இதயம் – 14
ஷாலினி அதிர்வும் திகைப்புமாக ரிஷியைக் கண்டு, "அண்ணா!" என்று அழைக்க, "என்ன ஷாலினி?" என்று இயல்பாகக் கேட்டபடி அவள் அருகே வந்தவன், "நான்தான் பார்த்துக்கிறேன் சொன்னேன்ல... என்ன பிரச்சனை உங்களுக்கு?" என்று பேசிவிட்டு காதில் இருந்த ப்ளூடூத்தை கழற்றினான்.
அதனைக் கண்டதும் தான் இருவருக்கும் புரிந்தது, அவன் தங்களிடம் பேசவில்லை என்று.
அடுத்த நொடி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, "என்ன ஷாலினி, கூப்பிட்ட?" என்று ரிஷி வினவினான்.
"ஒன்னும் இல்லண்ணா," என்ற ஷாலினி. "வா மலர், நம்ம போய் பெர்ஃப்யூம் வாங்குவோம்," என்று அடுத்த இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.
தங்கையை ஒரு நொடி பார்த்தவன் தானும் அங்கிருந்து அகல, "நான் ஒரு செகண்ட் ஷாக் ஆகிட்டேன் மேடம். சார் போன்ல பேசிட்டு இருந்ததை நம்மகிட்டதான் பேசினார்னு நினைச்சுட்டேன்," என்று ஆசுவாசத்துடன் மலர் கூற, ஷாலினியும் அதனைச் சிரிப்புடன் ஆமோதித்தாள்.
பின்னர் ஷாலினி தனக்குத் தேவையானவற்றை எடுத்துப் போட்டுக்கொண்டிருக்க, மலர் அவளுடன் வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.
"என்ன மலர், நீ எதுவும் வாங்கல. உனக்கு ஏதும் வேண்டாமா?" என்று ஷாலினி கேட்க,
"நான் இங்கெல்லாம் வாங்க மாட்டேன் மேடம்," என்றாள் மலர்.
"ஏன்? என்னாச்சு?" என்று ஷாலினி வினவினாள்.
"இங்கெல்லாம் ரேட் தீ விலை இருக்கும். நமக்கெல்லாம் நம்ம ஏரியா அண்ணாச்சி கடைதான் கரெக்ட்," என்று பாவனையாய் கூற, அதனைக் கண்ட ஷாலினிக்குப் புன்னகை எழுந்தது.
"விலைக்கு தகுந்த மாதிரிதான் குவாலிட்டியும் இருக்கும் மலர்," என்று ஷாலினி கூற, "இருக்கலாம் மேடம். எனக்கு நான் கொடுக்கிற காசுக்கு இருக்கிற குவாலிட்டியே போதும்," என்று பதில்மொழிந்தாள்.
"அது சரி... ஏதாவது வாங்கிக்கோ மலர். நான் பே பண்ணுறேன்," என்று இயம்ப, "நான் வாங்குற மாதிரி எதுவும் இங்க இல்லையே மேடம்," என்று விழிகளைச் சுழற்றினாள்.
"காஸ்மெட்டிக்ஸ் எதுவும் யூஸ் பண்ண மாட்டியா மலர்? ஜஸ்ட் பேஸ் வாஷ் கூட?" என்று ஷாலினி கேட்க, "அதெல்லாம் நான் ஒரு தடவை கூட யூஸ் பண்ணதில்ல மேடம். நமக்கு சோப்பே போதும்," என்று பதில்மொழிந்தாள்.
"சரி வா... உனக்கு சாக்லேட், ஸ்னாக்ஸ் ஏதாவது வாங்கித் தரேன்," என்று ஷாலினி அழைக்க, "அதெல்லாம் வேண்டாம்," என்று மறுத்தாள் மலர்.
"உனக்கு இல்ல... உன்னோட தம்பி, தங்கச்சிங்களுக்கு நான் வாங்கிக்கொடுத்தேன். போய் கொடு," என்ற ஷாலினி நிறைய இனிப்பு வகைகளை வாங்க,
"போதும் மேடம்," என்று தடுக்க முயற்சித்தாள் மலர்.
"நான் என்ன தினமுமா வாங்கிக்கொடுக்கிறேன்? நான் வர்றதே எப்பவாவது தான். அமைதியா இரு மலர்," என்று அவளை அதட்டிய ஷாலினி, நாலைந்து இனிப்பு வகைகளை எடுத்துப் போட்டாள்.
