- Messages
- 1,049
- Reaction score
- 3,001
- Points
- 113
இஷ்டம் – 5 
மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுர வாயிலில் ரகுராமும் காயத்ரியும் நின்றிருந்தனர். காலையிலிருந்த உற்சாகம் சற்றே வடிந்து காணப்பட்டான் ஆடவன். நேற்று வரை தொற்றியிருந்த ஆர்வ குறுகுறுப்பு எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது. மனம் காயத்ரியின் பேச்சிலே அதிர்ந்து சமைந்திருந்தது.
அப்படியொன்றும் எளிதில் கண்ணீர் சிந்தும் ரகமில்லை அவள் என ரகுராம் அறிந்ததே. தாய் இறந்தப் பின்னே சோகமே உருவாய் இருந்தவளை இவன்தான் தேற்றியிருந்தான். அதற்குப் பின்னர் பூப்படைந்த நாளில் அழுதது. நீண்ட நாட்கள் கழித்து இன்றைக்கு அவளுடைய கண்ணீரைக் கண்டதும் ரகுவிற்கு நெஞ்சு முழுவதும் சொல்ல முடியாத பாரம் அழுத்தியது. இந்தப் பெண் இத்தனையாய் தன்னைத் தேடியிருக்கிறாள், தேவையில்லாத கற்பனைகளை மனதில் போட்டு உழன்று வேதனையை சுமக்கிறாளே, என்றெண்ணி இவனுக்கு வருத்தமாகிற்று.
பூஜை கூடையை வாங்கி வந்த காயூ, முகம் முழுவதும் சிந்தனை படர்ந்திருந்த ரகுவைத்தான் பார்த்தாள். கடைசியாய் தன்னுடைய தோழனாய் ராமைக் கண்களில் நிரப்பிக் கொண்டவள், “டேய்... என்ன இப்படி சயின்டிஸ்ட் மாதிரி யோசனை? நான் பேசுனதை காரோட விட்டுட்டு வான்னு சொன்னேன் ராம். முகத்தை ஏன் இப்படி வச்சிருக்க? இன்னும் கொஞ்ச நேரத்துல உன் ஆளு வந்துடுவாங்க. முகத்தை சோகமா வச்சுக்காத. நான் நல்லா இருக்கேன், இனிமேலும் நல்லாதான் இருப்பேன். சரியா?” என அவன் தோள்தட்டி தன்னை இயல்பாகக் காட்டிக் கொள்பவளை இவன் சலனமற்றுப் பார்த்தான். காயத்ரிக்கு அவன் பார்வையை சந்திக்க முடியவில்லை. சட்டென விழிகளை சுழற்றியவள், “ப்ம்ச்... போய் நம்ப சாமி கும்பிடலாமா ராம்? அவங்க வந்ததும் அப்படியே உள்ளேயே உட்கார்ந்து பேசலாம்!” என்றாள் முன்னிருந்த கோபுரத்தில் பார்வையை பதித்து.
ஆங்காங்கே கடைகள், தேநீர் விடுதிகள் சுறுசுறுப்பாக இயங்க, முன்பக்கம் காவல்துறையினர் நின்று கொண்டிருந்தனர். வெளியே காலணியை விட்டுவிட்டு இருவரும் உள்ளே நுழைந்தனர். அன்றைக்கு எந்த வித சிறப்பான நாளும் இல்லாததால் கூட்டம் வெகுவாய் குறைந்தே காணப்பட்டது. இருந்தும் இவர்கள் மெதுவாய் ஊர்ந்து உள்ளே சென்று சாமியைத் தரிசித்து முடிக்கவும், ஷிவதுளசி ரகுராமிற்கு அழைத்துவிட்டாள். இவன் உள்ளே இருப்பதாய்க் கூற, அவர்களும் சில பல நிமிடங்களில் உள் நுழைந்தனர்.
தங்கநிற ஜரிகையில் அடர் பச்சை பட்டுடுத்தி அழகாய் வந்தாள் சைந்தவி. குறும்புதனம் அற்று வயதிற்குரிய பக்குவமும் முதிர்ச்சியும் வந்திருக்க, பேச்சுகள் அருகியிருந்தன. அவளுடன் ஷிவதுளசியும் அவளது மகன் ரித்விக்கும் வர அவர்கள் பின்னோடு இரண்டு தனிப்பட்ட காவலாளிகளும் வந்திருந்தனர்.
“ஹாய் ரகுராம்!” துளசி அவனைப் பார்த்ததும் புன்னகைக்க, “ஹாய்ங்க!” என்றான் இவனும். பின்னர் பார்வை மெதுவாய் சைந்தவியிடம் செல்ல, அவள் இவனைப் பார்த்து புன்னகைக்க, இவனும் முறுவலித்தான்.
