- Messages
- 1,263
- Reaction score
- 3,702
- Points
- 113
எண்ணம் – 13
2015 நவம்பர் எனத் தேதி போட்டு முதல் பக்கத்தில் தொடங்கி இருந்தாள் மலர்விழி.
விழி அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். சாரதியும் லோகநாயகியும் அவசர வேலையாக வெளியே சென்றிருந்தனர்.
அன்றைக்கு மலர்விழிக்கு டைபாய்டு காய்ச்சலாக இருக்க, அறையிலே முடங்கிக் கிடந்தாள். மாறனுக்கும் தனாவிற்கும் தேர்வுகள் நடந்து கொண்டிருந்த சமயம் அது.
இருவரும் ஒரே கல்லூரியில் பயின்றாலும் வேறு வேறு பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் பயின்று கொண்டிருந்தனர்.
தங்கைக்கு உடல்நலமில்லை என மாறனும் மலர்விழியை அவ்வப்போது பார்த்து வந்து படித்துக்கொண்டிருந்தான். திடீரென யாரிடமிருந்தோ அழைப்பு வர, அவன் வெளியே சென்று விட்டான். தனா மட்டும் கூடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க, விழி கஷ்டப்பட்டு எழுந்து வந்தாள்.
“மாறா...” என இவள் குரல் சுவாதீனமாக ஒலிக்க, மாறனுக்குக் கேட்கவே இல்லை. தனா எழுந்து வந்தான்.
“என்ன விழி, எதுவும் வேணுமா?” அவன் அருகே வந்ததும் விழி வாந்தி எடுத்திருந்தாள். தனஞ்செயன் உடையும் அதில் பாழாய்ப் போனது.
வாந்தி எடுத்தவள் கீழே விழப் போக, அவளைத் தாங்கிப் பிடித்திருந்தான் தனா. அவனது முகத்தை சின்னவள் கலக்கத்துடன் பார்க்க, “ப்ம்ச்... ஒன்னும் இல்லை டா விழி...” என்றவன் முகத்தில் அருவருப்பு சுத்தமாய் இல்லை. இவளை கழிவறைக்கு அழைத்துச் சென்றான். வாந்தியெடுத்து முகம் வாயைக் கழுவிவிட்டு மலர் வெளியே வர, தனா தன் உடையை கழுவிவிட்டு வந்தான்.
“சாரி...” என இவள் அவனைக் குற்ற உணர்வாய்ப் பார்த்து வைத்தாள்.
“விழி, அதை விடு. சாப்ட்ட எல்லாத்தையும் வாந்தி எடுத்துட்ட. எதாவது சாப்பிட எடுத்துட்டு வரவா?” எனக் கேட்டவன், எதையும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் பதிலைக் கேட்காது சமையலறைக்குச் சென்று உணவைத் தட்டிலிட்டு எடுத்து வந்தான்.
“நீ உட்காரு. நானே ஸ்பூன்ல ஊட்டி விட்றேன்...” என்றவன் மலர்விழிக்கு உணவை ஊட்டினான். உடலில் தெம்பு சுத்தமாய் இல்லை இவளுக்கு. டைபாய்டு காய்ச்சல் வந்து இரண்டு நாட்களாகப் படுத்தப் படுக்கையாகக் கிடந்தாள்.
அலைபேசியைத் துண்டித்துவிட்டு வந்த மாறன், “விழி, என்ன பண்ணுது, பசிச்சிருச்சா?” எனக் கேட்டவாறே தனாவிடமிருந்து உணவை வாங்கி ஊட்ட ஆரம்பித்தான். தனாவும் அவளது அருகே அமர்ந்தான். உணவை உண்டுக்கொண்டே அவனைப் பார்த்தவள் புன்னகைத்தாள்.
