இதயம் 9:
பன்னீரை தூவுதே
ஒரு பார்வை...
விண்மீனை தூவுதே
ஒரு பார்வை...
ரிஷியை அங்கு எதிர்பாராத மலரும் ஒரு கணம் திகைத்துத்தான் நின்றுவிட்டாள். ஆனால், அடுத்த நொடியே சுதாரித்தவள், “ரிஷி சார், இது உங்களோட கம்பெனியா எனக்கு தெரியாது சார். உங்க கம்பெனிலயே வேலை இருக்குன்னு தெரிஞ்சிருந்தா, நான் நேரா உங்ககிட்டயே கேட்டு இருப்பேன் சார்,” என்று மகிழ்வுடன் கூற,
“நீ இங்க என்ன பண்ற மலர்? அதுவும் ஸ்வீப்பிங் டியூட்டி யூனிஃபார்ம் போட்டுட்டு?” என்று ரிஷி அதிர்ச்சியைத் தாங்கிய குரலில் வினவினான்.
“நான் இங்க வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகுது சார். நீங்கதான் எனக்கு வேலைக்கு சேர லெட்டர் சைன் பண்ணிக் கொடுத்தீங்க,” என்று மலர் கூற, ரிஷி போன வாரம் தன் கையெழுத்திட்ட பணி நியமன ஆணையை நினைவுகூர்ந்தான்.
அதில் பெயர் கருணைமலர் என்று போடப்பட்டிருந்ததை நினைவுபடுத்தியவன், “ஆஃபர் லெட்டர்ல நேம் கருணைமலர்னு இருந்துச்சே?” என்று சந்தேகத்துடன் வினவினான்.
“ரிஷி சார், என்னோட பேருதான் கருணை மலர். நான் உங்ககிட்ட ஸ்டார்டிங்ல சொன்னேனே! மறந்துட்டீங்களா?” என்று மலர் புரியாமல் கேட்க, ரிஷி அவள் முதல்நாள் பெயர் கூறியதை நினைவுகூர முயற்சித்தான். ஆனால், முடியவில்லை.
அதனை ஒதுக்கித்தள்ளியவன், “நீ எதுக்கு ஸ்வீப்பிங் டியூட்டி பாக்குற?” என்று வினாவைத் தொடுக்க,
“இந்த வேலைக்குத்தானே சார் சேர்ந்திருக்கேன். அப்போ இதைத்தான் பாக்கணும்,” என்று மலர் பதில்மொழிந்தாள்.
“ஸ்வீப்பிங் டியூட்டி படிக்காதவங்களுக்கு. நீதான் டிகிரி கம்ப்ளீட் பண்ணி இருக்கியே?” என்று ரிஷி ஐயத்துடன் கேட்க,
“டிகிரி முடிச்சிட்டேன்தான் சார். ஆனா, எனக்கு வேற எந்த வேலையும் கிடைக்கல. நான் நிறைய இடத்துல கேட்டு பார்த்தேன் சார். அதுக்கப்புறம்தான் கிடைக்கிற வேலைக்கு போகலாம்னு இங்க வந்து சேர்ந்துட்டேன்,” என்று விளக்கம் அளித்தாள்.
“இப்பத்தானே காலேஜ் முடிச்ச? பிப்டீன் டேஸ் தேடிட்டு கிடைக்கலைன்னு ஸ்வீப்பிங் டியூட்டிக்கு வந்துருவியா?” என்று ரிஷி கோபமாக கேட்க,
“இன்னும் ஒரு மாசம் போனாலும் எவனும் எனக்கு வேலை கொடுப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்லை, ரிஷி சார். அதுவும் பதினைஞ்சாயிரம் சம்பளம் ஸ்டார்டிங்லே கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் சார்,” என்று மலர் பதில்மொழிந்தாள்.
“சம்பளம் கொடுத்தா யோசிக்காம ஸ்வீப்பிங் வேலைக்கு வந்திடுவியா? படிப்புக்கேத்த வேலைக்கு போகணும்ன்ற ஐடியா இல்லையா?” என்று ரிஷி விடாது வினா எழுப்ப,
“எல்லாமே வேலைதானே, ரிஷி சார். எனக்கு காசு தேவைப்படுது; அதான் வேலைக்கு வந்தேன். இன்னும் கொஞ்சம் வருஷம் இங்கயே கண்டினியூ பண்ணலாம்னு இருக்கேன்,” என்று அலட்டாது பதில் அளித்தாள்.