“ஹம்ம்... ஃபோட்டோல பார்த்து இருப்பீங்களே, இவதான் என் நாத்தனார் சைந்தவி அண்ட் இது என் பையன் ரித்விக்!” என அவள் புன்னகையுடன் அறிமுகம் செய்தாள்.
“ஓ... நான் ரகுராம். ஆல்ரெடி என்னைப் பத்தின டீடெயில்ஸ் அம்மா சொல்லி இருப்பாங்க. இது என் ஃப்ரெண்ட் காயூ!” என அருகில் இருப்பவளையும் அறிமுகம் செய்தான்.
“ஹாய் காயத்ரி...நைஸ் டூ மீட் யூ!” என ஷிவதுளசி கூற, அவளும் புன்னகைத்தாள்.
“ஓகே ரகுராம்... நாங்க இங்க அப்படியே கோவிலை சுத்திப் பார்க்குறோம். நீங்க சைந்தவியோட பேசிட்டு வாங்க!” என துளசி கூற, அவன் தலையை அசைத்துவிட்டு முன்னே நடக்க சைந்தவியும் அவனுடன் நடந்தாள். அவர்கள் இருவரையும் சில நொடிகள் பார்த்தப் பின்னர் காயத்ரியின் விழிகள் இவளிடம் வந்தன. அவளருகே ஐந்து வயது ரித்விக் நின்றிருந்தான்.
அவனைப் பார்த்து புன்னகைத்தவள், “நான் குழந்தையைத் தூக்கலாமா?” என பெரியவளிடம் இவள் அனுமதி கேட்க, “ஷ்யூர் காயத்ரி...” என அவள் கூறவும், சிரிப்புடன் சின்னவனைக் கைகளில் அள்ளினாள்.
ரித்விக் புதியவளைக் கண்டுவிட்டு சற்றே பயபார்வையுடன் தாயை நோக்க, “ரித்விக், இது நியூ ஆன்ட்டி... ஒன்னும் பண்ண மாட்டாங்க!” என அவள் கூறவும், அவன் காய்தரியை அளந்தான்.
“உங்கப் பேர் என்ன தங்கம்?” என அவன் கன்னம் கிள்ளி இவள் முத்தமிட்டாள். வெட்கப்பட்டுக் கொண்டே அவன் பெயரைக் கூற, இவளது முகம் கனிந்தது. சிறியவனுடன் பேசிக் கொண்டே இருவரும் நடந்து மீண்டும் ஒருமுறை மீனாட்சியை தரிசித்துவிட்டு
கோவிலைச் சுற்றினர். சின்னவன் ஆசையாய் அனைத்தையும் பார்க்க, அவனுக்கு எல்லாவற்றையும் காயத்ரி விளக்கி கூறினாள்.
பின்னர் கால் வலிப்பது போல தோன்றவும், “கொஞ்ச நேரம் இங்க உக்காரலாமா? உங்களுக்கு பிராப்ளம் எதுவும் இல்லையே!” எனத் தயங்கினாள் காயத்ரி.
“யெஸ்... எனக்கும் கால் வலிக்குது காயூ. உட்காரலாம் அண்ட் என்னை அக்கான்னு கூப்ட்டுக்கலாம், தப்பில்லை!” என்றாள் நட்பாய் புன்னகைத்து.
“ஓகே கா, வாங்க உக்காரலாம்!” என மூவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர்.
“அப்புறம் ரகுராம் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டா உனக்கு? பையன் எப்படி? விசாரிச்ச வரைக்கும் நல்லபடியாதான் சொன்னாங்க?” என துளசி கேட்க, காயூவின் முகத்தில் முறுவல் தோன்றிற்று.
“அக்மார்க் நல்லவன்... என் ஃப்ரெண்ட்னு நான் சொல்லலை. கண்டிப்பா ராம் உங்க வீட்டுப் பொண்ணை நல்லா பார்த்துப்பான். ராம் அம்மா, அப்பாவும் ரொம்ப நல்ல மாதிரி. சைந்தவிக்கு ப்யூச்சர்ல மாமியார் கொடுமை எதுவும் வர சான்சே இல்லை. கௌதமிமா ரொம்ப சாஃப்ட் நேச்சர். ராம் அப்பா மட்டும் கொஞ்சம் ஸ்க்ரிக்ட். பட், நேர்மையானவரு. உங்க அளவுக்கு வசதியான்னு தெரியலை. பட், சைந்தவி நிம்மதியா வாழலாம். நான் அஷ்ஷூரன்ஸ் தரேன் ராம்க்கு!” என்ற காயத்ரி தூரத்தில் வரும் ரகுவையும் சைந்தவியையும் பார்த்தாள். போகும்போதிருந்த சங்கோஜம், புது மனிதர்கள் என்ற முதல் கட்ட சங்கடம் அகன்று இருவரும் ஒரு புரிதலுக்கு வந்திருக்க வேண்டும். அவன் சிரிப்புடன் ஏதோ பேசிக் கொண்டே வர, சைந்தவியும் அவனுக்கு ஈடு கொடுத்து பேசினாள். இருவர் முகத்திலிருக்கும் புன்னகையே அவர்களது அகத்தைக் காண்பித்துக் கொடுத்தன.
