அவ்வப்போது கட்டியணைப்பதும், முத்தம் கொடுப்பதும் தான் கெஞ்சினால் மிஞ்சுவதும், எதாவது தான் மிரட்டலாய்க் கூறினால் கெஞ்சுவதும் என மனைவியின் பின்னேதான் சுற்றினான். அவளைப் பிரியவே மனதில்லை என்பதை போல அவளையே ஒட்டியும் உரசியும் சுற்றி சுற்றி காதல் செய்தான். இவள் சண்டையிடும் எண்ணத்தில் பேசினால் கூட, முத்தம் ஒன்றைக் கொடுத்து, பெண்ணின் சித்தத்தையும் மொத்தத்தையும் மறக்கச் செய்தான்.

அவள் விரும்பிய தனா இவன்தான். எந்த வகையிலும் மனைவியின் சுதந்திரமும் சுயமரியாதையும் இறங்கி விடக் கூடாது என அவ்வப்போது அவன் பேச்சின் பிரம்மப்பிரயத்தனம் இவளது கண்ணிலும் கருத்திலுமே விழுந்தது. இந்த தனாவை தானே அத்தனை காதல் செய்தாள். ஆனால், அவளை விட அவன்தான் மனைவியிடம் அத்தனை அனுசரணையாய் நடந்து கொண்டான். அவ்வப்போது வேண்டுமென்றே இவளை வம்பிழுத்துக் கோபம் கொள்ள செய்வான். அந்த நேரத்தில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொள்ள, இவன் கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்வான்.

வார்த்தைக்கு வார்த்தை சண்டையிட்டால் கூட இத்தனை அயர்வு இருக்காது போல. எதற்கெடுத்தாலும் விட்டுக் கொடுத்தே மனைவியை மொத்தமாய் வாரிச் சுருட்டிக் கொண்டான் இந்த தனஞ்செயன்.

தனா ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொண்டான். விழிக்கு தன் மீதான காதல் என்பது அத்தனை தீவிரமானது. என்ன அதை அவளால் வெளிப்படையாக கூறவோ, இறங்கி வரவோ முடியவில்லை. அது அவளது பிறவி குணம். நிறைய இடங்களில் அவள் இறங்கி வர விரும்பவில்லை. ஏன், மாறனுடன்
சண்டையிட்டால் கூட மலர்விழி அவ்வளவு எளிதில் இறங்கி வர மாட்டாளே! அதுதான் அவளது குணம் என அறிந்து அதற்கேற்ப தன்னை சற்றே தகவமைத்துக் கொண்டான். அதில் அவனுக்கு எந்தக் கஷ்டமும் பெரிதாய் இல்லை. இயல்பிலே தனாவின் குணமே அப்படித்தான். அதனாலே எளிதில் மலர்விழியை மன்னித்து, அவளது காதலை ஏற்க முடிந்திருந்தது.

இன்னும் இரண்டு நாட்களில் விழிக்கு கல்லூரி திறப்பதாக இருக்க, இருவரும் அங்கே வீட்டிற்கு கிளம்பிச் சென்றனர். பத்து நாட்களில் வீடு லேசாய் தூசியும் ஒட்டடையுமாய் இருக்க, மலர்விழி சுத்தம் செய்ய, தனா உதவினான்.

திடீரென சமையல் செய்யும் தனத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவர் இரண்டு நாட்கள் விடுப்பெடுத்துக் கொண்டார். முதல் நாள் காலையில் வெளியே வாங்கி உண்டனர். மதியம் விழி, ரசம் வைத்து உருளைக்கிழங்கைப் பொரித்து எளிமையாக உணவை முடிந்திருந்தாள்‌.