தாய், தந்தை, தமையனுக்கு அடுத்து அவளுக்கு அக்கறையாய் உணவு ஊட்டிவிட்ட வரிசையில் இடம்பெற்றிருந்தான் தனஞ்செயன். இதற்கு முன்பு ஓரிரு வார்த்தைகள் பேசி, தினமும் பார்த்துக்கொண்டாலும் மென்னகையுடன் கடந்துவிடுவான் தனா. மலரும் அப்படித்தான் பெரிதாய் அவனிடம் பேசவோ ஒட்டுதலோ காட்ட விழையமாட்டாள். ஆனால், அன்றைக்கு தனஞ்செயன் அவளது விழிகளுக்கு வித்தியாசமாய் தெரிந்தான். அவனை இதுவரை தனது நட்பு வட்டத்தில் இணைத்திராதவள், லேசாய் வட்டத்தை தளர்த்தி தனாவை நண்பனாய் ஏற்றுக் கொண்டாள்.
அதற்குப் பின்னர் எப்போதும் உதிர்க்கும் சம்பிரதாயப் பேச்சுக்கள் மட்டும் இல்லாது நின்று நிதானமாக அவனிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசத் தொடங்கியிருந்தாள். தன்னை அறியாமலே தனஞ்செயன் மீது மலருக்குப் பிடித்தம் உண்டாக ஆரம்பித்திருந்தது.
சாரதியிடமும் லோகநாயகியிடமும் மரியாதையாய் நடந்து கொள்ளும் விதம் பிடித்தது. நண்பனின் தங்கை, தன் தோழி என்றாலும் கூட ஒரு தப்பான பார்வை வீசியிராத தனஞ்செயன் எப்போது தனக்குள்ளே நுழைந்தான் என பாவைக்குத் தெரியாது.
தனாவும் அவளின் நட்புக் கரத்தை ஏற்று மாறனைப் போல அவனது தங்கையையும் தோழியாக மாற்றிக்கொண்டான். இப்போது இருவர் மூவராகிப் போயினர்.
தனாவும் மாறனும் வெளியே சுற்றும் போது, இவளும் என்றாவது ஒருநாள் இணைந்து கொள்வாள். மலர்விழிக்கும் மாறனுக்கும் சின்ன சின்ன சண்டைகள் வரும்போது தனா நீதிபதியாகிப் போனதெல்லாம் தனிக் கதை.
மலர் எதையாவது கேட்டு அடம்பிடிக்க, மாறன் வாங்கித் தராது மறுத்துவிடுவான். ஆனால், தனஞ்செயன் அத்தியாவசியமானது எனத் தோன்றினால், அவளுக்காக வாங்கிக் கொடுப்பான்.
மலர்விழி ஆரம்பத்தில் அவனிடமிருந்து எந்தப் பொருளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவளைப் பொறுத்தவரை உறவிற்குள் இதெல்லாம் சரியென்றாலும், அவர்களின் பண வசதியை எந்த வகையிலும் தாங்கள் பயன்படுத்தியது போலிருக்கக் கூடாது என எண்ணி மறுத்துவிட்டாள். மாறன்தான் தங்கையை வற்புறுத்தி வாங்கச் சொல்லுவான். விலை உயர்ந்தப் பொருளாக இருந்தால், விழி அதை கையிலே தொடமாட்டாள்.
எல்லோரும் சிறுவயதிலிருந்தே மலர் என அழைத்துப் பழக, வந்த முதல்நாளே தனா விழி என அழைத்திருந்தான். சிறு வயதில் என்ன நினைத்து அழைத்தானோ தெரியாது. ஆனால், அதுவே தொடர்கதையாகிப் போனது.
தனாவின் மீதிருந்த ஈர்ப்பு எப்போது நேசம் என்னும் அத்தியாயத்திற்குள் நுழைந்தது என ஒவ்வொரு பக்கமாக அவனைப் பற்றி எழுதி இருந்தாள் மலர்விழி. ஆங்காங்கே கவிதைகள் வேறு அத்தனை காதலுடனும் நேசத்துடனும் எழுதி வைத்திருந்தாள். இவனுக்குப் அதைப் படித்ததும் இளம் புன்னகை தோன்றியது.
