• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 8

Administrator
Staff member
Messages
567
Reaction score
808
Points
93
தேனும் இனிப்பும் 8:

அவனும் நானும்

மரமும் நிழலும்…

தீபாவின் வார்த்தைகள் தந்த தாக்கத்தில் கலங்கி போயிருந்தவள் குழப்பம் சுமந்த மனதுடன் வந்து நீள்விருக்கையில் விழிகளை மூடி அமர்ந்துவிட்டாள்.

நொடியில் இத்தனை வருட போராட்டங்கள் அலையலையாய் வந்து போக உள்ளுக்குள் பெரிதான போராட்டம்.

மீண்டும் ஜீவா அவளுடைய ஜீவா அவளுடைய வாழ்வில் உண்மையா பொய்யா இதனை ஏற்றுக் கொள்வதா இதுவும் கானல் நீராகிடுமா? என்று காயம் கண்ட மனது பலவாறாக அஞ்சியது.

ஒரு முறை அடைந்த ஏமாற்றத்தை கடந்து வரவே பல வருடங்கள் ஆனது மீண்டும் ஆசை வளர்த்து இல்லாமல் போனால் நீ என்ன ஆவாய் என்று உள்ளே கூக்குரல் எழ ஒரு கணம் நெஞ்சுக்கூடு பயத்தில் ஏறி இறங்கியது.

தனக்குள்ளே அஞ்சி உழன்று கொண்டிருந்தவளது கரத்தில் மோதி சென்ற சூடான மூச்சுக்காற்று கலைக்க விழிகளை திறந்து பார்த்தாள்.

அவளது காலடியில் அமர்ந்திருந்த ஜீவா கரத்தை எடுத்து கன்னத்தில் பதித்து கொண்டான்.

சடுதியில் விழிகள் கலங்கியது. இதோ இந்த கணம் அவனது கன்னத்து சூட்டை தான் உணரும் கணம் உண்மைதானா என்று மனம் நம்ப மறுத்தது.

பலவருடங்களாக கனவில் மட்டும் கண்டுவந்த ஒன்று அவனது அருகாமை இப்போது நிஜத்தில் நடக்க இவள் உணர பயந்தாள்.

அவளது முகம் காண்பிக்கும் உணர்வுகளை படித்தவனுக்கு நெஞ்சம் கனத்து போனது. அத்தனை வருட ஏமாற்றத்தை சுமந்து இருப்பவள் இப்போது நடப்பவற்றை எப்படி ஏற்று கொள்வாள் என்று மனது வினா எழுப்பியது.

நியாயமான ஆசைகள் கூட நிறைவேறாத குழந்தையின் பாவனை தான் அவளிடத்தில்.

அவளது கலங்கிய விழிகளில் இருந்து ஒரு சொட்டு நீர் அவனது முகத்தில் வந்து விழுந்தது.

அவளது விழிகளை துடைத்துவிட்டவன், “ஜானு…” என்று அழைக்க, அந்த குரலில் இருந்த உயிர்ப்பு அவளது அழுகையை அதிகரித்தது.

வெடிக்க முயன்ற கேவலை அடக்கியவளது முகம் கோவைப்பழமாக சிவந்து போனது.

“சாரி…” என்று அவளது கரத்தில் முகத்தை புதைத்தவனது கண்ணீர் கரகரவென கரத்தில் இறங்கியது.

அதில் அதிர்ந்தவள் தன்னிலை மறந்து, “ஜீவா…” என்றிட,

“என்னை மன்னிச்சிடுடி. இந்த வார்த்தையை கேட்க கூட எனக்கு தகுதி இல்லை” என்று உடல் குலுங்கினான்.

தன்னவனின் கண்ணீரில் தன்னுடைய அலைப்புறுதல் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட, “என்ன ஜீவா நீ என்கிட்ட…” என்றவளுக்கு வார்த்தை வராமல் போக தலையை இடம் வலமாக அசைத்தாள்.

“நான் இந்த ஜென்மம் முழுக்க மன்னிப்பு கேட்டாலும் என் பாவம் தீராது” என்று அவன் வருந்த, “ம்ஹூம் என் ஜீவா எந்த தப்பும் செய்யலை” என்றவள் அவனருகே இறங்கி அமர்ந்து கொண்டாள்.

“நீ இத்தனை வருஷமா பட்ற கஷ்டம் எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் காரணம்” என்று அவன் கண்ணீரை உகுக்க, “ம்ஹூம் இல்லைவே இல்லை.‌ என் ஜீவாக்கு யாரையும் தெரியாம கூட கஷ்டப்படுத்த வராது” என்று அவனது கண்ணீரை துடைத்தாள்.

