• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 9

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 9


கண்ணாடியில் மீண்டுமொரு முறை தன்னை சரிபார்த்து திருப்திக் கொண்ட யாஷ் அலைபேசியையும் மகிழுந்தின் திறவுகோலையும் எடுத்து அறையை விட்டு வெளியில் வர ஷமீராவோ தயாராய் நின்றிருந்தாள் புன்னகை முகமாக. "போகலாமா ஷமீ?" என்ற யாஷின் விழிகள் தாயை தேட, உணவு மேஜையில் அமர்ந்து ரூபாவுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.



"ம்மா, நாங்க போய்ட்டு வரோம்" என்ற யாஷிற்கு, "இந்த நேரத்தில ஷாப்பிங் போயே ஆகணுமா யாஷ்? மனோ வந்து அழைச்சுட்டு போவான்ல்ல" என்று பதில் கொடுத்த சவிதா அங்கலாய்த்தப்படி நேரத்தை பார்க்க அதுவோ ஆறை தொட்டுக் கொண்டிருந்தது.

"ம்மா, அண்ணனுக்கு வொர்க் இருக்காம். இனி அவங்க வந்து கூட்டிட்டு போறதுக்குள்ள நேரமாகிடும், இங்க பக்கத்தில தான?" என்று யாஷ் தாயை சமாதானம் செய்ய, "ஆமா அத்தை, கடை பக்கம் தான், அரைமணி நேரத்தில போய்ட்டு வந்திடலாம். யாஷ்க்கு இது என்ன புது இடமா, நீங்க பயப்படாதீங்க" என்று ரூபாவும் தைரியம் கூறினாள்.


"சரி, ரெண்டு பேரும் கவனமா போய்ட்டு வாங்க, மெதுவா ட்ரைவ் பண்ணு" என்று சவிதா அவர்களுக்கு கிளம்ப அனுமதியளிக்க, "அண்ணி, எங்களுக்கு டின்னர் சேர்த்து செய்யாதீங்க வெளியவே முடிச்சிட்டு வந்திடுவோம்" என்ற யாஷ் ஷமீயை அள்ளிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.

யாஷின் விழிகள் நவீனின் வீட்டை தழுவி மீள ஷமீயோ பழக்க தோஷத்தில் அவனுடைய பூட்டிய வீட்டை தட்ட முயல, "ஹேய், என்ன பண்ற நீ? நவீன் ஊருக்கு போய்ட்டார். நெக்ஸ்ட் வீக் தான் வருவார்" என்று முயல்குட்டியின் செயலில் அரும்பிய புன்னகையை விழுங்கி அவளை இழுத்துக் கொண்டு மின்தூக்கியை நோக்கி விரைந்தாள்.

அவனில் எண்ணங்கள் அலைபாய்ந்தவுடன் தன்னையும் அறியாது பேதையின் இதழில் புன்னகை நிரம்பியது, 'என்ன செய்து கொண்டிருப்பான்?' என்ற வினாவில் மனது ஊசலாட கரங்கள் இயல்பாய் அலைபேசியில் எடுத்து புலனத்தை பரிசோதித்தது. ஆம், நேற்றிரவு பேசியிருந்ததோடு சரி. காலையில் கிளம்பும் பொழுது இவளே குறுஞ்செய்தியை தட்டி விட்டிருக்க இன்னும் அதை ஆடவன் பார்த்தற்கான அறிகுறிகள் கூட இல்லை.


யாஷ் குடும்பத்தோடு மனோ வீட்டிற்கு வந்திருந்தனர் மறுநாள் ஷமீராவின் பிறந்தநாளைக் கொண்டு. யாஷிற்கும் அந்த வார இறுதியோடு அவள் ஒப்பந்தமிட்டிருந்த குறும்படம் நிறைவடைவதாய் இருக்க, முயல்குட்டி வேறு அழைத்து அனைவரும் கண்டிப்பாக வர வேண்டும் என்று மழலை மொழியில் கட்டளையிட்டிருக்க யாராலும் மறுக்க முடியவில்லை. திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியிருக்க அதற்கான வேலைகளும் ஒரு புறம் மளமளவென நடந்தேறிக் கொண்டிருந்தது தான்.



