இதயம் – 12
"லதா, நீ நெஜமாதான் சொல்றியா?" என்று மலர் நம்பாத குரலில் கேட்க, "உண்மையாத்தான் சொல்றேன் மலர். நம்ம கீர்த்தனாதான் ரேகா மேம்கிட்ட பேசிட்டு வந்தா. அவங்களே இன்னைக்கு கூப்பிட்டு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்," என்று லதா பதில் அளித்தாள்.
"நான் செலக்ட் ஆகியிருக்கேனா? என்னால இப்ப வரைக்கும் நம்ப முடியல. ரேகா மேம் சொன்னாதான் நான் நம்புவேன்," என்று மலர் மொழிய,
"சரிதான். இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க கூப்பிட்டு சொல்லுவாங்க. அப்ப நம்பிக்கோ," என்று லதா முடித்துக் கொண்டாள்.
"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு லதா. இது உண்மையா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்! ஆனா நான் இங்கே சேர்ந்து ஆறு மாசம்தான் ஆகுது. என்னை எப்படி செலக்ட் பண்ணியிருப்பாங்க? ரொம்ப வருஷமா ஒர்க் பண்றவங்க நிறைய பேர் இருக்காங்களே!" என்று மலர் சந்தேகமாக வினவ,
"எனக்கும் அதான் தெரியல. எந்த பேசிஸ்ல செலக்ட் பண்ணாங்கன்னு. ஒருவேளை பேமிலி பேக்ரவுண்ட் வச்சு செலக்ட் பண்ணியிருப்பாங்களோ. அதனாலதான் நீ செலக்ட் ஆகியிருப்பேன்னு நினைக்கிறேன்," என்று லதா பதில் உரைத்தாள்.
"இருக்கும் லதா. அதைத் தவிர்த்து என்னை செலக்ட் பண்ண வேற காரணம் இல்லைன்னுதான் நினைக்கிறேன். இது மட்டும் சீக்கிரமா நடந்துச்சுன்னா என் தம்பி படிக்கிறதுக்கு நான் கஷ்டப்பட வேண்டியதில்லை. அவன் படிச்சு முடிக்கிற வரைக்கும் இங்கே வேலை பார்ப்பேன்," என்று மலர் மகிழ்வுடன் கூற,
"நடக்கும் மலரே," என்று லதா ஆறுதல் கூறினாள்.
விடயம் என்னவென்றால், ரிஷி தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கல்வி உதவி வழங்க முடிவு செய்திருந்தான். எல்லோருக்கும் அல்ல; ஒரு வருடத்திற்கு இருபத்தைந்து நபர்களுக்கு மட்டும். மலரும் அதில் விண்ணப்பித்திருந்தாள். ஆனால் தான் அதில் தேர்வு செய்யப்படுவோம் என்று சிறிதும் நம்பிக்கை இல்லை. காரணம், மலர் அங்கே சேர்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகியிருந்தது. அவளுக்கு முன்பாக பல வருடங்களாகப் பணிபுரிபவர்கள் நிறைய பேர் இருக்க, தன்னை எப்படி தேர்வு செய்வார்கள் என்று எண்ணியிருந்தாள்.
ஆனால், உடன் பணிபுரியும் கீர்த்தனா மூலம் தானும் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்ற செய்தி வர, அதனை நம்ப இயலாமல் லதாவிடம் பலமுறை கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவர்கள் எதிர்பார்த்தது போலவே, தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட, மலர் லதாவுடன் சென்று தன்னுடைய பெயர் இருக்கிறதா என்று தேடினாள். கருணை மலர் என்ற பெயர் இருபதாவது இடத்தில் இருக்க, மலரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தாள முடியாத மகிழ்வில் லதாவை கட்டிக்கொண்டாள். லதாவிற்கும் மலருக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சிதான். ஏனெனில், மலரது குடும்பச் சூழ்நிலையை அங்கு நன்கு அறிந்திருந்தவள் லதா மட்டுமே. பல நேரம் மலரைக் கண்டு வியந்திருக்கிறாள்; எப்படி ஒற்றை ஆளாக இத்தனை வேலையும் செய்து குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள் என்று.