மறுநாள் தனஞ்செயன், “விழி, நேத்து நீ குக் பண்ண இல்லை. சோ, இன்னைக்கு என்னோட குக்கிங்!” என்று சமையலறைக்கு வந்தவனை முறைத்து வைத்தாள் விழி.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். போங்க...” இவள் கோபமாய் அவனை விரட்ட முயன்றாள். அவளுக்குத் தெரியுமே லீலாவதி எக்காரணம்கொண்டும் மகனை அடுக்களைக்குள்ளே நுழையவிட்டதில்லை என. அப்படியிருக்கையில் இவன் சமைக்கிறேன் என சொன்னால்,
விழி லேசாய் அதிர்ந்துதான் போனாள்.

ஆனால், தனஞ்செயன் விடுவதாய் இல்லை. சமைத்தே தீருவேன் என விடாப்பிடியாய் நின்றுவிட, “என்னமோ பண்ணுங்க...” அவனை முறைத்துவிட்டு நகர்ந்தாள் விழி.

இந்த ஆறுமாதத்திற்குள் கல்லூரியில் அவளுக்கான பிராஜெக்டை முடித்தாக வேண்டும். தனக்குப் பிடித்த தலைப்பு ஒன்றை தேர்வு செய்து பேராசிரியர்களிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கான தலைப்பைத் தெரிவு செய்வதற்காக புத்தகத்தை எடுத்து அமர்ந்திருந்தாள். அறையிலிருந்தவள், எழுந்து வந்து கூடத்தில் அமர்ந்து கொண்டாள். புத்தகத்தில் ஒரு கண்ணும் கணவன் மீது ஒரு கண்ணும் வைத்திருந்தாள்.

அவளது பார்வை உணர்ந்த தனா, “ஹக்கும்... ம்ம்...” எனத் தொண்டையை செருமியவாறே இரண்டு மணி நேரமாகப் பாத்திரங்களை உருட்டி அரட்டி அலைபேசியை அருகில் வைத்து, எதையோ சமைத்து முடித்திருந்தான்.

சமைத்தவற்றை சிறிய பாத்திரத்தில் மாற்றி உணவு மேஜையில் எடுத்து வைத்த தனஞ்செயன்,
“விழி, சாப்பிடலாம் வா...” என்றான் எதையோ சாதித்த சிரிப்புடன்.

அவன் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தவள், எதுவும் கூறாது எழுந்து வந்தாள். “நானே சர்வ் பண்றேன்!” என்று உணவை தட்டிலிட்டான்.

மலர்விழி உணவை எடுத்து சுவைக்க, “விழி, எப்படி இருக்கு?” விழிகள் மின்ன ஆர்வமாய்க் கேட்டு வைத்தான் தனா. அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு சத்தியமாய் உண்மையைக் கூற மனம் வரவில்லை. தனக்காக, தன் வேலையை குறைக்க வேண்டும் என்று பிரம்மப்பிரயத்தனம் செய்து சமைத்திருந்தவனை குறை கூற, அவள் மனது விழையவில்லை.

அதை கடினப்பட்டு விழுங்கியவள், “நல்லா இருக்கு...” என மெலிதாய் தலையை ஆட்ட, அவள் விழிகள் சிவந்து கண்ணீர் பொலபொலவென வடிந்தது. தனா செய்த சமையலின் விளைவில் விழியின் முகமும் சிவந்து போக, இவன் பதறிப் போனான்.

“ஐயோ விழி, சாரி டி. சாரி... ரொம்ப காரமா?” எனக் கேட்டு உடனே தட்டை நகர்த்திவிட்டு தண்ணீரை அவளிடம் கொடுத்தான்.

“ரொம்ப காரம் இல்ல...” என்றவளுக்குத் தண்ணீர் அருந்தியும் கண்ணில் நீர் நிற்கவில்லை.

“சாரி டி... சாரி. கண்ணுல தண்ணி வந்துட்டே இருக்கே!” லேசாய் பதட்டத்துடன் பரித்தவனின் குரலில் குற்ற குறுகுறுப்பு. ஆசையாய்த் தனக்காக சமைத்துவிட்டு இப்போது, குற்றம் செய்த பாவனையில் நின்றிருந்தவனின் முகத்தைப் பார்த்து இவளுக்கு அகம் கனிந்து போனது.