“நீ இவ்ளோ தூரம் நம்பிக்கை வைக்க எனக்கு எந்த தகுதியும் இல்லை” என்றவனின் கண்களில் கண்ணீர் கன்னத்தில் இறங்கியது

“என் ஒட்டு மொத்த வாழ்க்கையோட பிடிப்பு நம்பிக்கை எல்லாமே நீதான் ஜீவா” என்று அவள் உணர்ந்து கூறினாள்.

“ஏன்டி நீ இப்படி இருக்க. என்னை எதாவது திட்டு நீ இந்த மாதிரி பேச பேச எனக்கு குற்றவுணர்ச்சி அதிகமாகுது. நான் உனக்கு செஞ்சது எவ்ளோ பெரிய துரோகம்” என்று அவளது முகத்தை பார்க்காது திரும்பி கொண்டான்.

“என்னைப் பாரு ஜீவா” என்று அவனது முகத்தை தன்னை நோக்கி திருப்பியவள் மெலிதான மென்னகையுடன், “தெரிஞ்சு செஞ்சா தான் துரோகம் ஜீவா. எனக்கு தெரியும் உனக்கு நான் நினைவுல இருந்தா இந்த உலகமே எதிர்த்தாலும் நீ என்னை விட்ருக்க மாட்ட” என்க, இவளுக்கு தன் மீது ஏன் இத்தனை நம்பிக்கை என்று உள்ளம் விம்மியது.

“நான் உன்னை திட்டுவேனா ஜீவா. என்னால அது முடியுமா ஜீவா?” என்று வினவியவள், “எப்படி பட்ட சூழ்நிலையில விட்டு போயிருந்தாலும் எனக்கு நீ ஜீவிய கொடுத்துட்டு தான் ஜீவா போன. என் வாழ்க்கையோட பிடிப்பு ஜீவா அவ. ஒவ்வொரு நாளும் அவ உருவத்துல நான் உன்னை பாக்குறேன் ஜீவா. அவ உருவத்துல நீ என் பக்கத்துல இருக்க ஜீவா. இதுக்கு மேல என்ன வேணும் எனக்கு” என்று அவனது கன்னம் வருட,

அந்த கரத்தை கன்னத்தோடு பிடித்து வைத்தவன், “என்ன நடந்து இருந்தாலும் நான் உன்னை விட்ருக்க கூடாது ஜானு. உன்னோட காதலுக்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை போல. அதான் கடவுள் உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாரு” என்று அவள் முகம் கண்டான்.

தவிப்புடன் இடம் வலமாக தலையசைத்தவள், “இல்லை இந்த ஜென்மத்தில உன்னைவிட யாராலும் என்னை காதலிக்க முடியாது. இவ்வளவு காதலிக்க வைக்கவும் முடியாது” என்று கூற,

“தீபா சொன்னது சரிதான் நான் என்னோட காதலுக்கு இதுவரை எதுவுமே செய்யலை.‌ உனக்காக நான் எதையும் செய்யலை” என்று வருந்தினான்.

“அவங்க கோபத்துல சொன்னாங்க. அதை பெருசா எடுத்துக்காதீங்க. என்னையும் தான் செல்பிஷ்னு சொன்னாங்க உங்க விஷயத்துல” என்றதும், “என்ன?” என்றவனது குரலில் திகைப்பு.

“ஆமா அவங்க என்கிட்ட உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாங்க. நான் மாட்டேன்னு சொன்னதும் நான் செல்பிஷ் நீங்க என்னைவிட்டதால நான் இப்போ நீங்க கஷ்டப்படணும்னு இப்படி பண்றேனாம்” என்று சற்று நேரத்திற்கு முன்பு மலையாய் தெரிந்த ஒன்று அவனது கண்ணீர் முன்பு காணாமல் போனது போல இலகுவாக கூறியவள், “அது உண்மைன்னா இதுவும் உண்மையா?” என்று வினவிட,

“ம்ஹூம் உன்னை சம்மதிக்க வைக்குறதுக்கு அப்படி சொல்லி இருப்பா” என்று ஜீவா மறுத்தான்.

“ஹம்ம்…” என்று மெலிதாக ஜானு தலையசைக்க,

“அவக்கேட்டதை அவ கேட்குறதுக்கு முன்னாடியே நான் கேட்டு இருக்கணும் ஆனால் கேட்கலை” என்று நிறுத்திவிட்டு அவள் முகம் கண்டவன்,

“எனக்கு உன்கிட்ட திரும்ப உன் வாழ்க்கையில இடம் கொடுன்னு கேட்க தகுதி இல்லைன்னு தோணுச்சு அதான் கேக்கலை” என்று குற்றவுணர்வில் முகம் வாடினான்.