"உனக்கு கிடைக்கணும்னு நான்கூட வேண்டிக்கிட்டேன் மலரே. கிடைச்சா நீ கொஞ்சம் நிம்மதியா இருப்ப. இல்லைன்னா தம்பிக்கு பீஸ் கட்ட நீ ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப," என்று லதா உண்மையான அக்கறையுடன் கூற,
"ஆமாடி. இது மட்டும் கிடைக்கலைன்னா, நாலு வருஷத்துக்கு முரளிக்கு காலேஜ் பீஸ் கட்டவே எனக்கு நாக்கு தள்ளியிருக்கும்," என்று மலரும் தனது நிலையை கூறினாள்.
மகிழ்ச்சியில் அன்று மதியம் மலருக்கு பசிக்கவே இல்லை. முகம் முழுவதும் சிரிப்புடன்தான் சுற்றிக் கொண்டிருந்தாள். அவளுக்கு கிடைத்ததில் சிலருக்கு உண்மையான மகிழ்ச்சி இருந்தாலும், பலருக்கு பொறாமையாகத்தான் இருந்தது. காரணம், அவளுக்கு முன்பாக எத்தனை வருடங்கள் தாங்கள் வேலை செய்திருக்க, இவளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று.
அடுத்த சிறிது நேரத்தில் ரிஷியிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. இந்த வாய்ப்பில் தேர்வாகாதவர்கள் அடுத்த முறை தேர்வாக வாய்ப்புள்ளது; யாரும் வருத்தப்பட வேண்டாம். பணியாளர்களின் குடும்பச் சூழ்நிலை மற்றும் இன்ன பிற காரணங்களைக் கருத்தில் கொண்டுதான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியிருக்க, சலசலப்பு சிறிது நேரத்தில் அடங்கிப் போனது.
மலருக்கு ஒரு பெரிய சுமையை இறக்கி வைத்த நிம்மதி உணர்வு ஏற்பட்டது. வீட்டிற்குச் சென்று மாதவியிடம் கூற, அவரும் பெரிதாய் மகிழ்ந்து போனார்.
இளையவர்களுக்கும் மகிழ்ச்சிதான். அதிலும் முரளிதான் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தான். காரணம், முரளி எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும் அந்தக் கல்லூரி கட்டணத்தை ஏற்கும் பொறுப்பை ரிஷியின் நிறுவனம் ஏற்றிருந்தது. பணத்தைப் பார்க்காமல் தான் விரும்பிய கல்லூரியில் சேரலாம் என்பதுதான்.
"அக்கா, நான் ஜிஆர்டி காலேஜ்ல சேரப் போறேன். முன்னாடி நீ பீஸ் கட்டணுமே, அங்க பீஸ் அதிகம்னு நினைச்சு கவலைப்பட்டுட்டு இருந்தேன். இப்போ என் பிரெண்ட்ஸ் கூட அங்கதான் சேரப் போறேன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு க்கா. ரிஷி சாருக்கு நான் ரொம்ப தாங்க்ஸ் சொன்னேன்னு சொல்லுக்கா," என்று மகிழ்வுடன் மலரைக் கட்டிக்கொள்ள,
"கண்டிப்பா சொல்றேன் டா. நானும் சார்கிட்ட தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சேன். ஆபீஸ்ல அவரைப் பார்க்க முடியல. வேலைக்கு போகும் போதுதான் பார்த்து சொல்லணும்," என்று மலரும் பதில் மொழிந்தாள்.