“லைஃப்ல டெவலப் ஆகணும்ன்ற ஐடியாவே இல்லையா? இந்த ஸ்வீப்பிங் டியூட்டிலேயே செட்டில் ஆகப் போறியா?” என்று ரிஷி லேசான எரிச்சலுடன் கேட்க,
“ஐயோ சார்! இங்கேயே செட்டில் ஆகுற ஐடியாலாம் இல்ல. இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம்தான் சார். என் தம்பியும் தங்கச்சியும் படிச்சு முடிச்சுட்டாங்கன்னா, எனக்கேத்த மாதிரி ஒரு மளிகைக் கடைக்காரனையோ, கறிக்கடைக்காரனையோ பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிடுவேன்,” என்றவளது பதிலில் அவனுக்கு சலிப்பானது.
சில நிமிடங்கள் சிந்தித்தவன், பின், “மலர், உனக்கு சிஸ்டம் ஒர்க் பார்க்க தெரியுமா?” என்று வினாவைத் தொடுக்க,
“தெரியும் சார். என் காலேஜ்ல CLP கிளாஸ்ல சொல்லிக் கொடுத்திருக்காங்க,” என்று ஆர்வமாக பதில் இயம்பினாள்.
“ஓகே. அப்ப இன்ஷூரன்ஸ் டீம்ல வேக்கன்சி இருக்கு. உன்ன அங்க போடுறேன். நீ ஜாயின் பண்ணிக்கோ,” என்று ரிஷி மொழிய,
“ஐயோ சார்! எனக்கு அந்த வேலையெல்லாம் தெரியாதே,” என்று பதறினாள் மலர்.
“எல்லாரும் எல்லாத்தையும் தெரிஞ்சிட்டு வேலைக்கு வர்றதில்ல, மலர். உனக்கு இங்க சொல்லிக் கொடுப்பாங்க. நீ இன்ஷூரன்ஸ் டீம்ல நாளையிலிருந்து ஜாயின் பண்ற,” என்று ரிஷி கட்டளையிட,
“சரிங்க சார்,” என்று அரை மனதாக தலையசைத்தாள்.
ஆனால், மனதிற்குள் சிறிதான பயம் இருந்தது. தன்னால் அந்த வேலையெல்லாம் செய்ய முடியுமா? அப்படி தனக்கு அந்த வேலை சரியாக வரவில்லை என்றால், வேலையை விட்டு அனுப்பிவிடுவார்களோ என்று வேறு எண்ணம் எழுந்தது.
ரிஷி தனது அலைபேசியில் அலுவலக உதவியாளரை அழைத்து, மலரை காப்பீட்டுக் குழுவில் போடுவதற்கான ஏற்பாட்டை செய்யக் கூறினான்.
மேலும், ஒருவரை அழைத்து மலருக்கு ஒரு மாதம் வேலை கற்றுத்தரக் கூறியிருந்தான். இவற்றையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மலர்.
அவர்கள் இருவரும் அகன்றதும், ரிஷியிடம் மெல்லிய குரலில், “சார்... ஒரு வேலை எனக்கு அந்த வேலை செய்ய வரலைன்னா, வேலையை விட்டு அனுப்பிட மாட்டீங்களே?” என்று கவலை அப்பிய குரலில் வினவிட,
“நீ பஸ்ட் போய் ஜாயின் பண்ணு. உனக்கு வேலை சொல்லித்தர ஆள் இருக்காங்க. அதுக்கு முன்னாடியே இப்படி நெகட்டிவா பேசாத,” என்று அவளது வாயை அடைத்துவிட்டான்.
மேலும் சில நொடிகள் அமைதியாகக் கழிய,
“சார்... ஒரு வாரம் கூட்டி தொடைக்கிற வேலை பார்த்துட்டு, திடீர்னு ஆபீஸ் ஒர்க்ல ஜாயின் பண்ணா, இங்க இருக்கறவங்க எல்லாம் என்ன வித்தியாசமா பார்க்க மாட்டாங்களா? ஏதாவது கேட்டா, நான் என்ன பதில் சொல்றது?” என்று வருத்தம் இழையோடிய குரலில் மொழிய,
“அதெல்லாம் யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க,” என்றவன், “உனக்கு இன்ஷூரன்ஸ் டீம்லதான் வேலை. உனக்கு இந்த வேலை செய்ய பிடிக்கலன்னா, you can leave now,” என்றவன் சலனமின்றி அவளை கண்டான்.
