- Messages
- 1,049
- Reaction score
- 3,001
- Points
- 113
இஷ்டம் – 3 
அந்த மாதம் யாருக்கும் நிற்காமல் கடந்து போயிருந்தது. ரகுராமிற்கு மாதத்தின் கடைசி வாரம் எப்போதும் இரவுப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. காயத்ரிக்கு முதல் வாரம் இரவுப் பணி. எனவே இருவரும் சந்திக்க சந்தர்ப்பங்கள் வெகு குறைவே. இவளாக அவனைத் தேடி செல்ல மாட்டாள்.
ரகுவின் வீட்டிற்கு கடைசியாய் எப்போது சென்றோம் என காயத்ரி மூளையின் கடைசி அடுக்கு வரை தூசி தட்டினாலும் நினைவடுக்கில் ஏதுமில்லை. அவளாகவே அங்கு செல்வதை நிறுத்தி பற்பல ஆண்டுகள் கடந்திருந்தன. அவனுமே என்ன? ஏன்? எதற்கு என எத்தனையோ கேள்விகளை முன் வைத்து அவளிடம் தோண்டித் துருவி கேள்வி கேட்க, சிரித்தே மழுப்புவதுதான் பெண்ணின் வழக்கம். ஒரு கட்டத்தில் ரகுவே சரி போ என விட்டுவிட்டான். அதற்காகத் தோழியைப் பார்க்காமல் இல்லை. வாரத்திற்கு இரண்டு முறையாவது இங்கு வந்து அவளைப் பார்த்துவிட்டு செல்வான்.
ரகு இளங்கலை மருத்துவம் முடித்துவிட்டு தந்தை இதய சிகிச்சை நிபுணராகப் பணியாற்றும் அதே மருத்துவமனையில் பணிபுரிகிறான். காயத்ரியும் ரகுராமும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில்தான் இளங்கலை முடித்திருந்தனர். இவன் மருத்துவம் தேர்ந்தெடுக்க, காயத்ரி அவளது மதிப்பெண் அடிப்படையில் துணை மருத்துவப் படிப்பான மருந்தியல் துறையைத் தேர்வு செய்திருந்தாள்.
இருவரும் ஒரே கல்லூரி எனினும் ரகுவிற்கு காலை ஏழு மணிக்கே வகுப்பு தொடங்கிவிடும். இவளுக்கு பத்து மணிக்குத்தான் துவங்கும். மாலை இருவருக்கும் நான்கு மணிக்கு என பொதுவான நேரத்தில் முடிய, வீட்டிற்கு வரும் பொழுதை தங்களுக்கென ஒதுக்கியிருந்தனர். பள்ளி முதல் கல்லூரி வரைத் தொடந்த நட்பு, அதற்குப் பின்னும் எந்த இடத்திலும் தேங்கி நிற்கவில்லை. விருட்சம் போல இன்றைக்கு அழுத்தமாய் அவர்களைப் பிணைத்து வைத்திருக்கிறது. காயத்ரி மெனக்கெட்டு அவனைக் காண செல்ல மாட்டாள். ஆனால் ரகு அவளுக்காக வருவான். வாரத்தில் இரண்டு முறையாவது தோழியைப் பார்த்து அவளது நலம் நாடி செல்வான். அவளுக்கு தேவையானவற்றை அவனாகப் பார்த்து நேசத்துடன் செய்வான். அவள் மறுக்க மாட்டாள். ஆனாலும் பெரிய பெரிய உதவிகளை, பரிசு பொருட்களை காயத்ரி ஏற்றுக் கொள்ள மாட்டாள். அவளுக்கு விலையுயர்ந்த பொருட்களை நட்பின் நிமித்தமாகக் கூட பரிசாய் பெருவதில் விருப்பமில்லை.