உடைமாற்றிவிட்டு தேநீர் அருந்தியவள், ரிஷியின் வீட்டிற்குச் சென்றாள். வழக்கம்போல ரிஷி வந்து கதவைத் திறந்ததும்,
"குட் ஈவினிங், ரிஷி சார்," என்று முகம் முழுவதும் புன்னகையுடன் கூறியவள் உள்ளே நுழைந்து,
"ரொம்ப தேங்க்ஸ், ரிஷி சார். ஆபீஸ்லயே உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன். ஆனா உங்கள பார்க்க முடியல. அந்த இருபத்தஞ்சு பேர்ல என்னை செலக்ட் பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை சார். நீங்க பண்ணியிருக்கறது ரொம்ப பெரிய உதவி சார்," என்று மனமுவந்து நன்றி நவின்றாள்.
ரிஷி வழக்கம் போல ஒரு தலையசைப்புடன் அகன்று விட, மலர் சமையலறைக்குள் நுழைந்து அவனுக்கு குழம்பியைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டாள்.
மனதிற்குள் மட்டும், "இந்த ரிஷி சார் ஏன் இவ்ளோ அமைதியா இருக்காரு? அவங்க வீட்ல இருக்கவங்ககூட பெருசா பேசி பார்த்ததில்லை. நானு..." என்று எண்ணிக்கொண்டாள்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆதலால், மலர் பொறுமையாய் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க அழைப்பு மணி ஓசை கேட்டது.
தக்காளி சட்னிக்காக வதக்கி வைத்திருந்ததை அடுப்பில் இருந்து இறக்கி வைத்தவள், "வரேன்," என்று குரல் கொடுத்தபடி சென்று கதவைத் திறக்க, வெளியே நின்றிருந்தாள் ரோஹிணி.
ரோஹிணி ரிஷிக்காக பார்த்திருக்கும் பெண். ராதா தன் குடும்பத்துடன் சென்று ரோஹிணியை பெண் பார்த்து வந்து ஒரு வாரம் கழிந்திருந்தது.
"ரோஹிணி மேடம், நீங்களா?" என்று மலர் திகைப்பும் மகிழ்வுமாய் கேட்க, எதிரில் இருந்தவள் யாரென தெரியாமல் விழித்தாள் ரோஹிணி.
"உள்ள வாங்க மேடம். ஏன் வாசல்ல நிக்கிறீங்க?" என்று மலர் வரவேற்க, ரோஹிணி மலரைப் புரியாது பார்த்தபடி, "இது ரிஷிகேஷவ் வீடுதானே?" என்று வினவினாள்.
"ஆமா ரோஹிணி மேடம், இது ரிஷி சார் வீடுதான். நீங்க பஸ்ட் உள்ள வாங்க. உங்களை வெளியே நிக்க வச்சே பேசிட்டு இருக்கேன்," என மலர் அவளது கைபிடித்து உள்ளே அழைக்க, ரோஹிணி தனது காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே வர எத்தணித்தாள்.
"வலது காலை எடுத்து வச்சு உள்ள வாங்க மேடம்," என்று மலர் அழைக்க, அதே போலவே உள்ளே நுழைந்தாள் ரோஹிணி.
"உக்காருங்க மேடம். என்ன சாப்பிடுறீங்க? டீ, காபி, ஜூஸ்?" என்று மலர் அடுக்க,
"எனக்கு எதுவும் வேண்டாம்," என்று ரோஹிணி மறுத்தாள்.
"முதல் தடவையா வந்து இருக்கீங்க. எதுவுமே சாப்பிடாம போறீங்களா? நான் உங்களுக்கு ஸ்வீட் செய்றேன்," என்றவள் நகரப் போக,
"ரிஷி எங்க? நான் அவரைப் பாக்கணும்," என்று அவளைத் தடுத்திருந்தாள் ரோஹிணி.
"ரிஷி சார் குளிச்சிட்டு இருக்காங்க மேடம். ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க, வந்துருவாங்க," என்று மலர் கூற, ரோஹிணி சம்மதமாய் தலையசைத்தாள்.