ஷாலினி வாங்கி முடித்த நேரம், ரிஷியும் தனக்குத் தேவையானவற்றை வாங்கிவிட்டு வந்தான். அவனே எல்லாவற்றிற்கும் பணத்தைச் செலுத்த, மலரும் ஷாலினியும் ஏதோ பேசியபடி இருந்தனர்.
அவர்கள் வெளியே வரும் நேரம் இருள் கவிழத் தொடங்கியிருக்க,
"காலையில வந்தது... வீட்டு பக்கமே போகவே இல்ல. எங்க அம்மா தேடும். சீக்கிரமா நைட் சாப்பாடு செஞ்சு வச்சுட்டு கிளம்பணும்," என்று மலர் கூற,
"டின்னர் வெளியே பாத்துக்கலாம்," என்றாள் ஷாலினி.
"சரி... அப்போ என்னை போற வழியில மெயின் ரோட்டுல இறக்கி விட்டீங்கன்னா, வீட்டுக்கு நடந்து போயிடுவேன்," என்று மலர் மொழிய,
"எங்களோடவே டின்னர் முடிச்சிட்டு போ மலர்," என்று ஷாலினி அழைத்தாள்.
"அதெல்லாம் வேணாம் மேடம். வீட்ல எங்க அம்மா சமைச்சு வச்சிருப்பாங்க. அந்த சாப்பாடு வீணாப் போயிரும்," என்று மலர் மறுக்க,
"ஒரு நாள்தானே... என் கூட சாப்பிட வர மாட்டியா?" என்று ஷாலினி அவளது முகம் கண்டாள்.
மலர் மறுக்கவியலாது ஷாலினியை நோக்க,
"மார்னிங் நீ ஃபங்ஷனுக்கு கூப்டப்ப நான் வந்தேன்தானே? உனக்கு விருப்பம் இல்லாட்டி வர வேணாம்?" என்று அவள் சொல்லியதையே திருப்பிக் கூறினாள்.
"விருப்பம் இல்லாமல்லை மேடம். எனக்கு என் தம்பி, தங்கச்சியை விட்டுச் சாப்பிட மனசில்லை," என்று தயக்கத்துடன் இழுக்க,
"அவ்வளவுதானா? அவங்களுக்கும் வாங்கிக்கொடுக்கிறேன். கொண்டுபோய் கொடுத்துடு," என்று இலகுவாய் ஷாலினி முடித்துவிட்டாள்.
இருந்தும் மலர் தயக்கத்துடன் பார்க்க,
"இன்னும் என்ன மலர்?" என்று ஷாலினி கேள்வியாய் நோக்கியவள்,
"நான் வாங்கித் தந்தா கொண்டு போக மாட்டியா? நீ சமைக்கிறதை மட்டும் நான் சாப்பிட்டேன்ல?" என்று வினா எழுப்பினாள்.
இவள் நிச்சயம் தன்னை உண்ண வைக்காமல் விடமாட்டாள் என்பதை உணர்ந்த மலர், "சரி," என்பதாய்த் தலையசைக்க,
"குட் கேர்ள்," என்று அவள் கன்னம் கிள்ளிப் புன்னகைத்த ஷாலினி, "அண்ணா, பக்கத்துல ஏதாவது ரெஸ்டாரன்ட் இருந்தா அங்க போ," என்றாள்.
இடையில் மலர் தனது தாயிற்கு அழைப்பை விடுக்க,
அழைப்பை ஏற்றவர், "என்ன மலரு? காலையில போன... இன்னும் ஆளைக் காணோம். வேலை அதிகமா?" என்று கவலையுடன் கேட்க,
"ஐயோ... அதெல்லாம் இல்லம்மா. நான் தான் சொன்னேன் இல்ல, சாரோட தங்கச்சி வந்திருக்காங்கன்னு. அவங்க தனியா இருக்கேன்னு இருக்கச் சொன்னாங்க," என்று விளக்கம் அளித்தாள்.
"சரிடி... எப்ப வருவ?" என்று மாதவி வினவ,
"இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவேன் மா," என்று பதிலளித்தவள், "நைட்டுக்கு சாப்பாடு செஞ்சுட்டியாம்மா?" என்று வினவினாள்.