“இல்ல சார்... அப்படியெல்லாம் எதுவும் இல்ல. நான் இந்த வேலையை பார்க்கிறேன்,” என்றவள் முயன்று வருவித்த புன்னகையுடன் கூற,
அவளுடைய பணி நியமன ஆணை வந்தது.
ரிஷி அதனை வாங்கி கையெழுத்திட்டு, பின், “ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் படிச்சு பாத்துட்டு சைன் பண்ணு, மலர்,” என்று அவரிடம் நீட்டினான்.
சுத்தம் செய்யும் வேலைக்கு இதுபோன்ற எந்த விதிமுறைகளும் இல்லை. ஆதலால், எதையும் வாசிக்காமல் கையெழுத்து போட்டுவிட்டாள். ஆனால், இப்போது நிறைய விதிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வாங்கி ஒருமுறை வாசித்தால், பாதிக்குப் பாதி புரியவில்லை.
மலருக்கு பள்ளிக் காலத்தில் இருந்தே ஆங்கிலம் கொஞ்சம் தடுமாற்றம்தான். அதுவும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது நல்ல ஆங்கிலத்தில் இருக்க, மீண்டும் ஒருமுறை வாசித்தாள். இருந்தும் பாதிதான் புரிந்தது.
நிமிர்ந்து அவனைப் பாவமாக நோக்கியவள், “எனக்கு இதுல இருக்கிறது பாதிதான் புரியுது சார்,” என்று கூற,
பெருவிரலால் தனது நெற்றியை கீறியவன், அவளிடம் இருந்த பணி ஆணையை வாங்கி ஓரமாய் வைத்துவிட்டு, தனது நிறுவனத்தின் விதிமுறைகளை விளக்கினான்.
தலையை அசைத்து மிகக் கவனமாய் கேட்டுக்கொண்டவள், “சரிங்க சார், கையெழுத்து போடுறேன்,” என்று அந்தக் கடிதத்தில் கையெழுத்து போட்டவள், அப்போதுதான் அவளது ஊதியத்தை கவனித்தாள்.
மாதம் இருபதாயிரம் சம்பளம் என்று போடப்பட்டிருக்க, “இருபதாயிரமா?” என்று அவளது விழிகள் பெரிதாய் விரிந்துகொண்டது.
“நெஜமாவே இருபதாயிரம் சம்பளம் தருவீங்களா, ரிஷி சார்?” என்று ஆச்சரியக் குரலில் அவனை காண,
அவனது தலை ஆமாம் எனும் விதமாய் அசைந்தது.
அதில் எதிரில் இருந்தவளது முகத்தில் மத்தாப்பாய் புன்னகை பூக்க, “ரொம்ப தாங்க்ஸ் ரிஷி சார். இவ்வளவு சம்பளம் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கலை சார். கண்டிப்பா வேலையை கத்துக்கிட்டு நல்லா செய்றேன் சார்,” என்று ஆர்ப்பரித்தாள்.
ரிஷி, “தட்ஸ் குட்,” என்று முடித்துவிட, மலர் மறுநாள் வந்து பணிக்கு சேர்வதாக முடிவு செய்யப்பட்டது.
மலருக்கு அலுவலக வேலை கிடைத்ததில் அவளது குடும்பத்தினருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவள் துப்புரவு வேலைக்கு செல்வதில் துளியும் உடன்பாடு இல்லாதவர்களுக்கு இந்த விடயம் வெகுவாய் நிம்மதியைத் தந்தது.
மறுநாள் மலர் அலுவலக வேலைக்கு சேர்ந்துகொள்ள, பலர் வித்தியாசமாக பார்த்தாலும் யாரும் எதுவும் நேரடியாக கேட்டுக்கொள்ளவில்லை. மல்லிகாவிற்கு விடயம் தெரிந்ததும் அவளும் மிகவும் சந்தோஷம் அடைந்தாள். படித்த பெண் தன்னுடன் துப்புரவுப் பணிக்கு வருகிறாள் என்று மல்லிகாவிற்கும் மன வருத்தம் இருந்தது.
