- Messages
- 1,343
- Reaction score
- 4,062
- Points
- 113
இதயம் 5:
“அக்கா, அனாடமி புக் வாங்க காசு வேணும்,” என்று சாகித்யா வந்து கேட்க,
“எவ்வளவு வேணும், சாகி?” என்று வினவியவள், துப்பட்டாவை எடுத்து இருபுறமும் குத்திக் கொண்டிருந்தாள்.
“ஆறாயிரத்து ஐநூறு வேணும், க்கா,” என்று சாகி பதிலளிக்க,
“அவ்வளவா? ஒரு புக் விலை அவ்வளவு இருக்குமா?” என்று இன்று மலர் ஆச்சரியமாகக் கேட்டாள்.
“ஆமாக்கா. பதினஞ்சாயிரம், இருபதாயிரம் கூட இருக்கு. ஃபாரின் ஆத்தர் புக் எல்லாம் இன்னும் கூட ரேட் வரும்,” என்று சாகித்யா பதில் கூற,
“அவ்வளவுக்கு வருமா? எப்ப வேணும்?” என்று வினவியவள் கேட்டாள்.
“நாளைக்கு வேணும், க்கா,” என்றவள் பதில்மொழிய,
“மலர், இப்போ அவ்வளவு காசு கையில இல்லையேடி. இந்த வாரக் கடைசியில் ஒரு கல்யாண பிளவுஸ் கொடுக்கணும் டி. அவங்க மொத்தமா எனக்கு நாலாயிரம் கொடுப்பாங்க. ஒரு நாலு நாள் வெயிட் பண்ணா நானே வாங்கித் தரேன்,” என்று மாதவி பதில் அளித்தார்.
“எனக்கு நாளைக்கு கண்டிப்பா புக்கு வேணும்மா. எல்லாரும் புக் வெச்சிருப்பாங்க. நான் மட்டும் படிக்க புக் இல்லாம இருக்க முடியாது,” என்று சாகித்யா தனது நிலையை கூற,
“நான் ஈவினிங்குக்குள்ள அரேஞ்ச் பண்ணித் தரேன்,” என்று மலர் பதில் அளித்தாள்.
“யாருக்கிட்ட கேட்ப?” என்று மாதவி வினவ,
“நான் வேலைக்கு சேர்ந்திருக்க சார் கிட்ட அட்வான்ஸ் கேட்டு பார்க்கிறேன்,” என்று பதில்மொழிந்தாள்.
“வேலைக்கு சேர்ந்து பதினைஞ்சு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள அட்வான்ஸ் கேட்டா குடுப்பாங்களாடி?” என்று மாதவி சந்தேகமாகக் கேட்க,
“அதெல்லாம் கொடுப்பாங்கம்மா. கேட்டு பாக்குறேன். சார் நல்லவர்தான்,” என்று பதில் இயம்பியவள், இரண்டு டப்பாக்களில் உணவை அடைத்துக் கொண்டு ரிஷியின் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமானாள்.
“கேட்டுப் பாரு, மலரு. இல்லன்னா நான் பக்கத்துல எங்கயாவது கைமாத்தா வாங்குறேன்,” என்று மாதவி பதிலளிக்க,
“சரி மா, நான் போயிட்டு வரேன்,” என்றவள் பணிக்குக் கிளம்பினாள்.
வழக்கம்போல அனைத்து வேலைகளையும் முடித்தவள், ரிஷியிடம் கூறிவிட்டு அவன் சாப்பிட வருவதற்காகக் காத்திருந்தாள்.
ரிஷியும் அலுவலகம் செல்லத் தயாராகி வந்தவன், அமர்ந்து உண்ணத் தொடங்கினான்.
இங்கு சமையலறையில் அனைத்தையும் ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த மலர், அவனிடம் எப்படி பணம் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
தாயிடம் ஒரு வேகத்தில் கூறிவிட்டாலும், பணிக்குச் சேர்ந்த பதினைந்து நாளில் முன்பணம் கேட்டால் யாரும் கொடுக்க மாட்டார்களே என்று வேறு சிந்தனை எழுந்தது.
வேறு யாரிடமாவது கேட்க முடியுமா என்று யோசித்துப் பார்க்க, எந்த வழியும் இருப்பதாகத் தெரியவில்லை.