நவீன், அவனோடு தான் யாஷ்வின் பெரும்பாலான பயணங்கள் அமைந்து விட சவிதாவும் பயமின்றி அவளுக்கு அனுமதியளித்திருந்தார். ஆனால் இம்முறை, "யாஷ், நான் ப்ரெண்ட்ஸ் கூட இந்த வீக்கெண்ட் கேரளாக்கு டூர் போறேன். சோ உனக்கு கார் அனுப்புறேன். நீ ஷூட்க்கு போய்ட்டு வந்திடு" என்றிருக்க,

"என்ன திடீர்னு போறீங்க?" என்றாள் வினாவாய். "எனக்கு ட்ராவலிங் ரொம்ப பிடிக்கும் யாஷ் சொல்லியிருக்கேனே? முதல்ல அடிக்கடி போவேன். அப்பாக்கு ஹெல்த் இஸ்யூ வந்ததுக்கு அப்புறம் நேரமே கிடைக்கலை. இப்ப சீசன் டைம், ட்ரெக்கிங் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் போறாங்க. நானும் ஜாயின் பண்ணிக்க போறேன்" என்றிருந்தான். அவன் வர முடியாததாலும் ஷமீயைக் கொண்டும் சவிதாவும் கேசவனும் மகளோடு கிளம்பி வந்திருந்தனர். சவிதாவிற்கு திருமண வேலைகளுக்கு மத்தியில் கிளம்ப விருப்பமில்லை ஆனாலும் மகளுக்காகவும் பேத்திக்காகவும் வருகை புரிந்திருந்தார்.



ஷமீயோடு மகிழுந்தில் பறந்த யாஷ் சில நிமிடங்களிலே பல்லங்காடியை நெருங்கியிருந்தாள். நவீனுடன் வரும் பொழுது பிறந்தநாளுக்காக ஷமீக்கு எதாவது வாங்கி வரலாம் என்று எண்ணியிருந்தாள். அவன் கடைசி நேரத்தில் அழைத்து வரவில்லை என்றிருக்க விமானத்தில் வரும் அவசரத்தில் அவளால் எதுவுமே வாங்கி இருக்க முடியவில்லை. அதனால் சவிதாவிடம் போராடி முயல்குட்டியோடு வெளியில் பறந்திருந்தாள். ஷமீக்கு அதில் அலாதி இன்பம் தான். யாஷ் சென்னைக்கு இடம்பெயர்ந்த பிறகு அவளுக்கும் வெளியில் செல்வதற்கான வாய்ப்புக்கள் அரிதாகி போயிருந்தது. ரூபாவிற்கும் மனோவிற்கும் வீட்டிலும் அலுவலகத்திலுமே வேலை சரியாக இருக்க எப்பொழுதாவது சமயம் வாய்க்கும் பொழுது மட்டுமே ஷமீயை வெளியே அழைத்துச் சென்றிடுவார்கள்.



சில பல நிமிடம் உலாத்தியவர்கள் ஷமீக்கு பனிக்கூழை வாங்கிக் கொண்டு உடை எடுக்குமிடம் நுழைந்து விட்டனர். யாஷ் தொங்கியிருந்த உடைகளை ஆராய்ந்து அளவு பார்த்து புரட்டி எடுக்க அவள் இடுப்பில் அமர்ந்திருந்த ஷமீராவோ யாஷ் எடுக்கும் உடைகளுக்கு கருத்துக்கணிப்பை கூறி அவளை வம்பிலுத்துக் கொண்டிருந்தாள்.



அவளின் காதை திருகிய யாஷ், "ஷ்ஷ்..வாயை திறக்க கூடாது" என்று செல்லமாக மிரட்டி அவளுக்கு இரண்டு மூன்று உடைகளை எடுத்து முடித்து ஷமீரா கைக்காட்டிய விளையாட்டு பொருட்களையும் வாங்கிக் கொண்டு கீழிறங்கினார்கள்.



