- Messages
- 1,260
- Reaction score
- 3,691
- Points
- 113
எண்ணம் – 12
காலையில் தனஞ்செயன் தான் முதலில் கண்விழித்தான். இடது கையை அசைக்க முடியாது போக, முகத்தைச் சுளித்தவன் குனிந்து பார்க்க, விழிதான் அவனது கரத்தை இறுக அணைத்துத் தலைவைத்துப் படுத்திருந்தாள்.
ஒரு நொடி நெற்றியைச் சுருக்கியவனுக்கு நேற்று நடந்த நிகழ்வு நினைவு வர, இடக்கரத்தை எடுத்து அவளது நெற்றியில் வைத்து உடல் சூட்டை ஆராய்ந்தான். இப்போது ஓரளவிற்கு காய்ச்சல் குறைந்திருந்தது.
கையை அவளிடமிருந்து உருவப் பார்த்தான். அவள் அசைவதாய் தெரியவில்லை. “விழி, கையை விடு. நான் எழணும்...” என்று அவள் செவியருகே உரைக்க, “ஹம்ம்...” என முனங்கலுடன் கரத்தைவிட்டவள், அவனை இறுக அணைத்து மார்பில் முகத்தைப் புதைத்தாள்.
‘இந்தப் பெண் பாடாய்ப் படுத்துகிறாள்!’ என நினைத்தவன், “விழி...” என அவளது கன்னத்தில் லேசாய் தட்டினான். காய்ச்சல் கண்ட உடம்பு, லேசாய் தொட்டாலும் வலித்தது. மெதுவாய் இமைகளைப் பிரித்தவளின் விழிகள் முழுவதும் தனஞ்செயன்தான். ஒரு நொடி கனவென நினைத்து இளம் புன்னகையொன்றை உதிர்த்தாள்.
“விழி, என்னைவிட்டாதான் நான் எழுந்துக்க முடியும்...” என தனஞ்செயன் அழுத்தமாய் உரைத்ததும் அவனை அணைத்திருந்தக் கைகளை பட்டென அவனிடமிருந்து எடுத்துவிட்டாள். இரவு நடந்ததையெல்லாம் மெல்ல மூளை நினைவு கூர்ந்தது.
தனஞ்செயன் எழுந்து முகம் கழுவிவிட்டு, சமையலறை நோக்கிச் சென்றான். தனக்குத் தெரிந்த அளவிற்குத் தேநீரை தயாரித்து இரண்டு குவளைகளில் ஊற்றியவன், தான் ஒன்றைப் பருகியபடி அறைக்குள் நுழைந்து,
“விழி, எழுந்து சூடா டீ குடி...” என்றவன் அவளது முகத்தைப் பார்க்காது குனிந்து மேஜையின் மீது வைத்துவிட்டு அகன்றான். அவனைத்தான் விழியகலாது பார்த்தாள் மலர்விழி. என்னதான் அவளுக்கு உடல்நிலை சரியில்லை என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்தாலும், அவனது முகம் மட்டும் இறுகியிருந்தது. பாவனைகளிலும் ஒரு அந்நியத் தன்மை. இவளுக்கு விழிகள் லேசாய் பனித்தாலும், முனுக்கென கோபம் வந்தது. அந்தத் தேநீரைத் தொடவே இல்லை.
தனஞ்செயன் மலர்விழியின் பெற்றோருக்கும் தனது பெற்றோருக்கும் அழைத்து மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை தெரியப்படுத்தினான். இரவு நேரத்தில் கூறி அவர்களைப் பதட்டபடுத்த விரும்பவில்லை. அதனாலே காலையில் அழைத்துக் கூறினான்.
அலுவலகம் செல்லலாமா? வேண்டாமா? என அவன் யோசித்துக் கொண்டிருக்க, தனம் வந்துவிட்டார்.
“மார்னிங் இட்லி மட்டும் சுட்டு, சாம்பார் வச்சிடுங்க கா.
மதியத்துக்கு ரசம் வச்சு, சாதம் வைங்க...” என அவரிடம் மலர்விழியின் உடல்நிலைக்கு ஏற்ப எளிய உணவுகளை சமைக்கச் சொன்னான்.