ரிஷி நியமித்த ஆள் மலருக்கு வேலையை நன்றாக சொல்லித்தர, மலரும் ஆர்வமாய் கற்றுக்கொண்டாள். மிகவும் கடினமான வேலை இல்லை. ஆதலால், அவளால் விரைவில் கற்றுக்கொள்ள முடிந்தது.
அவளது வேலை, அவர்களது நிறுவனத்தில் இருந்து மகிழுந்து வாங்கியவர்களுக்கு வாகனக் காப்பீடு போட்டுத் தருவது. ஏற்கனவே காப்பீடு வைத்திருப்பவர்களது காப்பீடு காலாவதியாகும் நாளுக்கு முன் அவர்களுக்கு நினைவுபடுத்தி, காப்பீட்டை புதுப்பிப்பது. இதுதான். கல்லூரியில் கற்றுக்கொண்ட கணினி அறிவு ஓரளவு இருந்ததால், இந்த வேலையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.
ரிஷியின் வீட்டில் தான் வேலை பார்ப்பதை மல்லிகாவைத் தவிர்த்து வேறு யாரிடமும் அவள் கூறியிருக்கவில்லை. பெரிதான காரணங்கள் ஏதுமில்லை. கூற விருப்பமில்லை; அதனால் அதையெல்லாம் விட்டுவிட்டாள்.
அன்று எப்போதும் போல அலுவலக வேலை முடிந்ததும் வீட்டிற்குச் சென்று உடைமாற்றிவிட்டு, ரிஷியின் வீட்டை அடைந்தவள் அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தாள்.
வழக்கமாய் ஒரு முறை அழுத்தியதும் ரிஷி வந்து கதவைத் திறந்துவிடுவான். இப்போது இரண்டு நிமிடங்கள் ஆகியும் கதவைத் திறக்கவில்லை. ஒருவேளை இன்னும் வரவில்லையோ என்று அவனது மகிழுந்து நிறுத்தத்தை காண, வாகனம் அங்கேதான் நின்றிருந்தது.
“ஏன் கதவைத் திறக்கவில்லை? ஏதாவது வேலையாக இருக்கிறாரா?” என்று எண்ணி மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினாள்.
இப்போதும் ரிஷி வரவில்லை. ஆதலால், அலைபேசியை எடுத்து அவனது எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள். அழைப்பு முழுதாகச் சென்று துண்டிக்கப்பட்ட நேரம், கதவைத் திறந்திருந்தான் ரிஷிகேஷவ்.
மலர் அவனை ஆராய்ச்சியாக நோக்கினாள். காரணம், அவனது கண்கள் இரண்டும் சிவந்திருந்தது; முகமும் சோர்வடைந்திருந்தது.
“என்னாச்சு ரிஷி சார்? உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்று மலர் வினவிட,
“நத்திங்,” என்று பதில் அளித்தவன், அவளுக்கு வழியை விட்டுவிட்டு அறைக்குள் நுழைந்து விட்டான்.
“பாக்க உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கு. ஆனா எதுவும் இல்லன்னு சொல்றாரு,” என்று சிந்தித்தவாறே காபியை தயாரித்தவள், அவனது அறைக் கதவைத் தட்ட,
“டேபிள்ல வச்சுட்டு போ, மலர். எடுத்துக்கிறேன்,” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தான்.
“வேற எதுவும் பிரச்சனையா இருக்குமோ?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள் சமையல் வேலையை கவனித்தாள்.
சமையலை முடித்து, பாலை காய்ச்சி எடுத்து வைத்துவிட்டு, மீண்டும் அவனது அறைக் கதவைத் தட்டி உணவருந்த அழைத்தாள்.
இப்போது கதவைத் திறந்தவனது முகம் அதீத சோர்வை அப்பியிருந்தது. கதவருகே நின்றிருந்தவளுக்கு அவனது உடல் வெம்மை உறைத்திட,
“உங்களுக்கு காய்ச்சலா, ரிஷி சார்? நான் மாத்திரை வாங்கிட்டு வந்து தரவா சார்?” என்று வினவினாள்.
“லைட்டாதான் ஃபீவர். நான் பாத்துக்குறேன், மலர்,” என்று ரிஷி மறுக்க,
“சார், உங்களால நிக்கவே முடியல. லைட்டா ஃபீவர்னு சொல்றீங்க. இந்த ஏரியால ஒரு டாக்டர் இருக்காரு. போன் பண்ணா வீட்டுக்கே வந்து ட்ரீட்மென்ட் பார்ப்பாரு. அவருக்கு கால் பண்ணி வர சொல்லட்டுமா சார்? ஒரு ஊசி போட்டா சரியாயிடும்,” என்று அவனது முகத்தை கேள்வியாக நோக்கினாள்.