யாஷ், தனக்குக்கும் ஒன்றிரண்டு மேலாடை, காற்சட்டை என்று புரட்டி எடுக்க ஷமீயோ அவளின் இழுப்புக்கெல்லாம் இழுபட்டு பின்னால் வேடிக்கை பார்த்தப்படி நடந்து கொண்டிருந்தாள் கையிலுள்ள சாக்லேட்டை விழுங்கிக் கொண்டு. உண்டு விட்டு கிளம்பிடலாம் என்றெண்ணிய யாஷின் விழிகள் சட்டென்று ஆண்களின் உடை பிரிவிற்கு தாவ ஏதோ எண்ணம் வந்தவளாக உள்ளே நுழைந்து விட்டாள். ஆம், அவ்வப்பொழுது அரிதாக அவளுக்கு எடுக்கும் கணங்களில் நவீனுக்கும் எடுப்பதுண்டு. 'அவனிடம் என்ன நிறத்தில் ஆடை இல்லை' என்பதை நினைவுப்படுத்த முயன்றவளின் கரங்களை தீவிரமாய் மேலாடைகளை ஆராய அலைபேசி ஒலித்து விட்டது.

எடுத்து பார்த்தவளின் முகம் சட்டென்று பிரகாசமாக அழைப்பை ஏற்று, "நானே கூப்டணும் நினைச்சேன்" என்றவளின் விழிகள் தனக்கு பின்புறம் நின்றிருந்த ஷமீயை கவனிக்க தவறவில்லை.


"எங்க இருக்க யாஷ்" என்றவனுக்கு பதில் கூறியவள், "ப்ம்ச்...கண்டிப்பா வர முடியாதா நவீன்? ஷமீ தான் உங்களை கேட்டுடே இருந்தா" என்று சலித்து முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் செவியில் ப்ளூடூத்தை பொருத்த முயன்றப்படி.


"நோ யாஷ் இந்த முறை கண்டிப்பா வர முடியாது, ரொம்ப பிஸி" என்று அவளை சமாதானம் செய்தவன் அங்கு எடுத்திருந்த புகைப்படங்களை அவளுக்கு பகிர்ந்திருந்தான். அந்த இடங்களின் அழகில் லயித்து விழிகளை விரித்து, "வாவ், சூப்பரா இருக்கு நவீன். என்னையும் அடுத்த முறை கூட்டிட்டு போகணும்" என்று உறுதி கேட்டவள், கிளம்பும் பொழுது ஷமீ அவன் வீட்டு கதவை தட்ட முயன்றதை கூறி புன்னகைக்க அவர்களின் பேச்சுக்கள் நீண்டு கொண்டே சென்றது மேலும் சில நிமிடங்கள்.



அவளுக்கு சவிதாவிடமிருந்து அழைப்பு வர, "சரி நவீன், நான் வீட்டுக்கு போய்ட்டு உங்களுக்கு கூப்பிடுறேன்" என்று சவிதாவின் அழைப்பை ஏற்றவள், "எல்லாம் முடிச்சாச்சும்மா, சாப்பிட்டு டென் மினிட்ஸ்ல்ல கிளம்பிடுவோம்" என்று அவரையும் துண்டித்து ஷமீயை ஆராய அவளது இதயம் அவளிடமே இல்லை.


"ஷமீ" என்றவளின் விழிகள் அவசரமாய் அந்த இடத்தை நொடியில் துழாவ முயல்குட்டி எப்பொழுதோ அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தாள். பேதையின் உயிர் அவளின் கையிலே இல்லை தான். பதகளிப்புடன் அவ்விடத்தை முழுவதுமாக ஒரு சுற்று சுற்றியவள் ஷமீராவை காணாது போக கீழே இறங்கி அடுத்த தளத்தில் தேட முனைந்தாள். விழிகளெல்லாம் கலங்கி நீர் துளிகள் தேங்கி நின்றது எப்பொழுது வேண்டுமானாலும் கீழ் நோக்கி பயணிக்க தயாராய்.


'கடவுளே! ஷமீ எங்க இருங்க நீ?' என்று அவளை மறந்து அலைபேசியில் லயித்து போன தன்னை தானே கடிந்து கொண்டவளுக்கு எதுவுமே ஓடவில்லை தான் பதற்றத்தில். ஆம், சட்டென்று மூளை செயலிழந்தது போல் உணர, 'ஷமீயை காணவில்லை' என்பது மட்டுமே பிரதானமாகி போனது.


தளர்ந்து போனவள் அடுத்த தளத்தை நோக்கி இறங்க முயல அதற்கு மேல் அவளை சோதிக்க விரும்பாது அவளின் தோளை ஒருக்கரம் சுரண்ட பட்டென்று திரும்பினாள். நவீன் ஷமீயை தூக்கி வைத்திருக்க இருவருமே புன்னகை ததும்ப நின்றிருந்தனர். ஷமீயின் கரங்கள் தான் பாவையை நோக்கி நீண்டிருந்தது.