"இல்ல மலரே... இப்பதான் சப்பாத்திக்கு மாவு பிசையப் போறேன்," என்று மாதவி பதிலளிக்க,
"நல்லது... சமைக்காதம்மா. நான் நைட்டுக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்," என்றாள்.
"என்ன மலரே, திடீர்னு? சம்பள நாள் கூட இல்லையே!" என்று மாதவி ஐயத்துடன் கேட்க,
"அது சார் ஓட தங்கச்சிதான் வாங்கித் தர்றாங்க," என்று மலர் பதில் அளித்தாள்.
"அவங்களா? அவங்க எதுக்கு வாங்கித் தராங்க? எதுவும் பிறந்தநாளா?" என்று மாதவி விடாது வினவ,
"இல்லம்மா... சும்மாதான்," என்று இழுத்தாள் மலர்.
"சும்மா எதுக்கு வாங்கித் தராங்க மலர்? நம்மளால எதுக்கு அவங்களுக்கு வீண் செலவு? வேணாம்னு சொல்ல வேண்டியதுதானே," என்று மாதவி அதட்டல் குரலில் கூற,
அது அலைபேசியைத் தாண்டி வெளியே இருந்த இருவரின் காதிலும் தெளிவாக விழுந்தது.
ஷாலினியைப் பார்த்து சங்கடமாய்ச் சிரித்து வைத்தவள், தாயிடம், "நான் வேண்டாம்னு தான் சொன்னேன். அவங்கதான் சாப்பிட கூட்டிட்டுப் போறாங்க," என்று இழுக்க,
"சாப்பிட கூட்டிட்டுப் போனா, நீ மட்டும் சாப்பிட்டு வர வேண்டியதுதானே? குடும்பத்துக்கே வாங்கிட்டு வர்றது என்ன பழக்கம்?" என்று திட்டினார்.
மலர் பேசுவதற்குள் அலைபேசியைக் கையில் வாங்கிய ஷாலினி, "ஹலோ ஆன்ட்டி! நான் ஷாலினி, ரிஷி அண்ணாவோட சிஸ்டர்," என்று தன்னை அறிமுகப்படுத்தியவர், "மலரை ஏதும் சொல்லாதீங்க. அவ வேண்டாம்னு சொன்னா, நான்தான் வாங்கித் தரேன்னு சொன்னேன்," என்று மலருக்காகப் பேசினாள்.
இப்படி ஷாலினி அலைபேசியை வாங்கிப் பேசுவாள் என்று எதிர்பாராத மாதவி திகைத்துப் பின், "திட்டவெல்லாம் செய்யலம்மா. உங்களுக்கு எதுக்கு வீண் செலவுன்னுதான் கேட்டேன்," என்று பதில்மொழிய,
"இதுல வீண் செலவுலாம் எதுவும் இல்ல ஆன்ட்டி. வேண்டாம்னு மறுக்காதீங்க," என்றாள் ஷாலினி.
அதற்கு மேலும் அவளிடம் மறுக்க முடியாதவர், "சரிம்மா," என்றுவிட,
"சரிங்க ஆன்ட்டி. மலர் கிட்ட கொடுக்கிறேன்," என்று அலைபேசியை மலரிடம் நீட்டினாள்.
இவ்வளவு நேரம் ஷாலினி பேசியதைக் கேட்ட மலர், வீட்டிற்குச் சென்றால் கண்டிப்பாக தனக்குத் திட்டு உள்ளது என்பதை உணர்ந்தபடி அலைபேசியைக் காதில் வைக்க, இவ்வளவு நேரம் இவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த வித்யா, "அக்கா, எனக்குப் பன் பரோட்டா வாங்கிட்டு வா!" என்று கத்தினாள்.
மாதவியின் குரலை விட அதிகமாக வித்யாவின் குரல் கேட்க, மலரிடம் மீண்டும் ஒரு சமாளிப்பான புன்னகை பூத்தது.
"சரி வித்யா," என்று மலர் பதிலளிக்க, "அப்புறம் அக்கா, எனக்கு சிக்கன் லாலிபாப் வாங்கிட்டு வா," என்று வித்யா அடுக்கினாள்.
"சரிடி," என்று மலர் மென்குரலில் கூற, "அக்கா, எனக்கு சிக்கன் நூடுல்ஸ்," என்று முரளி மெதுவாய்க் கூச்சலிட்டான்.