“இந்த ஜென்மத்தில அந்த தகுதியை உனக்கு மட்டும் தான் எழுதி கொடுத்து இருக்கேன்” என்று மெலிதாக புன்னகைத்தாள்.

“நான் கேக்காததுக்கு இது கூட ஒரு காரணம்” என்று ஜீவா கூறியதும் ஜானு கேள்வியாய் அவனை கண்டாள்‌.

“நான் கேட்டா நீ எந்த காலத்திலுயும் எதுக்குமே நோ சொல்ல மாட்ட” என்று ஜீவா கூறியதும் ஒரு நொடி வியப்பில் புருவம் உயர்த்தியவள்,
“உனக்கு என்னை அவ்ளோ தெரியுமா ஜீவா?” என்று வினவினாள்‌.

“ஹ்ம்ம்…” என்று மெலிதாக தலையசைத்தவன், “உன் அளவுக்கு இல்லை” என்க, “சரிதான்” என்று ஒப்புக் கொண்டவள், “என் ஜீவாக்கு இல்லாதது என்கிட்ட எதுவுமே இல்லை” என்றாள்‌‌.

அந்த கணம் இந்த பெண்ணைத்தான் இவ்வளோ நாள் தவிக்கவிட்டுள்ளாய் வாட்டி வைத்துள்ளாய் என்று உள்ளம் கூச்சலிட்டது.

“நான் இல்லாம இத்தனை வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டுட்டியா?” என்று கரகரத்த குரலில் கேட்க,

“ம்ஹூம் ரொம்ப வருஷம் இல்லை. இந்த ரெண்டு வருஷம் தான். முன்னாடி நீங்க என்கூட இல்லைன்னாலும் தினமும் பார்த்திட்டு நீங்க சந்தோஷமா இருக்கதை பாத்து நானும் சந்தோஷப்பட்டு வாழ்ந்தேன். ஆனால் இந்த ரெண்டு வருஷம் நீங்க எப்படி இருக்கீங்க என்ன பண்றீங்கன்னு உங்களை பாக்காம ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன்” என்று வேதனையில் புன்னகைக்க முயன்றாள்.

அந்த வேதனையின் ஆழத்தை உணர்ந்து அவளை தோளோடு அணைத்து கொண்டவன், “சாரி” என்று அவளது நெற்றி முட்ட, “போதும் உங்க சாரி” என்று அவள் ஏற்க மறுத்தாள்.

“தீபா சொன்னது சரிதான் நான் உனக்கு நம்மோட காதலுக்கு எதுவுமே செய்யலை. இனியாவது செய்யணும்னு ஆசைப்பட்றேன். நீ என்னை மறுக்க மாட்டேன்னு தெரிஞ்சு தான் கேக்குறேன் என்கூட வர்றீயா ஜானு” என்று ஒட்டுமொத்த ஏக்கத்தையும் காதலையும் தேக்கி கூற, இவளுக்கு அந்த கணம் அண்ட சாசரமும் நடுங்கியது.

நிஜம் தான் அந்த கணம் என்று உள்ளம் முழுவதும் கூச்சல் விரவிட விழிகளை மூடி கொண்டாள்.

“ஏன் அமைதியாகிட்ட லாவண்யா இருந்திருந்தா இவன் நம்மள தேடி வந்திருக்கமாட்டான். இவனுக்கு நம்ம ஆப்ஷனல்தான்னு உனக்கு தோணுதா” என்று தனது எண்ணத்தை வெளியிட,

சடுதியில் விழிகளை திறந்து அவனை உறுத்து விழித்தவள், “லாவண்யா உயிரோட இருந்திருக்கலாம் அப்படி இருந்திருந்தா நீங்க தனியா கஷ்டப்படுருக்க மாட்டீங்கன்னு தோணுது” என்று கூற, “உன்னை பத்தி நீ நினைக்கவே மாட்டீயாடி” என்று ஆற்றாமையாக குரல் வெளி வந்தது.

“தீபா அக்கா சொன்னது சரிதான் நான் ரொம்ப செல்பிஷ். இப்பவும் என்னை பத்தி என்னோட சந்தோஷத்தை பத்தி நினைச்சிட்டு தான் இதை சொல்றேன் நீ சந்தோஷமா இருந்தாதான் நான் நிம்மதியா இருக்க முடியும்னு சொல்றேன்” என்று கூற, “வாழ்க்கை முழுக்க என் சந்தோஷத்தை தூரத்துல இருந்து பார்த்தே வாழ போறீயா? என்கூட இருந்து சந்தோஷத்தை பகிர்ந்துக்க மாட்டியா?” என்று ஏக்கத்தை சுமந்து கேட்க,

“அதுக்கான கொடுப்பினை எனக்கு இருக்கா?” என்று விரக்தி குரலில் கேட்டாள்.

