- Messages
- 1,340
- Reaction score
- 4,054
- Points
- 113
இதயம் 4
"என்ன மலர், ரொம்ப நாளா ஆளையே பார்க்க முடியல?" என்று அந்த பல்பொருள் அங்காடியின் பணியாளர் கேட்க,
"முன்னாடி வேலை பார்த்துட்டு இருந்த வீட்டுல குடும்பத்தோட வெளிநாட்டுக்கு போய்ட்டாங்கக்கா. அதான் வரல. இப்ப புதுசா ஒரு வீட்ல வேலைக்கு சேர்ந்திருக்கேன். அவங்களுக்குத்தான் காய்கறி வாங்கிட்டு போக வந்தேன், க்கா," என்று பதிலளித்தவள், தேவையான காய்கறிகளை எடுத்து கூடையில் போடத் தொடங்கினாள்.
"ஓ... அதே ஏரியாதானா, மலரு?" என்று எதிரில் இருந்தவள் கேட்க,
"அதே வீடுதான், க்கா. புதுசா ஒரு சாரு அந்த வீட்டை வாங்கிட்டு வந்திருக்காரு. அவருக்கு சமைச்சு, வீட்டை சுத்தம் பண்ற வேலைக்கு சேர்ந்திருக்கேன், க்கா," என்று பதில்மொழிந்தவள் நகர எத்தனித்தாள்.
"எனக்குத் தெரிஞ்ச ஒரு அக்காவுக்கு வேலை வேணும், மலர். பெருசா படிக்கல. அவங்க வீட்டு வேலை பார்ப்பாங்க. ஏதாவது வீட்ல ஆள் வேணும்னு கேட்டா சொல்றியா?" என்று வினவ,
"சொல்றேன்க்கா. தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி வைக்கிறேன்," என்று கூறியவள், அவரிடமிருந்து விடைபெற்று வந்து பணம் செலுத்த நின்றாள்.
ஏற்கனவே ஐந்து பேர் வரிசையில் நின்றிருக்க, வேடிக்கை பார்த்தபடி இருந்தவள், தனது முறை வந்ததும் பணத்தைக் கொடுத்து பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்தாள்.
இன்று சனிக்கிழமை. மலருக்கு கல்லூரி விடுமுறை ஆதலால், பொறுமையாக வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்ற எண்ணத்தில் இருந்தாள்.
மலர் ரிஷியின் வீட்டில் வேலைக்கு சேர்ந்து இன்றோடு ஒரு வாரம் ஆகியிருந்தது. கூடையில் இருந்த பால் பாக்கெட்டையும் செய்தித்தாளையும் எடுத்துக்கொண்டு அழைப்பு மணியை அழுத்தினாள்.
ரிஷி வந்து கதவைத் திறந்ததும், வழக்கம் போல, "குட் மார்னிங், சார்," என்று புன்னகை தவழும் முகத்துடன் கூறியவள், செய்தித்தாளை அவனிடம் நீட்டினாள். அதைப் பெற்றுக்கொண்டவன் நீள்விருக்கையில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினான்.
விழிகள் செய்தித்தாளில் இருந்தாலும், சிந்தனை வேறு எங்கோ இருந்தது. காரணம், அவனது கடந்த பிறந்தநாளன்று தாய் பரிசளித்த மோதிரத்தை எங்கோ தவறவிட்டிருந்தான்.
நேற்று அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போது கையில் பார்த்த ஞாபகம் இருந்தது. ஆனால், இரவு உறங்கச் செல்லும்போது காணவில்லை.
வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இரவு காணொளி அழைப்பில் பேசிய ராதா, மோதிரம் இல்லாததைக் கண்டு கேட்க, கழற்றி வைத்துள்ளதாகக் கூறிவிட்டான்.
'தொலைந்து விட்டது' என்று தெரிந்தால் தாய் மிகவும் வருந்துவார் என்று எண்ணியே அவ்வாறு கூறினான்.
மகனது பிறந்தநாளுக்கு ராதா பார்த்துப் பார்த்து வாங்கிய மோதிரம் அது. அதுவும் வெள்ளை தங்கம். விலை கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரும். எங்கு தவறவிட்டோம் என்று நன்றாக யோசித்துப் பார்த்துவிட்டான். நினைவிற்கு வரவில்லை.