"பத்து நிமிஷத்துக்குள்ள நானும் உங்களுக்கு ஸ்வீட் செஞ்சு கொண்டு வரேன் ரோஹிணி மேடம்," என்று மலர் சமையலறை செல்லப் போக,
"உங்களுக்கு எப்படி என்னை தெரியும்?" என்று கேட்டவாறு ரோஹிணியும் உள்ளே வந்தாள்.
"அதான் ராதா மேடம் உங்க போட்டோ காட்டுனாங்களே. அப்போ பார்த்தேன். போட்டோல பார்த்ததை விட நீங்க நேர்ல இன்னும் அழகா இருக்கீங்க," என்று புன்னகையுடன் மலர் கூற, ரோஹிணி இதழ்களில் கீற்றாய் மென்னகை மலர்ந்தது.
"பொண்ணு பாக்க போறேன்னு சொன்னப்பவே எனக்கு தெரியும் மேடம். கண்டிப்பா சாருக்கு உங்களை பிடிக்கும்னு," என்று மலர் தன் போக்கில் பேச,
"நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே?" என்று ரோஹிணி வினவினாள்.
"நான் இங்கதான் மேடம் வேலை பாக்குறேன். சமைக்கிறது, கிளீனிங் எல்லா வேலையும்," என்று மலர் கூற,
"ஓ... உங்க நேம்?" என்று முன்பிருந்த பாவனையிலேயே கேட்டாள்.
தான் வேலை செய்பவள் என்று கூறியும் எந்த முகமாற்றமும் இல்லாமல் பேசுபவளை மலருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
"என்னோட பெயர் கருணை மலர் மேடம்," என்று கள்ளமில்லா புன்னகையுடன் மலர் மொழிய,
"உன்ன மாதிரியே உன்னோட பேரும் ரொம்ப அழகா இருக்கு," என்று மென்னகைத்தாள் ரோஹிணி.
"பேர் வேணா அழகா இருக்குன்னு நான் ஒத்துக்குறேன் மேடம்," என்று மலர் கூற,
"ஏன், நீயும் தானே அழகா இருக்க? குட்டியா பொம்மை மாதிரி," என்று சிரித்தாள் ரோஹிணி.
"நீங்க சிரிக்கும் போது இன்னும் அழகா இருக்கீங்க மேடம். உங்க போட்டோ பார்த்த உடனே சொன்னேன் ராதா மேடம்கிட்ட, 'நீங்க ஹீரோயின் மாதிரி இருக்கீங்க'னு," என்று மலர் கூற, ரோஹிணி நம்பாத பாவனை கொடுத்தாள்.
"நெஜமா மேடம். நீங்க வேணா ராதா மேடம்கிட்ட கேட்டு பாருங்க. நீங்களும் ரிஷி சாரும் ரொம்ப பொருத்தமா இருக்கீங்க," என்றவள், "கல்யாணத்துக்கு தேதி குறிச்சாச்சா மேடம்?" என்று வினவினாள்.
"இல்ல, இன்னும் எதுவும் கன்ஃபார்ம் ஆகல," என்று ரோஹிணி கூற,
"அதெல்லாம் சீக்கிரம் கன்ஃபார்ம் ஆகிடும் மேடம்," என்று அவளுடன் பேசியபடியே இனிப்பை செய்து முடித்திருந்தாள்.
"முதல் முறையா நீங்க வந்து இருக்கதால இன்னைக்கு பால் கேசரி செஞ்சிருக்கேன். சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க மேடம்," என்று ஒரு கிண்ணத்தில் அவளுக்கு வைத்துக் கொடுத்தவள், "சார் குளிச்சிட்டு வந்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன். நான் போய் நீங்க வந்திருக்கத சொல்றேன்," என்று ரிஷியின் அறை நோக்கிச் சென்றாள்.
ரோஹிணி கூடத்தில் அமர்ந்து மலர் கொடுத்த பால் கேசரியை உண்ணத் தொடங்கினாள்.
"மலர்."
