• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 7

Administrator
Staff member
Messages
567
Reaction score
808
Points
93
தேனும் இனிப்பும் 7

அவனும் நானும்

அவையும் துணிவும்

ஜீவாவின் வார்த்தையை நம்ப முடியாதவளது விழிகள் அதிர்ந்து நோக்க, அவனிடமிருந்த அமைதியே உண்மை தன்மையை பறைச்சாற்றியது.

சடுதியில் விழிகள் கலங்கிட இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. முதன் முதலாக முகம் முழுவதும் சிரிப்புடன் ஜீவாவின் கையில் நிச்சய மோதிரத்தை போட்டுவிட்ட லாவண்யா வதனம் பிறகு உலகமே கைக்கூடிய மகிழ்வில் அவன் கையால் மங்களநாணை பெற்று கொண்டவள் தன்னிடத்தில் அன்பும் அக்கறையும் காட்டி பேசும் லாவண்யா ஜீவாவை கண்டதும் அழகாய் மலரும் லாவண்யா என்று அவளது பிம்பம் வரிசையாக நழுவி செல்ல விழிகள் கலங்கின.

ஜீவா அவளைத்தான் அமைதியாக அவதானித்திருந்தான். அவளது கலங்கி சிவந்த கண்கள் உண்மையான வருத்தத்தை தெரிவிக்க இவனுக்கு அவளை கண்டு அந்த நிலையிலும் வியப்பு தான்.

இவள் ஏன் இப்படி இருக்கிறாள். இவளது இடத்தில் வேறு ஒருவர் இருந்தால் நிச்சயமாக வருந்தியிருக்கமாட்டார்கள். ஏன் தானாக இருந்தால் கூட தான் வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவள் என்று ஒரு நொடியேனும் துவேஷம் கொண்டிருப்பேன்.

ஏன் தனக்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று ஏதேனும் ஒரு புள்ளியில் மகிழ்ந்திருப்பேன்.

ஆனால் இவள் அவை ஏதுமின்றி லாவண்யாக்காக வருந்தி கண்ணீர் சிந்துகிறாளே என்று அவள் மீதான பிம்பம் உயர்ந்து கொண்டே தான் சென்றது.

விழிகளை நிறைத்த நீரை உள்ளிழுத்தவள், “எப்படி என்ன ஆச்சு…?” என்று தயங்கி பார்க்க,

“டெலிவரி காம்ளிகேஷன்” என்றவனது குரல் மெதுவாய் வந்தது.

அமைதியாக கேட்டு கொண்டவள் நரேன் ஏன் இதனை பற்றி தன்னிடம் கூறவில்லை என்று நினைத்தாள். தான் தான் அவனை பற்றி எதையும் தெரிவிக்காதே என்று கூறியதை அக்கணம் மறந்து போனாள்.

பிறந்த நொடியே தாயை பிரிந்த குழந்தையின் நிலையை எண்ணி வருந்தியவள், “குழந்தை?” என்று நிறுத்த,
“அம்மா பாத்துக்கிறாங்க” என்று வானத்தை வெறித்தான்.

“கடவுளுக்கு யார் சந்தோஷமா இருந்தாலும் பிடிக்காது போல” என்று தானும் தோட்டத்தில் பார்வையை பதித்தாள்.

அவனது நல்வாழ்வை தெரிந்து கொள்ள அவா கொண்டவளுக்கு அவன் தனியாய் பிள்ளையுடன் மனைவியின்றி துன்பப்படுகிறான் என்றதும் மனது பாரமானது.

லாவண்யா மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தான். லாவண்யாவும் ஜீவாவையே உயிராக நினைத்து வாழ்ந்தாளே. இருவரும் அவ்வளவு அன்னியோன்யமாக வாழ்ந்தனரே. திடீரென்ற லாவண்யாவின் இழப்பை ஜீவா எப்படி தாங்கியிருப்பான்.

அவள் இவ்வுலகில் இல்லை என்பதை உணர்ந்து எவ்வளவு துன்பப்பட்டிருப்பான் உயிராய் நேசித்தவளின் இன்மையில் எப்படி வாடியிருப்பான் என்று அவனுக்காக மனம் கலங்கி துடித்தது.