ரகு வேலைக்குச் சென்ற முதல் மாதத்தில் இவளுக்கு அலைபேசி ஒன்றை வாங்கிப் பரிசளிக்க, பெண் அதை வாங்க மாட்டேன் என சாதித்திருந்தாள். அவனுக்கு கோபம் எனினும், சரியென்று விட்டுவிட்டான். அவள்தான் அவனுக்கு முன்பே படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் சென்றது. அவனுக்காக உடைகள், கைக்கடிகாரம், காலணி என வாங்கிக் கொடுத்தவளின் பட்டியல் இன்னுமே நீண்டு கிடந்தது. அத்தனையிலும் அவளுக்குத் தன் மீதான அன்பே பிரதானமாய் இருந்ததில் ரகு பெரிதாய் அலட்டிக் கொள்ளாது அனைத்தையும் பெற்றுக் கொண்டான். இப்படி சிறு சிறு விஷயத்தில் கூட எங்கேயும் தன்னை விட்டுக் கொடுக்காத உறவு அவர்களுடையது.
அன்றைக்கு குளித்து முடித்து மருத்துவமனை செல்லத் தயாரான ரகுராம் தட்டிலிருந்த இடியாப்பத்தையும் தேங்காய் பாலையும் ரசித்து ருசித்து உண்டு கொண்டிருந்தான். மகன் உண்ணுவதை வாஞ்சையாகப் பார்த்த கௌதமி, “இன்னொரு இடியாப்பம் சாப்பிடு டா...” என்றார்.
அவர் முன்னே வேகமாய் கரத்தை நீட்டியவன், “நோ மா, இப்பவே ஸ்டமொக் ஃபுல். இதுக்கும் மேல சாப்பிட முடியாது!” என தலையை அசைத்தவன் கையைக் கழுவிவிட்டு தந்தை அறையை எட்டிப் பார்த்தான். ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் மனிதர்.
“நைட் ஆப்ரேஷன் முடிஞ்சு லேட்டாதான் வந்தாரு டா. அதான் டயர்ட்ல தூங்குறாரு...” என்ற தாயிற்கு தலையை அசைத்துவிட்டு வந்து மீண்டும் இருக்கையில் வந்தமர்ந்தான். உணவு உண்ண வரும்போதே ஏதோ பேச வாயெடுத்த கௌதமி மகன் உண்டு முடியட்டும் என அமைதி காத்தார்.
“சொல்லுங்கமா... என்ன பேசணும்?” என்றான் மகன் புன்னகையுடன்.
“ராம்... போன வாரமே நான் உன்கிட்ட சொன்னேன் இல்ல. உனக்கு குரு பெயர்ச்சி நல்லா இருக்கு. இப்போ கல்யாணம் பண்ணா வாழ்க்கை அமோகமா இருக்கும்னு ஜோசியர் சொன்னாரு டா. நான் கூட போன வாரம் சொன்னேனே!” என்ற தாயிடம் நினைவிருப்பதாய் தலையை மென்மையாய் அசைத்தான்.
“நம்ப நளினி பொண்ணு சைந்தவி இருக்கால்ல... படிப்பை முடிச்சிட்டு டாக்டரா வேலை பார்க்குறா போல. ரொம்ப லட்சணமா அழகா இருந்தா டா. நான் சரின்னு அப்படியே பேச்சுவாக்குல மாப்ளை பார்க்குறீங்களான்னு கேட்கவும், நளினியும் ஆமான்னு சொன்னாங்க. உன் போட்டோ ஜாதகத்தைக் கொடுத்துட்டு பொண்ணு போட்டோவும் ஜாதகமும் வாங்கிட்டு வந்து ஜோசியர் கிட்டே காட்டுனேன். பொருத்தம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாரு. உங்கப்பாகிட்டே பேசிட்டுதான் செஞ்சேன். அவருக்கும் பொண்ணையும் அவரோட குடும்பத்தையும் பிடிச்சிருக்கு. சந்தனவேல் அண்ணாவுக்குப் பிறகு அவரோட ரெண்டாவது பையன் மினிஸ்டராகிட்டான் போல. நல்ல இடம் டா, அவங்களுக்கும் ஓகேன்னு சொல்லிட்டாங்க. நீ ஒரு தடவை பொண்ணைப் பார்த்து பேசிட்டு வாடா. உனக்குப் பிடிச்சா மேற்கொண்டு பேசலாம்!” மூச்சு விடாமல் பேசிய தாயை இவன் அயர்ந்து பார்த்தான். சென்ற வாரம் அலைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவன் அவர் திருமணம் அது இதுவென பேச்சைத் துவங்கியதும் உடனே அனைத்தும் நடந்துவிடப் போகிறதா என்ற விட்டேற்றியான எண்ணத்தில் சரியென தலையை அசைத்திருக்க, கௌதமி எள் என்றால் எண்ணெய் என்று இந்த விஷயத்தில் நிற்கிறார்.