"ரிஷி சார்," என்று கதவைத் தட்ட, அப்போதுதான் குளித்து முடித்து வந்து உடைமாற்றியவன் கதவைத் திறந்து, "என்ன?" என்பதாய் கண்டான்.
"உங்கள பாக்க ரோஹிணி மேடம் வந்து இருக்காங்க ரிஷி சார்," என்று மலர் கூற,
"ரோஹிணியா?" என்றவனின் முகம் யோசனைக்கு தாவியது.
அதனைக் கண்ட மலர், "ரிஷி சார், ரோஹிணி மேடம்... நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு. போன வாரம் போய் பாத்துட்டு வந்தீங்களே," என்று நினைவுபடுத்த,
இப்போது ரிஷி முகத்தில் மெல்லிய திகைப்பு தோன்றி மறைய, "டூ மினிட்ஸ்ல வரேன்னு சொல்லு," என்றவன் மீண்டும் கதவடைத்தான்.
மலர் ரோஹிணியிடம் வந்து, "சார் இப்பதான் குளிச்சிட்டு வந்திருப்பாரு போல மேடம். ரெண்டு நிமிஷத்துல வரேன்னு சொன்னாங்க," என்றவள், "நான் போய் உங்க ரெண்டு பேருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வரேன்," என்று சமையலறைக்குள் நுழைந்தாள்.
கூறியது போலவே இரண்டு நிமிடத்தில் ரிஷி கூடத்திற்கு வர, அவனைக் கண்டு ரோஹிணி எழுந்து நின்றாள்.
"எதுக்கு எழுந்துக்குறீங்க? உட்காருங்க ரோஹிணி," என்றபடி வந்த ரிஷி அவளெதிரே அமர,
"இந்த சைடு ஒரு ஒர்க்கா வந்தேன். அப்படியே உங்களை பார்த்துட்டு போகலாம்னு," என்று தயக்கத்துடன் இழுத்தாள் ரோஹிணி.
பதிலுக்கு ஒரு தலையசைப்பைக் கொடுத்தவன், "என்ன சாப்பிடுறீங்க? டீ, காபி?" என்று வினவிட,
"இப்பதான் மலர் ஸ்வீட் செஞ்சு கொடுத்தாங்க," என்று அருகில் இருந்ததை காண்பித்தாள்.
பிறகு இருவரும் ஏதோ பேச ஆரம்பிக்க, சுடச்சுட இரு கோப்பை தேநீரை கொண்டு வந்து அவர்களருகே வைத்துவிட்டுப் போனாள் மலர்.
காலை சமையலை முடித்தவள் மனதிற்குள், "இவங்களே ரிஷி சாருக்கு வைஃபா வந்தா ரொம்ப நல்லா இருக்கும். இவங்க ராதா மேடம் போல சிடுமூஞ்சி இல்லை; சிரிச்ச முகத்தோட பேசுறாங்க. கடவுளே, ரிஷி சாருக்கு இவங்கள கண்டிப்பா பிடிக்கணும். அப்பதான் நான் இங்க நிம்மதியா வேலை பார்க்க முடியும்," என்று கடவுளிடம் அவசர அவசரமாக கோரிக்கையை வைத்தவள் திரும்ப, அங்கே ரிஷி நின்றிருந்தான்.
அவன் வரவை அறிந்தவள், "உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கவா ரிஷி சார்?" என்று வினா தொடுக்க,
"நான் வெளியே போறேன். நீ ஒர்க் முடிச்சிட்டு வீட்டை பூட்டிட்டு கிளம்பு," என்று கூறினான் ரிஷி.
"சரிங்க சார்," என்று மலர் தலையசைக்க, ரிஷி ரோஹிணியிடம் கூறிவிட்டு தன்னுடைய அலைபேசியை எடுக்கச் சென்றான்.