“ப்ம்ச்...” என்று எழுந்தவள் அவன் வேறு ஏதும் பேசும் முன்னே கணவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டு, காரத்தையெல்லாம் கணவனுக்குக் கடத்த முயன்றாள். அவள் முயற்சி புரிந்த தனாவும், மனைவியின் இடையோடு கைக்கொடுத்து முழு ஒத்துழைப்பையும் வழங்க, காரமெல்லாம் காத தூரம் சென்றிருக்க, காதல் ஆட்சி செய்யத் துவங்கியது.

மனைவியின் செயலில் தனா கிறங்கிப் போக, அவளும் லேசாய் அவனிடம் மயங்கிக் கொண்டிருந்த தருணம், அபஸ்வரமாய் அழைப்பு மணி அடித்துத் தொலைத்தது. சில நிமிடங்கள் தொடர்ந்த அழைப்பு மணியில் தனாவிடமிருந்து பிரிந்தவள், கதவை சென்று திறக்க, கையில் உணவுடன் மாறன் நின்றிருந்தான்.

விழி காலையிலே லோகநாயகியிடம் சமையல்காரப் பெண்மணி விடுமுறை என்று கூறியிருக்க, அவர்தான் இருவருக்கும் சேர்த்து சமைத்து மாறனிடம் கொடுத்தனுப்பி இருந்தார்.

சிவந்த முகமும் நீர் நிரம்பிய விழிகளுமாய் கதவைத் திறந்த தங்கையைப் பார்த்து மாறன் பல்லைக் கடித்தான். இந்த சில நாட்களாகத்தான் அவர்களுக்கு இடையில் சண்டை இல்லை என அவன் நிம்மதியாய் இருக்க, தற்போதைய விழியின் முகம் அவன் பொறுமையைச் சோதித்திருந்தது.

தரதரவென மலரை இழுத்து நடுக்கூடத்திற்கு வந்தவன், “ரெண்டு பேரும் என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க. காலம் முழுக்க நீங்க சண்டை போட, நான் தீர்த்து மட்டுமே வைக்கணும்னு நினைக்கிறீங்களா?” என்றான் ஏகக் கடுப்பில். அவனது கூற்றுப் புரியாது இருவரும் விழித்தனர்.

“தனா, மறுபடியும் அவக்கிட்ட சண்டை போட்டீயா? அழுது முகமெல்லாம் சிவந்து போய்ருக்கா...” என்றவனின் பார்வை மலரைத் தொட்டு மீள, இருவரும் அவனை முறைத்தனர்.

“மாறா, என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாத டா!” விழி நடந்ததைக் கூற வர,

“நீ வாயை மூடு மலர். எதுக்கெடுத்தாலும் உன் புருஷனுக்குப் சப்போர்ட் பண்ணுவ!” தங்கையிடம் பொரிந்தவன், “வாயைத் தொறந்து சொல்லு டா. என்ன பண்ணுன அவளை?” என்று தனாவிடம் அதட்டலாய்க் கேட்டான்.

அவனைப் பார்த்து நெற்றியைச் சொரிந்தவன், ‘இவன் இருக்க வரைக்கும் என் வாழ்க்கையில எந்த நல்லதும் நடக்க விடமாட்டான். கரடி... கரடி!’ என நினைத்துப் பல்லைக் கடித்த தனா, “இப்போ என்ன, அவளை என்ன செஞ்சேன்னு தெரியணும். அவ்வளோ தானே?” எனக் காட்டமாய் வினவினான். மாறன் தலை ஆமாம் என்பது போல ஆட,
அவனை இழுத்துக்கொண்டு சென்று உணவு மேஜையில் அமர்த்திய தனா, தான் சமைத்த உணவை அவன் வாயில் திணித்தான்.

நொடியில் காரமேறி மாறன் விழிகளில் நீர் கொட்ட, “அச்சோ... மாறா... இந்தா தண்ணியைக் குடி!” என விழி அவன் தலையில் தட்டி தண்ணீரை புகட்டி அவன் சமநிலைக்கு வர கிட்டத்தட்ட பத்து நிமிடங்களானது.