மலரிடம் கேட்கலாமா என்று யோசனை தோன்றியது. ஆனால், அவளை சந்தேகப்பட்ட மாதிரி ஆகிவிடுமோ என்றும் சிந்தனை எழுந்தது.
தான் அவளிடம் கேட்டால், அவள் வருந்துவாளோ என்றும் யோசனை பிறந்தது. காரணம், அவள் வேலைக்கு சேரும் நாள் தாயிடம் பேசியதை அவனும் அறைக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்தான்.
அதைக் கேட்டதில், மலருக்கு தன்மானம் அதிகம் என்று அவனுக்குத் தோன்றியது. சுதாகர் வேறு மலரைப் பற்றி மிகவும் நல்ல விதமாகக் கூறியிருக்க, கேட்கலாமா, வேண்டாமா என்று இரு மனதாக யோசித்துக் கொண்டிருந்தான்.
அம்மாவுக்குத் தெரிந்தால், நிச்சயமாக மலரைத்தான் அழைத்து விசாரிப்பார். அதற்குள் தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று எண்ணித்தான் தேடினான். இருந்தும் மோதிரம் கையில் அகப்படவில்லை.
ஏற்கனவே அவனது வீட்டில் இதுபோல ஒரு நிகழ்வு நடந்தது. தங்கையின் தங்கக் கழுத்தணி தொலைந்து போயிருக்க, ராதா பணியாளர்களை அழைத்துத்தான் விசாரித்தார். அதுவும் மிகவும் கண்டிப்பான முறையில் விசாரித்தார்.
ஏன், காவல்துறையில் தெரிவிப்பதாகக்கூட மிரட்டியிருந்தார். ஆனால், அந்தக் கழுத்தணி தங்கையின் அறையில்தான் விழுந்து கிடந்தது.
தாய் விசாரித்த முறையில் பணிபுரிபவர்கள் மிகவும் வருந்தியதை நேரில் கண்டிருந்தவன், இப்போது மலரிடம் கேட்க மிகவும் சிந்தித்தான்.
அவளிடம் கேட்ட பிறகு, எங்காவது மோதிரம் கிடைத்துவிட்டால், தவறு செய்யாதவரை சந்தேகப்பட்டது போல் ஆகிவிடுமே என்று எண்ணி செய்தித்தாளைப் பார்த்துக் கொண்டிருக்க, "சார்..." என்று அழைத்தபடி வந்து சத்துமாவு கஞ்சியை அவன் முன் வைத்தாள் மலர்.
பிறகு நகராமல், அவனது மேஜையின் மேல் ஒரு பத்து ரூபாய் தாளும், ஒரு ஐந்து ரூபாய் நாணயமும் வைக்க, ரிஷி நிமிர்ந்து அவற்றை நோக்கினான்.
"காய்கறி வாங்க நீங்க கொடுத்த காசுல மீதி காசு, சார். ஐநூறு கொடுத்தீங்க. நானூத்தி எண்பத்தி அஞ்சு ஆயிடுச்சு. மீதி பதினைஞ்சு ரூபா, சார். பில்லும் இதுல இருக்கு. செக் பண்ணிக்கோங்க," என்றவள் பில்லையும் அவனது மேஜை மீது வைக்க, அந்தச் சில்லறையையும் அவளையும் ஒரு முறை மாறி மாறிப் பார்த்தவன் அமைதியாகத் தலையசைத்தான்.
மலர் அகன்ற கணம், அவளிடம் மோதிரத்தைப் பற்றி கேட்கும் முடிவைக் கைவிட்டிருந்தவன் எழுந்து குளிக்கச் செல்ல, "சார்..." என்ற மலரது அழைப்பு அவனை நிறுத்தியது.
அறையின் வாயிலிலேயே திரும்பி, "என்ன?" என்பதாய் அவளை காண,
"நான் எப்பவும் பாட்டு கேட்டுக்கிட்டு வேலை செஞ்சா சீக்கிரம் செஞ்சு முடிச்சிடுவேன். என் போன்ல பாட்டு போட்டுக்கலாமா, சார்?" என்று அவனது முகத்தைக் கண்டாள்.