ரோஹிணி உண்டு முடித்துவிட்டு கிண்ணத்தை வைக்க சமையலறை வர,
"பால் கேசரி நல்லா இருந்ததா மேடம்?" என்று ஆர்வமாக அவளது முகம் கண்டாள் மலர்.
"ரொம்ப நல்லா இருந்தது மலர்," என்று ரோஹிணி அவளைப் பாராட்ட,
"தேங்க்ஸ் மேடம்," என்றவள், "எனக்கு சமையல்ல நிறைய தெரியும் மேடம். வெஜ், நான்-வெஜ் எல்லாமே சூப்பரா சமைப்பேன். வீட்டைக்கூட நல்லா பளபளன்னு கிளீன் பண்ணி வச்சுருவேன்," என்று அடுக்க,
ரோஹிணி புரியாது அவளைக் கண்டாள்.
"இதெல்லாம் எதுக்கு உங்ககிட்ட சொல்றேன்னு யோசிக்கிறீங்களா மேடம்?" என்று மலர் கேட்டிட, ரோஹிணி தலை ஆம் என அசைந்தது.
"நாளைக்கு சாரை கல்யாணம் பண்ணிட்டா நீங்கதானே இந்த வீட்டுக்கு ஓனரம்மா? அதுதான் முன்னாடியே உங்ககிட்ட என்னோட திறமை எல்லாம் சொல்லி வைக்கிறேன். ராதா மேடம் வேற, 'சாருக்கு கல்யாணம் ஆயிட்டா அவங்க வைஃப் விருப்பப்பட்டாதான் நான் இங்க வேலை பார்க்க முடியும்'ன்னு சொல்லிட்டாங்க," என்று மலர் விளக்க,
ரோஹிணியின் இதழ்களில் புன்னகை படர்ந்தது.
மலரின் கைகளைப் பிடித்துக் கொண்டவள், "உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மலர். நீ சொல்ற மாதிரி நடந்தா, நீயா போகிற வரைக்கும் உன்னை நான் வேலையிலிருந்து போக சொல்ல மாட்டேன்," என்று மாறாத புன்னகையுடன் கூற,
"கண்டிப்பா நடக்கும் மேடம். சாருக்கு உங்களை நிச்சயமா பிடிக்கும். நீங்கதான் எனக்கு ஓனரம்மாவா வரப் போறீங்க," என்று கூறிவிட்டு நிமிர, ரிஷி வாயிலில் நின்று கொண்டிருந்தான்.
அதனைக் கண்ட ரோஹிணி, "சரி, நான் போயிட்டு வரேன் மலர். நாம் இன்னொரு நாள் பேசலாம்," என்று கூற,
"சரிங்க மேடம்," என்று தலையசைத்தவள், "முதல் தடவை வந்து இருக்கீங்க. சாமி ரூம்ல போய் சாமி கும்பிட்டு, விபூதி குங்குமம் வச்சிட்டு போங்க மேடம்," என்றாள்.
"பாக்க சின்ன பொண்ணு மாதிரி இருக்க; பேசுறதெல்லாம் பெரியவங்க பேசுற மாதிரி இருக்கு," என்ற ரோஹிணி, அவள் கூறியதை மறுக்காது செய்ய, மலர் அதனை இருவரும் அறியாது தன்னுடைய அலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.
ரிஷி அமைதியாய் அவர்கள் இருவரையும் பார்த்திருந்தான்.
இருவரும் அங்கிருந்து அகன்ற நொடி, தனது அலைபேசியை எடுத்தவள் ராதாவிற்கு அழைப்பை விடுத்து ரோஹிணி வந்த விடயத்தைக் கூறிவிட்டாள். அதுமட்டுமின்றி, தான் எடுத்த புகைப்படத்தையும் அனுப்பிவிட்டவள், வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டாள்.
ரோஹிணியுடன் வெளியே சென்ற ரிஷி, மதிய உணவை வெளியே முடித்துக் கொண்டுதான் வீட்டிற்கு வந்தான். பன்னிரெண்டு மணிக்கு முன்பாகவே, மதியம் சமையல் செய்ய வர வேண்டாம் என்று மலருக்கு செய்தி அனுப்பியிருந்தான். அதனால் மலர் உண்டுவிட்டு ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டாள்.