இவ்வளவு நேரம் அல்லாது விழிகள் அவனது தோற்றத்தை ஆராய்ந்தன. இதோ இந்த இரண்டு வருடத்தில் இளைத்து உறங்காத விழிகளுமாக எப்படி ஆகிவிட்டான்.

தினமும் அலுவலகத்திற்கு எவ்வளவு நேர்த்தியாக வருவான். கொண்டவள் போனதும் எல்லாம் போய்விட்டதை உணர்ந்தாள்.

அதன் பிறகு வார்த்தைகளுக்கு பஞ்சம் ஆனது‌. இருவரிடமும் கனத்த மௌனம். ஜானு லாவண்யாயின் இழப்பின் அதிர்ச்சியில் இருந்து வெளிவர முயற்சிக்க ஜீவாவும் லாவண்யாவின் எண்ணங்களுடன் தான் இருந்தான்.

மகளை பார்த்திருந்த ஜானுவிற்கு இப்போது தான் நேற்று தீபா கேட்ட கேள்வியின் காரணம் விளங்கியது. சடுதியில் இதயத்தினோரம் ஒரு அதிர்வு தாக்கியது.

இரண்டாவது வாய்ப்பா அதுவும் எனக்கா? என்று மெலிதாய் ஒரு பூகம்பம் தாக்க விழிகளை மூடி திறந்தவள் அருகில் இருந்தவனை திரும்பி பார்த்தாள்.

அந்த கணம் எதுவும் உறைக்கவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் தான் இருப்போம் என்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

என்ன நினைப்பது கூறுவது என எதுவும் அவளுக்கு தெரியவில்லை. மீண்டும் ஒரு ஆரம்பம் மீண்டும் ஒரு வாய்ப்பு என்ற எண்ணமே அவளை மௌனியாக்கியது.

இவர்கள் இருவரும் அமைதியாகவே நிற்பதை கண்ட தீபா, “நரேன் அவங்க ரெண்டு பேரையும் பாரேன்” என்று கணவனை அழைத்து கூற, “என்ன?” என்றபடி அவனும் நிமிர்ந்து பார்த்தான்.

“ரெண்டு பேரும் ரொம்ப நேரமா சைலண்டாவே இருக்காங்க” என்று தீபா கூற, “அதான் எனக்கும் புரியல‌. இப்படியே இவங்க நைட்டு முழுக்க நின்னாலும் ஆச்சரியப்பட்றதுக்கில்லை” என்று நரேன் அங்கலாய்த்தான்.

“இப்பவும் நாம தான் எதாவது பண்ணணும் வா போகலாம்” என்று தீபா மொழிய, “நீ போய் என்ன பேச போற?” என்று நரேன் கேட்டான்.

“ஏதாவது பேச வேண்டியது தான். உன் தங்கச்சி வாழ்க்கை இனிமேலாவது நல்லா இருக்கணும்ல” என்று தீபா கேட்க, “ஆமா கண்டிப்பா” என்று நரேன் கூறினான்.

“அப்போ வா நாம தான் ஏதாவது பேசணும். நான் பேசுறப்போ தங்கச்சிக்கு சப்போர்ட் பண்ணிட்டு வராத. அவளை எப்படி சம்மதிக்க வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்” என்றுவிட்டு தீபா நடக்க,

“விழுந்துடாம விளையாடுங்க” என்று இளையவர்களிடம் கூறியவன் மனைவி பின்னே சென்றான்.

அவர்கள் வருவதை கண்டதும் ஜானு தம்பளரை எடுத்து கொண்டு சமையலறை செல்ல,

“ஜானு…” என்றபடி அவள் பின்னோடு வந்தாள் தீபா.

“சொல்லுங்கண்ணி” என்றவள் தேநீர் தயாரித்த பாத்திரத்தை கழுவினாள்.

“நீதான் சொல்லணும்” என்று தீபா கூற, “நானா?” என்று திருப்பி பார்த்தவள் பிறகு நிதானமாக, “ஏன் ண்ணி என்கிட்ட சொல்லலை?” என்று வினவினாள்.