"சரிடா," என்று தம்பியிடம் கூறியவள், "சாகிக்கு என்ன வேணும்னு கேளுங்க," என்க,
"அக்கா, எனக்கு நான் வாங்கித்தா... என் பிரெண்ட்ஸ் எல்லாம் அது ரொம்ப நல்லா இருக்கும்ன்னு சொல்லி இருக்காங்க," என்று சாகித்யாவின் குரல் கேட்டது.
"சரி சாகி. அம்மாவுக்கு என்ன வேணும்?" என்று மலர் கேட்க,
"எனக்கு எதுவும் வேணாம் மலர். மதியம் மிஞ்சின சோறு இருக்கு. தண்ணி ஊத்தி வச்சிருக்கேன். அதையே சாப்பிடுகிறேன்," என்று மாதவி பதில்மொழிந்தார்.
"சரிம்மா," என்று அழைப்பைத் துண்டித்த மலர், "அது என்னைக்காவது ஒரு நாள்தான் ஹோட்டல்ல வாங்கிக் கொடுப்பேன். அதனாலதான் கொஞ்சம் எக்சைட் ஆயிட்டாங்க," என்று சிரிப்புடன் ஷாலினியிடம் கூற, அவள் புன்னகையுடன் தலையசைத்தாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் ரிஷியின் கார் ஒரு பெரிய உணவகத்தின் முன் வந்து நிற்க, மலரும் ஷாலினியும் கீழே இறங்கினர். ரிஷி மகிழுந்தை நிறுத்துவதற்காகச் சென்றான்.
"வா மலர், நாம உள்ள போவோம். அண்ணா வருவாங்க," என்று ஷாலினி மலரின் கையைப் பிடிக்க,
"இந்த ரெஸ்டாரன்ட்டை நிறைய டைம் பார்த்திருக்கேன். இன்னைக்குத்தான் உள்ள வர வாய்ப்பு கிடைச்சிருக்கு," என்ற மலர், விழிகளால் அவ்விடத்தைச் சுற்றிப் பார்த்தாள்.
"நானும் இன்னைக்குத்தான் மலர் வரேன். ஆம்பியன்ஸ் ரொம்ப நல்லா இருக்குல்ல?" என்று வினவ,
"அப்படின்னா?" என்று புரியாமல் அவளை நோக்கினாள் மலர்.
"ஆம்பியன்ஸ்னா இங்க சுத்தி இருக்கிற அட்மாஸ்பியர், மலர்," என்று ஷாலினி விளக்கம் கொடுக்க, "ஓ..." என்று இழுத்த மலர், "ஆமா, ரொம்ப நல்லா இருக்கு. அந்த லைட் எல்லாம் கூட," என்று பதில் இயம்பினாள்.
இருவரும் ஒரு இடத்தைத் தேடி அமர, ரிஷியும் வந்து அமர்ந்தான்.
ஷாலினி தனக்குத் தேவையானவற்றைக் கூறிவிட்டு மலரைக் காண, மலர் உணவுப் பட்டியலைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதனைக் கண்ட ஷாலினி, "உனக்குப் பிடிச்சது ஆர்டர் பண்ணிக்கோ மலர். என்ன வேணும்?" என்று கேட்க, "எனக்கு ஒரு சிக்கன் நூடுல்ஸ்," என்று மலர் கூறினாள்.
"போதுமா?" என்று ஷாலினி வினவ, "போதும் மேடம். இதுவே சாப்பிட முடியாது," என்று முடித்துவிட்டாள் மலர்.
ரிஷி தனக்குத் தேவையானவற்றைக் கூறியதும், ஷாலினி மலரின் உடன்பிறந்தவர்கள் கேட்டவற்றை நினைவில் வைத்து, "ஒரு சிக்கன் நூடுல்ஸ், சிக்கன் லாலிபாப், ஒரு பட்டர் நான் வித் பெப்பர் சிக்கன், தென் ஒரு பிரான் பிரியாணி... இதெல்லாம் பார்சல் பண்ணிருங்க," என்றாள்.
அதனைக் கேட்ட மலர், "இந்த பிரான் பிரியாணிலாம் எங்க வீட்ல கேக்கவே இல்லையே மேடம்?" என்று வினவ,
"தெரியும் மலர். உங்க அம்மாவுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணேன்," என்று ஷாலினி பதில்மொழிந்தாள்.