நான்கு மணி நேரம் நன்றாக உறங்கி எழுந்தவள், தாய் கொடுத்த தேநீரை அருந்திவிட்டு தயாராகி ரிஷியின் வீட்டிற்குச் சென்றாள்.
"குட் ஈவினிங், ரிஷி சார்," என்று புன்னகையுடன் மலர் நுழைய, அவளுக்கு வழிவிட்டு கூடத்தில் இருந்த நீள்விருக்கையில் அமர்ந்தவன்,
"மலர்," என்று அழைத்தான்.
"சார்," என்றவள் அவனருகே வர,
"அம்மாக்கு கால் பண்ணி ரோஹிணி வந்த விஷயத்தை சொன்னியா?" என்று அழுத்தமாக வினவினான்.
அவனின் குரலில் இருந்த பேதத்தை உணர்ந்தவள், மெல்லிய குரலில், "ஆமா சார்," என்று பதிலளித்தாள்.
"யாரைக் கேட்டு சொன்ன மலர்?" என ரிஷி அவளை கூர்மையாகப் பார்க்க, மலரிடத்தில் பதில் இல்லை.
"நான் உன்னை அம்மாக்கு கால் பண்ணி ரோஹிணி வந்த விஷயத்தை சொல்லச் சொன்னேனா? சொல்லு மலர்," என்று அழுத்தத்துடன் குரல் உயர,
"ம்ஹூம்..." என்று மெலிதாய் அவளது தலை அசைந்தது.
"அப்புறம் இந்த போட்டோ?" என்றவன் தன் அலைபேசியில் மலர் எடுத்திருந்த புகைப்படத்தைச் சுட்டிக் காட்டினான். அதில் ரோஹிணி, ரிஷியின் வீட்டு பூஜை அறையில் சாமி கும்பிடுவது போல் நின்றிருந்தாள்.
"இந்த போட்டோ யாரைக் கேட்டு எடுத்த நீ?" என்று ஒருவித அதட்டலுடன் அவளை நோக்க,
"அது வந்து சார்..." என்றவள், என்ன பதிலளிப்பது எனத் தெரியாமல் பதட்டத்தில் துப்பட்டாவின் நுனியைத் திருகத் தொடங்கினாள்.
"ஆன்சர் மீ, மலர்!" என்ற ரிஷி கோபத்துடன் மலரை உறுத்து விழிக்க,
"அது நானாதான் எடுத்தேன் சார். மேடம்க்கு அனுப்பலாம்னு..." என்றவள் தயக்கத்துடன் அவனது முகம் நோக்கினாள்.
பயத்தில் வெளுத்திருந்த அவளது முகத்தைக் கண்டவனுக்கு திட்ட மனம் வரவில்லை. இருந்தும் கோபம் குறையவில்லை. அவள் செய்து வைத்த செயலால் ரிஷிதான் அல்லாடிக் கொண்டிருந்தான்.
மலர் ராதாவிற்கு அழைத்து ரோஹிணி வந்த விடயத்தையும், அதோடு சேர்த்து இருவருக்கும் பிடித்தம் இருப்பது போல் தெரிகிறது என்றும் கூறிவிட, வீட்டிலிருந்து ஒவ்வொருவராக மாற்றி மாற்றி அழைத்து, "ஏன் எங்களிடம் கூறவில்லை? நீயே பேசி கொள்வாயா? பெரியவர்கள் முடிவு செய்ய வேண்டாமா? திருமண தேதி குறிக்க வேண்டும். நிச்சயத்திற்கு தேதி குறிக்க வேண்டும்," என்று அவர்கள் விருப்பத்திற்கு முடிவு செய்து பேசிக்கொண்டே செல்ல, ரிஷிக்கு ரத்த அழுத்தம் எகிறியது.