"வால்யூம் கொஞ்சமா வச்சு போட்டுக்கோ," என்றவன் மொழிய,
"தேங்க்ஸ், சார்," என்று மலரின் முகம் எங்கும் புன்னகை பளிச்சிட்டது.
சமையலறைக்குள் வந்து தனது அலைபேசியில் விருப்பப் பாடல் ஒன்றை குறைந்த சத்தத்தில் ஓடவிட்டவள், அதனோடு தானும் மெல்லிய குரலில் பாடியபடி சமைக்கத் தொடங்கினாள்.
ரிஷி ராதாவிடம் உணவைப் பற்றித் தான் பேசிக்கொள்வதாகக் கூறிவிட்ட பிறகு, மறுநாள் காலை உணவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று ரிஷியிடம்தான் வந்து நின்றாள்.
"நீயே ஏதாவது செய்து கொள். தினமும் என்னிடம் கேட்காதே," என்று ரிஷி கூறிவிட, அவனுக்குப் பிடித்த உணவுகளில் ஒன்றைச் செய்து வைக்கத் தொடங்கினாள்.
பாடலைப் பாடிக்கொண்டே காலைச் சமையலை முடித்தவள், வீட்டைச் சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கினாள். பேண்ட் பாக்கெட்டில் அலைபேசியை வைத்துக்கொண்டு, பாடலுக்கு ஹம் செய்தபடி பெருக்கிவிட்டு, மாப்பை எடுத்து துடைத்தபடி இருந்தாள்.
ரிஷி குளித்துவிட்டு வெளியே வர, துடைக்கும் வேலையை நிறுத்திவிட்டு, "சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா, சார்?" என்று வினா தொடுத்தாள்.
அவன் அனுமதித்ததும், சமைத்த உணவுகளை மேஜையின் மீது எடுத்து வைத்தவள், மீண்டும் வந்து விட்ட வேலையைத் தொடர்ந்தாள்.
அனைத்து வேலையும் முடித்துவிட்டவள், ரிஷி உண்டு முடித்ததும் மீதி இருந்த உணவை, அவன் தனக்குக் கொடுத்த டிபனில் எடுத்துக் கொண்டாள்.
எப்போதும் உணவு உண்ணும் நேரத்தைவிட சற்று தாமதமாகி இருக்க, அவளுக்குப் பசித்தது. மீதம் இருந்த உணவை இங்கே உண்டுவிட்டு வேலையைப் பார்க்கலாமா என்று சிந்தித்தவள், அந்த எண்ணத்தைக் கைவிட்டு வெளியே வந்தாள்.
சுதாகர் வீட்டில் வேலை செய்யும்போது, அவனுடைய மனைவியுடன் சேர்ந்து உணவு உண்ணும் பழக்கம் இருந்தது. அவர்களுடன் மலரின் பழக்கம் அத்தகைய நெருக்கமானது. ஆனால், ரிஷியிடம் அவ்வாறு இல்லையே.
ரிஷி கூடத்தில் அமர்ந்து தனது மடிக்கணினியில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருக்க, "சார், டைம் ஆச்சு. நான் போய் சாப்பிட்டு வந்து மதிய சமையலைப் பார்க்கவா, சார்?" என்று வினா எழுப்ப,
ரிஷி தலையசைத்து அனுமதி கொடுத்தான்.
வாசல் வரை சென்றவள் திரும்பி வந்து, "சார், நீங்க வாரத்துல ரெண்டு, மூணு நாள் நான்வெஜ் சாப்பிடுவீங்கன்னு ராதா மேடம் சொன்னாங்க. நான் வரும்போது சிக்கன், மட்டன் ஏதாவது எடுத்துட்டு வரவா, சார்?" என்று கேட்க,
"சரி," என்றவன் தனது பர்ஸிலிருந்து இரண்டு ஆயிரம் ரூபாய் தாளை எடுத்து மேஜை மீது வைத்தான்.
"ஆயிரம் ரூபாய் போதும், சார்," என்று ஒரு தாளை மட்டும் எடுத்துக்கொண்டவள் வீட்டிற்குச் சென்று உண்டுவிட்டு சிறிது ஓய்வெடுத்தாள்.