அவள் என்ன செய்கிறாள் என அறைக்குச் சென்று பார்த்தான். அப்படியேதான் படுத்திருந்தாள். முகம் மட்டும் ஏதோ வலிப்பதை போல சுருங்கி சுருங்கி விரிந்தது. தான் கொடுத்த தேநீர் தொடப்படாமல் இருப்பதை கவனித்த தனா, அவளை அழுத்தமாய்ப் பார்த்து வைத்தான்.
தனாவின் தொடர் பார்வை கொடுத்த குறுகுறுப்பில் விழிகளைத் திறந்த மலர், அவனை கேள்வியாய் நோக்கினாள். முகத்தில் எந்தப் பாவனையும் இல்லை.
“என்ன பண்ணுது விழி?” எனக் கேட்டவனின் குரலில் இப்போது கரிசனையும் அக்கறையும் தொலைந்திருந்தது. இயந்திரத்தனமாய் அவன் கேட்க, இவளுக்குத் தொண்டையில் ஏதோ அடைத்தது.
“ஒன்னும் இல்லை, என் அம்மாவை வரச் சொல்லுங்க...” என்றவள் மீண்டும் விழிகளை மூடிப் படுத்துவிட்டாள். பதில் உரைக்காதவன் வெளியே செல்ல, சிறிது நேரத்தில் மாறனும் லோகநாயகியும் வந்துவிட்டனர். சாரதி உடன் வருவதாய்க் கூற, மனைவி தடுத்துவிட்டார்.
“காய்ச்சல் தான்ங்க. நீங்க ஏன் அலையுறீங்க? வேலைக்கு கிளம்புங்க...” என கணவரை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு தாய், மகன் இருவரும் மலரைக் காண வந்திருந்தனர்.
அவர்கள் உள்ளே நுழைய, “வாங்க அத்தை, வா மாறா...” தனா தலையை அசைத்தான்.
“என்னாச்சு தனா அவளுக்கு? திடீர்னு எப்படி காய்ச்சல் வந்துச்சு?” லோகநாயகியின் குரலில் கவலை தென்பட்டது.
“மழைல நனைஞ்சுட்டா அத்தை. அதான் ஃபீவர், இப்போ பரவாயில்லை. ரூம்ல படுத்திருக்கா, நீங்கப் போய் பாருங்க...” பதிலளித்தான் தனஞ்செயன்.
இருவரும் அறைக்குள் நுழைய, அந்த அரவத்தில் விழிகளைத் திறந்தாள் மலர். “அம்மா...” என அவரைப் பார்த்துப் புன்னகைத்தவளுக்கு கண் கலங்கிப் போனது.
“மலர், மழை வருதுன்னா, எங்கேயாவது நின்னு மழை நின்னதும் வீட்டுக்கு வந்து இருக்கலாம் இல்ல. ஏன் இப்படி பரிட்சை நேரத்துல உடம்பை கெடுத்துக்குற?” என அக்கறையாய் கடிந்தவாறே அவளுக்கு அருகில் அமர்ந்தார். எதுவும் கூறாதவள், தாயின் கரத்தை எடுத்து கன்னத்தில் அழுத்தினாள்.
மகளின் வாடிய முகம் கண்டு வருந்திய லோகநாயகி, “என்ன பண்ணுது டி, எங்கேயும் வலிக்குதா?” என ஆதுரமாய் வினவ, இவளுக்கு பொலபொலவென கண்ணீர் வழிந்தது.
“ஏய்... என்னடி பண்ணுது?” லோகநாயகி பதறிப் போனார். மலர்விழி உடல்நிலை சரியில்லை என்றாலும் இது போல படுக்கும் ரகமில்லை. எப்படியாவது தன்னைத் தானே தேற்றிக் கொள்வாள். பெரிதாய் அவள் அழுததும் இல்லை. எனவே தாயாய் லோகநாயகிக்கு என்னவோ, ஏதோ என்ற பயம் நெஞ்சைக் கவ்வியது.