அந்த மாதம் மீன் விற்று வந்த பணத்தை, இரண்டு நாட்களுக்கு முன்புதான் தந்தை சிகிச்சைக்காக வாங்கிய கடனுக்கான வட்டியையும் அசலையும் கொடுத்திருந்தாள்.
மாதாமாதம் வட்டியோடு சேர்த்து கொஞ்சம் அசலையும் கட்டுவதால் ஓரளவு கடன் முடிந்திருந்தது. இல்லையென்றால் அவளது கையில் பணம் இருந்திருக்கும்.
கொடுப்பாரா, இல்லையா என்று யோசிப்பதைவிட கேட்டுப் பார்த்துவிடலாம். கொடுத்தால் நல்லது; இல்லை என்றால் வீட்டு அருகில் உள்ள யாரிடமாவது கடனாக வாங்கிக் கொள்ளலாம் என்றெண்ணியவள், அவன் உண்டு முடிப்பதற்காகக் காத்திருந்தாள்.
ரிஷி சாப்பிட்டு எழுந்து கொள்ள, அவன் சாப்பிட்ட தட்டு மற்றும் மற்ற பாத்திரங்களைக் கழுவி வைத்தவள், கூடத்தில் அமர்ந்திருந்தவனது எதிரில் போய் நின்றாள்.
அலைபேசியில் கவனமாக இருந்தவன், தன் அருகே நிழலாட நிமிர்ந்து அவளை, “என்ன?” என்பதாய் கண்டான்.
“சார், எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது. சம்பளத்தில இருந்து அட்வான்ஸ் கொடுக்கறீங்களா?” என்று தயக்கம் இழையோடிய குரலில் கேட்க,
“எவ்வளவு வேணும்?” என்று கேட்டிருந்தான் ரிஷி.
எந்த கேள்வியும் கேட்காமல் அவன் பணம் கொடுப்பதாய் கூறிவிட, இவளது முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
“ஆறாயிரத்து ஐநூறு வேணும், சார்,” என்றவளது குரலில் ஆனந்தம் வழிந்தோட, பணத்தை எடுத்து வர அறைக்குச் சென்றான் ரிஷி.
“பரவாயில்லையே! சார் ரொம்ப நல்ல மனுஷனா இருக்காரு. வேற யாரா இருந்தாலும், ‘எதுக்கு? என்னன்னு?’ கேள்வி கேட்டிருப்பாங்க. ஆனா, ரிஷி சார் எதுவுமே கேட்காம உடனே காசு தரேன்னு சொல்லிட்டாரு. தங்கமான மனுஷன் பா!” என்று மனதிற்குள் அவனைப் பாராட்டியவாறு நிற்க, அழைப்புமணி அடிக்கும் ஓசை கேட்டது.
“இந்த நேரத்துல யாரு? சாரைப் பார்க்க யாரும் வந்து இருப்பாங்களோ?” என்று எண்ணியவாறு கதவைத் திறக்க, வெளியே தபால்காரன் நின்றிருந்தார்.
மலரைக் கண்டதும், “இது ரிஷிகேஷவ் வீடுதானே?” என்று அவர் வினவ,
“இல்லையேண்ணா,” என்று பதில்மொழிந்தாள்.
“இந்த அட்ரஸ்தான் போட்டு இருக்கு,” என்று தபால்காரர் கூற,
“நல்லா பாருங்கண்ணா. இந்த வீட்ல இருக்கவர் பேர் கண்ணன். அட்ரஸ் ஏதும் மாத்தி போட்டு இருக்கப் போறாங்க,” என்று பதில் அளித்தாள்.
“நீயே அட்ரஸ் பாரும்மா,” என்று தபால்காரர் அந்தக் கடிதத்தைக் கையில் கொடுக்க, வாங்கிப் படித்தவள்,
“ஆமாண்ணா, இந்த அட்ரஸ்தான். ஆனா, நீங்க சொல்ற மாதிரி யாரும் இங்க இல்லையே. பக்கத்து வீட்ல ஏதாவது கேட்டுப் பாருங்கண்ணா,” என்று பதில் இயம்பினாள்.
“சரி மா,” என்றவர் அங்கிருந்து நகர,
ரிஷி, கையில் பணத்தோடு அறையிலிருந்து வெளியே வந்தவன், மலர் யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததைக் கண்டுவிட்டு,
“யாரு?” என்று வினவினான்.
