இதயம் 8:
வழக்கம்போல பணியை முடித்துவிட்டு கிளம்பும் சமயம், “ரிஷி சார்…” என்றவாறு வந்து நின்றாள் மலர்.
தன் முன்னே இருந்த மடிக்கணினியில் விழிகளைப் பதித்திருந்தவன் நிமிர்ந்து எதிரில் இருந்தவளைக் காண, “எனக்கு ஒரு வாரம் லீவு வேணும், சார்…” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“ஒன் வீக்கா?” என்று புருவம் சுருக்கிய ரிஷி அவளை கேள்வியாய் காண, “ஆமா, சார். எனக்கு செமஸ்டர் எக்ஸாம் வருது. காலையில் எட்டு முப்பதுக்கு எக்ஸாம் ஹாலுக்குள்ள இருக்கணும். அதான், சார்…” என்று மெதுவாய் அவனது முகம் கண்டாள்.
“ஓகே, எடுத்துக்கோ…” என்றவன் எளிதாக முடித்துவிட, “காலையில மட்டும் தான், சார், வர முடியாது. நைட் வழக்கம் போல வந்து சமைச்சு வச்சுருவேன்…” என்று மலர் பதில்மொழிந்தாள்.
“நோ நீட். நான் பாத்துக்குறேன்…” என்று ரிஷி மறுக்க, “இல்ல, சார். ஆல்ரெடி எல்லாமே படிச்சு வச்சுட்டேன். நான் வந்து சமைத்து வச்சுட்டு போறேன்…” என்று மலர் இயம்பினாள்.
“வேண்டாம்னு சொன்னேன், மலர்…” என்று ரிஷி அழுத்தமாகக் கூற,
“இல்ல, சார். ஒரு வாரம் லீவு ரொம்ப அதிகம். வாங்குற சம்பளத்துக்கு சரியா வேலை பார்க்கணுமே. மறுக்காதீங்க, ப்ளீஸ்…” என்று கெஞ்சலுடன் அவனை நோக்கினாள்.
ஒரு சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு, ரிஷி சம்மதமாய் தலையசைக்க, இவளது முகத்தில் நிம்மதி படர்ந்தது.
“ரொம்ப தேங்க்ஸ், சார். திங்கள் டு வெள்ளி அஞ்சு நாள் எக்ஸாம், சார். அதுவரைக்கும் காலையில வர முடியாது. சனிக்கிழமையிலிருந்து வழக்கம் போல வர ஆரம்பிச்சிடுவேன், சார்…” என்றவள் அவனிடம் விடைபெற்று கிளம்பினாள்.
தன்னுடைய வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தவளை, ‘இன்னும் பத்து நாட்களில் கல்லூரி முடிந்துவிடும். அடுத்து என்ன செய்யப் போகிறோம்? எங்கு வேலைக்குச் செல்லப் போகிறோம்?’ என்று பலவாறான சிந்தனைகள் ஆக்கிரமித்தன.
மலருக்கு சிறுவயதிலிருந்தே படிப்பின் மீது பெரிதான ஆர்வம் எதுவுமில்லை. அதுவுமின்றி, அவளுக்கு படிப்பு வரவும் இல்லை. முதல் மதிப்பெண் வாங்கும் அளவுக்குப் படிப்பாளி அல்ல. அதற்காக, தேர்வில் தோல்வி பெறுமளவு மந்தமும் இல்லை. தன்னால் முடிந்தளவு படித்து, எல்லா தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுவிடுவாள்.
இப்போது அவளுக்கு பெரிதான சந்தேகம், தன்னுடைய படிப்பை மதித்து தனக்கு யார் வேலை தருவார்கள் என்பது தான். அதுவும், தான் படித்த விலங்கியல் பிரிவுக்கு என்ன வேலை கிடைக்கும்? எங்கு சென்று தேட வேண்டும்? என்று அவளுக்கு பெரிதான அறிவும் இல்லை.
பள்ளி முடித்ததும், பெற்றோரின் விருப்பத்திற்காகத்தான் கல்லூரியில் சேர்ந்தாள். அவளுக்கு சமையலில்தான் ஆர்வம் இருந்தது. தந்தையைப் போல தானும் சமையல் கலையில் சிறந்து விளங்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாள். தந்தை இருந்தபோது, பேருக்கு ஒரு படிப்பைப் படித்துவிட்டு அவரோடே பணிக்குச் செல்லலாம் என்றுதான் விலங்கியல் பிரிவைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.