“ம்மா... நீ பேசுனதைப் பார்த்ததும் பொண்ணைப் பார்க்க ஒரு ஆறு மாசமாவது ஆகும்னு எக்ஸ்பெக்ட் பண்ணேன். இப்படி திடுதிப்புன்னு பொண்ணு பார்த்துட்டேன்னு நிக்கிற!” என அவன் அதிர்ச்சியும் ஆச்சரியமும்மாய்ப் பார்த்தான்.
“டேய்...நானே இந்தக் காலத்துல எல்லாம் மேட்ரிமோனிலதானே பொண்ணுப் பார்க்குறாங்க. அதெல்லாம் ஒத்து வருமான்னு யோசிச்சேன். அப்புறம் பார்த்தா ஒரு விஷேசத்துக்கு புதுக்கோட்டை வந்த நளினி வீட்டுக்குப் பொண்ணோட வந்துட்டுப் போகவும், எனக்கு அந்தப் பொண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு டா, விட மனசில்லை. அமைதியான சுபாவம், மரியாதையா நடந்துகிட்டா. போட்டோ காட்டுறேன் இரு...” என்றவர் விறுவிறுவென அறைக்குள் நுழைந்து ஒரு புகைப்படத்தை எடுத்து வந்தார். அலைபேசி வழியே உலகத்தையே பார்க்கும் இந்தக் காலத்தில் கையிலிருந்த புகைப்படத்தை நீட்டிய தாயை ஆதுரமாக நோக்கியவன், அந்தப் பெண்ணைப் பார்த்தான்.
பார்த்ததும் கண்ணைவிட்டு அகல முடியாத வசீகரம் பொருந்தியிருந்தாள். மை தீட்டிய விழிகளும், மென் சாயமிட்டிருந்த உதடுகளும் அவளது அழகைக் கூட்டிக் காண்பித்தன. தாயைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான் மகன்.
“எப்படி டா அம்மா செலக்ஷன்?” என அவர் முகம் பெருமையில் விகசித்தது.
“குட் மா... பொண்ணு சூப்பர்!” என்றான்.
“அப்போ உனக்கு ஓகேவாடா. அடுத்து என்னென்னு பார்க்கலாமா?” என அவர் ஆர்ப்பரிக்க, “ம்மா...வெயிட், வெயிட். பார்க்க லுக் ஓகே. பட் கேரக்டர் என்னென்னு தெரியாம மேரேஜ் வரைக்கும் ப்ராசசஸ் பண்றது ரிஸ்க் மா. நான் அந்தப் பொண்ணை மீட் பண்ணி பேசுறேன். எங்களோட தாட்ஸ் ஒத்துப் போச்சுன்னா, முறைப்படி பொண்ணு பார்க்கலாம், எங்கமேஜ்மெண்ட், மேரேஜ் எல்லாம் வைக்கலாம்!” என்றான் யோசனையாக. இன்னுமே சைந்தவியின் வசீகரமும் நீண்ட பல்வரிசை சிரிப்பும் அவனது விழிகளைவிட்டு அகலவில்லை.
“ப்யூட்டி ஃபுல் கேர்ள், ஷி இஸ் மெஸ்மரைஸிங் மீ!” என அவன் உதடுகளில் குளிர் புன்னகை கவிழ்ந்தது.