“எதை சொல்லலை” என்று தீபா புரியாதது போல கேட்க, ஜானு லேசான முறைப்புடன், “லாவண்யா அவங்க இறந்ததை” என்று தயங்கி கேட்டாள்.

“சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்ப?” என்று தீபா முறைப்புடன் காண, ஜானுவிடம் மௌனம். அவளுக்கும் புரிந்தது
‌அவளால் என்ன செய்திருக்க முடியும். அவனது குடும்பத்தை தாண்டி சென்று ஆறுதல் கூறி தேற்றியிருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது என்று தெரிந்தது.

அமைதியாக மீண்டும் பாத்திரத்தை கழுவி கவிழ்த்தியவள் சில கணங்களுக்கு பிறகு திரும்பி, “நீங்க சொன்ன மிராக்கிள் செகண்ட் சேன்ஸ் எல்லாம் இது தான ண்ணி?” என்று நிதான குரலில் வினவ, “ஆமா” என்று அமர்த்தலாக பதில் அளித்தாள் தீபா. ஜானுவிடத்தில் மீண்டும் அமைதி குடிபுகுந்தது.

“என்ன பதிலயே காணோம்? இதை நீ எதிர்ப்பாக்கலைல?” என்று தீபா வினவ, “ஆம்” எனும் விதமாக அவளது தலை மேழும் கீழும் அசைந்தது.

“நானே எதிர்ப்பார்க்கலை. கடவுள் உன்னை மட்டும் ஏன் இப்படி கஷ்டப்படுத்திட்டே இருக்காருனு நிறைய டைம் வருத்தப்பட்டிருக்கேன். இப்போதான் உனக்கு விடிவு காலம் வந்திருக்கு” என்று தீபா கூற, ஜானு முகம் மெல்ல மாறியது.

அவளது உள்ளத்தை உணர்ந்த தீபா, “லாவண்யா போனதுல எனக்கும் வருத்தம் தான். ஆனால் விதியை யாராலும் மாத்த முடியாது டி. எல்லாருக்கும் வாழ்க்கையில செகண்ட் சான்ஸ் கிடைக்காது ஜானு. கடைசி வரை நீ தனியா கஷ்டப்படுவியோன்னு நான் ரொம்ப பயந்தேன். இனிமேல் உன் வாழ்க்கை நல்லாயிருக்கும்” என்று தீபா அவளது தோள் தொட்டாள்.
ஜானு அமைதியாக சுவற்றை வெறித்தாள்.

“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ஜானு?” என்று தீபா அதட்ட, “இவ்ளோ நாள் இல்லாம ஏன் இப்போ இதை” என்றவள் நிறுத்திவிட்டு தீபாவை கண்டாள்.

“எனக்கு முன்னாடியே யோசனை இருந்துச்சு. இருந்தாலும் லாவண்யா போன உடனே ஜீவாக்கிட்ட இதை பேச முடியாதுனு தான் எதுவும் பேசாம இருந்தேன். பட் இப்போ பேசுறதுக்கு அவசியம் வந்திடுச்சு” என்றவள் நிறுத்தி ஜானு முகம் கண்டாள். ஜானுவும் என்ன அவசியம் என்று தீபாவின் வதனம் நோக்கினாள்.

“ஜீவாக்கு செகண்ட் மேரேஜ் பண்ண முடிவு பண்ணி இருக்காங்க அவங்க வீட்டுல” என்றதும், “ஓ…” என்றவளது குரல் மெதுவாக உள்வாங்கியது.

“அதுவும் லாவண்யாவோட தங்கச்சி மஹிமா கூட” என்றதும் ஜானுவிற்கு சடுதியில் மஹிமாவின் முகம் வந்து போனது.

ஜானுவுக்கு நொடியில் மனமெல்லாம் கனமாகிட எதிரில் இருந்தவளது முகம் பார்க்கும் திராணியற்று குனிந்து கொண்டாள்.