சம்மதமாய் தலையசைத்தவன் வெளியே வந்து கூடத்தில் இருந்த நீள்விருக்கையில் சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டான்.
என்னவென்று தெரியவில்லை. திடீரென ரிஷிக்கு காய்ச்சல் வந்திருந்தது. மதியம் போலவே அவனுக்கு தலைவலியும் சோர்வும் வந்துவிட, சரியாகிவிடும் என்று விட்டுவிட்டான்.
இப்போது சிறிது நேரத்திற்கு முன் மலர் கேட்கும்போதும், உறங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தான். ஆனால், நேரமாக நேரமாக உடல் வெப்பநிலை கூடிக்கொண்டிருந்தது. அதனால்தான் இப்போது அவள் கேட்டதும் சரியென்றிருந்தான்.
மருத்துவரிடம் பேசிவிட்டு வந்தவள், “டாக்டர் கிட்ட பேசிட்டேன். பத்து நிமிஷத்துல வந்துடுறேன்னு சொன்னாரு. நான் போய் அதுக்குள்ளே உங்களுக்கு ரசம் வைச்சு சாதம் வடிக்கிறேன் சார். காய்ச்சலுக்கு ரசம்தான் நல்லா இருக்கும்,” என்றவள் அவனது பதிலை எதிர்பாராது சமையலறைக்குச் சென்று சாதத்தை குக்கரில் வைத்து, ரசத்திற்குப் பொடியை அரைக்கத் தொடங்கினாள்.
ரசத்தை வைத்து விட்டு மலர் வெளியே வர, அழைப்பு மணி ஓசை கேட்டது.
“டாக்டர்தான் வந்துட்டார்னு நினைக்கிறேன் சார். நான் போய் பார்க்கிறேன்,” என்று ரிஷியிடம் கூறியவள் கதவைத் திறக்க, மருத்துவர் நின்றிருந்தார்.
சுதாகர் மகனுக்கு மருத்துவம் பார்க்க அடிக்கடி வந்து செல்வதால், மருத்துவருக்கு மலர் நல்ல பரிட்சயம்.
உள்ளே நுழைந்ததும், “என்ன மலர், யாருக்கு ஃபீவர்?” என்று வினவிட,
“இதோ இவருக்குத்தான் சார். சாரோட பேர் ரிஷி. சுதாகரன் அண்ணாவோட ஃப்ரெண்ட்,” என்று அறிமுகம் செய்தவள், “காலையில நல்லாத்தான் இருந்தாங்க. இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி காய்ச்சல் வந்திடுச்சு,” என்று விளக்கினாள்.
ரிஷி விழிகளைத் திறந்து மருத்துவரை வரவேற்கும் விதமாக தலையசைக்க, அவன் அருகே அமர்ந்தவர், “எப்போதுல இருந்து சிம்ப்டம்ஸ் இருக்கு?” என்று கேட்டவாறே அவனை பரிசோதிக்கத் தொடங்கினார்.
ரிஷி மெல்லிய குரலில், “ஆப்டர்நூன்ல இருந்து இருக்கு,” என்று பதிலளிக்க,
“நார்மல் ஃபீவராத்தான் இருக்கணும். டெம்பரேச்சர் கொஞ்சம் ஹையாத்தான் இருக்கு. ஒரு இன்ஜெக்ஷன் போட்டு டேப்லட் கொடுக்கிறேன். டுடேஸ் ஃபாலோ பண்ணுங்க. இன்கேஸ் சரியாகலைனா, ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்து பார்க்கலாம்,” என்றவர் அவனுக்கு ஊசி போட்டுவிட்டு மாத்திரை கொடுத்தார்.
ரிஷி மருத்துவருக்கு கட்டணத்தை கொடுக்க வேண்டும் என்று தனது பர்ஸை எடுத்து வர எழ முயல,
“நான் பணம் கொடுத்துக்கிறேன். என்கிட்ட இருக்கு. நீங்க ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க,” என்று தடுத்துவிட்டு தானே அவருக்கு பணத்தை கொடுத்தாள்.