ஆனால், இப்போது சூழ்நிலை அப்படி இல்லையே! என்ன செய்வது? பேசாமல் ரிஷியிடம் உதவி கேட்கலாமா? என்று தன் போக்கில் சிந்தித்தவாறு வீட்டை அடைந்தாள்.
ரிஷியின் குடும்பத்தினர் வந்து சென்று கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் கடந்து இருந்தது. மறுநாள் பூஜையில், ராதாவும் தூரிகாவும் சேர்ந்து மலரை எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வாங்கிக் கொண்டனர். மலரும், ‘ஒரு நாள் தானே…’ என்று அவர்கள் கூறிய வேலை அனைத்தையும் சிறு சுணக்கமின்றி செய்து முடித்திருந்தாள். அதுவும் ரிஷி உடன் இருந்ததால், அவர்கள் பெரிதாக எதுவும் மலரைக் காயப்படுத்தவில்லை.
அதுவுமின்றி, அந்த பூஜை ரிஷியின் திருமணம் விரைவில் நடக்க வேண்டுமென்று செய்யப்பட்டிருக்க, மலரும் ரிஷிக்காக வேண்டிக் கொண்டு, தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தாள்.
அவர்கள் கிளம்பியதும்தான் மலருக்கு நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. அதன் பின்னர் நாட்கள் வழக்கம் போல நகர, இவளது இறுதி வருடத் தேர்வும் வந்திருந்தது.
வீட்டிற்குச் சென்றதும் முகம், கை, கால் கழுவியவள், உண்டுவிட்டு படிக்க அமர்ந்தாள். ஏற்கனவே கல்லூரியில் ஓரளவு படித்து முடித்திருந்ததால், மலருக்கு இப்போது சிரமம் ஏதுமில்லை.
ஐந்து நாட்களுக்கு மீன் வியாபாரத்தை மணியைப் பார்த்துக்கொள்ளக் கூறியிருந்தாள். ஏற்கனவே ஒருமுறை மீன் வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டு தேர்விற்குச் சென்றவள், இரவும் படித்துவிட்டு தாமதமாக உறங்கியிருந்தாள். அதன் விளைவு, தேர்வை எழுதவே முடியவில்லை. தூக்கம் விழிகளைச் சுழற்றியது. அதனால்தான் இப்போது இந்த முடிவு.
மறுநாள் காலை ஆறு மணிக்கு எழுந்தவள், ஒரு மணி நேரம் படித்து முடித்துவிட்டு தேர்விற்குப் புறப்பட்டுச் சென்றாள். தேர்வு முடிந்ததும் வீட்டிற்கு மதியம் போல வந்தவள், சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் படிக்கத் துவங்கியவள், சரியாக ஆறு முப்பது மணிக்கு ரிஷியின் வீட்டிற்குக் கிளம்பினாள்.
மனதிற்குள், 'காலை உணவிற்கு சார் என்ன செஞ்சாரோ? வெளியில வாங்கினாரா? இல்ல, வீட்டிலேயே சமைச்சு சாப்பிட்டாரா?' என்று சிந்தித்தவாறே சென்றவள், ரிஷிக்கு மாலை வணக்கம் தெரிவித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.
காலையில் சமையல் செய்ததற்கான அறிகுறியாக, பாத்திரங்கள் எல்லாம் கழுவி கவிழ்த்துப் பட்டிருந்தது.
'சாரே சமைச்சு சாப்பிட்டு இருக்காரு போல. சம்பளத்தை வாங்கிட்டு இப்படி அவரையே வேலை பார்க்க விடுறோமே! அவர் வீட்டில சமையல் கட்டு பக்கம் எட்டிக்கூட பார்த்திருக்க மாட்டாரு. ராதா மேடம்க்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா, அவ்வளவுதான் என்னோட கதி…' என்று மனதிற்குள் புலம்பியவள், அவனுக்குக் காபியைத் தயாரித்துக் கொடுத்துவிட்டு சமையலைச் செய்யத் துவங்கினாள்.
மளமளவென அனைத்து வேலையும் செய்து முடித்தவள், ரிஷியை உணவுண்ண அழைக்க, அவன் பத்து நிமிடங்கள் கழித்து வருவதாகக் கூறினான். சமையலறையில் இருந்த ஒரு சிறிய முக்காலியை எடுத்துப் போட்டவள், அமர்ந்து புத்தகத்தை எடுத்துப் படிக்கத் துவங்கினாள்.