ஷாலினி வேறு, "அண்ணா, எங்ககிட்ட கூட சொல்லலையே! அண்ணியை பார்க்கப் போறேன்னு அன்னைக்கு கேட்டதுக்கு, 'யோசிச்சு சொல்றேன்'னுதானே சொன்ன? என்கிட்டதான் ஃபர்ஸ்ட் முடிவை சொல்லுவேன்னு நினைச்சேன். இப்ப மலர் கால் பண்ணி சொல்லித்தான் தெரிஞ்சது. உனக்கு அவங்கள புடிச்சி இருக்கா? எனக்கும் புடிச்சிருக்கு ண்ணா. அம்மா நெக்ஸ்ட் மந்த் கல்யாண தேதி வைக்கலாம்னு பேசிட்டு இருக்காங்க," என்று கூறிவிட, அவர்களை சமாளிப்பதற்குள் ரிஷி வெகுவாய் திணறிப் போனான்.
அதன் விளைவுதான் இப்போது மலரை கோபத்துடன் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்.
நிமிடங்கள் கடந்தும் அவன் ஏதும் பேசாமல், பார்வை மாற்றாமல் இருப்பதில் மலருக்கு அச்சம் மேலோங்க,
"அது உங்களுக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்ற எக்சைட்மெண்ட்ல சொல்லிட்டேன் சார். இனிமே சொல்ல மாட்டேன்," என்று விளக்கம் கொடுத்தாள்.
"நான் சொன்னேனா எனக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு?" என்று விடாக்கொண்டனாக ரிஷி வினவிட, மலருக்கு திகைத்த நிலைதான். இதற்கு என்ன பதில் கூறுவாள்?
"சொல்லு மலர், நான் உன்கிட்ட வந்து சொன்னேனா எனக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு?" என்று மீண்டும் அழுத்திக் கேட்க,
"இல்லை" எனும் விதமாக தலையை இடம் வலமாக ஆட்டினாள் மலர்.
"அப்புறம் ஏன் என் வீட்டுக்கு கால் பண்ணி உன் இஷ்டத்துக்கு சொல்லி வச்சிருக்க? அதுவும் எங்க ரெண்டு பேருக்கும் புடிச்சிருக்குன்னு நீயா கற்பனை பண்ணி அதை அம்மா கிட்ட தெரியப்படுத்தி இருக்க?" என்று விரலை மெதுவாக தாளம் போட்டபடி அவளைப் பார்த்து புருவம் உயர்த்த,
மலருக்கு நிச்சயமாய் என்ன எதிர்வினை ஆற்றுவது என்று தெரியவில்லை.
அவளுக்கு ரிஷி மேல் நிறைய மதிப்பும், மரியாதையும், கூடவே அன்பும் இருந்தது. அவனுக்கு திருமணம் நடக்கப் போவதை எண்ணி மகிழ்ந்தவள், தான் செய்யும் காரியத்தை உணராது ராதாவிடம் கூறியிருந்தாள். இப்போது ரிஷி அதனைக் கேட்கும்போதுதான், அவனது விருப்பமின்றி தான் பேசியது மிகவும் தவறு என்று புரிந்தது.
"இனிமே இந்த மாதிரி செய்ய மாட்டேன் சார்," என்று வருத்தம் இழையோடிய குரலில் அவனுக்கு உறுதியளிக்க,
"செய்யக்கூடாது. எனக்குத் தெரியாம எந்த
நியூஸும் என் அம்மாவுக்கு போகக்கூடாது. புரிஞ்சுதா?" என்று ரிஷி அதட்டினான்.
"மாட்டேன் சார்," என்று அடுத்த நொடியே பதில் மொழிய,
"ஹ்ம்ம்..." என்று தலையசைத்தவன், "எனக்கு ஒரு காபி கொண்டு வா, போ," என்றிட, அங்கிருந்து ஓடியே போனாள் மலர்.