“ஏன் இல்லை. உனக்கு மட்டும் தான் இருக்கு” என்று ஜீவா அழுத்தி கூற, “ம்ஹூம் எனக்கு அப்படி தோணலை” என்று மறுத்தாள்.

“ஏன்?” என்று ஒற்றை வினா அவன் தொடுக்க, “என்னால உங்க இந்த முடிவால நிறைய பிரச்சனை வரும். முக்கியமா உங்க குடும்பத்தில. எனக்கு தெரியும் உங்களுக்கு உங்க பேமிலி எவ்ளோ முக்கியம்னு” என்று நிறுத்தி அவன் முகம் காண, “என் குடும்பம் முக்கியம் தான் ஆனால் அதே அளவுக்கு நீயும் ஜீவியும் முக்கியம்” என்று எடுத்துக் கூறினான்.

“என்னால உங்க குடும்பத்துல இருக்க அமைதி கலைய வேணாம்” என்றவள் நிறுத்தி அவனை காண, “ஸோ…” என்றவனும் அவளை பார்த்தான்.

தயங்கியவள், “நீங்க உங்க மாமா பொண்ணு மஹிமாவையே கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று விழிகளை மூடி திறந்து கூற,

“இந்த ஜென்மத்துக்கும் நான் உன்னை விட்டு பாவத்தை தூக்கி சுமந்து குற்றவுணர்ச்சில விரக்தியில சாகணும்னு முடிவு பண்ணிட்டியா” என்று ஜீவா கூறியதும் பட்டென்று அவன் வாய் மீது கரம் பதித்தவள் இடம் வலமாக தலை அசைத்தாள்.

“நீ சொல்றதுனால அதான் நடக்கும்டி. கொஞ்ச கொஞ்சமா என்னை அரிச்சிட்டு இருக்க குற்றவுணர்ச்சி சீக்கிரமா கொன்னு புதைச்சிடும் என்னை” என்று ஜீவா வேதனையில் முகம் கசங்க, “ஜீவா ப்ளீஸ்” என்றவளது குரல் தழுதழுத்தது‌.

“உனக்கு என்மேல நம்பிக்கையே இல்லையா?” என்று கேட்க,
“நான் நம்புற ஒரு ஆள் நீங்க மட்டும் தான். ஆனால் இது வேற” என்று மீண்டும் கூறினாள்.

“என்ன வேற. என் வீட்டை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. இனிமேல் நீயும் என் மகளும் என் கூட தான்” என்று அழுத்தி கூறியவன் பின் மெல்லிய குரலில்,

“கல்யாணம் பண்ணிக்கலாம் ஜானு” என்று அவளது கரத்தை பிடிக்க, இவளுக்குள் மெலிதான பூகம்பம்.

விழிகளில் மெல்லிய நீர்ப்படலம் படர்ந்திட, “இது கனவு இல்லை தான?” என்றிட, அதில் உருகி போனவன் அவளை அணைத்து கொண்டான்.

“இல்லை இனிமேல் நான் உன்னோட நிஜம் மட்டும் தான் நீ கனவுல வாழ வேண்டிய அவசியம் இல்லை” என்று அவளது நெற்றியில் ஜீவா இதழ் பதிக்க, “இனியொரு ஏமாற்றத்தை என்னால தாங்கிக்க முடியாது ஜீவா. என் வாழ்க்கையில நான் எதிர்ப்பார்ப்ப துறந்து ரொம்ப வருஷமாச்சு. உன்மேல இருக்க நம்பிக்கையில ஒரு அடி எடுத்து வைக்கிறேன்” என்று அவனை கழுத்தோடு கட்டி
கொள்ள, “இத்தனை வருஷத்துக்கும் சேர்த்து உன்னை சந்தோஷமா வாழ வைக்கிறேன். நாம வாழ்வோம்” என்று தானும் அவளை இறுக்கிக் கொண்டான்.
 
Well-known member
Messages
1,051
Reaction score
759
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr

Marupadiyum ethavathu kolappam undu pannidatha Meera ma😥😥😥😥😥😥😥😥😥😥😥

Rendu perum seekirama sernthu happy ah irukkanum
 
Well-known member
Messages
480
Reaction score
346
Points
63
Vithi oda vilayatula avanga vazhkai la already neraiya nadanthuchi marupadiyum ivangaluku endha prachanaiyum andha mathiri vandhu da koodathu
 
Top