“அப்போ ஒருநாள் அந்தப் பொண்ணை இங்க நம்ப மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வர சொல்லுறேன் டா. நீயும் போய் பார்த்து பேசிட்டு வாடா!” என அவர் முகம் கொள்ளா புன்னகையுடன் கூறினான்.
“ம்மா... தௌசண்ட் வாட்ஸ் பல்ப் எரியுது. ரொம்ப இமாஜின் பண்ணாத மா. அழகா இருக்கான்றதுக்காக எல்லாம் நான் ஓகே சொல்ல மாட்டேன். ப்யூட்டி இஸ் ஆல்வேய்ஸ் டேஞ்சரஸ்!” என அவன் குறும்பாய் சிரிக்க, தாய் அவனை செல்லமாய் முறைத்தார்.
“ஹக்கும்... ம்கூம்!” எனத் தொண்டையைக் கனைத்துக் கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தார் தேவராஜ்.
அவரைக் கண்டதும் கௌதமியின் சிரிப்பு மறைய, “காஃபி எடுத்துட்டு வரேன்ங்க...” என சமையலறைப் பக்கம் ஒதுங்கினார்.
“என்ன ராம்... கையில என்ன?” எனத் தந்தை கேட்டதும் அவன் அந்தப் புகைப்படத்தை நீட்டினான். நேற்றைக்கு மனைவி அவரிடமும் சைந்தவியின் படத்தை காண்பித்திருந்தார்.
“எக்ஸ் மினிஸ்டர் பொண்ணு ராம். அவங்க அண்ணனும் இப்போ மினிஸ்டர் போல. நல்ல குடும்பம். கேள்விபட்ட வரைக்கும் எந்த ஒரு கெட்டப் பேரும் இல்ல. அதானலாதான் நானும் உங்கம்மா சொன்னதும் ஓகே சொன்னேன். உன் மனசுல என்ன இருக்கு ராம். இந்தப் பொண்ணு ஓகேவா?” எனக் கேட்டார் பெரியவர்.
“யெஸ் பா... நேர்ல ஒன் டைம் மீட் பண்ணிட்டு கன்பர்ம் பண்றேன்!” என்றான் அவன்.
“சரிப்பா...” மகன் தலையசைத்தான்.
“அந்த கார்த்திகிட்டே பேச்சை குறைச்சுக்கோ ராம். அவன் சரியில்லை. முன்னாடி நல்லவன் மாதிரி பேசிட்டு, பின்னாடி மேனேஜ்மென்ட்ல நம்ப மேலயே கம்ப்ளைண்ட் பண்ணுவான். சச் அ ப்ரூட்டல் கேரக்டர் அவன்!” என்ற தந்தையிடம் எவ்வித மறுப்பும் சொல்லாது மகன் தலையை அசைத்து ஏற்கவும், அவரது முகத்தில் சற்றே பெருமிதமும் கர்வமும் குடி கொண்டது. ரகுராமிற்கு தந்தையென்றால் அத்தனை பிரியம். சிறு வயதிலிருந்தே தாயா தந்தையா எனக் கேட்டால், தேவராஜிடம் ஓடுவான். அப்போதிலிருந்தே அவர் மீது இவனுக்கு மரியாதையும் மதிப்பும் அதிகம். சிறு வயதிலே நிறைய கஷ்டங்களைப் பார்த்து மூன்று அக்காக்களுக்கு திருமணம் முடித்து என அவர் பொறுப்பிலிருந்து எங்கேயும் தவறாத மனிதர். அப்படி இருக்கும் தந்தை அவனுக்கு எப்போதுமே அவனுக்கு முன்மாதிரிதான்.