“அது போஸ்ட்மேன், சார். யாரோ ரிஷிகேஷவ்ன்ற பேர்ல லெட்டர் வந்திருக்கு. நம்ம வீட்டு அட்ரஸ்தான் போட்டு இருக்குன்னு வந்து கேட்டாரு, சார். நான் தான் அப்படி யாரும் இல்ல, அட்ரஸ் மாறி வந்துட்டீங்க. பக்கத்துல விசாரிங்கன்னு சொல்லி அனுப்பிட்டேன்,” என்று மலர் கூற,
“வாட்?” என்று திகைத்தவனின் முகத்தில் அதிர்ச்சி பரவியது.
அவனது அதிர்வைக் கண்டு, “என்னாச்சு, சார்?” என்று மலர் வினா எழுப்ப,
ரிஷி அவளைக் கடந்து சென்று பக்கத்து வீட்டை நோக்கிச் சென்ற போஸ்ட்மேனை அழைத்தான்.
அவர் அருகில் வந்ததும், “நான்தான் ரிஷிகேஷவ். லெட்டரைக் கொடுங்க,” என்று கேட்க,
இப்போது திகைப்பது மலரின் முறையானது.
“இந்த பொண்ணுதான் ரிஷிகேஷவ்ன்ற பேர்ல இங்கே யாரும் இல்லைன்னு சொல்லிடுச்சு,” என்று தபால்காரர் ஐயத்துடன் வினவ,
“அவங்க தெரியாம சொல்லிட்டாங்க,” என்றவன் தனது கடிதத்திற்காக கையை நீட்டினான்.
தபால்காரர் அவனிடம் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு கடிதத்தைக் கொடுத்துவிட்டு செல்ல,
“சார், அப்போ உங்க பேரு கண்ணன் இல்லையா, சார்? ராதா மேடம் அப்படித்தானே கூப்பிட்டாங்க?” என்று மலர் தனது ஆகப்பெரும் சந்தேகத்தைக் கேட்டாள்.
ரிஷி அவளது கேள்விக்குப் பதில் அளிக்காது, கையில் இருந்த பணத்தைக் கொடுக்க விழைய,
“ரொம்ப நன்றி, சார்,” என்று பெற்றுக் கொண்டவள்,
“ராதா மேடம் உங்களை கூப்பிடுறதைப் பார்த்து உங்க பேரு கண்ணன்னு நினைச்சிட்டேன், சார். ஆனா, அப்பவே தோணுச்சு, உங்களுக்கு கண்ணன்ன்ற பேரு பொருத்தமாவே இல்லைன்னு. ரிஷிகேஷவ்ன்ற பேருதான் நல்ல பொருத்தமா இருக்கு,” என்று மொழிந்தாள்.
“நான்தான் ரிஷிகேஷவ். இனி ரிஷின்ற நேம்ல லெட்டர், பார்சல் ஏதாவது வந்தா கரெக்ட்டா வாங்கி வைக்கணும்,” என்று அவளது பேச்சை ஒதுக்கிவிட்டு ரிஷி கூற,
“சரிங்க, சார்,” என்று கேட்டுக்கொண்டாள்.
பிறகு ரிஷி அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கும் வேலையில் இறங்கிவிட, மலர் மீதம் இருந்த உணவைத் தான் கொண்டு வந்திருந்த டப்பாவில் எடுத்துக் கொண்டவள், “போயிட்டு வரேன், ரிஷி சார்,” என்று அவனிடம் கூறிவிட்டு வெளியேறினாள்.
தெருவைக் கடந்து கல்லூரி செல்லும் பேருந்து நிறுத்தத்தை அடைந்தவள், “ஆளுதான் அழகா இருக்காருன்னு பார்த்தா, பேரு கூட அழகா இருக்கே! ரிஷிகேஷவ்... அவருக்குனே கண்டுபிடிச்ச மாதிரி இருக்கே,” என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டவள், தனது அலைபேசியில் ‘கண்ணன் சார்’ என்று இருந்த பெயரை ‘ரிஷி கண்ணன் சார்’ என்று மாற்றினாள்.
சில நிமிடங்களில் கல்லூரிப் பேருந்து வந்துவிட, அதில் ஏறிச் சென்றாள்.
அதன் பிறகு நாட்கள் காற்றில் பறந்த பட்டம் போல வேகமாகச் செல்ல, மலர் ரிஷியிடம் பணிக்குச் சேர்ந்து நான்கைந்து மாதங்கள் கடந்திருந்தது.