கேட்காதவற்றையும் சேர்த்து வாங்கிக் கொடுக்கும் ஷாலினி மீது மலருக்கு அன்பும் பாசமும் பெருகியது. மெல்லிய புன்னகையுடன் ஷாலினியிடம் தலையசைத்தவள், ஆர்டர் செய்த உணவு வரவும் உண்ணத் தொடங்கினாள்.
பின்னர் மலரை அவளது வீடு இருந்த தெருவில் இறக்கிவிட,
"போயிட்டு வரேன் ஷாலினி மேடம். அடிக்கடி வாங்க," என்று புன்னகையுடன் கூற, "கண்டிப்பா மலர். உன்னைப் பாக்கவே வரேன்," என்று பதில் அளித்து அவளை அனுப்பினாள்.
போகும் மலரையே புன்னகையுடன் பார்த்த ஷாலினி, "மலர் ரொம்ப நல்ல பொண்ணு இல்லண்ணா?" என்று வினவிட,
ஒரு கணம் தானும் அவளைப் பார்த்துவிட்டு திரும்பியவன், ஆம் என்பதாய்த் தலையசைத்து மகிழுந்தை உயிர்ப்பித்தான்.
“அவளோட இன்னசென்ஸ் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா. அதுக்கு மேல, வீட்ல இருக்குறவங்களை விட்டுட்டு ஒரு சாப்பாடு கூட சாப்பிட மாட்டேன்னு சொல்றா. எவ்வளோ நல்ல பொண்ணு! இந்தக் காலத்தில் இப்படி எல்லாம் ஆட்களைப் பாக்குறது ரொம்ப ரேர்," என்று ஷாலினி பேசியபடி வர, ரிஷி அதனைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
மறுநாள் ஷாலினி ஊருக்குக் கிளம்பிவிட, மலருக்கு வழக்கம்போல நாட்கள் நகர்ந்தது.
அலுவலகத்தில் இருந்து அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தாள் மலர்.
"வந்துட்டியா மலர்? நான் டீ போடுறேன். போய் டிரஸ் மாத்திட்டு வா," என்று மாதவி தையல் இயந்திரத்தில் இருந்து எழுந்து செல்ல, அவரிடம் தலையசைத்துவிட்டு உடை மாற்றி வந்தவள், தேநீரை அருந்திவிட்டு ரிஷியின் வீட்டிற்குப் புறப்பட்டாள்.
பாதி தூரம் கடந்ததும் லேசான தூறல் விழத் தொடங்க, அண்ணாந்து வானத்தைப் பார்த்தவள் நடையைத் துரிதப்படுத்தினாள்.
இருந்தும், அவள் ரிஷி வீட்டை அடையும் முன்பு சடசடவெனப் பொழிந்த மழை அவளை முழுதாய் நனைத்திருந்தது.
"குடை எடுத்துட்டு வந்திருக்கலாமோ? ஈரத் துணியோட எப்படி வேலையைப் பார்க்கிறது?" என்று எண்ணியபடி அழைப்பு மணியை அழுத்த, ரிஷி வந்து கதவைத் திறந்தான்.
குளிரில் முழுதாய் நனைந்து, சிறிது நடுக்கத்துடன் நின்றிருந்தவளைக் கண்டு திகைத்தவன், "மழை நின்னதும் வர வேண்டியதுதானே மலர்? எதுக்கு இப்படி நனைஞ்சு வந்திருக்க?" என்று கேட்டபடி வழியை விட்டான்.
"இல்ல சார். நான் கிளம்பும்போது மழை இல்ல. பாதி தூரம் வந்ததும் லேசா தூறல் போட்டுச்சு. வேகமா வந்துரலாம்னு நினைச்சுத்தான் வந்தேன். இருந்தாலும் நனைஞ்சிட்டேன்" என்றவள் நடுங்கியபடி கூற,
அவளை ஒரு கணம் பார்த்தவன், உள்ளே சென்று ஒரு பூத்துவாலையை எடுத்து வந்து நீட்டினான்.
அதனை நன்றி கூறிப் பெற்றுக்கொண்டு உடலின் மீது போர்த்திக்கொண்டவள், "இப்படியே எப்படி வேலையைப் பார்ப்பது?" என்று சிந்திக்க,
"அந்த ரூம் கபோர்டுல ஷாலினியோட டிரஸ் இருக்கும். போய் சேஞ்ச் பண்ணிக்கோ," என்றான் ரிஷி.