அவளின் வலதுபுறமாய் வந்த மாறன், தங்கையின் கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
“ம்மா, ஒன்னும் இல்லை. காய்ச்சல்னால உடம்புல சூடு. அதான் கண்ல தண்ணி வருது. நீ போய் அவளுக்கு கசாயம் வச்சு எடுத்துட்டு வா மா. குடிச்சா ஈவ்னிங்கே எழுந்து நடக்க ஆரம்பிச்சுடுவா!” என்றான்.
“மாறா, இவ அழறதைப் பார்த்தா, பயமா இருக்கு டா. மறுபடியும் ஹாஸ்பிடல் கூட்டீட்டுப் போகலாமா?”
“அதெல்லாம் ஒன்னும் அவசியம் இல்லை. நீ போய் கசாயம் வச்சு எடுத்துட்டு வா...” என அவரை வெளியே அனுப்பியவன், மலர்விழி அருகில் வந்து அமர்ந்தான்.
“மலர், அவனுக்கும் உனக்கும் சண்டையா?” என மாறன் வினவ, பதில் கூறாதவள் அவனின் தோளில் சாய்ந்தாள். மீண்டும் கண்ணீர உடைப்பெடுக்க, தேம்பினாள். அவளது அழுகையைக் கண்டு மாறனுக்கு மனம் வலித்தது.
முதன்முதலில் தனஞ்செயனைக் காதலிக்கிறேன் என்று கூறிய போதும் இப்படித்தானே அழுதாள். பின்னர் அவனுக்குத் திருமணம் என பத்திரிக்கையைக் கண்டு உறங்காது நாள் முழுவதும் அழுது கரைந்தாள். எத்தனை தைரியமான பெண் மலர்விழி. ஆனால், இந்தத் தனஞ்செயன் விடயத்தில் மட்டும் மொத்தமாய் உடைந்து போய்விடுகிறாள். அளவிட முடியாத நேசமும் காதலும் அவளை அத்தனை தூரம் பலவீனப்படுத்தி உறுதியை உருக்குலைத்து விடுகிறதே!
அவளது அழுகைப் பொறுக்காதவன், “மலர், தனா உனக்கு வேணாம்...” அழுத்தமாய் உரைத்தான். தங்கையின் மனதிலிருப்பதை அறிய அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.
மாறன் அப்படிக் கூறியதும் மலரின் அழுகை நொடியில் நின்றுவிட, சிவந்த முகத்துடன் அவனை முறைத்தாள். தேங்கி நிற்கும் நீர் மட்டும் இமைகளில் பட்டு கன்னத்தில் தெறித்தது .
“அவன் வேணம்னா, எனக்கு யாருமே வேணாம் மாறா. அவனைத் தவிர வேற யாருக்கும் என் வாழ்க்கையில இடமில்லை!” என்றாள் உறுதியாய்.
“அப்புறம் ஏன் டி நீயும் கஷ்டப்பட்டு அவனையும் சாகடிக்குற. நீ சொன்னது சரிதான். அவன் உனக்கு செட்டாக மாட்டான். பேசாம, அவனையாவது வாழ விடு!” என்ற மாறனை இயலாமையுடன் பார்த்தவளுக்கு மீண்டும் விழிகள் உடைப்பெடுத்தன.
“முடியாது மாறா...” என்றாள் உதட்டைக் கடித்து. அழுகையை அடக்க முயன்று முகம் சிவந்தது மலர்விழிக்கு. தொண்டை வரை பெயரிடப்படாத உணர்வொன்று மேலெழ, அவளால் பேச முடியவில்லை. நெஞ்சு முழுவதும் வலித்தது.
“மலர், இதுதான் நீ அவனோட போடுற கடைசி சண்டையா இருக்கணும். இதுக்கு மேல உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் வர மாட்டேன்!” என்று கோபமாய் உரைத்த மாறன் முகம் மலர்விழியின் சோர்ந்த முகத்தைப் பார்த்துக் கனிந்து போனது.
“ஏன் மலர் இப்படி பண்ற?” என ஆற்றாமையாய்க் கேட்டு தங்கையைத் தோளோடு அணைத்தவன் விழிகளும் லேசாய்க் கலங்கின.