இன்று விடுமுறை என்பதால், ரிஷியின் வீட்டில் இருந்த அனைவரும் காணொளி அழைப்பில் வர, அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தான்.
"ராதா, வெளிநாட்டில் இருக்கும் போதுதான் வீடியோ காலில் பேசிட்டு இருந்தேன். இப்ப இந்தியாவுக்கு வந்தும் வீட்டுல இருக்காம மதுரையில போய் உட்கார்ந்து இருக்க," என்று சலித்துக்கொள்ள,
"நம்ம பிசினஸ் பார்க்கத்தான், ராதா, போயிருக்கான். அங்க எல்லாம் ஓரளவுக்கு சரியானதும் திரும்பி வந்துடுவான்," என்று அண்ணாமலை மனைவிக்குச் சமாதானம் கூறினார்.
ரிஷியும் தன் பங்கிற்குத் தாய்க்குச் சமாதானம் கூற, அப்போதும் அவனது கையில் மோதிரம் இல்லாததைக் கண்ட ராதா,
"என்ன கண்ணா, இன்னும் ரிங் போடாம இருக்க? எப்பயும் கழட்டி வைக்க மாட்டியே?" என்று வினவினார்.
மீண்டும் தாயிடம் பொய் கூற மனம் இல்லாதவன், என்றாவது கூறித்தான் ஆக வேண்டும் என்று எண்ணி,
"மாம்... அந்த ரிங் எங்கேயோ மிஸ் ஆயிடுச்சு," என்று மொழிய,
"என்ன? மிஸ் ஆயிடுச்சா?" என்று அதிர்ந்தார் ராதா.
"ஆமா, மாம்," என்று ரிஷி மீண்டும் கூற,
"எங்க மிஸ் ஆச்சு, கண்ணா? ஆபீஸ்லயா? அங்க சிசிடிவி இருக்குமே! செக் பண்ண வேண்டியதுதானே?" என்று கேள்வி கேட்டார்.
"ஆபீஸ்ல மிஸ் ஆகி இருக்க சான்ஸ் இல்லம்மா. நேத்து ஈவினிங் ஆபீஸ்ல இருந்து கிளம்பும்போது கையில இருந்துச்சு, மாம்," என்று ரிஷி கூற,
"அப்போ வீட்ல தொலைஞ்சிடுச்சா, கண்ணா?" என்று பதில் வினவினார்.
"ஐ திங்க் சோ," என்று ரிஷி கூற,
"தேடிப் பார்த்தியா?" என்று ராதா வினா எழுப்பினார்.
"எஸ், மாம். பட் கிடைக்கல," என்று ரிஷி இயம்ப,
"அது எப்படி கிடைக்காம போகும்? வீட்டுல மிஸ் ஆகி இருந்தா அங்கதானே எங்கேயோ இருக்கணும்," என்று ராதா சிந்தித்தார்.
"நானும் அப்படி நினைச்சுத்தான் தேடினேன், மாம். பட் எங்கயுமே இல்ல," என்ற ரிஷி சொல்ல,
"மலர்கிட்ட கேட்டியா நீ?" என்று ராதா கேட்டார்.
தாய் இதுபோல கேட்கக்கூடும் என்று ஏற்கனவே எதிர்பார்த்திருந்தவன்,
"இல்லை, மாம்," என்று பதிலளித்தான்.
"ஏன் கேட்கல? எங்க தேடியும் கிடைக்கலைன்னா, நீ அவகிட்டதானே கேட்டிருக்கணும்? நேத்து ஈவினிங் அவ வேலைக்கு வந்தாளா?" என்று ராதா வினவ,
"வந்தா, மாம்," என்று பதில் இயம்பினான்.
"அப்போ அவதான் எடுத்து இருக்கணும், கண்ணா," என்று உறுதியாக ராதா கூற,
"மாம்..." என்றவன் தாயை அதிர்ந்து பார்த்தான்.
"என்ன கண்ணா, ஷாக் ஆகுற? எங்கயும் கிடைக்கலன்னா கண்டிப்பா அவதான் எடுத்து இருக்கணும். இதுல என்ன சந்தேகம்? தினமும் எவ்வளவு நியூஸ் பார்க்கிறோம்!" என்று ராதா மகனிடம் கூற,
"மாம், அவ எடுத்திருக்க வாய்ப்பு இல்ல. அவளைப் பார்த்தா அப்படி தெரியல," என்று தாய்க்கு விளக்கம் அளித்தான்.