“இப்போ கூட பேச மாட்டியா என் ஜீவாக்கு இன்னொருத்தி கூட கல்யாணமான்னு சண்டை போட மாட்டியா நீ” என்று தீபா ஆதங்கமாக கேட்க, “நான் என்ன கேட்குறது?” என்று மெதுவாய் வந்தது குரல்.

“நீ கேட்காம வேற யாரு கேட்பா ஜானு?” என்று தீபா கோபம் கொள்ள, “ம்ஹூம் இது சரி வராதுண்ணி” என்று மறுத்தாள்.

இவளது பதில் இதுவாக தான் இருக்கும் என்று முன்பே ஊகித்து இருந்தவள், “எனக்கு தெரியும் ஜானு நீ வேணாம்னு தான் சொல்லுவேன்னு” என்று முறைக்க, “அண்ணி என்னை புரிஞ்சுக்கோங்க. இது சரி வராது” என்று கெஞ்சலுடன் கூறினாள்.

“ஏன் சரியா வராது நீ ரீசன் சொல்லு” என்று தீபா முறைக்க, ஜானு இறைஞ்சும் விழிகளுடன் அவளை நோக்கினாள்.

“ஐ வான்ட் ஆன்சர்” என்று கைகளை இறுக்கமாக கட்டி நின்று கொண்டாள் தீபா.

“அண்ணி இப்பவும் எதுவும் மாறலை. இதை யாரும் ஏத்துக்க மாட்டாங்க” என்று ஜானு எடுத்து கூற, “யாரு ஏத்துக்க மாட்டாங்க” என்று புருவம் சுருக்கினாள்.

“அவங்க வீட்டுல. பத்து வருஷம் அங்க இருந்த எனக்கு தெரியும் அவங்க பேமிலி பத்தி. அவங்க எந்த காலத்திலயும் எங்களை ஏத்துக்க மாட்டாங்க” என்று ஜீவாவின் குடும்பத்தினரை நினைத்து கூற, “ஏன் ஏத்துக்க மாட்டாங்க. அதெல்லாம் ஒத்துப்பாங்க. அவங்களை நாங்க பாத்துக்கிறோம். நீ சம்மதம் சொல்லு” என்று தீர்க்கமாக பார்த்தாள்.

“ம்ஹூம் வேண்டாம்ண்ணி” என்று திரும்பி கொண்டாள்.

“நீ இவ்ளோ செல்பிஷ்ஷா இருப்பேன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை ஜானு” என்று தீபா கூற, “அண்ணி” என்றவள் அதிர்ந்து திரும்பி பார்த்தாள்.

“என்ன பாக்குற நீ செல்பிஷ் தான். ஜீவா உன்னை விட்டுட்ட தால அவன் தனியா கஷ்டப்பட்றான்னு தெரிஞ்சும் நீ அவனுக்கு உன் லைஃப்ல இடம் கொடுக்க மாட்ற. இது பழிவாங்குறதுக்கு சமம்” என்று தீபா கூற,

‘நான் என் ஜீவாவை பழி வாங்குகிறேனா?’ என்று விழிகள் கலங்கி பார்த்தாள். அதனை கண்டு இளகாத தீபா, “ஆமா நீ பழி வாங்குற தான். வேணும்னே தான் ஒத்துக்க மாட்ற. ஜீவா பேமிலிய காரணமா சொல்ற. அம்மா இல்லாம கஷ்டப்பட்ற அந்த குழந்தைங்களை நினைச்சு பார்த்தீயா நீ” என்று கேட்க, ஜானு கலங்கிய விழிநீரை உள்ளே இழுத்தாள்.

“இவ்ளோ ஏன் ஜீவிய நினைச்சு பாத்தியா? என்னதான் நீ அவளை நல்லா பாத்துக்கிட்டாலும் அவளுக்கு அப்பா வேணும்ற ஏக்கம் இருக்க தானே செய்யும். அவ உன்கிட்ட கேக்கலைன்றதுக்காக அவளுக்கு ஆசை இல்லைன்னு அர்த்தம் இல்லை. அவ உன்னை கஷ்டப்படுத்த விரும்பாம கேக்கலை அவ்ளோதான். கடைசிவரைக்கும் அவளுக்கு அப்பா பாசம்னா என்னன்னே தெரியாம இருக்கணும்னு ஆசை பட்றீயா?” என்று அவளுக்கு வலிக்கும் எனத் தெரிந்தாலும் மருந்து கசந்தாலும் நோய் குணமாக வேண்டும் என்று பேசினாள்.