“ஹம்ம்... பரவாயில்லையே. குட் சர்டிபிகேட்தானா?” துளசி இவளைக் கேலி செய்ய, காயூவும் புன்னகைத்தாள். இருவரும் இவர்கள் அருகே வர, “அத்தை!” என ரித்விக் சைந்தவியிடம் தாவிவிட்டு ரகுவையே பார்த்தான்.
“ஹாய் க்யூட் பாய்!” என அவன் சிறியவன் கன்னத்தை மெதுவாய் நிமிண்டினான். அத்தையை அவன் பார்க்க, “ரித்விக், இவர்தான் சைந்தவி அத்தையைக் கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளை. இனிமேல் இவர் உனக்கு மாமா!” என துளசி சைந்துவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே கூற, அவள் மெதுவாய் தலையை அசைத்தாள்.
“மாமா...” என அவன் தயங்கி அழைக்க, “மாமாதான் டா... வா மாமாகிட்டே. என்ன பொம்மை வேணும் உனக்கு? கடைக்குப் போய் வாங்கிட்டு வரலாம்!” என அவன் ரித்விக்கைத் தூக்கிக்கொண்டு நடக்க, மூவரும் அவன் பின்னே சென்றனர்.
“சைந்தவி... என் ஃப்ரெண்ட் எதுவும் மொக்கைப் போட்டு அறுத்திருந்தா, அதெல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க. ஹீ இஸ் வெரி குட் பாய். எந்த டவுட்டும் இல்லாம நீங்க உங்களுக்குப் புடிச்சிருந்தா அவனை ஓகே பண்ணுங்க. அவன் அக்மார்க் நல்லவன்னு நான் சர்டிபிகேட் தரேன். கொஞ்சம் ஐயா ஜோவியல், சோ கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஃப்ரெண்ட்ஷிப்னு எல்லாமே அதிகம். எக்ஸாம்பிள் என்னை மாதிரி அவனுக்கு நிறைய கேர்ள்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் உண்டு. சோ, அதை மட்டும் தப்பா எடுத்துக்காதீங்க!” என காயத்ரி இயல்பாய் சைந்துவைப் பேச்சில் இணைத்தாள்.
“அவர்கிட்டே பேசும்போதே கண்டு பிடிச்சிட்டேன். உங்களைப் பத்தியும் சொன்னாரு. மேரேஜ் ஆனாலும் ஃப்ரெண்ட்ஷிப் கன்டினியூவாகும்னு சொன்னாரு. எனக்கும் நிறைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் உண்டு. சோ டோன்ட் வொர்ரீ, உங்க ஃப்ரெண்ட் எப்பவுமே உங்களுக்கு ஃப்ரெண்ட்தான். நான் வந்து பிரிச்சு வில்லி வேலை எல்லாம் பார்க்க மாட்டேன்!” அவள் குறும்பாய்க் கூற, காயூ சிரித்தாள்.
“சரி... என் ஃப்ரெண்ட்க்கு எவ்வளோ மார்க் போடுவீங்க. ஹீ லைக்ஸ் யூ ட்ரூலி. உங்களை இம்ப்ரெஸ் பண்ணணும்னு செம்ம நெவர்ஸா இருந்தான். இம்ப்ரெஸ் ஆனீங்களா? இல்ல சொதப்பிட்டானா ராம்?”
“ஹம்ம்... இம்ப்ரெஸ் ஆனேனான்னு கேட்டா, ஐ டோன்ட் க்நோ. பட், ஐ லவ் ஹிஸ் கேரக்டர். ஈஸிலி அப்ரோசபிள், எல்லாத்தையும் ஸ்போட்டீவா எடுத்துக்குறாரு. எனக்கு டென்ஷன் பார்ட்டியா இருந்தா பிடிக்காது. இவரோட என் லைஃப் பெட்டரா இருக்கும்னு பேச ஸ்டார்ட் பண்ண டென் மினிட்ஸ்லயே தெரிஞ்சுக்கிட்டேன். மேரேஜ்க்கு அப்புறம்தான் இன்னும் அண்டர்ஸ்டான்டிங் வரும்!” மனதில் உள்ளதை உள்ளபடியே சைந்தவி பகிர்ந்தாள்.
“ரொம்ப சந்தோஷம் சைந்தவி. கண்டிப்பா உங்க மேரேஜ் லைஃப் நீங்க நினைச்சதை விட நல்லா இருக்கும். ராம் உங்களை நல்லா பார்த்துப்பான். ஃப்ரெண்ட் என்னைவே அவ்வளோ கேர் பண்ணுவான். சோ அவனோட வொய்ப் ரொம்ப கொடுத்து வச்சவங்கன்னு நானே சொல்லி இருக்கேன்!” என்ற காயூவின் பார்வை சாலைக்கு மறுபுறம் பொம்மைக் கடையில் நின்றிருந்த ரகுராமைத் தொட்டு மீண்டது.