“போ...” என அவன் மீதான கோபத்தில் மாறனைத் தள்ளிவிட்டாள் மலர்.
அந்தக் கையைத் தடுத்துப் பிடித்தவன், “சாரி மலர், என்னை என்ன பண்ண சொல்ற. இப்படி ஒவ்வொரு தடவையும் நீ அழும்போது எனக்கு கோபமா வருது டி. உன் மேல இல்லை. உன்னோட இந்தப் பைத்தியக்காரத்தனமான காதல் மேல. ஏன் உனக்கு தனாவை இவ்வளோ பிடிக்குது?” எனக் கேட்டான் ஆதங்கமாய். எதுவும் கூறாத மலர், தலையை மாறன் தோளில் சாய்த்தாள். அவன் கேட்ட கேள்விக்கு மலரிடம் சுத்தமாய் பதிலில்லை.
என்ன கூறுவாள்? காதலிக்க காரணம் என்று இதுவரை அவளது கூட்டில் சிறு துரும்பு கூட கிடைக்கவில்லை என்றா? அத்தை பெண் என்றாலும் கூட, தனாவுக்கு மலர்விழி சொந்தம் இல்லை. அக்கம் பக்கத்தில் இருந்ததால், அத்தை, மாமா என அழைத்து வந்தனர். எத்தனை முறை வீட்டிற்கு வந்தும் தன்னிடம் ஒரு தவறானப் பார்வை வீசியிராத இந்த கண்ணியமான தனஞ்செயனை எப்போது அவளுக்குப் பிடித்தது என அவளே அறியாள்.
இவளைப் பார்த்ததும் மெல்லிய சிரிப்பும், அவ்வப்போது இரண்டு வார்த்தைகள் என கடந்து விடுவான். மாறனிடம் எதையாவது இவள் கேட்டு அடம்பிடித்தால், சில சமயம் அண்ணன் மறுத்துவிடுவான். ஆனால், தனா அவளுக்காக வாங்கித் தருவான். சிறுவயதிலிருந்தே அப்படித்தான். ஒற்றைப் பிள்ளையாய் வளர்ந்த தனாவுக்கு மாறனும் விழியும்தான் துணை. அப்படித்தானே அவர்களது வாழ்க்கையில் நுழைந்தான் தனஞ்செயன். அதெல்லாம் அவளைப் பொறுத்தவரை பொக்கிஷமானத் தருணங்கள்.
சிறுவயதிலிருந்தே தனஞ்செயனைத் தெரியும் என்றாலும் எப்போது அவன் தன்னுள் நுழைந்தான் என மலர்வழி அறியவில்லை. ஆனால், நிறையப் பிடிக்கும் இந்த தனஞ்செயனை. மாறனிடம் தான் காதலிக்கும் விடயத்தைக் கூறும்போது கூட, அப்படியொரு அழுகை அழுதாள்.
மலர்விழி எதுவும் பேசாது இருக்க, மாறன் அவளது தலையைத் தடவிக் கொடுத்தான். லோகநாயகி கசாயத்துடன் அறைக்குள் நுழைந்தார்.
“இந்தா டி, இதை குடி. உடம்பு வலிக்கும் கேட்கும்!” என்று அவர் கசாயத்தைக் கொடுக்க, மாறன் எழுந்து வெளியேறினான்.
எதுவும் பேசாது மலர் அதை பருக, லோகநாயகி அவளருகில் அமர்ந்தார். மகள் கசாயத்தைக் குடிக்கும் வரை காத்திருந்தவர், “மலர், அம்மா ஒன்னு கேட்டா உண்மையை சொல்லணும் டி...” என்றார் அவளின் முகத்தைக் கவலையாய்ப் பார்த்து. அவரைக் கேள்வியாய் நோக்கினாள் விழி.