"ஷமீ எங்க போன நீ? என் பின்னாடி தான இருந்த?" என்ற யாஷின் குரல் அதட்டலாக வந்திருந்தது. ஆம், இத்தனை நிமிடம் கண்களில் உயிரை தேக்கி வைத்து அவளை தேடிக் கொண்டிருந்தாள் அல்லவா?...அவர்களின் புன்னகை யாஷை சிறிதளவேணும் கூட எட்டவில்லை தான்.


"நான் தான் யாஷ், ஜஸ்ட் கிட்டிங்" என்று கண் சிமிட்டி புன்னகைத்த நவீனின் வார்த்தைகளில் அப்படியொரு கோபம் துளிர்க்க இருவரையும் முறைத்து திட்ட வாயெடுத்தவள் பேசாது அப்படியே கோபத்தை அடக்கியபடி கீழிறங்கி சென்றிருக்க நவீனோ, ஷமீயை பாவமாய் பார்த்தான். இருகைகளால் வாயை மூடி புன்னகைத்தவள், 'நா சொன்னா நீ செய்வியா?' என்ற பாவனையை கொடுத்தாள். ஆம், யாஷ்வியிடம் பேசியப்படியே அவளின் பின்பு வந்து நின்றிருந்தான் பாவைக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக. நவீன் மலையேற்றத்திற்காக சென்றிருக்க திடீரென்று எற்ப்பட்ட வெள்ளப்பெருக்கினால் அவனது பயணம் பாதியிலே தடையாகி இருந்தது. அதனால் சென்னைக்கு செல்லாமல் அப்படியே ஷமீயை காண வந்து விட்டான். ஷமீ நவீனிற்கும் அழைப்பு விடுத்திருந்தாள் ரூபா அலைபேசியிலிருந்து.



தன் முன் நின்றவனை கண்டு ஒரு நிமிடம் விழி விரித்த ஷமீ தான் யாஷூடன் விளையாடும் பொருட்டு சைகையில் அவனுக்கு ஐடியா கொடுத்திருந்தாள். ஷமீயை முறைத்த நவீன், "உன் பேச்சை கேட்டேன் பாரு! கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு டிவோர்ட்ஸ் வாங்கி கொடுத்திடுவ போலயே" என்றவன் முணுமுணுப்பில் ஷமீயோ இதழை பிதுக்கி அசட்டையாய் தோள் குலுக்கினாள். அவளது பாவனையில் அவனிதழில் புன்னகை தவழ, "உன்னை.. " என்று தாடையை பிடித்து இருபுறமும் ஆட்டியவன் யாஷை நோக்கி விரைந்திருந்தான் சமாதானம் செய்யும் பொருட்டு. வாங்கிய பொருட்களுக்கு பணத்தை செலுத்திய யாஷ்வி மகிழுந்தில் ஏறி அமர்ந்திருக்க ஷமீயும் நவீனும் இறுதி நிமிடத்தில் அடித்து பிடித்து ஓடி வந்து யாஷின் மகிழுந்தில் தொற்றிக் கொண்டனர். அவள் இருவரின் மேலிருந்த கடுப்பில் மகிழுந்தை இயக்கி இருந்தாள் கிளம்பி விடும் வேகத்தில்.


அவர்கள் அருகில் அமர்ந்தாலும் மறுத்து எதுவும் பேசாது அமைதியாய் மகிழுந்தை இயக்கினாள். ஆனால் முகம் தன்னுடைய எரிச்சலை அப்பட்டமாய் வெளிக்காட்ட நவீன் தான் நொந்து போனான் அவ்வப்பொழுது ஷமீயை விழிகளால் மிரட்டியப்படி. அவளோ இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற ரீதியில் காலாட்டிக் கொண்டு நவீன் மடியில் ஒய்யாரமாய் வீற்றிருந்தாள் அவனை ஓரக்கண்களால் பார்த்தப்படி.