அவனுடான தன் காதலை உணர்ந்தப் பிறகு, தனாவிடமிருந்து வாங்கிய அத்தனை பொருட்களைப் பற்றியும் எழுதி, அதை பத்திரமாகவும் வைத்திருந்தாள். அப்படித்தான் அந்த அயிரை நிறச்சட்டையும் அவளிடம் வந்திருந்தது.
அது தனாவின் சட்டை, ஒருநாள் மாறன் உடுத்திவிட்டு அப்படியே வைத்துக்கொள்ள, இவள் மாறனிடமிருந்து திருடி வைத்திருந்தாள். மலர் அதை விவரித்து எழுதி இருந்ததைக் கவனித்த தனாவிற்கு என்ன உணர்வென்று விவரிக்க முடியவில்லை. மனதில் இருந்ததை வார்த்தையால் வடித்திருந்தாள்.
நாட்குறிப்பேட்டை வாசிக்க வாசிக்க அவனால் நம்பவே முடியவில்லை. ‘விழி... தன்னை விரும்பி இருக்கிறாளா? ஏன் இந்தப் பிடித்தம்? இத்தனை காதல்?’ என மனம் பரபரத்தது. எப்போதும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சண்டையிட்டு முறைத்தவாறு திமிராய் சுற்றுபவளுக்குள் இப்படியொரு எண்ணம் இருக்குமென அவனால் இப்போதும் நம்ப முடியவில்லை. ஏதோ எட்டாவது அதிசயமாய் அவளின் காதல் இவனது சிந்தனையை சிக்கனமின்றி ஆக்கிரமித்தது.
அவளது நாட்குறிப்பேட்டில் நடந்தது அத்தனையும் மலர்விழி கைப்பட எழுதி இருந்தாள். தனஞ்செயன் இதுவரை அவளை அப்படியொரு கண்ணோட்டத்தில் பார்த்ததே இல்லை. வாயடைத்துப் போனான் விழியின் செய்கையில்.
அந்தப் பையை எடுத்துத் தலைகீழே கொட்டினான். அதிலிருந்தவை பேனாக்கள், குட்டி குட்டி இதரப் பொருட்கள் என எல்லாம் அவன் வாங்கிக் கொடுத்தவை தான். இப்படி காதலித்தவள், ஏன் அப்படி நடந்து கொள்கிறாள் என மனம் முரண்ட, மீண்டும் நாட்குறிப்பேட்டை எடுத்துப் படிக்கத் தொடங்கி இருந்தான்.
மலர்விழி அப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். வகுப்பில் முதல் மாணவியாக வரவில்லை எனினும் எப்போதும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுவிடுவாள். ஆனால், அந்த முறை நடந்த அரையாண்டுத் தேர்வில் எல்லா பாடத்திலும் வெறும் தேர்ச்சி மதிப்பெண்கள் மட்டுமே வாங்கியிருந்தாள்.
அதைக் கவனித்த பெற்றவர்கள் மலர்விழியை அழைத்துக் கேட்க, அவர்களிடம் எதையோ கூறி சமாளித்துவிட்டாள். ஆனால், மாறன் தங்கை கூறியதை நம்பவே இல்லை. சோர்ந்திருந்த முகமும் கருவளையமிட்டிருந்த விழிகளும் அவனை யோசிக்க செய்தன. கடந்த ஒரு மாதக் காலமாக அவள் இயல்பைத் தொலைந்திருப்பதை மூளை தாமதமாக இனம் கண்டறிய, அவனுக்குள் லேசாய் பயபந்து சுழன்றது. வேறு ஏதும் பிரச்சனைகளில் அவள் சிக்கிவிட்டாளோ? என மனம் பலவாறு யோசித்து தொலைத்தது.