"இல்ல சார். கொஞ்ச நேரம் ஃபேன்ல நின்னா காய்ஞ்சிடும்," என்று மலர் கூற,
"உன்னை டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரச் சொன்னேன் மலர்," என்று மீண்டும் அழுத்திக் கூறினான்.
அதனை மறுக்க இயலாதவள் அந்த அறைக்குள் சென்று அலமாரியைத் திறந்தாள்.
அதில் ஷாலினியின் உடைகள் நிறைய இருந்தன. அதுவும் புதிதாகத் தெரிந்தன. இதில் எதை எடுப்பது? ஏதாவது ஒரு உடையை எடுத்தால் அது ஷாலினிக்கு மிகவும் பிடித்ததாக இருந்துவிட்டால் என்ன செய்வது? தான் உடுத்தியதை அவள் உடுத்தவும் முடியாது என்று யோசித்தபடி நின்றிருந்தாள்.
பிறகு ஒரு முடிவு செய்தவளாக ஷாலினிக்கு அலைபேசியில் அழைப்பு விடுக்க, அடுத்த நொடியே அழைப்பு ஏற்கப்பட்டது.
"சொல்லு மலர், என்ன பண்ற?" என்று ஷாலினி தொடங்க,
"நான் இங்க உங்க வீட்லதான் இருக்கேன். வரும்போது மழைல நனைஞ்சிட்டேன். சார் உங்க டிரஸ் ஏதாவது எடுத்து போட்டுக்கச் சொன்னாங்க. இங்க நிறைய டிரஸ் இருக்கு. அதுல எது எடுக்கிறதுன்னு தெரியல. நான் எடுக்கிறது உங்களுக்குப் பிடிச்சதா இருந்தா என்ன பண்றது? நீங்களே ஏதாவது ஒரு டிரஸ்ஸைச் சொல்றீங்களா?" என்று மலர் விளக்கம் கொடுத்தாள்.
"மலர்!" என்று ஒரு கணம் திகைத்த ஷாலினி, "ஈர டிரஸோட நின்னுகிட்டு எனக்கு கால் பண்றியா? எதையாவது எடுத்துப் போட வேண்டியதுதானே! நான் என்ன சொல்லப் போறேன்? போ... ஃபர்ஸ்ட் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணு. நீ எதை போட்டாலும் எனக்கு ப்ராப்ளம் இல்ல," என்று அதட்டினாள்.
"சரிங்க மேடம்," என்று அழைப்பைத் துண்டித்தவள், அதிலிருந்து ஒரு உடையை எடுத்து மாற்றிவிட்டு வெளியே வந்து, தன்னுடைய ஈர உடையை ஒரு பையில் போட்டு வைத்தாள்.
பிறகு அவன் தனக்குக் கொடுத்த பூத்துவாலையை என்ன செய்வது என்று யோசித்தவள், அதனை ஜன்னல் கம்பியில் காயப் போட்டு விட்டு சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.
வேக வேகமாக இரவு சமையலை முடித்தவள், நின்ற மழை மீண்டும் வருவதற்குள் வீட்டிற்குள் அடைந்துவிட்டாள்.
மறுநாள் மாலை ரிஷியின் வீட்டிற்குச் செல்லும்போது, நேற்று அவன் கொடுத்த ஷாலினியின் உடையை துவைத்து இஸ்திரி போட்டு எடுத்துக்கொண்டாள்.
ரிஷி தான் இந்த உடையைத் திருப்பிக் கொடுத்தால் வாங்குவானா என்பது மலருக்குச் சந்தேகமாகவே இருந்தது. காரணம், தன் விரல் பட்ட உடையையே உடுத்த விரும்பாதவன் அவன். அப்படி இருக்கும்போது, தான் உடுத்திய ஆடையை எப்படி தங்கைக்குக் கொடுப்பான் என்பதுதான்.
ஆனால் வாங்க மாட்டான் என்று தான் கொடுக்காமல் இருக்கக் கூடாதே. அது தவறல்லவா என்று எண்ணியே ஷாலினியின் ஆடையை எடுத்துக்கொண்டு சென்றாள்.