“ஹம்ம்... அந்தப் பையனோட அம்மா அப்பா கூட இவ்வளோ நல்லவன் சர்டிபிகேட் கொடுக்க மாட்டாங்க. காயத்ரி கொடுப்பாங்க!” என ஷிவதுளசி கேலியாகக் கூற, “க்கா... என் ஃப்ரெண்ட் அவன். சோ, நான் தானே நாலு நல்ல வார்த்தை சொல்லி அவன் லைஃப்ல விளக்கேத்தி வைக்கணும். அவனும் பாவம் சிங்கிளாவே சுத்துறான்ல?” என இவளும் இலகுவாகப் பதிலளித்தாள். ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்துவிட்டு கிளம்பலாம் என அருகேயிருந்த உணவகத்திற்குள் நுழைந்தனர்.
துளசி அருகேயிருந்த இருக்கையில் அமர்ந்த காயத்ரி, “நல்ல சேன்ஸ் ராம்... அவங்க பக்கத்துல உக்கார்ந்து என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு கேட்டு கெமிஸ்ட்ரி பயாலஜியை வொர்கவுட் பண்ணு மேன்!” என அவன் தோளைத் தட்டியவளை மென்மையாய் முறைத்தவன் சைந்தவிக்கு அருகேதான் அமர்ந்தான்.
உணவை வரவழைத்து நால்வரும் உண்ண காயத்ரி துளசியிடம் திருப்பூரைப் பற்றியும், இளவேந்தனின் அரசியல் வாழ்க்கையும் பொதுவாய்க் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் பேசும்போதே இவளுக்கு அவர்களது குடும்பத்தின் பின்னணி புரிந்தது. பணத்தில் மட்டும் அல்ல, இளவேந்தன் அமைச்சராய் இருப்பதால் அவர்களின் அரசியல் பின்புலத்தையும் அறிந்தாள். காலையில் அவர்களுடன் வந்த தனிப்பட்ட காவலாளிகளைக் கண்டதுமே அவர்கள் பெரிய இடத்து மனிதர்கள் எனப் புரிந்திருந்ததுதான். இருந்தும் அவள் வாய் வார்த்தையாகக் கேட்கும்போது சற்றே மலைத்துதான் போனாள்.
ராமிற்கு சைந்தவி சரியாய் இருப்பாள் என்ற எண்ணம் இன்னுமே வலுப்பெற்றது.
“க்ரேவி ஊத்திக்கோ சைந்தவி!” என்ற ராம் அவளது தட்டை நிரப்புவதைப் பார்த்த காயூவிற்கு பொறமை இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. பார்வையைத் திருப்பி உள்ளே பொங்கி வந்த உணர்வை அடக்கியவள், ‘காயூ... உன் ராம் சந்தோஷமா இருக்கான். டோன்ட் கெட் ஜெலஸ். அவன் சந்தோஷம் உனக்கும் சந்தோஷம்தானே?’ என சுயசமாதானம் செய்தபடியே வெகு கவனமாய் பார்வையை அவர்களிடமிருந்து தவிர்த்தாள்.
சாப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்குப் புரையேற, “ப்ம்ச்... காரமா இருக்கதை சாப்பிடாத காயூ. உனக்கு ஒத்துக்காது இல்ல?” என சைந்தவியிடம் பேசினாலும் ரகுராம் இவளிடம் கடிந்து நீரை நகர்த்தி வைக்க, காயத்ரியின் முகத்தில் முறுவல் பூத்தது.
துளசி எதையும் கூறாது சாப்பிட,
“நண்பேன்டா மொமண்ட் துளசிக்கா. நான் சொன்னேன் இல்ல, ராம் ரொம்ப கேரிங்னு!” என்றாள் ரகுராமை அன்பாய்ப் பார்த்து. துளசி தலையை அசைத்து ஏற்றுக் கொண்டாள்.
உண்டு முடித்து நால்வரும் உணவகத்தை விட்டு வெளியேற யத்தனித்தனர். “ஹோட்டல் ஆம்பியன்ஸூம் நல்லா இருக்கு, நம்பளும் நல்லா இருக்கோம். சோ ஒரு ஃபோட்டோ?” என அவன் சைந்தவியைப் பார்த்து புருவத்தை உயர்த்த, “வொய் நாட்? நானும் முக்கியமான சிலருக்கு உங்க போட்டோவை ஷேர் பண்ணணும். பேர்-ஆ நின்னு எடுத்தா இன்னும் நல்லா இருக்கும்!” என அவள் ஒப்புக் கொள்ள, காயத்ரி ரித்விக்கைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
“காயூ...” என ராம் அழைக்க, முன்னே சென்று கொண்டிருந்தவள் நடை நிதானப்பட, “என்ன ராம்?” என அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“எங்களை ஒரு ஃபுல் பிக் எடு காயூ...” என அவன் அலைபேசியை நீட்ட, ரித்விக்கை இறக்கிவிட்டவள், “நீ நடத்துடா...” எனப் புன்னகையுடன் அவர்கள் இருவரையும் புகைப்படம் எடுத்தாள்.