அவரைப் பார்த்துதான் மருத்துவராக வேண்டும் என்ற ஆசையும் அவனுக்கு வந்திருந்தது. ரகு நன்றாய் படிக்கும் ரகம்தான். இருந்தும் தேவராஜ் மகனை தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்துவிட மாட்டேன் என்று முன்பே உறுதியாக மறுத்துவிட்டார். அவனாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தால் ஒழிய, அவனுக்கு வேறெந்த வகையிலும் தான் பணத்தின் மூலம் மருத்துவ படிப்பை கொடுக்க மாட்டேன் என்று உறுதியாய் நின்றவரைப் பார்த்து ரகுவிற்கு கோபம் வரவில்லை. மாறாக தந்தையின் நேர்மையான குணத்தைப் பார்த்து இன்னுமே வியந்து போனான். அவரிடம் நல்ல பெயர் பெற வேண்டும் என்ற நோக்கோடு பன்னிரெண்டாம் வகுப்பில் தீவிரமாய் படித்து பள்ளி தர வரிசையில் மூன்றாம் இடம் பெற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியிலே சேர்ந்திருந்தான். அதில் தந்தைக்கு ஏக மகிழ்ச்சி. மகனை கொண்டாடி மகிழந்திருந்தார்.
அவரைப் போலவே படித்து முடித்து அவர் வேலை பார்க்கும் மருத்துவமனையில் பயற்சி மருத்துவராகப் பணியாற்றுகிறான். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும், தற்போதைக்கு அதை செயலாற்றாது கிடப்பில் போட்டிருந்தான்.
கௌதமி குளம்பியைக் கணவனிடம் கொடுக்க ஒரு மிடறு விழுங்கியவர், “கௌதமி... காபில சர்க்கரை போட்டீயா? இல்ல சர்க்கரைல காபியை போட்டீயா?” என சுள்ளென கேட்கவும், பெண்ணின் முகம் வாடிப் போனது. மகன் திருமணத்தை எண்ணி களிப்புற்றிருந்தவர் சர்க்கரையை சற்று கூடுதலாக சேர்த்துவிட்டார்.
“இல்லங்க... கொஞ்சம் கூடிப் போச்சு போல. நான் வேற காஃபி எடுத்துட்டு வரேன்!” என அவர் கூற, “ஒன்னும் வேணாம். காலையில மனுஷனுக்கு நிம்மதியா காஃபி கூட இந்த வீட்ல கிடைக்காது போல!” என அவர் இரைய, “ப்பா... தெரியாம சுகர் கூடியிருக்கும். அதுக்கு ஏன்பா இவ்வளோ டென்ஷன்... நீங்க போங்க!” என அவரை அனுப்பியவன், தாயின் வாடிய முகம் பொறுக்காது அவரது தோளில் கையைப் போட்டான்.
“தெரியாம சர்க்கரை கூடிப் போச்சுடா ராம்!” கௌதமி வருத்தம் மேவிய குரலில் கூற, “ம்மா... இட்ஸ் நேச்சுரல். எல்லா நேரமும் சரியா இருக்க முடியாது. நீங்க அப்செட் ஆகாதீங்க!” என சில பல நிமிடங்களில் தாயைக் கொஞ்சி இயல்பிற்கு மீட்டப் பின், மருத்துவமனைக்கு கிளம்பினான்.
தேவராஜ் அனைத்து வகையிலும் அவனுக்கு ஒரு முன்மாதிரிதான். ஆனால் தாயிடம் நடந்து கொள்ளும் விதம் மட்டும் அவனுக்கு விருப்பமின்மையைக் கொடுக்கும். முன்பெல்லாம் தொட்டற்தெற்கெல்லாம் கௌதமியை அவலாக மென்று தின்றுவிடுவார் மனிதர். சிறு வயதில் விவரம் தெரியாதிருந்த ரகுவிற்கு ஏன் தந்தை தாயைத் திட்டுகிறார் எனப் புரியவில்லை. வளர வளர அவனுக்கு காரணம் விளங்கிற்று. தேவராஜ் படித்து முடித்து மருத்துவராக இருக்க, தனக்குத் துணையாக வரப் போகும் பெண்ணிடம் ஆயிரம் எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார். ஆனால் விதி, அவற்றையெல்லாம் கௌதமி என்ற பெண்ணின் மூலம் சிதைத்திருந்தது.