அன்று மலர் படிக்கும் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்ததால், அவள் கல்லூரியில் இருந்து கிளம்ப மணி ஏழாகியிருந்தது.
முதல் நாளே ரிஷியிடம், “நாளை நான் வர தாமதமாகும்,” என்று கூறிவிட்டதால், பதட்டமின்றி வெளியே வந்தவள் பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.
பிறகு தாய்க்கு அழைத்து, தான் நேரடியாக ரிஷியின் வீட்டிற்குச் சென்று வேலையை முடித்துவிட்டு எட்டரை மணி போல வருவதாகக் கூறியவள், சாளரத்தின் வழியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.
பத்து நிமிடத்தில் அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கி நடக்கத் தொடங்கினாள். ஏழு மணிக்கு மேல் ஆனதால் சற்று இருட்டத் தொடங்கியிருந்தது.
“போய் சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்குப் போய்ப் படுக்கணும். டயர்டா இருக்குப்பா,” என்று மனதிற்குள் நினைத்தவாறு சாலையைக் கடக்க முயற்சிக்க, அவளது காதில் விழுந்தது ஒரு முனங்கல் சத்தம்.
சத்தம் வந்த திசையை நோக்க, இருட்டில் எதுவும் தெரியவில்லை. தனது அலைபேசியில் விளக்கை ஒளிரவிட்டவள், சத்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்றாள்.
அங்கே ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி தலையில் காயத்துடன் விழுந்து கிடந்தாள்.
அதனைக் கண்டு பதறியவள், “ஐயோ அம்மா! என்னாச்சு உங்களுக்கு?” என்றவாறு அவரைத் தன் மடியில் கிடத்தி கன்னத்தில் தட்டினாள். அவர் பாதி சுயநினைவின்றி கிடந்தார்.
மலரிடம் ஏதோ கூற முயற்சித்தார். ஆனால், அவளுக்கு எதுவும் புரியவில்லை. தனது பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அவருக்குப் பருகக் கொடுத்தவள், அருகில் இருந்த மரத்தின் மீது சாய்ந்து அமர வைத்துவிட்டு, ஓடி வந்து ஏதாவது வாகனம் கிடைக்குமா என்று சாலையை அவதானிக்கத் தொடங்கினாள்.
அவளது நேரம், அப்போது எந்த வாகனமும் அத்திசையில் வரவில்லை. ஐந்து நிமிடங்கள் கழித்து ஒரு மகிழுந்து வர, தைரியமாக அதன் முன்னே சென்று கையைக் காண்பித்து மறித்து நிறுத்திவிட்டாள்.
வாகனம் நின்றதும் அதன் அருகில் ஓடியவள், “சார்... சார்... ப்ளீஸ், உதவி பண்ணுங்க,” என்று பதட்டத்தில் சாளரத்தின் கண்ணாடியில் தட்டினாள்.
அடுத்த நொடி கண்ணாடி இறக்கப்பட, உள்ளே அமர்ந்திருந்தான் ரிஷிகேஷவ்.
அவனைக் கண்டதும் மலரின் முகத்தில் இருந்த பதட்டம் வடிந்துவிட, “ரிஷி சார், நீங்கதானா? ஒரு அம்மா தலையில அடிபட்டு பாதி மயக்கத்தில் கிடக்கிறாங்க. ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக உதவி பண்றீங்களா?” என்று கேட்டாள்.
“என்னாச்சு?” என்றபடி ரிஷி கீழிறங்கி வர,
“தெரியல, சார். நான் ரோடு கிராஸ் பண்ணும் போது யாரோ முனங்குற சத்தம் கேட்டுச்சு. பக்கத்துல போய் பார்த்தா ஒரு அம்மா தலையில காயத்தோட கிடந்தாங்க. நீங்க கார் கதவைத் திறந்து வைங்க, சார். நான் போய் அவங்கள அழைச்சிட்டு வரேன்,” என்றவள், அவனது பதிலை எதிர்பாராமல் அரைமயக்கத்தில் இருந்தவரை தோளில் கை போட்டபடி அழைத்து வந்து மகிழுந்தின் பின் இருக்கையில் சாய்ந்து அமர வைத்தாள்.
ரிஷி மகிழுந்தை இயக்கியதும்,
“சார், இந்த ரோட்ல ஸ்ட்ரெயிட்டா போனீங்கன்னா பர்ஸ்ட் லெப்ட்ல ஒரு கிளினிக் இருக்கு. அங்க போங்க, சார்,” என்று வழி கூறினாள்.