“என் கை உன் ஷோல்டரை எட்டுற தூரம்தான் சைந்து?” என்ற ராம் புன்னகையுடன் பார்வையை சுற்றிலும் படரவிட்டுக் கொண்டே குறும்புடன் கேட்க, அவளது முகத்தில் முறுவல் அரும்பிற்று.
“ஹம்ம்... போட்டுக்கோங்க போட்டுக்கோங்க!” என அவள் ராகமிழுக்க, இவன் கண்கள் மின்ன அவள்புறம் திரும்பி தோளோடு அணைத்தவன், “காயூ ஒன்ஸ் மோர்!” என்றான். அவர்களை சலனமற்றுப் பார்த்த காயத்ரி சில புகைப்படங்களை எடுத்தாள். இருவருமே முகம் முழுதும் வாடாத சிரிப்புடன் நின்றிருந்தனர்.
“அண்ணி, வாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுக்கலாம்!” என சைந்தவி துளசியையும் ரித்விக்கையும் உடனழைத்தவள், “காயத்ரி நீங்களும் வாங்க!” என்றாள்.
“நோ... நீங்க ஃபேமிலியா எடுங்க சைந்தவி. நான் எதுக்கு?” எனக் கேட்டவள், “நான் என் ஃபோன்ல புல் பிக்சர் ஒன்னு எடுத்து தரேன்!” என கைப்பையில் அலைபேசியை துழாவியவளின் கையைப் பிடித்திழுத்து தன்னருகே நிற்க வைத்த ரகுராம், “பேசாம மூடிக்கிட்டு நில்லு காயூ!” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி. அவனை முறைத்தவள் வேறு வழியில்லாமல் நின்றாலும் ரகுராமைவிட்டு வெகுவாகக் தள்ளி நின்றாள். அதற்கும் அவன் முறைக்கத் தவறவில்லை. அவர்கள் இருவரும் விடைபெற, மகிழுந்து வரை சென்று விட்டுவிட்டு வந்தான் இவன்.
காயத்ரி அவன் மகிழுந்தில் ஏறியமர்ந்து இருக்கையில் சாய்ந்தாள். விழிகளிலிருந்து பொலபொலவென கண்ணீர் வடிந்தது. ‘சே... அழக்கூடாதுன்னு நினைச்சாலும் முடியலை. சட்டு சட்டுன்னு கண்ணுல தண்ணி வருது’ எனத் தன்னையே கடிந்தவள் ரகுராம் வருவதைக் கவனித்துவிட்டு முகத்தை அழுந்தத் துடைத்தாள். அவளருகே ஏறியமர்ந்தவன் எதுவும் கூறாது வாகனத்தை இயக்கினான். அவன் அமைதியாய் இருப்பதிலே கோபமாய் இருக்கிறான் என இவளுக்குப் புரிந்தது.
சிறிது நேரம் அப்படியே கழிய, “ராம்... சாரி டா!” என்றாள். அவன் முகத்தை உர்ரென வைத்திருந்தான்.
“ப்ம்ச்... இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு முனைச்சிட்டு இருக்க நீ? சொன்னாலும் சொல்லலைனாலும் நான் எக்ஸ்ட்ரா பிட்டிங் தான் டா. முதன்முதலல ஃபேமிலி ஃபோட்டோ எடுக்குறீங்க. நான் இருக்கது சைந்தவிக்கும் துளசி அக்காவுக்கும் பிடிக்குமோ? என்னவோ? அதான் டா நான் வரலைன்னு சொன்னேன். என்னதான் நான் உனக்கு ஃப்ரெண்ட்னாலும் அவங்களுக்கு தேர்ட் பெர்சன்தான். அவங்களா மூஞ்சியைக் காட்டுறதுக்கு முன்னாடி நம்பளே நம்ப லிமிட் என்னென்னு தெரிஞ்சு நின்னுடணும்!” என அவள் பேசியதும் இவனது முகத்தில் எரிச்சல் அப்பட்டமாய் படர்ந்தது.
“ஓஹோ... அப்போ ஆப்ஃடர் மேரேஜ் சைந்தவி என் கூடப் பேசக் கூடாது, ஃப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணுன்னு சொன்னா நான் வேணாம்னு போய்டுவீயா நீ?” என அவன் சூடாய்க் கேட்டான். இவள் பதிலேதும் உரைக்கவில்லை.