ரிஷி பதினைந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்ததும் கண்டது, சமையலறையின் ஓரத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த மலரைத்தான்.
ரிஷியைக் கண்டதும் மலர் எழுந்துகொள்ள,
“குக் பண்ணி முடிச்சிட்டல்ல. நீ கிளம்பு, மலர். நான் பாத்துக்குறேன்…” என்று அவள் மறுக்க முடியாத குரலில் ரிஷி கூற, “சரிங்க, சார்…” என்று தலையசைத்தவள், தனது பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.
ஐந்து நாட்களும் நல்லபடியாகக் கூடிய மலர், கல்லூரியில் இறுதித் தேர்வை முடித்திருந்தாள். இனி கல்லூரிக்குச் சான்றிதழ்களை வாங்க மட்டும்தான் போக வேண்டும்.
கடந்த மாதமே ஒரு சில இடங்களில் வேலைக்குக் கேட்டிருந்தாள். அருகிலிருந்த பல்பொருள் அங்காடியில் கூட பில் போடுவதற்கான வேலையைக் கேட்டிருந்தாள். அவர்கள் அழைப்பதாகக் கூறி அலைபேசி எண்ணை வாங்கியிருந்தார்கள். ஆனால் யாரும் அழைக்கவில்லை.
அதோ இதோவென்று பதினைந்து நாட்கள் கழிந்திட, மலர் வேலை கேட்டு சென்ற எந்த இடத்திலிருந்தும் அவளுக்கு அழைப்பு வரவில்லை. பலவாறாகச் சிந்தித்து, பெரிய இடங்களில் வேலைக்குச் செல்ல தனக்குத் தகுதி இல்லை. தனக்கு வரும் வேலையைச் செய்யலாம் என்று முடிவு செய்தவள், தங்கள் தெருவில் உள்ளவர்கள், தெரிந்தவர்கள் என அனைவரிடமும் வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்பட்டால் கூறுமாறு சொல்லியிருந்தாள்.
அன்று ரிஷி வீட்டில் எப்போதும் போல தன்னுடைய வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க, அவளது தெருவில் வசிக்கும் தேவியிடமிருந்து அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க, தேவியக்கா…” என்று மொழிய,
“மலரு, ஒரு வீட்ல சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் ஆள் கேட்டிருக்காங்க…” என்று மறுமுனையில் இருந்து பதில் வந்தது.
“அப்படியாக்கா? எந்த ஏரியால வேலை?” என்று மலர் வினவ,
“நீ வேலை பாக்குற இடம் பக்கத்துலதான், மலரு. அந்தத் தெருவுலேயே கடைசி வீடு…” என்று தேவி பதில்மொழிந்தார்.
“ஐயோ! அந்த வீடா?” என்று மலர் மெலிதாய் அலறினாள்.
இது கூடத்தில் அமர்ந்திருந்த ரிஷியின் செவியை அடைந்துவிட, திரும்பி அவளைப் பார்த்தான்.
“சாரி, சார்…” என்று அவனிடம் விழிசுருக்கிக் கூறியவள், அலைபேசியில் மெதுவான குரலில்,
“அந்த வீடு வேண்டாம்க்கா. ஏற்கனவே தேனக்கா அங்கதான் வேலை பார்த்தாங்க. அந்த வீட்டம்மா ரொம்ப நொச்சுன்னு சொல்லி இருக்காங்க. அதுவும் இல்லாம, தினமும் வீட்டைப் பெருக்கி தொடைக்கணுமாம். நான் ஏற்கனவே ஒரு வீட்டுல வேலை பார்த்துட்டு இருக்கேன். இங்கேயும் பெருக்கி துடைச்சிட்டு, அங்கேயும் துடைச்சா என் முதுகு உடைஞ்சு போயிடும், க்கா. வேற ஏதாவது நல்ல வேலை இருந்தா சொல்லுங்க, க்கா…” என்று மலர் மொழிந்தாள்.
“இப்போதைக்கு அந்த வீட்ல மட்டும்தான் ஆள் கேக்குறாங்க, மலர். வேற எங்கேயும் ஆள் தேவைப்படல…” என்று தேவி பதில் கூற,
“வேற ஏதாவது கம்பெனில கூட்டிப் பெருக்கிற வேலை, சுத்தம் பண்ற வேலை எதுவும் கிடைக்காதா, க்கா?” என்று மலர் வினவினாள்.