“உனக்கும் தனாவுக்கும் எதுவும் பிரச்சனையா டி, ஏன் அழுத? கண்டிப்பா காய்ச்சல்னால அழுதேன்னு பொய் சொல்லாத. என் புள்ளையைப் பத்தி எனக்குத் தெரியும். டைபாய்டு காய்ச்சல் வந்தப்போ கூட ஒரு வாரம் வீட்ல இருக்க முடியாம ஸ்கூலுக்கு ஓடுனவ டி நீ. இந்த சாதரணக் காய்ச்சல் உன்னை ஒன்னும் பண்ணி இருக்காது. உன் மனசுல என்ன இருக்கோ, அதை அம்மாகிட்ட சொல்லு மலர்...” என்றவரைப் பார்த்து மலர்விழிக்கு லேசாய்க் கண்கள் பனித்தன. உதடுகளில் மென்னகை ஜனித்தது.
“ஒன்னும் இல்லை மா. பீவர்னால தலை வலி, கைகால் வலி. அதான் அழுதேன்!” என்றாள் முயன்று வரவழைக்கப்பட்ட குரலில்.
“ப்ம்ச்... பொய் சொல்லாத டி. தனா உன்கிட்ட எதுவும் கோபமா நடந்துக்கிறானா? வேற எதுவும்...” என இழுத்தவர் மகளை சங்கடமாய்ப் பார்த்தார். எதையும் அவரால் வெளிப்படையாகக் கேட்க முடியவில்லை.
“ம்மா... உன் கற்பனை குதிரையை கொஞ்சம் நிறுத்து!” மலர் குரலில் அதட்டல் தொனி.
லோகநாயகியை இறுக அணைத்தவள், “ம்மா, நான் சந்தோஷமாதான் இருக்கேன். அவர் என்னை நல்லா பார்த்துக்குறாரு. எங்களுக்குள்ள அப்போ அப்போ சின்ன சின்ன சண்டை வரத்தான் செய்யும். ஏன், அப்பாவுக்கும் உனக்கும் சண்டை எதுவும் வரது இல்லையா என்ன? நீயா எதாவது கற்பனைப் பண்ணிக்காத!” என்று அவரது மடியில் தலையை சாய்த்தாள்.
லோகநாயகிக்கு வேறு எப்படி அவளிடம் கேட்பது எனத் தெரியவில்லை. அதனால் விட்டுவிட்டார். ஆனால், மகளின் மீது நம்பிக்கை இருந்தது, கண்டிப்பாக எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அவளால் சமாளிக்க முடியும் என்று. சிறு வயதிலிருந்தே மலருக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம்தான். எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைதான் அவளுடைய பலமும், பலவீனமும்.
மாறன் தனஞ்செயன் அருகில் அமரவும், அவனைப் பார்த்து தனா புன்னகைத்தான். ஆனால், அதில் ஏதோ குறைந்தது. மாறனால், தனாவைப் புரிந்து கொள்ள முடிந்தது.
“தனா, ஒரு நிமிஷம் உள்ள வரீயா? உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...” என்ற மாறனைக் கேள்வியாக நோக்கினான் தனா.
“வா டா...” என்ற மாறன் மலர்விழி அறைக்குள் நுழைந்து எதையோ தேடினான். தனஞ்செயன் அவனது செயல்களைப் புருவ முடிஞ்சுடன் ஏறிட்டான்.
பத்து நிமிடங்கள் கழித்து மாறன் தேடலின் பலனாய், அந்தப்பை கிடைத்தது. மலர்விழி அதை அத்தனை பத்திரமாய் ஒளித்து வைத்திருந்தாள்.
“தனா, நீ ஃப்ரியா இருக்கும் போது இந்தப் பேக்கை திறந்து பாரு டா!” எனக் கூற, அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்தன.
“தனா, உன்னோட குழப்பம் மொத்தத்துக்கும் இதுல பதில் இருக்கு. மறக்காம திறந்து பாரு டா...” என மாறன் நண்பன் கையில் அந்தப் பையைத் திணித்தான். மாறனின் பேச்சு ஏதோ புதிர் போடுவதைப் போல இருந்தது. தலையை அசைத்தான் மற்றவன்.
சிறிது நேரத்தில் லீலாவும் வந்துவிட்டார். ராமலிங்கம் அலுவலகத்திற்கு கிளம்பி விட, இவர் மட்டும் வந்து மருமகளைப் பார்த்தார்.