"ஆள பார்த்தா இப்படித்தான் அப்பாவியா தெரிவாங்க, கண்ணா. ஆனா செய்ற வேலை அப்படி இருக்காது. அந்த ரிங்கோட விலை என்ன? அஞ்சு, பத்தா? அதோட ரேட் கிட்டத்தட்ட ஒரு லட்சம், கண்ணா. அவ எடுத்து இருந்தா சும்மா விடக்கூடாது. கம்ப்ளைன்ட் பண்ணணும்," என்று ராதா பொரிய,
"அம்மா, எதுவும் தெரியாம ஏன் இப்படி பேசுறீங்க?" என்று மறுத்தான் ரிஷி.
"பத்தாயிரம் சம்பளம் வாங்குறவளுக்கு ஒரு லட்சம் மோதிரத்தை பார்த்தா ஆசை வரத்தான் செய்யும், கண்ணா. அது வீட்ல எங்க கிடந்திருந்தாலும் அவளுக்கு எடுத்துக் கொடுக்க மனசு வந்து இருக்காது. எல்லாம் இந்த சுதாகரைச் சொல்லணும். நல்ல பொண்ணு, என் தங்கச்சி மாதிரின்னு ரெக்கமண்டேஷன் பண்ணான். வந்து ஒரு வாரத்திலேயே மோதிரத்தை எடுத்து இருக்கா," என்று ராதா தன் இஷ்டத்திற்குப் பேச,
"ம்மா, போதும்... ஸ்டாப் இட்!" என்று மகன் நிறுத்தியிருந்தான்.
"அதான் ரிஷி அவ்வளவு தூரம் சொல்றான்ல, அந்தப் பொண்ணு எடுத்து இருக்காதுன்னு. நீ ஏன், ராதா, அப்படி பேசுற?" என்று அருகில் இருந்த அண்ணாமலை மகனுக்கு ஆதரவாகப் பேச,
"நீங்க சும்மா இருங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது. அன்னைக்கு ஏதோ 'பிழைச்சு சம்பாதிச்ச காசுதான் உடம்பில் ஒட்டும்'ன்னு கதை விட்டா. அந்தப் பொண்ணு இப்ப அவளோட லட்சணத்தை பார்த்தீங்களா? நான் கால் பண்ணி கொடுக்கிற டோஸ்ல அவளே உன்னைத் தேடி வந்து மோதிரத்தை கொடுத்துருவா பாரு," என்று ராதா திட்டவட்டமாக பேசினார்.
"அம்மா, அந்த மாதிரிலாம் எதுவும் பண்ணிடாதீங்கம்மா, ப்ளீஸ். நான் இன்னொரு தடவை வீட்டில தேடிப் பார்க்கிறேன். கிடைக்கலன்னா அவகிட்ட நானே கேட்கிறேன். கேட்ட பிறகு கிடைச்சுதுனா அது நல்லா இருக்காது," என்று ரிஷி உடனடியாக மறுத்தான்.
ராதா, ரிஷியின் பேச்சைக் கேட்காது ஏதோ கூற வர,
"அதான் இன்னொரு தடவை தேடுறேன்னு சொல்றான்ல. கொஞ்சம் வெயிட் பண்ணு, ராதா. எடுத்தோம்னு, கவிழ்த்தோம்னு எதையும் பண்ணக் கூடாது," என்று அண்ணாமலை மனைவியை அதட்டினார்.
கணவனின் அதட்டல் வேலை செய்ய,
"சரி, தேடிப் பார்த்துட்டு சொல்லு. நானே அவகிட்ட கேட்கிறேன்," என்று ஒப்புக்கொண்டார் ராதா.
மேலும் இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன், மீண்டும் தேடுதல் வேட்டையைத் தொடங்கினான். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை.
என்ன செய்வது என்று ரிஷி சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் அழைப்பு மணி அடித்தது. ரிஷி சென்று கதவைத் திறக்க, மலர் கறியை வாங்கிக் கொண்டு வந்திருந்தாள்.