தாய் தந்தை இல்லாத நேரமாக மலர்விழியிடம் பேசலாம் என இவன் அறைக்குள் நுழைய, அவனைக் கண்டதும் பட்டென கையிலிருந்த நாட்குறிப்பேட்டை மடக்கி தூரம் வைத்தாள். மாறனின் கண்களில் அது தவறாமல் பட்டுவிட்டது.
“மலர், அம்மா, அப்பாகிட்ட பொய் சொன்ன மாதிரி, உன்னால என்கிட்ட எதையும் மறைக்க முடியாது!” என்றவனின் பார்வை அந்த நாட்குறிப்பேட்டை மொய்த்தது.
“ப்ம்ச்... ஒன்னும் இல்லை மாறா...” மலர் குரல் கலங்கித்தான் வெளிவந்திருந்தது. குரல் மட்டுமல்ல இதயமும் முழுவதும் கலங்கிப் போயிருந்ததை அவள் மட்டுமே அறிவாள்.
“அப்போ டைரியை என்கிட்ட கொடு...” மாறன் அதை எடுக்கப் போக, மலர்விழி மாட்டேன் என்பது போல தலையை அசைத்து அதை எடுத்து கைகளுக்குள் அடக்கினாள்.
“மலர்...” மாறன் அதட்டலிடவும், இவளின் கண்களிலிருந்து பொலபொலவென நீர் வழிந்தது. மாறனை எட்டி அணைத்துக் கொண்டவளுக்கு வார்த்தைகள் எல்லாம் வரவில்லை. அப்படியொரு அழுகை அழுதாள். மாறன் பயந்து போனான். மலர்விழி எதற்கும் எளிதாய் கலங்கும் ரகமில்லை. இப்படி அவள் அழுகிறாள் என்றால் விடயம் பெரிது என மனம் அடித்துக்கொண்டது.
“மலர், அழறதை நிப்பாட்டு. என்ன ஆச்சுன்னு முதல்ல சொல்லு. மனசெல்லாம் பதறுது டி...” தங்கையைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்த மாறன் அதட்டலாய்க் கேட்க, மலர் தேம்பினாள்.
அழுதுகொண்டே மென்றும் விழுங்கியும் வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன. “அண்ணா, எனக்கு... எனக்கு ஜெய்யை ரொம்ப பிடிச்சிருக்கு...” என்றவள் குரல் முழுவதும் வேதனையின் தடம். முதல் முறையாய் விழியிடம் தடுமாற்றம் . தமையன் முகத்தை அவளால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. குற்ற உணர்வு அவளை வாட்டியது.
அழுத முகத்துடனும் சிவந்த விழிகளுடனும் தலையைக் குனிந்துகொண்டாள். தன்னுடைய வலி அவனுக்குத் தெரிய வேண்டாம் என உதட்டைக் கடித்து அழுகையை அடக்கினாள்.
மாறனுக்கு லேசாய் அதிர்ச்சி. இப்படியொரு விஷயத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு நொடி என்ன செய்வது எனத் தெரியாது தடுமாறிப் போனான்.
இப்போது மலர்விழியின் அண்ணனாய், அவளது வாழ்க்கையில் தன்னுடைய பொறுப்பு எத்தனை இருக்கிறது, அவளை நல்வழி படுத்த வேண்டும் என மனம் தன்னுடைய கடமைகளை அடுக்கியது.
அவனால் நம்பவே முடியவில்லை. அவனுடைய நட்பு தனாவுடன் அத்தனை ஆழமானது. ஆனால், மலருக்கும் தனாவிற்கும் அப்படியெதும் பெரிதாய் இருந்ததில்லை. தனா தன்னைக் காண வரும்போது இருவரும் பார்த்துக் கொள்வார்கள். இரண்டொரு வார்த்தைப் பேசுவார்கள். அப்படி இருக்கையில் இந்தத் தனஞ்செயன் எந்த இடத்தில் மலர்விழியை ஈர்த்தான் என அவனுக்கு சுத்தமாய்ப் புரியவில்லை. அதுவும் இப்படியொரு அழுகை அழுகிறாளே தங்கை எனப் பதற்றம் சூழ்ந்தது.