“ஒரு கம்பெனியில கூட்டிப் பெருக்கி, கழுவிவிடுற வேலைக்கு ஆள் கேட்டு இருக்காங்க, மலரு. ஆனா, நீ காலேஜ் எல்லாம் போய் படிச்சிட்டு வந்து இருக்க. அந்த வேலையை எப்படி பார்ப்ப?” என்று தேவி தயங்க, “அக்கா, நான் காலேஜ் எல்லாம் சும்மா பேருக்குத்தான் போய் படிச்சிட்டு வந்தேன். சம்பளம் கொடுத்தா எந்த வேலைன்னாலும் பார்ப்பேன், அக்கா. அந்த வேலைக்கு என்னை சேர்த்து விடுக்கா. ப்ளீஸ், க்கா…” என்று மலர் வேண்டினாள்.
“ஒன்னுக்கு ரெண்டு தடவை யோசிச்சு சொல்லு, மலர்…” என்று தேவி கூற, “இதுல யோசிக்க எதுவுமே இல்ல, க்கா. இன்னும் நாலு மாசத்துல முரளி ஸ்கூல் முடிச்சிடுவான். அவன காலேஜ்ல சேர்க்க காசு வேணும், க்கா. அதுவும் அவன் இன்ஜினியரிங் படிக்க ஆசைப்படுறான். கவர்மெண்ட் காலேஜ்ல கிடைச்சா ஓகே. இல்ல, பிரைவேட்ல கிடைச்சா கண்டிப்பா ஒரு லட்சம் கிட்ட கட்ட வேண்டியது வரும், க்கா. அதான் இப்ப இருந்தே காசு சேர்த்து வைக்கணும்னு வேலை தேடுறேன்…” என்று மலர் தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
“அதான் கடன் எல்லாம் அடைச்சிட்டேன்னு சொன்னியே, மலரு. மீன் வியாபாரத்திலிருந்து காசு பெருசா வர்றது இல்லையா?” என்று தேவி கேள்வி தொடுக்க, “அதுல ஓரளவுக்கு வருமானம் வருதுதான், க்கா. இருந்தாலும் லட்சக்கணக்குல கட்டணும்னா, கொஞ்சம் முன்னாடியே சேர்த்து வைக்கணும்ல்ல. அவ்வளவு பெரிய அமௌன்டை கடனா கொடுக்கக்கூட நமக்கு யாரும் இல்லை…” என்று மலர் விளக்கினாள்.
“அதுவும் சரிதான், மலரு. நம்மள நம்பி அவ்வளவு காசு எல்லாம் யார் கொடுப்பா? நம்மளே சேர்த்து வச்சாத்தான் உண்டு…” என்றவள், “சரி, நான் என் நாத்தனார் கிட்ட பேசிட்டு சொல்றேன். அவங்கதான் அந்த கம்பெனியில வேலை பாக்குறாங்க. என்கிட்ட வந்து கேட்டாங்க. பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வீட்ல வேற வேலை பார்க்கணும்ல, எனக்கு ஒத்து வராதுன்னு சொல்லிட்டேன். நான் பேசிட்டு உன் கிட்ட சொல்றேன், மலர்…” என்று தேவி அழைப்பைத் துண்டித்தார்.
தேவியிடம் பேசிய பிறகு மலருக்கு புதிதான நம்பிக்கை பிறந்தது. கண்டிப்பாக தனக்கு இந்த வேலை கிடைத்துவிடும் என்று நம்பினாள். அப்படி கிடைத்துவிட்டால், இன்னும் நான்கு மாதத்தில் முரளிக்குக் கல்லூரியில் கட்ட வேண்டிய கட்டணத்தை சேர்த்து வைத்துவிடலாம் என்று மனதிற்குள் கணக்குப் போட்டாள்.
மலர் எதிர்பார்த்தது போலவே அன்று இரவே தேவியிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. மறுநாள் தனது நாத்தனாருடன் அவள் வேலை பார்க்கும் நிறுவனத்திற்குச் சென்று நேரில் பேசக் கூறினாள். அங்கு காலிப் பணியிடம் உள்ளது, நிச்சயமாக மலரை எடுத்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கையாகக் கூற, மலருக்கு பதினைந்து நாட்களாய் அவளை அரித்துக்கொண்டிருந்த கவலை நீங்கியது.
மறுநாள் ரிஷியின் வீட்டில் வேலையை முடித்துவிட்டு, தேவியின் நாத்தனார் மல்லிகாவுடன் அவள் பணிபுரியும் நிறுவனத்திற்குச் சென்றாள். அந்த நிறுவனமும் அண்ணா நகரின் பிரதான சாலையில்தான் இருந்தது.