சற்று நேரத்திற்கு மேல் பொறுமையிழந்த நவீன், "ஹேய் யாஷ், சும்மா விளையாட்டுக்கு தான பண்னோம். ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிற நீ?" என்று அவளை இயல்பாக்க முனைய மகிழுந்தை ஓரம் நிறுத்தியவள் அப்படியே ஸ்டியரிங்கில் தலை சாய்த்துக் கொண்டாள். உண்மையிலே அந்த நிமிடம் அவளுள் பரவிய உணர்வுகளை வார்த்தைகளில் வடித்திட முடியாது. கடையில் கேமிராக்கள் உள்ளது அதை ஆராய்ந்து கண்டறிந்து விடலாம், எத்தனையோ வழிகள் உண்டு தான் ஆனால் அதை எல்லாம் உணரும் நிலையிலே பேதையின் மனதும் மூளையும் இருந்திருக்கவில்லையே. எல்லாமே செயலிழிந்தது போலானது அந்த சில வினாடிகளே!



"யாஷ்.." என்றவன் அவளின் கைகளை பிடிக்க முயல, 'ம்ப்ச்...' என்று சலிப்புடன் தள்ளி விட்டவள் நிமிரவேயில்லை. ஆனால் ஷமீயோ நவீனிடமிருந்து யாஷ்வி மடிக்கு தாவி இருக்க அவளை முறைத்தாலும் விலக்கவில்லை. அவள் நன்றாக அமரும்படி தலையை ஒரு பக்கமாய் சாய்த்தப்படி நவீனையும் ஷமீயை நோக்கி ஆனால் விழிகளை இறுக மூடிக் கொண்டு படுத்திருந்தாள் தலையை முன்னோக்கி சரித்து.


"அத்தை, டின்னர் சாப்பிட்டு போவோம் தான சொன்னீங்க நீங்க?" என்று அதி முக்கிய வினாவை யாஷ்வி முகத்திற்கு அருகில் வந்து குனிந்து தாடையை பிடித்து ஷமீ கேட்க, "ஆமா, நீ செஞ்ச வேலைக்கு சோறு ஒன்னு தான் குறை" என்று முணுமுணுத்தவளின் இதழும் புன்னகையை விழுங்க முயன்றது. யாஷின் வார்த்தைகளில் நவீனின் இதழும் நன்றாகவே விரிந்து கொள்ள சத்தமாக சிரித்தப்படி அமர்ந்திருக்க யாஷ் முறைத்தாள் அவனை, 'அவள் தான் குழந்தை உனக்கென்னடா எருமை மாடே! முதலில் உன்னை தனியே சமாளிக்க முடியாது திணறினேன். இப்பொழுது இவளுடன் கூட்டு வேறயா? ஆண்டவா, இதுகளுக்கு மத்தியில என்னை மட்டும் எப்படியாவது காப்பாத்திடுடா' என்ற ரீதியில்.


அவளின் எண்ணங்களை படித்தவனும், "யெஸ் சகவாசம் சரியில்லை" என்று ஷமீயை கண்காட்டி கூற, "ஆமா ஆமா, ஷமீயை கண்டிக்கணும்" என்றாள் யாஷ் புன்னகையோடு. 'அடிப்பாவி' என்று பார்த்து, "ம்க்கும்.. நான் என்னை சொன்னேன்" என்று தொண்டையை செருமியவன் கரங்களில் தற்பொழுது மகிழுந்தின் கட்டுப்பாடு இடம் மாறியது. ஆம், நவீன் ஓட்டுநர் இருக்கைக்கு தாவியிருந்தான்.



சவிதா வேறு மீண்டும் அழைத்து விட அலைபேசியை உயர்த்தி ஆயாசமாக யாஷ் பார்த்தாள். இதனுடன் நான்காவது முறை அவரின் அழைப்பு. அவருக்கு அவருடைய பிரச்சனை, மகளும் பேத்தியும் இரவில் வெளியில் சென்றிருக்க பத்திரமாக வந்து விட வேண்டும் என்ற பதகளிப்பில் உறங்காது அறையில் நடை பயின்றவர் ரூபாவும் அவ்வப்பொழுது, "என்ன ரூபா ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சு. இன்னும் இவங்களை காணோம், ஷாப்பிங் போன உலகத்தையே இரண்டும் மறந்திடுங்களே!" என்று புலம்பி படுத்தி வைத்துக் கொண்டிருந்தார்.