கண்டிப்பாய் இதற்கு இந்த வயதில் ஏற்படும் பருவ மாற்றங்களும், ஈர்ப்பும்தான் காரணம். அதைதான் மலர்விழி காதலென்று நம்புகிறாள் என அவன் எண்ணியிருக்க, தங்கையின் பேச்சு அதை உடைத்திருந்தது.
மறுபுறம் திரும்பி நின்று கையைக் கட்டிக்கொண்ட விழிக்கு இதயம் முழுதும் சொல்ல முடியாத வலி. தொண்டையில் ஏதோ முள் மாட்டிக்கொண்டு அவளைப் பேச விடாமல் தடுத்தது. ஆனாலும், மாறனிடம் கூறிவிட்டால் இத்தனை நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக தன் உயிரை உருக்கியிருந்த சுமை குறையும் என அவனிடம் மனதில் உள்ளவற்றைக் கொட்டிவிட முனைந்தாள்.
“எனக்கும் அவனுக்கும் ஒத்து வராது மாறா...” என்றாள் கசங்கிய முகமும் கலக்கம் சூழ்ந்த விழிகளுமாய். மாறன் தங்கையைக் கேள்வியாய்ப் பார்த்தான்.
“குணத்திலும் சரி, பணத்திலும் சரி, ஜெய் வேற. அவங்க வேற தானே? நம்ம எல்லாரும் பக்கத்து பக்கத்து வீட்ல இருக்கோம், அத்தை, மாமான்னு உறவு சொல்லி கூப்பிட்றோம். அதுக்காக லீலா அத்தையும் ராமு மாமாவும் நம்மளோட சொந்தக்காரங்க ஆக முடியாது இல்ல. அவங்க எப்பவுமே பணக்காரங்கதான். ஏதோ தெரிஞ்சவங்கன்றதுக்காக நம்மகிட்ட நல்லா பழகுறாங்க இல்ல?” என்றாள் தொண்டை அடைக்க. இதைக் கூறும்போதே அழுகைப் பொங்கியது. மாறன் அவளது பேச்சில கொஞ்சமல்ல நிறையவே ஆச்சர்யமானான். இந்த அளவிற்கு இவள் யோசித்து இருக்கிறாளா என!
“பணம் பணத்தோட தானே சேரும் மாறா. ராமு மாமாவுக்கு இருக்க சொத்துக்கு நம்ம எல்லாம் துரும்பு கூட கிடையாது! அவங்க வசதிக்கு ஏத்த மாதிரி பணக்கார பொண்ணா தானே தனாவுக்குப் பார்ப்பாங்க...” என்றவள் பொங்கி வந்த அழுகையை அடக்கினாள். முடியவில்லை அவளால்.
மனதில் நினைத்தவனை தூக்கியெறிவது அத்தனை சுலபமில்லையே என நினைத்ததும், விழிகளில் பொலபொலவென நீர் வழிந்தது. மனதின் பாரமெல்லாம் கரைந்து விழிநீர் வழியே வெளியேறியது.
இருந்தும் ஒவ்வொரு நொடியும் பாரமேறும் இதயத்தை எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்தாள். நெஞ்சே அடைத்துப் போனது. தன் மீதே கோபம் வந்தது. எந்த நம்பிக்கையில் அவன் மீது எனக்கு காதல் வந்தது. எந்த வகையிலுமே அவர்களது குடும்பத்துடன் ஏணி வைத்தால் கூட தங்களால் எட்ட முடியாதே! அதை நினைத்ததும் குபுகுபுவென மீண்டும் உவர்நீர் வெளியேறியது.