“மலர், உடம்பை பத்திரமா பார்த்துக்கோன்னு ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன் இல்ல? ஏன் இப்படி?” லீலா மருமகளை உரிமையாய் அதட்டினார்.
“அத்தை, நான் நல்லா இருக்கேன். பீவர் சரியாகிடுச்சு...” என அவரிடம் புன்னகைத்தாள். மதியம் வரை இருந்து இரண்டு தாய்மார்களும் மருமகளுக்கு உணவை ஊட்டிவிட்டு மாலைதான் விடை பெற்றனர்.
“தனா, நைட்டுக்கு நான் கஞ்சி வச்சிட்டேன். அதையே அவளுக்கு சாப்பிட கொடு. அவளைப் பார்த்துக்கோபா...” என லோகநாயகி கூறி விடை பெற, இவன் தலையை அசைத்தான். மூவரும் வீட்டிற்குக் கிளம்பினர்.
சமையல் செய்யும் பெண்மணி இரவு தனாவிற்கு மட்டும் உணவை சமைத்துவிட்டு, மலர்விழியிடம் உடல்நிலைப் பற்றி இரண்டு வார்த்தைகள் கேட்டுவிட்டு விடை பெற்றார்.
மலருக்கு இப்போது உடலில் தெம்பு வந்திருந்தது . மெதுவாக எழுந்து கழிவறைக்குச் சென்று வந்தாள். வயிற்றில் அமிலம் சுரப்பதை உணர்ந்தவள், சமையலறைக்குள் நுழைந்தாள்.
அவளைக் கண்ட தனா, எழுந்து வந்தான். “கூப்பிட்டா நான் வந்து இருப்பேன் இல்ல விழி...” என்றவன் அவளது தோளைத் தொட வந்தான். ஆனால், மனம் முரண்டியது. இப்போது அவளது உடல்நிலை நன்றாக இருப்பதை சிந்தை உணர்த்த, கைகளை கீழே இறக்கிவிட்டான். மலரும் அவனது செய்கைகளை விழியகலாது பார்த்தாள்.
“நீ சேர்ல உட்காரு விழி. நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன்!” என்றவனைப் பார்த்து தலையை இடம் வலமாக அசைத்தாள்.
“நான் நல்லா இருக்கேன். எனக்கு என்னைப் பார்த்துக்க தெரியும்...” வீம்பாய்க் கூறியவள் இரண்டு அடி எடுத்து வைக்க, கால்கள் தள்ளாடியது. ஒரு நொடி தலை சுற்ற, கீழே விழச் சென்றவளை ஓடி வந்து பிடித்திருந்தான் தனா.
“வீம்பு பிடிக்காத விழி...” கொஞ்சம் கோபமாய்க் கூறியவன், அப்படியே அவளது வயிற்றில் கையைவைத்து தூக்கி இருக்கையில் அமர வைத்தான். பின்னர் லோகநாயகி செய்து வைத்திருந்த கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அவள் முன்னே வைக்க, அமைதியாய் உண்டாள்.
“தரையில படுக்க வேணாம். இன்னைக்கு ஒருநாள் ரூம்ல கட்டில்லயே படு விழி. அடம் பிடிக்காம சொல்றதை கேளு. எக்ஸாம் இருக்கு உனக்கு. ஹெல்த் நல்லா இருந்தாதான் படிக்க முடியும்!” என்றவன் அவளைப் பேசவிடாது செய்திருந்தான். எதுவும் கூறாது அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துப் போர்வையைத் தலைவரைப் போர்த்திக்
கொண்டாள்.
தனா தானும் உண்டுவிட்டு அறைக்கு வர, அப்போதுதான் மாறன் கூறியது நினைவு வந்தது. மலர்விழி உறங்கிவிட்டாளா எனப் பார்த்துவிட்டு, விளக்கை அணைத்துவிட்டு பக்கத்து அறைக்குள் நுழைந்தான்.
அந்தப் பை அவன் வைத்துச் சென்ற இடத்தில் அப்படியே இருக்க, அதை எடுத்து திறந்து பார்த்தான். உள்ளே ஏதேதோ பொருட்கள் கிடந்தன. கையை வைத்ததும் அயிரை நிறத்தில் சட்டை ஒன்றிருந்தது.