பத்து நிமிடத்தில் அவர்களது வாகனம் மருத்துவமனையை அடைய, ரிஷியின் உதவியை எதிர்பாராது மலர் அவரைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றாள்.
ரிஷி மகிழுந்தை நிறுத்திவிட்டு அவளுடன் உள்ளே செல்ல விழைய, அவனது அலைபேசி இசைத்தது. அவன் அதனை எடுத்துப் பேசிவிட்டு வர, மலர் அந்தப் பெண்மணியை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் சென்றிருந்தாள்.
ரிஷி பேசிவிட்டு உள்ளே செல்ல, அந்தப் பெண்மணியை சிகிச்சைக்காக அனுப்பிவிட்டு வெளியே காத்திருந்தவள், ரிஷியைக் கண்டதும், “ரொம்ப தேங்க்ஸ், ரிஷி சார். சரியான நேரத்துல உதவி செஞ்சு இருக்கீங்க,” என்று அவனுக்கு நன்றியை நவின்றாள்.
அவளது நன்றியைத் தலையசைத்து ஏற்றுக் கொண்டவன், “டாக்டர் என்ன சொன்னாங்க? பெரிய அடியா?” என்று வினவினான்.
“அடி பலமா படல. ஆனா ரத்தம் நிறைய போயிருச்சு. ரத்தம் ஏத்தணும்னு சொன்னாங்க, சார்,” என்று மலர் கூறிக் கொண்டிருக்க,
“நீங்க தானே பிளட் டொனேட் பண்ணப் போறீங்க? வாங்க, உங்க ப்ளட்டை டெஸ்ட் பண்ணனும்,” என்று செவிலியர் வந்து மலரிடம் கூறினாள்.
“ரெண்டு நிமிஷத்துல வரேன், சிஸ்டர்,” என்று அவரிடம் கூறி அனுப்பியவள், “இனி நான் பாத்துக்குறேன். நீங்க கிளம்புங்க, ரிஷி சார். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் லீவ் தரீங்களா? நான் இங்க இருந்து கிளம்ப டைம் ஆகிடும்,” என்று கேட்டாள்.
“சரி,” எனத் தலையசைத்து அங்கிருந்து அகன்றான்.
மலர் ரத்தப் பரிசோதனைக் கூடத்தை நோக்கிச் செல்ல, “ரிசப்ஷன்ல போய் இந்த அமௌன்ட் பே பண்ணிட்டு வாங்க,” என்று ஒரு செவிலியர் வந்து கூறினாள்.
மலர் அதனைக் கையில் வாங்கிப் பார்க்க, ஐயாயிரம் என்று போடப்பட்டிருந்தது.
“அஞ்சாயிரமா? என்கிட்ட இப்ப அவ்வளவு இல்லையே!” என்று அதிர்ந்தவள், சடுதியில் வாயிலை நோக்கி வேக நடையில் சென்றாள்.
ரிஷி தனது மகிழுந்தை அடைந்து அதனைத் திறக்க முயல, “ரிஷி சார்... ரிஷி சார்...” என்று கூவியபடி சென்றவள், அவன் கவனிக்காததில் முழங்கையைப் பற்றி தன் புறம் திருப்பியிருந்தாள்.
அவளது செயலில் திரும்பியவன் தனது கையைப் பார்த்துவிட்டு அவளை நோக்க, அவசரத்தில் அதனைக் கவனிக்காதவள், “அஞ்சாயிரம் பணம் கட்ட சொல்றாங்க, ரிஷி சார். என்கிட்ட இப்போ அவ்வளவு பணம் இல்ல, சார். நீங்க கொடுத்தீங்கன்னா நாளைக்கு திருப்பி கொடுத்துவிடுவேன், சார்,” என்று உதவி வேண்டி அவனை கண்டாள்.
ரிஷி தனது பர்ஸை எடுத்து ஐந்தாயிரம் ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டியவன், “போதுமா? இல்லை எக்ஸ்ட்ரா மணி தரவா?” என்று வினவினான்.
“போதும், சார். ரொம்ப நன்றி, சார். நாளைக்கு காலையில வரும் போது கொண்டு வந்து கொடுத்திட்றேன், சார்,” என்று மனமார அவனுக்கு நன்றி உரைத்தவள் வேகமாக மருத்துவமனையில் நுழைந்தாள்.