பிறகு ரசம் சாதத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்து வந்து அவன் முன்னே வைத்தவள், “சாப்பிட்டு மாத்திரை போடணும். சாப்பிடுங்க சார்,” என்று கூற,
ரிஷி அதனை எடுத்து உண்ணத் தொடங்கினான்.
காய்ச்சல் வந்த வாய்க்கு ரசம் நன்றாக இருந்தது.
இதற்குள் மலர், மாத்திரை போடுவதற்கு வெந்நீர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, நீரை சிறிதாக சூடு செய்து ஆற வைத்து எடுத்து வந்தாள்.
உண்டு விட்டு மாத்திரையை விழுங்கிய ரிஷி, “நீ கிளம்பு மலர். நான் பாத்துக்குறேன். வெளி கேட்டை பூட்டிரு,” என்றுவிட்டு அறைக்கு எழுந்து சென்றான்.
உள்ளே சென்று படுத்ததுதான் தெரிந்தது. அடுத்த நொடியே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தான்.
மறுநாள் காலையில் புரண்டு படுத்தவனுக்கு லேசாக விழிப்பு தட்ட, விழிகளைத் திறந்தவன் மீண்டும் மூடிக்கொண்டான். காய்ச்சல் வந்ததால் உடம்பே அடித்துப் போட்டது போல் இருந்தது. ஒருவித சோர்வு இன்னும் உடலில் மீதமிருக்க, சில நிமிடங்கள் புரண்டு படுத்தவன் பின் எழுந்து முகம் கழுவி வந்தான்.
சுவர் கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்க, அது ஏழு என்று காண்பித்தது. நேற்று மருத்துவர் வந்துவிட்டு சென்றது வரைதான் நினைவில் இருந்தது.
சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்த்துவிட்டு, பின் காபி போட்டுக் குடிக்கலாம் என்று அறையில் இருந்து வெளியே வந்தவன், கூடத்தில் படுத்திருந்தவர்களைக் கண்டு திகைத்து நின்றுவிட்டான்.
காரணம், அங்கே கூடத்தின் ஒரு ஓரத்தில் போர்வையை விரித்து மலரும் அவளது தம்பி முரளியும் படுத்து, ஒருவர் மேல் ஒருவர் கையை போட்டபடி உறங்கிக் கொண்டிருந்தனர்.
“இவங்க ரெண்டு பேர் ஏன் இங்க தூங்குறாங்க?” என்று நினைத்தபடி ரிஷி அவர்களை காண, உறக்கமின்றி விழிகளை மூடி படுத்திருந்த மலர், ரிஷியின் அரவத்தில் எழுந்துகொண்டாள்.
“எழுந்துட்டீங்களா, ரிஷி சார்?” என்றபடி தனது கூந்தலை கொண்டையிட்டவள், “உங்களுக்கு நைட் காய்ச்சல் ரொம்ப அதிகமா இருந்துச்சு. அதான் தனியா விட்டுப் போக வேணாம்னு தம்பியை வர சொல்லி இங்கே தங்கிட்டேன் சார்,” என்று விளக்கம் அளிக்க,
ரிஷி அமைதியாய் கேட்டுக்கொண்டான்.
“உங்களுக்கு காபி போட்டு தரவா சார்?” என்று மலர் வினவ,
எதிரில் இருந்தவன் சம்மதமாய் தலையசைத்தான்.
“அஞ்சு நிமிஷத்துல காபியோட வர்றேன் சார்,” என்று நகர்ந்தவள், “கேக்க மறந்துட்டேன்... காய்ச்சல் சரி ஆயிடுச்சா?” என்றபடி அவனருகே வந்து கன்னத்தில் கை வைத்து பார்த்திருந்தாள்.
அவள் கரங்கள் கன்னத்தை தொட்டதும், அதன் குளிர்ச்சியை மின்னலாய் உணர்ந்தவன் திகைத்து சடுதியில் பின்னகர்ந்திட, மலரின் கைகள் அந்தரத்தில் நின்றது.
ரிஷி திகைப்பாய் அவளது கரத்தை
க் காண, அந்தக் கணம்தான் தனது செய்கையினை உணர்ந்திருந்தவள் பட்டென்று கையை இறக்கிவிட்டாள்.
நொடியில் முகம் வெளுத்துவிட,
“அது சார்... அது வந்து...” என்றவளுக்கு பேச வார்த்தை வராது, நா சதி செய்தது.