“டேய்! என்னக் கருமம் டா இது?” மாறன் முகத்தை அஷ்டக்கோணலாக மாற்ற, “ஹம்ம்... அது... நான் குக் பண்ணேன் டா. கொஞ்சம் காரம் கூடிப் போச்சு!” என்றான் தனா. மாறன் அவனை ஆச்சர்யமாய்ப் பார்க்க, தனா சிரித்து வைத்தான்.

“போதும் உங்க ரெண்டு பேரோட ரொமான்டிக் லுக். எனக்குப் பசிக்குது!” என்ற விழி, லோகநாயகி சமைத்த உணவை மூவருக்கும் பரிமாறினாள். நீண்ட நெடிய வருடங்கள் கழிந்து மூவரும் இதுபோல ஒன்றாய் உண்கின்றனர். மூன்று பேரும் அதை உணர்ந்து புன்னகைத்துக்கொண்டனர்.
மாறன் சிறிது நேரம் பேசிவிட்டு விடை பெற்றான்.

இரவு உணவுக்கு இது போல கொடுமைகளை செய்ய விரும்பாத இருவரும் ஒரு உணவகத்தில் உணவை வரவழைத்து உண்டனர்.

தனா சிறிது நேரம் தொலைக்காட்சியின் முன்பு அமர, மலர் உறக்கம் வரவில்லை என காலையில்விட்ட வேலையைத் தொடர்ந்தாள்.

லேசாய் உறக்கம் விழிகளைச் சுழற்ற, தொலைக்காட்சியை அணைத்தவன், மலர் இருந்த அறைக்குள் நுழைந்து அவளருகே ஒரு நாற்காலியை திருப்பிப் போட்டு, அதற்கு எதிர்புறமாக அமர்வது போல மனைவியைப் பார்த்தவாறு அமர்ந்தான்‌.

அவன் வரவை உணர்ந்தவள், “என்ன வேணும்? ஏன் இன்னும் தூங்காம, இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க?” என வினவினாள்.

“என்னக் கேட்டாலும் கிடைக்குமா?” குறும்பாய்க் கேட்டவனை நிமிர்ந்து முறைத்தவள், “போய் படுங்க...” என்றாள். மெல்லிய புன்னகையுடன் தலையை இடம் வலமாக முடியாது என அசைத்தவன் நாற்காலியில் தலையைச் சாய்த்தான்.

எதுவும் கூறாதவள் புத்தகத்தில் தலையை நுழைக்க, இவனின் தொடர் பார்வை கொஞ்சம் குறுகுறுப்பை உண்டாக்கியது.
தலையை மறுபுறம் சாய்த்து வேறொரு கோணத்தில் மனைவியை ரசித்தவனின் பார்வையில் உள்ளே அவளுள் ஏதோ ஒரு உணர்வை எழச் செய்ய, எரிச்சலாய் நிமிர்ந்து அவனை முறைத்தாள்.

“ஏன் விழி, அரியர் எதுவும் வச்சிருக்கீயா? எக்ஸாம் முடிஞ்சும் புக்கையே வச்சிட்டு இருக்க?” இவன் உதட்டைக் கடித்துப் புன்னகையை அதக்கினான்.

கையிலிருந்த பேனாவை அவன் மீதெறிந்தவள், “பிராஜெக்ட்க்கு டைட்டில் தேட்றேன்...” என்றாள் கணவனை முறைத்தவாறு.

“ஓ... அதுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கே டி. பொறுமையா பண்ணலாம். இப்போ படுக்கலாம் வா!” என்றவனுக்கு சன்னமான சிரிப்பு.

அதில் சீண்டப்பட்டவள், “இப்போ போய் படுக்கப் போறீங்களா? இல்லையா?” என்றாள் அதட்டலாய்.

“நோ... என் பொண்டாட்டி வராம எங்கேயும் நகர மாட்டேன்!” என்றான்.