தன் முன்னே உயர்ந்து நின்ற கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தவள், “மல்லியக்கா, இந்த பில்டிங் என்ன இவ்ளோ பெருசா இருக்கு?” என்று ஆச்சரியமாய் கேட்டாள்.
“உள்ள போய்ப் பார்த்தா இன்னும் பெருசா இருக்கும், மலரே. இது ஒரு கார் விக்கிற கம்பெனி. இங்க நிறைய பேர் வேலை பாக்குறாங்க. கிட்டத்தட்ட முந்நூறு பேர் இருப்பாங்க, வேலை பாக்குறவங்க மட்டும்…” என்று மல்லிகா கூற,
“அவ்வளவு பேர் வேலை பார்ப்பாங்களா, க்கா?” என்று ஆச்சரியமாய் மலர் பதில் வினவினாள்.
“ஆமா, மலரு. மூணு ப்ளோர் இருக்கு. அதைக் கூட்டிப் பெருக்கி துடைக்கிறதுதான் நம்ம வேலை. காலையில் பத்து மணிக்கு வந்தா, சாயந்திரம் ஆறு மணிக்கு கரெக்டா விட்ருவாங்க. நான் வீட்டு வேலை எல்லாம் விட்டுட்டு இங்க வந்ததுக்கு காரணம் இந்த டைமிங், அப்புறம் சம்பளம்தான். பதினைஞ்சாயிரம் சம்பளம் தராங்க, மலரே. நம்ம ரெண்டு வீட்ல வேலை பார்த்தா கூட இவ்வளவு சம்பளம் கிடைக்காது…” என்று மல்லிகா கூற, “அவ்வளவு சம்பளம் தருவாங்களா, க்கா?” என்று மலர் வியப்பு நீங்காது வினா தொடுத்தாள்.
“கொடுப்பாங்க, மலரு. ஓனர் சாரு ரொம்ப நல்லவரு. அவர் பேரு ஆர்.கே. அவருக்கு இது மாதிரி இன்னும் நாலஞ்சு கம்பெனி இருக்காம். அதெல்லாம் அவங்க வீட்ல இருக்க மத்தவங்க பாத்துக்கிறாங்க போல. இதை இவர் பாத்துக்குறாரு. இந்த ஜி.எம்., மேனேஜர் கூட அப்பப்ப சிடுசிடுன்னு பேசுவானுங்க. ஆனா, ஆர்.கே. சார் ஒரு தடவை கூட எங்ககிட்ட கோவமா பேசினதில்லை. அவ்வளவு நல்ல மனுஷன்…” என்று மல்லிகா முதலாளியைப் புகழ்ந்து கூற,
“அப்போ கண்டிப்பா எனக்கு இங்க வேலை கிடைச்சிரும்ல, க்கா?” என்று மலர் நம்பிக்கையுடன் கேட்டாள்.
“நிச்சயமா கிடைக்கும், மலரே. ஹெச்.ஆர். போன வாரமே என்கிட்ட சொல்லி வச்சாங்க, ஒரு ஆள் வேணும்னு. நானும் நேத்தே அவங்க கிட்ட பேசிட்டேன். அவங்க கூட்டிட்டு வர சொன்னதுனாலதான் உன்னை அழைச்சிட்டு போறேன்…” என்றவள், மலருடன் உள்ளே நுழைந்தாள்.
நுழைந்ததும் குளிர்காற்று சிலுசிலுவென மேனியைத் தழுவிச் செல்ல, “வெயிலுக்கு நல்ல குளுகுளுன்னு இருக்கு, க்கா…” என்று மலர் அந்த நிறுவனத்தை விழிகளால் அளந்தபடி கூறினாள்.
மல்லிகா அங்கிருந்த வரவேற்பாளியிடம் மலர் வந்த காரணத்தைக் கூறி, அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.
“மலரு, நீ இங்கேயே உட்கார்ந்திரு. நான் போய் ஹெச்.ஆர். மேடம் கிட்ட பேசிட்டு வரேன்…” என்று மல்லிகா அவளுக்கு ஒரு நாற்காலியைக் காண்பித்துவிட்டு அகன்றாள்.
'இந்த வேலை நல்ல வேலையா இருக்கும் போல. கடவுளே, எனக்கு கண்டிப்பா கிடைக்கணும்…' என்று மனதிற்குள் வேண்டியபடி மலர் அமர்ந்திருக்க, “மலரு, உன்னை ஹெச்.ஆர். பார்க்கணும்னு சொன்னாங்க. வா…” என்று அழைத்துப் போனாள் மல்லிகா.