“இப்போ நீ ஜீவாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலைன்னா நீ சுயநலமா யோசிக்கிறேன்றது தான் அர்த்தம். இதுக்கும் மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை ஜானு. இனி உன் வாழ்க்கை இது நீ தான் முடிவு எடுக்கணும்” என்றவள் விறுவிறுவென வெளியேற,

“என்னடி ரொம்ப சத்தமா பேசிட்டு இருந்த திட்டுனியா என் தங்கச்சிய” என்று நரேன் பதறி வினவினான்.

“இவரு வேணாமாம் உங்க தொங்கச்சிக்கு” என்றதும் சடுதியில் ஜீவாவின் முகம் இருளடைந்தது.

“இப்படி பேசுறவள திட்டாம பின்ன கொஞ்சவா செய்வாங்க” என்றவள், “இப்போ எதுக்கு முகத்தை இப்படி வச்சு இருக்கீங்க. நீங்க பர்ஸ்ட் அவக்கிட்ட கேட்டிங்களா எதுவும்‌. நானே எல்லாத்தையும் பேசணுமா?” என்று ஜீவாவிடம் காய்ந்தாள்.

“தீபா பொறும பொறும” என்று நரேன் மனைவின் தோளை பிடிக்க, “பின்ன என்னங்க இவரு எதுவும் கேக்காம சோகமா நிப்பாராம்.‌ அவங்க நான் பேசுனா வேணாம்னு சொல்லுவாங்களாம் எனக்கு கோபம் வராதா? ரெண்டு பேரும் வானத்தை வெறிக்கட்டும்னு விட்ருக்கணும்” என்று கோபத்தில் மூச்சிறைத்தவள்,

“இப்படியே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்? போங்க போய் பேசுங்க. நீங்க கேக்காமலே அவ எப்படி பதில் சொல்லுவா? இதுவரைக்கும் என்ன பண்ணி இருக்கீங்க நீங்க அவளுக்காக இதையாவது பண்ணுங்க” என்று பொரிந்துவிட்டு கணவனை விறுவிறுவென பிடித்து கொண்டு வெளியேறினாள்.

“ஹேய் என்னடி என் நண்பன்கிட்ட அப்படி பேசிட்டு வந்துட்ட அவனே ஜானுக்கிட்ட எதையும் கேட்க எனக்கு தகுதியில்லைன்னு புலம்பிட்டு இருந்தான்” என்று நரேன் வருந்த, “பீல் பண்ணி மட்டும் என்ன ஆக போகுது. இவங்க கிட்ட அமைதியா பேசுனா எதுவும் வேலைக்கு ஆகாது. கொழுத்தி போட்டுட்டு வந்து இருக்கேன். எப்படி பத்திக்கிதுனு மட்டும் பாருங்க” என்று மெதுவாய் சிரித்தாள்.

“என்னடி அதுக்குள்ள ஸ்மைலிங் மூட்க்கு வந்துட்ட” என்று நரேன் வியக்க, “அதெல்லாம் அப்படி தான். இவங்க கிட்ட பேசி டையர்டாகி எனக்கு பசிக்கிது வாங்க எதாவது சாப்பிட்டு வரலாம்” என்றவள் இளையவர்களையும்
அள்ளிப்போட்டு கிளம்பினாள்.
இனி அவர்கள் பாடு, நிச்சயமாக நல்ல முடிவாக எடுப்பார்கள் என்று எண்ணியபடி உணவகம் நோக்கி சென்றாள்.





 
Well-known member
Messages
1,051
Reaction score
759
Points
113
Deepa superrrrrrrrr

Evlo dhooram work out aaguthu nu paappommm

Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
New member
Messages
3
Reaction score
1
Points
3
Super sis next eppo varum
 
Top