இங்கு மலர் அந்தப் பெண்மணிக்கு சிகிச்சை முடிந்ததும் அவரிடம் கேட்டு அவரது வீட்டு ஆட்களுக்கு அழைத்து விடயத்தைக் கூறி, அவர்கள் வந்த பிறகுதான் வீட்டிற்குச் சென்றாள்.
இடையில் மாதவியிடமிருந்து அழைப்பு வர, அவருக்கு விவரத்தைக் கூற, அவர் முரளியை துணைக்கு அனுப்புவதாகக் கூறினார்.
“வேண்டாம். நான் பார்த்துக்கொள்வேன்,” என்று கூறி மறுத்துவிட்டவள், அந்தப் பெண்மணியின் உறவினர் வந்ததும் அங்கிருந்து கிளம்பினாள். மலர் வீட்டை அடைய கிட்டத்தட்ட பத்து மணி ஆகி இருந்தது.
மலரைக் கண்டதும், “இப்போ அவங்களுக்கு எப்படி இருக்கும், மலரு?” என்று மாதவி வினவ,
“நல்லா இருக்காங்கம்மா. கண்ணு முழிச்சு நல்லா தெளிவா பேசுனாங்க. டாக்டரும் ஒன்னும் பயப்படுற மாதிரி இல்லைன்னு சொல்லிட்டாங்க,” என்றவள் குளித்து உடைமாற்றி வந்து சாப்பாடு சாப்பிட்டதும் உறங்கிவிட்டாள்.
மறுநாள் காலையில் ரிஷியின் வீட்டிற்குச் சென்றவள், முதல் வேலையாக பணத்தை அவனது மேஜை மீது வைத்தவள், “இந்தாங்க, ரிஷி சார். உங்க பணம். ரொம்ப ரொம்ப நன்றி, ரிஷி சார். நீங்க சரியான நேரத்துல உதவி பண்ணினால்தான் அவங்க இப்போ நல்லா இருக்காங்க. அந்த அம்மாவும் கண் முழிச்சதும் உங்களுக்கு நன்றி சொல்லச் சொன்னாங்க,” என்று கூற,
பணத்தையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தவன், “நான் செஞ்ச உதவிய திரும்பி வாங்குறது இல்ல, மலர்,” என்று கூறினான்.
ஒரு நொடி அவனது பதிலில் திகைத்தவள், “சார், நான் திருப்பி கொடுத்துட்றேன்னு சொல்லித்தானே உங்ககிட்ட வாங்கினேன்,” என்று அவனது முகம் நோக்க,
“நான் கடனா இதைக் கொடுக்கல, மலர்,” என்று அவன் பதில் உரைத்தான்.
“சார், இது என்னோட பணம் இல்லையே. அந்த அம்மாவோட பொண்ணு நேத்து ஹாஸ்பிடலுக்கு வந்ததும், ‘எவ்வளவு பில்லு?’ன்னு கேட்டு என்கிட்ட கொடுத்துட்டாங்க, சார். அதுதான் உங்ககிட்ட கொடுக்க எடுத்துட்டு வந்தேன்,” என்று மலர் விளக்கம் கொடுக்க,
“யாரோடதா இருந்தாலும், நான் செஞ்ச உதவிய திருப்பி வாங்க மாட்டேன். டேக் தட் மணி,” என்று முடித்துவிட்டான்.
ஒரு நொடி அவனது பதிலில் திகைத்தவள், “ஆனா சார், இது எனக்கு சொந்தமானது இல்லையே. இதை நான் என்ன செய்றது?” என்று மலர் புரியாது வினவ,
“தட்ஸ் நன் ஆப் மை பிஸ்னஸ்,” என்று ரிஷி கூறிவிட்டு அறைக்குள் எழுந்து சென்றுவிட்டான்.
“இவர் என்ன இப்படி சொல்லிட்டு போறாரு?” என்று யோசனையுடன் அந்தப் பணத்தை எடுத்து தனது பையில் வைத்தவள் வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.
ரிஷி அலுவலகத்தில் தனது கணினியில் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனது அலைபேசியில் செய்தி வந்ததற்கான ஒலி கேட்டது.
எடுத்துப் பார்க்க, மலரிடமிருந்து புலனத்தில் ஏதோ செய்தி வந்திருந்தது.
அதனைத் திறந்து பார்த்தான்.
மலர் ஒரு புகைப்படத்தை அனுப்பியிருந்தாள். அதில் குழந்தைகள் வரிசையாக அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர்.