அதை எடுத்துப் பார்த்தவனுக்கு இந்தச் சட்டையை எங்கோ பார்த்த நினைவு இருந்தாலும், சட்டென மூளையால் இனம் கண்டறிய முடியவில்லை. அதை கீழே வைத்துவிட்டு மீண்டும் பைக்குள்ளே கையை விட, நாட்குறிப்பேடு ஒன்று கையில் சிக்கியது. எடுத்துப் பார்த்தவன், பையைக் கீழே வைத்துவிட்டு அதை திறந்தான்.
மலர்விழி என முதல் பக்கத்தில் எழுதியிருந்தது. இது அவளுடைய நாட்குறிப்பேடு என தெளிவாய் புரிய, அடுத்தப் பக்கத்தைத் திறந்தான்.
ஒரு ஜோடி கண்கள் படம் வரையப்பட்டிருக்க, அதற்குள்ளே ஏதோ எழுதி இருந்தாள் விழி. உற்றுப் பார்த்தான் தனஞ்செயன்.
“ஜெய்” என எழுதி இருக்க, அவனுக்குப் புரியவில்லை. அந்தக் கண்களை மீண்டும் ஆழ்ந்து பார்க்கும்போது தான் அது மலர்விழியினுடையது எனப் புரிந்தது.
‘ஜெய்?’ யாரது மனம் லேசாய் பதட்டப்பட, ‘தனஞ்செயன்...’ என தனது பெயரைத்தான் சுருக்கி எழுதியிருக்கிறாள் என மூளை நொடியில் அடையாளம் காண, மனம் படபடத்துப் போனது.
விழிக்குள் ஜெய் என்று அவளுள் தனஞ்செயன் இருக்கிறான் என்பதைப் போலத்தான் வரைந்து வைத்திருந்தாள்.
‘விழி என்னை விரும்பி இருக்கிறாளா?’ என ஆயிரம் ஆச்சர்யம் அவனுள் பூத்தது.
கைகள் நடுங்க இதயம் தடதடக்க அடுத்தப் பக்கத்தைத் திருப்பினான். உள்ளே ஏதோ ஆர்வக் குறுகுறுப்பு தன்ஞசெயனைத் தொற்றிக்
கொண்டது.
அவன் சிரிப்பது போல அழகாய் ஓவியத்தை வரைந்து வைத்திருந்தாள். அதைக் கண்டவன் முகம் முழுவதும் ஆச்சர்யம்தான்.
“டேய் தனா, இவ எல்லாம் எப்படி பாஸாகப் போறான்னு தெரியலை. ரெக்கார்ட் நோட்ல படத்தைக் கொலை பண்ணி வச்சிருக்கா டா. ஒரு படமாவது ஒழுங்கா வரைஞ்சு இருக்காளா?” என மாறன் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும் விழியைத் திட்டியது இப்போது நினைவில் வந்தது.
அவள் தமையனை முறைத்துக்கொண்டு நின்றதும்,
“ப்ம்ச்... பாவம் டா. அவளுக்குத் தெரிஞ்சதை வரைஞ்சு இருக்கா!” என்ற தனா அவளது நோட்டை வாங்கி தானே வரைந்து கொடுத்தது நினைவு வந்தது.
‘ஏன் பொய் சொல்லி இருக்கிறாள் இவள்?’ கேள்வி மனதில் எழுந்தது. என்ன முயன்றும் ஏதோ தோன்ற, எதிர்பார்ப்புடன் அடுத்தப் பக்கத்தைத் திருப்பினான். அவன் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை பெண்.
“எவ்வித அழகியலின்
ஒப்புமைக்குள்ளும்
அடங்குவதில்லை
அவனது புன்னகைத்
ததும்பும் பிரதிபிம்பம்!”
என்ற கவிதையோடு தொடங்கி இருந்தாள் ஜெய்யின் விழி. ஆச்சர்யமும் அதிசயமுமாய் விழியின் நாட்குறிப்பேட்டில் மூழ்க ஆரம்பித்தான் தனஞ்செயன்.