ரிஷி அதனை நிச்சயம் வாங்க மாட்டான் என்பது அவளுடைய கணிப்பாக இருந்தது.
"குட் ஈவினிங் சார்," என்று புன்னகையுடன் உள்ளே நுழைந்தவள், "இது நீங்க நேத்து கொடுத்த ஷாலினி மேடமோட டிரஸ். துவைச்சு அயர்ன் பண்ணி கொண்டு வந்துட்டேன் சார்," என்று அந்தப் பையை நீட்டினாள்.
ஆனால் அவளது கணிப்புக்கு மாறாக, "அந்த டேபிள்ல வைச்சிடு," என்று ரிஷி முடித்துவிட, மலர் ஒரு கணம் திகைத்துப் பின் சுதாரித்தவள், அதனை மேஜை மீது வைத்துவிட்டு தன்னுடைய பணியைக் கவனிக்கச் சென்றாள்.
ஆனால் மனதிற்குள் மட்டும்,
"என்னடா அதிசயமா இருக்கு! நான் தொட்ட டிரஸ் தூக்கிப் போட்டாரு. இதை வாங்க மாட்டார்னு நினைச்சா, வச்சிட்டு போகச் சொல்லிட்டாரு. ஒருவேளை ஷாலினி மேடம் நான் போட்டதை போட்டுக்குவாங்களோ? ஆனா எப்படி? அதற்கான வாய்ப்பே இல்லையே!" என்று சிந்தித்தபடிதான் சமையலை முடித்தாள்.
அன்று காலை வீட்டைத் துடைக்காததால், அப்போது பெருக்கித் துடைக்கத் தொடங்கினாள். ரிஷி கூடத்தில் அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
மூன்று அறைகளையும் சுத்தமாகத் துடைத்து முடித்தவள், சமைத்த உணவை மேஜை மீது எடுத்து வைத்துவிட்டு, அவனுக்குப் பாலையும் காய்ச்சி வைத்துவிட்டு கிளம்ப ஆயத்தமானாள்.
ரிஷியிடம் சென்று, "ரிஷி சார், சாப்பாடு எடுத்து டேபிள் மேல வச்சுட்டேன். பாலைக் காய்ச்சி டம்ளர்ல ஊத்தி வச்சிட்டேன். நான் வீட்டுக்குப் போறேன் சார்," என்று வழக்கம்போல் கூற,
எப்போதும் முகம் காணாது சரியெனத் தலையசைப்பவன், நிமிர்ந்து அவள் முகம் பார்த்து, "எனக்கு ஒரு காபி போட்டுத் தர்றியா மலர்?" என்று வினவினான்.
"சரிங்க சார்," என்று அடுத்த கணமே தலையசைத்தவள், குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பாலை எடுத்து குளம்பியைத் தயாரிக்கத் தொடங்கினாள்.
மனதிற்குள் மட்டும், "இந்த நேரத்தில் காபி எப்பவும் சார் குடிக்க மாட்டாரே. தலைவலியா எதுவும் இருக்குமோ?" என்று எண்ணியவாறு காபியைத் தயாரித்து முடித்தவள் அவனிடம் கொண்டு சேர்த்தாள்.
பிறகு, “நான் கிளம்பவா, ரிஷி சார்?" என்று வினவிட,
சிறு தலையசைப்புடன் அனுமதி கொடுத்தான்.
மலர் தனது பையை எடுத்துக்கொண்டு கதவருகே செல்ல,
"மலர்..." என்ற ரிஷியின் குரல் அவளைத் தடுத்தது.
"சார்..." என்று திரும்பியவள் திகைத்து அதிர்ந்து போனாள். காரணம், சில கணங்களுக்கு முன்பு அந்த நீள் இருக்கையில் அமர்ந்திருந்தவன், அவள் அருகே வெகு நெருக்கத்தில் மூச்சு காற்று உரசும் தூரத்தில் நி
ன்றிருந்தான்.
மலர் அதிர்ந்த முகத்தை இயல்பாக்கியவள், "ரிஷி சார்..." என்று படபடப்பை மறைத்தபடி அவன் முகம் நோக்கினாள்.
அவளது முகத்தை ஒரு கணம் இமைக்காது பார்த்தவன், "என்னை விட்டுப் போகாத மலர்..." என்றிட, மலர் ஏகமாய் அதிர்வுடன் அவனைக் கண்டாள்.