அந்தப் புகைப்படத்திற்குக் கீழே, “சார், உங்க பணத்தை இந்த இல்லத்து பசங்களுக்கு சாப்பாடு செலவுக்கு குடுத்துட்டேன். இந்த புண்ணியம் எல்லாம் உங்களுக்குத்தான், சார், சேரும்,” என்று செய்தி அனுப்பியிருந்தாள்.
அதனை ஒரு கணம் பார்த்துவிட்டு பதில் எதுவும் அனுப்பாதவன் தனது பணியை கவனித்தான்.
மலர் மாலை வழக்கம் போல வேலைக்கு வந்தவள், அவனிடம் மதியம் அனுப்பிய புகைப்படத்தைப் பற்றி எதுவும் பேசிக்கொள்ளாது சமையலை கவனித்தாள்.
அவன் உண்டு முடித்ததும், வழக்கமாக செய்வது போல பாலில் பசுமஞ்சளும் பனங்கற்கண்டும் போட்டு காய்ச்சியவள், குவளையில் ஊற்றி வைத்துவிட்டு கிளம்புவதற்கு ஆயத்தமானாள்.
ரிஷியிடம் கூறிவிட்டு செல்வதற்காக அவனது அறைக் கதவைத் தட்டிவிட்டு வெளியே நிற்க, கதவைத் திறந்து வெளியே வந்தவனது கையில் ஒரு பை இருந்தது.
“நான் கிளம்புறேன், ரிஷி சார்,” என்று இயம்ப,
“மலர், இதுல என்னோட டிரஸ் ஒன்னு இருக்கு. இதுவரைக்கும் ஒரு டைம் தான் போட்டு இருக்கேன். இப்போ எனக்கு இது பிடிக்கலை. யாருக்காச்சும் தேவைப்பட்டா கொடுத்துட்றியா?” என்று வினவினான்.
“ஹ்ம்ம்... குடுங்க, சார். எங்க ஏரியால நிறைய பேர் உங்களோட ஹைட் இருப்பாங்க. அவங்ககிட்ட கொடுத்துடறேன்,” என்று அவன் கொடுத்த உடையைப் பெற்றுக் கொண்டவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
மலர் வீட்டிற்குள் நுழைந்ததும், அவளது கையில் இருந்த பையை கவனித்த வித்யா, “அக்கா, அது என்ன பேக்?” என்று வினவ,
“இதுல ஒரு டிரஸ் இருக்கு, வித்யா. ரிஷி சார் கொடுத்தாரு. அவருக்கு இந்த டிரஸ் புடிக்கலையாம். ஒரு தடவைதான் போட்டு இருக்காராம். யாருக்காவது தெரிஞ்சவங்ககிட்ட குடுத்துட்றன்னு சொல்லி தந்தாரு,” என்று பதிலளித்தாள்.
“அப்படியா?” என்றவள் அந்தப் பையைத் திறந்து உடையை எடுத்துப் பார்த்தாள்.
“டிரஸ் பார்க்க புதுசு மாதிரியே இருக்குக்கா,” என்று வித்யா கூற,
அந்த உடையைப் பார்த்த முரளி, “அக்கா, இந்த டிரஸ் சூப்பரா இருக்கு. நானே எடுத்துக்குறேன்,” என்று கூறினான்.
முகம் கழுவிவிட்டு துடைத்தவாறு வெளியே வந்தவள், “அது உனக்கு ரொம்ப பெருசா இருக்கும்டா. வேற யாருக்கும் கொடுத்துடுவோம்,” என்று கூற,
“நான் வளர்ந்த பின்னாடி போட்டுக்குறேன், க்கா,” என்றவன் கண்ணாடியில் அதனை தன் மேல் வைத்து பார்த்தான்.
“ஆமாக்கா, டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு. அண்ணாவே வச்சுக்கட்டும்,” என்று வித்யாவும் மொழிய,
“சரிடா, நீயே வச்சுக்கோ,” என்றவா
று அருகில் வந்து அந்த உடையைத் தொட்டுப் பார்த்தவளது முகம் சடுதியில் மாறியிருந்தது.
“அக்கா, இந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்கும்ல?” என்று முரளி வினவ,
“ஹ்ம்ம்... நல்லா இருக்குடா,” என்று நொடியில் தன்னைச் சமாளித்து பதில் அளித்தவள் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.