உள்ளே நுழைந்ததும் மலர் எதிரில் இருந்த பெண்மணியிடம், “வணக்கம், மேடம்…” என்று மரியாதை நிமித்தமாகக் கூற, எதிரில் இருந்தவர் புன்னகையுடன் மலரை அமரக் கூறினார்.
பின் அவளிடம் வழக்கமாகக் கேட்பது போல, அவளைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் விசாரித்துவிட்டு, அவளுக்கு வேலை கிடைத்துவிட்டதை உறுதி செய்தார்.
அதனை அவர் கூறியதும்தான் மலரின் முகத்தில் அளவில்லா மகிழ்ச்சி மலர்ந்தது.
'இப்போதைக்கு ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்தது…' என ஆசுவாசம் பிறந்தது. அவரிடம் நன்றி கூறி வெளியே வந்தவள், மல்லிகாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“ரொம்ப நன்றி, மல்லிக்கா. நீங்க மட்டும் உதவி செயலைனா இந்த வேலை எனக்கு கிடைச்சிருக்காது…” என்று மனமுவந்து நன்றி கூற,
“அட, இதுல என்ன இருக்கு, மலரே? வேலைக்கு ஆள் கேட்டாங்க. நான் கூட்டிட்டு வந்தேன். அவ்வளவுதான். சரி வா, உனக்கு யூனிபார்ம் வாங்கித் தரேன்…” என்று மல்லிகா மலரை அழைத்துச் சென்றாள்.
மலருக்கு அவளது அளவிற்கு ஏற்றது போல சீருடை வழங்கப்பட, அதனைப் பெற்றுக்கொண்டதும் பணி நியமன ஆணையும் வந்தது. அதில் கையெழுத்து இட்டவள், “நாளைக்கு காலையில வந்து வேலையில சேர்ந்துக்கிறேன்…” என்று கூறி வீடு வந்து சேர்ந்தாள்.
மலருக்கு வேலை கிடைத்ததில் வீட்டில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், படித்து முடித்த பிறகும் அவள் சுத்தம் செய்யும் வேலைக்குச் செல்வதில் சிறிதளவும் உடன்பாடு இல்லை.
ஆனால் மலர்தான், “இப்போதைக்கு வேலை கிடைத்ததே பெரிய விஷயம். வேற ஏதாவது நல்ல வேலை கிடைத்தால் இதை விட்டுவிட்டு மாறிக்கொள்ளலாம்…” என்று அவர்களை சமாளித்து வைத்தாள்.
அடுத்த நாளிலிருந்து அந்த நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்லத் துவங்கினாள் மலர். காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரைதான் வேலை என்பதால், அவளுக்கு நேரம் மிகவும் வசதியாக இருந்தது. இது ஓரளவிற்கு கல்லூரி நேரத்திற்கு ஒத்துப்போவதால், முன்புபோலவே வாழ்க்கை அமைதியாகச் சென்றது.
மலர் பணிக்குச் சேர்ந்து அன்றோடு ஒரு வாரம் முடிந்திருந்தது. காலை வந்ததும் மல்லிகாவுடன் சுத்தம் செய்யும் வேலையைச் செய்யத் துவங்கினாள். அப்போது அங்கு மேற்பார்வை செய்பவர் வந்து, மலரிடம் முதலாளியின் அறையை சுத்தம் செய்துவிட்டு வரக் கூற, சரியென தலையசைத்தவள் அவரது அறையை நோக்கிச் சென்றாள்.
வெளியே நின்று, “உள்ள வரலாமா, சார்?” என்று மலர் அனுமதி வேண்ட, சில கோப்புகளை கையில் வைத்துக்கொண்டு புரட்டிக்கொண்டிருந்த ரிஷி நிமிர்ந்தான்.
தன்னிடம் அனுமதி வேண்டிய குரல் மிகவும் பரிச்சயமாக உள்ளதை உணர்ந்தவன், “எஸ்... கம் இன்...” என்று அனுமதி வழங்கினான்.
அடுத்த கணம், கையில் துடைப்பம் மற்றும் வாளியுடன் உள்ளே நுழைந்தாள் மலர்.
தன்னறையி
ல் மலரைக் கண்டதும் ரிஷி திகைத்துப் பார்க்க, அதுவும் அவளது கையில் இருந்த துடைப்பமும், அவள் அணிந்திருந்த சீருடையும் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.