“சரியான இம்சை!” உதட்டு உள்ளே முணுமுணுத்தவள், புத்தகத்தைப் பட்டென மூடி வைக்கவும், தனாவிற்குப் சிரிப்பு பொங்கியது.

அவள் எழவும், “சுகமான இம்சை என் பொண்டாட்டி!” என அவளைக்
கைகளில் அள்ளிக்கொண்டான். ஒரு நிமிடம் அதில் திகைத்தவள்,
“என்ன பண்றீங்க?” எனப் பதறினாள்.

அலுங்காமல் குலுங்காமல் மனைவியை அறைக்குத் தூக்கிச் சென்று கட்டிலில் இட்டவன், தானும் அவளருகே படுத்து இறுக்கி அணைத்தான். அவளைக் கையைணைவுக்குள்கொண்டு வந்தவன், “தூங்கு விழி...” எனக் கள்ளப் புன்னகையுடன் கண்களை மூடினான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இதுக்குதான் இந்த பில்டப்பா?” என உதட்டைச் சுழித்தாள்.

ஒற்றைக் கண்ணைத் திறந்து அதை ரசித்தவன், “சரியான டர்டி மைண்ட் டி உனக்கு...” என்றான் சின்ன சிரிப்புடன்.

“யாருக்கு டர்டி மைண்ட். எனக்கா? உங்களுக்கா?” மலர் சிலுப்பிக்கொண்டு வினவ, “இதுல என்ன டவுட். உனக்குத்தான் டி டர்டி மைண்ட்!” என்றான்.

அவன் பதிலில் சிலிர்த்துக்கொண்டு எழுந்தவள், “ஓஹோ... எனக்குத்தான் டர்டி மைண்ட். ரைட் ஓகே, ஐயாவுக்கு நல்ல மைண்ட் இருக்கு. நான் என் ரூமுக்குப் போறேன்!” என எழப் பார்க்க, அவளை விடவில்லை தனா.

“ப்ம்ச்.. எப்ப பார்த்தாலும் புருஷன்கிட்ட முறைச்சுட்டே திரியாத. ஆசையா பேசு டி!” என்றான் அவளை மேலும் வம்பிழுக்கும் பொருட்டு.

“இந்த மூஞ்சியைப் பார்த்தாதான் உங்களுக்கு ஆசை வராதே. நான் எதுக்கு அப்படி பேசணும்!” முறைப்புடன் கேட்டவளைப் பார்த்து சிரித்தவன், “சரி, சமாதானம்...” எனக் கூறி முடிய, தன் வாயைக் கையால் மூடிக்கொண்டு அவனைப் பார்த்து விழிகளை கோபமாய் உருட்டினாள் மலர்.

'எப்படித்தான் இந்தப் பெண்களால் எப்போதும் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறதோ? ஆண்களுக்கு ஞாபகசக்தியைக் கடவுள் குறையாக வைத்துவிட்டார் போல என நினைத்து ஆச்சர்யப்பட்டான்.


மனைவியின் செய்கையில் உதட்டைக் கடித்துப் புன்னகையை மறைத்தவன், “உதட்டுல முத்தம் கொடுத்துதா
ன் சமாதானம்
 
Administrator
Staff member
Messages
1,269
Reaction score
3,715
Points
113
செய்யணும்னு இல்லையே!” என்று பட்டென குனிந்து அவளது கழுத்து வளைவில் ஆழப் புதைந்தான். அவன் இதழ்பட்டதும் கூசிச் சிலிர்த்தவளின் மனம் கிறங்கத் தொடங்கியது.

அதை வெளிகாட்டாது, “போங்க... ஒன்னும் சமாதானம் செய்ய வேணாம்...” மலர் முறுக்கிக் கொள்ள, கெஞ்சி கொஞ்சி அவளை சமாதானம் செய்து இரவு முழுவதும் கொஞ்சித் தீர்த்தான் தனஞ்செயன்.
 
Top