யாஷின் பாவனையை வைத்தே யாரென்று யூகித்த நவீன் அலைபேசிக்காக கைகளை நீட்ட யோசிக்காது அவன் கைகளில் திணித்திருந்தாள். அழைப்பை ஏற்றவன் சவிதாவிடம் உரையாட துவங்க, 'அவன் எப்படி அங்கே?' என்று அதிர்ந்தாலும் அவருள் ஒரு வித ஆசுவாசம் பரவ சில
நிமிட இயல்பான உரையாடல்களுக்கு பின், "சரி பார்த்து சீக்கிரம் வாங்க" என்பதோடு அழைப்பு துண்டாகியது.


"எனக்கும் பசிக்கிது சாப்பிட்டு போகலாம்" என்ற நவீன் மகிழுந்தை அருகிலுள்ள உணவகத்திற்கு செலுத்த மறுப்பேதும் கூறாது யாஷ் அமைதியாய் அமர்ந்து கொள்ள ஷமீ தான் வளவளத்துக் கொண்டிருந்தாள் நவீனோடு. இருவரின் ஆர்ப்பாட்டமான பேச்சுக்களையும் மகிழுந்தை அதிர செய்து கொண்டிருந்த சிரிப்பொலிகளையும் இரசனையோடு பார்த்திருந்தவளின் இதழை கரையாத புன்னகை ஆக்கிரமித்துக் கொண்டது. உற்சாமாகயிருந்த அவர்களின் அந்த ஏகாந்த இரவுப்பொழுதுகளை நவீனின் வருகை மேலும் ரம்மியமாக்கியது. நவீன் பாடல்களை ஒலிக்க விட ஷமீ அதனோடு இணைந்து பாட அதற்கு அவன் ராகமிழுக்க என்று அவர்கள் செய்த அலப்பறையில் யாஷின் கோபமெல்லாம் இருந்த இடம் தெரியாது கரைந்து தான் போனது. அவர்களோடு கலக்கவில்லை என்றாலும் முகம் கொள்ளா புன்னகையோடு அமர்ந்திருந்தாள் யாஷ்வி. நவீன் அவ்வப்பொழுது ஓரக்கண்களால் பார்த்து யாஷையும் வம்பிலுக்க தவறவில்லை.


அந்த இரவு மட்டுமின்றி அடுத்து வந்த பகல் பொழுதும் அவ்வாறே இனிமையாக அமைந்திட்டது யாஷ்விக்கு! ஆம், மறுநாள் முழுவதும் வெளியில் தான் சுற்றித்திரிந்தார்கள். அவர்களுடன் கூடுதல் இணைப்பாக ரூபாவும் மனோகரும் இணைந்து கொள்ள சவிதாவும் கேசவனும் வீட்டிலே இருந்து கொண்டனர் அலைக்கழிப்பையும் உடல்நிலையையும் காரணம் காட்டி.



ஷமீ மட்டுமின்றி யாஷூமே அன்றைய தினம் முழுவதும் ஒரு வித ஆர்பரிப்போடே தான் சுற்றித்திரிந்தாள். அவ்வப்பொழுது விழிகள் வேறு மனோ அருகில் அமர்ந்திருந்த நவீனையே தீண்டி மீண்டு கொண்டிருந்தது. எப்பொழுதும் போல் அந்த அலட்சியமான உடல் பாவனையும் இதழ் வளைவுடன் அசட்டையாக தான் அமர்ந்திருந்தான். ஆனால் இப்பொழுதெல்லாம் யாஷின் விழிகள் அதில் அவனது பாவனைகளில் இரசனையோடு தான் படிந்திட்டது.
ஆடவனும் யாஷை கவனித்து, 'என்ன?' என்பதாய் புருவம் உயர்த்தி, கண்சிமிட்டி என்று வம்பிலுத்துக் கொண்டிருத்தான். யாஷ் எண்ணியதை போல் அல்லாது சிரமமின்றி இலகுவாகவே நவீன் எல்லாவற்றோடும் பொருந்தி தான் நின்றான். அவனையும் அறியாது முன்பை விட ஒரு நெகிழ்வு வந்திருந்தது ஆடவனிடம். அது யாஷின் பொருட்டாக கூட இருக்கலாம்.