"கறிக்கடையில கூட்டமா இருந்துச்சு. அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு, சார். ஒரு மணிக்குள்ள லஞ்ச் ரெடி பண்ணிடுவேன், சார்," என்றபடி சமையலறைக்குள் நுழைந்திட, ரிஷி தான் அவளிடம் எப்படி கேட்பது என்று யோசனையுடன் நின்றிருந்தான்.
ஒன்றுக்கு பத்து முறை யோசித்த பின், 'சரி, மோதிரத்தை பார்த்தாயா?' என்றுதானே கேட்கப் போகிறோம். இதில் என்ன இருக்கிறது? என்று எண்ணியவாறு சமையலறைக்குச் செல்ல, அங்கே மலர் அவள் எழுதி ஒட்டி வைத்திருந்த துண்டுச் சீட்டை வாசித்துக் கொண்டிருந்தாள்.
ரிஷி அமைதியாக அவளைப் பார்த்தபடி நிற்க, தன்னருகே நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து அவனைக் கண்டவள்,
"ஏதாவது வேணுமா, சார்?" என்று வினவிட,
"காபி வேணும்," என்று அமைதியாக பதில் கொடுத்தான்.
"இதோ, அஞ்சு நிமிஷத்துல கொண்டு வரேன், சார்," என்றவள் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பாலை எடுத்து காபியைத் தயாரிக்கத் தொடங்கினாள்.
ரிஷி வந்து நீள்விருக்கையில் அமர்ந்து என்ன செய்வது என்று நெற்றியை நீவியபடி இருக்க, ஐந்து நிமிடத்தில் காபியுடன் வந்தவள் அவனைக் கண்டுவிட்டு,
"தலைவலியா, சார்? உங்களுக்கு மாத்திரை வாங்கிட்டு வந்து தரவா? பக்கத்துல ஒரு மெடிக்கல் இருக்கு," என்று வினவிட,
"நோ நீட்," என்றவன் அவளைப் பார்க்காமலே காபியை எடுத்துக் கொண்டான்.
வெகுநேரம் சிந்தையில் வயப்பட்டிருந்தவன், அதேபோல புதிதாக ஒரு மோதிரத்தை வாங்கிவிடலாம் என்று அலைபேசியை எடுத்து அந்த டிசைனைத் தேடத் தொடங்கினான்.
அரை மணி நேரமாக தேடியவன், ஒருவழியாக அந்த மோதிரத்தை கண்டுபிடித்து ஆர்டர் செய்ய பணம் செலுத்தவிருந்த நேரம்,
"சார், இந்த மோதிரம் பிரிட்ஜ்க்கு கீழ கிடந்துச்சு. உங்களோடதா?" என்றபடி வந்து அவனது மேஜை மீது மோதிரத்தை வைத்தாள்.
ரிஷி அதனைக் கண்டுவிட்டு,
"ஆமா, என்னோடதுதான்," என்று பதிலளிக்க,
"பார்த்து வச்சுக்க மாட்டீங்களா, சார்? பார்க்க வெள்ளி மோதிரம் மாதிரி இருக்கு. வெள்ளி விக்கிற விலைக்கு இது எப்படியும் பத்தாயிரம் போகும் இல்ல? வீட்டுக்குள்ள தொலைஞ்சதுனால கிடைச்சது. வெளிய தொலைஞ்சிருந்தா கிடைக்கிறது கஷ்டம். ஒரு ரூபானாலும் நீங்க உழைச்சு சம்பாதிச்சதுதான்," என்று அவனுக்கு பெரிய அறிவுரை வழங்க,
'என்னது... வெள்ளி மோதிரமா?' என்று மனதிற்குள் அதிர்ந்தவன் அவளை திகைப்புடன் பார்த்தா
ன்.
"இனி கவனமா வச்சுக்கோங்க, சார். தங்கம் மாதிரியே வெள்ளியும் விலை கூடிக்கிட்டே இருக்கு," என்றவள் அவனது பதிலை எதிர்பாராது சமையலறைக்குள் நுழைந்திட, ரிஷியின் பார்வை தனது மோதிரத்தின் மீது படிந்தது.