“உன்கிட்டதான் டி கேட்குறேன். வாயைத் தொறந்து சொல்லு!” அவன் அழுத்திக் கேட்க, “சைந்தவி அப்படி சொல்ற அளவுக்கு நான் நடந்துக்க மாட்டேன் ராம். உனக்கே என்னைப் பத்தி தெரியும். நீயும் அப்பாவும் மட்டும்தான் என் கம்பர்ட்சோன்குள்ள இருக்கவங்க. யாரோடவும் அப்படியெல்லாம் அட்டாச் ஆக மாட்டேன். அதே மாதிரி உனக்கு மேரேஜ் முடிஞ்ச பிறகு என்னோட லிமிட்ல நான் நின்னுடுவேன் டா. யாரும் என்னை சொல்ற மாதிரியெல்லாம் நான் வச்சுக்க மாட்டேன். நீயும் உன் ஆள் கிட்டே சொல்லி வச்சிடு!” அழுத்தமாய் ஆரம்பித்து கேலியாய் முடித்தாள்.
“பைன்... அவ அப்படியும் உன்னை என் கூட ரிலேஷன்ஷிப்பை கட் பண்ண சொன்னா என்ன பண்ணுவ?” அவன் மீண்டும் அழுத்திக் கேட்க,
“ச்சு... நான் என்ன பண்ணணும்னு எதிர்பார்க்குற? ஹம்ம், முடியாதுன்னு சண்டை போடணும்னா. உங்களுக்குள்ள என்ன வச்சு சண்டை வரக்கூடாதுன்னுதான் டா நான் நினைப்பேன். உனக்கொரு ஃபீஸ் புல் லைஃப் கிடைக்கணும்னா, உன்னைவிட்டு நான் விலகிப் போறதுல்ல தப்பேதும் இருக்க மாதிரி எனக்குத் தெரியலை டா!” என அவன் முகம் பார்த்து பிசிறில்லாத குரலில் பேசியவளைத் திரும்பி ஆழ்ந்து பார்த்தான் ரகுராம். பதிலில்லை, ஆனால் பார்வை அவளைக் குற்றம் சுமத்தியது.
“என்னைவிட்டுப் பிரிஞ்சு போறதுதான் உன் மைண்ட் ஃபுல்லா இருக்கா காயூ? எங்கேஜ்மெண்ட், கல்யாணத்துக்கு எல்லாம் வருவீயா? இல்லை இதே மாதிரி எதாவது சொல்லி வராம இருந்துடுவீயா?” என உணர்வற்று அவன் பேசவும், இவளது விழிகள் தளும்ப பார்த்தன. அவனுடைய திருமணத்திற்கு செல்லும் அளவிற்கு இன்னும் மனதிடம் வரவில்லை என காயத்ரிக்கே புரிந்தது. ஆனாலும் ராம் என்ற ஒரு வார்த்தைக்காக செல்லலாம் என முடிவெடுத்திருந்தாள். எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது. இவனுடைய திருமணம் எந்த வகையிலும் என்னைப் பாதிக்காது. தன்னுடைய ராம் வாழ்க்கையில் நன்றாய் இருக்க வேண்டும் என்றொரு எண்ணம் அவளது உணர்வுகளை மறிக்க செய்திருந்தது.
“ச்சு... எதாவது உளறாத டா. நான் இல்லாம எப்படி உன் கல்யாணம் நடக்கும். எல்லாத்துலயும் நான் இருப்பேன் டா!” என்றவள், “பேசி பேசியே என்னை டயர்டாக்குற மேன் நீ. கொஞ்ச நேரம் தூங்குறேன்!” என அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கையை தளர்த்தி அவனைப் பார்க்காது மறுபுறம் தலையைத் திருப்பிப் படுத்தாள். அழ வேண்டும் என்றொரு உந்துதல் வந்தாலும் உதட்டைக் கடித்து அழுகையை விழுங்கினாள்.
“ஏன் காயூ... எனக்கு சைந்தவியோட கேரக்டர் பிடிச்சிருக்கா? அடுத்து என்ன பண்ண போறன்னு நீ கேட்க கூட இல்லைல? ஏதேதோ பேசி என்னைக் கஷ்டப்படுத்துற நீ? என் மூடே ஸ்பாயிலாகுது!” என்றான் ஆதங்கமான குரலில்.