அன்றைக்கு பிறகு யாஷ் நவீனை கண்டு கொண்டது திருமணத்தன்று தான். ஆம், அதற்கு பின் அவள் கண்களில் அகப்படுவதற்கான வாய்ப்புக்கள் அமையாது போனது. திருமணத்திற்கு உடை எடுக்கும் பொழுதும் மட்டுமே வெளியில் சென்றிருந்தாள் யாஷ். அப்பொழுது நவீன் அவசர வேலையின் காரணமாக வர முடியாமல் போயிருக்க அவனுக்கும் சேர்த்தே யாஷ்வி தான் உடை தேர்ந்தெடுத்திருந்தாள்.


சவிதாவும், "கல்யாணத்தை வைச்சுக்கிட்டு வெளிய சுத்தக் கூடாது யாஷ்ம்மா" என்று அவளுக்கு தடை விதித்திருக்க ரிதன் குடும்பத்தோடு இரண்டு வாரங்களுக்கு முன்பே வந்திருந்தான். ஷமீயும் பத்து நாட்களுக்கு முன்பு யாஷ்விடம் வந்து விட அவளால் அசைய முடியவில்லை. ஷமீ, ஸ்மிருதி மனிஷா மற்றும் புதிதாக பிறந்திருந்த இளம்சிட்டு என்று வீட்டை நிறைத்து அதகளப்படுத்த நவீன் கூறியது போல் ஷமீயும் ஸ்மிருதியும் யாஷை தான் வால்ப்பிடித்து சுற்றிக் கொண்டிருந்தனர்.



மனோவும் ரூபாவும் திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு வந்து ஜோதியில் ஐக்கியமாகி போனார்கள். அலைபேசியில் தொடர்ந்த உரையாடல்கள் கூட நவீனிற்கு பஞ்சமாகி போனது தான் பரிதாபம். அவன் அழைக்கும் பொழுதெல்லாம் யாஷின் அலைபேசி ஷமீ அல்லது ஸ்மிருதி கைகளில் இருந்து போக, வாணியும் நவீனை கடினப்பட்டு திருமணத்தை காரணம் காட்டி வீட்டிற்குள் பிடித்து வைத்திருந்தார்.



திருமணத்திற்கு முதல் நாள் காலை போட்டோ ஷூட் மாலை நிச்சயதார்த்தம் மறுநாள் அதிகாலை திருமணம் என்று வரிசையாக ஏற்பாடு செய்திருக்க யாஷூம் நவீனும் அதிலே அமிழ்ந்து தான் போனார்கள். யாஷ்வியினால் தான் நடந்து கொண்டிருப்பதை நிஜமென்று நம்ப முடியவில்லை. அவ்வப்பொழுது விழிகளை விரித்து சுழற்றிக் கொண்டிருந்தாள் நவீனை நோக்கி. ஷமீயும் ஸ்மிருதியும் யாஷை போலவே அலங்காரம் செய்து சுற்றித் திரிய ரூபா தான் நொந்து போனாள். ஆம், யாஷ்வி அருகில் நின்று ஒப்பனைகளை சரி செய்து பரிசுப்பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டிருந்தவளுக்கு இலவச இணைப்பாக ஷமீக்கும் ஸ்மிருதிக்கும் ட்ச்அப் வேலை கொடுக்கப்பட்டிருந்தது. "ரெண்டு பேரும் பண்ற அலும்பு தாங்க முடியலை டீ, உங்களை சொல்லக்கூடாது. இதுக்கெல்லாம் சப்போர்ட் செய்த உங்க அத்தைய தான் வெளுக்கணும்" என்று யாஷை முறைத்தாளும் அவர்களிலிருவரையும் கவனிக்க தவறவில்லை. திருமணம், ஏற்பாடு செய்திருந்தது போல் வெகு சிறப்பாகவே நடந்தேறியது.




தொடரும்.....


விமர்சனம் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி மக்களே 😍😍❤️❤️...
 
Last edited:
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Sis ippo kooda nambhavae mudiyala ivolo sikkiram ivanga rendu perukum kalyanam panni.vachatha oru vela ithu ku ellam sethu vachi perusa prachanai kuduthuduvigalo
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Paru da athukula marriage yum vanthuruju superuuu 💝💝shami ne naveen kuda irutha yash ya nalla pandra ma 😁😁eppo shrumathi, shami yash oda vallu thaa😊😊 naveen yash santhosama iruga 💖💖🥰🥳
 
Top