“நீ சொல்லித்தான் உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியணும்னு அவசியம் இல்ல ராம். உன் முகத்தை பார்த்தே என்ன நினைக்கிறன்னு தெரியும். உனக்கு சைந்தவியை அப்பியரன்ஸ் வைஸ் மட்டும் இல்ல, கேரக்டர் வைஸூம் ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணத்துக்கு ஓகே சொல்ற எண்ணத்துலதான் இருக்க. அதே மாதிரி எனக்கும் அவங்க உன் கேரக்டர்க்கு செட்டாகுவாங்கன்னு தோணுது. உங்க பேர் ரொம்ப க்யூட்டா இருந்தது டா. யூ வில் பீ மேட் ஃபார் ஈச் அதர். சந்தோஷமா இருங்க!” என அவன் முகம் பார்த்து பேச திராணியற்றவள் விழிகளில் வழிந்த நீரை அவனறியாது சுண்டிவிட்டாள். ரகு அவளைத் திரும்பி பார்த்துவிட்டு பெருமூச்சோடு வாகனத்தை இயக்க, இரண்டு மணி நேரத்தில் வீட்டை அடைந்தனர்.
ஆலம்பட்டி வந்ததுமே காயத்ரி முகத்தைத் துடைத்து சரிசெய்தாள். அவர்கள் தெருவை அடைந்ததும் கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டியவள் மகிழுந்தைவிட்டு இறங்கி, அவன் முகம் பார்க்காது விடைபெற்று உள்ளே சென்றாள். ரகுராம் வாகனத்தை சற்று தள்ளி ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அவள் பின்னால் வந்தான். பூட்டியிருந்த வீட்டைப் பார்த்தவள் தந்தை எப்போதும் அமரும் தேநீர் விடுதிக்கோ அல்லது அவரது நண்பரின் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடைக்கோ சென்றிருக்க கூடும் என யோசித்துவிட்டு பூட்டை திறந்து உள்ளே நுழைந்தாள்.
ரகுராமும் உள்ளே நுழைய, “பேக் டூ பேக் ட்ரைவ் பண்ணது டயர்டா இல்லையா ராம்? போய் ரெஸ்ட் எடு டா. எனக்கும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும்!” என அவள் கைப்பையை மேஜை மீது வைக்க, “எனக்கு சில விஷயம் பேசித் தீர்க்கணும்!” என்றான் அவள் முகத்தை ஆழப்பார்த்து.
“என்ன பேசணும்?” போலியான சலிப்பு அவளது குரலில்.
“ஒரே ஒரு கொஸ்டீன் காயூ... இத்தனை வருஷம் என் கூட பழகி இருக்கல்ல டி. அப்படி எப்படி நான் உன்னை யார்கிட்டேயும் விட்டுக் கொடுத்துடுவேன்னு தோணுச்சு காயூ? நான் உன்கூடவே இருப்பேன்னு உனக்கு நம்பிக்கை கொடுக்கலையா? அதெல்லாம் தானா வரணும். நான் கேட்டு வாங்க கூடாதில்லை. இப்போலாம் நீ பேசுறது என்னை ரொம்ப ஹர்ட் பண்ணுது டி. ஒரு ப்ரெண்டா உன்னை நான் சரியா கவனிக்கலையோன்னு தோணுது. வாட் இஸ் ஈட்டிங் இன் யூ?” என அவன் கேட்க, காயத்ரி நிமிரவே இல்லை. வெகு கவனமாய் அவனது பார்வையை தவிர்த்து விரல் நகங்களை ஆராய்ந்தாள். என்ன பேச வேண்டும், அவனைக் காயப்படுத்தக் கூடாது என மனம் வெகுவாய் வார்த்தைகளைக் கோர்த்தது.
“அப்படியெல்லாம் இல்ல ராம். நான்... நான் சொன்னேன் இல்ல. இத்தனை நாள் நீ என்னோட ராம். எப்போனாலும் மீட் பண்ணலாம். எதுனாலும் உனக்கு கூப்ட்டு பழகிட்டேன். மோர் ஓவர் அப்பாவுக்கு அடுத்து நான் சாப்ட்டேனா, நல்லா இருக்கேனான்னு என்னை அக்கறையா பார்த்துக்குறது நீ மட்டும்தானே டா. அது... அம்மா முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் உன் முகம்தான் ராம் ஞாபகம் வருது. இப்போ சில நாளாத்தான் வருது. ஒருவேளை உனக்கு கல்யாணம்னதும் இன்செக்யூர்டா ஃபீல் பண்றேன் போல. பட் யூ க்நோ ராம், நான் யாரையும் டிபண்ட் பண்ணி இல்லைன்னு நினைச்சுட்டு இருந்தேன். பட் இப்போ அப்படியில்லை, உன்னை முழுக்க முழுக்க எமோஷனலா டிபண்ட் பண்ணி இருக்கேன்னு தோணும் போது என் மேலயே கோபம். அதான் டா... சாரி ராம். நான் உன்னைக் கஷ்டப்படுத்தணும்னு எதுவும் பேசலை. அந்த நேரத்துல வந்துடுச்சு டா!” பிசிறடித்த குரல் தேய்ந்து ஒலித்தது.
“என் முகத்தைப் பாரு காயூ!” அவன் அழுத்தமாய்க் கூற, இவள் விழிகளில் பொங்கிய நீரை உள்ளிழுத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றிருந்தாள்.
“சைந்தவி மட்டும் இல்ல, இன்னும் எத்தனை பேர் என் வாழ்க்கைல வந்தாலும் போனாலும் என் காயூவை ரிப்ளேஸ் பண்ண யாராலையும் முடியாது. அவளுக்கான இடம் எப்பவும் ஸ்பெஷல்தான். எனக்கு கல்யாணமானும் உனக்கு கல்யாணமாலும் நமக்குள்ள இருக்க ஃப்ரெண்ட்ஷிப் மாறாது டி. உன்னை அப்படி எங்கேயும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்!” என அவன் உறுதியாய் உரைக்க, இவள் கண்ணீரோடு புன்னகைத்தாள்.
“உன் மரமண்டைக்கு புரியுதா இதெல்லாம்? இனிமே இந்த மாதிரி எதாவது உளறுன, பேசிட்டு இருக்க மாட்டேன். செவில்லயே ஒன்னு விட்ருவேன்!” அவன் கோபமாய் கூற, இவளது முகத்தில் முறுவல் பிறந்தது.
“சாரி ராம்!” அவள் உணர்ந்து கேட்க, “சாரி பூரி.. நீயே வச்சுக்கோ டி. அம்மா வெயிட் பண்ணுவாங்க. நான் கிளம்புறேன்!” என அவன் எழுந்து நிற்க, “ராம்...” என்றாள் காயத்ரி தயங்கி. அவளது முகம் பார்த்தான் ரகுராம்.
“ஒரு தடவை உன்னை ஹக் பண்ணணும் போல இருக்கு டா!” என அவள் மெல்லிய குரலில் உரைக்க, மென்மையாய் அவளை முறைத்தவன், “இதுக்கெல்லாம் பெர்மிஷன் கேட்பீயா டி?” என்றவாறே கையை விரிக்க தயங்கித் தயங்கி அவனை அணைத்தாள் காயத்ரி. சிறு வயதில் தொட்டுப் பேசி விளையாடியிருந்தாலும் வயது ஏற ஏற அந்தப் பழக்கம் குறைந்திருந்தது. ரகுராம் என்றாவது அதீத சந்தோஷத்தில் அவளைப் பட்டும்படாமலும் அணைத்திருந்தாலும், இதுதான் இருவரும் ஒருமித்து அணைக்கும் அணைப்பு.
அவனது வாசனையை ஆழமாய் நுகர்ந்தவள், ‘சாரி ராம்... சாரி டா!’ என மனதிற்குள் முணுமுணுத்தவாறே சோபையான புன்னகையுடன் அவனிடமிருந்து பிரிந்தாள்.
“காயூவுக்கு இப்போ ஹேப்பியா?” என அவளது கன்னத்தை ரகு தட்ட, தலையை அசைத்து அவனுக்கு விடை கொடுத்தவள் அறைக்குள் சென்று உடுத்தியிருந்த சேலையை அவிழ்த்து அதை நுகர்ந்தாள். இன்னுமே ரகுவின் வாசனை அவள் உடலோடு சேலையிலும் ஒட்டியிருப்பதாய் எண்ணம் தோன்ற, ‘ஹவ் சீப் பெர்சன் காயூ நீ? தப்பு இது?’ என்ற மனதை அடக்கி அந்த சேலையை துவைக்காது அப்படியே மடித்து உள்ளே வைத்தாள். ராம் அவளுடன் இல்லாத காலங்களில் தாயின் ஸ்பரிசத்தோடு அவனையும் ஸ்பரிசிக்க எண்ணியே அவனை அணைத்திருந்தாள். மெதுவாய் அவளது விரல்கள் அந்தப் புடவையைத் தடவப் போக, நிலைபேழையின் கதவை அடைத்தவள், உடையை மாற்றிவிட்டு அலைபேசியைக் கையில் எடுத்தாள்.
“வீக் ஆஃப்-அ இனிமேல் வேஸ்ட் பண்ணாத ராம். ஒழுங்கா சைந்தவியோட டைம் ஸ்பெண்ட் பண்ணு. அவங்களைப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. அப்போதான் உங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டான்டிங் வரும் டா!” என அவனுக்கொரு குறுஞ்செய்தியைப் புலனத்தில் தட்டிவிட்டவள், அப்படியே கையை நகர்த்தி சற்று முன்னர் அவன் அனுப்பிய புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள்.
ரகுராமும் சைந்தவியும் பற்கள் தெரிய புன்னகைத்து நிற்க, இவளது விரல்கள் ராமின் முகத்தைத் தடவின. சட்டென்று ஒரு துளி கண்ணீர் அலைபேசியை நனைக்கவும், அதை அணைத்து தூரப் போட்டுவிட்டாள்.
தொடரும்...

Last edited: